VVP-2A

அத்தியாயம்-2(1)

சாம்பலின் சாயல்(3):

நம்ம ஹீரோ பெயர் என்ன மேடம்? பார்க்க எப்படி இருந்தாரு? என்ன பேசினீங்க சொல்லுங்க?” என்று பெரும்பாலும் அந்த வயது பெண்களுக்கே உள்ள ஆர்வத்துடன் கேட்டாள் மங்கை.

அவளின் ஆர்வத்தை பார்த்த மிதுலாவிற்கு சிரிப்பு வர, அவர்கள் இருவரின் முன், முதல் முறையாக வாய்விட்டு சிரித்தாள்.

மிதுலா சிரிப்பதை பார்த்த ஆதவன் “மேடம் உங்க கதைல எங்கயும் இதுவரைக்கும் சிரிக்கல. பட் இப்போ… இதுல இருந்து தெரியுது நீங்க கடந்து வந்த பாதை எவளோ கடினமா இருந்துருக்கும்ன்னு”

அவள் சிரித்தமுகத்தில் புன்னகை தேங்கி நின்றது.

மங்கையின் புறம் திரும்பி “அப்போ இருந்த மிதுலாட்ட கேட்டுருந்தா என்னசொல்லணும்னு தெருஞ்சுருக்காது என்று நிறுத்தி புன்னகைத்தவள், “அவர் எப்படியிருந்தாருன்னு சொல்லணும்ன்னா பாக்க நல்லாவே இருந்தார்” என்றாள்.

மேடம் என்ன பேசினீங்க சொல்லுங்க?” மங்கை ஆர்வத்துடன் கேட்க, கடந்து சென்ற வாழ்க்கையின் பக்கங்களை மறுபடியும் புரட்ட ஆரம்பித்தாள்.

———————

அவன் அவளை தாங்கிப்பிடிக்க, மிதுலா சட்டென அவனிடம் இருந்து விலகினாள். “இல்ல கீழ விழப்போனீங்க. அதுதான் உதவினேன்” தன்னிலை விளக்கம் கொடுத்தான் அவன்.

தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு தடுமாறி அவள் நடக்க ஆரம்பிக்க, அவள் பின்னே வந்தவன் “உங்களால முடியல. நான் வரேன் உங்க துணைக்கு” அவள் அவனின் பேச்சை கேட்டாள் தானே? எதுவும் செவியை அடையவில்லை.

கைல இருக்க பையை குடுங்க. நான் எடுத்துட்டு வரேன்” அவன் கேட்க, தள்ளாடி நடந்தாலும், அவளிடம் பதிலில்லை.

“முடிலைனா ஆட்டோல போலாம்ல?”…. ஹ்ம்ம் ஹ்ம்ம். மௌனமே பதில். தவறிக்கூட திரும்பி அவனைப் பார்க்கவில்லை.

பாஹ். என்ன ஒரு அழுத்தம்?’ என்றே நினைத்தான் அவன். எப்படியோ தள்ளாடி வீடு வந்து சேர, அவன் பின்தொடர்வதை நிறுத்தவில்லை. கூடிப்பேசும் பெண்கள், ஒரு ஆண் அவளுடன் வருவதை பார்த்து ஏதோ குசுகுசுவென பேச, இதற்கும் எந்த பிரதிபலிப்பும் இல்லை அவளிடம்.

அவள் வீட்டுக்கதவை திறந்து, உள்ளே சென்று தாளிட்டுக்கொள்ள நினைக்க, கதவை மூட விடாமல் தடுத்தான். அதுவரை அவனைப் பார்க்காது எங்கோ பார்த்திருந்த கண்கள், இப்போது அவனை என்ன என்பது போல் பார்த்தது.

ஏங்க இவ்வளவு தூரம் வந்துருக்கேன். நீங்க பத்திரமா வந்து சேர… வீட்டுக்குள்ள தான் கூப்பிடவேணாம். கர்ட்டஸிக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லலாமே” என்றான் சற்று கோபத்துடன்.

அவளின் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாமல் “நான் அங்கேயே தேங்க்ஸ் சொன்னேனே? கேட்கலயா??? அப்பறம் நான் உங்கள என்கூட துணைக்கு வரச்சொன்னேனா? இல்ல உதவி கேட்டேனா? இல்ல ஏதாச்சும் பேசினேனா? ஏதோ நீங்களா வந்தீங்க… அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டு, அவள் பேசியதில் அவன் அசந்த சமயம், கதவை சட்டென தாளிட்டுக்கொண்டாள்.

அவனுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரிய சில நொடிகள் எடுத்தது. அதுவும் முகத்தில் அறைந்தாற்போல் கதவை அடைத்தது, இருந்த கோவத்தை இன்னமும் அதிகப்படுத்தியது.

அதே கோபத்துடன், கதவை வேகமாக உதைத்து விட்டு அங்கிருந்து சென்றான். உள்ளே சென்ற அவளோ, போனவுடன் தைக்க ஆரம்பிக்காமல், படுக்கையில் படுத்தாள் சோர்வாக இருந்ததால்.

எதையோ யோசித்துக்கொண்டிருந்தாள். ஒருவேளை வந்தவனை பற்றியோ??? என நாம் நினைத்தால், ‘இல்லவே இல்லை என்றது அவளின் முணுமுணுப்பு.

தூக்கத்தோட தைத்தா சரிவராது. இப்போவே தூங்கிட்டு காலைல சீக்கரம் எந்திருச்சு தைக்கலாம் என்று முணுமுணுத்துக்கொண்டே தூங்கிவிட்டாள்.

நள்ளிரவு கத்தல், பயம், கவசம் எதுவுமில்லை. நல்ல உறக்கம். விடியலுக்கு முன்னே எழுந்து வேலையில் மூழ்கினாள்.

அன்று கம்பெனியில் இருந்து திரும்ப வரும்போது, ஒரு இடத்தில் அவளை குறுக்கிட்டு ஒருவன் தடுத்தான்.

யார் என்று நிமிர்ந்து பார்க்க. அவனே தான். புருவங்கள் முடிச்சிட்டது. அதுவும் ஒரு நொடிதான். பின் உணர்ச்சிகள் துடைத்த அதே முகம்.

அவள் எதுவும் பேசாமல் நிற்க, அவனே தான் பேச வேண்டியிருந்தது. “இப்போ எப்படி இருக்கீங்க? உடம்பு பரவால்லயா?”

நன்றாக இருக்கிறேன் என்று பதில் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ அந்த பதிலை தலையசைப்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் போகும் தடம் மறையும் வரை அவளையே பார்த்து நின்றுகொண்டிருந்தான்.

நாட்கள் நகர்ந்தன. அவளுடைய வழக்கம் மாறாமல் அதே வேலைகளை செய்துகொண்டிருந்தாள்.

ஒரு நாள் மாலை அவள் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது, அவளை நடக்க விடாமல் குறுக்கில் நின்றான் அவன்.

“உங்ககிட்ட பேசணும்” என அவன் சொல்ல, பதில் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்தாள்.

“ஐம் கவுதம். நான் இதுல இருக்க Systech Inc’ல தான் வேல பாக்கறேன்” என்று அருகில் இருந்த ஒரு SEZ வளாகத்தை காட்டினான்.  அவள் அந்த கட்டிடத்தை பார்க்கவில்லை. அவனையே பார்த்தாள்.

அவன் தொடர்ந்தான். “உங்கள டெய்லியும் இந்த டைம் இங்க பாப்பேன். உண்மைய சொல்லனும்னா, உங்களப்பாக்கவே இந்த நேரம் இங்க வருவேன்” நிறுத்தி அவள் உணர்வுகளை படிக்க முயன்றான். எப்பொழுதும் போல் எந்த உணர்ச்சியும் இல்லை.

அப்படி டெய்லியும் வரப்பதான், ஒரு நாள் உங்களுக்கு முடியாம போனதைப்பாத்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணேன்.

அவனை அதற்குமேல் பேசவிடாமல் “தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு, குறுக்கே நின்றவனை சுற்றிக்கொண்டு, அவனை கடந்து நடந்தாள்.

அவன் கால்கள் எட்டவைத்து அவளுக்கருகில் நடந்துகொண்டே “ப்ளீஸ் நான் சொல்றத கேட்டுட்டு போங்க... நீங்க அன்னைக்கு என்ன எடுத்துதெருஞ்சு பேசினப்ப எனக்கு கோவம் வந்துச்சு... பட் அதையும் மீறி ஏதோ ஒன்னு என்ன உங்ககிட்ட ஈர்க்கவைக்குது”

அவள் பேசாமல், அவனை பாராமல் நடக்க, சுத்தி வளைக்காம நேரா சொல்றேன். எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சுருக்கு. நீங்க தேவையில்லாம யாரையும் பாக்கறதில்ல. பேசறதில்ல. நீங்க உண்டு உங்க வேல உண்டுனு இருக்கீங்க. அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”

அவள் நடையை நிறுத்தி, திரும்பி அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

பின் அவனிடம், “என்னப்பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியாது. மோர்ஓவர் எனக்கு இதுல இன்டெரெஸ்ட்டும் இல்ல. இனிமே என்ன பாக்கறதுக்காவே வந்தேன்னு சொல்லவேண்டாம்” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென நடக்க ஆரம்பித்த்தாள்.

அவளுக்கு ஈடுகொடுத்து கூடவே வந்தவன் “நான் எனக்காக, உன்னப்பாக்க வருவேன். சரி… உன்ன பத்தி நீயே சொல்லு. தெருஞ்சுக்கறேன்” என உரிமையுடன் பேச, நின்று நிதானமாக அவனைப் பார்த்தவள்

என்ன பத்தி சொன்னேன்னா இப்படி என் பின்னாடி நீங்க சுத்த மாட்டிங்க. அப்பறம் இவளோ தூரம் நான் பேசறதே அன்னைக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணதாலதான். சோ ப்ளீஸ் இதை இங்கயே ஸ்டாப் பண்ணிப்போம்”

முடியாது. நான் வருவேன் இனி டெய்லியும் உன்ன வழி மறச்சு பேசுவேன். இதுவரைக்கும் யார்கிட்டயும் பேசாத நீ என்கிட்ட இவளோ பேசியிருக்க. சோ கண்டிப்பா இன்னமும் பேசுவ” நம்பிக்கையுடன் சொன்னான்.

 ஒரு சில நொடிகள் யோசித்தாள். இது வளர்வது அவளுக்கு பிடிக்கவில்லை. இதிலெல்லாம் நாட்டமும் இல்லை.

அவனும் அவளையே பார்த்திருந்தான். அவள் முகத்தில் ஆர்வமோ, கோவமோ, சந்தோஷமோ, கவலையோ எதுவுமே தெரியவில்லை.

கவுதமிடம் இதுவரை தானாக வந்து பேசிய பெண்கள் அதிகம். ஆயினும் அவன் விரும்புவது அமைதியான அடக்கமான குடும்பப்பெண். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் அவன் நினைத்திருந்தது மிதுலாவை போல்.

அவ்வளவு அழகிருந்தும் அதில் கர்வமில்லை. எளிதில் யாரையும் கவர்ந்திழுக்கும் கண்கள். இருப்பினும் அந்த கண்கள் இதுவரை யாரையும் பார்த்ததில்லை.

ஒருவேளை யாரையாவது மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறாளோ என்ற எண்ணம் சன்னமாக அவன் மனதில் தோன்ற, ‘அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று அவளை பார்த்திருந்தான்.

சுற்றி பார்த்தாள். அங்கே ஒரு ஹோட்டல் தெரிந்தது. அவன் புறம் திரும்பி “நாளைக்கு அதோ அந்த ஹோட்டல்ல இதே நேரம் மீட் பண்ணலாம்” என சொல்ல “அந்த ஹோட்டல்ல நின்னு தான் தினமும் உன்ன பாப்பேன். ஒரு தடம் கூட நீ பார்த்ததில்லை” என்றான்.

அவள் பதில் சொல்லாமல் நடக்க, இரண்டு அடியில் அவளை நெருங்கியவன் “உன் பேர சொல்லலையே. உன் போன் நம்பர் குடு” என்று உரிமை எடுத்துக்கொள்ள நினைக்க, பதில் ஏதும் தராமல் நடந்தாள்.

அவனுக்கு தன்னை மதிக்காமல் இருக்கிறாளே என்று தோன்ற, அவள் கையை பற்றி நிறுத்த நினைத்தான். ஒருவேளை அது தவறாகிப்போய் நாளை பார்க்க முடியாமல் போய்விட்டால் என்ற எண்ணம் தோன்ற அமைதியானான்.

******

அடுத்தநாள் அவள் வரும்முன்பே வந்திருந்தான். அவள் கம்பெனியில்  இருந்து பையை எடுத்துக்கொண்டு உள்ளே வர, இவளை பார்த்ததும் அவன் ஓடிச்சென்று அதை வாங்க கைநீட்ட, அவள் தடுத்துவிட்டாள்.

இருவரும் உட்கார்ந்தனர். “என்ன குடிக்கற?” அவன் கேட்க “எதுவும் வேண்டாம். பேசவேண்டிய விஷயத்தை பத்தி பேசுவோம்” என்றாள் நேராக விஷயத்தை பேசிவிட்டு தான் செல்லவேண்டும் என்பதுபோல்.

அவன் பேசும்முன் “சரி உங்களுக்கு என்கிட்ட பிடிச்சது என்னோட அப்பியரன்ஸ். இல்லயா?” கூர்மையாக அவனை நோக்கினாள் அவன் மனதை அறிந்துகொள்ள.

அவள் நேராக இந்த கேள்வியை கேட்க, அவன் மனதில் அப்போ வெறும் வெளியழக பார்த்து தான் என்ன பிடிச்சுருக்கானு கேட்டாலும் கேட்பாள் என்றெண்ணியவன்

அது தான் ஃபஸ்ட் உன்ன பாக்க வெச்சது. ஒத்துக்கறேன் பட் உன்னோட ஆக்டிவிட்டீஸ் என்ன ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணுச்சு…ஹ்ம்ம் எப்படி சொல்றது… அதிகமா யார்கிட்டயும் பேசாம… நீ உண்டு உன் வேல உண்டுன்னு இருக்க. ரொம்ப ஹோம்லி… அமைதி… சிம்பிலா சொல்லனும்னா ஒரு குடும்பப்பாங்கான பொண்ணு”

அவள் எதுவும் பேசாமல் அவன் பேசியதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் மௌனமாகயிருக்க, அவன் “உன் பேரெண்ட்ஸ் கிட்ட வந்து நான் பேசறேன். அப்பறம் என் ஃபேமிலிய கூட்டிட்டு” என்று அவன் பேசிக்கொண்டிருக்க, கை காட்டி அவனைத் தடுத்தாள்.

உங்க எதிர்பார்ப்பு என்னனு புருஞ்சுகிட்டேன். என்னப்பத்தி ஒரு அவுட்லைன் மட்டும் சொல்றேன். அதுக்கப்பறம் உங்க எதிர்பார்ப்புக்கு நான் ஏற்றவளான்னு முடிவு பண்ணிக்கோங்க”

 ஏதோ பொய் சொல்லி உன்ன எனக்கு பிடிக்கல்லனு சொல்லவைக்க போற” அவன் கேட்க “கண்டிப்பா இல்ல. எனக்கு பொய் சொல்லணும்ன்னு அவசியமும் இல்ல”

நான் அப்பா அம்மாகூட இல்ல. ஒருத்தன நம்பி என் வீட்டை விட்டு வந்து அவன்கிட்ட ஏமாந்து போய்ட்டேன். அண்ட் “நீங்க நினைக்கற மாதிரி” நான் குடும்பப்பாங்கான பெண்ணான்னு தெரில” நீங்க நினைக்கிற மாதிரி என்ற இடத்தில் அழுத்தமாக சொன்னவள் “ஐம் நாட் எ விர்ஜின்” என்றாள் அசால்டாக.

நெற்றி சுருங்க வாட்…?” என்று கத்தவே கத்திவிட்டான். புரிலயா? நான் நீங்க நினைக்கற மாதிரி ஆம்பளய நிமிர்ந்து கூட பாக்காத பொண்ணு கிடையாது. இப்போ புரிதா என்றாள் தெளிவாக.

அவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. கைகளை பிசைந்துகொண்டு அவள் முன்னே, அவள் முகம் பாராமல் இருக்க, “இதுக்கு தான் கேட்டேன். என்ன பத்தி என்ன தெரியும்ன்னு?” என்றாள் அவனையே பார்த்து தீர்க்கமாக.

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில. கொஞ்சம் டைம் குடு நான் யோசிக்கணும்” முகம் பாராமல் அவன் சொல்ல “ஹாஹாஹா கவுதம் கவுதம்” என்று போலியாக சிரித்தவள்

“நான் உங்க ப்ரோபோசல்க்கு ஒத்துக்கவே இல்ல. சோ நீங்க யோசிக்கறது வேஸ்ட். நான் உங்களுக்கு செட் ஆகமாட்டேன்” என்றவள் மேலும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றாள்!!!!

———————

என்ன மேடம் கவுதம் உங்க ஹீரோன்னு நினைச்சேனே சற்று வருத்தத்துடன் மங்கை மிதுலாவிடம் சொல்ல “கவுதம் என் கதைல ஹீரோயில்ல. மே பி வேற பொண்ணோட கதைல ஹீரோவா இருக்கலாம்” என்றாள் புன்னகை மாறாமல்!!