அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 17

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 17
An kn 17
பல வருடங்கள் முன்னே…
மழையை மொத்தம் கொட்டித் தீர்த்து அப்போது தான் சற்றே ஆசுவாசமாய் இளைப்பாறிக் கொண்டிருந்தன மேகங்கள்.
பணச்செழுமை கொட்டிக்கிடக்கும் மாடிவீடுகள் அமைந்துள்ள தெரு அது. ஒவ்வொரு வீடும் சற்றே ஒரே அமைப்பில் கட்டப்பட்டிருந்தன.
அனைத்தும் தனித்தனி வீடுகள் என்றாலும் பார்க்க ஒரே நேருக்கு ஒன்றோடு ஒன்று இணைந்த அமைப்பிலான வீடுகளாகவே.
அதில் இருவீடுகள் மட்டும் மேல்மாடி இடையே இரண்டையும் இணைத்ததாய் ஒரு பெல்கனி. இத்தனை வருடங்களும் அதில் ஒரு வீடு பூட்டியே வைக்கப்பட்டிருக்க அவர்களுக்கு அதை பிரிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.
கடந்த ஒருவாரமாக அந்த வீட்டை நிறப்பூச்சுக்கள் அடித்து, புதுப்பிக்கப்பட்டு, இதோ இன்று குடிவந்தனர் அவ் வீட்டுக்கு புது உரிமையாளர்கள்.
தங்களுடைய வீட்டு மாடியிலிருந்து யாரெல்லாம் இருக்கிறார்கள் என பக்கத்து வீட்டை எட்டி எட்டி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள் அக்காளும் தம்பியும்.
“என்னடா அகி, யாரையும் காணோம். செம போர்.”
“வீட்டுக்கு ஆளுங்க வந்துட்டாங்கன்னு சொன்னாங்க வெளில யாருமே இல்லை. உள்ளேயும் யாரும் இருக்க போலயே தெரிலயே.”
“அதானே சுத்த வேஸ்ட், இதுக்கு இந்த வீடு பூட்டியே இருந்திருக்கலாம்.”
“அங்கெல்லாம் போக வேணாம். திட்டப்போறாங்கடா.”
“என்னோட ஸ்நோவி போய்ட்டான் ண்ணா…”
இவர்கள் இருவரும் இங்கே பேசிக்கொண்டிருக்க, அடுத்த மாடியில் பேச்சு சத்தம் கேட்க இருவரும் அங்கே பார்த்தார்கள்.
“ஸ்நோவி…” மெல்லமாய் சிறு குழந்தை தவழ்ந்து வருவதைப் போலவே அழகாய் மஞ்சள் வண்ண பிராக் அணிந்து கன்னங்கள் ஆப்பிள் என சிவந்து கண்களை அங்கும் இங்கும் வண்டாய் சுழற்றி தன் செல்லப்பிராணியை தேடிக்கொண்டு இவர்கள் நின்றிருந்த மாடிப்பக்கம் வந்தாள் ஐரா.
இருவருமே அவளைக் கண்டதும்
‘வாவ்’ என அத்தனை ஆர்வமாய் பார்த்திருந்தனர். அவள் பின்னால் வந்தவனோ நெடுவென வளர்ந்து பார்க்க வசீகரிக்கும் அழகோடு இளமை மிளிர்வோடு இருந்தான். பார்த்ததும் மதிக்கத் தோன்றும் உடல் மொழி.
அவர்கள் இருவரும் ஐராவையே பார்ப்பதைக் கண்டவன், “அதோ அவங்க உன்னைத்தான் பார்த்துட்டு இருக்காங்க, அவங்களை கேட்கலாம் வா.” தங்கையை அழைத்தான் கிருஷ்ணா.
அவன் கேட்க முன்னமே ஐராவே அவர்களைக் கேட்டாள். “என் ஸ்நோவி பார்த்தீங்களா?”
“ஸ்நோவி?” எதை தேடுகிறாள் என்று தெரியாதவர்கள் கேட்டார்கள்.
“அவ கேட் இங்க வந்துருச்சுன்னு தேடறா.”
“ஓஹ்! நாங்க பார்க்கலையே.” அகில் கூறினான்.
“நோ ண்ணா. நா பார்த்தேன், இப்டியே நடந்து போச்சு…” ஐரா கண்களை நாலாபக்கமும் சூழலவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். அவளுடைய ஸ்நோவியோ அகில் அமர்ந்திருந்த இருகைக்கு அடியில் வாகாய் உறங்கிக்கொண்டிருந்தது.
“ஹேய் யூ சீட்டர், என் ஸ்நோவிய மறச்சு வச்சுட்டு இல்லன்னு சொல்ற.”
அவனைத் திட்டிக்கொண்டே அவன் காலுக்கு ஒரு அடி அடித்தவள் புசு புசுவென அடர் கருமை நிறத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் அவள் ஸ்நோவியை தூக்கிக் கொண்டாள்.
அதுவோ அவள் கைகளில் சுருண்டு மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தது.
“ஹேய் நான் அது வந்ததை பார்க்கவே இல்லை.”
“யூ சீட்டர்.”
அவளின் மழலை பேச்சில் மயங்கிய அனன்யா, அவளோடு நட்புக்கரம் நீட்டிக்கொள்ள, “அதானே எதுக்கு அகி பாப்பாவோட ஸ்நோவிய ஹைட் பண்ணுன?”
“ஹேய் நா எங்க?” அக்காவின் முகம் பார்த்தவன் அவள் கண் சிமிட்டலில் அமைதியானான்.
“ரொம்ப அழகா இருக்கு உன் ஸ்நோவி. நான் கொஞ்சம் தூக்கட்டுமா? “
அவள் கைக்கு ஸ்நோவியை கொடுத்த ஐரா அதைப்பற்றிக் கூற ஆரம்பித்துவிட்டாள். இப்போதைக்கு இந்த பேச்சு நிறுத்த மாட்டாள் என தெரிந்தவன், தன்னையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
“ஹாய் நான் கிருஷ்ணா.” இங்க நாங்கதான் குடி வந்திருக்கோம்.
“அம் அகில், இது என் அக்கா அனன்யா.”
“ஹலோ.”
“நீங்க ரெண்டு பேரு மட்டுமா? யாருமே இல்லையேனு நானும் அக்காவும் பார்த்துட்டே இருந்தோம்.
“அம்மா, அப்பா அப்றம் நாங்க ரெண்டுபேரும். அவ்ளோதான்.”
“எங்க வீட்லயும் அதே தான்.”
“ஓஹ்! என்ன படிக்கிறீங்க? “
“நான் நைந்த், அக்கா ட்வெல்த்.
நீங்க?”
“நான் காலேஜ் பர்ஸ்ட் இயர், இப்போதான் ஜோஇன் ஆகியிருக்கேன். அதான் இங்க வந்திருக்கோம்.”
“ஓஹ் சூப்பர்.”
“எக்ஸாம் இருக்குல்ல, பிரிப்பேர் பண்றீங்களா? ” அனன்யாவைக் கேட்டான் கிருஷ்ணா.
“ஹ்ம் இருக்கு.”
“அதான் டென்ஷனா இருக்கா.”அகில் கூறினான்.
“எதுக்கு டென்ஷன். மைன்ட் பிரீயா வச்சுக்கணும்.”
“அக்காக்கு எங்கப்பா கம்பனிய ரன் பண்ணணும்னு ஆச. ஆனா அப்பா நல்லா மார்க் வாங்கி காலேஜ் என்டர் ஆகலைன்னா நோ சான்ஸ் சொல்லிட்டாங்க.”
“அட,இதெல்லாம் ஒரு விஷயமா. பாருங்களேன் அப்பாவே கம்பனிய கையில் கொடுக்கப்போறாங்க.”
கிருஷ்ணா கூறவும் அவன் மீது அத்தனை மரியாதை எழுந்தது அனன்யாவிற்கு.
“தேங்க்ஸ்.”
“அப்போ எனக்கு உங்க கம்பனில வேலை தருவீங்கல்ல.”
“கண்டிப்பா.”
இப்படியே அன்றைய தினமே நால்வரும் வயது வித்தியாசமின்றி நண்பர்கள் ஆகியிருந்தார்கள்.
ஐரா அவள் ஸ்நோவியோடு பேசிக்கொண்டிருக்க அகில் சிறியவனாக இருந்த போதிலும் இருவருக்கும் பொதுவாக அவனை பேச்சில் வைத்து மூவரும் நண்பர்களானார்கள்.
ஐராவின் ஜடை இழுக்க அவள் கத்தவென இடையே அகில் ஐராவின் சண்டையும் அன்றோடு ஆரம்பமானது.
நாட்கள் செல்ல டாம் அன்ட் ஜெர்ரியாக இருவரும் மாறிப்போக, இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தும் இருக்கவில்லை. ஒன்றாய் அமர்ந்து சிரித்து பேசுவதுமில்லை.
கிருஷ்ணா,அனன்யாவின் படிப்பிற்கும் அவள் இலக்கை நோக்கி செல்வதற்கும் பெரிதும் துணையாக இருந்தான். அவர்களுக்குள்ளே நல்லதொரு புரிதல் இருந்தது. இவர்கள் நால்வரின் பழக்கத்தில் வீட்டின் பெரியோர் நல்ல நட்பொன்றை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
ஐரா என்றால் அத்தனை பிடிக்கும் ரகுராமிற்கு. அவள் குறும்புத் தனமும் ரம்யாவோடு வம்பிழுக்கும் பாங்கும் அவரை அத்தனை ஈர்க்கும். ஆனால் அவள் காணாதுதான் ரசிப்பார். அவளுக்கு அது தெரிந்தே இருந்தாலும் அவளும் அதை காணாது போல மற்றவர்களிடம் சொல்லிச் சிரிப்பாள்.
***
இப்படியே ஐந்து வருடங்கள் ஓடியிருந்தன.
அகில் காலேஜ் எண்ட்ரன்ஸ் எக்ஸாமிற்கு படித்துக்கொண்டிருக்க, அனன்யா காலேஜ் செக்கண்ட் இயரில் இருந்தாள்.
கிருஷ்ணா மேற்படிப்பை தொடர்ந்துக்கொண்டு தந்தையின் காலேஜில் பார்ட் டைம் லெச்சரர் ஆகவும் இருந்தான்.
அந்த காலேஜ் ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகியிருந்தன. கட்டணங்கள் அதிகளவில் இல்லாது நடுத்தர மக்களை இலக்காகக் கொண்டு நடத்திக்கொண்டிருந்தார் கிருஷ்ணா மற்றும் ஐராவின் தந்தை நந்தன்.
சொத்துக்களும் பணமும் தாராளமாய் இருக்க கல்லூரி நடத்தித்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் எனும் எண்ணம் அவரிடம் துளியும் இருக்கவில்லை. அது ஒரு சேவை அந்த எண்ணத்தில் மட்டுமே நடத்திக்கொண்டிருந்தார்.
இப்போது சில வருடங்களாக ரகுராமோடு ஏற்பட்ட நட்பில் அவரோடு இமயம் குரூப்சோடு இமாலயாவை பெயரளவில் இணைத்திருந்தார் நந்தன்.
ரகுராமிற்கு அப்படி அவர்களின் வழி பெயர் வேண்டுமென்பதில்லை. ஆனாலும், காலேஜ் எனும் துறை மட்டுமே அவர்களிடம் இன்னும் ஆரம்பிக்கப்படாமலே இருக்கின்றது. ஏனோ அதை ஆம்பிக்க இன்றளவும் அவருக்கு சற்றே அச்சம் தான். ஆக இமாலயாவை வைத்து பெயரை மட்டுமே எடுத்துக் கொண்டார். ஆனால் அதை நந்தனிடம் கூறியும் இருந்தார். அவருக்கு அதில் எந்த பாதிப்பும் இல்லாததால் ஒப்பதம் இட்டுக் கொண்டார்கள்.
ஆனால் பிள்ளைகளோ ரகுராம் பங்குதாரராக
இணைந்துக்கொண்டார் என்றே எண்ணியிருந்தனர்.
அன்று ஐரா அழும் சத்தம் இவர்கள் வீடு வரைக் கேட்க என்ன வென்று பார்க்கப்போனார் ரம்யா.
“சுமித்ரா, ஐரா என்ன இவ்ளோ சத்தமா அழுதுட்டு இருக்கா.”
“பாரு அத்தையும் அங்க இருந்து வந்திருக்காங்க. அண்ணா வரவும் போய் பார்க்கலாம்.”
“ஏன் என்னாச்சு?”
“அவ ஸ்நோவிய காணோமாம். ஸ்கூல் விட்டதுல இருந்து வந்து தேடறா.”
“இங்க எங்கயாவது தான் இருக்கப் போகுது. எங்கேயாவது தின்னுட்டு நல்லா தூங்குறான் போல. அதானே அவன் வேல.”
“உன்னபோல இல்ல அத்த, நீதான் தின்னுட்டு ஒரே இடமா இருக்க. என் ஸ்நோவி எவ்ளோ சாப்டாலும் ஆக்ட்டிவா இருப்பான்.”
“ஹேய் என்னதிது. இப்படித்தான் பேசுவாங்களா?”
“அவளுக்கு பொறாமை. என்னை போல சப்பிட முடிலயேன்னு. விடு சுமி.”
“யாரு இவளா? இவ சாப்பிடறதை நீங்க பார்த்ததில்லை. நாளைக்கு அஞ்சு நேரம் சாப்பிடுவா. ஸ்கூல்கு புக்ஸ் கொண்டுபோராளோ இல்லையோ லஞ்ச் ஸ்னாக்ஸ்னு நிறையாவே கொண்டு போவா.”
“ஹேய் என்ன நீ பொண்ணு சாப்பாட்டுலேயே கண்ணு வெப்பியா. பாரு எப்டி எல்லாம் கணக்கு பார்த்திருக்கன்னு.’
‘நீ என் வீட்ல வந்து இனி சாப்டு ஐரா. பாரு உங்கம்மா என்னவெல்லாம் சொல்றான்னு.”
“இப்போ இதான் முக்கியமா, எனக்கு என் ஸ்நோவி வேணும்.” மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள்.
“கிருஷ்ணா வர லேட் ஆகுமா? “
“ஆமாக்கா.யாரோ பிரென்ட மீட் பண்ணிட்டு வரேன் சொன்னான். இல்லன்னா இந்நேரத்துக்கு வந்துருப்பான்.
அப்போது நந்தன் அழைத்தார்.
“என்ன சுமி இத்தனை கால், மீட்டிங்ல இருந்தேன்.”
அவரிடமிருந்து போனை எடுத்தவள், “ப்பா’,கேவிக் கேவி, ‘என் ஸ்நோவிய
காணோப்பா.”
“அச்சோ பாப்பா. அங்க எங்கேயாவது தான் இருக்கப்போறன்டா. நல்லா தேடிப் பாருங்களேன்.”
“நல்லா தேடிட்டேன் ப்பா. எங்கேயும் இல்லை. அவனுக்கு ரொம்ப பயம்,நாய் ஏதாவது பார்த்திருந்தா.” கூறவே பயந்தவளாய் அழுதாள்.
“பாப்பா இப்போ அப்பா வந்துருவேன். திரும்ப ரெண்டு பேரும் சேர்ந்து தேடலாம் ஓகேவா? “
“ஹ்ம்… “
“அது இங்க எங்கேயாவது தான் இருக்கப் போகுதுங்க. அதுக்காக நீங்க பதட்டமா எல்லாம் வர வேண்டாம், மெதுவா வண்டி ஓட்டிட்டு வாங்க.”
“அவள பார்த்துக்கோ சுமி, அழுறால்ல.”
“சரிங்க உங்க பொண்ண நான் பத்திரமா பார்த்துக்கிறேன்.”
“ஏன்டி சுமி, அவளே பாவம் அழுதுட்டு இருக்கா நீயும் என்னன்னா.”
“இல்லக்கா, இவ அழுதாலே அவங்க டென்ஷன் ஆகியிருவாங்க. அது நல்லா இவளுக்கும் தெரியும். சின்ன பிள்ளையா இன்னும். வண்டி ஓட்டிட்டு வர்றப்ப டென்ஷன் இருக்க கூடாதுல்ல. பாருங்க இப்போ பதறிப்போய் வருவாங்க.”
“சரி விடு.’
‘நீ வாடா நாம போய் நம்ம வீட்ல ஒரு தரம் பார்க்கலாம். அகி வந்தான்னா அவனையும் தேட சொல்லலாம்.”
‘அச்சோ! அந்த இடியட் எப்டி மறந்தேன். அவனுக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவானே, நாராயணா! அவன் வர முன்ன எனக்கு என் ஸ்நோவி கிடைச்சிரனும்.’
சிறு வயது முதலே நீண்ட வருடங்களுக்கு பிறகு கிடைத்த பிள்ளை என்பதாலேயே நந்தனுக்கு ஐரா அத்தனை செல்லம், அவள் அழுதாள் என்றால் அத்தனை டென்ஷன் ஆகிடுவார். அந்த நேரங்களில் மகளோடு சுமித்ராவுக்கு கொஞ்சம் பதற்றம் தான். அவர் வெளியில் எங்கும் இருக்க என்ன வேலை என்றாலும் போட்டது போட்டப் படியே வந்திடுவார். அத்தனை பதற்றமாக வேறு வண்டி ஓட்டுவார்.
இதை விட கிருஷ்ணா, தங்கை என்றாலே அத்தனை அன்பு. அவனுமே அவளுக்கு தந்தை போலத்தான. இவர்கள் இருவர் முன்னே சுமித்ரா ஐராவோடு வம்பிழுப்பார், மற்ற நேரங்களில் அவர்கள் இருவரின் அன்பும் சேர்த்து அவரிடம் இருக்கும்.
நன்கு அன்பில் நீந்தி குதூகளித்துக் கொண்டிருந்தாள் ஐரா.
“இங்கெல்லாம் தேடி பார்த்துட்டேன் அத்த. சோர்வாய் அகில் வீட்டின் வாயில் படிக்கட்டுகளில் அமர்ந்தாள்.
அப்போதுதான் வந்தான் அகில். “ஹேய் இங்க என்ன பண்ற?”
“ஹ்ம் வேண்டுதல் இங்க உட்காரனும்னு அதான்.”
“வேன்றதை கொஞ்சம் நல்லதா வேண்டிக்க கூடாத. மூஞ்ச வேற இப்டி வச்சிட்டு வாசல்ல இருக்க?”
“ஹேய் என்னவோ உன் வீட்டு வாசல்ல இருக்க போலதான். இது என் அத்த வீடு, எங்கவேணா இருப்பேன்.”
“எங்க உன் வாழு?”
கேட்டுக்கொண்டே அவளை சுற்றிப் பார்த்தவன் அவள் முகம் பார்க்க கண்களில் நிறைந்த நீர் அவள் கன்னம் தாண்டி கீழே விழுந்தது.
“என்னாச்சு?” அப்படியே அவள் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் கன்னம் துடைத்துக் கேட்டான்.
அங்கே வந்த ரம்யா,”ஸ்நோவிய காணோமாம் டா. இங்க எங்கேயாவதுதான் இருக்கும்னு சொன்னா கேட்டா தானே.”
“நா எல்லா இடமும் தேடிட்டேன் அகி எங்கேயும் இல்ல. எனக்கு என் ஸ்நோவி வேணும்.”
“இங்க எங்கேயாவது தான் இருப்பான், வா போய் பார்க்கலாம்.”
“நா தேடிட்டேன் எங்கேயும் இல்லை.”
“தெருல போய் பார்க்கலாம் வா.”
“அங்க போயிருக்க மாட்டான். அவனுக்கு நாய்னா ரொம்ப பயம்.”
“சரி இரு நா போய் பார்த்துட்டு வறேன்.”
தெருவெல்லாம் தேடி அலைந்தவன் ஒருமணி நேரத்தின் பின் வெறுங்கையோடு தான் வந்தான். அவனையே பார்த்திருந்தவள் இல்லை என்றதும் அழகஆரம்பித்து விட்டாள்.
அத்தோடு நந்தன், கிருஷ்ணா அனைவரும் வந்தும் அவர்களின் ஸ்நோவி மட்டும் வரவே இல்லை.
ரகுராம் வண்டியிலிருந்து இறங்க அவர் கையில் இருந்த ஸ்நோவியைக் கண்டவள்,
“ராகுப்பா” என ஓடிச் சென்று அவரைக் காட்டிக்கொண்டாள்.
ஸ்நோவியை தூக்க முன் அதை கொண்டுவந்து சேர்த்த ரகுராம் மீது அவள் காட்டிய அன்பில் அங்கிருந்தவர்கள் அனைவருமே நெகிழ்ந்துப்போனார்கள்.
எப்போதும் ஒருவர் மீது ஒருவர் காட்டிக்கொள்ளாத அன்பை அனைவர் முன்னே காட்டிக்கொடுத்தார்கள்.
அதன் பின் ஸ்நோவியை அணைத்தவள், “நாராயணா இவனுக்கு பீவர்.”
“பயந்திருப்பான்டா,வா டாக்டர்கிட்ட போலாம்.” ரகுராம் கூறினார்.
‘அடேய் காய்ச்சலாம்டா. போச்சுது அச்சோ நம்ம உசுரையும் சேர்த்தே வாங்குவாளே’ பாவமாக கிருஷ்ணாவும் அகிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“உனக்கு நான் அழுறது பார்த்து சந்தோஷம்ல?”
அத்தனை நேரம் அவளுக்காக அவன் ஸ்நோவியை தேடியழைந்தது கூட மறந்து, இப்போது இவளைப் பார்த்த அவன் முக பாவனையில் அவனோடு கோபம் கொண்டாள்.
“ஏன்டா கிருஷ்ணா, நீயும் தானே பார்த்த, என்னை மட்டுமே முறைக்கிறா.”
“அவ எப்போ அடுத்தவங்களை போகஸ் பண்ணிருக்கா, எப்போவும் நீ என்ன பண்றன்னுதானே பார்த்திட்டு இருப்பா. இனி ரெண்டு நாளைக்கு அவ பின்னாடியே அழைய வெக்கிறாளா இல்லையான்னு பாரு. “
கூறிக்கொண்டே கிருஷ்ணாவோடு வந்தமர்ந்தாள் அனன்யா.
அதன் பின் ஸ்நோவியோடே ஐராவின் நேரங்கள் ஓடின. அவளுக்கு உண்டான உடல் மாற்றம் கூட அப்போதைக்கு தெரியவில்லை.
அந்த பூனையோ எப்படியோ வீட்டு வாயிலை தாண்டிச் சென்று மிகவும் பயந்து போயிருந்தது. அவ்வகை பூனையினம் அத்தனை மென் மனம் கொண்டவை, சற்றே அதட்டி பேசினால் கூட அழும் ரகம் அவை.
ஸ்னோவியோடே மிக நீண்ட நேரம் இருந்தவள் அப்படியே உறங்கியிருந்தாள்.
இரவு மணி இரண்டு இருக்கும்,மாலை இருந்து அவ்வப்போது வந்து போன வயிற்று வலி தொடர்ந்து வர, வலி தாங்காது எழுந்து ஐரா அழ அவள் சத்தம் கேட்டு மீண்டும் அனைவரும் அவளறையில் கூடிவிட்டனர்.
“என்னாச்சு ஐரா? ” நந்தன் அவளை மடியில் படுக்கவைத்துக்கொண்டே கேட்க,”வயிறு வலிக்குதுப்பா.”
“நைட் சாப்டாமா தூங்குனா வலிக்காம என்ன செய்யும்?முதல்ல எழுந்துக்கோ சாப்ட்டா சரியாயிடும்.”
“நீங்க போய் அவளுக்கு சாப்பிட ஏதும் கொண்டுவாங்க.”
“நீங்க இருங்கப்பா நா எடுத்துட்டு வறேன் என கிருஷ்ணா சமையலறைக்குச் செல்ல, “முதல்ல நீ வாஷ்ரூம் போய்ட்டு வா, ஏங்க, என் போன எடுத்துட்டு வாங்க.”
அவரையும் சேர்த்து அனுப்பியவர்,
எப்போல இருந்து வலிக்குது?
“ஈவினிங்ல இருந்தே பெயின் இருக்கும்மா.”
“சரி ஒண்ணுமில்ல முதல்ல போய்ட்டு வா.”அவள் குளியலறையில் இருந்து வெளியே வரும்வரை இருந்து அவள் முகம் பார்க்க வெளியில் வந்தவள் அன்னையை அணைத்து, “ம்மி பயமாயிருக்கு.”
“அதெல்லாம் ஒன்னில்ல,என் ஐரா போல்ட் கேர்ள் தானே. அவள் நெற்றியில் இதழ் ஒற்றியவர்,”இப்டி இரு நான் போய் அப்பாட்ட சொல்லிட்டு வரேன்.”
“நோ ம்மி. இங்கேயே இரேன்.”
அவள் சுமித்ராவை அணைத்திருந்த விதத்தை பார்த்த நந்தன், “என்னாச்சு சுமி?”
அவரும் அருகே வர அவரையும் சேர்த்தே அணைத்துக்கொண்டாள்.
“ஹேய் என்னா நடக்குது இங்க?’அவர்களைக் கண்டவன் ‘நானும் நானும்’ என அவனும் அணைத்துக்கொண்டான்.
மாடி வழியே இவர்களின் சத்தத்தில் உள்ளே வந்த அகில் இவர்களை பார்த்து,
சற்றே பதற்றமாய்,” என்னாச்சு ஏன் இப்டி இருக்கீங்க?”
அவன் வர இவர்களில் இருந்து பிரிந்து அவனை அணைத்துக் கொண்டாள் ஐரா.
“ஹேய் என்னாச்சு?” கண்கள் கலங்க நின்றிருந்தவளை அணைத்து தலை கோதிக்கொண்டே கேட்டான். “அதெல்லாம் ஒன்னுல்ல டா. வயிறு வலியாம்.” சுமித்ரா கூற, ஐராவின் கட்டில் அருகே உறங்கியிருந்த ஸ்நோவியை கண்டவன், ஐராவோடே நகர்ந்து அதை தொட்டுப்பார்க்க அதன் உயிர் பிரிந்திருந்தது.
அத்தனை மிருதுவாய்இருக்கும் ஓர் உயிர் கல்லாய் இருந்தது. அதன் இறப்போ சுமித்ராவிற்கு உள்ளுக்குள் அச்சதைக் கொடுக்க, “என்னங்க இப்டி ஆகிபோச்சு?”
“அவ மேல பட்ட த்ரிஷ்டி மொத்தமும் அது மேல போய்டுச்சு. எது நடந்தாலுமே அதுல நலம் நிறையா இருக்கும். அதை நினச்சு வருத்தப்படாத, பொண்ணுக்கு என்ன பண்ணனும் அத பாரு.நீயும் அழுது அவளை இன்னும் கஷ்டப்படுத்தாத. காணோம்னே எத்தனை ஆர்ப்பாட்டம். இப்போ என்ன பன்வாளோ.”
“முதல்ல ரம்யாக்கு கால் பண்ணி சொல்லு.”
அதன் பின் அவர்களும் வர ஐராவின் அழுகை நின்ற பாடில்லை, அகில் மடியில் உறங்கவைத்து கட்டிலில் அமர்ந்திருந்தான்.
அவர்களை பார்ப்பதும், யோசிப்பதுமாக சுமித்ரா இருக்க,”என்ன சுமி?”
“இல்லக்கா அகி கூட இருக்கா, பரவால்லயா?”
“இருக்கட்டும் டா. அப்டில்லாம் ஏதும் இல்ல. அவனை விட உரிமை யாருக்கு.”
“அதில்லக்கா தீட்டு.”
“சுமி, என்ன நீ பழைய மனுஷங்க போல. நாமலே இப்டி பேசுனா எப்டி. நீ போய் தூங்கி எழுந்துக்கோ. காலைல எதுன்னாலும் பார்த்துக்கலாம்.”
“நந்தா நான் காலைல வரேன். கிருஷ்ணா எதுன்னா எனக்கு கால் பண்ணு. அனன்யா நல்லா தூங்குறா அதான் எழுப்பல. எழுததும் அனுப்பிடறேன்.”
“சரித்த.”
இப்படியே ஒன்றோடு ஒன்று பிணைந்த உறவாய் அகிப்போயிருந்தனர் அனைவருக்கும்.
அதீதங்கள், அன்புகள் எங்கே மிகைக்கின்றதோ அங்கே வலிகளை மிகையாய் பரிசளிக்கும் என்பது அன்பின் இயல்பு தானே.
இவர்களுக்கும் நடக்காமலா போயிருக்கும்…
பார்க்கலாம்…