ஆழியின் ஆதவன்

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 15

 

“ஆழி ப்ளான் ரெடிய?” என்று கேட்ட சைத்ராவை பார்த்து கட்டைவிரலை உயர்த்திக் காட்டினாள் ஆழினி.

 

“எப்ப ஆழி ஸ்டார்ட் பண்ணணும்?”

 

“இன்னைக்கு ஈவ்னிங் மீரா. அந்த விமல் பரதேசி சவுக்குத் தோப்புப் பக்கம் இன்னைக்குப் பொம்பளைங்களைப் பொறுக்க‌ போகுதாம். நம்ம அங்க வச்சு அவனைத் தூக்கிடலாம்.”

 

“ஏன் ஆழி தூக்கணும்னு சொல்ற? பேசாம அங்கயே முடிச்சி விட்ற வேண்டியது தானா… எதுக்குத் தேவை இல்லாத டைம் வேஸ்ட்” என்ற மீராவை பார்த்து இடவலமாக இல்லை என்று தலையாட்டிய ஆழி,

 

“இல்ல மீரா. அப்படி நெஞ்ச அவனோட டெட்பாடி அவன் அப்பனுக்குக் கெடச்சிடும். அப்புறம் ஊரே கூட ஒப்பாரி வச்சி சகல மரியாதையோட அவனை அடக்கம் பண்ணிடுவாங்க. அது நடக்கூடாது. அந்த **** பொணத்துக்குக் கூட எந்த மரியாதையும் கிடைக்ககூடாது. எத்தனை பொண்ணுங்க மானமும், உயிரும் போக அந்தப் பொறம்போக்கு காரணம இருந்துச்சு. அதோட சாவு அவ்ளோ சாதாரணம இருக்கக் கூடாது‌. அதோட அவனோட சாவு ஆதவ், விஷ்ணு கண்ணு முன்னாடி தான் நடக்கணும்.”

 

“யூ ஆர் ரைட் ஆழி. இவன் மட்டும் இல்ல, மீதி இருக்க நாலுபேர் பொணம் கூட யாருக்கும் கிடைக்கக் கூடாது… அதுவும் அந்தச் சைலேஷ்…” என்று கோவத்தில் பல்லை கடித்த சைத்ரா தோளில் யாரோ கை வைக்க, அவள் சட்டெனத் திரும்பிப் பார்க்க, அங்கு முகில் நின்று கொண்டுடிருந்தான்.

 

“அதென்ன அந்தச் சைலேஷ் மேல மட்டும் உனக்கு இவ்ளோ கோவம். நீங்க அங்க பேசும்போதே உன்னைக் கவனிச்சேன். அவன் பேரை கேக்கும் போதெல்லாம் உன் முகம் ஒரு மாதிரி மறுச்சு…?” என்றவனை முறைத்த சைத்ரா தோளில் இருந்த அவன் கையைத் தட்டி விட்டு, “அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நீங்க யார் என்ன கேள்வி கேக்க… போய் உங்க வேலையைப் பாருங்க… வந்துட்டாரு பெரிய இவுராட்டாம்” என்று கத்த,

 

“சைத்ரா,” என்று மீராவின் அதட்ட, சைத்ரா மீராவை முறைத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“விடுங்க மீரா… அவங்க மேல தப்பில்ல, நான் தான் அவங்க முகம் வாடி இருந்ததைப் பார்த்து, ஒரு வேகத்தில் கேட்டுட்டேன். அவங்க சொன்னது கரெக்ட் தானா… நான் யார் அவங்க சொந்த விஷயத்தில் தலையிட, இவ்ளோ நாள் பழகுற ஆழியே என்னை ஃப்ரண்டா இல்ல, ஒரு ஆளா கூடப் பாத்தது இல்ல. அப்புறம் இவங்கள என்ன சொல்றது” என்ற முகில் அங்கிருந்து நகர, “முகில்” என்ற ஆழியின் குரலில் அங்கேயே நின்றான்.

 

“நான் யாருன்னு உனக்கு முன்னாடியே தெரியும் இல்ல?” என்று கேட்க, முகில் ஆமாம் என்று தலையாட்டினான்.

 

“நீ ஏன் அதை என்கிட்ட சொல்லல? இல்ல… ஏன் என்கிட்ட அது பத்தி எதுவும் கேக்கல?”

 

“சொல்லாததுக்குக் காரணம் ஆதவ். அவன் என்னை நம்பி, என்கிட்ட சொன்ன விஷயத்தை உன்கிட்ட சொல்லி, அவன் என்ன மேல வச்சிருக்க நம்பிக்கையை உடைக்க என்னால முடியாது. பிகாஸ் ஹீ இஸ் மை ஃப்ரண்ட். கேக்காததுக்குக் காரணம்… நீங்க பண்ணது எனக்குப் பெரிய தப்ப தெரியல. நீங்க தப்பான ஆளுங்களைத் தான் டார்கெட் பண்ணி இருக்கீங்க… அதுவும் ஒரு வகையில் இந்த நாட்டுக்கு நன்மை தான். அஸ் அச் சிட்டிசன். அதை நான் தப்பு சொல்ல மாட்டேன். அதான் உன்கிட்ட எதுவும் கேக்கல” என்றவனைப் பார்த்து லேசாக இதழ் வளைத்த ஆழி,

 

“ஒருவேளை நீ என்கிட்ட கேட்டிருந்தால் நான் அதைப் பாத்தி உன்கிட்ட பேசி இருப்பேன்னு நீ நினைக்குறீய?” என்ற ஆழியைக் கண்கள் சுருக்கி பார்த்தான் முகில்.

 

“ம்க்கும்… அப்படியே சொல்லிட்டாலும். இதோ இப்ப சைத்ரா சொன்ன அதை டைலாக், நீ யாரு என்னைக் கேள்விக் கேக்கணு தான் நீயும் கேட்டிருப்ப…” எனும்போதே, “கண்டிப்பா சொல்லி இருப்பேன்” என்ற ஆழியின் பதில் முகில் திரும்பி ஆழியைப் பார்த்தான்.

 

“ஆமா முகில் நீ கேட்டிருந்தால் நான் கண்டிப்ப சொல்லி இருப்பேன். பிகாஸ் ஒரு வகையில் நீயும் ஆஷா மாதிரி தான். நான் என் வாழ்க்கையில் ஆஷாக்கு அடுத்து பார்த்த ஒரு நல்லா சோல் நீ தான். உனக்கு என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச பிறகும் கூட நீ என்கிட்ட வேற மாதிரி பிரேவ் பண்ணது இல்ல… எப்பவும் போல நீ என்னை முதல் தடவை எந்த மரியாதையோட பாத்தியோ, அதே மரியாதை இந்த நிமிஷம் வரை உன் கண்ணுல எனக்காக நான் பாக்குறேன். நான் யார்னு தெரிஞ்சும் மதி அம்மா கூடச் சேந்து ஆதவ் கூட எனக்குக் கல்யாணம் நடக்க ப்ளான் போட்டுட்டு இருக்க, உன்கிட்ட என்னைப் பத்தி சொல்லாம வேற யார்கிட்ட நான் சொல்லப்போறேன்” என்ற ஆழியின் வார்த்தையில் முகில் கண்கள் லேசாகக் கலங்கியது.

 

“ஏய் சும்மா பொய் எல்லாம் சொல்லாத… நான் ஆதவ் பத்தி பேசும்போது, எப்ப தொழிலை மாத்துனீங்கன்னு கேட்டு என்ன நீ கலாய்க்கல… அப்ப இருந்து நான் உன் மேல செம்ம காண்டுல இருக்கேன் தெரியுமா? ” என்றவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு தன் கண்களைத் துடைத்துக் கொள்ள, ஆழியும் மீராவும் அவனைப் பார்த்து புன்னகைக்க, சைத்ரா கூடக் கோவம் குறைந்து லேசாகச் சிரித்தாள்.

 

“ஓஓஓ அப்டி சார். நீங்க செம்ம கடுப்புல இருக்கீங்க இல்ல…” என்று கேலியாகச் சிரித்தவள், “அப்ப எதுக்கு சார் கொஞ்ச நாளா நான் எங்க போனாலும் பாடிகார்ட் மாதிரி என்னை ஃபாலோ பண்ணிட்டு வரீங்க?” என்றவளை அதிர்ந்து பார்த்தான் முகில்.

 

“ஏய் அது உனக்கு எப்படித் தெரியும்?” என்றவன் சட்டென உதட்டை கடித்துக்கொள்ள,

 

“ம்ம்ம் நீங்க போட்ட மாறுவேஷம் அந்த லட்சணம் போலீஸ்காரர். மணடைய மறச்ச நீங்க உங்க மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டீங்க” என்று சிரித்தபடியே சைத்ரா அவன் அருகில் வர, சற்று முன் அந்தக் கத்து கத்தியவள் இவள்தானா என்று முகிலுக்குக் குழப்பமாக இருந்தது.

 

“என்ன முகில் சைத்துச் சொல்றது புரியலயா?” என்ற மீராவை அப்பாவியாகப் பார்த்த முகில், “எனக்கு இவங்க சொல்றது மட்டும் இல்ல, இவங்களையே சரிய புரியல மீரா”

 

“போகப்போகப் புரிஞ்சுக்குவீங்க மிஸ்டர். போலீஸ்காரர். இப்ப நம்ம கொண்டை மேட்டருக்கு வருவோம். ஆமா நாங்க தான் ஹக்கீங், ட்ராக், பக் (bug) இதெல்லாம் பண்ணற ஆளுங்கன்னு தெரியமில்ல… அப்புறம் என்ன வெண்ணெய்க்கு ஆழி பின்னாடி போனீங்க…” என்ற சைத்ராவை புரியாமல் பார்த்த முகில், சட்டெனக் கண்கள் விரிய,

 

“ஏய் அப்ப நீங்க என்னை ட்ராக் பண்ணுட்டு இருக்கீங்கள?” என்று அதிர்ந்தவனைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்த சைத்ரா, “ஆழி இது டியூப்லைட் கூட இல்லடி… வாழ மட்டை..‌. ரொம்பக் கஷ்டம்.” என்று சொல்லி சொல்லி சிரிக்க, அவளை முறைத்தான் முகில்.

 

“சாரி முகில்… எங்களுக்கு வேற‌ ஆப்ஷன் இல்ல. சோ உன்னையும் ட்ராக் பண்ணோம். பண்ணிட்டு தான் இருக்கோம். ஆன்ட் ட்ராக்கர் கூடச் சேர்த்து உன்னை மாட்டிவிட்டது உன்னோட ஆசை புல்லட். நானும் நிலாவும் எங்க போனாலும் நீ எங்க பின்னாடியே வந்திருக்க, நான் சில டைம் உன்னோட புல்லட்டை பாத்திருக்கேன். முதல்ல நீ நிலாக்காகத் தான் வரேன்னு நெனச்சேன். அதுக்குப் பிறகு எனக்கு டவுட் வந்து, சைத்துவை செக் பண்ண சொன்னேன். அப்ப தான் தெரிஞ்சது. நான் தனிய வெளிய போனா எல்லா இடத்திலயும் கூட நீ இருந்திருக்கன்னு. ஏன் முகில்?” என்ற ஆழி கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முகில் அமைதியாக நின்றான்.

 

“என்ன முகில் பதில் சொல்ல முடியலய…? வேணும்னா நான் சொல்லவா?” என்றதும் முகில் ஆழியை நிமிர்ந்து பார்த்தான். 

 

“உ… உனக்குத் தெரியுமா ஆழி?” என்றவனைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்த ஆழி,

 

“இது கூடத் தெரியாட்டி, நானெல்லாம் இந்த வேலைக்கு அன்ஃபிட் முகில். சொன்ன வேலை முடிஞ்சதும் ஆதவ் என்னை ஒரேயடியா முடிச்சிடுவேன்னு சொல்லி இருப்பாரு… அப்படி எதுவும் நடக்கக்கூடாது… எனக்கு எதுவும் ஆகிட கூடாதுனு பயந்து, நீ எனக்குப் பாதுகாப்ப என்னையே சுத்திட்டு இருக்க… ஆம் ஐ ரைட்” என்றதும் முகில் ஆமாம் என்று தலையாட்டினான்.

 

 

“நீ சொன்னது உண்மைதான். என்ன தான் எனக்கு ஆதவ், விஷ்ணு மேல நம்பிக்கை இருந்தாலும், எங்களுது போலீஸ் புத்தியாச்சே… ஒருவேளை எங்க வேலை முடிஞ்சதும் உன்னை உயிரோட விட்டு வைக்க வேணாம்னு தோனி, உன்னை எதும் செஞ்சிட்ட என்ன பண்றது… அதான் நான்” என்றவனைப் பார்த்து மூவரின் மனது மகிழ்ந்து.

 

“தேங்க்ஸ் முகில்…” என்று முவரும் ஒரே குரலில் சொல்ல முகில், “எதுக்குத் தேங்க்ஸ்” என்று புரியாமல் கேட்டான்.

 

“ப்ச்ச்‌… ஒன்னு இல்ல முகில். சும்மா சொல்லணும்னு தோனுச்சு அவ்ளோதான். ஜஸ்ட லைக் டாட்.” என்ற ஆழி,

 

“நீங்க நெனச்ச மாதிரி எனக்கு ஒன்னும் ஆகாது முகில். அவங்க ரெண்டு பேரும் என்னை எதுவும் செய்ய மாட்டாங்க. யூ டோண்ட் வொரி. அப்படி எதும் நடந்தாலும் என்னைக் கதாப்பாத்திக்குற தைரியம் என்கிட்ட இருக்கு” என்றவள் திரும்பி சைத்து, மீராவை பார்த்து,

 

“இன்கேஸ் எனக்கு எதாவது ஆகிட்ட இவங்க ரெண்டு பேரையும். சேஃப்ப வேற‌ எதாவது கன்ட்ரிக்கு அனுப்பி வச்சிடு முகில்”

 

“ஏய் ச்சீ வாயமூடு… எப்ப பாரு அச்சாணியமா பேச்சிட்டு… அதெல்லாம் நீ நூறு வயசு வரை இருந்து எங்க உயிரை எடுப்ப… இப்ப வந்து அந்த நாய்க்கு என்ன ப்ளான் வச்சிருக்க அதைச் சொல்லு” என்ற சைத்ரா, ஆழி காதை பிடித்து இழுத்துச் சென்றாள்.

 

மாலை மூன்று மணிக்குக் கையில் நிலாவுடன் சவுக்குத் தோப்பில், தவிப்பிப்போடு அங்கும் இங்கும் எதையே பார்த்தபடி இருந்த ஆழி அருகில் வந்தான் விமல்.

 

“ஹாய் ஐ ஆம் விமல்.” என்று‌ அவன் ஆழி முன் தன் வலது கையை நீட்ட, ஆழி அவனை முறைத்து விட்டு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள்.

 

“சாரி மேடம். என்னைத் தப்ப நினைக்கதீங்க… நானும் கொஞ்ச நேரமா பாத்துட்டு இருக்கேன். நீங்க ரொம்ப நேர்வஸா இருக்கீங்க… அங்கயும் இங்கயும் பார்த்துட்டே இருந்தீங்க, எனி ப்ராப்ளம்? மே ஐ ஹெல்ப் யூ” என்று ஈஈஈயென இளிக்க, ஆழி அவனை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்து,

 

‘வாடி மகனே வா… மொளச்சு மூணு ஏல விடல, அதுக்குள்ள உனக்குப் பொம்ள கேக்குது பொறுக்கி நாயே. பாத்தாளே நான் உன்னைவிடப் பெரிய பொண்ணுன்னு உனக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சும் என்கிட்ட வந்து ஜொள்ளு விட்டுட்டா இருக்க நீயி… வுடுடா வுட, வாய்ல இருக்க மொத்த ஜொள்ளையும் இப்பவே வுட்று, இனிமே உன் வாய்ல இருந்து ஒன்னு வரும்னா, அது ரத்தம் மட்டும் தான். கூட அய்யோ… அம்மான்ற சத்தமும்’ என்று மனதில் நினைத்தவள், அதைத் துளியும் முகத்தில் காட்டாமல்,

 

“இல்ல சார்… ரெண்டு மணிக்கு என்னோட ஃப்ரண்ட் இங்க வரேன்னு சொன்ன… பட் மணி மூணு ஆகிடுச்சு… இன்னும் அவளைக் காணும். பாப்பா மதியம் சாப்டது, இன்னும் கொஞ்ச நேரம் போனா பசில அழுக ஆரம்பிச்சிடுவா… எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல” என்று அப்பாவியாகச் சொல்ல,

 

“ஒ மை காட். என்ன கெட்ட பழக்கம் இது… ஒரு இடத்துக்கு வரேன்னு சொன்னா சொன்ன நேரத்துக்கு வரவேணாம். இப்படிய ஒரு அழகு குட்டியை காக்க வைக்குறது” என்றவனை ஆழி அழுத்தமாகப் பார்த்தாள்.

 

“அய்யோ தப்ப நினைக்காதீங்க… நான் குழந்தைய சொன்னேன்” என்றவன் நிலா கன்னத்தைக் கிள்ள வர, அவன் கை குழந்தையைத் தொடுவதை விரும்பாத ஆழி, வெடுக்கென்று நிலாவின் முகத்தைத் தான் தோளில் அழுத்திக்கொண்டாள்.

 

“சாரி… பாப்பாக்கு வெளி ஆளுக்க அவளைத் தொட்ட பிடிக்காது. அழுக ஆரம்பிச்சிடுவா”

 

“ஒஒஒ இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே. சரி இப்ப நீங்க என்ன செய்யப்போறீங்க? உங்க ஃப்ரண்டுக்காக இன்னும் வெய்ட் பண்ணப்போறீங்களா. பாவம் இந்தக் குளிர்ல நீங்க இப்படி நிக்குறதை பாக்க என் மனசு தாங்கல? என்று வழிய… ஆழியோடு சேர்த்து அங்கு நடப்பதை ப்ளூடூத் ஹெட்செட் மூலமாகக் கேட்டுக்கொண்டிருந்த சைத்ரா, மீராவுக்கும் கூடப் பத்திக்கொண்டு வந்தது.

 

“ஆழி என்னால முடியலடி… சீக்கிரம் அந்தப் பரதேசிய தூக்கிட்டு வா. எனக்கு அவன் மண்டைய ரெண்ட பொலக்குற அளவு வெறி வருது.” என்று சைத்ரா ஹெட்செடில் கத்த, அந்தச் சத்ததில் ஆழி காது வலித்தது.

 

“என்ன மேடம் நான் கேட்டுட்டு இருக்கேன், நீங்க அமைதிய இருக்கீங்க” என்ற விமலை பார்த்த ஆழி,

 

“ஹான்… இல்ல சார் இதுக்கு மேல இங்க வெய்ட் பண்ண முடியாது. நான் வீட்டுக்குப் போகணும். வீட்ல வேற யாரும் இல்ல.” என்றது தான் விமலின் குறுக்கு புத்தி உள்ளே ஒரு திட்டம் போட, அவன் மரணமே, “சீக்கிரம் என்னைப் பாக்க நீயே ப்ளான் போடுறீயேடா…” என்று அவனைப் பார்த்துச் சிரித்தது.

 

“இப்ப என்ன பண்ணப்போறீங்க மேடம்?” என்று பாவம் போல் கேட்டவன், “வேணும்னா நான் உங்களை வீட்ல ட்ராப் பண்ணவா?” என்று ஆழிக்கு வளையை வீச… அவனுக்குத் தெரியாது அவன் வீசிய வளையில் அவனே விழப்போகிறான் என்று.

 

“ஒஒஒ… ரொம்பத் தேங்க்ஸ் சார். இங்க வண்டி எதுவும் அவ்ளோ சீக்கிரம் கிடைக்காது. அதோட என் வீடு கொஞ்சம் உள்ள இருக்கு, டாக்ஸி கூடக் கிடைக்காது. என்னடா செய்றதுனு தவிச்சு போயிருப்தேன். ரொம்பத் தேங்க்ஸ் சார்” என்ற ஆழி அவன் காரில் ஏறிக் கொண்டவள், கார் கதவில் சின்ன டிவைஸ் ஒன்றை ஒட்டி விட்டாள். இனி அந்தக் காரின் ஜி

பி.எஸ் சை வைத்து விமல் போன திசையை யாரும் கண்டுபிடிக்க முடியாது.

 

ஆழி சொன்ன வழியில், விமல் காரை ஒட்ட, காரின் சைடு விவ் மிரர் வழியே, அவர்கள் சென்ற காரின் பின்னால் சைத்ரா, மீரா கார் பின் தொடர, அந்தக் கார்க்குப் பின்னால் வந்த புல்லடை கவனித்த ஆழி முகத்தில் சின்னதாய் புன்னகை.

 

விமலுடன் ஆழி, பாதி காட்டுக்குள் தனியே தன்னந்தனியே என்று ஒற்றையாக நின்ற அந்த வீட்டுக்கு முன் காரில் வந்து இறங்கினாள்.

 

இனி விமல் கதி??? ஆழியின் ஆட்டம் ஆரம்பம்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!