Yadhu weds Aaru 12

Yadhu weds Aaru 12

அத்தியாயம் 12 

 

 நாள் 1 ….காலை நான்கு மணி…

 

     “என்ன டா மாஹிர்…இந்த நேரத்துல…”என்று கண்களை கசக்கியவாறு முற்றுப்பெறாத தூக்கத்துடன்…தனது அறையில் சுறுசுறுப்பாக அமர்ந்திருந்த மற்ற மூவரையும் விசித்திரமாக பார்த்தவாறு விசாரித்தான் சித்…

         “தீதி சுப நாலு மணிக்கு எந்திரிச்சி ரன்னிங் ஜாத்தி ஹே…இஸ்லியே நீங்க இப்ப  உங்கே பாஸ்…”தீதி காலைல நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சு ரன்னிங் போவாங்க…அதனால இப்ப நீங்க அவங்ககிட்ட போங்க…என்று மாஹிர் கூற… என்னது தூக்கத்தை கெடுத்துட்டு ஓடணுமா என்ற முகபாவத்துடன் கண்களை தேய்த்துக்கொண்டே “அப்ப நீங்க மூணு பெரும் என்ன பண்ண போறீங்க…”என்று  என்னை விட்டுட்டு நீங்க மட்டும் தூங்குவீங்க என்ற பொறாமை அந்த கேள்வியில் தெறிக்க கேட்டான் சித்…

         “கவி போய் யாதவை உசுப்பிவிடுவா…உங்களை அவன் பாக்கணும்ல… நாங்க ரெண்டு பெரும் நீயும் கவியும் சரியாய் பண்ணுறீங்களானு ஒளிஞ்சு  பார்த்துட்டு இருப்போம்…அதுனால கவலை படமா போய்ட்டு வா…”என்றவாறு சித்தார்த்தை தள்ளிக்கொண்டு போய் குளியலறைக்குள் விட்டாள் கனிஷ்கா

  

 

*********************************************************************************************************************

    கதவு படபடவென்று தட்டப்படும் சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் வந்த இனிய கனவிலிருந்து  பதறி எழுந்தான் யாதவ்…எழுந்தவன் கொட்டாவி விட்டவாறு கடிகாரத்தை நோக்க மணி நான்கு பதினைந்து ஆகிவிட்டது என்று காட்ட…”ஐயோ கருமசண்டாளம்…அப்ப நைட் ஒண்ணுமே பண்ணாமயே படுத்து தூங்கிட்டோமா…ச்சை…நம்மள பத்தி என்ன நினைச்சுருப்பா…வாயிலையே வடை சுடுறவன்னு தானே…”என்று தனது தலையில் தானே அடித்துக்கொண்டு வந்து கதவை திறந்தான் யாதவ்திறந்தவன் அதிர்ந்து நின்று விட்டான்.

அவன் எண்ணத்தின் ராட்சசியே அவன் முன்பு நின்றிருந்தாள்…காலை ஓட்டத்திற்கு தயாரக நீலநிற ஸ்போர்ட்ஸ் வெயர் அணிந்திருந்தாள்….அவளின் ஆதர்ச மேசி பன்…கருப்பு நிற கண்ணாடி சகிதம் அம்சமாக நின்றிருந்தாள்…அவளின் வெளிர் நிறத்திற்கு அந்த உடை அட்டகாசமாக இருந்தது…சில நொடி என்றாலும் அவளின் வளைவு நெளிவுகளை ஜொள்ளு வடிய தான் பார்த்திருந்தான் யாதவ்

                “ஸ்டெடி ஸ்டெடி யாதவ்…”என்று தன்னை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தவன் என்ன என்பது போல் தலையாட்டி கேட்க…நக்கலான சிரிப்புடன் “ராத்திரி முழுக்க உன் ஞாபகம் தானா…அதான் உன்னை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்…”என்று ஷா கூற…யாதவ் அம்மா என்றவாறு நெஞ்சிலே கைவைத்து நின்று விட்டான்

         “ஷாக்கை  குறை…ஷாக்கை குறை…”என்றவள் பின்கூறிய வார்த்தைகள்  எல்லாம் யாதவ் ஒரு முழம் கயிறு எவ்வளவு விலை என கேட்க செய்யும் அளவுக்கு இருந்தது….

 

          “அண்ணாமலை படத்துல வர ரஜினி மாதிரி பாஞ்சு பாஞ்சு என்னை ஓடஓட  தொரத்தி விடுவேன்னு சவால் விட்டியே…நீ ஏதாவது பண்ணிருவியோன்னு நான் கூட யோசிச்சேன்…பாரேன் ஆனால் நீ ஒண்ணுமே பண்ணலஅதான் மறந்துட்டியோன்னு ஞாபகம் படுத்திட்டு போலாம்னு வந்தேன்… எனக்கும் இங்கே இருக்க ஒரு வாரம் என்டேர்டைன்மெண்ட் வேணும்ல…அதான்…மறந்துராதே வெள்ளை பன்னி…சரி போய் எதையும் யோசிக்காம தூங்குங்க போங்க…அக்கா போய்ட்டு வரும்போது மறக்காம குச்சிமிட்டாயும்….குருவி ரொட்டியும் வாங்கிட்டு வரேன்….டாடா….”என்றவள் யாதவின் கன்னத்தில் தட்டிவிட்டு அவன் மறுமொழி கூறுவதற்குள் அங்கிருந்து சென்றிருந்தாள்

                    யாதவோ என்ன கொடுமை சரவணன் இதெல்லாம் என்பதுபோல் நின்றிருந்தான்….சில நொடிகளுக்கு பிறகே உணர்வு வரப்பெற்றவன் இந்த வாய்க்கே உன்னை ஏதாவது பண்ணனும் டி என்று நினைத்தவாறு  கோபத்துடன் கதவை அடித்து சாத்திவிட்டு உள்ளே சென்றான் (தூங்குறதுக்கு இல்லைல)

                    தாங்கள் போட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்காக காட்டேஜின் கண்ணாடி கதவிற்கு வெளியே நின்றிருந்த மாஹிர் அண்ட் கோ இதை அதிசயமாக பார்த்தனர்…மாஹிரோ திறந்த வாய் மூடவில்லை…ஷா இப்படியெல்லாம் சென்று வம்பு இழுப்பவள் இல்லையே…முதிர்ந்த மனப்பான்மை கொண்டவள் இப்படி சிறுபிள்ளை தனமாக செய்வது ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு….நிஜமாகவே யாதவின் மேல்  தனது அக்காவிற்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்பது அவனுக்கு இந்நிகழ்ச்சியின் முலம் ஐயமற தெரிந்துவிட்டது….

         அவன் அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும் போதே ஷா யாதவுடன் பேசிமுடித்துவிட்டு வெளியே வர திரும்பினாள்….உடனே திட்டத்தை செயல்படுத்த…

        “மாஹிர் பையா…கோ…”என்று அவன் குரல்கொடுக்க…ஆனால் யாரும் வரவில்லை…மாஹிர் தனக்கு அருகிலிருந்த கவியை நோக்கி எங்கே என்பதுபோல் கேட்க…”தெரியலையே…நம்ம கூட தானே நின்னுட்டு இருந்தாங்க…இந்த கனி அக்காவையும் காணோம்…ஐயோ…” 

          மொடா குடிகாரனை நம்பி இருசக்கர வாகனத்தில் பின்னாடி அமர்ந்து கூட சென்று விடலாம் போல…இந்த காதலர்களை வைத்துக்கொண்டு ஒரு ஆணி கூட பிடுங்க முடியாது போலவே என்று தலையில் அடித்துக்கொள்ள…ஷா அவர்களை நெருங்கியே விட்டாள்…

      ஷாவும் இவர்களை பார்த்துவிட…இருவரும் திருதிருவென்று முழிக்கவேண்டியதாகி விட்டது…

           “என்ன டா…இந்த நேரம்…”என்று ஷா அருகிலிருந்த கவியை பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மாஹிரை பார்த்துக்கேட்க….இப்பொழுது மட்டும் கனிஷ்காவும்..சித்தார்த்தும் இணைத்துவந்தால் என்ன ஆகும் என்ற அதிர்ச்சியில் நெஞ்சுக்கூட்டுக்குள் புல்லட் ஓடும் சத்தமே கேட்டது மாஹிர்க்குஅவனாவது பரவாயில்லை…கவிக்கு மயக்கமே வரும் போல் இருந்தது…எப்பொழுதுமே அவளுக்கு ஷாவை பார்த்தாலே சிறிது பயம் இருக்கும்…இப்பொழுது சொல்லவும் வேண்டுமா…

                  “பதில் சொல்லு டா…என்ன கோழி திருடுனவன் மாதிரி முளிக்குற…”என கேட்க “தீதி…தீதி…”என்று மாஹிர் இழுக்க…கவிக்கு இப்பொழுது வெளிப்படையாகவே கைகள் நடுக்க ஆரம்பித்துவிட்டது…அவளது முழியும் கைகள் நடுக்கமும் ஷாவிற்கு வித்தியாசமாக தெரிய…குளிரில் எதுவும் நடுங்கிறாளோ என்று நினைத்துக்கொண்டு “என்ன ஆச்சு …”என்று பாசத்துடன் கேட்கிறேன் என்று எப்பொழுதும் போல் அதட்டி கேட்டு விட கவி எப்பொழுதும் போல் உளற தயாராகிவிட்டாள்…

           “சித் அண்ணா…கனி மேடம்…அப்பா சார்…மாஹிர்…ரன்னிங்…”என்று தன்னையறியாமல் ஓடும் மோட்டார் போல வாய் சொல்ல கூடாததை எல்லாம் உளறி கொண்டிருந்தது…..இப்பொழுது அவனின் சின்ன அசைவு கூட அவளுக்கு சந்தேகத்தை கிளம்பிவிடும் என்று தெரிந்தவன் அமைதியாக முழிக்குற வேலையை செய்துகொண்டு நின்றிருந்தான்….   

   “என்ன அப்பா சார்…”என்று ஷா கூர்மையாக கேட்க

     “என்ன என்ன அக்காவும் தம்பியும் சேர்ந்து கவியை என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…”என்ற அதட்டலுடன் கவிக்கு அருகில் வந்து நின்றான் யாதவ்

     அவனும் காலை ஓட்டத்திற்கு தயாராகி வந்திருந்தான்

         ஷாவோ இது ஒரு பைத்தியம்…எப்ப பார்த்தாலும் சம்மந்தம் சம்மந்தமில்லாமல் பேசும் என்பதுபோல் முகத்தில் அபிநயத்தை கொண்டுவந்தவள்

     “மாஹிர்…ரன்னிங் வரியா…”என்று கேட்க…முதன்முறையாக யாதவை நன்றி பெருக்குடன் பார்த்துக்கொண்டிருத்தவன் …ஷாவின் அழைப்பில் அதிர்ந்து “நஹி தீதி…மே ரூம்க்கு ஜா ரஹி ஹு…”இல்லை தீதி…நான் ரூம்க்கு போறேன்…என்றவாறு கவியிடம் லேசாக தலையசைத்துவிட்டு சென்றான்….பின்னே யார் இந்த குளிரில் மனசாட்சியே இல்லாமல் நான்கு ஐந்து கிலோ மீட்டர் ஓடுவது….

      ஷாவும் சிறிது தோள் குலுக்கலுடன் கிழக்கு திசையில் போகும் சாலையில் சென்றுவிட…யாதவ் கவியிடம் விசாரிக்க அவள் ஒன்றுமில்லை என்று சொல்லிவிட அவளை அறைக்கு அனுப்பியவன்…ஷா சென்ற திசைக்கு எதிர்திசையில் போகும் சாலையில் சென்று விட்டான்…. 

       இவ்வளவு கலவரங்கள் நடந்தும் இந்த சித்தார்த்தும் கனிஷ்காவும் வந்தபாட்டை தான் காணோம்…அவர்களை தேடி தனது தமக்கை மற்றும் அண்ணனிடம் இருந்து தப்பித்து வந்த மாஹிரும் கவியும் சென்றனர்

         

******************************************************************************************************************

காலை 12  மணி…எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி

        ஷில்லாங் நகரத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நீர்வீழ்ச்சி…அடுக்கடுக்கான படிகளை போன்று இயற்கையாகவே அமைக்கப்பெற்ற பாறைகளில் துவைத்த வெள்ளை நுரை போல் பொங்கிவரும் நீர்வீழ்ச்சி…காண அவ்வளவு அழகாக இருக்கும்…அங்கு தான் இன்றைய படப்பிடிப்பு…

                     படப்பிடிப்பு தளம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்ததுஅந்த காட்சியில் நடிக போகும் யாதவ் மற்றும் துணை கதாபாத்திரங்களுக்கு உதவிஇயக்குனர் வசனம் எல்லாம் ஒரு பக்கம் கூறிக்கொண்டிருக்க….கனிஷ்காவிற்கு ஒப்பனை கலைஞர் ஒப்பனை செய்துகொண்டிருக்க…கனி சீன் காகிதங்களை படித்துக்கொண்டிருந்தாள்…கவி அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தாள்…மாஹிர் ஒளிப்பதிவு டிஜிட்டல் கேமரா மற்றும் லைட்டிங் செட் செய்துகொண்டிருந்தான்… சித்தார்த் சிறிதுநேரம் அடுத்து என்னசெய்யலாம் என்று யோசித்தவன் ஷாவை நோக்கி சென்றான்….

அழகியலாக இருக்கும் நீர்வீழ்ச்சியை தனது புகைப்பட கருவியின் உதவியால் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள் ஷா…அவளது கண்ணாடி அவளது கொண்டைக்கு அழகு சேர்ப்பது போல் ஏற்றிவிடப்பட்டிருந்தது…அவளது நயனங்கள் ஒளியை பிடித்து சேகரித்துக்கொண்டிருந்தது…

   “ஷா…”

    “ஹான்…சொல்லு சித்தார்த்…இன்னைக்கு உனக்கு சீன் இருக்கா என்ன…”

    “நோ ஷா…ஐ வாண்ட் எ ஹெல்ப் பிரம் யு ..”என்று சித்தார்த் கேட்க…அவ்வளவு நேரம் நீர்வீழ்ச்சியை புகைப்படம் எடுத்துக்கொண்டே பேசியவன் அவன் உதவி என்று கேட்டவுடன் கண்ணாடியை இறக்கி கண்ணில் மாட்டியவள் குழப்பத்துடன் அவனை பார்த்தாள்

           “என்ன ஹெல்ப்…”

         கடவுளே முருகா அடிகிடி வாங்கி கொடுத்துராம சரி சொல்லிரனும்…அப்படி மட்டும் சரினு சொல்லிட்டா இந்த மாஹிர் பையனுக்கும்…யாதவ்க்கும் மொட்டை எடுத்து சென்னையிலிருந்தே உருட்டி பழனிக்கு கூட்டிட்டு வரேன்…என்று மனதிற்குள் வேண்டியவன்…தயங்கி தயங்கி “உனக்கே தெரியும்…நானும் கனிஷ்காவும் முன்னாள் காதலர்கள் அப்படினு….”

    எந்த பாவனையும் காட்டாமல் அவனை பார்த்து ஆம் என்று தலையசைத்தாள் ஷா

     என்ன இப்படி குறுகுறுன்னு பாக்குது…அடிச்சுருமோ…என்று முழித்தவன்”நான் அவளை ரொம்ப உண்மையா தான் காதலிச்சேன்…அவங்க அப்பாக்கு இது பிடிக்கல…அப்படியே சின்ன சின்ன பிரச்சனையா வந்து பிரிச்சுட்டோம்…ஆனால் அவ என் மனசை விட்டு போகல….இப்ப இங்கே பார்த்தவுடனே அவமேல இருந்த காதல் ரொம்ப அதிகம் ஆயிருச்சு….”

                      “சரி அதுக்கு…”என்று ஷா கேட்க நிஜமாகவே பயந்து விட்டான் சித்தார்த்…அவள் கேட்ட தோரணை அப்படி….

     மீண்டும்  முருகனுக்கு  தனது கோரிக்கையை அடிக்கோடிட்டு காட்டியவன் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரகுவர கிருஷ்ணா  கேட்க சொன்னதை போலவே கேட்டான்…யாதவ் மற்றும் மாஹிரை முடி இல்லாமல் பார்க்க முருகன் ஆசை பட்டிருக்க வேண்டும்…சிறிதுநேரம் யோசித்த ஷா சரி என்பது போல் தலையசைத்தாள்

    அதில் சந்தோஷமடைந்த சித்தார்த் மென்மையாக ஷாவை அணைத்துக்கொண்டான்…ஷாவும் சிரிப்புடன் போதும் போதும் என்றவாறு அவனிடம் இருந்து விலகினாள்

       கழுதைக்கு மூக்கு வேர்த்த மாதிரி என்று ஒரு பழமொழி இருக்கிறதே அதேபோல் சித்தார்த் ஷாவை நோக்கி வந்தபோதே படம் என்ன சீன் என்ன எதுவும் எனக்கு தேவையில்லை என்பதை போல் அவனது மெடூல்அப்ளாக்கண்டா மொத்த கவனத்தையும் அவர்களிடம் திருப்பிருந்தது…சித்தார்த்தின் கட்டிப்புடி வைத்தியத்தில் கையில் வைத்திருந்த சீன் பேப்பரை கசக்கி தூக்கி எறிந்திருந்தான்…

   “சார் சார்…”என்கிற உதவி இயக்குனரின் குரலில் தன்னுணர்வுக்கு வந்தவன் சாரி என்ற சொல்லுடன் அருகிலிருந்த நாற்காலியில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்…தனக்கு ஏன் கோவம் வரவேண்டும் என்று அவனுக்கு புரியவில்லை…இவ்வளவு கோவம் அவனுக்கு எதற்கு…அவசியம் இல்லாதது…என்று தன்னை தானே  சுய பகுப்பாய்வு (self analysis )செய்துக் கொண்டிருக்கும் போது “யாதவ்”என்ற அழைப்புடன் அங்கு வந்து சேர்ந்தாள் கனிஷ்கா

      சித் ஷாவை நெருங்கியதிலிருந்து யாதவையும் அங்கு நடப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு யாதவின் எதிர்வினை சந்தோசத்தை கொடுத்தது…தாங்கள் எதுவும் தவறான வழியில் செல்லவில்லை என்ற நம்பிக்கையை கொடுத்தது…எனவே அவளும் இந்த திட்டத்தின் அவளுக்கான நாடகத்தை அரங்கேற்ற வந்தாள்

             கனிஷ்காவை பார்த்தவுடன் என்னவென்று தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்த அவனது மூளைக்கு பற்றுக்கோளாக சித் மற்றும் கனிஷ்காவின் காதல் கிடைக்க அதை இறுக்கி பிடித்துக்கொண்ட அவனது மூளை உனது கோவத்திற்கான காரணம் இது தான் என்று காட்டியது…யாதவும் அதையே ஏற்றுக்கொண்டு கனிஷ்காவிற்காக தான் தனது கோவம் என்று நம்பினான்

           “என்ன கனிஷ்கா…”

            “எனக்கு ஒரு உதவி வேணும்…”என்று ஆரம்பித்த கனிஷ்கா தனக்கான வசனங்களை உயிரோட்டமாக பேசிமுடிக்க யாதவும் சரியென்று ஒத்துக்கொண்டான்….அதில் சந்தோஷமான கனிஷ்கா அவனது கன்னத்தில் முத்தம் வைக்க…யாதவ் சிரிப்புடன் அவளது முடியை பிடித்து இழுத்து விளையாட…இப்பொழுது சரியாக இந்த காட்சியை ஷா பார்த்தாள்…

   அவளின் முகத்தின் பாவனையை உன்னிப்பாக சித்தார்த் கவனிக்க அதிலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டது…அந்தோ பாவம்

    அடுத்து இயக்குனர் ஷாட் என்று கூற படப்பிடிப்பு ஆரம்பமானது…இந்த காட்சியில் மாணவர்களின் சண்டையில் ஒரு இளைஞன் அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்து இறந்துபோக…அவனின்  சடலத்தை யாதவ் நீரில் இருந்து தூக்கிக்கொண்டு வந்து…தரையில் தன் மடியில் போட்டு அழுக வேண்டும்…மாணவர்கள் மற்றும் கனிஷ்கா சுற்றி நிற்பனர்…இது தான் காட்சி

        இயக்குனர் ஆக்ஷன் என்று கூற…ஷா யாத்விடமிருந்து ஓவர் தி ஷோல்டர் ஷாட் வைத்து நீர்வீழ்ச்சியை படம் பிடித்து அப்படியே ஆரம்பித்தது…தொடர்ச்சியாக கட் இல்லாமல் தொடர்ந்து நடந்தது…யாதவ் நீருக்குள் இறங்கி அந்த மாணவனை தலை முடியை பிடித்து இழுத்துவந்து கரைக்கு வந்து…அவனின் இறப்பை தாங்கமுடியாமல் அந்த இடத்திலே கண்ணீருடன் அமர்ந்து அவனை மடியில் போட்டு முதலில் முகத்தை மெதுவாக தடவி அதை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் வாய் விட்டு கதறும் காட்சி…வாவ் என்று தான் இருந்தது…அங்கிருந்த எல்லாருக்குமே சிறிது கண்கள் கலங்கிவிட…வேதன் ஒற்றை கண்ணில் வழியும் கண்ணீருடன் சூப்பர் marvellous என்று எழுந்து நின்று கைதட்ட…..ஷாவும் உன்கிட்ட ஏதோ இருக்கு தான் போல என்றவாறு கைதட்டினாள்

          “தேங்க்ஸ்…தேங்க்ஸ்…”என்ற யாதவ் அமைதியாக வந்து அமர்ந்துகொண்டான்…சிறிதுநேரம் யாருடனும் பேசவில்லை…அதை அங்கிருந்த யாரும் கண்டுகொண்ட மாதிரியும் தெரியவில்லை…ஷாவிடம் வந்த வேதன் ரொம்ப நல்லா வந்துருக்கு மா….எதுக்கு உன்னை பாலு ரெகமெண்ட் பண்ணார்னு இப்ப புரியுது என்றவர் முதுகில் தட்டிவிட்டு சென்றுவிட்டார்

 

மாலை ஆறு மணி

       காட்டேஜின் வெளிப்புறத்தில் யாதவின் அறையில் உள்ள கண்ணாடி ஜன்னலின் அருகில் கல்லுடன் நின்றிருந்தனர்…மாஹிர்…கவி…கனிஷ்கா…சித்தார்த்

        “இந்த ஐடியா சரியா வருமா…”என்றவாறு கையில் பெரிய கல்லுடன் ஐடியா கொடுத்த கனிஷ்கா  பார்த்து கேட்டான் சித்தார்த்

 

         “ம்ம்…அதெல்லாம் சரியா வரும்..நேத்து பார்த்த டர்கிஷ் சீரியல்ல இப்படி தான் வரும்…ஹீரோயின் தங்கியிருக்க ரூம் ஓட ஜன்னல் பூட்ட முடியாது…அதுனால ஹீரோ ரூம்ல போய் இருப்பாங்க…அப்பறம் எல்லாம் குஜால் தான்…”என்ற கனிஷ்கா  கற்பனையிலே ஷாவையும் யாதவையும் சேர்த்துவைத்த 

திருப்தியில் கூறிக்கொண்டிருந்தாள்…

          இந்த ஐடியா ஒர்க் ஆகும்னு எனக்கு தோணல என்று மாஹிர் கூற அவனை கொலைவெறியுடன் முறைத்த கனிஷ்கா “உங்க அக்கா ரூம் கண்ணாடி உடைச்சா தான் நடக்காது….இந்த பையன் ஜன்னல் கண்ணாடியை உடைச்சா நடக்கும்…யாதவ் குளிர் தாங்காம காட்டேஜ் ஆளுங்ககிட்ட சொல்லுவான்…இந்த நேரத்துல சரி பண்ணமுடியாதுனு சொல்லுவாங்க…ஷா பாவம் பார்த்து அவனுக்கு ரூம் குடுப்பா…அப்பறம் எல்லாம் ஜெக ஜோதியா நடக்கும்…. “என்ற கனிஷ்கா கவியை நோக்கி “என்ன கவி சரி தானே”கேட்க 

    எப்போதும் போல் கவி மனதிற்குள் பேச வேண்டிய வசனத்தை வெளியே சொல்லிருந்தாள்…”அப்ப அக்கா நாம காட்டியும் கொடுக்குறோம்…கூ….”என்று ஆரம்பிக்க பாய்ந்து வந்த மாஹிர் அவள் வாயை அடைத்திருந்தான்

      இவர்களுக்கு தெரியாதது ஒன்று ஷாவின் அரை கண்ணாடி உடைந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது…

 

error: Content is protected !!