‘இரும்புக்கோர் பூ இதயம்’ -அத்தியாயம் 9

Screenshot_2021-06-21-17-30-01-1-72a6d44f

அத்தியாயம் 8இன் தொடர்

 

‘கடைசில எல்லோர் கிட்டயும் என்னை  கெட்டவனா காட்டிட்டா.”

 

விஜயின் முகத்தினில் இருந்த ஒளிர்வு, மேகத்துள் மறைந்த சூரியன் என்றே பொழிவிழந்தது….

 

Epi9

 

“எனக்காக இப்படி பண்ணிட்டானு நம்ம வீட்ல என்னையவே வேற்று ஆள் போல பார்க்குறாங்க. இதுல உனக்காகன்னு தெரிஞ்சது என்ன பூகம்பம் கிளம்புமோ தெரில.’

 

‘சோ இவ்வளவு நாள் எப்படி இருந்தியோ அது போலயே இதை பற்றி யார் கூடவும் பேசாத. புரிஞ்சுதா?”

 எனவும் தருணுக்கும் தலையை ஆட்டுவதை தவிர வேறு வழி…

 அவர்கள் அருகே ஹரி வர அவ்விடம் விட்டு தருண் எழுந்தான். அவனருகே வந்த ஹரி,

“பார்த்தல்ல இதுக்குதான் என் தங்கைனாலும் அளவோட வச்சுக்குவேன் இல்லன்னா  இப்படித்தான்.நா என்னமோ அவளோட பாசமே இல்லாதவன் போலவும் அதையும் சேர்ந்து நீ  மொத்தமா அவளுக்கு கொடுப்பதாக நினைத்து நடந்துகிட்டதானே கடைசில உன்னையே குற்றவாளி ஆக்கிட்டா.”

எனக் கூற,அவ்விடம் வந்த அருணா,

 

“ஹரி என்ன பேசுற நீ அவளே அங்க உயிர்க்கு போராடிட்டு இருக்கா நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க.அவள் எவ்வளவு பாசம் வச்சிருந்தா இவனை விட தன்னோட உயிர் பெருசில்லன்னு நினைச்சிருப்பா…”

 

“அய்யோ ஆன்ட்டி” என தருண் இடை புக  அவனது கையை பிடித்த விஜய் ஒன்றும் பேசாது அமர்ந்திருந்தான். அவனையும் பேசவிடவில்லை.

“வாய திறந்த அதுக்கு அப்புறம் நான் உனக்கு இல்லன்னு நினைச்சுக்கோ.” தருணுக்கு மட்டும் கேட்குமாறு விஜய் கூறினான்.

 

அதே நேரம் டாக்டர் வெளியில் வர ராஜ் அவரிடம் விசாரிக்க வாங்க உள்ள போய் பேசலாம் என அவருடன் ஹரியும் மீனாவும்  உள்ளே சென்றனர்.

 

“என்னாச்சு டாக்டர்  என் பொண்ணுக்கு? “

 

“மீனா அவர பேச விடு இப்படி உட்காரு.” என ராஜின் அருகில் அமர வைத்துக்கொண்டார்.

” Mr. ராஜ் அவங்க யூஸ் பண்ணின மெட்டீரியல் ரொம்ப சாப்ட் அன்ட் சில்க்.அவங்க கழுத்துல நல்லா டைட்டா இறுகி இருக்கு,அதனால உள்ள குரல்வளை டேமேஜ் ஆகி இருக்கு.

 

“அப்போ என் பொண்ணுனால பேச முடியாதுன்னு சொல்றிங்களா டாக்டர்?”  மீனா அவர் இருகையை விட்டு எழுந்தே விட்டார்.

 

“அவங்களால பேச முடியாதுன்னு சொல்லலைங்க. அவங்களால ரொம்ப சத்தமா கதைக்க முடியும்னு தோணல. வாய்ஸ் வரும் ஆனால் ரொம்ப சத்தமா எல்லாம் கதைக்க வராது.அதுவும் கொஞ்ச நாள் ஆகும் சரிபண்ணலாம் பட் டைம் எடுக்கும். 

நாம ஜஸ்ட் ஒருத்தர கையாள நெரிச்சு  கொஞ்ச நேரத்துல கையை விட்டுட்டுட்டாலுமே பாருங்க அவங்களால கொஞ்ச நேரத்திற்கு மூச்சுக்கு கஷ்டமாகி இருமல் ஏற்பட்டு குரல் வரவே கொஞ்ச நேரம் ஆகும் இல்லையா.அப்படித்தான் இவங்களுக்கும்.

கொஞ்சநாளைக்கு அவங்களால  முடியாமல் தான் இருக்கும். ஸ்ட்ரைன் பண்ணிக்க  விடாதீங்க.அவங்களால முடியும்னு தோணுறப்ப கொஞ்சமா கதைக்க விடுங்க.மெதுவா டேமேஜ்  ரெகவர் ஆகுறவரைக்கும் ‘

 

“இப்போ தூங்குறாங்க டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க.அவங்கள மீட் பண்ண ஈவினிங் நம்ம ஹாஸ்பிடல் வர மன நல மருத்துவர் ஒருத்தர் வருவாங்க. அவங்க கூடவும் அவங்கள கதைக்க விட்டு பார்க்கலாம். டோன்ட் வொரி எவரிதின்ங் வில் பி ஓகே. “

எனவும் டாக்டருக்கு நன்றி கூறி வெளியே வர வெளியே இருந்த விஜயை கண்ட மீனா அவனருகே வந்து,

 

“இப்போ சந்தோசமாடா.என் பொண்ணுக்கு பேச்சு வராதாம் சொல்ராங்க.இதுக்கு அவ செத்தே போய் இருக்கலாம்.”

 

“மீனா என்ன பேசுற நீ?”  என வள்ளிப்பாட்டி அவரை தான் புறம் திருப்ப,

“டாக்டர் என்ன சொன்னாங்க நீ என்ன பேசுற?”

என ராஜும் அதட்ட ,

“முதல்ல போய் பொண்ண பாரு.” என உள்ளே அனுப்பி விட்டு,

“நீ வீட்டுக்கு போ ஸ்ரீ.” என பாட்டி அவனை அங்கிருந்து போகச் சொல்லவும்,

“எப்படி கஷ்டப்பட்டு வளர்த்து இப்படி பார்க்க வெச்சுடேல்ல என புலம்பியவாரே.”மீனா  நிவியை பார்க்க உள்ளே சென்றார்.

 

விஜயோ பாட்டியை காண அவரும் அவனுடன் ஒன்றும் பேசாது சென்றுவிட்டார். அருணாவையும் ஒருமுறை பார்த்தவன் யாரும்  அவனிடம் ஏதும் பேசாது இருக்க அவ்விடம் தான் மட்டும் தனியானதை உணர்ந்தவன் அவ்விடம் விட்டு வெளியில் சென்றான். தருண் செய்வதறியாது நிவியை ஒருமுறையேனும்  பார்க்க துடித்த மனதை அடக்கி. இப்போது விஜய்க்கு ஆறுதலாக இருப்பதே முக்கியம் என்றெண்ணி அவன் பின்னே ஓடினான்.

 

“சாரிடா எல்லாம் என்னாலத்தான். எல்லாருமே உன்னை தப்பா புரிஞ்சிகிட்டாங்க. நிவி எந்திரிச்சதும் நா எல்லோர் கிட்டயும் சொல்லி மன்னிப்பு கேட்குறேன்டா.”

 

 “நீ எதுக்கு சும்மா தேவை இல்லாம உன்மேல  பழியை போட்டுகுற. நிவி எந்திரிச்சதும் நீ உன் காதலை அவகிட்ட சொல்லிக்கோ.எனக்கும் அவகிட்ட ஒன்னே ஒன்னு மட்டும் சொல்ல வேண்டி இருக்கு.’ 

‘எப்பவும், எந்த காரணத்திற்காகவும் அவ உனக்காகத்தான் இப்படி ட்ராமா பண்ணினானு தெரிய வேணாம். ஏன் இது ட்ராமான்னு நமக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.’

 

‘விஜய் நிவிதாவை வேணாம்னு சொன்னதாலதான் இவ இந்த முடிவுக்கு  வந்தாள்.இது அப்படியே மத்தவங்களுக்கு உண்மையா இருக்கட்டும் ஓகே. நீ இடைல எதாவது சொல்லி வச்ச அதுக்கப்புறம் நானும் உனக்கில்லை.உன் காதலும் கடைசி வரை  உனக்கு கிடைக்காது புரிஞ்சிக்கோ.நான் வரேன். முடியும்னா இருந்து அவளை பார்த்து பேசிட்டு போ. எந்திருச்சான்னா எனக்கு கால் ஒன்னு தந்துரு.என்று கூறிக்கொண்டு வண்டியில் ஏறினான். ஏறியவன்,

 

“தருண் நீதான் பிரெண்டு, அவன் நட்பு தான் முக்கியம், காதல் எல்லாம் அப்புறம்னு பார்த்த.ஆனா நான்  அப்படியெல்லாம் பார்த்துட்டு இருக்க மாட்டேன் வரேன்.” என்றவன் சென்றுவிட்டான்.

 

‘இவன் என்ன சொல்லிட்டு போறான்.’ ஏற்கனவே குழம்பி இருப்பவனுக்கு அவன் புலம்பல்  விளங்கவே இல்லை.

 

தருணோடு சாதாரணமாக பேசிவிட்டு வந்தவனது மனது இரும்பென இறுகி இருந்தது. யாருமே அவனிடம் எதுவும் கேட்க வில்லையே. அருணாவுமே அமைதியாக இருக்க,மிகவும் கவலையாகி விட்டது.

‘ச்சே ஓங்கி ஸ்டெரிங்கில் அடித்தவன், நிவி  எழுந்து விஜய்க்காக செய்யவில்லை என்று கூறினாலுமே யாரும் நம்ப போவதில்லை. அப்படியே நம்பினாலும். அதென்ன நம்பிக்கை. அவள் கூறி…

அம்மாக்கும் என்கூட பேசணும்னு தோணல. அப்பாவுமே அவங்க தங்கச்சி பொண்ணை தான் பார்த்தாங்க.பாட்டியுமே…’

 

உண்மையாக பாசம் வைத்து அப்பாசத்தினை  உணராது அதை உதாசீனப்படுத்தும் போது ஏற்படும் வலி அதிகம் தான் அது சிறிதானாலுமே.

ஹரியை விட அவளுடன் ஒன்றாகவே இருப்பவன் வீட்டிலும் அனைவரது மனம் நோகும் படி நடவாதவன், அவளை திருமணம் முடிக்க முடியாது என்கிறான். காரணம் இருக்காதா? ஏன் யாருமே நினைக்க  வில்லை…’

 

வண்டியை  ஓரமாக நிருத்தியவன் தலை சாய்ந்து அமர்ந்திருக்க அவ்விடமோ அன்று தாராவை சந்தித்த அதே இடம்…

 

ப்ராஜெக்ட் சப்மிட்  பண்ணச்சென்ற தோழிகள் அவர்களது டூ வீலர் வண்டியில் வர விஜயின் வண்டியை பார்த்த தாரா வண்டியை அவ்விடம்  ஸ்லோ செய்து நிறுத்த,

“என்னாச்சு?”  என அனிதாவின் கேள்விக்கு விஜயின் காரை கட்டினாள்.. 

 

“ஓஹ்!  விஜய் அண்ணா.” எனவும்.

 

“ஹ்ம்ம்,தரு அண்ணா அவங்க வீட்டுக்கு போறதா நேற்று சொன்னாங்களே இவங்க கூட  இருப்பாங்களோ?” எனவும். 

 

“எதுக்கு இங்க நிறுத்தி இருக்காங்க ஒரு வேளை நாம வரும் வரை இருக்காங்களோ என்னவோ?” என அனிதா கூற

 

“நாம காலேஜ் வர்றது அவங்களுக்கு எப்படி தெரியும். அதோட அண்ணாவோட வண்டிய காணோமே.” என தாரா சொல்ல,

 

” இந்தப் பக்கம் இருந்து இரண்டு பேருமே பேசிக்கிட்டா ஆச்சா.வா போய் பார்க்கலாம். ” என புன்யா கூறினாள்.   

 

தாராவோ, “வேணாம் வேணாம். அண்ணா  இல்லன்னா, நாம வழிய போய் பேசுறோம்னு நினச்சுட்டாங்கன்னா? “

 

“இவ ஒரு இம்ச. இப்போ என்னதான்  பண்ணணுங்குற. நீதானே அவருடைய வண்டிய பார்த்து நிறுத்தின.”

 

“ஹ்ம்ம் ஆமா.”

 

“அப்புறம் என்ன, வாயேண்டி.” என்றவள்

“சரி இரு அன்னக்கி போலவே ஹார்ன்  அடிப்போம்” என்றவள், இரு தரம் ஹாரனை  அழுத்த 

 

வண்டி நிறுத்தி இருக்கையில் சாய்ந்து அமர்த்திருந்தவன் எதோ ஒரு உந்துதலில் இடப்பக்கம் பார்க்க தாரா வண்டியை  நிறுத்துவதைக்கண்டான். இவனது வண்டிக் கண்ணாடி அவளுக்கு உள்ளிருந்தவர்களை பார்க்கமுடியாது இருக்க அவர்கள் வந்தது முதல் அவர்களையே தான் பார்த்திருந்தான்.

 

இன்று நீல வண்ண சுடி அணிந்து அன்று கண்டது போல மஞ்சள் வண்ண. துப்பட்டாவை கழுத்தை சுற்றி போட்டிருந்தாள்.’மஞ்சள் நிறம் இல்லாம ட்ரெஸ் போடவே மாட்டாளோ?ரொம்ப புடிக்குமோ?’

அவளது மையிட்ட விழிகளில் இவன் வண்டியை  கண்டது முதல் இருந்த தவிப்பு. நண்பிகளுடன் கதைக்கும் போது இருக்கும் அவள் முக மாற்றங்களை பார்த்தவன்,

‘இவ இதழ் பிரிக்காமலே எப்படித்தான் பேசுறாளோ.எப்படிப்பா வெளில சவுண்ட் வருது கஷ்டம் தான் விஜய் உன் பாடு.’

 

ஒரு நிமிடம் தன்னை சுற்றி இருந்த கவலை மறந்தவனாய் அவளை பார்த்திருந்தான்.

புன்யா ஹார்ன் அடிக்கவும் சிரித்துக்கொண்டவன், கண்ணாடியை கீழிறக்கி “ஹாய்!’ என இவர்களை பார்த்து கை அசைத்து  வண்டியை விட்டு இறங்கினான்..

 

பாதை மாறி இவர்கள் அருகே வரும் வரை அவனையே இமைக்காது பார்த்திருந்தாள்  தாரா. .

 

“ஹாய்ண்ணா…” என புன்யாவும் அனிதாவும் கூற சுயத்துக்கு வந்தவள் அவனை பார்த்து இதழ் பிரியா சிரிப்பொன்றை வழங்கினாள்.

 

“என்ன தினமும் இங்கே நிறுதுவீங்களா? ” என அனிதா கேட்க,

“என்னண்ணா நம்ம காலேஜ் பக்கமாவே வண்டி அடிக்கடி நிருத்துறீங்க. என்ன ரகசியம் “என புன்யா கேட்டிக, 

 

“ஏதோ ஒரு நினைவுல நிறுத்திட்டேன் மா.”

 

“அதுதான்ண்ணா இந்த பக்கமே ஏன்  நிக்குதுகுன்றேன்.” தாராவை புரிந்தவளாய் அவளை பார்த்தவாறே புன்யா விஜயை வம்பிழுக்க, அதை கண்டுகொண்டவன்

 

“உங்களை மீட் பண்ணனும்னு இருக்கு போல அதான் தானா வண்டி இங்க நின்னுட்டு.” என தாராவை பார்க்க,

பட படக்கும் விழிகளுடன் கூர் நுனி மூக்கில்  வைரக்கல் மின்ன அதற்கு நிகராக கன்னங்கள் ரெண்டும் சிவந்து மினுமினுப்பாக இருந்தது. விரல் தீண்டிட துடித்த மனதை அடக்கியவன்,   “ஆமா என்ன இந்த நேரம் போறிங்க?” என கேட்க

 

“ப்ராஜெக்ட் ஒர்க்ல இருக்கோம்னா.அதுதான்.” எனவும் , “ஓஹ்! அப்படியா ‘என்றிட,

 

“ஹேய் தாரா,தருண் அண்ணா இவங்க கூட இருப்பாங்கன்ன காணோமே” எனவும்,

 

” இல்ல, இவங்க வீட்ல தங்குறதா நைட் சொன்னாங்க அதான் இருப்பங்களோன்னு  தோணிச்சு.’

‘அண்ணா எங்க ?’ எனும் விதமாய் அவனை தாரா பார்க்க,

 

அப்போது தான் விஜய்க்கும் தருண் அதனோடு சேர்ந்து நிவி ஞாபகம் வர அவன் முகமும் மாற்றமடைய,

“ஹான்…அது, தருண் போகவும் தான் நா அவசரமான வேலையா இந்தப்பக்கம் வந்தேன்.”  என்றான்.

தாராவிற்கு விஜயின் முகத்தில் அவனை பார்த்தது முதல் நம்மிடம் பேசினாலும் ஏதோ குறைவது போலவே இருந்தது. அன்று பார்த்தவனது முகம் இப்படி இல்லையே.. எதாவது பிரச்சினையா.கேட்பமா’ என்று யோசித்தவள் எவ்வாறு கேட்பது யோசிக்க,

அவளையே பார்த்தவன்,

 

“எப்பவுமே உங்களை இப்படியே மீட்டாகணும்னு  இருக்கு போல. இன்னொரு நாள் பார்க்கலாம் மா. டைமாச்சு” என்று விடைப்பெற்றவன் . தாராவிடமும் தலையசைத்து திரும்ப,

 

” என்னாச்சு? ” என்றாள். அவள் கேட்டது  இன்னதென்று அவனுக்கு கேட்காவிடினும் அவள் ஏதோ ஒன்று கேட்டது விளங்க அவள் பக்கம் திரும்பினான். அவளது தவிப்பை  பார்த்தவன் அவளை நோக்க,

“ஏதும் ப்ரோப்ளமானு…” திரும்ப கேட்டாள்.

மெலிதாக சிரித்தவன்,

 

” ஹ்ம்ம் இருந்தது. ஆனால் இப்போ இல்லாம  போனது போல இருக்கு.”

 

அவள் கண்கள் விரித்து ‘என்னது?’ என்பதாய் பார்க்கவும் அதில் விழப்போனவன் ,

“நத்திங்” என்று விட்டு’ வரேன்.’என்றவன் பாதை  மாறி வண்டியில் ஏறியும் விட்டான்.

 

புன்யாவோ,”மேடம் உன் கேள்வி  முடிஞ்சதுன்னா வண்டிய எடுங்க.” எனவும் வண்டியை கிளப்பினாள் தாரா.

 

அவள் செல்லும் வரை பார்த்திருந்தவன்,’என் முகத்தை பார்த்து உனக்கு என் கஷ்டம்  புரிஞ்சிக்க முடியுதா ஸ்ரீ…’

 

‘தெரியலடி என்ன பண்றதுன்னு. தருணுக்கு  பிரெண்டா இருந்து அவன் காதலை சேர்க்கணும், வீட்ல பிரச்சினை வந்ததுன்னா   தருணையே சேர்த்துக்க மாட்டாங்க.இதுல என் காதல் பார்க்கலாம்…’

‘உன்கூட பேசணும் பழகனும்னு தோணுது. உன்கூடவே இருக்கணும்னு இருக்கு ஸ்ரீ… “

 

என்னை விட்டு போய் விடாதே ஸ்ரீ

உனக்காக நா வருவேன் ஸ்ரீ 

எனக்காக காத்திருப்ப தானே ஸ்ரீ…

என ஸ்ரீ புராணத்தோடே சற்று மனம் தளர வீடு வந்தான்.