VNE38(2)

VNE38(2)

“பிசாசு… பண்றது அத்தனையும் ஃபிராடுத்தனம்… பேசற பேச்சை பாரு…” என்று அவனை அடிக்க கையோங்க, அந்த கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன், இன்னொரு கையால் அந்த அறைக் கதவை தாளிட்டான்.
பேசிக்கொண்டே அவனது அறை வரை அழைத்து வந்ததை அப்போதுதான் அவள் உணர்ந்தாள்.
“இப்ப எதுக்கு ரூம் கதவை லாக் பண்ற?” அவனிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டே அவள் கேட்க,
“வயலும் வாழ்வும் ப்ரோக்ராம் நடக்குதாம்… அதான்…” என்றவன், குறும்பாக சிரிக்க,
“டேய் ஃபிராடு… ஒழுங்கா என்னை விடு…” என்றவளை, வளைத்து அவளது பின்னிருந்து அணைத்து, பின் கழுத்தில் முகம் புதைக்க, ஹையில் ஆரம்பித்து லோவுக்கு போனது அவளது வால்யும்.
“என்னடி சிக்னல் போன செல்போன் மாதிரி ஆகிட்ட?” அவளது காதில் கிசுகிசுக்க, அவளுக்கு உடல் கூசி சிலிர்த்தது.
“ஷ்யாம்ம்ம்ம்… விடு…” ஒரு விதமான மயக்கத்தில் அவள் கூற, அவளது அந்த மயக்கத்தில் அவனுக்கு போதை தலைக்கேறியது.
“ம்ம்ம்…” என்றானே தவிர, அவளை விடும் எண்ணமே வரவில்லை அவனுக்கு.
கைகள் அதன் போக்கில் அவளிடம் அத்துமீறிக் கொண்டிருக்க, இதழ்கள் அவளிடம் அத்துமீற முயன்று கொண்டிருக்க, மஹா மயக்கம் தெளிந்து, அவனிடமிருந்து வலுகட்டாயமாக விடுபட்டாள்.
“உன்னை…” என்று அவனிடம் கோபப்பட முயன்றாலும், முடியவில்லை. முகச்சிவப்பு காட்டிக் கொடுத்துவிட, அந்த வெட்கத்தை, கூச்சத்தை, விகசிப்பை, சிவந்த முகத்தை பார்த்து ரசித்து கண்ணை சிமிட்டினான் ஷ்யாம்.
அந்த தனிமையும் அவளது அண்மையும் அவனுக்குள் போதையேற்றிக் கொண்டிருந்தது தான் உண்மை!
அவனது பார்வையும், அது தொட்டு மீண்ட இடங்களும், அவளை முழுதாக விழுங்கி விடுபவனை போன்ற அவனது வேகமும் அவளை வேறு உலகத்திற்கு இட்டு செல்ல, அதற்கும் மேல் அங்கிருப்பது அவ்வளவு உசிதமாகப் படவில்லை.
கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தவளுக்கு இதயம் இன்னமும் பந்தயக் குதிரை கணக்காக துடித்துக் கொண்டிருந்தது. பதட்டத்தில் முகம் வியர்த்தது.
மஹாவை தொடர்ந்தபடி வந்தவனுக்கும் அதே மனநிலை தான். புதிதாக காதல் கொண்ட பதின்பருவத்தினனை போல உணர்ந்தான். மனமெங்கும் போதை வழிய, கண்களால் அவனது காதலியை பருகிக் கொண்டிருந்தான்.
அதிலும் அத்தனை ஊடலுக்கு பின்னான நெருக்கம்.
அத்தனை தேவையாக இருந்தது… இனித்தது!
அவள் ஊடல் கொண்ட போதும் சரி… அவனிடம் வெட்க முகத்தை காட்டும் போதும் சரி… அவன் உணர்ந்தது காதல்…. காதல்… காதல்… அது ஒன்று மட்டுமே…
ஆனால் இந்த நெருக்கம் மட்டும் போதாது என்று ஒவ்வொரு செல்லும் குதியாட்டம் போட்டது… அதே உணர்வோடு அவளை ஏறிட, அவளது இதயம் ட்ரம்ஸ் வாசித்தது.
காலிலிருந்த ரத்தமெல்லாம் மொத்தமாக முகத்துக்கு இடம் மாறிவிட்டதை போல உணர்ந்தாள்.
“ஏன் அப்படி பார்க்கற?” ஹாலிலிருந்த நீள சோஃபாவில் தன்னோடு அமர்ந்து, அவளையே விழுங்கிக் கொண்டிருந்தவனை பார்த்து குரலே வெளிவராமல் கேட்டாள் மஹா.
அவளது தொண்டைக் குழி ஏறி இறங்கியது.
“என்னென்னவோ தோணுது… சொல்லட்டா…” என்று விஷமமாக கேட்க,
“ச்சீ பே…” வெட்கம் தாள முடியாமல், அதற்கும் மேல் அவனைப் பார்க்க முடியாமல், அவள் எழுந்து கொள்ள முயல, அவளது கையைப் பிடித்து இழுத்து அமர வைத்தான் ஷ்யாம்.
“டைமாகுது… இது ரொம்ப தப்பு…”
“எஸ்… லேட் நைட் ஆகிடுச்சு…” என்றவனின் குரல் வேறு மாதிரியாக இருக்க, மஹா பெரும் முயற்சி செய்து அவனை முறைக்க முயன்றாள். முயன்றாள்… ஆனால் முடியவில்லை.
“சத்தியமா பைரவி கிட்ட மாத்து வாங்குவேன்டா… இன்னைக்கு நீ பண்ணி வெச்ச காரியத்துக்கே என்ன சொல்றதுன்னு தெரியல… இன்னும் லேட்டா போனா அடி கன்பர்ம்…” மேடையில் அறிவித்ததை மனதில் கொண்டு அவள் கூற,
“கொண்டு போய் விடறேன்… ஆனா நான் சொல்ற ஒரு விஷயம் நீ பண்ணனும்…” என்று வில்லங்கமான கண்டிஷனை போட, கண்கள் விரிய சிறு அச்சத்தோடு பார்த்தாள் மஹா.
“அதெல்லாம் எதுவும் முடியாது… ஒழுங்கா என்னை கொண்டு போய் விடு…” என்னவென்று கூட கேட்கும் தைர்யம் இல்லை அவளுக்கு. ஏதாவது கோக்குமாக்காகத்தான் கேட்பான் என்பது திண்ணம் .
“அப்படீன்னா நைட் முழுக்க இங்கயே இரு… நானும் உன்னை இப்படி பார்த்துட்டே இருக்கேன்… அதுவும் சேரில சும்மா கும்முன்னு இருக்க… என் கை சும்மா இருக்கலைன்னு எல்லாம் சொல்லக் கூடாது…” கள்ளப் புன்னகை வழிய அவன் கூறியதில், அவளுக்கு இன்னமுமே பயம் பிடித்துக் கொண்டது.
“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் ஷ்யாம்ம்ம்ம்ம்… இப்படியெல்லாம் பேசாத…” வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
“அப்படீன்னா நான் சொல்றதை செய்டி குல்ஃபி…” என்று கண்ணடிக்க,
“சரி சொல்லு…” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
சோபாவில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு மடியில் குஷனை வைத்தபடி, கன்னத்திற்கு கைக் கொடுத்து, “ஒரு பாட்டு பாடு…” குறுஞ்சிரிப்போடு கூற, அவள் பிடித்து வைத்த மூச்சை வெளியே விட்டாள்.
“ச்சே இவ்வளவுதானா?” என்று ஒரு பெருமூச்சோடு கூற,
“வேற என்ன எதிர்பார்த்த?” கள்ளத்தனமாக கேட்டவனை புன்னகையோடு முறைத்தாள்.
“ஒன்னும் இல்ல…” என்று சிரித்தவள், “இன்னொரு நாள் பாடறேனே…” என்க,
“அதெல்லாம் இல்ல… இப்ப பாடு… எத்தனை சண்டை போட்ட… அதுக்கு காம்பன்சேஷன்…” எனவும் உதட்டை சுளித்தபடி புன்னகைத்தவள்,
“சரியான வாலுப் பையன்டா…” என்று தலையை கலைத்து விட,
“ஐஸ் வைக்காத…” என்று சிரித்தாலும், அவளது அந்த தலைக் கலைப்பு பிடித்திருந்தது. ஜோதி சிறு வயதில் அப்படிதான் செய்வார். ஹாஸ்டலுக்கு போன பின்னும் அவரது வாசம் அவனோடு இருப்பதை போல தோன்றும். எப்போதும் தலைக் கலைத்து விட அம்மா அருகில் வேண்டும் என்று மனம் நினைக்கும். ஆனால் ஒரு வயது வந்தபின் அவையெல்லாம் சிறுபிள்ளைத்தனம் என்று ஒதுங்கிக் கொண்டாயிற்று. அந்த சிறுபிள்ளைத்தனம் அவனது மனதில் மீதமிருந்ததோ?
புன்னகையோடு கண்களை மூடிக் கொண்டவள்,
நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்…
புன்னகையோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுக்கான பாடல். அவன் மேலிருக்கும் காதலை அவள் கூறும் பாடல். பாட்டுடை தலைவன் கேட்டிருக்க, பாவையவள் பாடலில் உருகிக் கொண்டிருந்தாள். அதை உணர்ந்தவன், அவளது காதலில் கரைந்துக் கொண்டிருந்தான்.
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ…
ஆமாம் இது கவிதை தான். அழகான கவிதை . வெகு அமைதியான இந்த இரவில், கடல் காற்று தாளமிட, உடனிருக்கும் காதலியின் அழகை ரசிப்பதை விட கவிதை வேறு ஏதும் உள்ளதா என்று அவனது மனம் கேட்டது. பாடும் அந்த இதழ்களையே அவனது பார்வை மையம் கொண்டிருக்க, அவனது போதையை நீட்டித்துக் கொண்டிருந்தாள் அந்த யவன ராணி.
நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்.
அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்..
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.
நீதானே நீதானே…
கண்களை மூடி அவள் அனுபவித்துப் பாட, இவனோ கண்களை மூடியபடி அதை ரசித்துக் கரைந்து ஆழ்ந்து போயிருந்தான். பாடல் முடிந்தாலும் அந்த உணர்விலிருந்து வெளிவர முடியவில்லை. பாடலை காட்டிலும் அதன் வரிகள், வரிகளை காட்டிலும் அவளது அந்த குரல், அவனை மயக்கிக் கட்டிப் போட்டது.
மெல்ல கண் விழித்து அவனைப் பார்த்தாள். மயங்கிக் கிறங்கி, கரை காண முடியாத காதலை கண்களில் ஏந்தியபடி அவளைப் பார்த்தான். அவளது உலகத்தின் இயக்கம் அவனது கண்களோடு நின்று போனது போன்ற உணர்வு.
அந்த உணர்விலிருந்து வெளியே வரப் பிடிக்கவில்லை.
புன்னகையோடு அவளைப் பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோவொரு பதட்டம், அவனையும் மீறிய பயம். இன்னமும் இருந்தால் ஏதேதோ நடந்து விடும் போல தோன்றியது. அவள் மேலிருந்த மயக்கம், காதலோடு, மோகமும் சேர்ந்து கொள்ள, தன்னைத் தானே மிகவும் சிரமப்பட்டு கட்டுப் படுத்திக் கொண்டிருந்தான்.
சிகரெட் பிடித்தால் தேவலாம் என்று தோன்றியது. ஆனால் அவளிருக்கும் போது வேண்டாம் என்று முடிவு செய்திருந்தான். அதற்காக சூயிங் கம் பழக்கத்திற்கு மாறியிருந்தான்.
பத்து பாக்கெட் என்பது இப்போது ஐந்தாகியிருந்தது. அதை அவளும் அறிவாள்.
எப்படியோ அந்த பழக்கத்தை மட்டும் விட்டால் போதுமென்று அவளுக்கு தோன்றியிருந்தது.
சூயிங் கம்மை எடுத்து பிரிக்க, மஹா, “எனக்கும் ஒன்னு கொடு…” என்றாள்.
மெல்ல சிரித்தபடி அவனுடையதையும் சேர்த்து இரண்டாக கொடுத்தான். இரண்டையும் அவளே வாயில் போட்டுக் கொள்ள,
 “ஏய் குல்பி, எனக்கொரு சூயிங் கம் தருவன்னு பார்த்தா ரெண்டையும் நீயே முழுங்கிட்டியா?”
“ஒய்… நீ தானே பிசாசே கொடுத்த?”
“கொடுத்தா… ஒன்னை பிரிச்சு எனக்கு தருவன்னு தானே கொடுத்தேன்…” என்று வம்பு வளர்த்தவனை சீண்டலாக முறைத்தாள்.
“உங்கிட்ட இல்லவே இல்லாத மாதிரி சீனை போடாதடா…”
“ஆமா என்கிட்ட இல்லடி…” என்றவன், அவளை நெருங்க, அவள் அந்த சோபாவில் இன்னமும் தள்ளிப் போனாள்.
“ஏய்… என்ன பண்ற?”
“எனக்கும் ஒன்னு கொடுத்துடு…” என்றவனின் பார்வை சில்மிஷமாக அவளைத் தழுவியது.
“எப்படிடா கொடுப்பேன்?” அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
“அதெல்லாம் தெரியாது… கொடு…” என்றவன் அவளை இன்னமும் நெருங்க,
“ஆளை விடு சாமி…” என்று எழுந்து கொள்ள முயன்றவளை, இருபுறமும் கையை வைத்து சிறை செய்ய, அவள் பயத்தோடு பார்த்தாள்.
“வேண்டாம்…”
“முடியவே முடியாது… எனக்கு வேணும்…” என்று பிடிவாதமாக கூறியவன், அவளது இதழ்களை குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.
நீண்ட முத்தம்… அவனது பசிக்கு விருந்தாக!
முதலில் மறுத்தவள், அவனுடன் லயித்து போயிருந்தாள். அவனுக்குள் உருகிக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் அவனை கட்டியணைத்து அவனது பிடரியில் கைகளை கோர்த்து இருந்தாள். வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது.
சுற்றியிருந்த உலகம் இருவருக்குமே மறந்து போனது.
அவளது இதழ்களுக்கு விடுதலை கொடுத்தவனின் வாயில் இப்போது பாதி சூயிங் கம். மென்றபடி அவளை பார்த்து கண்ணை சிமிட்ட, அவளது சிவந்திருந்த முகம், இன்னமுமே வெட்கத்தில் இன்னமும் சிவந்தது.
*****
ஈசிஆர் ரோடில் ஜாகுவார் வழுக்கியபடி போய்க் கொண்டிருந்தது. இருவரின் முகத்திலும் வெட்க புன்னகை நிரந்தரமாக தங்கி விட்டிருக்க, அந்த கணத்தை அனுபவித்தான் ஷ்யாம்.
ட்ராஃபிக் குறைந்திருந்த சாலை… மியுசிக் சிஸ்டத்தில் எப்போதும் போல அர்ஜுன் ரெட்டி உருகிக் கொண்டிருந்தான்…
மதுரமே ஈக்ஷணமே ஓ செல்லி
மதுரமே ஈக்ஷணமே
மதுரமே வீக்ஷணமே ஓ செல்லி
மதுரமே வீக்ஷணமே
மதுரமே லாலசையே
மதுரம் லாலநயே
மதுரமே லாஹிரிலே
மதுரம் லாலிதமே
மதுபவனம் வீச்சி மதுபவனம் வீச்சி
பருவமே மைமரசிந்திலே….
“சூயிங் கம் வேணுமா குல்ஃபி” குறும்பாக கேட்க, அவனை முறைத்தாள்.
“உனக்கு கொழுப்பு ரொம்ப அதிகம்டா…” என்றவள், பேச்சை மாற்ற, “செம சாங்…” என்று கூற,
“ம்ம்ம்… எனக்கு ரொம்ப பிடிக்கும்… அதுல ஒரு இடத்துல அர்ஜுன் ரெட்டி சொல்வான்… நீ மூச்சு விடற அழகு கூட எனக்கு பிடிச்சுருக்குன்னு…” என்று நிறுத்திவிட்டு, மகாவை பார்க்க, அவள் தலைகுனிந்து கொண்டாள்.
அவள் மெளனமாக இருக்க, “பைத்தியம் மாதிரி உனக்கு தோணலாம் மஹா… ஆனா எனக்கும் உன்னை பார்க்கும் போது அப்படித்தான் தோணும்… இந்த பைத்தியம் என்னைக்கு தெளியும்ன்னு தெரியல…” என்று கூற, அவளால் அவனது அத்தனை காதலையும் உள்வாங்கிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.
“பயமா இருக்கு ஷ்யாம்…”
“ஏன்?”
“தெரியல…” என்றுக் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவனது காரை இடிப்பது போல வந்தது அந்த லாரி.
சட்டென காரை ஒடித்து திருப்பி அந்த லாரிக்கு வழி விட்டான் ஷ்யாம்.
“பார்த்துடா…” என்றாள் மஹா.
“ப்ச்… என்னதான் ஒட்டுறானுங்க?” என்று எரிச்சலாக கூறியவன், இன்னொரு லாரியும் பின்னால் காரை இடிப்பது போல வர, சற்று எச்சரிக்கையானான். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“மஹா… என்னோட போனை எடு…” என்று கூற, டேஷ் போர்டில் இருந்த அவனது போனை எடுத்தாள்.
சுமார் இருபது மிஸ்ட் கால். சிவச்சந்திரனிடமிருந்து!
“ஷிட்…” என்றவன், “கால் ஹிம் மஹா…” என்றான்.
பாஸ்வர்ட் கேட்டது அவனது செல்பேசி.
“பாஸ்வோர்ட் சொல்லுடா…” என்றவளுக்கு,
“Shyamaha…” என்று கூற, அவனை பார்த்து குறும்பாக புன்னகைத்தவள், பேசியை திறந்து சிவாவுக்கு கால் செய்தாள்.
“ப்ளு டூத்ல கனெக்ட் பண்ணிடு…” என்று கூறும் போதே இன்னொரு லாரியும் அருகில் வந்து மோதப் பார்த்தது.
அப்போதுதான் மஹா அதை கவனித்தாள்.
“ஷ்யாம் அந்த லாரி….” எனவும், அவன் வாயில் கைவைத்து, “உஷ்” என்றவன்,
“டோன்ட் கெட் பாணிக்…” என்றபடி, “சிவா… வாட் இஸ் ஹேப்பனிங்…” என்று சிவச்சந்திரனிடம் கேட்க,
“பாஸ்… நான் கால் பண்ணேன்… உங்களை ரீச் பண்ண முடியல…” என்றவனின் குரலில் பதட்டமிருந்தது.
“என்ன ஆச்சு?” என்றவனின் புருவம், நெரிபட்டது.
“நீங்க காரை வெளிய எடுக்க வேண்டாம் பாஸ்… உங்களை லாரியை வெச்சு தூக்க போறாங்களாமாம்…” என்று முடிக்க,
“நான் ஈசிஆர்ல போயிட்டு இருக்கேன் சிவா… என்னோட ஜிபிஎஸ் கோஆர்டினேட்ஸ ட்ராக் பண்ணிக்க…  மூணு லாரி ஆல்ரெடி துரத்திட்டு தான் இருக்கு…” என்றவனை அதிர்ந்து பார்த்தாள் மஹா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!