கண்ட நாள் முதல்

கண்ட நாள் முதல்

அத்தியாயம் 16

 

மாலை வேளைகளில் கண்விழித்த நிலா கிளம்பி வெளியே வர, அங்கே சந்தியா, சூர்யாவின் அம்மா வாங்கி வந்த ஸ்வீட்டை சப்பு கெட்டி சாப்பிட்டு கொண்டிருக்க, நிலா அவளை ஒரு தினுசாக பார்த்தவள், “தின்னுக்கிட்டடி இருக்க சூனிய பொம்மை, இதோ வரேன்டி” என்று அவள் அருகில் வந்தவள். 

 

“அடியே சோத்து மூட்ட, காலையில் தானே அவ்ளோ தின்ன. அது பாத்தலயா உனக்கு. எனக்கு வாங்கிட்டு வந்ததையும் சேத்து திங்குறியேடி  பிராடு” என்று ஆரம்பிக்க… 

 

சந்தியா “அடியேய் அக்கா யாரை பாத்து பிராடுன்னு சொன்னா??” என்று லட்டை கையில் வைத்தபடி கோவமாக கேட்க.

 

“ஏன்டி காது கேக்கலயா? உன்னை தான்டி சொன்னேன் 420…” என்று கொளுத்தி போட அது சரியாக வேலை செய்தது.

 

பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்த சந்தியா. “அடியேய் நீதான்டி பிராடு..!? மாமா வருவாருன்னு  தெரிஞ்சு காலையில கடைக்கு வரலன்னு என்னம்மா டிராமா போட்ட.. நீதான்டி பெரிய பிராடு” என்று முறைக்க… 

 

நிலாவிற்கு சூர்யா மேல் கொலை வெறி வந்தது, “எல்லா அவரால வந்தது” என்று மனதில் அவள் கணவனை வறுத்தெடுத்தவள், அடுத்த நொடி, “என்னது அவரா?? என்ன இது அவனை அவர்ன்னு மரியாதையா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். இது சரியில்லயே” என்று நினைத்து, தலையை சிலுப்பி விட்டு சுய உணர்வுக்கு வந்தவள்.. 

 

“யாரு நானாடி பிராடு..?? எனக்கே தெரியாம ரிஜிஸ்டர் மேரேஜ் 

அப்ளிகேஷன்ல என்னோட கையெழுத்தை வாங்கினது நீ  தானா..?? அப்ப உன்னை பிராடுன்னு சொல்லாம, என்னடி சொல்லுவாங்க??” என்று தான் அடுத்த பந்தை வீச. கோபமான சந்தியா, “அந்த வேலைய ஒன்னும் நா செய்யல, தேவி அக்கா தான் உன் கிட்ட கையெழுத்து வாங்குனது. அப்ப உன் ஃப்ரண்டு தான் பிராடு, அவங்க ஃப்ரண்டு… நீயும் பிராடு’ என்று சொல்லி விட்டு நிலாவை பார்க்க .. நிலா இவளை தீயாய் முறைத்துக் கொண்டிருந்தாள். அப்போது தான் சந்தியாவிற்கு அவள் சொன்னதின் அர்த்தம் புரிய, “அய்யோ இந்த பிடாரி போட்டு வாங்கிட்டாளே?! இப்படி ஸ்வீட்டுக்கு ஆசைப்பட்டு மோசம் போய்டோமே. இதுல தேவி அக்காவை வேற மாட்டி விட்டுட்டோமே. இப்ப என்ன பண்றது?” என்று திருட்டு முழி முழித்தவள் நிலாவை பார்க்க, “அய்யோ முறைக்கிறாளே..!! முறைக்கிறாளே..!!” என்று புலம்ப

 

நிலா சந்தியாவின் காதை இறுக்கி பிடித்து திருகி விட சந்தியா, “அய்யோ அய்யோ” என்று கத்த, “ஏய் கத்துனா நாக்க புடிங்கி வெளிய போட்டுவேன்.. அப்புறம் விதவிதமா திங்க முடியாது  பாத்துக்க” 

 

“அக்கா ப்ளீஸ் கா..?? நீ என்ன நாளு அடி கூட அடிச்சுக்க. ஆனா, என் நாக்கை புடிங்கி என்ன திங்க விடாம பண்ணிடாத ப்ளீஸ்” என்று கெஞ்ச, “ச்சை சரியான சோத்து மூட்டை” என்று அவள் தலையில் கொட்டிய நிலா, உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்” என்றவள் தேனு, தேவியை பாக்க கிளம்பினாள்.

 

சந்தியா சோபாவில் அமர்ந்து இரு முட்டை கண்களையும் மூடி மூடி திறக்க, அங்கு வந்த கலை, “ஏய் என்னடி இது அதிசயமா இருக்கு! முன்னாடி ஸ்வீட் இருக்கும் போது உன்னோட வாய் காலிய இருக்கு. இன்னைக்கு கண்டிப்பா இடியுடன் கூடிய மழை வர போகுதுடி.?? என்று சிரிக்க,

 

“ஆமாம்மா… இப்ப தான் இடி வண்டில கிளம்பி போயிருக்கு,  நேர அது தேவி அக்கா தலையில் தான் விழப்போகுது, அப்றம் தேவி அக்கா கண்ல இருந்து மழை ஊத்தும்” என்று வருத்தமாக சொல்ல. 

 

“என்னடி உளார்ரா..?? எனக்கு ஒரு மண்ணும் புரியல” என்று கலை குழம்ப, “ஆமாம்மா நான் தான் உளரிட்டேனா” என்று நடந்ததை சொல்ல, “அடிப்பாவி… என்ன காரியம்டி பண்ணி வச்சு இருக்க?? பாவம்டி தேவி, முதல்ல ஃபோன் போட்டு அவளா இந்த பிடாரி கண்ணுல படாம எங்கயாவது பதுங்க சொல்லுடி” என்று பதற,

 

“என்னம்மா விளையாடுறியா.?? நா ஃபோன் பண்ணேன்னு மட்டும் நிலாக்கு தெரிஞ்சது அவ்ளோதான்… என்ன உரிச்சி உப்புக்கண்டம் போட்டுடுவா. நா ஃபோன் பண்ண மாட்டேன் பா”

 

“அத பாத்த எப்டிடி?? தேவி பாவம் இல்லையா??” 

 

“அப்ப நா பாவம் இல்லையாம்மா?” என்று முறைத்தவள், “விடுமா தேவி அக்கா பண்ண வேலைக்கு எப்ப இருந்தாலும் வாங்கி தானே ஆகணும். ஏன் நம் வாங்கல. யாம் பெற்ற இன்பம் பெறுக தேவி அக்காவும்” என்று சொல்ல,

 

“அடி கொலைகாரி.?? ஏன்டி உனக்கு இந்த நல்ல எண்ணம்??”   

 

“எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.??” என்று சந்தியா  முகத்தை பாவமாக வைக்க, கலை தலையில் அடித்துக் கொண்டவர், “பாவம் தேவி” என்று விட்டு உள்ளே சென்று விட்டார்.

 

கதவு தட்டும் சத்தம் கேட்க தேனு கதவை திறக்க அங்கு கொலைவெறியில் முழுதாய் சந்திரமுகியாய் மாறி இருந்த நிலாவை ஒரு திகிலோடு பார்த்தவள், “என்ன சைத்தான் ஸ்கூட்டியில் வந்திருக்கு? நம்ம குட்டு எதுவும் உடஞ்சிடுச்ச?  உண்மை ஏதும் தெரிஞ்சுருச்சா?” என்று உள்ளுக்குள் உதற, “வ… வ… வா நிலா, ஏன் வாசலையே நிக்குற” என்று தட்டு தடுமாறி சொல்ல..?? உள்ளே வந்த நிலா, “தேவி எங்க?” என்று கேட்க, “அவ இப்ப தான் கடைக்கு போன, பத்து நிமிஷத்துல வந்துருவா, என்ன விஷயம் நிலா.??” என்ற தேன்மொழியை தீயாக முறைத்த நிலா, “ரிஜிஸ்டர் மேரேஜ் அப்ளிகேஷன்ல என்னோட கையெழுத்தை வாங்கினது தேவி தான்னு  உனக்கு தெரியுமா? தெரியாத?” என்று கேட்க, “அய்யோ கடவுளோ, இது இவளுக்கு எப்டி தெரிச்சுது?” என்று பதறியவள், “ரைட்டு அந்த சூனியம் பொம்மை பத்த வச்சிட்டா… பத்தவச்சிட்டியே பரட்டை” என்று தேனு மைன்ட் வாய்ஸில் சந்தியாவை கழுவி ஊத்திக்கொண்டகருக்க… 

 

“அடியேய் மைன்ட் வாய்ஸ் எல்லாம் அப்புறம் போட்டுக்க. இப்ப நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு… தேவி பண்ண விஷயம் உனக்கு முன்னமே தெரியும் தானா..??” என்று அழுத்தமான குரலில் கேட்க தேனு, “தெ… தெ… தெரியும்” என்று நடுங்கியபடி சொல்ல நிலா அவளை முறைக்க, “நல்ல வேலை கையெழுத்து மேட்டர் மட்டும் தான் இவளுக்கு தெரிஞ்சு இருக்கு, நம்ம சூர்யா அண்ணா கூட கூட்டணி வச்சது இவளுக்கு தெரியல போல” என்று தேனு நிம்மதி பெரு மூச்சு விட, நீ அவ்ளோ எல்லாம் சந்தோஷப்படாத என்பதுபோல் தேவி தப்பான நேரத்தில் சரியாக அங்கு வந்தாள்.

 

நிலாவை பார்த்த தேவி, “ஹாய் மிஸஸ். நிலானி சூர்யா?? எப்ப வந்தீங்க?” என்று கிண்டலடிக்க…

“அய்யோ இவ நேரம் காலம் தெரியாம?? கோவம் வர மாதிரி காமெடி பண்றாளே!! இன்னைக்கு ஆறுகால பூஜை இருக்கும் போல இருக்கே. உடம்புல எங்க எங்க வீங்கப் போகுதுன்னு தெரியலய”  என்று தேனு தேவி, நிலாவை மாறிமாறி பார்த்தபடி நிற்க, 

 

தேவி அருகில் வந்த நிலா, “ஏன்டி இப்படி பண்ண??” என்று கேட்க,

 

“என்னடி நா என்ன பண்ணேன்.. பசிக்குதுன்னு கடைக்கு போய் மாவு வாங்கிட்டு வரேன் இது ஒரு குத்தமா? என்ன இது சின்னப்புள்ள தனமா இல்ல இருக்கு??” என்றவள் கெக்க பெக்க என்று சிரிக்க,

 

“கடவுளே இவ வேற எரியிற நெருப்புல பெட்ரோல் உத்துறளே… இன்னைக்கு இவ கைமா தான்..??” என்று தேனு மைண்ட் வாய்ஸ் போட, “பளார்” என்று வந்த சத்தத்தில் உணர்வு வந்தவள் திரும்பி தேவியை பார்க்க, தேவி கன்னத்தில் கை வைத்தபடி மலங்க மலங்க முழித்தவள், “ஏய் நிலா! இப்ப நீ என்ன அடிச்சியா.?’ என்று கேட்க, இல்லடி சும்மா தட்டினேன். இப்ப நா கேக்குற கேள்விக்கு பதில் வரலன்னு வச்சிக்கோ, அப்ப தான் நிஜமான அடி விழும்??”

 

“எது! சும்மா தட்டுனியா? இதுக்கே என் பல்லு இரண்டு ஆடுதே… இதுல இவ நிஜாம அடிச்ச! அவ்ளோதான் பல் செட் தான் ஆர்டர் பண்ணணும். அதுசரி இவ இப்ப எதுக்கு என்னை அடிச்ச?? என்னத்துக்கு அடிச்ச ஒன்னும் புரியலயே” என்று தேனுவை பார்க்க தேனு, “எல்லாம் முடிஞ்சு போச்சு, மாட்டிக்கிட்டோம்டி” என்று கைகளால் சைகை காட்ட, தேவியின் முட்டை கண்கள் ரெண்டு வெளியே விழுந்து விடும்படி முழித்துக் கொண்டு நின்றாள்.

 

“ஏய் என்னடி முழிப்பு? ஒழுங்க பதில் சொல்லுடி” சந்தியா சொன்னது எல்லாம் உண்மையா?” என்று கேக்க

 

“அடிப்பாவி சூனியம் பொம்மா எல்லாத்தையும் போட்டு குடுத்துட்டியாடி.?? துரோகி” என்று கறுவியவள், “வேற வழி இல்ல… பேசாம சரண்டர் ஆகிட வேண்டியது தான்” என்று நினைத்தவள், டக்குனு முட்டிபோட்டு நிலா முன் உகந்தவள், “சாரி நிலா எங்களுக்கு வேற வழி தெரியல… சூர்யா அண்ணா எங்க கிட்ட வந்து பேசும்போது, அவர் நல்லவர்ன்னு தெரிஞ்சுது. அதனால தான் சந்தியா கிட்ட ஹெல்ப் கேட்டோம்” என்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் உளாறி கொட்ட… 

 

தேனு, “அய்யோ இவ எல்லாத்தையும் சொல்றாளே கடவுளே நீதான் காப்பாத்தனும்” என்று கையெடுத்துக் கும்பிட்டவள், பின்னால் இருந்து “போது நிறுத்துடி கூறுகெட்டவளே” என்று சைகையிலேயே கதகளி ஆட தேவி எதையும் கவனிக்காமல் நடந்த அனைத்தையும் வரிசையாக சொல்லி முடித்தவள் கடைசியில், “சாரி நிலா எங்கள தப்ப நெனைக்காத, நாங்க உன்னோட நல்லதுக்கு தான் இப்படி செஞ்சோம், ஆமா தானா தேனு?’ என்று தேனு வரையும் துணைக்கு இழுக்க, 

 

தேன்மொழி நிலாவையும் தேவியையும் மாறி மாறி பார்த்தவள், அறையின் மூலையில் ரெண்டு கையையும் தலையில் வைத்தபடி அமர்ந்து விட நிலா, ” ஓஓஓ… எனக்கு தெரியாம, இவ்ளோ நடந்திருக்க” என்று கேட்க, 

 

தேவி குழப்பமாய், “என்ன இது? இவ இப்படி கேக்குற… அப்ப இவ வேற எதையாவது கேட்டால, நான் தான் அவசரப்பட்டு உளறிட்டேனா?’ என்று தேனுவை பாக்க, “எல்லாம் முடிஞ்சு போச்சு… ரீல் அந்து போச்சு, உன் பங்குக்கு நீ என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பா செஞ்சு, கூடவே என்னையும் தெளிவா போட்டு குடுத்துட்டா தேவிம்மா. இனி நம்ம ரெண்டு பேருக்கும் நிலா அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சதுக்கு பரிசு தருவா, அத ஆளுக்கு பாதிய வாங்கிப்போம்” என்றவள் நிலாவை பார்த்து, “இன்னும் என்னடி, ஆரம்பி” என்றது தான், அடுத்து பத்து நிமிடத்திற்கு “அய்யோ அம்மா” என்று தேனு, தேவியின் அலறல் சத்தம் தவிர அங்கு வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. 

 

அடித்து அடித்து நிலா டயர்டு ஆகி உட்கார்ந்து விட, வீங்கி இருந்த தான் கன்னங்களை தடவிக்கொண்டு இருந்த தேனுவை சுரண்டினாள் தேவி…

 

 “ஏன்டி எரும? இப்ப சுரண்டிட்டு இருக்க?? நானே அந்த பிடாரி மிதிச்ச மிதியில குறுக்கு எலும்பு ஒடஞ்சு கிடக்கேன். இது நீ வேற?? என்னடி வேணும் உனக்கு??”

 

“இல்ல… நிலா இவ்ளோ நடந்திருக்கன்னு கேட்டாளோ? அதுக்கு என்ன அர்த்தம்..??”

 

“ம்ம்ம்ம்.?? சொந்த செலவுல உனக்கு நீயே சூன்யம் வச்சுக்கிட்டது இல்லாம, எனக்கும் சேத்து வச்சிட்டன்னு அர்த்தம்?? என்று தேன்மொழி முறைக்க.

 

“ஏய் என்னடி சொல்ற?? கொஞ்சம் தெளிவா சொல்லு..??”

 

“அடியேய் எரும… நிலா நீ அவளுக்கு தெரியாம அப்ளிகேஷன்ல கையெழுத்து வாங்கினது பத்தி கேக்க தான் வந்த, நீ தான் சர்ச் பாதர் கிட்ட கன்பெஷன் பண்ற மாதிரி எல்லாத்தையும் கொட்டிட்ட” என்று தலையில் அடித்துக் கொள்ள..

 

“அய்யோ?? அப்ப அவ குத்து மதிப்பா தான் கேட்டாளா? நான் தான் உளரிட்டேனா??” என்று திருதிருவென முழிக்க,

 

நிலா, “அங்க ஏன்டி சத்தம்??”

 

“ஒன்னும் இல்ல நிலா… சும்மா பேசிட்டு இருந்தோம்” என்று தேவி சொல்ல, அவர்கள் அருகே வந்த நிலா, “ஏன்டா இப்படி பண்ணீங்க?? என்னை ஏமாத்த உங்களுக்கு எப்டி மனசு வந்துது??”

 

“அப்டி சொல்லாத நிலா. நீ நல்லா இருக்கனும்னு தான் இப்படி பண்ணோம். எங்க நீ கல்யாணமே பண்ணிக்காம போய்டுவியோன்னு பயந்து தான்” என்ற தேனுவையும் தேவியையும் இருக்கி கட்டிக்கொண்டாள் நிலா.

 

“ஏன்டி  எல்லாரும் என் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க. சூர்யா பத்தி தெரிஞ்சதும் அவரை பத்தி முழுசா விசாரிச்சிருக்கீங்க, அவர் நல்லவருன்னு தெரிஞ்சதும், சந்தியா கிட்ட சொல்லி அவளும் ஊர் முழுக்க விசாரிச்சி இருக்க,  ஏன்டி… ஏன்…? எல்லாரும் என் மேல இவ்ளோ அக்கரை வச்சிருக்கீங்க, எதுக்காக இவ்ளோ பண்றீங்க??” என்று கண்ணீர் விட, 

 

“ஏய் லூசு… என்ன பேசுற நீ.. நீ எங்க ஃப்ரண்டுடி, உனக்கு நாங்க செய்யாம வேற யாரு செய்வங்களாம். லூசவே இருந்தாலும் நீ எங்க செல்ல லூசாச்சே” என்று தேவி சொல்ல. 

 

“அடியேய்… நைஸா என்ன லூசுன்னு சொல்றிய நீ உன்னை” என்று நிலா  அடிக்க துறத்த, 

 

“அம்மா தாயே இதுக்கு மேல முடியாதும்மா… அடி வாங்க உடம்புல தெம்பில்ல.. விட்டுடு தெய்வமே” என்று தேவி சரண்டர் ஆக, “அது அந்த பயம் இருக்கட்டும்” என்று சொல்லி சிரித்தாள் நிலா.

 

“நிலா நா ஒன்னு கேக்கவா?? என்ற தேன்மொழி திரும்பி பார்த்த நிலா, “என்னடி இது புதுசா பர்மிஷன் கேட்கிற பழக்கம். என்ன கேட்கணுமோ கேளு”

 

“இல்ல நிலா… எனக்கு நல்ல தெரியும் நீ உன்னை காப்பாத்துன பையனை லவ் பண்ணலனாலும், அவனை உனக்கு பிடிக்கும். அதோட ஆம்பளைங்க மேல உனக்கு இருக்க வெறுப்பு, உன்னோட கோவத்தோட அளவும் எல்லாம் எங்களுக்கு தெரியும். அப்படி இருக்க எல்லாரும் சேர்ந்து, இந்த மாதிரி பிராடு வேலை பண்ணி உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டோம். இப்ப வரை நீ அதை நினைச்சு தான் வருத்தப்படுறியே தவிர, சூர்யாண்ணா பத்தியும் அவர் கூட நடந்த கல்யாணம் பத்தி, நீ தப்ப ஒரு வார்த்தை சொல்லலயே?? அது ஏன்டி.??” என்ற தேன்மொழியை பார்த்து அழகாய் சிரித்த நிலா,

 

“ஏன்னா… சூர்யாவை எனக்காக செலக்ட் பண்ணது நீயும் இந்த எரும தேவியும் அந்த பிடாரி சந்தியாவும்… அதனால தான். நீங்க மூனு பேரும் எனக்காக ஒரு விஷயம் செய்றாங்கன்னா, அது எனக்கு கரெக்டா மட்டும் இல்ல.??  பெஸ்ட்டா தான்  இருக்கும். சோ… சூர்யா கண்டிப்பா நல்லவரா தான் இருக்க முடியும். அதனால எனக்கு அவர் மேல சந்தேகமும் வர்ல, வெறுப்பும் வர்ல” சிம்பிள் என்று தோள்களை குலுக்க, தோழிகள் இருவரும் அவள் அந்த வார்த்தையில் கண் கலங்கி விட்டனர்.

 

“என்ன இது ஒரே அழுகாச்சிய இருக்கு”  என்ற தேவி, “நிலா எனக்கும் உன் கிட்ட ஒன்னு கேக்கணும்..??”

 

“என்னடி என்ன கேக்கணும்??”

 

“இல்ல நாலாயிரம் தானே?” என்ற தேவியை புரியாமல் பார்த்த நிலா,

 

”ஏய் என்னடி சொல்ற?? என்ன நாலாயிரம்??”

 

“இல்ல நிலா… அன்னைக்கு சந்தியாவுக்கு பூஜை நடந்த மறுநாள் ரெண்டாயிரத்துக்கு ஃபுட் ஆர்டர் பண்ண இல்ல. இப்ப நாங்க ரெண்டு பேர் இருக்கோமே? சோ நாலாயிரத்துக்கு ஃபுட் ஆர்டர் பண்ணிக்கலாம் தானா?” என்று கேட்க… நிலாவும், தேனுவும் விழுந்து விழுந்து சிரிக்க, ”அப்பாடி சிரிச்சுட்டிங்களா… இது போதுண்டா சாமி…” என்று தேவியும் அவர்களோடு இணைந்து கொண்டாள்.

 

“ஏய் தேனு உனக்கு நெனவு இருக்க?? நம்ம காலேஜ் படிக்கும்போது நீ சொல்ற மாப்பிள்ளையை, நா கல்யாணம் பண்ணிக்கிட்டா… நா சொல்ற பையன நீ  கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியே?? ஞாபகம் இருக்கடி உனக்கு என்ற நிலாவை ஒரு அதிர்வுடன் பார்த்த தேனு, “ஆமா ஞாபகம் இருக்கு,  அதுக்கு இப்ப என்ன நிலா??”

 

“அதுக்கு என்ன வா…? இப்ப நான் நீ பாத்த பையனை தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். சோ நீயும் நா பாக்குற மாப்பிள்ளையை தான் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு ஓகேன்னு எனக்கு சத்தியம் பண்ணு பாக்கலாம்” என்று கேட்க, தேனுவின் அதிர்ந்த விழிகளுக்குள், ஒரு நிமிடம் அரவிந்தின் முகம் வந்து போக… பின் திரும்பி தேவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள். நிலா கேட்ட மாதிரியே சத்தியம் செய்து கொடுத்து விட… 

 

தேவி மனதில், “அய்யோ… இவ என்ன இப்படி ஒரு சத்தியத்தை கேக்குற, இந்த தேனும் கூறுகெட்டு சத்தியம் பண்ணிட்ட, அப்போ நம்ம பிளான் எல்லாம் அம்போ தானா??” என்று பதறியவள், “அம்மாடி அடுத்து நம்ம கிட்டயும் சத்தியம் கேப்பாளோ? அய்யோ கடவுளே?? நானே இப்ப தான் லவ் டிராக் போட்டு  ரயில் விட்டிருக்கேன். இவ அதுல புகுந்து கும்மி அடிச்சிடுவா போல இருக்கேடா சாமி, என்ன செய்யலாம்?” என்று யோசித்தவள்… 

 

“நிலா காலையில எடுத்த கல்யாண புடவை உனக்கு பிடிச்சிருக்க” என்று பேச்சை மாற்ற, அதை புரிந்து கொண்ட நிலா, “அடியேய்… எங்க உன்கிட்டயும் சத்தியம் கேப்பேனோன்னு… எஸ்கேப் ஆக பாக்குறியாடி பிராடு..!!”

 

“ஆமா டி… நீ எப்டி காலையில சூர்யா அண்ணாவை கட்டிப் புடிச்சுட்டு இருந்ததை பத்தி நாங்க கேக்க கூடாதுன்னு, எங்க மேல கோவமா இருக்க மாதிரி சீன் போட்டியே, அது மாதிரி தான் இதுவும்..” என்று அவள் காலை வார…

 

 “அய்யோ மாட்டிக்கிட்டேனே” என்று நிலா முழிக்க, தோழிகள் இருவரும் அவளை ஒரு வழியாக்க, நிலாவின் பால் வண்ண கன்னம் ரெண்டும் அந்தி வானத்தின் நிறம் கொள்ள, அவள் மனதோ, இதற்கு காரணமான அவள் கணவனை திட்டி கொண்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!