அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 28

ஆதித் இருக்கும் மனநிலையில் அவன் கார் ஓட்டுவது சரியாக வராது என்று நினைத்த யுக்தா, “டேய்! காரை நா டிரைவ் பண்றேன். நீ என் லாப்டாப்ப ஓபன் பண்ணி அதுல ப்ரணவ்னு ஒரு போல்டர் இருக்கும். அதை ஓபன் பண்ணி டிரக்கரை கனெக்ட பண்ணு” என்றவள் காரை மின்னல் வேகத்தில் ஓட்ட,

 

“இல்ல யுகி… ப்ரணவ் வாட்ச்ல நீ வச்சிருந்த டிரக்கிங் டிவைஸ் டிஸ்கனெக்ட் ஆகிடுச்சு. நா டிரை பண்ணி பாத்துட்டேன்.. அந்த திருட்டு ராஸ்கல்ஸ் வாட்ச்ச கழட்டி வீசிட்டாணுங்க போல… இப்ப என்ன பண்றது?” என்று தவிக்க..

 

யுக்தா அசால்டாக ஆதியை பார்த்தவள், “வாட்ச்சை கழட்டி தூக்கிப் போட முடியும் ஆதி. ஆனா, ப்ரணவ் வாய்ல இருக்க பல்லை அவனுங்களால புடுங்க முடியாதில்ல. டிரக்கர் ப்ரணவ் பல்லுல இருக்கு… ஒரு தடவ ப்ரணவ் கீழ விழுந்து ஒரு பல் உடஞ்சு போச்சு. புதுப் பல் செட் பண்ணும் போது அதுல ஒரு சின்ன டிரக்கிங்க டிவைஸ் வச்சு செட் பண்ணிட்டேன். அது என்னோட லாப்டாப்ல கனெக்ட் ஆகி இருக்கு, நீ லாப்டாப்ல லாகின் பண்ணிப் பாரு” என்க… ஆதி வேக வேகமாக லாகின் செய்ய டிரக்கர் கரெக்டாக ப்ரணவ் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தது… 

 

ராம், நிஷாவுக்கு தகவல் கொடுத்து விட்டு, அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு இருந்தனர் ஆதியும், யுக்தாவும்…

 

விடியற்காலை மூன்று மணி.. யுக்தாவின் மொத்த குடும்பமும் ஆப்ரேஷன் தியேட்டர் முன்பு கண்ணீர் வழியும் விழிகளோடு உட்கார்ந்திருக்க. ஜீவா ஆப்ரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்தான். அவனை சூழ்ந்து கொண்டது முழுக் குடும்பமும், அவன் சொல்லப்போகும் ஒரு வார்த்தைக்காக அனைவரும் தவிப்போடு அவனையே பார்க்க, கண்ணில் நீர் வடிய சிரித்த முகத்தோடு தன் கட்டைவிரலை அவன் உயர்த்தி காட்டிய பின் தான் அங்கிருந்தவர்களுக்கு போன மூச்சு திரும்பி உடலுக்குள் வந்தது.

 

“சாம் எங்க பாட்டி? என்ற ஜீவாக்கு பாட்டி கையை நீட்டிக் காட்ட… தூரமாக அழுது அழுது ஓய்ந்த ப்ரணவ் அம்மா மடியில் தலை வைத்து உறங்கி இருக்க, ப்ரணவ் தலையில் கை வைத்து தடவிபடி சுவற்றில் சாய்ந்த கண்கள் மூடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் யுக்தா.

 

ப்ரணவ்வை மெதுவாக அவள் மடியில் இருந்து தூக்கிக் கொண்ட ஜீவா, “ஓய் எரும… உம் புருஷனோட‌ கெட்ட நேரம், காலம் முழுக்க உன் கூட குப்பை கொட்டணும்னு இருக்கு போல… பொழச்சிக்கிட்டான்” என்ற ஜீவாவின் குரலில் சட்டென கண் திறந்தவள். வேகமாக எழுந்து ஜீவாவை இறுக்கி அணைத்து அவன் முகம் பார்த்து கண்களை மூடித் திறந்தவள். அங்கிருந்து ஆப்ரேஷன் தியேட்டர் நோக்கி ஓட, “ஏய்! ஏய் சாம்… நீ உள்ள போகக்கூடாது… ஒரு ஒன் ஆவர் வெய்ட் பண்ணு, நார்மல் ரூம்க்கு ஷிஃப்ட் பண்தும் போய் பாரு” என்க.. கண்ணாடி கதவு வழியே ஆதி முகம் தெரிகிறதா என்று யுக்தா எட்டி எட்டி பார்க்க.. ம்ஹூம் வெள்ளை நிற கர்டென் தான் அவள் கண்ணில் பட்டது.

 

இழுத்து பெரு மூச்சு விட்ட யுக்தா அப்போது அங்கு வந்த நிஷாவை பார்க்க. நிஷா தலையை மெதுவாக ஆட்ட, யுக்தா கண்கள் சிவந்தவள், “பாட்டி நா வர்ர வரைக்கும் எம் பையனையும், உள்ள இருக்க எம் புருஷனையும் பாத்துக்கோ. எனக்கு முக்கியமான வேலை இருக்கு” என்று விறுவிறு என்று செல்லும் யுக்தாவிடம் அவள் எங்கு செல்கிறாள் என்று கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. அவள் எங்கு செல்கிறாள் என்றது அனைவரும் அறிந்தது தானே…

 

ஒரு மணிநேரம் ஒரு நொடியாக கரைய.. ஆதித் கண் விழித்துப் பாக்கும் போது அவன் கண்ணின் மணிகளில் விழுந்தாள் ப்ரணவை கையில் ஏந்தியபடி அவன் கண்மணி..

 

ஆதி கண் விழித்ததும் ப்ரணவ்வை தான் தேடுவான் என்று தெரிந்து குழந்தையை உள்ளே அழைத்து வந்திருந்தாள் யுக்தா.‌ தலையிலும், வலது தோள்பட்டையிலும் பெரிய பெரிய கட்டுப்போட்டு படுத்துக் கிடந்தவனை பார்த்து யுக்தாவிற்கு இதயம் அடைந்தது. ஆதி கண்களால் ஏதோ பேச வர, “ப்ரணவ்வுக்கு ஒன்னும் இல்ல” என்றவள் சற்று பொறுத்து, “எனக்கும் தான்” என்று ஆதியை இமைக்காமல் பார்த்தவள். திரும்பி குழந்தையை பார்க்க, ப்ரணவ் ஆதித் கன்னத்தில் முத்தமிட்டவன், “அப்பா” என்றழைக்க ஆதித்தின் மொத்த வலியும் அந்த ஒற்றை முத்தத்திலும், அவன் “அப்பா” என்று அழைத்ததிலும் மறைந்து தேய்ந்து விட இதழ்கள் இன்பத்தில் லேசாக வளைத்தது.

 

“சற்று நேரம் முன்”

 

ப்ரணவ் இருக்கும் இடம் தெரிந்து அங்கு சென்ற யுக்தாவும், ஆதித்தும் அந்த வீட்டை ஒரு முறை சுற்றி பார்த்தவர்கள் மெதுவாக அந்த வீட்டிற்குள் நுழைந்து ஃபோன் டார்ச் வெளிச்சத்தில் ப்ரணவ்வை தேட.. குழந்தை எங்கும் தென்படவில்லை.

 

“யுகி டிராக்கர் இந்த லொகேஷன் தான் காட்டுது. ஆனா, ப்ரணவ் இங்க இல்லயோ? ஒருவேளை பயத்துல எங்கயாது ஒளிஞ்சுட்டு இருக்கானோ??”

 

“ப்ரணவ் ரொம்ப தைரியசாலி ஆதி.. அதோட புத்திசாலியும் கூட. அவனுக்கு நம்ம அவனை தேடி வருவோம்னு நல்லா தெரியும். நீ ரொம்ப யோசிக்காதா. நம்ம கீழ போய் தேடுவோம் வா” என்றவள் முன்னே செல்ல ஆதி அவளை தொடர்ந்தான். போகும் போது அங்கிருந்த அடியாள் ஒருவன் யுக்தாவை பார்த்துவிட்டு அவளை அடிக்க வர. ஆதி அவன் கையைப் பிடித்து இழுத்து முறுக்கி இன்னொரு கையால் அவன் வாயைப் பொத்தியவன். அவன் கழுத்து இறுக்கியபடி திரும்ப.. அவன் கழுத்து எலும்பு முறிந்து கீழே விழ, யுக்தா ஆதியை ஒருநிமிடம் மலைத்துப் பார்க்க… 

ஆதி புருவம் உயர்த்தி அவளை திமிராக பார்த்தவன், ‘எங்களுக்கும் இதெல்லாம் வரும்மில்ல’ என்பது போல் பார்க்க… யுக்தா அவனை முறைத்து விட்டு நகர. வந்து என்னை பிரியாணி போடு என்பது போல் சாவதற்கு இன்னொரு ஆடு யுக்தா முன்பு வர… அவன் தலைமுடியை பிடித்து இழுத்தவள். அப்படியே அவனை திரும்பி தன் தான் தோளில் போட்டு பின் பக்கம் இழுத்து அவன் குரல்வளையில் தன் முழங்கையால் ஒரு போடு போட. அவன் கதை ‘இட்ஸ் ஒவர்’ ஆனது. அதோ போல் வழியில் குறுக்க வந்த அனைவரையும் யுக்தாவும், ஆதியும் சத்தமே இல்லாமல் அவர்கள் சங்கதியை முடித்து வைக்க. கீழே ஏதோ பேசும் குரல் கேட்டு இருவரும் கீழே இறங்கி வர… அங்கு ப்ரணவ்வை ஒரு கையில் பிடித்து வைத்துக்கொண்டு இன்னொரு கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்தான் சேது.

 

ஆதித் எந்த கேஸ்க்காக கூர்க் சென்றானோ. அந்த போதைப் பொருள் கேஸ்சில் இறந்து போன குற்றவாளியின் தம்பி தான் இந்த சேது. அண்ணன் இறந்த பின் அந்த தொழிலை இவன் கையில் எடுக்க, ஆதித்தின் கழுகு பார்வையில் சிக்கிக் கொண்டான். அவன் கதையை முடிக்க ஆதித் நாள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்த சேது, ப்ரணவ்வை வைத்து ஆதியை அழிக்க திட்டமிட்டு குழந்தையை வைத்து ஆதியை கொல்ல பார்க்க. ஆதியும், யுக்தாவும் இவ்வளவு சீக்கிரம் இந்த இடத்த