காதல்போதை 28?

காதல்போதை 28?

அடுத்த நாள்,

தனது அறையில் ஒரு கையில் தொலைப்பேசியை வைத்துக்கொண்டு,  மறுகையில் மதுவை அருந்திய வண்ணம் விடாது வந்த அழைப்புக்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன். அந்த அழைப்புக்களும் விடாது வந்துக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு உள்ளே வந்த பாபி,
     “டேய்! எவ்வளவு நேரமா ஃபோன் அடிச்சிக்கிட்டே இருக்கு… ஆன்சர் பண்ணாம என்னடா பண்ணிக்கிட்டு இருக்க? ”  என்று ரோஹனை திட்டியவாறு அவனருகில் வந்து திரையை பார்க்க, அதில் தெரிந்த பெயரில் ரோஹனை பரிதாபமாக பார்த்தான் பாபி.

அங்கிருந்த சோஃபாவில் தொலைப்பேசியை தூக்கியெறிந்துவிட்டு, ரோஹன் அவன் பாட்டுக்கு பால்கெனிக்கு சென்று வானத்தை வெறித்தவாறு நின்றுக் கொள்ள, அழைப்பை ஏற்ற பாபி,
     “சொல்லுங்க அங்கிள்…” என்றதும் தான் தாமதம்,

    “என்னடா நினைச்சிகிட்டு இருக்கான் அவன்? நானும் எத்தனை நாளைக்கு தான் பொறுமையா இருக்குறது? அவன் அம்மா ஒரே புலம்பல்… இப்போ கூட தெரியும்டா அவன் வேணும்னு தான் கண்டுக்காம இருந்தான்னு…” என்று மானவ் கத்த,
   “அது வந்து அங்கிள்… அவன பத்தி தான் தெரியுமே…” என்று தடுமாறினான் பாபி.

    “சரி விடுபா.. மார்த்தா சொன்னான் ஐரா கம்பனீஸ்ஸோட ப்ரோஜெக்ட் கிடைச்சிருக்குன்னு…. இட்ஸ் அ க்ரேட் நியூஸ்.” என்று மானவ் சந்தோஷமாக சொல்ல,

   “ஆமா அங்கிள். அவங்களோட புது ப்ரான்ச் பெங்ளூர்ல தான் திறக்க போறாங்க. அந்த கன்ஸ்ட்ரக்ஷன் ப்ரோஜெக்ட் எங்களுக்கு கிடைக்கும்னு நாங்களே எதிர்ப்பார்க்கல… ” என்று பாபியும் சந்தோஷமா சொல்ல,

   “அவ்வளவு சீக்கிரம் ஒரு சின்ன கம்பனிக்கு இந்த வாய்ப்பு ஈஸியா அமைஞ்சிராது பாபி. ஆனா உங்களுக்கு கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷம்பா… பெஸ்ட் ஆஃப் லக். இந்த ப்ரோஜெக்ட்ல அவன முழுசா கன்சென்ட்ரேட் பண்ண சொல்லு… ஆனா…” என்று மானவ் இழுக்க, அவர் மனதை புரிந்துக் கொண்டவன் போல்,
       “எல்லாம் சரியாகிறும் அங்கிள்.” என்று பாபி ஆறுதல்படுத்த,

     “இன்னும் எத்தனை நாளைக்குபா? அவன் எனக்கு ஒரே மகன்… அவன் நல்லது தானே எனக்கு எப்போவும் முக்கியம். அதை ஏன் அவன் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்? அவன் அம்மாகிட்ட கூட பேச மாட்டேங்குறான்… அவனுக்குள்ள கோபமும் இருக்கு, கொடுத்த வாக்கை மீறிட்டோமென்ற குற்றவுணர்ச்சியும் இருக்கு… அதுலயிருந்து எப்போ தான் வெளில வருவானோ…” என்று மானவ் வருத்தமாக சொல்ல பாபிக்கே வேதனையாக இருந்தது.

     “இப்போ என்னடா பண்றான்? இன்னும் குடிச்சிக்கிட்டு, ட்ரக்ஸ் அப்படி தான் இருக்கானா? ” என்று மானவ் கண்டிப்பான குரலில் கேட்கவும்,
     “அப்படி எல்லாம் இல்லை அங்கிள். அப்போ அப்போ குடிப்பான். மத்தபடி அவன் திருந்திட்டான்…” என்று பாபி சொல்லிமுடிக்கவில்லை, அவன் கையிலிருந்து தொலைப்பேசியை பிடுங்கிய ரோஹன் அழைப்பை துண்டித்திருந்தான்.

     “டேய்! டேய்! டேய்! பேசிக்கிட்டு தானே இருந்தேன்… ஏன்டா இப்படி பண்ண சைக்கோ?” என்று பாபி திட்ட,
     “எது… நானு… சைக்கோ…” என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி கேட்டவன்,
      “பேசினது போதும் இன்னைக்கு நைட் மீட்டிங் இருக்குல்ல… அதுக்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸை பார்க்காம வெட்டியா நின்னு கோல் பேசிக்கிட்டு இருக்க…” என்றவாறு ரோஹன் ஒரு பெட்டியிலிருந்து மது போத்தலை எடுத்து குடிக்க,

    “ஓஹோ அப்போ சார் என்ன பண்றதா உத்தேசம்?” என்று நக்கலாக கேட்ட பாபி, தன்னை கண்டுக்காது சோஃபாவில் அமர்ந்து காரியத்தில் கண்ணாக இருக்கும் தன் நண்பனை பார்த்து வெளிப்படையாக தலையிலடித்து,
      “இதையே முழுநேர வேலையா வச்சிருக்க இடியட். அடுத்த கொஞ்சநாள்லயே பரலோகம் போய் சேர போற பாரு…”என்று திட்டிவிட்டு செல்ல, ரோஹனோ லேசாக புன்னகைத்துக் கொண்டான்.

அன்று இரவு,
      ஹோட்டலில்,

நீண்ட பெரிய மேசையில் ஒருபக்கம்  மாயா, அலைஸ் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே மற்ற மூவரும் அமர்ந்திருந்தனர். ரோஹனோ எப்போதும் போல் உணர்ச்சிகள் துடைத்தெறிந்த முகத்துடன் இருக்க, பாபியும் சஞ்சய்யும் தான் சுற்றி சுற்றி பார்த்தவாறு இருந்தனர். காரணம் இவர்கள் இருந்த பகுதியில் இவர்களை தவிர யாரும் இல்லை. மாயாவின் பாதுகாப்புக்கு அன்று ஒருநாள் அந்த ஹோட்டலையே விலைக்கு வாங்கியிருந்தார் சர்வேந்திரன் என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு சற்று தள்ளி ஏகப்பட்ட பாதுகாப்பு காவலர்கள் வேறு இருக்க, அதை பார்த்தவாறே சஞ்சய் பாபியின் காதில்,
     “எதுக்குடா இம்புட்டு பாதுகாப்பு?… பிஸ்னஸ் மீட்டிங்க்கு வந்த மாதிரி இல்லை. ஏதோ பொலிஸ் விசாரனைக்கு வந்த மாதிரி ஃபீல் ஆகுதுடா…” என்று பாவம் போல் சொல்ல,

பாபி பதில் சொல்லும் முன்னே அவர்களின் முகபாவனையை கவனித்த மாயா,
     “இது உங்களுக்கு கம்ஃபோர்டபிள் ஆ இல்லைன்னா ஐ அம் ரியலி சோரி. டாட்க்கு என் சேஃப்டி ரொம்ப முக்கியம். ஆல்ரெடி ஏகப்பட்ட பிஸ்னஸ் எனிமீஸ்… இப்போ மீடியாவுக்கு நாதான் ஐராவோட எம்.டின்னு தெரிஞ்சதுக்கு அப்றம் செக்யூரிட்டி டைட் பண்ண வேண்டியதா போச்சு. இதுக்கு முன்னாடியே டூ டைம்ஸ் நடந்த கன்(Gun) ஷூட்ல இருந்து தப்பிச்சிருக்கேன். அதான்…” என்று சொல்ல, ரோஹனோ “ஓஹோ!…” என்று நக்கலாக இழுக்க, அவனை கூர்மையாக பார்த்தவள் மற்றவர்கள்புறம் திரும்பி ப்ரோஜெக்ட் பற்றிய பேச்சை ஆரம்பித்தாள்.

“அலைஸ்” என்று மாயா அழைத்து கண்ணசைத்ததும், தன் கையிலிருந்த ஐபேட்டை மற்றவர்கள் புறம் திருப்பி ஒவ்வொரு நாட்டிலுள்ள ஐரா கம்பனீஸ்ஸின் கட்டுமான வடிவமைப்புக்களை அலைஸ் காட்ட, மற்றவர்கள் அதை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மாயாவின் பேச்சை கவனிக்க தொடங்கினர்.

    “யூ க்னோ பெட்டர். இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு நாட்டுல இருக்க எங்க கம்பனீஸ்ஸோட பில்டிங் ஸ்ட்ரக்ச்சர்(Structure). ஐராக்குன்னு ஒரு தனித்துவம் இருக்கு. அது மாதிரி தான் நீங்க டிஸைன் பண்ணனும். ஆல்மோஸ்ட் ஒவ்வொரு அமைப்பும் ஒரு கோஸ்மெடிக் ப்ரோடெக் மாதிரியான டிஸைன்ல இருக்கும். சோ, இதை பார்க்கும் போதே புரியும்னு நினைக்கிறேன்.” என்று மாயா விளக்கிக் கொண்டிருக்கும் போதே, “ஹெலோ எவ்ரிவன்…” என்ற குரலில் ஐவருமே திரும்பி பார்த்தனர்.

அங்கு சர்வேந்திரனை கண்ட மாயாவோ மெலிதாக புன்னகைத்துவிட்டு திரும்பிக்கொள்ள, பாபியும் சஞ்சய்யும் அவருடன் மரியாதைக்கு கை குலுக்கினர்.  ரோஹனோ சர்வேந்திரனை அழுத்தமாக பார்த்தவாறே கை குலுக்கியவன் அவரின் கையில் அழுத்தத்தை கூட்டி நக்கலாக சிரிக்க, சர்வேந்திரனோ ரோஹனை மிரட்சியாக பார்த்தவாறு அவனிடமிருந்து கையை உறுவி, வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் மாயாவின் அருகில் அமர்ந்துக் கொண்டார்.

அடுத்து ஒப்பந்தம் பற்றி கலந்துரையாடலே அவர்களுக்குள் இடம்பெற, சஞ்சய்யும் பாபியும் சர்வேந்திரனோடு பேச்சு வார்த்தை நடத்த, ரோஹனோ சர்வேந்திரனை அழுத்தமாக பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் பார்வையின் வீச்சை ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவர்,
     “எக்ஸ்கியூஸ் மீ…” என்றவாறு எழுந்து ரெஸ்ட்ரூமிற்கு செல்ல, அடுத்த சில நிமிடங்களிலே ரோஹனும் ஒரு அழைப்பை ஏற்றவாறு மரியாதைக்கு கூட சொல்லாது அவன் பாட்டுக்கு எழுந்து செல்ல, மாயா தான், ‘யார்ரா இவன்?’ என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்தாள்.

     “சோரி ஃபோர் ஹிம் மாயா. அவன் அப்படி தான். டோன்ட் மிஸ்டேக் ஹிம். ஆனா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி… இதுக்கு முன்னாடி நாங்க பண்ண ப்ரோஜெக்ட்ஸ்ஸோட சக்ஸஸ்க்கு முக்கிய காரணமே அவன் தான்…” என்று பாபி சொல்ல,

     “ஸப்பாஹ்ஹ்!… நீங்க இரண்டு பேரும் ரொம்ப கூலா பேசுறீங்க. பட் மிஸ்டர்.ரோஹன் தான் என்னை முறைச்சிகிட்டே பார்க்குற மாதிரி இருக்கு. என்ட் இஃப் யூ டோன்ட் மைன்ட் எதுக்கு இப்போ ஆஃபீஷியலா பேசிக்கிட்டு ஃப்ரென்ட்லியா பேசலாமே…” என்று மாயா புன்னகையுடன் சாதாரணமாக கேட்க,

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட பாபியும் சஞ்சய்யும்,
      “பேசாலாம். ஆனா என்ன திடீர்னு…” என்று புரியாமல் கேட்க, அதேநேரம் ரோஹனும் அவர்கள் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

   “அய்யோ முடியல… எப்போ பாரு விரைப்பா திரிஞ்சிக்கிட்டு, சுத்தி பத்து பதினைஞ்சு கார்ட்ஸ்ஸோட ரொம்ப கஷ்டம். சுதந்திரமா இருக்கவே முடியாது. வெளியிலயிருந்து பார்க்கும் போது இவ்வளவு பணம் இருக்கு, இவங்களுக்கு என்ன குறை இருந்துட போகுதுன்னு இருக்கும். ஆனா உள்ள இருக்குறவங்களுக்கு தான் அதோட வலி புரியும். ஓஸ்ட்ரிச்(Ostrich) தெரியுமா?” என்று மாயா சிரிப்பை அடக்கியவாறு கேட்டதில், பாபியும் சஞ்சய்யும் அதன் அர்த்தத்தை புரிந்து சிரிக்க, ரோஹனோ கையிலிருந்த குளிர்பானத்தை அருந்தியவாறு மாயாவையே தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதை மாயாவும் கவனிக்க அவளால் அவன் பார்வையில் ‘என்ன உணர்கிறோம்’ என்று யூகிக்க கூட முடியவில்லை.

‘ஏன் இவரோட பார்வை எனக்குள்ள என்னமோ பண்ணுது?’ என்று யோசித்தவாறு மாயாவும் ரோஹனையே தன்னை மறந்து பார்க்க, ‘ஹ்ர்ம் ஹ்ர்ம்’ என்ற அலைஸ்ஸின் செறுமல் சத்தத்தில் நடப்புக்கு வந்தவள் தன்னுள் ஏற்பட்ட தடுமாற்றத்தை மறைக்க அரும்பாடுபட்டாள் என்றால், ரோஹனோ அவள் தடுமாற்றத்தில் லேசாக இதழை வளைத்து சிரித்தான்.

சஞ்சய்யின் பார்வை அடிக்கடி அலைஸ்ஸின் மேல் படிய, அவளோ அப்படி ஒருத்தன் இருப்பதையே கண்டுக்காதது போல் இருந்தாள். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சஞ்சய் தன்னை மறந்து,
     “தங்கச்சிமா இந்த பொண்ணு எப்போவும் இப்படி தானா?… கஞ்சி போட்ட சட்டையாட்டம் விரைப்பா தான் திரிஞ்சிக்கிட்டு இருக்குமா?” என்று கேட்டு விட, பாபியோ சஞ்சய்யை “டேய்!…” என்று கடிந்துக்கொள்ள, மாயாவோ சஞ்சய்யின் அழைப்பில் அதிர்ந்து பார்த்தாள்.

  “வா… வாட்?” மாயா தடுமாற்றமாக கேட்க, பாபியின் அழைப்பில் தான் தன்னிலை உணர்ந்த சஞ்சய் நாக்கை கடித்துவிட்டு, மாயாவின் அதிர்ந்த முகத்தை சமாளிக்கும் விதமாக,
     “அது… அது வந்துமா… சோரி. ஏதோ ஒரு நியாபகத்துல அப்படி சொல்லிட்டேன். சோரி…” என்று திக்கித்திணறி சொல்ல,

    “தட்ஸ் ஓகே. என்னை யாரும் அப்படி கூப்பிட்டது இல்லை. நீங்க என்னை அப்படியே கூப்பிடுங்கண்ணா.” என்று மாயா உற்சாகமாக சொல்ல, பாபிக்கும் சஞ்சய்க்கும் சந்தோஷம் தாளவில்லை. ஆனால் ரோஹன் தான் இறுகிய முகமாக இருக்க, அதை மாயாவும் கவனிக்க தவறவில்லை.

அடுத்த கொஞ்ச நேரத்திலே வந்தமர்ந்த சர்வேந்திரனின் முகமோ பேயறைந்தது போலிருக்க, அதை கவனித்த மாயா,
   “டாட், ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்க,

  “யாஹ்… யாஹ் ஐ அம் ஓகே மாயூ.” என்று திக்கித்திணறி கூறியவாறு எதிரே இருந்த ரோஹனை சர்வேந்திரன் பார்க்க, அவன் இதழ்களில் தோன்றிய ஏளனப் புன்னகையில் உண்டான தன் கோபத்தை அடக்கியவர் பின் அவசர அவசரமாக பேச வேண்டியதை பேசிவிட்டு செல்ல தயாரானார்.

இதில் மாயாவுக்கு தான் தனக்கே தெரியாமல் அவர்களுடன் உருவான ஒரு பிணைப்பில், வீட்டிற்கு சென்றால் தன்னை நாடும் தனிமையை நினைத்து அவர்களுடன் மேலும் பழக ஆர்வமாக இருக்க, போகும் போது தன்னை மீறி அவள் கண்களோ ரோஹனின் மீது படிந்து மீண்டது. அதை உணர்ந்தாலும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை ரோஹன்.

ஒருவாரம் கழித்து,

ஐரா நிறுவனத்தின் புது ப்ரான்ச்காக வடிவமைத்த கட்டுமான வடிவமைப்பை பார்த்து உறுதி செய்ய அன்று மாயா ஆர்.டி.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன்க்கு வந்திருக்க, மீட்டிங் ஹொலினுள்ளே கம்பீரமாக நுழைந்த மாயாவை பார்த்த பாபியும் சஞ்சய்யும் அவளை புன்னகையுடன் வரவேற்க, எப்போதும் போல் ரோஹன் அவளை கண்டுக் கொள்ளவே இல்லை. 

கீர்த்தியும் காரியதரிசி என்ற முறையில் அவர்களுக்கான ஏற்பாட்டை செய்துவிட்டு மாயாவை புன்னகையுடன் பார்த்தவாறு இருக்க, மாயாவும் அவளை பார்த்து புன்னகைத்ததில் ஏதோ முன் போல் அவளை சாதாரணமாக நெருங்க முடியாததில் கீர்த்திக்கு தான் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பாபி வடிவமைப்பை விளக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்தென்று மாயா கேட்கும் கேள்விகளில் திணறித்தான் போனான் அவன். என்ன தான் அவள் ஒருவித சாந்தமாக இருந்தாலும் வேலை என்று வரும் போது அவளிடத்தில் இருக்கும் வேகத்தில் ஆச்சரியப்பட்டு தான் போனர் அனைவரும்.

ரோஹனோ மாயாவை மெச்சுதலாக பார்க்க, தன் கேள்விகளுக்கான பதிலில் திருப்தியடைந்தவள் அந்த வடிவமைப்பையே உறுதி செய்ய மற்றவர்களுக்கும் அப்போது தான் ‘ஹப்பாடா’ என்றிருந்தது. இது தொடர்பான கலந்துரையாடல் முடிந்ததும் மாயா பாபி, சஞ்சய்யுடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள் என்றால், அலைஸ்ஸோ இறுகிய முகமாக அமர்ந்திருக்க, கீர்த்தியோ மாயாவுடன் எப்படி சகஜமாக பேசுவது என்று தெரியாது ஒருவித தயக்கத்தில் இருந்தாள்.

     “அலைஸ் கொஞ்சம் சிரிச்சா தான் என்ன… மீட் மை ஃப்ரென்ட்ஸ்.” என்று மாயா உற்சாகமாக இத்தாலியன் மொழியில் சொல்ல, அலைஸ்ஸோ, “ஃப்ரென்ட்ஸ்…” என்று கேள்வியாக ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டுவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள,  சஞ்சய்யோ,
     “தங்கச்சிமா அம்மணிக்கு தமிழ் தெரியாதா..?” என்று கேட்டான்.

சஞ்சய்யை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த மாயா,
      “இல்லை அண்ணா. என் பெஸ்ட் ஃப்ரென்ட்க்கு சுத்தமா தமிழ் தெரியாது.” என்று சொல்ல, சஞ்சய்யோ குறும்பாக சிரித்து, தன்னவளிடம் பேச வேண்டியதை கணக்கு போட்டுக்கொண்டான்.

ரோஹனோ இதையெல்லாம் கண்டும் காணாதது போல் இருக்க, மாயா அலைஸ்ஸுடன் பழகும் விதத்தில் கீர்த்திக்கோ பொறாமை, கோபம் என்று உணர்வுகள் பொங்கி எழுந்தது. கீர்த்தி வெளியேற போக “கீர்த்தி” என்றழைத்த மாயா,
     “உன் எம்.டி மட்டும் எனக்கு ஃப்ரென்ட்ஸ் இல்லை. நீயும் எனக்கு ஃப்ரென்ட் தான். பிகாஸ், எனக்கு இப்படி டெடி பெயார் மாதிரி  இருக்குற பொண்ணுங்கள ரொம்ப பிடிக்கும்.” என்று சொல்ல, கீர்த்தியும் மாயாவின் பேச்சில் லேசாக புன்னகைத்துக் கொண்டாள்.

    “மாயா, எங்க கூட இவ்வளவு க்ளோஸா பேசுறியே… அது எப்படி? அதுவும் மிஸ்.மாயா மஹேஷ்வரி எங்க கூட இப்படி ஃப்ரென்ட்லியா பேசுறாங்கன்னு வெளில தெரிஞ்சா நம்ப கூட மாட்டாங்க.” என்று பாபி சொல்லி சிரிக்க,

   “ஓ கோட்! அதை ஏன் கேக்குறீங்க..? எங்க வீட்டுக்கு நா ஒரு பொண்ணு தான். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுவேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஆக்ஸிடன்ட்ல எனக்கு பழசெல்லாம் மறந்து போச்சு. எதுவுமே நியாபகம் இல்லை. டூ இயர்ஸ் முன்னாடி தான் பிஸ்னஸ்க்குள்ள வந்தேன். பட் டாட் என்னை ஓஃபீஸ்க்கு வர விடல,  வீட்டிலிருந்தே எல்லாத்தையும் பார்த்துகிட்டேன். இப்போ தான் முழுசா கம்பனிய என் பொறுப்புக்கு எடுத்திருக்கேன்னு சொல்லலாம்…” என்றவள் சற்று நிறுத்தி,
      “ஆனா நா யாருக்கிட்டேயும் இவ்வளவு நெருக்கமா பேசினது கிடையாது. இன்ஃபேக்ட் எனக்கு ஃப்ரென்ட்ஸ்ஸே கிடையாது. அலைஸ் பிஏவா வந்தா, அப்படியே என்கூட ஃப்ரென்ட் ஆகிட்டா. பட் உங்க கூட எனக்கே தெரியாம ரொம்ப இன்டிமேட் ஆகிட்டேன். ஐ டோன்ட் க்னோ வை… எனக்கே ஆச்சரியமா இருக்கு. ரொம்ப நாள் பழகின மாதிரி ஃபீல் ஆகுது.” என்று மாயா சொல்ல, தொலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்த ரோஹனின் விரல்கள் நின்று சற்று தன்னை ஆசுவாசப்படுத்திவிட்டு மீண்டும் இயங்க, பாபிக்கும் சஞ்சய்க்கும் நெகிழ்ச்சியாக இருந்தது.

   “நாங்க எப்போவுமே உன் ஃப்ரென்ட்ஸ் தான் மாயா. ஐ மீன் இனி எப்போவும் ஃப்ரென்ட்ஸ்ஸா இருப்போம்னு சொல்ல வந்தேன். பெயர் சொல்லி உரிமையா கூப்பிடலாம்ல..?” என்று கீர்த்தி தயக்கமாக கேட்க, முத்துப்பற்கள் தெரிய சிரித்த மாயா,
     “கண்டிப்பா… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று சொல்ல, கீர்த்திக்கோ விழியோரத்தில் நீர் துளிர்த்து விட்டது.

ரோஹனை பார்த்த மாயாவுக்கோ தன்னை மீறி அவனுடன் பேச ஆர்வம் தோன்ற, மெதுவாக சஞ்சய்யின் காதில்,
     “மிஸ்டர்.ரோஹன் எப்போவுமே இப்படி தான் உர்ருனு இருப்பாரா…?” என்று கிசுகிசுக்க, அவனோ வாயை பொத்திக்கொண்டு சிரிக்க,
     “மிஸ்டர்.ரோஹன் எப்படி இருந்தா உங்களுக்கென்ன மிஸ்.மாயா மஹேஷ்வரி…?” என்று ரோஹன் சட்டென நிமிர்ந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்ட விதத்தில், தன்னை மறந்து அவனையே மாயா பார்த்திருக்க, ரோஹனுக்கோ சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது.

அவளது பார்வையில் வந்த சிரிப்பை இதழை கடித்து அடக்கியவன் எதுவும் பேசாது மீண்டும் தொலைப்பேசியில் புதைந்துக் கொள்ள,  கீர்த்தி “மாயா…” என்று உலுக்கியதுமே நடப்புக்கு வந்தாள்.

   “மாயா, சஞ்சய் மட்டும் தான் உன் அண்ணண்னு இல்லை. நானும் உனக்கு அண்ணா மாதிரி தான். நீ என்னையும் அண்ணான்னு கூப்பிடலாம்…” என்று இப்போதாவது தன்னை ‘அண்ணா’ என்று மாயாவை அழைக்க வைக்க பாபி குறும்பாக சொல்ல,

உதட்டை பிதுக்கி ‘இல்லை’ என்ற தோரணையில் தலையாட்டிய மாயா,
     “இவர பார்க்கும் போது தானாவே அண்ணான்னு கூப்பிட தோணுது. பட் உங்க விஷயத்துல எனக்கு அப்படி தோண மாட்டேங்குதே தருண். அதெல்லாம் மனசுலயிருந்து வரனும். நீங்க எனக்கு எப்போவுமே தருண் தான்.” என்று அன்று சொன்னது போலவே இன்றும் சொல்லி சிரிக்க, சஞ்சய்யோ வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

மாயாவை பொய்யாக முறைத்த பாபி ரோஹனின் காதில்,
      “மண்டைல அடி பட்டு நட்டு கழண்டும் என்னைக்குமே எனக்கு மரியாதை தரக் கூடாதுன்னு உறுதியா இருக்கா என் பேபி… ” என்று பொறுமிக் கொள்ள, ரோஹனோ கேலியா சிரித்தவாறு பாபியை பார்த்தான்.

அடுத்த இரண்டு நாட்களில் சைட்டில் வேலை ஆரம்பமாக, மாயாவுக்கோ ஏதேதோ யோசனைகளிலே நாட்கள் கழிந்தன. அலைஸ்ஸோ முடிந்தவரை தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மாயாவுடனே இருந்தாலும், அவளுக்குள் கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்தின் அளவை அவள் மட்டுமே அறிவாள்.

அன்று,

ரோஹனும் சஞ்சய்யும் சைட்டில் இருக்க, திடீரென்று ‘க்ரீச்’ என்ற சத்தத்தில் புழுதி பறக்க வந்து நின்ற அந்த உயர்ரக காரிலிருந்து இறங்கிய மாயா புன்னகையுடன் அவர்களை பார்த்தவாறே அவர்களை நோக்கி வர, ரோஹனோ புருவத்தை நெறித்து அவளையே அழுத்தமாக பார்த்தவாறு நின்றான் என்றால், சஞ்சய்யோ மாயாவின் பின்னால் கண்களை சுழலவிட்டு தேடினான்.

     “இன்னைக்கு நோ கார்ட்ஸ்… தனியா தான் வந்திருக்கேன்.” என்று மாயா சாதாரணமாக சொல்ல, அவளை முறைத்த ரோஹன்,
     “உன்னை யாரு இங்க வர சொன்னா? அதுவும் தனியா வந்தேன்னு அசால்ட்டா சொல்ற. நீ தனியா வந்ததே ஆபத்து. அதுவும் இங்க வந்தது அதை விட ஆபத்து.. டோன்ட் யூ ஹேவ் சென்ஸ்…?” என்று திட்ட மாயாவோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

   “டேய்! என்னடா திட்டுற… இது நம்மா மாயா இல்ல. பார்த்து பேசு ரோக்கி…” ரோஹன் காதில் சஞ்சய் கிசுகிசுக்க,
ரோஹனோ அதை கண்டுக்காது சஞ்சய்யை ஏளனமாக புன்னகையுடன் பார்த்து, “சோ, வாட்?” என்று கேட்டுவிட்டு மாயாவின்புறம் திரும்பி,
     “இப்போ எதுக்கு இங்க வந்த…?” என்று ஒருமையில் அழைத்து, கடினக் குரலில் கேட்க,

ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை பார்த்த மாயா,
     “திஸ் இஸ் த லிமிட் மிஸ்டர்.ரோஹன். நா யாருன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். என்கிட்ட பேசும் போது பார்த்து பேசுங்க, நா இவங்க கூட ஈஸியா பழகுறதை வச்சி என் குணத்தை தப்பா எடை போடாதீங்க. நா நினைச்சா உங்க கம்பனிய உருத்தெறியாம அழிக்க முடியும். கொட் இட்…” என்று அழுத்தமாக சொல்ல,  ரோஹனோ “டெவில்…” என்று திட்டியவாறு உக்கிரமாக அவளை முறைத்து பார்த்தான் என்றால், அவளும் அவனுக்கு சளித்தவள் இல்லை போல் அதே முறைப்போடு அவனை பார்த்திருந்தாள்.

காதல்போதை?
——————————————————————

-ZAKI?
  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!