VNE38(1)

VNE38(1)

38
“சரி இதுக்கு என்னதான் முடிவு?” கைகளை கட்டிக் கொண்டு கடல் அலைகளை பார்த்துக் கொண்டிருந்தவன், தீர்மானமாக கேட்க,
“எனக்கு தெரியல…” அவளது குரலில் கலக்கமிருந்தது. வாழ்க்கையை பற்றிய பயம் இருந்தது. ஷ்யாமுக்கு சரி என்று கூறி கமிட் ஆவது என்பது மிகப்பெரிய முடிவு. ஒரு தடவை முடிவு செய்துவிட்டால் அதை மாற்ற முடியாது. வாழ்நாளுக்கான முடிவு!
இர்ரிவர்சபில் ரியாக்ஷன்!
“உனக்கு இவ்வளவு கவலை வேண்டாம் மஹா… என்கிட்ட விட்டுடு… நான் பார்த்துக்கறேன்…” அவளது இடது கையை தனது வலது கையால் பிடித்தவன், உதட்டுக்கு எடுத்து சென்று லேசாக முத்தமிட்டான்.
“கவலையே நீ தான்…” என்று அவனை பார்த்து கூறியவளை பார்த்து மென்மையாக புன்னகைத்தான்.
“ஆஹான்…”
“ஆமா… எதை பற்றியும் கவலையே இல்லாம ஜாலியா லைஃப்பை ஸ்பென்ட் பண்ணிட்டு இருந்தேன்… உன்னை என்னைக்கு பார்த்தேனோ… அன்னையோட முடிஞ்சுது…” வெறுமையான வார்த்தைகள்.
“அப்படியா?” என்று நெற்றியை தேய்த்தவன், “ரொம்ப முடியலைன்னா பிரிஞ்சுடலாம் மஹா… கஷ்டப்பட்டு இருக்கக் கூடாது, இஷ்டப்பட்டு தான் இருக்கணும்…” ஒரு மாதிரியான குரலில் கூறிவிட்டு அவளது கையை விட்டுவிட,
“இப்பவே உன்னோட புத்தியை காட்ற…” கோபமாக கூறினாள்.
“நீ தானடி… என்னை பார்க்கவே பிடிக்கல… என்னால உன்னோட நிம்மதி எல்லாம் போகுதுன்னு சொன்ன?”
“என்ன சொன்னேன்? உன்னை பார்க்க பிடிக்கலைன்னு சொன்னேனா? உன்னோட ஆக்டிவிடிஸ் பிடிக்கலைன்னு சொன்னேன்…”
“என்னோட ஆக்டிவிட்டி பிடிக்கலைன்னு நீ சொல்றதும், உன்னோட ஆக்டிவிட்டி பிடிக்கலைன்னு நான் சொல்றதும் சரியா வரும் ன்னு நினைக்கிறியா? சின்ன பிள்ளைத் தனமா உனக்கே தெரியல? நான் உன்னை விரும்பறேன்னா உன்னோட நிறை குறை எல்லாத்தையும் சேர்த்து தான்… அதை தானே நான் உன்கிட்ட எக்ஸ்பெக்ட் பண்றேன் மஹா?” தெளிவாக கூறியவன், சிறு வலியோடு முடிக்க, அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.
அவன் கூறுவதும் உண்மைதானே?
இருவரின் நிறை குறைகளை முழுவதுமாக ஏற்பதுதானே காதல்!
அப்படியென்றால் அவனை முழுவதுமாக ஏற்க தயாராகி விட்டதா தன் மனது?
ஆமென்றது மனது!
“அக்செப்ட் பண்றேன் ஷ்யாம்… ஆனா எத்தனை நாளைக்கு? சௌஜன்யா… அடுத்தது இன்னொருத்தி… இப்படியே லிஸ்ட் நீண்டுட்டே போகும்…” என்றவள், நெஞ்சை பிடித்துக் கொண்டு, “மனசு வலிக்குது டா…” என்று வியாகூலமாக கூற,
“மகா… ஒன்ஸ் ஃபார் ஆல் பேசி முடி… இப்ப சௌஜன்யா வந்து குழப்பி விடுவா… அடுத்தது இன்னொருத்தி வருவா… அப்புறமா இன்னொருத்தி… இதையே பேசிட்டு இருந்தா நம்ம லைப் என்னாகறது?” சற்று கறாராக கேட்டான்.
“என்னால ஒரு லெவலையே யோசிக்க முடியலை… இன்னும் நீ எங்கயோ போய்ட்ட… லெவல் ஒன், லெவல் டூ ன்னு சால்வ் பண்ணிட்டு போக இதென்ன வீடியோ கேமா?” மஹாவுக்கு கோபமாக வந்தது. இவனது கடந்த காலத்தை மறக்க முடியாமல் தானே பேசிக்கொண்டிருப்பது. அதை பற்றி எதுவும் பேசவே கூடாது என்கிறானா என்ற கேள்வி எழுந்தது.
மண்ணை உதறிவிட்டு எழுந்தவன், மஹா எழுவதற்கு கைக் கொடுத்தான். அவனது கையை தவிர்த்தவள், தானே எழுந்து கொள்ள, அவனது உதட்டில் சிறு புன்னகை நெளிந்தது.
கவனமாக அவனருகில் நடக்காமல் தள்ளி நடந்தவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது?
வேறு வழியே இல்லை. சமாதானம் செய்து தான் தீர வேண்டும்.
தள்ளி நடந்தவளின் அருகில் சென்று வேண்டுமென்றே இடித்துக் கொண்டு நடக்க, அவனை தள்ளி நிறுத்தியவள், முறைத்தபடி வீட்டை நோக்கி சென்றாள்.
“அவ சொன்னதுக்கு நான் என்னடி பண்ணுவேன்?” அவளது இடையை இடக்கையால் பிடித்து இழுத்தபடி நடக்க, அவனது கையை வலுக்கட்டாயமாக தள்ளி விட்டவள், இன்னும் வேகமாக நடந்தாள்.
“அவ சொன்ன மாதிரி தானே நீ நடந்துக்கற?” அவளிருந்த சூட்டுக்கு கடுகை போட்டால் பொரிந்து விடும் போல… அத்தனை சூடு!
“என்ன அவ சொன்ன மாதிரி நடக்கறேன்?” அவளது தோளை பிடித்து திருப்பியவன், அவளை நிறுத்தியபடி கேட்க,
“பிரிஞ்சுடலாம்ன்னு சொன்ன…” என்றவளின் குரல் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“அது உனக்காக சொன்னேன் மஹா… எனக்காக இல்ல…”
“ஆனா இப்பவே உனக்கு அப்படியொரு தாட் வந்துடுச்சு…”
“ஏய்… முன்னாடி போனா இடிக்கற… பின்னாடி வந்தா உதைக்கற… என்ன தான்டி உன்னோட ப்ராப்ளம்?”
“என்னோட ப்ராப்ளம்….” என்று இடைவெளி விட்டவள், “எனக்கே கன்பர்மா தெரியல ஷ்யாம்… கோபம் வருது… அந்த சௌஜன்யா ஸ்டேஜ்ல உன்னை கட்டிபிடிச்சப்ப அப்படியொரு கோபம் வந்தது… அவ என்கிட்டே சவால் விடற அளவுக்கு என்னோட நிலை இருக்கான்னு நினைச்சு அவ்வளவு கோபம் வருது… என்னோட இயல்பையே தொலைச்சுடுவேன் போல இருக்கு…” எங்கோ வானத்தை வெறித்தபடி அவள் கூற, இந்த வாழ்க்கையை தக்க வைக்க தான் மிகவுமே போராட வேண்டும் என்று புரிந்தது அவனுக்கு.
எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு இருப்பவள் அல்ல அவனது மஹா. எதிலும் நியாயம் வேண்டும்… எதிக்ஸ் வேண்டும் என்று நினைக்கும் அவளுக்கும் தனக்குமான உறவு நீடிக்க வேண்டும் என்றால் நிறைய சமரசங்களுக்கு தான் தயாராக வேண்டும் என்றும் புரிந்தது. ஆனால் அந்த சமரசங்கள் தன்னுடைய மனநிலைக்கு எந்தளவு சரி வரும் என்பது புரியவில்லை.
எப்படி தக்க வைப்பது என்று தான் யோசித்தானே தவிர, விட்டுவிடலாம் என்று யோசிக்கவில்லை. பிரிந்து விடலாம் என்று அவன் சொன்னதும் அவளுக்காக தானே தவிர, அவனுக்கு அந்த எண்ணம் கொஞ்சமும் இல்லை.
மெல்ல அவளருகில் வந்து, அவளது கன்னத்தை கையில் ஏந்தியவன்,
“ஒன்ஸ் நாம ரிலேஷன்ஷிப்ல டீப்பா போய்ட்டா உனக்கு இந்த கன்பியுஷன் வராதுடி… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு… இதெல்லாம் ஆரம்பத்துல வர்ற கன்ஃபியுஷன்ஸ்… உனக்கு நான் நேர்மையா இருப்பேன்ங்கற தைரியம் இருக்கா இல்லையா?” அவளது கண்களை பார்த்தபடி கேட்க,
“ம்ம்ம்… இருக்கு… நிறைய இருக்கு…” என்று தலையாட்டினாள்.
“உன் கிட்ட பொய் சொல்லிடுவேன்னு நினைக்கறியா?” என்று கூறவும், முகத்தை சுளித்தாள்,
“பொய் சொல்லியாவது என்னை ஹர்ட் பண்ணாம இருன்னு தானே சொல்றேன்…” எனவும், சிரித்தான்.
“அது வேண்டாம் மஹா… சொல்லும் போது நல்லாருக்கும்… ஆனா அது பொய்ன்னு தெரிய வரும் போது என் மேல இருக்க நம்பிக்கை போய்டும்… என் கூட சண்டை போட்டாலும் பரவால்ல… நான் உண்மைய சொல்லிட்டு போய்டறேன்… நம்பிக்கைய நான் உடைச்சுட கூடாது…”
“உன் மேல நம்பிக்கை இல்லாமலாம் இல்லடா…” என்று அவள் கூற,
“அப்புறம் எதுக்கு இத்தனை கோபம்?”
அவள் மெளனமாக இருக்க, “கட்டிப்பிடிக்கறது எல்லாம் ஜஸ்ட் மரியாதைக்காக… அது கூடவா உனக்கு தெரியாது?”
“ம்ம்ம் தெரியும்…” என்று தலையாட்ட,
“அப்புறம் ஏன்? வேற என்ன சொல்லனும்ன்னு எதிர்பார்க்கற மகா?”
“தெரியலடா… என்ன எதிர்பார்க்கறேன்னு எனக்கே தெரியல…” என்று தலையைப் பிடித்துக் கொண்டவளை, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“மஹா… ஐ லவ் யூ ப்ரம் மை பாட்டம் ஆப் தி ஹார்ட்… என்னோட லைப் நீ தான்… என்னோட முழு வாழ்க்கையையும் உன்னோட நான் செலேப்ரெட் பண்ணனும்… எல்லா சந்தோஷத்தையும் உன்னோட சேர்ந்து நான் அனுபவிக்கணும்… அழகா ரெண்டு குழந்தைங்க பெத்துக்கணும்… நம்ம பேரன் பேத்திங்களுக்கு எல்லாம் நம்ம லவ் ஸ்டோரியை சொல்லணும்… இன்னும் எவ்வளவோ ஆசை இருக்குடி…” என்றவனை ஆசையாக பார்த்தாள். அவனது கண்களில் காதல் அப்பட்டமாக தெரிய, அவளால் பேச முடியவில்லை.
“இதெல்லாம் ரொம்ப அழகாவே சொல்றடா… ஆனா டென்ஷன் ஏத்தி பார்க்கற…”
அவளது இடையை பிடித்து இழுத்தவன், தன்னோடு சேர்த்து கொண்டு,
“நீ சொன்ன ஒரு வார்த்தை இன்னமும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு குல்ஃபி…” என்று இடைவெளி விட, என்னவென்று பார்த்தாள். “இப் யூ கேன்னாட் ப்ரிவென்ட் எ ரேப்…ஜஸ்ட் என்ஜாய் இட்…” என்று சிரிக்க, அவள் நெளிந்தபடி, “சோ வாட்?” என்று கேட்க,
“அந்த தெளிவான பொண்ணு எங்கன்னு நான் பார்க்கறேன்… உன்னோட இயல்பை தொலைச்சுடாத மஹா… அந்த தைரியமும், துணிச்சலும், தெளிவும் தான் உன்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்… கொஞ்சம் கூட டென்ஷனாகாம ரெண்டு உயிரை அசால்ட்டா சேவ் பண்ண பார்த்தியா… அந்த ஆடிடியுட் உன்கிட்ட நான் அட்மைர் பண்ற விஷயம் மஹா… இந்த சௌஜன்யா எல்லாம் ஒண்ணுமே இல்ல… ரெண்டு நாள் குலைச்சுட்டு ஒதுங்கிடும்… நம்ம வாழ்க்கை ரொம்ப நீளமானது… அதை அழகாக்கறதும் கோரமாக்கறதும் நம்ம கைல தான் இருக்கு… ஆனா அது எப்படி இருந்தாலும் உன்னோட மட்டும் தான்” என்று உணர்ந்து கூற,
“என்னை நீ ரொம்ப இன்ப்ளுயன்ஸ் பண்ற… என்னால சரியா யோசிக்க முடியல…” உண்மையை மறைக்காமல் கூற, ஷ்யாம் சிரித்தான்.
“இதுக்கு என்கிட்டே ஒரு சூப்பர் மருந்து இருக்கு…” என்று கண்ணை சிமிட்டினான்.
“என்ன மருந்து?”
“உள்ள வா… சொல்லித் தரேன்…” என்று சில்மிஷமாக சிரிக்க,
“போதும்…. நீ சொல்லித் தந்தது எல்லாம்… அப்படி இப்படின்னு பக்கத்துல வந்த… கொன்றுவேன்…” என்று மிரட்ட,
“அப்படியா? சரி கொன்னுக்க…” என்று கண்ணடித்தவன், அவளது இடையில் கைவைத்து அழுத்தி தன்னோடு சேர்க்க, அவனது கைபேசி அலறியது. எடுத்து பார்த்தவன்,
“உன் பாசமலருக்கு எப்படித்தான் மூக்கு வேர்க்குதோ?” என்றவாறு சிரித்தபடி அட்டன்ட் செய்தான்.
“சொல்லு மச்சான்…” என்று ஆரம்பிக்க,
“என்ன மச்சான்… நீயே கூட்டிட்டு வரேன்னு சொன்னல்ல… நான் வந்து முக்கால் மணி நேரமாகிடுச்சு… இன்னும் உன்னை காணோம்?” என்று கார்த்திக் கேட்க,
“இங்க ஒன்னு முருங்கை மரத்துல தலைகீழா தொங்கிட்டு இருக்கு… அதை எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம முழுச்சுட்டு இருக்கேன்… நீயாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ணு மச்சான்…” பாவமாக கூற, கார்த்திக் சிரித்தான்.
“லவர்ஸ் குவாரல் குள்ள நாம தலையிடறது இல்ல மச்சான்… எப்படியோ அடிச்சுக்கங்க… இங்க வீட்ல கொண்டு வந்து விட்டுட்டு அடிச்சுக்கங்க…” என்று சிரித்தபடியே கூற,
“இரு… அடுத்த கால் பிருந்தாவுக்கு தான்… உன்னை பிடிச்சு ஆட்டி வைக்க சொல்றேன்…”
“ஆல்ரெடி அது அப்படிதான் ஆடுது… ஏதோ கொஞ்சம் பண்ண என்னையே இப்படி ஆட்டுதுன்னா, ஓவரா பண்ணி வெச்சுருக்க உன்னை எப்படியெல்லாம் ஆட்டுவா பிருந்தாவோட ஃப்ரெண்டு…” சிரித்தபடியே கூற,
“மச்சி… அது உன் தங்கச்சி…” இவன் சிரிக்க,
“தங்கச்சியா? இதுக்கு அது சொல்லிக் கொடுக்கும்… அதுக்கு இது சொல்லிக் கொடுக்கும்… ரெண்டும் ஒரே கேட்டகரி…”
“ரொம்ப தெளிவா இருக்க…” என்று சிரித்தவன், “நான் தான் தெரியாம சிக்கிட்டேனா?” என்று கிண்டலாக கூற,
“அது உன் விதி மச்சான்…” என்று சிரித்தவன், “என்ன ஷ்யாம்? ரொம்ப பிரச்சனையா?” என்று விளையாட்டுத்தனத்தை கைவிட்டு அவன் கேட்க,
“ம்ம்ம் ஆமா கார்த்திக்… இந்த சௌஜன்யா ஏதோ பேசிருக்கும் போல…” என்று இடைவெளி விட்டவன், “ஸ்டேஜ்ல அவ கட்டிபிடிச்சா நான் என்னடா செய்வேன்? தள்ளியா விட முடியும்?” என்று கேட்க, கார்த்திக்கு புரிந்தது. தங்கையின் மனநிலையும் ஷ்யாமின் சங்கடமும்.
இது போன்ற விழாக்களில் இது சகஜம். அது போல இவை போன்ற பேச்சுக்களும் மிகவுமே சகஜம். வெளியிலேயே அப்படி எனும் போது ஷ்யாம் போன்ற மிகப்பெரிய செல்வாக்கு உள்ளவனை வளைக்க எண்ணியவர்களிடமிருந்து இது போல தாக்குதல்கள் வருவது மிகவும் சாதாரணம். தன்னிடமே எத்தனை பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த உளவியல் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். அதை ஒரு ஆணின் பார்வை கொண்டு பார்க்கும் போது எளிதாக கடந்து விட முடியும். ஆனா ஒரு பெண்ணின் பார்வையோடு கடப்பது என்பது எளிதல்ல. ஆனால் ஷ்யாமுக்காக அத்தனை பரிந்து பேசியவள், இத்தனை பிரச்சனை செய்வாளா?
“கொஞ்சம் விட்டு பிடி ஷ்யாம்… உன்னை ரொம்ப நம்பறா… யார்கிட்டவும் விட்டே தர மாட்டா… இது ஒரு கன்பியுஷன் தான்… யாரும் அட்வைஸ் பண்ணி மாறிடற ஆள் இல்ல… தானா தான் அக்செப்ட் பண்ணி, அசிமிலேட் பண்ணனும்… ரொம்பவும் எக்ஸ்ப்ளைன் பண்ணாத…” என்று நண்பனாக அட்வைஸ் பண்ண,
“ஓகே மச்சான்… கொஞ்சம் மலையிறக்கிட்டு கூட்டிட்டு வந்துடறேன்…” என்று சிரிக்கவும்,
“ரொம்ப லேட் பண்ணாத… வீட்ல அம்மா அப்பா டென்ஷன் ஆகிடுவாங்க…” எனவும், இவன் இடது கையை திருப்பி மணியை பார்த்தான். பத்தை தாண்டி கொஞ்சம் நேரமாகியிருந்தது.
“இன்னைக்கு ஒரு நாள் சமாளி கார்த்திக்… சீக்கிரம் வந்துடறேன்…” என்று வைத்தவன், அவளை பார்த்து புருவத்தை உயர்த்தினான், என்னவென்று கேட்பதை போல! ஞாபகமாக செல்லை சைலன்ட்டில் போட்டான். பேச்சுக்கு நடுவில் தடை ஏற்படக் கூடாது என்று!
 “டைம் ஆகுது… கிளம்பு?” என்று மகா வேகமாக கேட்டை நோக்கி போக, அவளை இழுத்துக் கொண்டு வீட்டினுள் சென்றான் ஷ்யாம்.
அவன் பிடித்து இழுத்ததில் அவளது கை வலித்தது.
“விடு ஷ்யாம்… மணி பத்தாகுது… வீட்டுக்கு போகணும்… இதுக்கு மேல லேட் ஆச்சுன்னா அம்மா திட்டுவாங்க….” என்று பிடிவாதமாக நிற்க,
“அத்தை தானே? நான் சொல்லிடறேன்…” என்று பேசியை எடுக்க, அதை அவசரமாக பிடுங்கினாள்.
“ஏன் இப்படி பண்ற?” கோபமாக கேட்க,
“சரி அப்படீன்னா ஒழுங்கா கொஞ்ச நேரம் பேசு… போறேன் போறேன்னு குதிக்காத…” என்று கறாராக கூற, அவள் தனது வாட்சை காட்டி,
“மணி என்னாகுது? பத்தே கால்… இதுக்கும் மேல இருந்தேன்னா நாளைக்கு என்னை பைரவி பட்டினி போட்டுடும்…” கடுப்படித்தாள்.
“அப்படீன்னா பத்து மணிக்கு மேல இருந்தா உங்கம்மா திட்டுவாங்க? இல்லையா?”
“பின்ன கொஞ்சுவாங்களா?”
“அப்படீன்னா அப்பாவை பேச சொல்றேன்…”
“எதுக்கு?”
“நம்ம கல்யாணத்துக்கு தான்…” வெகு சாதாரணமாக கூறிவிட்டு போக,
“வாட்…” அதிர்ந்தாள் அவள்.
“பின்ன? உன்னை இப்படியே வெச்சுகிட்டு என்னால சமாளிக்க முடியாது… ஐ நீட் சம் மோர் அட்டாச்மெண்ட்…”
“விளையாடாத… நான் இன்னும் அந்த கமிட்மெண்டுக்கு ரெடியாகல…”
“நீ ரெடியாகற வரைக்கும் நான் வெய்ட் பண்ணலாம்… ஆனா இன்னைக்கு சௌஜன்யா… நாளைக்கு எந்த ஜன்யாவோ? ஒவ்வொரு தடவையும் பத்து மணிக்குள்ள சண்டைய முடிக்கனும்ன்னா கஷ்டம்டி…” வெகு தீவிரமான குரலில் கூறிக் கொண்டிருந்தவன், சில்மிஷமாக முடிக்க, அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!