அழகிய தமிழ் மகள் 19
கயல்விழி சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆதித்.
“இப்ப சொல்லு டா? அவளா டா கோழை?? அவளா பயந்தாங்கோலி.? அவளா சுயநலவாதி??” என்று ஆதித் சட்டை கலரை பிடித்து உலுக்கியவள். “எல்லாம் எங்க தப்பு டா, சரியா விசாரிக்காம அந்த உதய்யை நம்பி சமி வாழ்க்கையையே கெடுத்துட்டோம்” என்றவள் முகத்தை மூடி கதறி அழ..
“இல்ல கயல்.. இல்ல. இது முழுக்க எங்க தப்புதான், பரிதிமாமா எங்களை நம்பி சாம்மோட கல்யாண பொறுப்பை எங்ககிட்ட கொடுத்தாரு. எல்லாம் எங்ளால தான். நாங்க தான் சாம்மை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சோம்.. எல்லா எங்க தப்பு தான்” என்று வினய் குற்றவுணர்வில் புலம்ப, “நாங்க தான் சரியா விசாரிக்காம இப்டி பண்ணிட்டோம். போலிஸ்காரன இருந்து என்ன பிரயோஜனம். என் தங்கச்சி வாழ்க்கையை என்னால காப்பாத்த முடியலையே” என்று ராம் ஒருபுறம் கதற
“அடச்சே போதும் நிறுத்துங்க உங்க பொலம்பலை” என்று யுக்தா போட்ட சத்தத்தில் ராமும், வினய்யும் வாய் மூடிக்கொள்ள.. யுக்தா கோவமாக இருவர் அருகில் வந்தவள்.. “இப்ப என்ன வந்துச்சுன்னு ரெண்டு பேரும் இப்படி பொலம்பிட்டு இருக்கீங்க.. அது நடந்து ரெண்டு வருஷம் ஓடி போச்சு. இப்பவும் அதே புலம்பல் தானா?? ஹலோ ஏசிபி சார் நீங்க போலிஸ்னா அப்ப நா யாரு.?? ஒட்டகத்துக்கு புல்லுபுடிங்கி போட்டுட்டு இருந்தேனா, தோ நிக்கிறாரே கமிஷ்னர் இவரு அதே ஒட்டகத்துக்கு ஆயா வேலை பாத்தாரா.?? சும்மா பொலம்பிட்டு.. அந்த கேஸ்காகவே வந்த என்னாலயே கடைசிவரை அவனை பத்தி கண்டுபுடிக்க முடியல.. கமிஷனர்” என்று பரதனை கை காட்டியவள் “இவருக்கும் கூட தான் தெரியல.. இதுல நீங்க ரெண்டு பேர் என்ன பண்ணமுடியும்.. சிலசமயம் போலிஸ்சவிட திருடன் உஷாரா தான் இருக்கான் அதுக்கு என்ன பண்ணமுடியும்.. நடந்தது நடந்துடுச்சு அதவிட்டு தள்ளிட்டு அடுத்த வேலைய பாருங்க.. சும்மா எப்பபாரு எல்லாம் என்னால தான் ஆச்சு, யுக்தா வாழ்க மண்ணபோச்சுன்னு டைய்லாக் பேசிட்டு இருந்தீங்க நா கெளம்பி போய்டே இருப்பேன்” என்றவள் நகர..
“ஐம் சாரி யுக்தா.. நா தெரியாம உங்களை பத்தி தப்ப பேசிட்டேன்.. ரியாலி ஐம் வெரி சாரி” என்ற ஆதித்தை நேராக பார்த்த யுக்தா.. உங்களுக்கு சரியா நடிக்க வர்ல ஆதித்..”
“என்ன கமிஷனர் சார் உங்க புள்ளைக்கு சரியா டிரெய்னிங் கொடுக்கல போல.. என்ன நீ போய் அவகிட்ட இப்படி எல்லாம் பேசு, உடனே அவளுக்கு கோவம் வந்து மறுபடி போலிஸ்ல ஜாயின் பண்ணிடுவன்னு சொல்லி அனுப்பினீங்களா?? வேஸ்ட் ஆங்கிள், சிம்ப்ளி வேஸ்ட்.. நா மறுபடி யூனிபார்ம் போடமாட்டேன்” என்று உறுதியாக சொல்லிவிட்டு செல்ல..
பரதனை பாவமாக பார்த்த ஆதித், “அவ முதல்லயே நா நடிக்கிறேன்னு கண்டுபுடிச்சிட்ட போல சித்தப்பு” என்று உச்சு கொட்ட.. “அவ கண்டு புடிச்சிடுவன்னு எனக்கு தெரியும் டா.. அவ வேலையை தான் விட்ட.. மூளைய இல்ல. அவ மூளை இப்பவும் ஒரு சிபிஐயோட மூளை தான்.. அவகிட்ட மோத உனக்கு இன்னும் பயிற்சி வேணும் டா மகனே” என்றவர் ஆதித் தோளை தட்டிகொடுத்துவிட்டு சென்றார்..
“அப்ப ப்ரணவ் யாரு கயல்?? என்று ஆதித் கேட்க.. கயல்விழி இழுத்து மூச்சு விட்டவள்.. “ப்ரணவ் உதய்யோட பையன் டா” என்று சொல்ல.. ஆதித் அதிர்ந்து நின்றவன்.. “என்னது…??? உதய் பையனஆஆஆ?? என்ன சொல்ற கயல்”
கயல்விழி ப்ரணவ் பற்றிச் சொன்னதைக் கேட்டு ஆதிகத்திற்குப் பேச்சே வரவில்லை.. ‘நீ என்ன சொல்ற கயல்? ப்ரணவ் உதய்யோட பையனா,?? நிஜமாவ??”
“ஆமா ஆதி! உதய்க்கு நம்ம சமி கூட கல்யாணம் ஆகுறதுக்கு முந்தியே இன்னொரு பொண்ணோட தொடர்பு இருந்தீருக்கு. அந்தப் பொண்ணோட பையன் தான் ப்ரணவ். உதய் பத்திய எல்லாம் உண்மையும் தெரிஞ்ச அந்தப் பொண்ணு ப்ரணவ் கண்ணு முன்னாலயே ஓடுற பாஸ் முன்னாடி விழுந்துடுச்சு, அதைப் பார்த்த அதிர்ச்சியில் தான் குழந்தைக்குப் பேசுற சக்தி போய்டுச்சு.. நானும், மதுவும் டெலிவரிக்கு ஹாஸ்பிடல் ல இருக்கும்போது தான் இது நடந்திருக்கு, அந்தப் பொண்ணையும் நாங்கள் இருந்த ஹாஸ்பிடலில் தான் அட்டமிட் பண்ணாங்க, ஜீவா தான் அந்தப் பொண்ணுக்கு டீரிட்மெண்ட கொடுத்தான். அப்ப அவ வச்சிருந்த பைல்ல இருந்த சில ஃபோட்டோஸ்சும், அவ டைரியும் படிச்சு தா ஜீவாக்கு அவ யாருன்னு தெரிஞ்சுது. அந்தப் பொண்ணு சாகுறா நேரத்தில் ஜீவா யாருன்னு தெரியாம, அவன்கிட்ட சமிய பத்தி சொல்லி, அவளைப் பாக்கணும்னு சொல்லி இருக்க. அந்த நேரம் சமியும் ஹாஸ்பிடல்ல தான் இருந்தா, ஜீவா அந்தப் பொண்ணைப் பத்தி சமிகிட்ட சொல்லி அவளைப் பாக்க கூட்டிப் போனான்..”
சாகும் நிலையில் இருந்த ப்ரணவ்வின் அம்மா.. யுக்தாவிடம் ப்ரணவ்வை ஒப்படத்து.. “எனக்கு உங்ககிட்ட இத கேட்க எந்த உரிமையும் இல்லை யுக்தா, ஆன எனக்கு உங்ளை விட்ட வேற யாரும் இல்ல. முடிஞ்ச இவனை ஒரு ஆசிரமத்தில் விட்டு உங்க கண்பார்வையில் வச்சிக்கோங்க ப்ளீஸ், ஒருநாளும் இவன் உதய் மாதிரி ஆகிட கூடாது, இவன் ஒரு நல்லா மனுஷனா வளரணும்.. அதுக்காக இவனை உங்களை வளர்க்க சொல்லல, அந்த தகுதி எனக்கில்ல. நா செத்த பிறகு என்னோட ப்ரணவ் நல்லபடி இருப்பன்றா நம்பிக்கையை எனக்குக் குடுங்க யுக்தா ப்ளீஸ்.. இது என்னோட கடைசி ஆசை யுக்தா ப்ளீஸ்” என்று அவள் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்க, ஜீவா ஒரு ஸ்டாம் பேப்பரை யுக்தா கையில் கொடுத்தான். அதில் ப்ரணவ் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமை யுக்தாவிற்கு மட்டுமே இருக்கிறது என்று எழுதி அதில் அந்தப் பெண் கையெழுத்திட்டிருந்தாள்.. அதைப் படித்த யுக்தா அவள் அருகிலிருந்த குட்டி சோஃபாவில் தூங்கிக்கொண்டிருந்த ப்ரணவை பார்த்தவள்.. ஒரு நிமிடம் கண்மூடி திறந்து, “இனி அவன் என்னோட பையன்.. ப்ரணவ் சன் ஆப் சம்யுக்தா போதுமா” என்று அந்தப் பெண்ணின் கையில் தன் கைவைத்துச் சொல்ல.. ப்ரணவ் தாயின் உயிர் யுக்தாவை நன்றியோடு பார்த்தபடியோ நிம்மதியாக உடலை விட்டுச் சென்றது..
ஆதித் தற்சமயம் வெற்றி, கயல்விழியோடு, யுக்தா பிளாட்க்கு அடுத்தப் பிளாட்டில் தன் தங்கியிருந்தான்.. அவனுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் அமைதியாகப் படுத்திருந்தவன் மனதிலும், நினைவிலும் யுக்தா மட்டுமே வியாபித்து நின்றாள். அதுவும் ப்ரணவ் உதய்யின் குழந்தை என்று தெரிந்த பிறகு, அவனுக்கு இதுவரை யுக்தா மேல் இருந்த மரியாதை பன்மடங்காகப் பெருகியது.. அவளைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தவன் மனதில் அவள் முகமே வந்தவந்துபோக மரியாதையைத் தாண்டி ஏதோ ஒரு ஈர்ப்பு யுக்தா மேல் உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை.. இது என்ன உணர்வு என்று குழம்பித் தவித்தவன். பின் அந்த உணர்வு தந்த சுகத்தில் அப்படியே உறங்கி விட்டான்.. அடுத்தடுத்த நாளில் ஆதித் குழப்பத்துக்கான விடையை அவன் மனது அவனுக்கு உரைக்க, ஆதித்தாக இருந்தவன், யுக்தாவை காதலிக்கும் காதலனாக மாறினான்..
யுக்தா வந்த செய்தி கேட்டு சிவகாமி பாட்டி உடனே சென்னைக்கு ஓடி வந்தவர். யுக்தாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஏன் அவள் முகத்தைப் பார்ப்பதை கூட அவர் தவிர்த்து விட.. யுக்தாவிற்குத் தான் அய்யோ என்றிருந்தது, “பாட்டி ப்ளீஸ் என்கிட்ட பேசு பாட்டி, அதான் நா திரும்பி வந்துட்டேன் இல்ல..” என்று கண்களாலேயே கொஞ்ச.. பாட்டி மசிவதாய் இல்லை.. யுக்தா முகம் வாடி இருப்பதைப் பார்க்கப் பொறுக்காத சாருமதி, “பாவம் அத்தை அவ, நீங்க ஒரு வார்த்தை அவகிட்ட பேசமாட்டீங்களன்னு உங்க முகத்தையே பாத்திட்டு இருக்க. ஒரு வார்த்தை அவகிட்ட பேசுங்க அத்தை” என்ற சாருமதியை தீயாக முறைத்த சிவகாமி “ஏன்டி பேசணும்? நா ஏன் அவகிட்ட பேசணும்? நம்ம யாரும் வேணாம்னு தானா, கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டு நமக்கென்னன்னு கெளம்பி போய்டா, அவகிட்ட நா ஏன்டி பேசணும்.. பாவம் டி என் பேரனுகளும், பேத்தியும், இவ திரும்பி வந்து, இவளுக்கு ஒரு நல்லா வாழ்க்கை அமஞ்ச பிறகு தான் எங்களுக்கு வாழ்க்கைன்னு இன்னும் தனித்தனிய கிடக்குதுங்க, இதெல்லாம் நல்லா வா இருக்கு, சொல்லுடி நல்லா இருக்கா.??? எல்லா யாராலா, இவ மட்டும் இங்க இருந்திருந்த இதெல்லாம் நடந்திருக்குமா??” என்று கத்தி சிவகாமிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தவித்த யுக்தா… சிவகாமி அருகில் சென்றவள். “சாரி பாட்டி.. அப்ப இருந்த சூழ்நிலையில் என்னை நானே தேத்திக்க எனக்குத் தனிமை தேவைப்பட்டுச்சு. உங்க கிட்ட சொன்னா நீங்க விடமாட்டீங்க. அதான் சொல்லாம போய்டேன். இப்ப தான் நா திரும்பி வந்துட்டேனே, என்கிட்ட பேசு பாட்டி” என்று சிவகாமியின் தடாயைப் பிடித்து யுக்தா கெஞ்ச, சிவகாமி அவளைத் திரும்பி பார்க்காமலே, “இந்தாடி சாருமதி, இவகிட்ட சொல்லு, நா சொல்றா ரெண்டு விஷயத்தை இவ கேக்றதா இருந்தா தான் நா இவகிட்ட பேசுவேன். இல்லாட்டி இந்த ஜென்மத்துல இவளுக்கும் எனக்கும் பேச்சுவார்த்தை இல்ல, அவளுக்கு இந்த டீல் ஓகேவான்னு கேட்டு சொல்லு.??”
“என் செய்யணும் சொல்லு பாட்டி” என்ற யுக்தாவை பார்த்த சிவகாமி பாட்டி, “முதல்ல இவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும், ரெண்டு இவ மறுபடியும் போலிஸ் வேலையில சேரணும்” என்று அழுத்தமாகச் சொல்ல.. யுக்தா ஒருநிமிடம் பாட்டியை ஆழமாகப் பார்த்தவள். “இல்லை” என்று தலையை மட்டும் இடவலமாக ஆட்டிவிட்டு அமைதியாக எழுந்து சென்று விட.. “போடி போ நீ எப்டி என்கிட்ட இருந்து தப்பிக்குறேன்னு நானும் பாக்குறேன்.. நீ என்னைக்கு இங்க இருந்து போனீயோ அப்பவே நா எடுத்த முடிவு டி இது.. உன் பேருக்கு பின்னாடி அந்த நாசமா போனாவன் பேரு இருக்க வரை, நீ யூனிபார்ம் போடா மாட்டா, ஒரு குற்றவாளியோட பொண்டாட்டின்ற நெனப்பு உன் மனசுல இருந்து அழிஞ்ச தான் நீ பழையபடி மாறுவா!! உனக்கு அந்தப் போலிஸ் வேலை எவ்வளவு புடிக்கும்னு எனக்குத் தெரியும் டி, மறுபடியும் அந்த உடுப்பை உன்னைப் போடா வைக்காம நா ஒயா மாட்டேன்! நா கொடுத்த வளையலை நீ என்கிட்டயே திருப்பிக் குடுத்துட்ட இல்ல.! உனக்குக் கல்யாணம் பண்ணி உன்னோட வளைகாப்புக்கு அதே வளையல நா உனக்குப் போடால என் பேரு சிவகாமி இல்ல டி” என்று சபதமிட்டவர் அங்கிருந்து நகர, இவ்வளவு நேரம் அங்கு நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதித், சிவகாமி அருகில் வந்தவன். “நீங்க சொல்றது நியாயம் தான் பாட்டி, ஆனா அவளும் பாவம் தானா, இப்ப தானா வீட்டுக்குஞ திரும்பி வந்திருக்கா, கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி, அவளுக்குக் கொஞ்சம் டைம் குடுங்களேன்” என்றவனை ஏறஇறங்க பார்த்த சிவகாமி. “நீ யார் தம்பி?” என்று கேட்க. அவன் பரதனின் அண்ணன் மகன் என்றும் மற்றும் கூர்கில் யுக்தா, ப்ரணவ்வுடன் பழகியது அனைத்தையும் சொல்ல. சிவகாமி மீண்டும் ஆதித்தை இன்னும் ஆழமாகப் பார்த்தவர். “ராமும், பரதனும் தான் உன்னைக் கூர்க் அனுப்பி வச்சாங்களா” என்று கேட்க. ஆதித் “ஆமாம்” என்று தலையாட்டினான்.. “ம்ம்ம்” என்று இழுத்து மூச்சு விட்டவர். “ராமை பாத்த என்னை வந்து பாக்க சொல்லுப்பா” என்றவர் தன் அறைக்குச் சென்று விட. ஆதித்க்கு ஒன்னும் புரியவில்லை..
சிவகாமி ராமை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. “சொல்லு ராம் இவ்ளோ சின்ன வேலைக்கு ஆதி மாதிரி பெரிய ஆபீஸரை நீயும், பரதன் தம்பியும் எதுக்கு அனுப்புனீங்க?? அவனை வேலைக்காக அனுப்புனீங்களா இல்ல. அந்த ராங்கியை அவன் பாக்கணும்னு அனுப்பி வச்சிங்களா??”
“பாட்டி” என்று ராம் இழுக்க?? “எதுவாக இருந்தாலும் சொல்லு ராம்” என்று சிவகாமி சொல்ல..
“அந்த வேலைக்கு யாரை வேணும்னாலும் அனுப்பி இருக்கலாம் தான் பாட்டி, ஆனா பரதன் மாமா தான், ஆதியை அனுப்ப சொன்னாரு, அதோட பிரபுகிட்ட சொல்லி சாம்கிட்ட ஆதிய ஒரு பார்வை பாத்துக்கவும் சொல்லியிருந்தாரு, முதல்ல எனக்கு அவர் ப்ளான் புரியல, அப்றம் தான் தெரிஞ்சிது, ஆதிய வச்சு அவர் சாம் மை மறுபடி போலிஸ்ல ஜாயின் பண்ண வைக்கத் தான் இப்டி பண்ணருன்னு. இந்தக் கேஸ்ல எதும் பிரச்சனை வந்த எனக்காக, பரதன் மாமாக்காக நம்ம சாம் கண்டிப்பா பழைய ஃபார்ம்க்கு இறங்கி வந்து ஆதிக்கு ஹெல்ப் பண்ணுவான்னு அவர் நெனச்சாரு? நானும் தான்!! ஆனா இப்பவரை ஒன்னு நடக்கல, ஏதோ அவ வீட்டுக்கு திரும்பி வந்தவரை சந்தோஷம் தான் பாட்டி” என்று ராம் சலித்துக் கொள்ள..”
“நீ நெனச்சது நடக்கல ராம், ஆனா பரதன் நெனச்சது நடந்திருக்கு” என்று சொல்லி அர்த்தமாகச் சிரிக்க.!!
“என் பாட்டி சொல்றீங்க எனக்கு ஒன்னு புரியல??”
“சீக்கிரம் எல்லாம் புரியும் டா, நீ போ டா” என்றவர் தன் ஃபோனை எடுத்து பரதனுக்கு டயல் செய்தார்..
இரண்டு நாள் கழித்து யுக்தா மெதுவாக விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் பற்றிக் கேட்க,
சிவகாமி, “வினய், ஜீவா கல்யாணம் தான் சிம்பிளா நடந்திடுச்சு, விஷ்ணு கல்யாணத்தையாவது நல்லா பெருசா, சடங்கு, சம்பிரதாயப்படி செய்யணும்னு நா நெனக்குறேன்! ஆனா அதுதான் முடியாதே” என்று சொல்ல, உடனே யுக்தா, “ஏன் முடியாது? நம்ம எல்லாரும் தான் இருக்கோமே? நல்லா கிரண்டா கல்யாணத்தைச் செய்ய மாட்டோமா,? அதுல என்ன பிரச்சனை.??”
“பிரச்சனையே நீதான் டி” என்ற சிவகாமி வார்த்தையில் குழம்பியவள். “நா… நா… என்னால என்ன பிரச்சனை வரப்போகுது பாட்டி” என்று கேட்க.??
“இந்தக் கல்யாணதுல எல்லா சடங்கையும் நீதான் செய்யணும்னு விஷ்ணுவும், ராஷ்மியும் ஆசப்பாடுறாங்க அதுதான் பிரச்சனை??”
யுக்தா திரும்பி விஷ்ணுவை பார்க்க, விஷ்ணு திருதிருவென முழித்தவன் பாட்டியை பார்க்க, பாட்டி கண்ணாடித்துச் சிக்னல் செய்ய அதைப் புரிந்துகொண்டவன்.. “ஆ… ஆமா எங்க கல்யாணத்தில் எல்லாச் சடங்கையும் சாம் தான் செய்யணும்” என்று மண்டையை ஆட்டியவன், “ஆமா தானா ராஷ்மி” என்று அவளையும் துணைக்கு அழைக்க, ராஷ்மியும் பாட்டி ஏதோ ப்ளான் பண்ணீ இருக்காங்க என்று புரிந்துகொண்டு “ஆமா யுகி இது நானும், விஷ்ணுவும் சேர்ந்து செஞ்ச முடிவுதான்” என்க. யுக்தாவிற்குப் புரிந்து விட்டது இது எதற்கான திட்டமென்று.. அவர்கள் குடும்பத்தில் கல்யாணத்திற்கு முந்தைய நாத்தனார் சடங்குகளைக் கல்யாணமான தம்பதிகள் சேர்த்துச் செய்வது தான் அவர்கள் வழக்கம்.. அதை வைத்து யுக்தாவை மறுகல்யாணத்திற்குச் சம்மதிக்க வைக்கச் சிவகாமி திட்டம் போட்டிருந்தார்.. அது புரிந்த யுக்தா சிவகாமியை தீயாய் முறைத்தவள்.. “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை, நிஷா இல்ல ஜானுவை வச்சுச் சடங்கை எல்லாம் செய்யலாம். நீங்க கல்யாணத்துக்கு நாளை பாருங்க” என்று அழுத்தமாகச் சொல்ல?!
“மதி அவகிட்ட சொல்லு,! இங்க எல்லாம் அவ இஷ்டத்துக்கு மட்டுமே நடக்கதுன்னு, விஷ்ணும், ராஷ்மியும் ஆசப்பாடுறாங்க. முடிஞ்ச அதைச் செய்யச் சொல்லு, இல்லாட்டி அவளா வாயமூடிட்டுப் போகச் சொல்லு.. யாருக்குக் கல்யாணம் நடந்தா என்ன, நடக்காட்டி இவளுக்கு என்ன??.. இவளுக்குத் தான் நம்ம யாரும் வேணாமே” என்றவர் கோவமாக அங்கிருந்து செல்ல.!! யுக்தாவும் விறுவிறுவென அங்கிருந்து வெளியேறினாள்..
ஆதித் மெதுவாக சிவகாமி அருகில் வர, ஆதித்தை நிமிர்ந்து பார்த்தவர்.. “என்ன டா பேராண்டி பாட்டி ஆக்டிங் எப்டி” என்று கேட்க.. “ம்ம்ம் செம்ம பாட்டி தூல் கெளப்பிட்டிங்க” என்று hi-fi அடித்துக்கொண்டனார்.. “ஆனாலும் பாட்டி நீங்க என்னோட திமிரழகியை ரொம்ப தான் படுத்துறீங்க. பாவம் அவ” என்று முகத்தை சோகமாக வைத்துக் கொள்ள..
“யாரு அவளா பாவம்? போடா நீ ஒருத்தன். அவயெல்லாம் லேசுபட்ட ஆள் கிடையாது. நம்ம பார்க்குற பார்வையை வைச்சே நம்ப மனசுல இருக்குறதை கண்டுபுடிச்சிடுவா, அவளோட ஒரே வீக்னஸ் இந்த குடும்பமும், அவ ப்ரண்ட்ஸ்சும் தான். அதனால தான் அதை வச்சு நான் ப்ளான் பண்றேன்.. விஷ்ணு, ராஷ்மி கல்யாணத்தை வச்சே நா அவளை ஒருவழி பண்றேன் பாரு..”
“ஏன் பாட்டி யுக்தா அடுத்தவாங்க பார்வையை வச்சே அவங்க மனசை புரிஞ்சுக்குவன்னு சொல்றீங்களே, அப்போ ஏன் பாட்டி நா அவளை விரும்புற விஷயத்தை மட்டும் அவ இன்னும் கண்டுபுடிக்காம இருக்க.??” என்ற ஆதித்தை சிரிப்போடு பார்த்த பாட்டி, “அவ கண்டுக்காம இருக்கான்னு வேணும்னா சொல்லு, ஆனா கண்டுபுடிக்கலனன்னு சொல்லாத. உன்னை முதல் தடவை பார்த்த அன்னைக்கு நீ அவளுக்காக என்கிட்ட பரிஞ்சு பேசுனீயே! அப்ப உன் கண்ணுல அவமேல உனக்கு இருக்க காதல் இந்த வயசான கெழவி எனக்கே தெரிஞ்சுது, அப்டி இருக்கப்போ அவ போலிஸ்காரி டா அவளுக்கு புரிஞ்சிருக்காத என்ன?? எல்லாம் அவளுக்கு தெரியும் ஆனா கண்டுக்க மாட்டா.. உன்னோட சித்தப்பா அவளைப் பத்தியும், உன்னைப் பத்தியும் நல்லா தெரிஞ்சு தான் கூர்க்க்கு உன்னை அனுப்பிச்சு இருக்காரு, அவருக்கு தெரிஞ்சிருக்கு உனக்கு சமியை புடிக்கும்னு, அதனால்தான் உன்னை அவ இருக்க இடத்துக்கு அனுப்பி வச்சிருக்காரு” என்று நேற்று பரதனிடம் தன்னிடம் சொன்ன விஷயங்களை ஆதித்திடம் கூறினார்..