YWA 15

YWA 15

 

அத்தியாயம் 15

“மாஹிர் நீ இன்னும் ரெண்டு கேமரா இந்த சைடு செட் பண்ணிரு…bird ஐ வியூ ஒன்னு எடுக்கணும் அது நாமளே பண்ணிருவோமா இல்லை பாலு சார் வந்து பார்த்துகிறங்கலானு போய் வேதன் சார் கிட்ட கேட்டுட்டு வா…”என்று ஷா மாஹிரிடம் கூறிக்கொண்டிருக்க…அப்பொழுது அங்கு வந்த ஒரு உதவி இயக்குனர்

“நீங்க வேணாம்னு ஹீரோ சார் டைரக்டர் கிட்ட சொல்லிட்டு இருக்காரு…அதுனால நீங்க எதுவுமே எடுக்க வேணாம்…”என்று யாதவ் மற்றும் வேதனின் உரையாடலை அரைகுறையாக கேட்டுவந்திருந்தவன் ஷாவிடம் நக்கலாக கூறிவிட்டு தனது அருகில் இருந்தவனிடம் “பிரேக் அப் னு சொன்னாங்க…பார்த்தா பெரிய பிரச்னை நடந்து இருக்கும் போலயே டா…”என்றுபேசிக்கொண்டேநகர்ந்து விட…ஷாவிற்கு கண்கள் சிவக்க மூக்கு விடைக்க…கோவம் வந்துவிட்டது…

மாஹிரோ கோவம் வந்த விஜயகாந்தின் குட்டி தம்பி போல் ஆகி விட்டான்…கைகளில் இருந்து நரம்பு முறுக்கேறி…கண்களில் முடிய…உடலில் இருந்த அத்தனை இரத்தமும் கண்களில் குடிகொண்டதை போல் செக்க சிவளென்று சிவந்து போக…வந்த கோவத்தை கரங்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து அடக்கியவன் ஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது நால்வர் அணியைத் தேடிச் சென்றான்…

கோவமாக இருந்த ஷாவிற்கு மாஹிரின் முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்துவிட்டது…”இவன் ஒருத்தன்…”என்று சிரிப்புடன் கூறியவள் வேதன் இருக்கும் இடத்தை தேடிச் சென்றாள்…

வேதனிடம் ஷா தான் கேள்வி பட்ட விஷயத்தை சொல்லிக்கேட்க முதலில் இல்லை என்று மறுத்தவர் பிறகு யாதவ் தன்னிடம் கூறியதை கூறி உங்களுக்குள் இருக்கும் பிரச்சனையை இருவரும் பேசி தீர்த்து கொள்ளுங்கள் என்றவர்….இன்று இதற்கு மேல் படப்பிடிப்பு இல்லை காட்டேஜிற்கு செல்லலாம் என்று கூறிவிட…ஷா அவரிடம் விடைபெற்றவள் யாதவிடம் தனிமையில் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்…

“மஹி…இன்னைக்கு அவ்வளவு தானாம் ஷூட்டிங்…”

“…….”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை…பாலு சார் வரவரைக்கும் நாம தான்…”

“……….”

“நானா…நீங்க போங்க..நான் பின்னாடி வரேன்…கொஞ்சம் பிக்ச்சர்ஸ் எடுத்துட்டு நாளைக்கு லொகேஷன் எப்படி னு பார்த்துட்டு வரேன்…நீ வேண்டாம்…நான் பார்த்துகிறேன்… “என்று அலைபேசியில் பேசியவள் ஒரு புகைப்பட கருவியை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த காடு போன்ற பகுதிக்குள் சென்றாள்…

யாதவ் வேதனுடன் பேசிய பின்பு யோசனையுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றான்…அப்பொழுது வழியில் இரு பெயர் தெரியாத பறவைகள் ஒன்றையொன்று கொஞ்சிக்கொண்டிருந்தன…அந்த காட்சி அவனுக்கு எதையோ சொல்வதுபோல் இருக்க…அதை பார்த்தவாறு அங்கேயே நின்று விட்டான் யாதவ்…

அந்த வழியே தான் புகைப்படம் எடுத்தவாறு வந்துகொண்டிருந்த ஷா யாதவை பார்த்தாள்…

“இது என்ன டா கருமம் ச்சேய்…இவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறதுக்குள்ள எனக்கு வயசாகிரும் போலயே…இப்ப எதுக்கு இந்த யாதவ் ஓவரா பண்ரான்…”என்று சித் தலையில் அடித்துக்கொண்டு கூற…

“யஸே கியூன் கர் ரஹா ஹே யாதவ்…முஜே பாத் குஷா ஆ ரஹா ஹே…”யாதவ் ஏன் இப்படி பன்றார்…எனக்கு செம கோவம் வருது…என்று மாஹிர் கோபத்துடன் குறுக்கும் நெடுக்கும் நடந்துகொண்டு கூறினான் மாஹிர்…

கவி”எல்லாம் நாம முந்தா நேத்து பண்ண மொக்கை பிளான் தான்…ஜன்னல் கண்ணாடியை உடைச்சா எப்படி அண்ணியும் அண்ணா சாரும் ஒன்னு சேர்வாங்க…என்கிட்டே ஒரு செம ஐடியா இருந்துச்சு…அதை excuteபண்ணி இருந்தா இப்ப அண்ணா சாரும் அண்ணியும் டூயட் பாடிட்டு இருந்துருப்பாங்க… ”

என்று கூற…கனி நீயெல்லாம் என் திட்டத்தை கிண்டல் பண்ற அளவுக்கு என் நிலைமை ஆகி போச்சு என்பது போல் கவியை பார்த்தவள் “ஏய்ய்..அது நல்ல பிளான் தான்…இவனுக சரி இல்லை…”

என்று கவியை முறைத்துக்கொண்டு கூற…சித் இடையில் புகுந்து “ஆமா கனி பிளான் சூப்பர் பிளான் தான்…யாதவ் தான் சரி இல்லை”என்று தனது காதலியை விட்டுக்கொடுக்கமால் பேசியவன்… “இவன் போய் இப்ப ஷா வேணாம்னு சொல்லிட்டானே…வேதன் சார் மட்டும் ஷாவை அனுப்பிட்டா நம்ம நிலைமையை யோசிச்சு பார்த்திங்களா…ரகுவரன் சார் நம்மள கொன்னுருவாரு…அதுலயும் நம்ம மொக்கை பிளான் தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரிஞ்சா அவ்வளவு தான்…”பேசியவன் வரப்போகும் பிரச்சனைகளையும் யோசித்து பேசினான்…

கவி”நான் தான் செத்தேன்…”இவ்வாறு இவர்களது உரையாடல் சென்று கொண்டிருந்த போது தான் ஷா மாஹிற்கு அழைத்தது…இவனை போக சொன்னது…மாஹிர்க்கும் அடுத்து என்ன செய்து இவர்களை இணைக்க வேண்டும் என்று திட்டம் போடவேண்டி இருப்பதால் சரி என்று சொல்லிவிட்டான்…இது வழக்கம் தான் என்பதால் மாஹிர் விட்டுவிட்டான்…

மூவரும் என்ன என்பது போல் மாஹீரை பார்க்க…ஷா தன்னிடம் கூறிய விஷயங்களை கூற மூவருக்கும் சிறிது சந்தோசம் வந்தது…அடுத்து என்ன திட்டம் போடலாம் என்று யோசித்துக்கொண்டிருக்க சித் “”

“நீங்க வேன் போங்க…நான் ரகுவரன் சார்க்கு கூப்பிட்டு எல்லாமே சொல்லிட்டு வரேன்..இல்லாட்டி ஏன் சொல்லலைனு திட்டுவாரு…இங்கே நெட்ஒர்க் வேற கிடைக்காது…”என்க…

“அப்ப காட்டேஜில போய் பேசிக்கலாமே சித்…”என்று கனி கேட்க…

“பேசலாம் தான்…அது வரை என்னால அடக்க முடியாதே…”

“எதை…” கனி

“ச்சு..ச்சு…டா…அப்படி ஓரமா போய்ட்டு பேசிட்டு வரேன்..”என்று சித் கூற மூவரும் சிரிப்புடன் போய் தொலை…என்று அவனை பத்தி விட… திரும்பி நடந்தவன் யோசனையுடன் திரும்பி “ஆமா..இந்த யாதவ் எங்கே…”என்று கேட்க மூவரும் தெரியவில்லை என்பது போல் தலையசைக்க “வேன்ல இருப்பானா இருக்கும்…போய் பாருங்க…”என்றவாறு இயற்கை அழைப்பை ஏற்க விரைந்தான்….

யாதவை பார்த்த ஷா இவன் என்ன இங்கு செய்கிறான் என்று நினைத்தவள்…அவனின் அருகே சென்றாள்…

திடிரென்று எங்கிருந்தோ வந்த தென்றல் யாதவை தீண்ட…முன்னுச்சி முடிகள் பறக்க…ஷா அவன் அருகில் இருப்பதாககூறி…எங்கே என்று பார் என்று மூளை கட்டளை பிறப்பித்தது…எஜமானின் கட்டளையை செய்ய அவனது உறுப்புக்கள் தயாராகின..கண்கள் சுழன்று தேட பார்வை வட்டத்தில் அவள் விழாததால் திரும்பி பார்க்க ஷா இவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள்…

யாதவ் திரும்பியதும் “ஹாய்..”என்பது போல் கையசைத்தவாறு வந்தாள் ஷா…நொடி கூட கண்களை சிமிட்டாது ஷாவையே பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்…

அருகில் வந்துவிட்டவள் “இங்கே என்ன பண்ற…”என்று கேட்க…யாதவ் அவளை பார்த்துக்கொண்டே மட்டும் இருந்தான்…பதில் சொல்லவில்லை…

“ஹே…”என்பதுபோல் அவனது முகத்திற்கு முன்பு அவள் கையசைக்க…என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்டான்…

“இல்லை…ஒரு வேளை உன் கண்ணுக்கு நான் தெரியலையோன்னு நினைச்சேன்…”என்று கூறிக்கொண்டிருக்க யாதவ் அவளை விட்டு படப்பிடிப்பு நடந்த திசை நோக்கி நடக்க தொடங்கினான் …அதில் இவ்வளவு நேரம் கோவப்படக்கூடாது..பொறுமையாக பேச வேண்டும்…என்று நினைத்து வந்திருந்தவள் பயங்கர கடுப்பு ஆகிவிட்டாள்…எப்பொழுதும் போல் நான்கு ஆங்கில கெட்டவார்த்தைகள் ஒன்றோடு ஒன்று சம்மந்தமில்லாத காம்பினேஷனில் வெளியே வந்திருந்தது…திட்டிக்கொண்டே வேகமா சென்று அவன் கையை பிடித்து இழுத்து நிற்பாட்டினாள் ஷா…

ஷா கையை பிடித்து இழுக்கவும் நின்ற யாதவ் தனது கரத்தையும்…தனது கரத்தில் அழுத்தமாக படித்திருந்த அவளது கரத்தையும் பார்த்தான்…

அவன் பார்வையை புரிந்து கொண்டவள் “என்ன பார்வை…இப்படி கையை பிடிச்சு இழுக்குறதுக்கு எல்லாம் நீ பாலிதீன் போட்டு முடி வைச்சு இருக்குற கற்பு கரைச்சு போயிராது…”என்று யாதவின் கண்களை பார்த்து கூறினாள் ஷா…

“அப்பறம் என்ன பண்ண என் கற்பு போகும்…”என்று அவளது கண்களை பார்த்து கேட்டான் யாதவ்…அந்த கேள்வியில் ஷாவிற்கு அதிர்ச்சியும் சிரிப்பும் சேர்ந்து வந்தது…சிரிப்புடன் அவனை பார்த்தவள் “என்ன டா லூசு….”

“நீ என்ன பண்ணா என் கற்பு போகும்…”

அவளுக்கு மீண்டும் சிரிப்பு தான் வந்தது…”ஆர் யு மாட்…”என்று ஷா சிரித்துக்கொண்டே கேட்டாள்…

“யெஸ் நீ சொல்லு…”என்று அவளது பார்த்து அழுத்தமாக கூற…

“கிட்ட வா..சொல்றேன்…”என்றவள் யாதவ் சிறிது இவளை நோக்கி குனிந்ததும்…அவனது காதிற்குள் எதுவோ கூறினாள்…

ஷா கூறி முடித்ததும் நிமிர்ந்தவன் ஒரு நிமிடம் கண்ணை முடி நிதானமாக மூச்சை இழுத்துவிட முயற்சி செய்தான்…அது முடியாமல் போய்விட “அதை பண்ணலாமா…..என் கற்பு உன்னால கலைஞ்சு போகட்டும்…”என்று கூறி ஷாவை பார்த்தான்…

“என்னது…”என்று முதலில் அதிர்ச்சியில் கூவியவள் கடகடவென்று சிரித்தாள்… “நாயே சிரிப்பு காட்டாதே டா…”என்றுஷா சிரிப்புடன் கூற…சட்டென்று அவளது கரத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான்…யாதவ் எதிர்பாராமல் இழுத்ததில் அவன் மீது மோதி நின்றாள்…

“இப்ப எனக்கு என்ன தோணுது தெரியுமா…இப்படியே உன்னை இழுத்து அணைச்சு ஒரு உம்மா தரணும்னு தோணுது…என் பக்கத்துல நீ வந்தாலே உன்னை கட்டிபிடிக்கணும்…உன் சிவப்பு ஆப்பிள் கன்னத்தை கடிக்கணும்…உன் வெள்ளை தாமரை இலை பாதத்துல முத்தம் கொடுக்கணும்…”என்றவன் இன்னொரு கரத்தால் அவளது மேசி பன் கொண்டையை அவிழ்த்தவன் “இந்த உன் கேஸ்கேட் (cascade )மாதிரி இருக்க முடிக்குள்ள கை விட்டு உன் தலையை அழுத்தி பிடிச்சு இந்த குலாப் ஜாம்முன் லிப்ஸ்ல முத்தம் கொடுக்கணும் போல இருக்கு…என்னால ஒரு கிஸ் சீன் கூட பண்ணமுடில…நீ ஏதோ என்னை டிஸ்டர்ப் பண்ற… யெஸ் ஐ யாம் கிரேஸி அபௌட் யு…ஐ யாம் டெஸ்பேரட்டலி நீட் யு,…”என்று கூறி நிறுத்தியவன் அவளிடம் இருந்து விலகி சிறிது தள்ளி நின்றான்…

அது வரை அவன் கூறியதை எல்லாம் என்னவென்று புரிந்து கொள்ளமுடியாத ஒரு பார்வையில் பார்த்தவள் சில நொடிகள் யோசித்து விட்டு ஒரு கேள்வி கேட்டாள்…

“என்னை லவ் பண்றியா…”என்று நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக யாதவின் கண்ணுக்குள்ளே சென்று விடுபவள் போல் அவனது கண்களை அவ்வளவு கூர்மையாக பார்த்து கேட்டாள்…

ஷா கேட்ட மறுநொடியே “இல்லை..”என்று அதைபோல் அவளது கண்களை பார்த்து கூறினான் யாதவ்…அதில் லேசாக உதடு பிரிய சிரித்தவள் “நிஜமா இல்லைல…”என்று கேட்க…”சத்தியமா இல்லவே இல்லை…இது லஸ்ட்…”என்று யாதவ் கூறி முடிக்க கூட இல்லை…அவன் எதிர்பாராதவிதமாக அவனது கழுத்தை பிடித்து வளைத்தவள் “டேக் இட்…”என்றவள் அவனது இதழில் தனது இதழை பதித்தாள்…

முதலில் அதிர்ந்து முழித்தவன் பிறகு இதழ் யுத்தத்தில் மூழ்கி அவளது உடுக்கை இடையில் கரங்களை சேர்த்து கோர்த்து அவளை தூக்கி தனது உயரத்திற்கு கொண்டு வந்து முத்தத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்…

இந்த இதழ் முத்த காட்சி நடந்துகொண்டிருந்த போது இயற்கை அழைப்பை ஏற்க ஆளில்லா இடம் தேடி அலைந்துகொண்டிருந்த சித் சுற்றி சுற்றி வந்தது இங்கே…தூரத்திலிருந்து பார்த்த சித் “என்னங்க டா..எங்குட்டு போனாலும் ஆளா இருக்கீங்க…இதுல ரொமான்ஸ் வேற ஒரு கேடு…”என்று கூறிக்கொண்டு வந்தவனுக்கு அப்பொழுது தான் அந்த ஜோடிப்புறாக்கள் யாரென்று தெரிய “அடி ஆத்தி…”என்று நெஞ்சில் கைவைத்தவன் சத்தமிடாமல் வந்த வேலையை மறந்துவிட்டு தனது குழுவை நோக்கி ஓடினான்…

வேனிற்கு வெளியே மாஹிர்…கனி…கவி நின்று பேசிக்கொண்டிருந்தனர்…வேகமாக ஓடி வந்த சித் நடந்ததை சொல்ல வந்து சொல்ல முடியாமல் மூச்சு வாங்க…

கனி “என்ன ஆச்சு டா….”என்று கேட்க சித் கையசைத்து யாதவ் என்று கூற வர…

“சரி மூச்சு வாங்கிட்டு பேசுங்க சித் அண்ணா…”

“பானி வேணுமா…பாய்…”என்று மாஹிர் கேட்க இல்லை என்பது போல் கையசைத்தான்…எப்பொழுதும் போல் கவி உளற ஆரம்பித்தாள் “அண்ணா ஜிப் எதுவும் மாட்டிக்கிச்சா…”என்று கேட்டு விட கனி மற்றும் மாஹிரால் சிரிப்பை அடக்க முடியவில்லை…சித் அவளை முறைக்க ,புரியாமல் முழித்த கவி “ÿஏன் சிரிக்குறிங்க…”என்று கேட்க…

“ஒன்னும் இல்லை தங்கம்….டேய் எங்கையும் மாட்டிக்கிச்சா கூச்ச படமா சொல்லு டா..உயிர் நாடி…”என்று சிரித்துக்கொண்டே கவியிடம் தொடங்கி சித்திடம்முடித்தாள் கனி…

இவ்வளவு நேரத்தில் மூச்சு விடுதல் சமநிலைக்கு வந்திருக்க…”அதெல்லாம் ஒன்னும் இல்லை…பக்கிங்களா…யாதவும் ஷாவும் கிஸ் பண்ணிட்டு இருக்காங்க…அதுவும் லிப் லாக்…”என்று சித் கூற…”வாட்…””என்ன…”கியா”என்று மூவரும் அலற…ஆமாம் என்பது போல் மூவரையும் பார்த்து தலையசைத்த சித்”ஹே…நாம ஜெயிச்சுட்டோம்..”என்று கத்த மூவரும் ஒருவரையொருவர் ஆமாம்ல என்பது போல் பார்த்துக்கொண்டவர்கள் அவனுடன் சேர்ந்து கத்தி மகிழ்ந்தனர்…

சில நிமிடங்களில் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு சித் ரகுவரனுக்கு அழைப்பு எடுத்து ஷா மற்றும் யாதவ் இணைந்து விட்ட விஷயத்தை கூறி அவரிடம் பாராட்டை பெற்றனர்…

சென்னையில் ரகுவரன் ஷா மற்றும் யாதவ் இணைந்த விஷயத்தை தனது மனைவி…மகன்…மருமகள்…விஸ்வநாதன் என்று அனைவரிடமும் கூறி சந்தோஷப்பட்டார்…அனைவரும் சந்தோஷத்தில் இருக்க அவர்களின் கணக்கோ வேறு விதமாக இருந்தது…

error: Content is protected !!