இருப்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 15

Screenshot_2021-06-21-17-30-01-1-a0d7b682

இருப்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 15

Epi15

திங்கள்‌ தினமன்று திங்கள்‌ உலகுக்கு உயிராய்‌ ஒளி கொடுக்கும்‌ சுப வேளை புதிய ரக கார்களின்‌ உலகம்‌ என இருந்த அவ்விடம்‌, நண்பர்களின்‌ கூட்டு முயற்சியால்‌ உருவாக்கப்பட அந்நிறுவனம்‌ நல்லபடியாக, சிறப்பாக பெரியோரின் ஆசீர்வாதத்தோடு இனிதே திறந்து வைக்கப்பட்டது. வீட்டினர்‌ அனைவரும்‌ கலந்து கொண்டனர்‌. பிரபா நீண்ட நாட்களுக்கு பின்னர்‌ வந்திருக்க அனைவரும்‌ அவன்‌ நலம்‌ விசாரித்து, அம்மூவரின்‌ நட்பையும்‌ பாராட்டினர்‌.விஜய்‌ இல்லாதது அனைவரும்‌ உணரும்‌ இடமா இன்று அவ்விடம்‌ காணப்பட்டது. பிரபாவின்‌ அக்கா கணவர்‌ மட்டுமே ஆஸ்திரேலியாவில்‌ இருந்து இரண்டு நாள்‌ விடுப்பில்‌ வந்திருந்தார்‌. பிரபாவுடனும்‌ அவர்‌ உற்ற தோழனாகவே பழகுவார்‌. அங்கு சென்றிருந்த நேரம்‌ விஜய்க்கும்‌ அவருக்கும்‌ நல்ல நற்பொன்று ஏற்பட்டிருந்தது. அதனாலே அவர்‌ வந்திருந்தார்‌. ஷோரூமில்‌ பொருத்தப்பட்டிருந்த கேமரா விஜயின்‌ லேப்டாப்பில்‌ ஓட அவன்‌ ஜெர்மனியில்‌ இருந்த வண்ணமே திறப்பு விழாவில்‌ கலந்து கொண்டான்‌. தருண்‌, நிவியின்‌ காதல்‌ கண்களாலே பேசக்‌ கண்டவன்‌, ஸ்ரீயை கட்டி அணைத்து அவளுடன் ஆசையாக பேசிய அருணாவை பார்க்க உள்ளம்‌ குளிர்ந்து போனது. மஞ்சள் நிறத்தில்‌ அடர் பச்சை பார்டர்‌ இட்ட அனார்கலி வகை சுடிதார் ஒன்று அவள்‌ உடலுக்கு பந்தமாக பொருந்தி இருக்க, ‘அச்சோ! அழகுடி இன்னைக்கும்‌ யெல்லோவா, உனக்கும்‌ அந்த கலருக்கும்‌ ஒரு மேட்சிங்‌ இருக்கத்தான்‌ செய்யுது.’ ஒரு புறம்‌ தோளில்‌ அடர் பச்சை மெல்லிய ஷால்‌ பின்பண்ணப்பட்டு அதனை பின்‌ பக்கமாக முன்னால்‌ எடுத்து ஒரு கையால்‌ பிடித்திருக்க மற்ற கையில் அலைபேசியுடன் போனிடெல்‌ இட்ட கூந்தல்‌ அசைந்தாட தன்‌ அன்னையிடம்‌ பேசுபசவளை காணக்கான, இன்று அவ்விடம்‌ தான்‌ இல்லாததை எண்ணி இன்று அந்த தனிமையை நான்கு மாதங்களில்‌ உணர்ந்தான்‌…

 

அடிக்கடி அருணா அங்கும்‌ இங்கும்‌ பார்ப்பதை உணர்ந்தவள்‌ “என்னாச்சு ஆண்ட்டி?”எனக் கேட்க,

 

“எப்படியும்‌ இங்க இருக்க கேமரா அவன் தொலைபேசிக்கு கனெக்ட்‌ பண்ணி இருப்பான்‌. அதான்‌ அவன்‌ பார்த்துட்டு தான்‌ இருக்கான்‌. என்னாலதான்‌ அவன்‌ இல்லாம இருக்க முடியல.” அருணா கண்‌ கலங்கக்கூற,’எனக்கும்‌ தான்‌ ஆண்ட்டி அவங்கள பார்க்காம இருக்க முடியல. அச்சோ நானும்‌ தெரிவேனா அவங்க கண்களுக்கு’ மனதால்‌ நினைத்தவள்‌ ‘

 

“ஆன்ட்டி அப்படியெல்லாம்‌ ஒன்னும்‌ இல்லை. அவங்க வந்துருவாங்க. இவ்வளவு பாசமான அம்மாவை விட்டுட்டு இருக்காங்கன்னா காரணம்‌ இல்லாமையா இருக்கும்‌.அண்‌… ‘ அண்ணி என சொல்ல வந்ததை இடை நிறுத்தி,

 

‘நிவி அக்காவும்‌ அவங்க மனச மாத்திக்கிட்டாங்க போல. அவங்களும்‌ ஹாப்பியா இருக்காங்க பாருங்க.”எனவும்‌,

 

“அவ விஜய்‌ போன நாளைல இருந்து இப்படி ஹாப்பியா தான்‌ இருக்கா. எனக்கும்‌ அதான்‌ சந்தேகமா இருக்கு. என்‌ பையனுக்காக இவ பண்ணலையோ. அப்டின்னா அவ

அழுந்து புகம்பிக்கிட்டு,நாங்க அவளை சமாதானம்‌ பண்ணிக்கிட்டு இல்ல இருக்கணும்‌.நான்‌ என்‌ பையன்கிட்ட பேசி இருக்கலாம்‌.”

அருணா பேசுவதை கேட்டவளுக்கு ஒன்றுமே பதில்‌ சொல்ல முடியவில்லை. அவ்விடம்‌ மாதவி வந்து, ” ஸ்ரீ குட்டி

போகலாமா? குட்டி.. அப்பா இப்போ போனாத்தான்‌ உனக்கு தேவையானது வாங்க டைமிருக்கும்‌னு சொல்ராங்க.”

 

அவரை முறைத்தவள்‌,”வீட்லதான்‌ குட்டின்னா இங்கயும்‌ வந்து குட்டி குட்டின்னு ஏலம்‌ விட்ற. ” தாரா அவருடன்‌ சண்டைக்கு செல்ல, “பார்த்தியா அருணா இவ வாயை”

 

“அதானே என்ன நீ குட்டி குட்டின்னு சொல்ற அவள்‌ என்ன அப்டியா இருக்கா தங்க சிலையாட்டம்‌ இருக்கா. முதல்ல வீட்டுக்கு போனதும்‌ சுத்திப்போடு. என்‌ கண்ணேபட்டிருக்கும்‌. இவ கூட இருந்தது எனக்கு என்‌ பையன்‌ கூட இருந்தா போல பீல்‌ பண்ணேன்‌. தேங்க்ஸ்‌ டா.”அருணா அவள்‌ கைகளை பிடித்துக்கொண்டு கூற .

 

“அச்சோ அப்டில்லாம்‌ இல்லை. உங்க பொண்ணாவே நினச்சு கோங்க ஆண்ட்டி …

 

“கண்டிப்பா இன்னொரு நாள்‌ வீட்டுக்கு வரேன்‌ அருணா.இப்போ நாங்க கிளம்புறோம்‌ … “

என அவர்களிடமிருந்து விடைபெற்று தாராவுக்கு தேவையான ஆடைகள்‌

வாங்கிக்கொண்டு வீடு சென்றனர்‌.

******

 

தாரா வேலைக்கு சேர்ந்து ஆயிற்று இன்றோடு ஆறு மாதங்கள்‌….

 

அவளுக்கு அத்‌ தொழிலானது இனிதாய்‌ அதேவேளை சிறந்த அனுபவமாக இருந்து வருகின்றது. பிரபாகரனின்‌ வீட்டின்‌ மேல்‌ மாடியில்‌ தங்கியிருந்தவர்கள்‌ வார இறுதி நாட்களில்‌ தாரா அவளது வீட்டிட்கும்‌ புன்யா அவளது வீட்டிட்கும்‌ சென்று வந்தனர்‌. இவர்கள்‌ காலை எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி மாலை ஐந்து மணிக்கெல்லாம்‌ வந்து விடுவர்‌. பிரபா

காலை 8மணிக்கு தான்‌ எழும்புவதே. அவன்‌ கிளம்பி செல்ல ஒன்பது, ஒன்பது முப்பதை தொட்டு விடும்‌. இரவுஎட்டு மணியளவில்‌ தான்‌ வருவான்‌. அவன்‌ வரும்‌

நேரங்களில்‌ சில நேரங்கள்‌ மாடியில்‌ வெளியே நண்பிகள்‌ இருவரும்‌ மாடித்திட்டில்‌ அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க அவன்‌ கீழிருந்தும்‌ இவர்கள்‌ மேலிருந்தும்‌ பேசிக்கொள்வர்‌.

நண்பனின்‌ தங்கை என்ற உரிமையில்‌ கதைத்தாலும்‌ இன்னொரு பெண்‌ உடனிருப்பதால்‌ எப்போதும்‌ மாடிக்கு

சென்றதில்லை.தாராவும்‌ அதிகமா பேசாததால்‌ எப்போதும்‌ யாரையேனும்‌ வம்பிழுத்து கலகலப்பாக இருக்கும்‌ பிரபாவுக்கு கொஞ்சம்‌ போரிங்‌ தான்‌.

 

புன்யாவும்‌ அவனுடன்‌ பேசியதில்லை. நேருக்கு நேர்‌ சந்தித்து பேசும்‌ வாய்ப்புகள்‌ அமையவில்லை இன்னும்‌. அமைந்தால்‌ அவனுக்கு வம்பிளுக்க ஆள்‌ கிடைக்கலாம்‌.

 

தருண்‌ நிவியின்‌ காதல்‌ இருவரை ஒருவருக்கொருவர்‌ நேராக சந்தித்து பேசாமல்‌ இருக்க முடியாத அளவுக்கு வளர்த்திருந்தது. அடிக்கடி வெளி இடங்களில்‌ சந்தித்துக்கொண்டனர்‌. இப்போதெல்லாம்‌ நிவி பேச சத்தமாக பேச முடியா விடினும்‌ சிறு குழந்தை பேச ஆரம்பித்த புதிதில்‌ ஆசையாக பேசுவதை போல இருந்தது. வீட்டில்‌ அவர்களை பற்றி பேசவா என தருணை அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாள்‌.

 

விஜய்‌ பேசும்‌ வரையில்‌ எதுவுமே பேச வேண்டாம்‌ அன்று தருண்‌ கூறிக்கொண்டு இருந்தான்‌.

 

அருணா அத்தை தன்னிடம்‌ முன்பு போல பேசுவதில்லை. அவர்‌ ஏனோ தன்னிடம்‌ பேசுவதை தவிர்ப்பதாகவே உணர்கிறேன்‌ என நிவி கூற,

“அவங்களுக்கு எப்படியும்‌ என்னமோ நடந்திருக்குனு புரியுது போல. நீ அவனுக்காக உயிரை விடப்போய்‌ நூலிழையில்‌ பிழைத்திருக்கிறாய்‌. அத்தோடு அவனும்‌ வீட்டை பிரிந்து இருக்கிறான்‌. அப்படித்தானே அவர்கள்‌ கண்ணோட்டம்‌. ஆனால்‌ அவர்களுக்கு உன்னில்‌ சந்தோஷத்தையே பார்க்க முடிகிறது. சோ அவங்களுக்கு குளப்பமாக தானே இருக்கும்‌. ” என தருண் கூறினான்

 

“ஹ்ம்ம்‌ எல்லாம்‌ என்னால வந்தது. நான் பிடிவாதம் காட்டிருக்கமா, ஒழுங்கா என்‌ ஈகோ விட்டுட்டு உன்கிட்டயும்‌ எல்லார் கிட்டயும்‌ உன்னை லவ்‌ பண்றத சொல்லிருக்கலாம்‌. வீட்ல வேணாம்னா சொல்லப்போறாங்க. “நிவி வருந்த அவளது கையைப் பற்றிக் கொண்டவன்‌,

 

“நிவிம்மா.எல்லாமே கரெக்ட்‌ தான்‌. ஆனா கரெக்டான டைம்ல தப்பு பண்ணிட்டு. இப்போ தப்பான டைம்ல அதை கரெக்ட்‌ பண்ண பார்க்காத. இதுல அவன்‌ லைபும்‌ அடங்கி இருக்கு.உண்மையா அன்னிக்கு உனக்கு ஏதும்‌ ஒரு கெட்டது நடந்திருந்தால்‌.அவன்‌ லைஃப்‌ முழுக்கவே எவ்வளவு மன கஷ்டத்தோட வாழ்ந்திருப்பான்‌? என்‌ நிலைமை… செத்துருப்பேன்டி.” பிடித்திருந்த கைகளில்‌ அவன்‌ தந்த அழுத்தம்‌ அவன்‌ தவிப்பை கூற… ‘

 

“ஐம்‌ சாரி தரு…’ அவனைக்‌ கட்டிக் கொண்டவள்‌ உண்மையா நானே இன்னும்‌ அந்த பயத்துல இருந்து வெளில வரல. அத்துவுக்கும்‌ உனக்கும்‌ எவ்வளவு பெரிய கஷ்டம்‌ ஆகி இருக்கும்‌ இப்போதான்‌ இந்த மரமண்டைக்கு புரியுது. சோரிப்பா. ” கண்கலங்க கூறினாள்‌.

 

“ஆனால்‌ அத்து என்னை மன்னிக்கவே மாட்டான்னு தோணுது. அன்னைக்கு என்கூட ஹாஸ்பிடல்ல அவன்‌ பேசினதுல இருந்தே புரிஞ்சிகிட்டேன்‌.எவ்வளவு என்னை வெறுத்துட்டான்னு. “

 

“ச்சே… ச்சே… அவனால எப்பயும்‌ அப்படி இருக்க முடியாது. அதுக்காகத்தான்‌ அவன்‌ இங்க இருந்து போனதே. அவன்‌ வரும்‌ போது பழையபடி எல்லாம்‌ மாறியிருக்கனும்னு நினைக்குறான்‌. சோ அதுக்கான வேலையை அவன்‌தான்‌ பார்க்கணும்‌. நாம நடுவுல சொதப்பிட்டு அவனுக்கு கஷ்டத்தை கொடுக்க வேணாம்‌ ஓகே… ” தருண்‌ நிவியிடம்‌ கூறியவன்‌,அவளை தினமும்‌ சந்திக்கும்‌ அவர்களது ஷோரூம்‌ ஆபிஸில் இருந்து வெளி வர,

 

“நல்ல வருவீங்கடா ரெண்டும்‌ நான்‌ ஆஸ்திரேலியாவுல இருந்து இங்க வந்து உங்க வேலையும்‌ சேர்த்து ஷோரூம்ல உட்கார்ந்து இருக்க, உங்களுக்கு இது லவர்‌ பார்க்கா?  நல்லா இருக்கே.தனியா ஒரு சின்ன பையனை வச்சுகிட்டு, இரு இரு உன்‌ அப்பாவுக்கு போனை போட்டு உன்னை போட்டு தள்ளுறேன்‌. ” என பிரபா இவர்களை முறைத்துக்கொள்ள…

 

நிவியோ அவனை பார்த்து,” உனக்கு இதெல்லாம்‌ செட்டாவல ப்ரோ.இவனையும்‌ இங்கயே வச்சுக்கோ அப்போ தினமும்‌ எனக்கு இவனை மீட்‌ பண்ணலாம்‌.” என சிரித்தவள்‌ நான் வரேன்‌ என அவர்களிடம்‌ விடைபெற்று சென்றாள்‌.

 

கையிலிருந்த அலைபேசியை காதுக்கு கொடுத்த பிரபா, “டேய்‌ விஜய்‌, மவனே என்னை இவங்க கிட்ட தனியா புலம்ப விட்டுட்டு நீ மட்டுமே அங்க ஜாலியா இருக்கல்ல. முதல்ல பெட்டி படுக்கையை தூக்கிகிட்டு வர்ற வழியப்பாரு.”

 

“இவன்‌ இவ்வளவு நேரம்‌ லைன்லயா இருந்தான்‌.” தருண்‌ கேட்கவும்‌,

” ஹ்ம்ம்‌ நிவி பேசுரதை கேட்கனும்னான்‌ அதுதான்‌ ” எனவும்,

 

“குடு”  என்று அவன்‌ கைக்கு எடுத்தவன்‌,

 

“இதுக்கு நீ அவள்‌ கூடவே பேசி இருக்கலாம்‌.நீயும்‌ கஷ்டப்பட்டுகிட்டு அவளும்‌ வருத்தமாக தான்‌ இருக்காள்‌.”

 

“இத பாருடா … அவங்க வருத்தப்பட்டா சார்‌ அழுறாரு… டேய்‌ சும்மா லவர்‌ பாய்‌ டாக்கெல்லாம்‌ என்கிட்ட காட்டாத. அவகூட பேசணுமா வேணாமான்னு நான் பார்த்துக்கிறேன். இடையில்‌ நீ… ‘ என விஜய்‌ பேசுவதை இடை நிறுத்திய தருண்‌,” சத்தியமா உங்க ரெண்டு பேருக்கும்‌ இடைல நான்‌ வரலப்பா. ‘என்றவன் அவள்‌ பேசியவற்றை கூறவும்‌,

 

“ஓகே நா பார்த்துக்குறேன்‌. சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சிரலாம்‌ என்றான்‌.”

 

“நான் கல்யாணத்தை பற்றி பேசலடா. நீ வீட்டுக்கு வர வழியப்பாரு…”

 

“பார்க்கலாம்‌.இன்னும்‌ சிக்ஸ்‌ மன்த்‌ இருக்கு டா. இடைல எப்படி வர்றது. ஷோரூம்‌ எப்படி போய்ட்டு இருக்கு. பிரபாவுக்கு கஷ்டமா இருக்காம? கொஞ்சம்‌ இடையில்‌ வந்து பார்த்துக்கோடா…”

 

“அதெல்லாம்‌ பிரச்சினை இல்ல. நா அப்பப்ப வரேன்‌ தானே. அதெல்லாம்‌ அவனால்‌ பார்த்துக்கலாம்‌. நீ அதைப்பற்றி யோசிக்காதே” எனவும்‌

 

“டேய்‌ நீ அப்பப்ப எதுக்கு வர? எனக்கு ஹெல்புக்கா இல்ல உன்‌ பேபி யா பார்க்கவா?. பெருசா என்னமோ எனக்கு ஹெல்ப்புக்கு வரேன்னு கதை விட்றாண்டா நம்பாத, இவ்வளவு தூரம்‌ வர்ரவன்‌ பக்கத்துல தங்கி இருக்க தங்கச்சிய பார்க்க வர மாட்டான்‌. எனக்கொரு நாளைக்கு என்கூட தங்கி கம்பனி தர மாட்டேங்குறான்‌. இரு மவனே உன்‌ தங்கச்சிய ஏத்தி விடுறேன்‌.” பிரபா தருணை கலாய்க்க,

 

“டேய்‌ குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணாம இருடா. ஏற்கனவே என்னை வச்சு ஓட்டுவா இதுல இதையும்‌ சொன்னா முடிஞ்சு ‘ என நண்பர்கள்‌ கலகலத்து அலைபேசியை துண்டத்தனர்.

 

தாரா, புன்யாவின்‌ ஆபிஸ்‌ ஆடைகளானது லோங்‌ ஸ்லீவ்‌ வைட்‌ ஷர்ட்‌ ( ப்ளெளஸ்‌ பேட்டர்னில்‌) மற்றும்‌ பிளாக்‌ பாண்ட்‌  அவர்களது கம்பனி ஸ்டாப்ஸ்‌ அனைவரும்‌ ஒன்று போலவே அணிந்திருந்தனர்‌. தாராவுக்கு அவ்வுடையானது அவள்‌ உயரத்திற்கும்‌ அவளது போனிடெய்ல்‌ கூந்தலும்‌ சேர்த்து இன்னும்‌ அழகு சேர்த்தது.தாராவை அவளது திறமையை கண்டு மெச்சி கடந்த மூன்று மாதங்களாக ராஜின்‌ தலைமையின்‌ கீழ்‌ அவர்களது மூன்று கம்பனி ப்ராஞ்சுகளினதும்‌ அக்கெளன்ட்‌ பொறுப்பை பார்த்துக்கொள்ள தந்திருந்தார்‌. முதலில்‌ சற்று தடுமாற்றமாக இருந்தாலும.இப்பொது சரி வர நேர்த்தியாக செய்து வந்தாள்‌. இவள்‌ இன்னாரென்று சமீபத்திலேயே தெரிந்து கொண்டவர்‌,” விஜய்‌ பிரென்ட்‌ தருண்‌ சிஸ்டரா. அப்படின்னா டேலன்டா தான்‌ இருப்ப.”

 

 என்‌ பையன்‌ சம்பந்த பட்ட எல்லாமே சூப்பர்‌. எனும்‌ வகையில்‌ அவர்‌ பேச்சு.தாராவுக்கும்‌ அது மகிழ்வே.ஆனால்‌ ஒரே ஒரு நட்டம்‌. ஒரே ஒரு சிக்கல்‌ அவள்‌ அவரின்‌ கீழ்‌ வேலைக்கு சென்றதில்‌.ஒரே ஒரு நட்டம்‌ என்ன வென்றால்‌ விஜயுடன்‌ பேசும்‌ வாய்ப்பை இழந்திருந்தாள்‌. மூன்று மாதங்கள்‌ சென்ற பின்‌ அவர்களது வேலையை பார்த்து விட்டு அவர்களுடன்‌ அறிமுகமாகிக்‌ கொள்வதாக கூறியிருந்தான்‌ விஜய்‌. மூன்று மாதம்‌ முடிய அவள்‌ ராஜின்‌ கீழ்‌ செல்ல புன்யாவையே விஜய்‌ கண்டான்‌. கண்டவனுக்கு ஷாக்கிங்‌ தான்‌. பிரகாஷ்‌ அறிமுக படுத்த முன்னமே,

 

“ஹாய்‌ ஹீரோ எப்டி இருக்கீங்க என்னை இங்க எதிர்‌ பார்க்கல இல்ல. ஆனா இன்னுமொரு ஷூாக்‌ இருக்கு. பட்‌ அது எவ்வளவு தூரம்‌ உங்களை தாக்கும்னு தெரியல.” என புன்யா அவனை பேசவிடாமல்‌ கூற. பிரகாஷ்‌ இவர்களை, இவர்களது பேச்சை வேடிக்கை பார்க்கும்‌ படியானது.

 

“யூ மீண்‌ ஸ்ரீ?”  விஜய்‌ கேட்க…

 

“வாட்‌?” இது புன்யா.

 

“இல்ல… தாரா ஸ்ரீ?” எனவும்‌.

 

சிரித்துக்கொண்டவள்‌ ஓஹ்‌! யெஸ்‌.” என்றாள்‌ புன்யா புன்னகையுடன்‌.அவனால்‌ நம்பவே முடியவில்லை. புன்யாவும்‌ அவன்‌ மகிழ்வை கண்டுக்கொண்டாள்‌.  ஆனாலும்‌ தாராவிடம்‌ இது பற்றி இன்னமும்‌ கூற வில்லை. தந்தையுடன்‌ தாரா இருக்க அவனுக்கும்‌ பேசும்‌ சந்தர்ப்பங்கள்‌ கிடைக்க மறுத்தன…

 

ஒரே ஒரு சிக்கல்‌ என்னவென்றால்‌ நிவியின்‌ அண்ணன்‌ ஹரி கல்யாணத்தின்‌ போது ஒருவனுக்கு பயந்து மயங்கி விழுந்தாளே…

(ஞாபகம்‌ இருக்கா லவ்லிஸ்‌?வினோத்‌ அவன்‌ அவளது பிரிவிலேயே வேளை பார்க்கிறான்‌…)

 

முதல்‌ இரண்டு மாதங்கள்‌ வேலை டென்ஷனில்‌ அவள்‌ சுற்றுப்புறத்தை கவனிக்கவில்லை. அத்தோடு இவ்‌ இரண்டரை வருடங்களில்‌ அவன்‌ தோற்றம்‌ சற்று மாற்றம்‌ அடைந்திருந்தது. அடையாளமும்‌ தெரியவில்லை. இந்த ஒரு வாரக்காலமாக அவன்‌ யாரென்பதை அவனே கூற மயக்கம்‌ வரா விட்டாலும்‌ பயத்தில்‌ நடுக்கம்தான்‌.சரளமாக அனைவருடனும்‌ கதைத்து விடமாட்டாள்‌. ரமேஷுடன்‌ என்றாலும்‌ வேலை தவிர்த்து பேச்சில்லை. ஓகே, யெஸ்‌, நோ அவ்வளவே.வீட்டினர்‌ தவிர்த்து பிரபாவுடன்‌ கொஞ்சம்‌ அதிகம்‌ பேசுவாள்‌. மற்றபடி ஏதோ ஒரு நடுக்கம்‌ அவளுக்கு. புன்யாவிடம்‌ இவனை பற்றி கூற. என்ன பேசினான்‌ என புன்யா கேட்கவும்‌, “அவனை அறிமுகப்படுத்திக் கிட்டான்‌.” என்றாள்‌ தாரா.

“அச்சோ அவ்வளவு தானே.”

“ஆனா என்னையே உத்து உத்து பார்க்குற மாதிரி தோணுதுடி.”தாரா பயந்து கூற,

 

“சரி பார்த்துக்கலாம்‌ விடு. நார்மலா எல்லோர்‌ கூடவும்‌ பிரெண்ட்லிய தானே பேசுறான்‌. அப்படித்தான்‌ உன்கூடவும்‌ இருக்கும்‌. நீ பயந்துகிட்டே பார்குறதால உனக்கு அப்படி தோணுது போல.” புன்யா அவளை இலகுவாக்கக் கூற,

“ஹ்ம்ம்‌ இருக்கும்‌.ஆனா மனசுக்கு சரியா படல எனக்கு.”

 

“ஓகே ஓகே மறுபடி பேசினா பார்க்கலாம்‌ பேபி விடு… ” என அப்பேச்சினை முடித்திருந்தனர்‌.

வினோத்‌ தாராவுடன்‌ பேசாவிட்டாலும்‌ அவளை பார்க்கும்‌ பார்வையில்‌ மாற்றத்தினை உணர்த்தவளுக்கு உள்ளம்‌ படபடப்பு தான்‌.

 

இன்று ஆபிஸ்‌ வந்த தாரா அவள்‌ சீட்டில்‌ அமர்ந்து அன்றைய வேலைகளை பார்க்க, எப்போதும்‌ நேரத்துக்கு வரும்‌ அவளது பாஸ்‌ வரவில்லை இன்னும்‌. சற்று நேரத்தில்‌ அவளருகே வந்த ராஜின்‌ உதவியாளர்,

“மேம்‌, சார்‌ லைன்ல இருக்காங்க ஊங்ககிட்ட குடுக்க சொன்னாங்க.” என போனை அவளிடம்‌ கொடுக்க அவள்‌ காதுக்குவைத்தவள்‌,

” குட்‌ மோனிங்‌ சார்‌. ”  எனவும்,

 

“மோனிங்‌ மா. எனக்கொரு ஹெல்ப்‌ பண்ணணுமே.” ராஜ்‌கேட்க,

 

“சொல்லுங்க சார்‌.” என்றாள்‌.

“முக்கியமான டாகுமெண்ட்‌ ஒன்னு வீட்ல இருக்கு அதை இன்னைக்கே சப்மிட்‌ பண்ணனும்‌. ஆண்டிக்கு கொஞ்சம்‌ உடம்புக்கு முடியல. நீ கொஞ்சம்‌ வந்தன்னா வீட்ல இருந்தே அதை பினிஷ்‌ பண்ணி அனுப்ப முடியும்‌. நா இங்க இருந்து டீடெயில்ஸ்‌ தந்து செய்றதுன்னா கஷ்டம்‌ அதுதான்‌.” என ராஜ்‌ கூற,

” ஓகே சார்‌ வர்றேன்‌. ” என்றாள்‌.

 

“அப்போ என்‌ பி.ஏ கூட வண்டில வந்துரும்மா. ”  என போனை வைக்க,

” நீங்க தேவையானதை எடுத்துட்டு சொல்லுங்க மேம்‌ போகலாம்‌. ” என அவன்‌ வெளியேறினான்‌..

 

தருணுக்கு அழைத்தவள், “அண்ணா ராஜ்‌ அங்கிள்‌ ஆபிஸ்‌ வேலை ஒன்னுக்காக வீட்டுக்கு அவங்க பி ஏ கூட வரிங்களான்னு கேக்குறாங்க. நா போய்ட்டு வரவா?” எனவும்‌,

 

“ஓகேடா போய்ட்டு வா. இதுக்கெல்லாம்‌ கேட்கணுமா என்ன? ” என் தருண்‌ கேட்க,

 

“சரிண்ணா.’ என்றவள்‌, ‘அப்போ அண்ணி கூடவும்‌ பேசிட்டு வரேன்‌.” என்று சொல்லி வைத்தாள். மடிக்கணினி சில முக்கிய பைல்களை எடுத்தவள்‌ அவளது ஸ்ரீயின்‌ இல்லம்‌ நோக்கி பயணமானாள்‌.

Leave a Reply

error: Content is protected !!