ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 23

 

ஆழினி, யுவ்ராஜ் அருகில் சென்று அவன் முகத்தை ஒரு நிமிடம் உற்று பார்த்தாள்.

 

 “நான் இதுவரை நெறய பேரை கொன்னு இருக்கேன். பட், அதெல்லாம் வெறும்‌ பணத்துக்காக மட்டும் தான். சோ எப்டி அவங்களை எலிடன்ஸ் இல்லாம முடிக்கனும்னு மட்டும் தான் நினைப்பேன். பட், உங்க விஷயத்தில் தான்டா, எனக்குள் கூட இவ்ளோ மோசமான ஒரு கொடுமையான ஆழி இருக்கான்னு எனக்கே புரிஞ்சிது‌. எனக்கு அவ்ளோ ஈசியா உங்கள கொன்னு நிம்மதியான மரணத்தைத் தர்ர விருப்பம் இல்ல. இதுவரை யாரையும் இது மாதிரி சித்திரவதை பண்ணி யாரையும் கொன்னுருக்கக் கூடாதுனு யோச்சி யோச்சி உங்க ஒவ்வொருத்தரையும் முடிச்சேன்‌. இப்ப உன்னோட முறை” என்றவளை யுவ்ராஜ் முறைத்தான்.

 

“ஏய் யாருடி நீ? எதுக்காக என்னைத் தூக்கி இருக்க… உனக்கு எவ்ளோ பணம் வேணும்னாலும் கேளு ஜஸ்ட் டென் செகண்ட்ஸ்ல அது உன் அக்கவுண்ட்ல இருக்கும். மரியாதைய என்னைப் போகவிடு, இல்ல… இது மட்டும் என் அப்பாக்கு தெரிஞ்சுது” என்றவை பார்த்து ஆழி நக்கலாகச் சிரித்தாள்.

 

“டேய் ஏன்டா சாகப்போற நேரத்தில் காமெடி பண்ணிட்டு… சரி இப்ப என்ன நீ இருக்க இடம் உன் அப்பாக்கு தெரியனும் அவ்ளோதானா… நானே அவருக்கு ஃபோன் போட்டு சொல்றேன்” என்றதும் பதறிய யுவ்ராஜ்,

 

“நோ வேணாம்… அப்பாக்கு என்னைப் பத்தி எதுவும் தெரிய கூடாது.‌‌.. நோ” என்று கத்தினான்.

 

“ப்ச்ச்… ஒரு மனுஷ பிறவிய எனக்கு உன்னைச் சுத்தம புடிக்கலடா. பட் அஷ் அச் சன்ஆ… அஷ் ஏ பிஸ்னஸ் மேனா மட்டும் பாத்த யூ ஆர் தீ பெஸ்ட்… நீ மட்டும் நல்லவனா இருந்திருந்தால் நம்ம நாட்டுக்கு ஒரு நல்ல பிஸ்னஸ் மேன், யார் கண்ட உங்க அப்பாக்கு பிறகு இந்த நாட்டுக்கு ஒரு நல்ல புத்திசாலி தலைவன் கூடக் கிடைச்சிருக்கலாம்… பட், உன்னோட பேட் லக், உன் மூளை தப்பான வழில போய்டுச்சு” என்று உச்சு கொட்டிய ஆழி,

 

“நீ கவலைப்படாத… அதுக்காகப் பெஸ்ட் ட்ரீட்மென்ட் என்கிட்ட இருக்கு” என்றவள், ஒரு சின்னக் கண்ணாடி குடுவையை யுவ்ராஜ் முன் நீட்டினாள்.

 

“இது என்னன்னு உனக்குத் தெரியுதா?” என்றவள் கண்ணில் அக்னி தெறிக்க, யுவ்ராஜ் கண்கள் பயத்தில் விரிய “வேணாம்” என்று கதறினான்‌.

 

“வாவ் அப்ப உனக்கு இந்த ஸ்பைடர் பத்தி தெரியும் போலயே… சூப்பர்” என்ற சைத்து, “மீரா மேக் இட் ஃபர்ஸ்ட்… எனக்கு இவன் துடிக்குறது பாக்கணும்னு ஆசைய இருக்கு” என்று சொல்ல, மீரா ஒரு இன்ஜெக்சனை யுவ்ராஜ் உடம்பில் செலுத்தினாள்.

 

“மீரா என்ன அது? இந்த ஸ்பைடர் என்ன பண்ணும்?” என்று விஷ்ணு ஆர்வமாகக் கேட்க,

 

“அன்னைக்கு நம்ம வாங்கிட்டு வந்த கன்சைன்மெண்ட்ல இருந்தது இந்த ஸ்பைடர் தான் விஷ்ணு. இது கொஞ்சம் ஸ்பெஷல் ஸ்பைடர். இதுக்குப் புடிச்ச சாப்பாடு என்னன்னு தெரியுமா?” என்று கேட்க, ஆதவ், விஷ்ணு, முகில் மூவரும் இல்லை என்று தலையாட்டினர்.

 

“இந்த ஸ்பைடர் மத்த ஸ்பைடர் மாதிரி இல்ல, இதோட ஃபேவரைட் புட் டே மூளை தான்னு சொன்ன நீங்க நம்புவீர்களா” என்ற மீராவை ஆண்கள் மூவரும் அசந்து பார்த்தனர்.

 

“எஸ் நான் கூட இது பத்தி வேள்விபட்டு இருக்கேன். எங்கயே படிச்ச ஞாபகம் இருக்கு.”

 

“ஆமா, ஆதவ்…”

 

“அப்ப அந்த இன்ஜெக்சன் எதுக்கு மீரா?”

 

“அது கொஞ்ச நேரத்துக்கு உடம்பை (paralyzed) செயலிழக்க வச்சிரும். உடம்பை ஆசைக்க முடியாது, பட், வலிய உணர முடியும் அப்படி ஒரு மருந்து விஷ்ணு அது” என்றவளை மெச்சும் பார்வை பார்த்தான் விஷ்ணு.

 

“நீ கெமிக்கல் இன்ஜினியர்னு ப்ரூப் பண்ணிட்ட மீரா, செம்ம”

 

“சரி சரி உங்க ஆளை அப்புறம் பாராட்டலாம்… இப்ப வந்து இவனை எடுத்து இந்தக் காபின் பாக்ஸ்ல ( சவப்பெட்டி) போடுங்க” என்று சைத்ரா அட்ட,

 

“உத்தரவு ராட்சசி” என்ற முகில் யுவ்ராஜை தூக்கி அந்தச் சவப்பெட்டிக்குள் வைத்தான்.

 

ஆழி குனிந்து அவன் முகத்தை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவள், “நீ ஆஷாவ கொன்னுருக்கவும் கூடாது, என் லைஃப்ல வந்திருக்கவும் கூடாது. உன்னால என் வாழ்க்கை அடியோட மாறிப்போச்சு, அதுக்கு நான் உனக்குப் பரிசு குடுக்கணும் இல்ல… அதான் இது” என்றவள் அந்தச் சின்ன ஸ்பைடர்கள் இருந்து கண்ணாடி குடுவையைத் திறந்து அதை யுவ்ராஜ் காதில் வைக்க, அந்த ஸ்பைடர் அவன் காதுக்குள் அன்ன நடை போட்டு அவனை அழிக்கச் சென்றது.

 

“இன்னும் கொஞ்ச நேரம் தான் யுவ்ராஜ். அதுங்க உள்ள போய், பொண்ணுங்களை அனுஅனுவ சித்ரவதை செஞ்சு ரசிச்ச உன்னோட மூளை அதுங்க அனுஅனுவ ரசிச்சு, கொஞ்சம் கொஞ்சம கடிச்சு திங்கும். அப்ப தெரியும் உனக்கு, உன்னால செத்த அந்தப் பொண்ணுங்க எந்தளவு துடிச்சிருப்பாங்கன்னு” என்றவள் கையில் சைத்ரா ஒரு பையைத் தர, அதில் இருந்த எலிகளை மொத்தமாகச் சவப்பெட்டிக்குள் கொட்டி, கண்ணாடியில் செய்திருந்த, மூடியை எடுத்து அந்தச் சவப்பெட்டியை மூடியவள் கண்ணில் அத்தனை குரோதம்.

 

கண்ணாடி வழியே, யுவ்ராஜை ஒருபக்கம் எலிகள் கடிக்க, மறுபக்கம் ஸ்பைடர் கடிக்க, அவன் அனுஅனுவாகத் துடித்துச் சாவதை ஆறு பேரும் ஒரு நிறைவோடு பார்க்க, யுவ்ராஜ் உயிர் உடலைவிட்டுப் பிரிந்திருந்தது. அந்தச் சவப்பெட்டியை அப்டியே அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு கிளம்பினார் ஆறுவரும்.

 

ஆதவ் வீடே அமைதியாக இருந்தது. யாருக்கும் எதுவும் பேச தோன்றவில்லை… அமைதியாக ஆளுக்கு ஒரு பக்கமாக இலக்கில்லாமல் எங்கேயே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தனர். அனைத்தும் முடிந்து விட்டது, இனி எல்லாம் சுபமே என்ற நம்பிக்கையில், நிம்மதியாக அனைவரும் வீடு திரும்ப, அங்கு ஒருத்தி மட்டும் கதறி துடிக்கும் மனதை துளியும் வெளிக்காட்டாமல் அவள் அறைக்குச் சென்று பாத்ரூமில் ஷவருக்கு அடியில் கால் மடக்கி அமர்ந்தவள் தலையில் கொட்டி குளிர்ந்த தண்ணீரால் கூட அவள் மனக்குமுறலை அணைக்க முடியவில்லை.

 

ஒரு வாரம் அமைதியாகக் கழிய, அன்று வெண்மதி அம்மா ஆணைப்படி அனைவரும் ஆதவ் வீட்டில் கூடி இருந்தனர்.

 

முகில் சைத்ரா, விஷ்ணு மீராவின் கல்யாணம் பற்றிப் பேச ஆதவ் வீட்டில் அனைவரும் கூடி இருக்க, ஆழி மட்டும் அங்கு இல்லை.

 

“ஆதவ் நாங்க வந்து ரொம்ப நேரம் ஆகுது… இன்னும் இந்த அழிய காணுமே… எங்க அவ?”

 

“அவ எதோ வேண்டிக்கிட்டு இருந்தாளாம். இன்னைக்கு நல்ல நாள் அதைச் செஞ்சே ஆகணும்னு அடம்புடிச்சு கோயிலுக்குப் போயிருக்க” என்றதும் மீராவும் சைத்ராவும் அதிர்ந்து விட்டனர்.

 

“என்ன சொல்றீங்க ஆதவ்… அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல..‌. எங்களுக்கும் கோயிலுக்கு ரொம்பத் தூரம். நாங்க மூணு பேரும் இதுவரை கோயிலுக்கு எல்லாம் போனதே இல்ல.‌‌.. நாங்க வாழந்த வாழ்க்கைக்கு, எங்களுக்கு எப்டி இதுல எல்லாம் நம்பிக்கை வரும் சொல்லுங்க, அதுவும் ஆழி எல்லாம் வாய்ப்பே இல்ல. அவ கண்டிப்பா கோயிலுக்குப் போயிருக்க மாட்டா… சம்திங் ராங்” என்று மீரா உறுதியாகச் சொல்ல, ஆதவ்வுக்குத் தூக்கிவாரி போட்டது.

 

“டேய் ஆதவ் மீரா சொல்றதை பாத்த எதோ தப்ப தெரியுது‌.‌”

 

“ஆமா ஆதவ், விஷ்ணு சொல்றது கரெக்ட் தான். நானும் இந்த ஒரு வாரமா அவ நடவடிக்கைய பாத்துட்டு தான் இருக்கேன். அவ மனசுல வேற என்னமோ திட்டம் போட்டு வச்சிருக்காளோன்னு எனக்குத் தோனுது” என்ற முகிலை திரும்பி பார்த்த ஆதவ்க்கு எதோ ஞாபகம் வர, வேகமாக ஆழி அறைக்குச் சென்று அங்கிருந்த பேப்பர்களை எல்லாம் எடுத்து பாக்க, அங்கிருந்த ஒரு பிரிண்ட் அவுட் டை எடுத்து பார்த்தவன் அப்படியே சிலையாக நிற்க, அவன் கண்ணில் அத்தனை கோபம். அந்த நொடி மட்டும் ஆழி அவன் முன் இருந்திருந்தால் அவளைக் கொலையே செய்திருப்பான் அவன்.

 

ஆதவ் பின்னாலேயே ஓடி வந்த மற்றவர்கள் என்ன என்று கேட்க, விஷ்ணு ஆதவ் கையில் இருந்த பேப்பரை பாத்தவன், “இவளுக்கு எவ்ளோ திமிர் இருந்த இப்டி செஞ்சிருப்பா” என்று கத்த,

 

“விஷ்ணு என்னாச்சு, ஆழி எங்க” என்று பதறினார் மீராவும் சைத்ராவும்.

 

“அவ போய்ட்டா… ஒரேயடியா போய்டட்டா… நம்ம யாரும் வேணாம்னு முடிவு பண்ணி இந்த நாட்டைவிட்டே போற…” என்று அந்தப் பேப்பர் மீராவிடம் கொடுக்க, அது கனடா செல்வதற்கான ஃப்லைட் டிக்கெட் புக் செய்ததை உறுதிப்படுத்தும் பிரிண்ட் அவுட்.

 

“டேய் ஆதவ் நீ வாடா, ஃப்லைட்டுக்கு இன்னும் டைம் இருக்கு, நம்ம வேகமாகப் போய் அவளைப் புடிச்சிடலாம்..‌. அதெப்படி அவ நம்மயும், நிலாவையும் விட்டு போறான்னு நானும் பார்க்குறேன். நீ வாடா” என்ற முகில், நிலாவையும் தூக்கிக்கொண்டு, அவனையும் இழுத்துக்கொண்டு ஏர்போர்ட் விரைந்தான்.

 

அவர்கள் வருவதற்கு முன்பே அந்த ஃப்லைட் கிளம்பி விட, அனைவரும் மனமுடைந்து நின்றனர்.

 

“ம்மா… ம்மா” என்று நிலா பேசும் ஓசை கேட்டு ஆதவ் திரும்பி நிலாவை பார்க்க, குழந்தை தன் பிஞ்சு விரலை நீட்டி காட்டிய திசையில், சேரில் உட்கார்ந்தபடி, அழுது கொண்டிருந்த ஆழி தெரிய, அந்த நேரம் கண்களைத் துடைத்தபடி திரும்பிய ஆழியும் நிலாவை கையில் வைத்துக்கொண்டு நின்ற ஆதவ்வை பார்த்தாள்.

 

கையில் இருந்த பாஸ்போர்ட், மற்றும் டிக்கெட்டை கீழே போட்டுவிட்டு வேகமாக ஆதவ் அருகில் வந்த ஆழி, குழந்தையைத் தூக்கப்போக, ஆதவ் அவளா கையைத் தட்டிவிட்டான் ஆதவ்.

 

“நீங்க இவளை தூக்குற உரிமைய இழந்து ரொம்ப நேரம் ஆச்சு மிஸ். ஆழினி மேடம். எப்ப எங்களை விட்டு போகணும்னு நீங்க முடிவு செஞ்சிங்களே, அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு..‌.” என்ற ஆதவ் திரும்பி நடந்தான்.

 

“ஆதவ் ப்ளீஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க, நான் போகணும் நெனச்சேன் தான்… பட், எ… என்ன… என்னால போக முடியல” என்று உடைந்து அழுதாள் ஆழி.

 

“என்னால பாப்பாவை விட்டு, உங்கள விட்டு போக முடியல ஆதவ். பட், அட் தீ சேம் டைம் என்னால உங்க கூட இருக்கவும் முடியாது. எனக்கு அந்தத் தகுதி இல்ல, என்ன இருந்தாலும் நான்” என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் விட, ஆதவ் அவளைத் திருப்பிப் பார்த்துத் தீயாக முறைத்தான்.

 

“நீ எப்பவும் உன்னைப் பத்தி மட்டும் தான் யோசிப்ப இல்ல… போறதுக்கு முன்னாடி ஒரு முறை ஒரே ஒரு முறை என்னைப் பத்தி யோச்சியாடி… ஏற்கனவே ஒருத்தி விட்டு போன வலியே இன்னும்‌ ஆறாம உள்ள வலிச்சிட்டு இருக்கு, இப்ப நீயும் அதே இடத்துல… ஏன்டி ஏன்? நானும் என் பொண்ணும் அப்படி என்ன பாவம் பண்ணோம்.” என்றவன் ஆழி தலைமுடியை கொத்தாக பற்றி அவள் முகத்தைத் தன்னருகே கொண்டு வந்து,

 

“அன்னைக்கு நைட் நமக்குள் நடந்தது லவ்னு நெனச்சேன்டி, நான் தொடும் போது, உன் கண்ணுல எனக்கான காதலை நான் பாத்தேன். உனக்கும் என்மேல காதல் இருக்குன்னு உணர்ந்த பிறகு தான்டி, உன்னை நான் முழுசா எனக்கானவள ஆக்கிக்கிட்டேன். பட், இப்ப தான் எனக்குப் புரியுது… என் கண்ணு தப்பு பண்ணிடுச்சு, அது என்னை ஏமாத்திடுச்சு… நமக்குள்ள நடந்தது லவ் இல்ல, வெறும் லாஸ்ட் தான்னு நீ சொல்லாம சொல்லிட்ட, தேங்க்ஸ் ஆழி மேடம்… ரொம்பத் தேங்க்ஸ்… குட் பைய்” என்றவன் அங்கிருந்து சொல்ல, அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தையில் ஆழி மொத்தமாகச் செத்துவிட்டாள்.

 

விஷ்ணுவும் முகிலும் ஆதவ் பின்னாலேயே, “நில்லுடா நில்லுடா” என்று கத்திகொண்டே செல்ல, மீராவும் சைத்ராவும் என்ன செய்வது என்று புரியாமல் சிலையாக நின்ற ஆழியை இழுத்துக்கொண்டு அவர்கள் பின்னால் ஓடி வந்தனர்.

 

“டேய் ஆதவ் சொல்றத கேளு… அவ ஏதோ புத்திகெட்டு இப்டி பண்ணிட்டா, அதுக்காக நீ இப்டி அவ வேணாம்னு விட்டு வர்ரது சரியில்ல, நல்லா நாலு வார்த்தை கேட்டுட்டு வாடி வீட்டுக்குனு இழுத்துட்டு போவீயா, அதைவிட்டு” என்று விமல் பேசும்போதே, அங்கு ஓடி வந்த மீராவும் சைத்ராவும்,

 

“ஆதவ் சார்… ப்ளீஸ் சார் வந்து அவகிட்ட பேசுங்க, அவளைப் பாக்கவே ஒரு மாதிரி இருக்கு, பிரம்ம புடிச்சவ மாதிரி இருக்கா, அவளைப் பாக்கவே பயமா இருக்கு… ப்ளீஸ் வந்து அவகிட்ட பேசுங்க, அட்லீஸ்ட் பாப்பாவயாது அவ கையில் குடுங்க” என்று கெஞ்சும் போதே, “ஆதவ்” என்று ஆழி கத்து ஓசை கேட்டு, அனைவரும் திரும்பி பார்க்க,

 

அங்கு ஆழி ரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடக்க, அவளை இடித்துவிட்டு ஓடி இருந்தது ஒரு கார்.

 

ஆதவ் சொன்ன வார்த்தையின் வீரியம் தாங்காமல், அப்படியே நடந்து நடுச் சாலைக்கு வந்தவள், அங்குக் கார் வருவது தெரியாமல் போக, வேகமாக வந்த கார் அவளை மோதி இருந்தது.

 

“உனக்கு ஒன்னும் ஆகாதுடி… உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன். நீ எனக்கு வேணும். உனக்கு ஒன்னும் ஆகாது” என்று ஆதவ் தன் மடியில் இருந்த ஆழியின் முகத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டே இருக்க, ஆழி அரை மயக்கத்தில் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

“உங்க கண்ணு உங்ககிட்ட பொய் சொல்லல ஆதவ். அது உங்கள ஏமாத்தல… நா… நான் தான் உங்களையும், என்னையுமே ஏமாத்திக்கிட்டேன். ப்ளீஸ் ஆதவ் இன்னோரு முறை தயவுசெஞ்சு, அன்னைக்கு நமக்குள்ள நடந்ததை லாஸட்னு சொல்லதீங்க ஆதவ்… ப்ளீஸ் ஆதவ். நிலா பாப்பா மேல சத்தியமா சொல்றேன், அது லாஸ்ட் இல்ல ஆதவ்…” என்று மூச்சை பிடித்துகொண்டு அவள்‌ பேச, ஆதவ் கதறி அழுதுவிட்டான்.

 

“இல்லடி… சத்தியம நான் அப்டி நினைக்கல… நீ என்னை விட்டு போக நெனச்சேன்ற கோவத்தில் தான், நான் கண்டபடி பேசிட்டேன். சாரிடி சாரி” என்று அவள் கையை எடுத்து அவன் கன்னத்தில் அடித்துக்கொண்டு அழ, ஆழி அவன் கண்ணைத் துடைத்தாள்.

 

“ப்ளீஸ் ஆதவ் அழதீங்க, எனக்கு யார் அழுதாலும் புடிக்காது, அதுவும் என் புருஷன் அழுத சுத்தமா புடிக்காது” என்று வலியோடு சிரிக்க, ஆதவ் அவளை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

 

“எனக்கு ஒரு ஆசை ஆதவ். நான் செத்துட்ட” எனும்போதே, ஆதவ் அவள் இதழ்களைக் கையால் மூடி, “அப்டி எல்லாம் ஒன்னு ஆகாது” என்றவனைப் பார்த்து சிரித்தபடி, அவள் இதழ்களை மூடி இருந்த அவன் விரல்களில் முத்தமிட்டாள்.

 

“இல்ல ஆதவ் எனக்குத் தெரியுது… நான் திரும்பி வரமாட்டேனு தோனுது…”

 

“ஏய் உன் திருவாயக் கொஞ்சம் மூடிட்டு இரு..‌. உனக்கு எதுவும் ஆகாது”

 

“சரி உங்க இஷ்டம்… பட், ஒருவேளை அப்டி எதுவும் ஆகிட்ட, ப்ளீஸ் என்னோட உடம்பை தனம் பண்ணிடுங்க ஆதவ். ஆஷாவோட தியாகம் வேஸ்ட்ட போகக்கூடாது. என்னோட எல்லா ஆர்கன்ஸ்ஸையும் டொனேட் பண்ணிடுங்க… இதுவரை நான் செஞ்ச எல்லாப் பாவத்துக்கும் அது பரிகாரமா இருக்கட்டும். இதை என்னோட கடைசி ஆசைனு நினைச்சு செய்ங்க ஆதவ்” என்றவள் முழுதாக மயங்க தொடக்க, எக்கி ஆதவ் இதழ்களில் தன் இதழை லேசாக ஒற்றி எடுத்து, “ஐ லவ் யூ ஆதவ். நானும் உங்களை மனசார விரும்புறேன்” என்றவள் ஆதவ் மடியிலேயே மயங்கி விழுந்தாள்.