அழகிய தமிழ் மகள் 9

அழகிய தமிழ் மகள் 9

 

வினய் பிஸ்னஸ் ப்ரண்ட் ஒருவரை பார்க்க பப்புக்குப் போயிருக்க.. அங்கு அவன் கண்ணில் விழுந்தாள் நிஷா..

முட்டி வரை இருந்த கருப்பு நிற

சிலிவ் லெஸ் கவுனில், அதிக மேக்கப்பில் இருந்தவள் தோளில் கை போட்டப்படி ஆடிக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.. நிஷாவும் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக அவனுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.. நிற்கமுடியாமல் தள்ளாடிய அந்த இளைஞனின் கால்களோ சொன்னது அவன் மூக்கு முட்ட குடித்திருக்கிறான் என்று.. நிஷா தோளில் கை போட்டப்படி ஆடிக்கொண்டிருந்தவன்.. அவள் இடுப்பை வளைத்து பிடித்து இழுத்து அவள் உதட்டில் முத்தம் கொடுக்க முயல. சுளீர் என்று கன்னத்தில் விழுந்த அடியில் கீழே விழுந்து கிடந்தான்..

 

முழுப் போதையில் இருந்தவன் எந்திரிக்க முடியாமல் தரையில் தவழ்ந்துகொண்டிருக்க.. அவன் முகத்திற்கு நேரகாகத் தன் ஆள்காட்டி விரல் நீட்டி “இன்னொரு முறை அவ மேல கைய வச்ச… கொன்னுடுவேன் ராஸ்கல்” என்று எச்சரித்த வினய், நிஷா கைபிடித்துத் தரதரவென்று இழுத்துச் செல்ல, நிஷா,” கைய விடுங்க…!? கைய விடுங்க” என்று கத்தியதை காதில் வாங்காது அவளைக் கார் பர்க்கிங்கிற்கு இழுத்துச் சென்றவன்.. அவன் கார் மேல் அவளை வேகமாகத் தள்ளிவிட, காரின் கதவு அவள் தலையில் மோதியதில் தலையைத் தடவியபடி வினய்யை நிமிர்ந்து பார்க்க.. அவனின் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது..

 

“அறிவிருக்காடி உனக்கு..?? ஏன்டி இங்க வந்த.. யாருடி அவன்..?? பப்ளிக் பிளேஸ் உனக்கு முத்தம் குடுக்கவரான்.. நீயும் அப்டியே மயங்கி நிக்குற.?? யாருடி அவன்” என்று அவள் தோளைபிடித்து உலுக்க..

 

அந்தப் பப்பில் போதைப் பொருள்கள் அதிகமாகப் புழங்குவதாக அவள் சேனலுக்குத் தகவல் வர, அதைபற்றித் தெரிந்துகொள்ள இங்கே வந்தவள்.. “அந்தப் பப் ஓனர் மகன் வாயைக் கிளறி அவனை வச்சு உண்மையைத் தெரிஞ்சிக்க அவனுடன் டான்ஸ் ஆட போக.. அந்தப் பன்னி முழுக்க குடிச்சிட்டு என்னைக் கிஸ் பண்ண வந்திடுச்சு.. இதுல இவர் வேற அத பாத்து தொலச்சிட்டாரு.. சும்மாவே இவருக்கு என்னை புடிக்காது.. இனி சொல்லவே வேணாம்.. உனக்கும் சாம்கும் இனி ஒன்னு இல்ல.. இனி எங்க குடுப்பத்துக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லைனு குதி குதின்னு குதிக்கப் போறாரு.. கடவுளே… ஏன் என்னை இப்டி சோதிக்கிற” என்று மனதிற்குள் புலம்பியவள்.. அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழம்பி நிற்க.. அவள் அமைதியாக இருந்ததில் இன்னு கடுப்பான வினய்..

 

“ஏய் உன்னை தன்டி கேக்குறேன்.. ஏன் டி இங்க வந்த..?? யார கேட்டு இங்க வந்த.?? அவன் கூட இழஞ்சிட்டு நிக்குற.. வாயத் தெறடி..??” என்று கத்த அப்போதும் நிஷா அமைதியாக இருக்கப் பொறுமை இழந்த வினய்..

 

“ஏய்!!. நா கேக்குறேன் நீ வாயமூடிட்டு இருந்த என்னாடி அர்த்தம்.. ஓஓஓ இப்ப புரியுது டி.. பணத்துக்காகத் தானே இங்க வந்த.?? சொல்லுடி.?? பணத்துக்காகத் தானா அந்தக் குடிகாரன் கூட ஒரசிட்டு நின்ன.?? உனக்குப் பணம் வேணும்ன என்னைக் கேக்க வேண்டியது தானாடி.. ஏன்டி இங்க வந்த” என்று கோவத்தில் வார்த்தை தீயாய் கொட்ட..

 

“ஸ்டாப் இட்.. ஜஸ்ட் ஸ்டாப் இட்..” என்று கத்தி நிஷா குரலிலும் விழியிலும் நெருப்பு தெறிக்க.. “யாருய்யா நீ..?? யார் நீ.?? என்னைக் கேள்வி கேக்க உனக்கென்ன உரிமை இருக்கு..?? ஹான் யார் நீ.. நா எங்க வேணுன்னாலும் போவேன்.. எவன் கூட வேணுன்னாலும் சுத்துவேன், ஒரசிட்டு நிப்பேன்.. அத கேக்க நீ யாரு” என்றவள்.. வினய் விட்ட அறையில் கன்னத்தில் கை வைத்து அழுத்தி பிடித்துக் கொண்டிருந்தாள்

 

“யாரா பார்த்து டி யாருன்னு கேட்ட..?? இன்னொரு முறை அந்த வார்த்தைய சொல்லு பாக்கலாம்.!! சொல்லுடி பாக்கலாம்” என்றவன் காரில் சாய்திருந்த அவளின் கழுத்தை பிடித்து நெருக்க..

 

கோவத்தில் சிவந்திருந்த அவன் முகம் அவள் முகத்திற்கு வெகு அருகில் இருக்க.. அவன் கோப விழிகளும், அவன் மேல் வந்த அவன் வியர்வையோடு கலந்திருந்த அவன் டியோடிரன்ட் வசமும் அவளை ஏதோ செய்ய.. எச்சில் விழுங்கியவள் தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொள்ள.. உள்ளிழுத்த குரலில் “சார்..!! ப்ளீஸ் கைய விடுங்க.. யாராவது பாக்க… பாக்கப் போறங்க.. கையை எடுங்க நா… நா போகணும்” என்று தத்தி தத்தி சொல்ல..

 

“ஏய்..!! இன்னொரு முறை சாரு மோருன்னு சொன்ன கொன்னுடுவேன் பாத்துக்க.. ஏன்டி எனக்குப் பேர் இல்லய..?? இல்ல என்னோட பேர் உனக்குத் தெரியாத.. சும்மா எப்பபாரு சார் சாருன்னு உசுர வாங்கிட்டு.. இனி மரியாதைய பேர் சொல்லி கூப்பிடி” என்று கத்தியவனை நிஷா விழி விரித்துப் பார்க்க..

 

“முழிச்சது போது வண்டில ஏறு.. வீட்டுக்குபோய் உனக்குக் கச்சேரிய வச்சிக்குறேன்..” என்று நகர்ந்தவன் அசையாமல் நின்ற நிஷாவை பார்த்து, “ஏய் இன்னு என்னடி பண்ற” என்று கத்த.. நிஷா உணர்வு வந்து அதிர்ந்து நிற்க..

 

“ஏன்டி காது கேக்கலய உன்னை வண்டில ஏறுன்னு சொன்னேன்” என்று அழுத்தமாகச் சொல்ல..

 

“இல்.. இல்ல யுகி யுகி என்று அவள் இழுக்க..”

 

“என்ன யுகி..?? உனக்குச் சப்போர்ட்டுக்கு அவ இங்க இல்லையேன்னு பாக்குறீய.. வீட்டுகு வா ரெண்டு பேருக்கும் சேர்த்தே ஆப்பு வைக்கிறேன்.. இப்ப வந்து வண்டில ஏறு டி”

 

“இல்ல.. அவ வரணும்.. அவளையும் கூட்டிட்டுப் போலாம்” என்று அவன் முகத்தைப் பார்த்தபடி சொல்ல..

 

வினய் ஒரு நிமிடம் அதிர்ந்தவன்.. “அந்த எருமையும் இங்க தான் இருக்க.??” என்க

 

நிஷா ஆமாம் என்று தலையாட்ட..

 

இழுத்து மூச்சுவிட்டவன்.. “முதல்ல அந்த எருமைய ஃபோன் போட்டு வரசொல்லு” என்றதும்.. நிஷா யுக்தாவிற்கு ஃபோன் போடா அடுத்த ரெண்டு நிமிஷத்தில் அங்கு வந்தாள் யுக்தா..

 

வெள்ளை நிற சிலிவ் லெஸ் மேல் டாப்பும்.. முட்டிவரை சிவப்பு நிற ஸ்கர்ட்டும் அணிந்து நிஷாவை போலவே கொஞ்சம் அதிக மேக்கபில் இருந்தாள் யுக்தா..

 

வீட்டில் ராம், மது, யுக்தா தலையில் கை வைத்துபடி உட்கார்ந்து இருந்தனர்..

 

வினய் இவ்வளவு நேரம் நிஷாவையும், யுக்தாவையும் திட்டி தீர்த்து, காலில் சலங்ககட்டி ஆடு ஆடென்று ஆடிட்டு நிஷாவை எரிக்கிற அளவு ஒரு பார்வை பார்த்துட்டு போக.. நிஷாவும் வாடிய முகத்துடன் அவ ரூம்க்கு போய்ட்டா..

 

“மது அண்ணி உனக்கு ஏதாவது வித்தியாசம் தெரியுத..??”

 

“ம்ம்… ம்ம்.. நல்லாவே தெரியுது.?? இப்ப என்ன செய்யலாம்.??”

 

“கொஞ்ச நாள் விட்டு புடிப்போம் அண்ணி.!! வினு இப்ப கொதிச்சிட்டு இருக்கான்.. கொஞ்சம் கூல் ஆகட்டும் அப்றம் யோசிப்போம்.. அதோட நிஷா மனசுல என்ன இருக்கோ.??”

 

“ஏய் ரெண்டு பேரும் என்ன பேசுறீங்க.?? ஒரு ஏழவும் புரியல.. கொஞ்சம் எனக்கு வெளங்குற மாதிரி பேசி தொலைங்களேன்” என்று ராம் புலம்ப..

 

“உங்களுக்கு எதுதான் புரிஞ்சிருக்கு.. இது புரிய..? வெளங்காத மனுஷன்.. உங்களா போய்க் கட்டிக்கிட்டேனே.. எல்லா என் கெட்ட நேரம்..!!”

 

“ஆம இவ பெரிய இவ.. சும்மா பேசிட்டு.. என்ன விஷயம்னு சொல்லுடி..”

 

“வினய்க்கு கூடப் பொறந்த என்னை விட.. சாம் மேல பாசம் ஜாஸ்தி.. அது நம்ம எல்லாருக்கும் நல்ல தெரியும்.. அதோ சமயம் இவ எதாவது தப்பு பண்ண முதல்ல அவளைக் கண்டிக்கிறதும் வினய் தான்.. இல்லையா.??”

 

“ம்ம்ம் ஆமா.. அவனுக்கு இந்தப் பிசாசுன்ன உயிரு.. ஆனாலும் இவ ஏதாவது தப்பு செஞ்ச திட்டுறது இல்ல அடி வெளுக்குறதும் அவன் தான்.. இவளும் வினய் ஒருத்தனுக்குத் தான் கொஞ்சமாச்சும் அடங்குவ..!! ஆன அதுக்கும் இப்ப நீங்க பேசுனதுக்கும் என்ன லிங்க் இருக்கு.??”

 

“அய்யோ..!! டேய் லூசு அண்ணா வினுக்கு என் மேல பாசம் ஜாஸ்தி ஆனாலும் நா தப்பு பண்ண என்னை அடிக்கிற மொத ஆளும் அவன் தான் அப்டி இருக்க இன்னைக்கு நிஷா சின்ன டிரெஸ் போட்டுட்டு பப்புக்கு போனதுக்கு அவளைக் கை நீட்டி அடிச்சவன்… என்னை அடிக்கல கவன்ச்சிய நீ.?? நிஷா செஞ்சது தப்புன்னா நா பண்ணதும் தப்பு தானே.. நானும் நிஷா மாதிரி தானே டிரெஸ் பண்ணி இருக்கேன்.. ஏன் வினு என்னை அடிக்கல.!!?! யோசி யோசி??”

 

“ஆமா இல்ல.. நிஷா அப்டி ஒன்னு அசிங்கமா டிரெஸ் போட்டுட்டு இல்லயே.. அப்டியே அவ பண்ணது தப்புன்னாலும், கூட இருந்த கூட்டு களவாணி உன்னையும் சேத்து இல்ல நல்லா அப்பி இருக்கணும்.??”

 

“ம்ம்ம்… இப்ப புரியுத.?? நானும் அண்ணியும் எதபத்தி பேசினோம்னு..”

 

“ம்ம்ம் புரியுது.. புரியுது.. நிஷா அந்த டிரெஸ் போட்டிருந்தது அவனுக்குப் பிரச்சனை இல்ல.. இன்னொருத்தன் நிஷாவ நெருங்கி வந்து தொட்டது, கிஸ் பண்ண டிரை பண்ணது தான் நம்மாளோட பிரச்சனை..!! வேற ஒருத்தன் கூட நிஷாவ சேர்த்து பாக்க இவருக்குப் புடிக்கல… உள்ள இருந்து பத்திட்டு வருது போல”

 

“அதோ தான்டா அண்ணா.. பாய்ன்ட்ட புடிச்சிட்ட..”

 

“ம்ம்ம்!! இது உண்மைய இருந்த சந்தோஷம் தான்.. வினய் அவமேல இருக்கக் கடுப்பயெல்லாம் விட்டுட்டு அவளைப் புரிஞ்சிகிட்டா எல்லாருக்கும் சந்தோஷம் தானே.. நிஷா நல்ல பொண்ணு அவ வினய் லைஃப்ல வந்த நல்லா தான் இருக்கும். ம்ம்ம் பாப்போம்.. யார் மனசுல என்ன இருக்கோ.?? இதுக்குக் காலம் தான் பதில் சொல்லணும்” என்றவன் யுக்தாவை கூர்ந்து பார்த்து.. எல்லாக் கேள்விக்கும் காலம் வரும்போது பதில் கெடச்சே தீரும்” என்று அழுத்தமாகச் சொல்ல..

 

யுக்தா அவன் எதைபத்தி சொல்கிறான் என்பது புரிந்து இதழ் சுழித்து நக்கலாகச் சிரித்தவள்.. “கிடைக்கும்ண்ணா கண்டிப்ப கிடைக்கும்.. கூடிய சீக்கிரம் பதில் கிடைக்கும், கிடைக்காம எங்க போகும்” என்றவள் எழுது சென்றுவிட ராம் போகும் யுக்தாவையே பார்த்தவன்.. யாருக்கே ஃபோன் செய்து நாளைக்குக் காலையில ஜானவியும், ராஷ்மியும் இங்க இருக்கணும் என்று விட்டு எழுந்து போக.. மது “இங்க என்ன டா நடக்குது” என்று புலம்பியபடி நகர்ந்தாள்..

 

மறுநாள் ராம் கேட்ட கேள்வியில் யுக்தா, நிஷா, ஜானவி, ராஷ்மி நால்வரும் வாய்மூடி நின்றிருக்க.. வீட்டில் இருந்த மற்றவர்கள் அங்க என்ன நடக்குது என்று புரியாமல் நின்றிருந்தனர்..

 

“சொல்லு சாம், நீயும் நிஷாவும் சென்னை வந்து எவ்ளோ நாள் ஆகுது.??

 

“உஃப் என்று பெருமூச்சு விட்ட யுக்தா.. டேய் அண்ணா..!! நீ கொஞ்ச நாளா எங்க நாலு பேரையும் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்னு எங்களுக்குத் தெரியும்.. உனக்கு எல்லாம் தெரிஞ்சுடுச்சுன்னும் எங்களுக்குத் தெரியும் டா அண்ணா.. சோ நீ எதுவும் கேக்க வேண்டாம்.. உனக்குத் தேவையான எல்லாதையும் நானே சொல்றேன்.. நானும் நிஷாவும் சென்னை வந்து ஐஞ்சு மாசம் ஆகுது.. அந்தச் சின்னப் பொண்ணுங்க கேஸ் டீடெய்ஸை ராஷ்மி தான் ஃபாலோ பண்ணிட்டு இருந்த அவளுக்கு ஹெல்ப் பண்ண தா நாங்க இங்க வந்தோம்.. இந்தக் கேஸ் உன்னோட லிமிட்ல இருக்க ஸ்டேஷன்ல இருக்குன்னு தெரிஞ்சு.. இங்க இருந்த சரிபட்டு வராதுன்னு தான் நாங்க ஜானவி வீட்ல இருந்து மூவ் பண்ணோம்.. மொத்த எவிடென்ஸ் கைக்கு வந்த பிறகு இங்க வந்தோம் போதுமா..?!”

 

ராம் ஏதோ சொல்ல வர கைகாட்டி அவனை நிறுத்தியவள்.. “நீ என்ன சொல்லவரேன்னு புரியுது.. உங்ககிட்ட இருக்க எவிடென்ஸ் வச்சு அந்தப் பசங்களுக்குத் தண்டனை வாங்கித் தந்திருக்கலமேன்னு தானா சொல்ல வர.. எங்களுக்கு அதுல இஷ்டம் இல்ல டாண்ணா.. வீ டோன்ட் வான்ட் தட்.. பிகாஸ் கோர்ட் ல கொடுக்குற தண்டனை அவனுங்களுக்குப் பத்தாது.. மிஞ்சி போன ஒரு ஐஞ்சு இல்ல ஏழு வருஷம் ஜெயில் தண்டனை கிடைக்கும்.. அவனுங்க அப்பனுங்களுக்கு இருக்கப் பவர்க்கு ரொம்ப ஈசியா அந்த நாய்ங்க உடனே வெளிய வந்துடும்.. அடுத்து ஐஞ்சு வயசு பொண்ணு கெடைக்குமா இல்ல ரெண்டு வயசு பொண்ணு கெடைக்குமான்னு ஓநாய்ங்க மாதிரி அலையும்.. அது எங்களுக்குப் புடிக்கல.. அதான் ஜானவிய வச்சு அந்தக் கேஸ்சை ஒன்னு இல்லாம செஞ்சு அந்தப் பொறுக்கிங்களா வெளிய திரிய விட்டோம் அப்றம் அவனுங்களை” என்றவள் அதற்கு மேல் பேசாமல் அமைதியாகி விட..

 

“ஏன் நிறுத்திட்ட?? சொல்லு அடுத்து நீங்க என்ன செஞ்சிங்கன்னு எல்லாருக்கும் கேக்குற மாதிரி சத்தம் போட்டு சொல்லு..” என்று ராம் கொதிக்க

 

“டேய் ராம் என்ன டா ஆச்சு.?? இங்க என்ன தான் டா நடக்குது.??” என்று வினய்யின் அம்மா சாருமதி தவிக்க..”

 

“ம்ம்ம் உங்க அருமை பொண்ணும், ஆச நிஷாவும் அப்றம் இந்த ரெண்டு பேரும் கூட்டு சேர்ந்து அந்தப் பசங்களைக் கடத்தி பத்து நாள் அடச்சி வச்சிருந்து.. நல்லா அடிச்சி, தொவச்சு கொன்னு பொதச்சிருக்காங்க ம்மா!!” என்ற ராமின் வார்த்தையில் மொத்த குடும்பமும் உறைந்து நின்றது..

 

தோழிகள் நால்வரும் நெஞ்சை நிமிர்த்தி நின்றனர்.

 

“ஏய் சமி என்னடி இதெல்லாம்.. ராம் சொல்றதெல்லாம் உண்மைய..?? சொல்லு உண்மைய.??” என்று கோதை பதற..

 

“ம்மா நீயும் ஒரு அம்மா தானே. நீயே சொல்லு மா.. அந்தப் பொண்ணுங்க பூ கூட இல்லம்மா.. இன்னும் மலராத சின்ன மொட்டுங்க ம்மா.. அதுங்களை போய், கடத்தி, அவங்களை… அவங்களை” என்றவள் உதடுகள் துடிக்க.. “ச்சே சொல்லவே மனசு கொதிக்குதும்மா.. கொஞ்ச கூட ஈவு இறக்காமில்லாம அந்தக் கொழந்தைகளைக் கொன்னு பொதச்சிட்டனுங்க.. நீ அந்தக் கொழந்தைங்க போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் பாத்திருக்கனும் ம்மா.. உடம்பு முழுசும் பல்லால கடிச்சி கொதறி இருக்கணுங்க, சொல்லமுடியாத இடத்துல எல்லாம் காயம்.. கண்ணால பாக்க முடியலம்மா” என்று யுக்தா சொல்லும்போதே சாருமதியும், கோதையும் காதை மூடிக்கொள்ள..

 

“கேக்கும் போதே உங்களுக்கு இப்படி வலிக்குதே.. அந்தப் பொண்ணுங்களுக்கு எப்டி இருந்திருக்கும்.. ஆன அந்த ராஸ்கல்ஸ், கொலையும் பண்ணிட்டு.. அப்பனுங்க பணத்தை வச்சி சட்டத்துல இருந்து தப்பிச்சிட்டு.. அதைச் செலிபீரேட் பண்ண இவனுங்க பாரீன் போவாணுங்க.. அத பத்துட்டு எங்களை சும்மா இருக்கச் சொல்றீங்களா.. சட்டம் தண்டிக்கும், சாமி கண்ணகுத்தும்னு எல்லா எங்களால சும்மா உக்காந்துட்டு இருக்க முடியாதும்மா.. நீங்களும் பொண்ணு தானம்மா.. நீங்களே சொல்லுங்க அந்தப் பசங்க உன் கையில கெடச்சிருந்த நீங்க என்னம்மா பண்ணி இருப்பீங்க.?? என்று யுக்தா உரக்க கத்த..

 

சாருமதியும், கோதையும் ஒருநிமிடம் கூட யோசிக்கவில்லை “கண்டதுண்டாம வெட்டி போட்டிருப்போம்” என்று சொல்ல.. யுக்தா அவர்களைப் பெருமையாகப் பார்த்தவள்.. “அதைத் தாம்மா நாங்க செஞ்சோம்” என்று திமிராகச் சொன்னாள்..

 

“என்ன இருந்தாலும் நீங்க பண்ணது தப்பு தான். இதுக்கு உங்களுக்கு என்ன தண்டனை கெடைக்கும் தெரியுமா” என்ற ராம் வார்த்தையில், வினய், விஷ்ணு, ஜீவா மூவரும் ஒன்றும் புரியாமல் தவிக்க..

 

ராஷ்மி அலட்சியமாகச் சிரித்தவள்.. “அதுக்கு உங்ககிட்ட சரியான எவிடென்ஸ் இருக்கணுமே ஏசிபி சார்.. அது எல்லாத்தையும் தா நாங்க மொத்தம தொடச்சி எடுத்திட்டோமே..”

 

“அதானே!! நீங்க ஆல்ரெடி எங்க நாலு பேரோட பிங்கர்பிரிண்ட்சை.. எங்களுக்கே தெரியாம எடுத்து.. இறந்த அந்த டெட்பாடியில இருந்த பிங்கர் பிரிண்ட்சோட மேட்ச் பண்ணிப் பார்த்துட்டு, அது மேட்ச் ஆகலன்னு தெரிஞ்சிட்டு தானா எங்களைக் கூப்பிட்டு பேசிட்டு இருக்கீங்க..??” என்ற ஜானவியைப் பார்த்துத் தோழிகள் மூவரும் அர்த்தமாகச் சிரிக்க..

 

“பிங்கர் பிரிண்ட் மேட்ச் ஆகலன்ற திமிர்ல பேசுறீங்களா..?? இப்ப இங்க நடக்குறதெல்லாம், வீட்டோட சிசிடிவி கேமரால ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு.. அந்த எவிடென்ஸ் ஒன்னு போதும் உங்களை அரஸ்ட் பண்ண..”

 

“அச்சசோ..!! ஏன் டா அண்ணா இது.. இதுதான் ப்ளான்னு நீ மொதல்லயே ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாது.!! இது தெரியமா நா வேற பேச ஆரம்பிக்கும் போதே.. சிக்னல் ஜமர்ரை ஆன் பண்ணிட்டேனே.. ப்ச் இப்ப எதுவுமே ரெக்கார்ட் ஆகி இருக்காதே.. நீ என்னடாண்ணா பண்ணுவ” என்று அப்பாவியாக முகத்தை வைத்து சொன்னவள் தோழிகள் மூவருடன் அங்கிருந்து நகர..

 

“அப்ப அந்தப் பசங்க அப்பனுங்கிட்ட இருந்து எதுக்குச் சாம் பணம் வாங்குனீங்க.??” என்று கேட்ட ராமை திரும்பி பார்த்த யுக்தா.. “கோயில் உண்டியல்ல போடுற காசு என்னைக்கும் சாமிக்கு சொந்தமில்லண்ணா.. இந்தக் காசும் அப்டி தான்.. போகவேண்டிய இடத்துக்குப் போய்டுச்சு” என்றவள்.. “கடைசி ஒன்னு சொல்றேன்ண்ணா.. அந்தப் பொறுக்கிங்களை கடத்தினது, கொலை செய்ய ப்ளான் போட்டது, பணம் வாங்குனது எல்லாம் நாங்க தான்.. ஆன அவனுங்க மேல எங்க நாலுபேரோட சுண்டுவிரல் நகம் கூடப் படால.. அத செய்யவேண்டியவங்க கிட்ட அந்தப் பசங்களைக் கொண்டு சேக்குற கொரியர் சர்வீஸ் மட்டும் தான் நாங்க.. நீ இனி எங்களை ஃபாலோ பண்ண வேண்டிய அவசியம் இல்ல.. உன் கையில அந்தப் பொறுக்கிங்க கெடச்சிருந்த நீயும் நாங்க செஞ்சதை தான் செஞ்சிருப்ப.. சோ பீ கூல்” என்றவள் தோழிகளோடு அங்கிருந்து சென்றாள்..

 

இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜீவா வேகமாக ஜானவி முன் வந்து நின்றவன்.. “ஐ ஆம் சாரி.. ஐ ஆம் ரியலி சாரி ஜானவி” என்றவன் ஒரு நிமிடம் கூர்ந்து அவள் முகத்தைப் பார்த்துவிட்டு.. “ஐ லவ் யூ ஜானு.. எனக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு.. உனக்கும் என்னைப் புடிச்சிருந்த.. இந்தச் சாம் எருமை கல்யாணம் முடிஞ்ச பிறகு நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஓகே வா.. யோச்சி சொல்லு.. பை பை.. பாத்து போ.. வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் பண்ணு” என்றவன் அங்கிருந்து செல்ல.. ஜானவி இங்க இப்ப என்ன நடந்துது என்று திகைத்து நிற்க.. மீதி மூவரும் முகத்திலும் மகிழ்ச்சி மின்னியது..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!