ஆதிரையன் -அத்தியாயம் 14

1653401117018-ce4c47ea

காலை பத்திலிருந்து பதினொன்றுக்குள் முகூர்த்தம் என்று குறிக்கப்பட்டிருந்தது.

அதற்கான ஆயத்தங்களை இரு வீட்டினரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தனர்.

 

அதிதிக்காக செல்வநாயகம் மூலமாக வீடொன்றை வாங்கியிருந்தான் ஆதிரையன். தன் மகளுக்கு போலவே அதிதிக்கும் திருமண ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடு பண்ணியிருந்தார். ஆதிரையன் மனதுக்கு ஏதோ நெருடலாகவே இருக்க அதிதியின் வீட்டை சுற்றி தனக்கு தெரிந்த ஆட்களை கண்காணிக்க சொல்லியிருந்தான். மகேஷையும் அங்கேயே இருக்கச் சொல்லி தனது வேலைகளை தானே பார்த்துக் கொள்வதாகக் கூறிய ஆதிரையன் அவனும் அவ்வப்போது வீட்டைச் சுற்றி கண்காணித்தப் படியே இருந்தான். ரேவதி கல்யாண ஏற்பாடுகளுக்காக கோயிலுக்குச் சென்றிருக்க செல்வநாயகமும் அவருக்கு உதவியாக கோயிலுக்குச் சென்றிருந்தார்.

 

அதிதியை அழைத்துவருமாறு சுமனுக்கு அழைத்து கூறினார் செல்வநாயகம். தீபாவும் சுமனும் அதிதியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு சென்றார்கள். இருவரும் மாற்றி மாற்றி அதிதியை கிண்டல் செய்து கொண்டு வர அதிதிக்குமே மனதில் அவள் மணக் கோலம் எண்ணி மகிழ்ந்தாலும் மனதில் ஏதோ உரிமையாய் அவனோடு உறவாட முடியா நிலை எண்ணி மனம் லேசாக  கவலைக்கொள்ளவே செய்தது. இருந்தும் இனி அவனோடுதான்  வாழ்வு என்றிட அதுவே போதும் என எண்ணினாள். அவனை மணக்கோளத்தில் காணும் ஆவலை அடக்கியவண்ணம் அவர்கள் கேலியை ரசித்தப்படியே அமர்ந்திருந்தாள்.சிறிது தூரம் செல்லவும் கோயிலுக்கு ஐநூறு மீட்டர் தூர இடைவெளியில் இருந்த கரும்புக் காட்டின் பகுதியில் திடீரென வந்த உயர்ரக மாருதி வண்டியொன்று இவர்களின் வண்டிக்கு குறுக்காக நிறுத்தியது.

 

மூவரும் திகைத்துப் பார்க்க, அப்போதும் தீபாவை அணைத்து பிடித்துக்கொண்டாள் அதிதி.நான்கு பேர் அவ்வண்டிவிட்டிறங்க, அவர்களை பார்க்கவே சற்று கிலியாக இருந்தது.

 

“அண்ணா வண்டி விட்டு இறங்க வேணாம்.என்னன்னாலும் நான் பேசிக்குறேன்.” அதிதி சுமனிடம்  கூற,அவர்களில் ஒருவன் அதிதி இருந்த பக்கமாக வர இவள் கண்ணாடியை கீழிறக்கினாள்.

 

“கலெக்டர் அம்மா,எங்கய்யா உங்ககிட்ட பேசணும்னு கொஞ்சம் வண்டிக்கு வரை வரச்சொல்ராங்க.”

 

இவர்களோடு பேச்சு வளர்த்தால் பிரச்சினை பெரிதாகும் என்பதால்,

“சரி. இருங்க வரேன்.”

என்றவள் வண்டிவிட்டுறங்கப் பார்க்க,

 

“அதி…இறங்காத ஆதிக்கு கால் பண்ணலாம்.”

“வேணாம் ண்ணா, அவங்களுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட டென்ஷன், பார்த்துக்கலாம், பேசத்தானே கூப்பிடறாங்க.நாமலே பேசி சமாளிச்சுக்கலாம். முன்னமே அந்த பெரியவர் கூட பேசியிருக்கேன்.”

 

இவள் வண்டியருகே செல்லவும்,

 

“என்னம்மா பொண்ணு, உனக்கு நான் அத்தனை சொல்லியும் இன்னைக்கு இந்த கோலத்துல இருக்கன்னா என் பேச்சுக்கு மரியாதை கொடுக்கலன்னுதானே அர்த்தம். “

 

“சார், உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்ததுனாலதான் இங்க, இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்.நீங்க ஆபிஸ்ல பேசினத்துக்கு நான் அப்போவே என்னோட முடிவை அங்கேயே சொல்லிட்டேன்னு நினைக்குறேன். டைமாகிட்டிருக்கு, வழி விட்டீங்கன்னா எங்களுக்கு போக வசதியா இருக்கும்.”

 

“கொஞ்சம் எடுப்பா ஒருத்தன் சிக்கிட்டா எப்படித்தான் இப்டி வளைச்சு போடறீங்களோ தெரியல.”

 

“சார், இப்போ வரைக்கும் மரியாதையை குறைக்கல. அதை செய்ய வச்சுடாதீங்க. உங்க பொண்ணு பண்ணுன தப்புக்கு, நீங்க பட்ட அவமானதுக்குனு ஒரு காரணம் தேடிட்டு உங்க பேரன் வாழ்க்கைல தகராறு பண்றது நல்லதில்லை.”

 

“எனக்கு எது நல்லதுன்னு நல்லாவே தெரியும் பொண்ணே.காலாகாலம் கட்டி காத்துட்டு வந்த என் மரியாதை மொத்தம் ஒரு பொழுதோட இல்லாம பண்ணுனது அவன் அம்மா. அதுனால அவன வச்சுத்தான் அதுக்கான பரிகாரம் பண்ணிக்கணும்.”

 

“அப்போ அவனை கூப்டு அவனை என்ன வேணா பண்ணிக்கோங்க. எதுக்கு இடைல என்னை எதுக்கு இழுக்குறீங்க? “

 

“அவனைத்தான் ஒன்னும் பண்ண முடிலயே. இதோ உன்மேல கை வச்சாத்தானே அவனை வழிக்கு கொண்டு வர முடிது. நீயா இப்படியே எங்க கூட வந்துரு. அவனுக்கு சூப்பரா எங்க ஊர்லயே எனக்கு ஈடா வசதியா ஒரு குடும்பத்துல பொண்ண பார்த்து வச்சிருக்கேன்.அவங்க கல்யாணம் முடிய நானாவே உங்க வீட்ல கொண்டு போய் உன்னை விற்றேன். இல்ல குடும்பத்தோட இப்போ இங்கேயே… “

 

‘இப்போது, தான் என்ன செய்தாலுமே வண்டியிலிருக்கும் இருவருக்குமே ஆபத்தாக முடியும்.இப்போதைக்கு ஆதிரையனுக்கு செய்தி போயிருக்கும். அவன் வரும் வரையிலும் இவர்களை என் வழிக்கு திசை திருப்பி கொள்வோம்.’ என்றெண்ணியவள் பேசிக்கொண்டிருந்தபடியே சட்டென்று கரும்புத் தோட்டதுக்குள்ளே ஓடினான்.

 

“டேய் பிடிங்கடா அவளை…”

அருள்ராயனின் கூச்சலிலேயே  வண்டியிலிருந்த இருவருக்கும் ஏதோ தகராறு என்று புரிந்தது. அதுவரையில் இருவரும் ஏதோ பேசிக்கோண்டிருப்பதாகவே நினைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியே ஆதிரையனுக்கும் அழைத்து கூறியிருக்க, நம்ப மறுத்தவன் அப்போதே அவ்விடம் அவன் இரு சக்கரத்தில் வந்துக் கொண்டிருந்தான்.

 

கரும்புத் தோட்டம் இடையே புகுந்தவள் ஓட,அவள் பின்னே அந்த நான்கு பேரும் துரத்திக்கொண்டு சென்றார்கள். ஆதிரையன் வந்துவிடுவான் எனும் தைரியத்தில் தன் மொத்த பலம் திரட்டி ஓடினாள்.

 

ஆதிரையன் அவ்விடம் வந்தவன் சுமனிடம், ‘இங்கே நடந்தது பற்றி எதுவும் கூற வேண்டாம்.அதிதியை தானே அழைத்துக்கொண்டு வருவதாகக் கூறி அவர்களை கோயிலுக்கு செல்லுமாறு அனுப்பிவைத்தான்.

 

அங்கே குறுக்கும் நெடுக்கும் நடந்துக் கொண்டிருந்த தன் தாத்தாவிடம் வர,

“என்னடா பேராண்டி, இவ்வளவு லேட்டா வர்ற? இந்நேரத்துக்கு அவ ஜோலிய முடிச்சிருப்பானுவளே.”

 

“என்ன மனுஷன்யா நீ? ச்சே. அவளுக்கு எதாவது ஆகட்டும் இருக்குனக்கு.” கூறியவன் தன் வேட்டியை முழங்காளுக்கு மேலே மடித்துக்கட்டியவன் மகேஷுக்கு அழைப்பினை எடுத்துக்கொண்டே கரும்புதோட்டத்தை நோட்டம் விட்டான். சத்தம் வரும் திசை தூரமாயும், ஓடும் காலடிச் சத்தமுமே கேட்க, இன்னும் அதிதி அவர்கள் கைக்கு அகப்பட்டிருக்க மாட்டாள் என்றுணர்ந்தவன், மகேஷிடம்,

 

“மகி,கோயில் பின்னாடி இருக்க ஓடை வழியா முடிந்தளவு விரைவாக கரும்புத்தோட்டம் பக்கம் வா. அதி அந்தப்பக்கமா தான் வர்றா.”

கூறியவன் தோட்டம் உள்ளே ஓடினான்ன்.

கரும்புதோட்டத்தில் எங்கு ஒளிந்துக் கொள்ளவென்றே புரியாது அதிதியும் தன் பட்டு சேலைக்கு கால் தடுக்க தன்னால் முடிந்தளவில் ஓடியும் அவர்களின் கையில் அகப்பட்டுக்கொண்டாள்.

 

ஆதிரையன் வந்திடுவான் என்ற நம்பிக்கையில் தன் அச்சத்தினை அகத்தில் மறைத்துக்கொண்டவள் அவங்களிடம் தன்னை விடுவித்துக்கொள்ளவே முயன்றாள்.

 

அந்த நான்கு பேரில் ஒருவன் அதிதியை ஓங்கி அரைந்து,

 

“என்னடி, இத்தனை ஓட்டம் ஓடற? என்ன நினைச்சிட்டிருக்க மனசுல, கலெக்டர்னா பெரிய இவளா நீ? தம்மா துண்டு சைஸ், இதுல நம்ம அய்யாவையே கை நீட்டி பேசுற.”

 

அவள் கையை முறுக்கிக்கொண்டே கூற, அதிதி வழி தாங்காது,

“அம்மா… ” என்று அலறவும் இவர்களை ஆதிரையன் நெருங்கவும் சரியாயிருந்தது.

அவர்கள் கையில் துவண்டுக் கொண்டிருந்த அதிதியைக் கண்டவன் அவர்களை நெருங்கி அவள் கை முறிக்கியவனை கீழேத்தள்ளி அதியை தன் தோள் வளைவுக்குள் வைத்துக்கொண்டான். அவன் கையை முறுக்கிக்கொண்டே

 

“யாருன்னு நினச்சு அவள தொட்ட? என் பொண்டாட்டி…

நல்லா ஞாபகம் வச்சுக்கோ. ஒரு பொண்ணுக்கிட்ட போய் உன் பலத்தை காட்டிட்டு…”

 

மற்ற மூவரும் அவர்களை நெருங்க அவர்களையும் எழ விடாது அடி வெளுத்தான். பின் தன் கைக்குள் கோழிக்குஞ்சாய் சுருண்டுக் கிடந்தவளை தாங்கிப் பிடித்தவன்,

 

“அதி ஆர் யூ ஓகே? “

அவள் தோள்பட்டையில் கைகளை  அழுத்தினாள். ஆழமாய் இரண்டங்குல அளவில் வலப்புறம் கிழித்திருந்தது.

 

“ஹேய் என்னாச்சு?அவள் காயத்தினை ஆராய்ந்தவன்,

” வா முதல்ல ஹாஸ்பிடல் போலாம்.”

 

“வலிக்கல. என்னால பொறுத்துக்கலாம். முதல்ல கோயில் போகலாம்.அங்க எல்லாரும் நமக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.”

கூறினாலும் கைக்குள் ஏதோ மிகையாக வலித்தது. இவள் பேசிக்கொண்டிருக்கவுமே, மகேஷும் அவ்விடம் வந்திருந்தான்.

 

“அண்ணா என்னாச்சு?” பதற்றதோடு கேட்க,

 

அதிதியையே பார்த்திருக்க ஆதிரையன், அவளும் ‘சொல்ல வேண்டாம்.’ என்பதாய் தலை அசைத்தாள்.

“ஒன்னில்ல மகி போகலாம்.”

 

அங்கு விழுந்து கிடந்தவர்களை பார்த்தவன் ஆதிரையனிடம் மேலும் ஏதும் கேட்காமல் வண்டியிருக்குமிடம் செல்ல,அவளை அழைத்துக்கொண்டு கரும்புதோட்டத்தின் பின் வழியாக நிறுத்தியிருந்த வண்டியில் ஏறி கோயிலுக்குச் சென்றார்கள்.

 

வழியில் அதே இடத்தில் நின்றிருந்த அருள் ராயனிடம்,

 

“இனியும் நீங்க உங்க வில்லத்தனம் எங்கிட்ட காட்டணும்னு நினச்சா அது என்கிட்ட மட்டுமா தான் இருக்கணும். அதை விட்டுட்டு இப்டி சில்லறைப் பசங்களை வச்சிட்டு வாலாட்டுனா நான் பண்ணுற ஒவ்வொண்ணும் உங்க மரியாதையை அழிக்கக்கூடியதாகவே இருக்கும். இனி எதை செய்தாலும் அது உங்க மரியாதையை அதுவாகவே நாசம் பண்ணிரும். நினைவிருக்கட்டும்.”

 

எதை பேசினால் அடங்குவார் என்றறிந்தவன் கூறிவிட்டு சென்றான்.

 

பதட்டத்தில் கோயிலில் கூடியிருந்தவர்களிடம் ஏதோ ஒரு காரணம் கூறி சமாளித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவர்கள் வந்திறங்கவுமே ஆறுதலானது.

 

“உன்னால முடியுமா?” என ஆதிரையன் கேட்க ‘முடியும்’ என்பதாய் தலையசைத்தாள்.

 

“அதி,என்னாச்சுடி?தீபா கேட்க,

 

“ஒன்னில்ல சின்ன காயம் தான் சமாளிச்சுக்கலாம்.”

 

“மாலை போட்டு பொண்ண அழைச்சிட்டு வாங்கோ நாளியாகுது.” ஐயர் கூறவும்

 

ஆதிரையன் அருகில் அமர்த்தப்பட்டாள் அதிதி.

 

அவன் மனமோ,அவன் கவிரசிகை, மனம் வென்ற தீயினை நினைக்க மனம் தீயாய் சுட்டெரித்தது.

 

அவள் மனமோ,’உண்மை கூறாது ஏற்கும் இந்த தாலி எங்கள் மனங்களை ஒன்று சேர்க்குமா?’ என்று கலங்கிட இருவரும் ஒருவரையொருவர் பார்க்க அவள் கழுத்தோடு கையிட்டு மூன்று முடிச்சுக்கள் இட அவன் மொத்தம் இனி அவளே என்று ஏற்றுக்கொண்டான்.

 

ரேவதிக்கும், செல்வநாயகத்திற்கும் மனம் நிறைந்து போக அவர்களை மலர் தூவி ஆசீர்வாதம் செய்தனர்.

 

அனைவரையும் மண்டபத்திற்கு விருந்துண்ண அழைத்து போகுமாறு மகேஷுக்கும், சுமனுக்கும் கூறியவன், அதிதியை அங்கிருந்த டாக்டரிடம் காயத்திற்கு மருந்திட அழைத்துச் சென்றான்.