VNE58(2)

VNE58(2)

“ம்ம்ம்… ரைட்… ஆனா நான் ரெண்டு விதமான மஹாவை பார்த்துட்டேன். என் மேல முழுசா நம்பிக்கை வெச்சு, நான் தப்பே பண்ணாக் கூட, ஏதாவது காரணம் இருக்கும்ன்னு நம்பின என்னோட பிரண்ட் மஹா. இப்ப இருக்கவ, நம்பிக்கை இருந்தாலும் பொசெசிவ்னஸ் ஓவராகி, விட்டுட்டு போய்டுவேனோன்னு பயம் அதிகம் இருக்கற என்னோட பொண்டாட்டி.  ஆனா அதுக்காக நான் ப்ரூவ் பண்ணிட்டே இருக்க முடியாது…

லைப்ல நாம ப்ரூவ் பண்ணிட்டே தான் இருக்கணும்னா வாழ முடியாது… அவங்க அவங்களா புரிஞ்சுக்கணும்… அதுக்கான ஸ்பேசை அவளுக்கு நான் கொடுக்கறேன்… நானும் அவளோட பயம், சந்தேகம், விருப்பு வெறுப்பெல்லாம் புரிஞ்சுக்கனும்… ரொம்ப வேகமா ரிலேஷன்ஷிப்குள்ள போயாச்சு… இப்ப இந்த ஸ்பேஸ் இல்லைன்னா அதே வேகத்தோட வெளிய வந்துட வேண்டியதுதான் கார்த்திக். ஒன்னு நான், இல்லைன்னா அவ… அவ்வளவுதான்…”

“ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை சொல்ற ஷ்யாம்?”

“எஸ்… மேரேஜ்ங்கற இன்ஸ்டியூஷன் மேலேயே பெருசா நம்பிக்கை இல்லாம இருந்தவன் நான். ஒரே நாள்ல முழுசா நான் மாறிட முடியுமான்னு உள்ளுக்குள்ள மஹா யோசிக்கறா. அதுவும் கரெக்ட் தான? அவளுக்கு அந்த நம்பிக்கையை நான் படிப்படியாத்தான் கொடுக்க முடியும். இந்த ஸ்பேஸ் இல்லைன்னா அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டுடும்.

பிரெண்ட்ஸா மட்டும் இருந்தப்ப நான் எவ்வளவோ சொல்லிருக்கேன். அத்தனையும் இப்ப பேக்ஃபயர் ஆகுது.  இரண்டு பேருக்கும் சண்டைங்க்றது எப்பவுமே இருக்கறதுதான். இன்பாக்ட் ஒரு சண்டைல தான் எங்க ரிலேஷன்ஷிப்பே ஸ்டார்ட் ஆச்சு. ஆனா ப்ரெண்ட்ஸா இருந்தப்ப இருந்த நம்பிக்கை, இப்ப குறைஞ்சு போச்சு. அதை தான் எப்படி மீட்டு கொண்டு வர்றதுன்னு தெரியல. அவளா புரிஞ்சுக்கனும். புரிஞ்சுக்குவா… புரிஞ்சுட்டு வரட்டும்…” என்று கூறியவனை ஆழ்ந்து பார்த்தான்.

“பேசாம கொஞ்ச நாள் அவ பெசன்ட்நகர்ல இருக்கட்டுமே… என்னதான் ஹஸ்பன்ட் அன்ட் ஒய்ப்பா இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி அவசியம். இந்த மாதிரி நேரத்துல தனிமையும் அவசியம். அவங்களை அவங்களே சுய பரிசோதனை செஞ்சுக்கணும். காயப்படுத்திகிட்டே, காயப்பட்டுகிட்டே எத்தனை நாள் வாழ்ந்துட முடியும் சொல்லு?”

“எத்தனை பிரச்சனை இருந்தாலும் அதை மட்டும் என்னால பண்ணவே முடியாது. சண்டை போட்டாலும் என் கூடவே இருந்து சண்டை போடட்டும். உனக்கு தெரியாது கார்த்திக்… முன்னவெல்லாம் எனக்கு தூக்கமே வராது. மாத்திரையும் போடுவேன். தென் லிக்கரும் எடுப்பேன். முன்ன மஹா கூட திட்டி இருக்கா. ரெண்டும் டேஞ்சரான காம்பினேஷன்னு. ஆனா இப்பவெல்லாம் நான் மாத்திரையே போடறதில்ல… படுத்தா தூங்கற அளவுக்கு மாறி இருக்கேன்…”

“அதுக்காக இப்படி ரெண்டு பேரும் எலியும் பூனையுமாவா? எவ்வளவு நாளைக்கு ஷ்யாம்?” என்றவனை ஆழ்ந்து பார்த்தவன்,

“எஸ்… எப்படி இருந்தாலும் கூடவே தான் இருக்கணும்… அது எவ்வளவு நாளைக்குன்னு எல்லாம் கிடையாது… லைப் லாங்… அவளால ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்கட்டும்… இல்லைன்னா இப்படியே இருந்துட்டு போறேன். ஐ டோன்ட் ஹேவ் எனி இஷ்யுஸ்…”

“டூ மச் மச்சான்… இதுக்கு கல்யாணம் பண்ணாமலே இருந்து இருக்கலாம்.”

“ஏன் கார்த்திக்… மஹா லைப் ஸ்பாயில் ஆகுதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?”

“எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம் தான்… முதல்ல மஹாவுக்கு அண்ணன் மட்டும் தான். இப்ப நீ என்னோட மச்சான், ப்ரென்ட், பிலாசபர் அன்ட் கைட். உங்க ரெண்டு பேரையுமே விட்டுக் கொடுக்க முடியாது…” தெளிவாக கார்த்திக் கூறிவிட புன்னகைத்தான்.

“தேங்க்ஸ்… ஆனா கல்யாணம் பண்ணாம இருந்து இருக்கலாமேன்னு நினைக்காத. நான் ஒரு செக்கன்ட் கூட அப்படி நினைச்சது இல்ல…”

“ஆனா… இவ்வளவு கஷ்டத்தை தாண்டி…” என்று கூற வந்தவனை கையமர்த்தியவன்,

“கல்யாணமே பண்ணிக்க முடியாதுன்னு சொன்னா கார்த்திக். பண்ணா அது நரகமாத்தான் இருக்கும்னா … பரவால்ல அந்த நரகத்துலையே நானும் இருக்கேன்னு சொல்லித்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சேன். இப்ப அந்த நரகத்தை அனுபவிக்க கஷ்டமா இருக்குன்னு நான் புலம்பினா எப்படி?” என்று இயல்பாக கூறியவனை அதிர்ந்து பார்த்தான்.

“என்ன மச்சான் சொல்ற?”

“ம்ம்ம்… விஜி அனுப்பின வீடியோஸ் பார்த்துட்டு…”

“ஆனா ட்விட்டர்ல லீக் ஆனது வெறும் பிக்சர் தான?”

“ம்ஹூம்… தனியா இவளுக்கு வீடியோ அனுப்பியிருக்கான்…”

“உப்ப்ப்… என்ன மச்சான்? மகா பார்த்தது வெறும் பிக்சர்ன்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கேன்…”

“இல்ல… அப்படி இருக்கும் போது அவ உடனே என்னோட நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கனும்ன்னு நினைக்கறது முட்டாள்தனம் இல்லையா? எப்படி முடியும் அவளால? நான் அவகிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். நான் இப்படிதான் இருந்தேன்னு. ஆனா அதெல்லாம் என்னோட வார்த்தை மட்டும் தான். தியரிட்டிக்கல். ஆனா பிராக்டிகலா அதையெல்லாம் பார்த்தா யாராலும் தாங்க முடியாது கார்த்திக். என்னாலேயே அதையெல்லாம் கடந்து வர முடியல. பாவம்டா அவ…”

“ப்ச்… இதுவும் கடந்து போகும்…” என்று சிரித்தபடி அவன் சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தான்.

இத்தனை புரிதலான கணவனை மஹா ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? இத்தனை காதலை யார் கொட்டக் கூடும்?

கேட்பதற்கு சுலபமாக எளிதாக இருக்கலாம். ஆனால் ஒரு அறையிலிருந்து கணவன் வெளியே வர, அவனுக்கு பின் இன்னொரு பெண், அதிலும் எந்த மாதிரியான பிரச்சனைகளை கடந்து வந்த பின், அவளை பார்த்தால் யாராலும் ஜீரணிக்க முடியாதுதான். அவற்றை ஜீரணிக்க அவர்கள் ஸ்பெஷல் மேக்காக இருக்க வேண்டும். அல்லது எந்த கவலையும் இல்லாத குழந்தையாக இருக்க வேண்டும்.

முதிர்ந்தும் முதிராத மஹாவை போன்ற உண்மையை எதிர்பார்ப்பவர்களால் இந்த நெருப்பாற்றை நீந்தி கடப்பது சிரமம்.

சௌஜன்யா கவலையாக ஷ்யாமை பார்த்து,

“ஓகே சர்… ஏதாவதுன்னா கால் பண்ணுங்க. மேடம் கிட்ட நான் ஏதாவது எக்ஸ்ப்ளைன் பண்ணனும்ன்னா பண்றேன். டோன்ட் மிஸ்டேக் மீ சர்…” என்ற சௌஜன்யாவிடம்,

“தேவைப்படாது ம்மா… நீங்க கிளம்புங்க…” என்று ஷ்யாம் முடிவாக கூறிவிட, கார்த்திக் ஸ்ரீராம் பக்கம் திரும்பி,

“என்ன ஸ்ரீராம்? இப்படி பண்ணிட்ட?” என்று கண்டன குரலில் கேட்டான்.

“சாரி ண்ணா… இப்படின்னு நான் நினைக்கவே இல்ல… இது என்னோட ஃபால்ட் தான்…” என்று பாவமாக கூற,

“அவரை விட்டுடு கார்த்திக். என் தப்பு தான். அவ கிட்ட விளையாட்டா சொன்ன பொய்… உண்மைய சொல்லிருந்தா அவளுக்கு கோபம் வந்து இருக்காது…”

நெற்றியை சுரண்டிக் கொண்டே ஷ்யாம் கூற,

“நீ ஏன் மச்சான் பொய் சொன்ன? சொன்னப்பவே நினைச்சேன்…”

“இன்னைக்கு கல்யாணமாகி நூறாவது நாள் கார்த்திக். அவளுக்கு சர்ப்ரைஸா கிப்ட் பரெசன்ட் பண்ணலாம்ன்னு நினைச்சேன். வெளிய சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா உஷாராகிடுவான்னு தான், ஹாஸ்பிடல்ல மன்த்லி ஆடிட்டிங்ல பிசியா இருக்கேன்னு சொன்னேன். அது இப்படி க்ராஸ்பயர் ஆகும் ன்னு நினைக்கவே இல்ல…” கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் செல்பேசியில் பிசியாக இருந்தது.

மகேந்திரனை அழைத்தவன், “மகி, மேடம் வீட்டுக்கு வந்துட்டாங்களா?” என்று கேட்க, அவன் “இன்னும் இல்லங்க…” என்று கூற,

“சரி வந்தா எனக்கொரு கால் பண்ணிடு…” என்று கூறி விட்டு வைத்தான்.

இன்னமும் பெசன்ட் நகரும் போகவில்லை. கார்த்திக் பைரவியை அழைத்து அதை உறுதிப் படுத்தியிருந்தான். போயஸ் கார்டனும் போகவில்லை.

அப்படியென்றால் அவள் நடுவில் தான் எங்காவது இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், ஏதோவொரு எதிர்பார்ப்பில் அவசரமாக கீழே இறங்கினான்.

ஒருவேளை பார்க்கிங்கில் இருப்பாளோ?

“கார்ல வந்தாளா ஸ்ரீராம்?”

“ஆமாங் மாமா… கார்ல தான்… நான் தானே கீழ வந்து மஹாவை ரிசீவ் பண்ணேன்…” எனவும் கார்த்திக் முறைத்தான்.

“ரொம்ப முக்கியம். ரெண்டும் சேர்ந்து அரவேக்காட்டுத்தனமா செஞ்சுட்டு…” என்று ஸ்ரீராமுக்கு மட்டும் கேட்பதை போல முனக, ஸ்ரீராம் அவனை சங்கடமாக பார்த்தான்.

“சாரி ண்ணா …” என்று தலை குனிய,

“இட்ஸ் ஓகே ஸ்ரீராம். நீங்க நல்லதுதான நினைச்சீங்க?” என்றவன் கார் பார்க்கிங்கை அணுக, நல்ல பிள்ளையாக நின்றிருந்தது மஹாவின் மினி கூப்பர்.

எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்தார் செக்யுரிட்டி.

“சார்… உங்க பேர்?” ஷ்யாமை பார்த்து கேட்க,

“ஷ்யாம்… என்ன சொல்லுங்க?” நெற்றியை சுருக்கியபடி கேட்க,

“உங்க கிட்ட சாவியை கொடுக்க சொல்லிட்டு போனாங்க ஒரு மேடம் சார்…” என்று அவர் கூற, திடுக்கிட்டான் ஷ்யாம்.

மெளனமாக கார்த்திக்கை பார்த்தான்.

நினைத்ததை விட பெரிதாக்கி கொண்டிருக்கிறாளே. கொஞ்சமாவது பொறுமை வேண்டாமா? சட்டையை பிடித்து கேட்க வேண்டியதுதானே? அது என்ன கார் சாவியை கொடுத்து விட்டு செல்வது?

இருவரின் மனதிலும் இதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

“என்ன ஷ்யாம் இப்படி சொல்றார்?” கார்த்திக் பதட்டமாகி விட்டான்.

ஸ்ரீராமின் முகத்தில் இன்னுமே பதட்டம் தெரிய, இருவரையும் கையமர்த்தி விட்டு,

“அவங்க எப்படி இருந்தாங்க?” என்று கேட்க, அவர் கூறிய அடையாளங்கள் மஹாவுக்கு ஸ்பஷ்டமாக பொருந்தியது.

கோபித்து கொண்டு காரை ஏன் எடுக்காமல் சென்றாள் என்று யோசித்துக் கொண்டே காரின் சாவியை வாங்கி கார் கதவை திறக்க, அங்கே மஹாவின் செல்பேசி அனாதையாக கிடந்தது.

கோபத்தில் சென்றிருக்கிறாள் தான். ஆனால் மிகவும் யோசித்து தான் சென்றிருக்கிறாள். அவனை முழுவதுமாக மறுத்துவிட்டு சென்று விட்டாளா?

வேண்டாம் என்றா? போதும் என்றா?

நெஞ்சுக்குள் தோன்றிய சுள்ளென்ற வலி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டிருந்தது.

எப்படியும் பெசன்ட் நகர் தான் செல்வாள் என்று நினைத்துக் கொண்டே கார் டேஷ் போர்டை திறந்து பார்க்க, மஹாவின் பர்ஸ் அங்கே இருக்க, ஷ்யாம் இன்னுமே பதட்டமாகினான்.

பர்சையும் விட்டுவிட்டு, பேசியையும் விட்டு விட்டு எங்கு செல்வாள்?

நடந்தே சென்று விடுவாளா?

ஷ்யாமுக்கு உள்ளுக்குள் அலாரம் அடித்தது.

“கார்த்திக் என் காரை எடுத்துட்டு நீ ஒரு பக்கமா போ… எப்படியும் நடந்து தான் போவா போல… எல்லாமே இங்க இருக்கு…” என்று வேகமாக கூறியவன், ஸ்ரீராமை நோக்கி, “நீ எதுல வந்த ஸ்ரீராம்?” என்று கேட்க,

“நான் டூவீலர்ல வந்தேன் மாமா…” என்றான்.

“அப்படீன்னா நீ ஒரு பக்கம் போ…” என்று கூற,

“ஓகே மாமா…” என்றவன், அவனது மற்ற நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தான், மெசேஜில்!

“என்ன ஸ்ரீராம்?” கார்த்திக் கேட்க,

“யாரை மஹா காண்டாக்ட் பண்ணாலும் இன்பார்ம் பண்ண சொன்னேன் ண்ணா…” என்று கூற,

“ஓகே ஸ்ரீராம். ஆனா வெளிய யார்கிட்டயும் அவுட் பண்ண கூடாதுன்னு சொல்லிடு. சிங்கிள் நியுஸ் லீக் ஆனாலும் மீடியால விதவிதமா கதை ரெடி பண்ணிடுவாங்க… ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்…” என்ற ஷ்யாமின் கூற்றை அப்படியே ஒப்புக் கொண்டான்.

“சியூர் மாமா…” என்றவன், அவசரமாக அவனது வண்டியை எடுக்க ஓடினான். ஓடியவனை பார்த்தவன், கார்த்திக் புறம் திரும்பி,

“அட்லீஸ்ட் போன் இருந்தாலாவது மஹா எங்க இருக்கான்னு தெரிசுக்கலாம் கார்த்திக். அதையும் பர்பசா விட்டுட்டு போயிருக்கான்னா… எனக்கு பயமா இருக்குடா…”

வாழ்க்கையில் முதன் முறையாக பயம் என்பதை உணர்ந்தான் ஷ்யாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!