உன் காதல் என் தேடல் 9

உன் காதல் என் தேடல் 9

தேடல் – 9

 

அந்தி சாயும் வேளையில் தூக்கம் கலைந்து கண்விழித்த நிலா அரைத் தூக்கத்தில் கண்களைக் கசக்கியபடி, “தேங்க்ஸ் பாஸ் வீட்டுல ட்ராப் பண்ணதுக்கு. அப்படியே யாழிக்கு ஃபோன் போட்டுக் கொஞ்சம் கீழ இறங்கி வந்து என்னைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்களேன். எனக்குத் தூக்கம் தூக்கமா வருது, என்னால நடக்க முடியாது” என்று முனங்கியவள் அடுத்த நொடி துருவ்வின் கைகளில் இருந்தாள்.

 

“ஏய் யாழி! பரவாயில்லடி. நீ ரொம்ப ஸ்ட்ராங் ஆகிட்ட. அப்படியே அலேக்கா என்னைத் தூக்கிடியே” என்று தூக்கத்தில் உலறியவள் அவள் இடையில் அழுத்திய கைகளின் ஸ்பரிசத்தில் அது யாழினி அல்ல துருவ் என்று உணர்ந்து டக்கெனக் கண்களைத் திறந்தாள். “பாஸ் என்ன பண்றீங்க? என்னைக் கீழ இறக்கி விடுங்க. நானே வீட்டுக்குப் போய்கிறேன்” என்று அவன் கைகளில் துள்ளியவள், முழுதாகத் தூக்கம் தெளிந்து தான் எங்கிருக்கிறோம் என்று சுற்றிப் பார்த்தவளுக்கு மங்கலான வெளிச்சத்தில் அது தன் வீட்டுக்கு போகும் வழி இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிய “டேய் எரும மாடு எங்கடா என்னைத் தூக்கிட்டு போற? மரியாதையா என்னைக் கீழ இறக்கி விடுடா” என்று கத்த…

 

“ஏய்! எப்.எம் ரேடியோ கொஞ்ச நேரம் பேசாம வாடி. நானே கஷ்டப்பட்டு உன்னைத் தூக்கிட்டுப் போறேன். நல்ல தின்னு தின்னு இட்லிகுண்டா மாதிரி பெருத்துப் போய் இருக்க. மனுஷனுக்கு மேல்மூச்சுக் கீழ் மூச்சு வாங்குது. ஏன்டி என்னை ரெண்டு வருஷம் பாக்காம நீ துரும்பா இளச்சி போய்யிருப்பன்னு நெனச்சா நீ நல்லா சாக்லேட், ஐஸ்கிரீம்னு தின்னு தின்னு இப்படி வீங்கிப் போயிருக்க” என்றவன் மேலும் அவளைத் தன் மார்போடு சேர்த்து இறுக்கிக் கொண்டான்.

 

“அடிங் பொறுக்கி ராஸ்கல்! யாரா பார்த்து டா குண்டுன்னு சொல்ற? நீ குண்டு உன் பரம்பரையே குண்டு குண்டு குண்டுக் குடும்பம் டா. மரியாதையா என்ன வீட்டுல கொண்டு விடு. இல்ல இங்க நடக்குறதே வேற ஆமா” என்று விரலால் நீட்டி அவனை மிரட்ட.

 

“முடியாது போடி. நா உன்னைக் கடத்திக்கிட்டு வந்த வேலை நடக்காம உன்னை விடுற ஐடியாவே எனக்கு இல்ல. சும்மா கத்தாம, கம்முன்னு வாடி.”

 

“எது! கடத்திட்டு வந்திருக்கியா? டேய் பன்னி, எரும, கழுத நாசமா போறவனே ஏன்டா இப்டி ஏழவு கூட்ற? நீ என்னைக் கடத்துனது மட்டும் யாழிக்கு தெரிஞ்சுது, நீ கைமா தான்டி மகனே!”

 

“பாக்கலாம் போடி. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு அவளை வச்சு என்னை மிரட்ற அந்த ஊசி மொளகாக்கெல்லாம் இந்தத் துருவ் பயப்பட மாட்டான். பேசாம வாடி, சும்மா நொய் நொய்ன்னிட்டு.”

 

“டேய் எரும… எங்கடா என்னைத் தூக்கிட்டு போற? எங்க பாரு சுத்தி ஒரே மரமா இருக்கு. எனக்கு பயமா இருக்குடா. என்னை வீட்டுக்கு கூட்டிட்டுப் போடா துருவ், ப்ளீஸ் துருவ்” என்று நிலா கெஞ்ச…

 

 ரொம்ப நாட்கள் கழித்து அவள் கொஞ்சும் குரலில் அவன் பெயரைச் சொன்னதும் துருவ்விற்கு உள்ளுக்குள் ஐஸ் மழை பொழிந்தது போல் இருக்க அவளை இன்னும் இன்னும் தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

 

துருவ் நிலாவை சுமந்தபடி, அவன் ஃபேவரேட் பாட்டைப் பாடியபடி, உற்சாகமாக நடக்க நிலா “டேய் துருவ், என்னை எங்கடா தூக்கிட்டுப் போற? சொல்லித் தொலயேன். வராய் நீ வராய்னு எங்கயாது கொண்டு போய் தள்ளி விடப் போறியா”? என்று புலம்பிய படியே இருந்தவளை துருவ் ஒரு இடத்தில் கீழே இறக்கிவிட அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்று அவளுக்குப் புரிந்த போது, அவள் கண்கள் கலங்கித் தவிக்க, அவள் இதயம் தன் வலியைப் பொறுக்கவும் முடியாமல் கத்தி அழவும் முடியாமல், ஊமையாக ஓலமிட்டது.

 

‘ஏன்டா? ஏன்? இப்படி என்னை வாட்டி வதைக்கிற? எனக்கு இருக்குற வலி போதாதுன்னு, இந்த இடத்துக்குக் கூட்டி வந்து என்னை இன்னும் சாகடிக்குறியேடா. என்னால முடியல, சத்தியமா என்னால முடியல டா. இந்த வலியை தாங்கவே முடியல’ என்று அவள் மனதில் போராட்டம் நடக்க அந்த இடத்திற்கு வந்ததால் அவளுக்குள் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பது போல் அவள் முகம் இயல்பாக இருந்தது.

 

அன்ன நடைப்போட்டு அழகாக வான்நிலா மேகத்தின் மீது ஏறி வானில் நடைபயில, அந்த வான் நிலாவோடு தன் மனம் கவர்ந்த பெண் நிலாவையையும் ரசித்துப் பார்த்த துருவ், நிலாவின் கன்னத்தைக் கைகளில் ஏந்தியவன். அவள் கண்களோடு தன் கண்களைக் கலங்க விட்டு தனக்கே சொந்தமான காந்தக் குரலில் “ஐ லவ் யூ டி முகில்” என்று மனதில் இருந்து சொல்ல நிலா மனது எரிமலைக் குழம்பில் கால் வைத்தது போல் எரிந்தது. அவனை அப்படியே இறுக்கி கட்டிக்கொண்டு ஓவெனக் கதறி அழவேண்டும், அவன் சட்டையைத் தன் கண்ணீரால் நனைத்து, தன் இரண்டு வருட தவிப்பைத் தணிக்க வேண்டும் என்று துடித்த அவள் காதல் மனதிற்குக் கடிவாளமிட்டு அடக்கியவள் அமைதியாக நின்றாள்.

 

துருவ் அவள் தோளில் கை போட்டு அணைத்தபடியே, “இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்கில்ல முகில்? இங்க தான இயற்கையை சாட்சியா வச்சு நா என்னோட காதலை உன்கிட்ட சொன்னேன். இங்க தான நீ என்னை முதல்ல கட்டிபுடிச்ச. இங்க இருந்து தான் நம்ம காதல் ஆரம்பம்பிச்சிது. ஏய்! முகில் உனக்கு நெனவிருக்கா? அன்னைக்குக் கூட உன்னை நான் இப்படித் தான் தூக்கிட்டு வந்தேன்” என்று அன்றைய நாள் நினைவுகளை துருவ் சிலாகித்துச் சொல்ல.

 

“ஏன் ஞாபகம் இல்லாம மிஸ்டர்.துருவ்? இங்க தான் நீங்க ஐ லவ் யூ சொன்னீங்கன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு. கொஞ்ச நாள் என்னைக் காதலிக்கிற மாதிரி நடிச்சு என்னை ஏமாத்திட்டு ஓடிப்போனதும் எனக்கு நல்லா நெனவு இருக்கு. ஆனா, இப்ப எதுக்கு நீங்க மறுபடி உங்க காதல் டிராமாவ திரும்ப ஆரம்பிக்குறீங்கன்னு தான் எனக்குப் புரியல. ஒருவேளை ஒரு தடவ கூட இவளை அனுபவிக்காம விட்டுட்டு போய்டோமே. அதை இப்ப செய்யலான்னு எதும் ப்ளான் பண்ணி இருக்கீங்கள துருவ்”? என்றது தான் தாமதம் துருவ்வின் ஐந்து விரல்களும் நிலா கன்னத்தில் ஆழப் பதிந்திருந்தது.

 

“யாரப் பார்த்து என்ன வார்த்தைடி சொன்ன? எப்டிடி உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது? ச்ச இவ்ளோ தான் நீ என்ன காதலிச்ச லட்சணமா”? என்றவன் குரலில் ஆத்திரத்தை விட ஆற்றமை தான் அதிகமாக இருந்தது.

 

துருவ்வை விட அந்த வார்த்தைகள் நிலாவை தான் அதிகமாக வதைத்தது. ஆனால், அதைத் தவிர துருவ்வை விட்டு அவள் விலகவும், அவளை விட்டு துருவ்வை விலக்கி வைக்கவும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. துருவ்வின் உண்மைக் காதலைப் பொய் என்று சொல்வது மட்டுமே அவளை விட்டு அவனை விலக்கி வைக்கும் ஒரே வழி. அந்த வாய்ப்பை கை நழுவ விட நிலா விரும்பவில்லை. மனதை இரும்பாக்கிக் கொண்டு மீண்டும் துருவ்வின் மனதை வார்த்தைகளால் வதைத்தாள்.

 

“நா உன்னை நல்லா தான் புரிஞ்சு வச்சிருக்கேன் துருவ். அதனால தான் உன்னை விட்டு தள்ளியே இருந்தேன். மறுபடி உன்னை ஆஃபிஸ்ல பார்த்ப்போ கூட நீ பாஸ், நா உன்னோட பி.ஏன்ற லிமிட்லயே நின்னுட்டேன். ஏன்னா? உன்ன மாதிரி பணக்காரனுக்குக் காதல் ஒரு விளையாட்டு. வெறும் உடம்புக்காக காதல் அது இதுன்னு சொல்லி எங்கள மாதிரிப் பொண்ணுங்களை ஏமாத்தி உங்களுக்குத் தேவையானது கெடச்சவுடனே, ஜஸ்ட் லைக் தட்னு தூக்கிப் போட்டு போய்ட்டே இருப்பீங்க. நீயும் அந்த ப்ளான்ல தானே என்னைக் காதலிக்கிற மாதிரி நடிச்ச. நல்ல வேள நா என்னை உன்கிட்ட இழக்கல” என்று மனசாட்சி இல்லாமல் அவள் வார்த்தைகள் என்ற அம்புகளை அவன் மீது தொடுக்க துருவ் கண்களில் அடிபட்ட வலியோடு நிலாவைப் பார்த்தான்.

 

“எனக்கு வீட்ல கல்யாணம் ஏற்பாடு நடக்குதுடி. என்னால உன்னைத் தவிர வேற யாரையும் கட்டிக்க முடியாது. அதைப் பத்தி பேசிட்டு, ரெண்டு வருஷம் முன்ன நா ஏன் உன்னோட அம்மாவை பாக்க வர முடியாம போச்சுனு சொல்லிட்டு, நம்ம கல்யாணத்தைப் பத்தி உன் அம்மாகிட்ட எப்ப பேச வரணும்னு கேக்கத் தான்டி உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன். நம்ம காதல் ஆரம்பிச்ச இடத்துலயே நம்ம கல்யாண பேச்சும் ஆரம்பிக்கணும்னு நெனச்சு தான் உன்னை இந்த இடத்துக்கு” என்றவன் தொண்டை அடைத்து குரல் கம்ம, “ஆனா நீ”? என்றவன் இழுத்து மூச்சு விட்டு தன் கோவத்தை அடக்கி “கெளம்பு” என்று விரக்தியாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர நிலா உடைந்த தன் இதயத்தின் சுவடுகளோடு தன் காதல் நினைவுகளையும் அந்த அழகிய இடத்திலேயே விட்டுவிட்டு கிளம்பினாள்.

 

விடியும் பொழுது துருவ், நிலா வீட்டு வாசலில் காரை நிறுத்த… நிலா எதுவும் பேசாமல் மௌனமாக இறங்கி நடக்க “ஒரு நிமிஷம்” என்ற துருவ்வின் குரல் கேட்டு அவள் திரும்பிப் பார்க்க, அதற்குள் துருவ் அவளை நெருங்கி இருந்தான்.

 

“அடுத்த வாரம் நானும் என்னோட குடும்பமும் உன்னைப் பொண்ணு கேட்டு உன் வீட்டுக்கு வரோம்னு உங்க அம்மாகிட்ட சொல்லிடு” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுத் திரும்பியவன், மீண்டும் அவளைத் திரும்பிப் பார்த்து “நைஸ் ட்ரை முகில். நேத்து நீ ரொம்ப நல்லாவே நடிச்ச. அதுவும் நா உன்னைக் காதலிச்சது உன்னோட ஜஸ்ட் ஒரு நைட் ஸ்பென்ட் பண்றதுக்குத் தான்னு சொன்ன பாரு. குட் ஐடியா. எதைச் சொன்னா உண்மையா காதலிச்ச ஒரு ஆம்பள தன் காதலிய வெறுத்து ஒதுக்கித் தூக்கிப் போட்டுப் போவானு தெரிஞ்சு கரெக்ட்டா அந்த ட்ரிக்கை யூஸ் பண்ண நீ. பட், யுவர் பேட் லக், என்னோட முகில் பத்தி அவளை விட இந்த துருவ்வுக்குத் தான் நல்லா தெரியும். நீ என்னை விட்டு விலகிப் போக நெனைக்குறேன்னு எனக்கு நல்லா புரியுது. ஆனா, அது ஏன்னு தான்டி எனக்கு புரியல. நீ என்னையும் என் காதலையும் எப்பவும் சந்தேகப்பட மாட்டேன்னு எனக்கு தெரியும். அப்றம் வேற என்ன காரணம இருக்கும்னு தெரியல? ம்ம்ம்… இட்ஸ் ஓகே முகில். நம்ம கல்யாணம் முடிஞ்சு ஃபர்ஸ்ட் நைட்ல அதைப் பத்தி நா உன்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குறேன். ரொம்ப நேரம் வெளிய நிக்காத. கல்யாணப் பொண்ணு வெயில்பட்டால் கிளாமர் கொறஞ்சிடும். ஓகே பேபி பை பை” என்றவன் அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்து அங்கிருந்து செல்ல நிலா உணர்வுகள் அனைத்தும் எரிந்து சாம்பலான நிலையில் நின்றாள்.

 

நடந்தது அனைத்தையும் கேட்டு நிலாவை விட யாழினி தான் அதிகம் குழம்பிப் போய் இருந்தாள். ‘இந்த துருவ்வை புரிஞ்சுக்கவே முடியலயே. உருகி உருகி நிலாவை லவ் பண்ணிட்டு சொல்லாம கொள்ளாம ஓடிப்போனான். ரெண்டு வருஷம் எங்க போனான்? என்ன ஆனான்னு ஒன்னுமே தெரியல. திடீர்னு ‘தீ பிக் பிஸ்னஸ் மேன்’ அபிநந்தன் வாரிசுன்னு வந்து நிக்கிறான். இதுல நிலாவைப் பொண்ணு கேட்டு அவ அம்மா கிட்ட பேசப்போறேன்னு வேற சொல்றான். இவன் யாருன்னு தெரிஞ்சா அங்க என்னென்ன குண்டு வெடிக்குமோ? நிலா யாருன்னு துருவ் குடும்பத்துக்கு தெரிஞ்ச அங்க என்ன பூகம்பம் கெளம்புமோ…? ஆண்டவா! இதுல எது நிஜம்னு ஒன்னும் புரியலயே. அவன் காதல் உண்மையின்னா? ஏன் அவன் ஓடிப் போகணும்? ஒருவேள நிலா சொன்னா மாதிரி அவனோட சூழ்நிலை சரியில்லாம போயிருக்குமோ? அதான் ரெண்டு வருஷம் எங்களைப் பாக்க வரலயா’ என்று குழம்பினாள். ‘கடவுளே துருவ் காதல் உண்மையா இருந்தால் அவன் நிலாவை உண்மையா நேசிக்கிறது நிஜம்னா இனிமே நிலாவோட சேர்ந்து காலம் பூரா அவனும் அழுகத்தான் வேணுமா? ஏன்? இவங்க வாழ்க்கையில இப்படி விளையாடுறீங்க’ என்றவள் தன் பழைய நண்பனின் நாளைய நிலையை நினைத்து உண்மையாகவே வருந்தினாள்.

 

என்ன தான் துருவ்விற்கு நிலா சொன்னதெல்லாம் பொய் என்று தெரிந்திருந்தாலும், நிலா சொல்லிய வார்த்தைகளை அவனால் தாங்கவே முடியவில்லை. ‘ஏன் முகில்? ஏன் இப்படி செஞ்ச? என்ன அவாய்ட் பண்ண நீ வேற ஏதாவது காரணம் சொல்லி இருக்கலாமேடி. ஏன்டி அப்டி ஒரு வார்த்தை சொன்ன? என் காதலை பொய்னு சொல்லிட்டியேடி. வெறும் உடம்பு சுகத்துக்காகத் தான் நா உன்’ என்றவன் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்க ‘ஒரே ஒரு வார்த்தையில நீ என்னைக் கொன்னுட்ட முகில்’.

 

“விடமாட்டேன்டி. உன்னை விடவே மாட்டேன். நீ சம்மதிக்கிறயோ இல்லையோ இந்த ஜென்மத்தில் நீ தான் எனக்குப் பொண்டாட்டி. நா தான் உனக்குப் புருஷன். கல்யாணம் முடியட்டும்டி இன்னைக்கு நீ பேசுன பேச்சுக்கெல்லாம் உன்னைச் சரியா கவனிக்கிறேன். அதிகமா பேசுற உன் உதட்ட புடிச்சு முதல்ல நல்லா கடிச்சி வைக்கிறேன்டி” என்றவன் தன் அறையில் மாட்டி இருந்த ஃபோட்டோவை பார்த்து “அபி சீக்கிரம் நீ ஃபாரின்ல இருந்து இந்தியா வா. இங்க ஒருத்திக்குப் பேயோட்ட வேண்டி இருக்கு. அதை நீ தான் செய்யணும்” என்றவன் நிலா நினைவுகளோடு உறங்கச் சென்றான். பாவம் அவனுக்குத் தெரியாது, இன்று நடந்ததெல்லாம் வெறும் ட்ரைலர் தான். எந்த அபியை அவன் காதலுக்குத் துணைக்கு அழைக்கிறானோ அந்த அபிநந்தன் தான் இனி மெயின் பிச்சரில் வரப்போகும் பல பிரச்சனைகளுக்குக் காரணமா வில்லன் என்று.

 

நிலா எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த நபர் மிஸ்டர்.அபிநந்தன் நாளை இந்திய மண்ணில் கால் வைக்கப் போகிறார். பல வருடங்களுக்கு முன் ஓடிப்போன அவரைத் தேடிப் பிடித்து வந்து காத்திருக்கும் ட்விஸ்டுகளைச் சமாளிப்பாரா? இல்லை அய்யோ ராமா என்னால முடியல என்று அடுத்த ஃப்ளைட் பிடித்து அப்ஸ்கான்ட் ஆவாரா? துருவ், நிலா காதல் வெல்லுமா?

 

“லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்”…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!