உள்ளத்தின் காதல் நீங்காதடி-21
உள்ளத்தின் காதல் நீங்காதடி-21
காதல்-21
காதல் ஒரு உணர்வு அது எந்த வயதில் வரும் என்பது பற்றி யாரும் ஆராயவில்லை, அதீத பாசம்தான் காதலின் முதல் படியோ, பிறந்த குழந்தையை காட்டி இவள் உன் மனைவி என்கிறார்கள் ஐந்து வயது சிறுவனிடம், அன்றிலிருந்து அவள் மீது காதல் கொள்கிறான் இது எப்படிபட்ட காதல்?
———————-
ராகினி சகுனியாய் மாறி யோசித்தார், இப்படியும் ஒரு மனுசி, தன் அண்ணண் மகள், சொந்த மருமகளுக்கு அதை கூட பொறுத்துக்கொள்வோம் வெறும் பதினொரு வயதே ஆன சின்னஞ்சிறு பதின்மவயது பெண்ணிடம் அவருக்கு ஏன் இத்தனை வஞ்சம்.
அவரின் மனதில் இன்னொரு எண்ணமும் இருந்தது, என்ன தான் அண்ணனிடம் பிடிங்கி கொண்டபோதும் அவருக்கு தான், அண்ணனை விட வசதியில் செழித்தவள் என்ற அகங்காரம் இருந்தது.
அது உண்மையும் கூட ராகினியின் மாமியாருக்கு நிறைய அசையா சொத்துக்கள் உள்ளது, அது எதுவும் வெளியே தெரியாத அளவு அவள் வைத்திருக்கிறாள் என்று அவளது நினைப்பு ஆனால் இந்த உண்மைகள் என்றோ குணசேகருக்கு தெரியும். தன் தங்கையை விட்டுக்கொடுக்க அவர் விரும்பவேயில்லை, அவரை பொறுத்தவரை ராகினி என் தங்கை கேட்க அவளுக்கு உரிமையிருக்கு என்கிட்ட இருக்கு நான் செய்கிறேன் என்று நினைத்தே அவர் அமைதி காத்தது.
அவரை ஏமாளி என்று ராகினி நினைக்க பாவம் அந்த பேதைக்கு தெரியவில்லை உண்மையான சொத்து நாம் சேர்க்கும் நன்மை மட்டுமே. ராஜா சற்றே நல்லவர் அவருக்கு மனைவியின் இந்த செயல்கள் யாவும் சுத்தமாய் பிடிக்கவேயில்லை, மனைவியை எதிர்க்கவும் முடியாமல், ஆதரிக்கவும் முடியாமல் இருதலை கொள்ளி எறும்பாய் தவிக்கும் சாதாரண கணவன் வர்க்கம் அவர்.
அவருக்கு மச்சான் மேல் எப்பொழுதும் தனி பிரியம், அத்தோடு மச்சான் குடும்பத்தின் மீதும். ஒரு நாள் கூட வீட்டில் இருக்கவிடாது தன் மகளிடம் பாசத்தை கொட்ட முடியாது அவர் இழந்தது நிறைய, ஒரு நாள் விடுப்பு எடுக்கிறேன் என்று சொன்னால் கூட விடாது அவரை நச்சரித்து வேலைக்கு அனுப்பிவிடுவார் ராகினி.
ஆனால் அவரது மச்சான் மகளோ, “அப்பா இன்று வீட்டில் இருங்கள்” என்று கூறினால் மறுபேச்சே கிடையாது அன்று குழந்தைகளோடும், மனைவியோடும் ஆனந்தமாய் கழிப்பார் குணசேகரன்.
அவர் வீட்டிலிருக்கும் நாள் மனைவிக்கு ஓய்வு. அவரே சமைத்து அனைவருக்கும் ஊட்டி விட்டு, சாயங்காலமாக நால்வருமாக நடந்தே பக்கத்தில் எங்காவது சென்று வருவது முதல், இரவு கதை சொல்லி தூங்க வைக்கும் வரை அவரின் அன்பில் மூழ்கும் அழகிய குடும்பம் அது.
ராகினி திட்டம் வகுத்தவராக, என்ன தான் அவர் தன் மகளை அவர்களுடன் பழக சொன்னாலும், சுபாவிற்கு இதில் விருப்பமில்லை, அது ஏனென்றால், இவள் நடுவில் சென்றதால் அவர்களோடு இவளால் ஒட்ட முடியவில்லை, எந்த நேரத்தில் அவர்கள் என்ன செய்வர், என்ன யோசிப்பர் என்பது அவர்கள் பேசிவைத்து கொள்வதில்லைத்தான் ஆனால், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வர் அவ்வளவே, ஆனால் அழகாய் அடுத்தடுத்து ஒரு காரியத்தை நேர்த்தியாய் முடிப்பர், அவர்களின் நட்பின் ஆழம் அத்தகையது. இவளுக்கு தான் ஒன்றும் புரியாதே இவள் அவர்களை கண்ணத்தில் கை வைத்துபடி பார்த்துக்கொண்டிருப்பாள். எத்தனை நாள் சும்மாவே இருப்பது அவளுக்கு போர் அடித்தது, வேறு நண்பர்களோடு விளையாட சென்றுவிடுவாள், தாயிடம் உதய் வீட்டிலிருந்ததாக கூறி விடுவாள்.
இருந்தும் மீராவின் நட்பு அவரின் கண்ணை உறுத்தவே செய்தது, இந்த நட்பு பின்னாளில் காதலாய் மாறிவிட்டால், என்று அவரின் மனம் கேவலமாய் யோசித்தது.
இருந்தும் அவர்களின் வசதிக்கு, அவர்கள் மீராவை பெண்ணெடுப்பது நடக்கவே நடக்காது என்று நினைத்தே அமைதிகாத்தார். அவரின் அமைதியும் ஒரு முடிவுக்கு வந்தது.
அன்று கடைதெருவில் உதய்யின் அம்மாவை சந்தித்த ராகினி, லேசாய் தூண்டில் போட்டு பார்த்தார். அவரிடம் “மீனாக்கா நம்ம பக்கத்துவீட்டு சுமி பொண்ணுல அவ ஒரு பணக்கார பையனோட ஓடிப்போய்ட்டாளாம் கேள்விபட்டீங்களா?” என்றார்.
“ஆமா இதுல என்ன இருக்கு காதல் வசதியை பார்த்து வர்றதில்லையே” என்றார் அவர் உளமாற.
இந்த பதிலில் ராகினிக்கு தான் பக்கென்ற இருந்தது. “அதுலாம் இல்லக்கா, எல்லாம் பணம் அவ அவனை பத்தி தெரிஞ்சுக்கிட்டுத்தான் சின்ன வயசுலிருந்து அவன் கூட பழகியிருக்கா” என்று நாக்கில் நரம்பே இல்லாமல் பேசியது.
மீனாட்சிக்கு இந்ந பேச்சு பிடிக்கவில்லை, ஏனெனில் அவர் பொதுவாகவே நல்ல உள்ளம் படைத்தவர் அவருக்கு யாரை பற்றியும் அவதூறு பறப்புவது அறவே பிடிக்காது.
அவரின் அமைதியை கண்ட ராகினியே தொடர்ந்தார் “அவங்க வீட்டுலையும் எல்லாம் ப்ளான் பண்ணி வச்சு செஞ்சிட்டு, இப்போ ஊருக்காக அழுது நடிக்கிறா அந்த சுமி” என்றார்.
அதில் சற்று கடுப்பான மீனாட்சியோ “யாரு எப்படினு நமக்கு தெரியாது ராகினி, எந்தவொரு சம்பவத்தை பத்தி நமக்கு முழு ஞானம் இல்லையோ, அதை பத்தி பேச நமக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார் அவர் சற்றே கடுப்புடன்.
உடனே ராகினி “அதுக்கு சொல்லலை மீனாக்கா, எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ, நம்ம தான் எப்பவும் உசாரா இருக்கணும், இப்போலாம் காலம் கெட்டுகிடக்கு இதில் வேடிக்கை என்னன்னா குடும்பமும் இதுக்கு கூட்டு” என்றார்.
மீனாட்சிக்கு இதுக்கு மேல் அவளோடு பேச விருப்பமில்லை அதனால் அவரே “சரி ராகினி, நான் கிளம்புறேன்” என்று நாசுக்காக நகர்ந்துவிட்டார்.
அதில் அவமானமாய் உணர்ந்தார் ராகினி “போ போ, இனி பாரு தினமும் எதையாவது சொல்லி உன் மனசை நான் மாத்துறேன்” என்று சூளுரைத்தது அவரது மனம். ஆனால் அன்றே அது நடந்தது.
மீனாட்சியம்மாள் வீட்டை அடைந்த போது தலை விண்விண் என்று தெரித்தது, ஏனோ அவருக்கு ராகினியின் பேச்சு அதிகபடியோ என்று தான் தோன்றியது.
அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தனர் மீராவும்,ராதாவும். அனுராதாவிற்கு வெளியில் சிறு வேலை இருப்பதால்,மீராவை உதய் வீட்டில் விட வந்தார்.
அவர்களை இன்முகத்துடன் வரவேற்றதும் தான் வந்த காரணத்தை அவர் கூற “அதுக்கென்ன தாராளமா விட்டுட்டு போங்க அண்ணி” என்றார் அவர் மனதார.
அனுராதா கூறாமல் விட்ட ஒன்று, மீராவிடம் “அம்மா வர லேட்டாகும் நீ அத்தை வீட்டுல இரு” என்று சொன்னதிற்கு அவளோ “வேணாம் மா நான் அத்தை வீட்டுக்கு போகலை” என்று அவள் மறுக்க,அவருக்கும் அவளை அங்குவிட மனமில்லை அவருக்கு தன் நாத்தனாரின் போக்கு தெரியும் இருந்தும் பக்கத்தில் சொந்தம் இருக்க மகளை உதய் வீட்டில் விட்டு செல்வது எத்தனை சரியாக இருக்கும் என்றே யோசித்தார்.
இருந்தும் மகள் அங்கு அடிக்கடி செல்வது வழக்கம்தானே, அதோடு ராகினியை விட மீனா அண்ணி இவளை நல்லா பாத்துப்பாங்க என்றே அவரும் அவளை உதய் வீட்டில் விட்டார்.
மீராவை பார்த்ததும் உதய்யும், சஞ்சய்யும் மகிழ்ந்து விட ஒரே கலாட்டாவாக களிந்தது சிறிது நேரம்.மீனாவும் அவளை நன்றாகவே பார்த்துக்கொண்டார்.
இந்த விசயம் ராகினியை எட்ட அவரின் வஞ்சம் தலை தூக்க நேரே மீனாட்சியிடம் வந்தவள் நடித்தால் மீனாட்சியிடம். “எங்க அண்ணி பண்றது சரியா மீனாக்கா? பக்கத்துல அத்தை நான் குத்துக்கல்லு மாதிரி இருக்கேன், என்கிட்ட பிள்ளையை விடாம எதுக்கு உங்கள்ட்ட விட்டிட்டு போயிருகாங்க” என்று அவர் நொடிந்து கொள்ள.
மீனாவிற்கு ராகினியையும் தெரியும் அனுவையும் தெரியும், அனுராதா செய்வது ஒவ்வொன்றிருக்கு நிச்சயம் காரணம் இருக்கும் என்பதும் தெரியும் ஆகையால் அவர் எதுவும் பேசவில்லை.
“என் அண்ணி கொஞ்சம் பணத்தாசை பிடிச்சவங்க, அவங்களுக்கு எப்பவும் எல்லரோடையும் போட்டித்தான், எங்க அண்ணனை யாருக்கும் எதுவும்செய்யவிடவே மாட்டாங்க” என்று அவர் அடிக்கிக்கொண்டே போக.
உதய்க்கு ஸ்விமிங் கிளாஸ் இருந்ததால் அவன் சென்றுவிடவே,சஞ்சய்யும் நண்பனை பார்க்க சென்றுவிட இவள் மட்டும் தனித்து விடபட்டதால் மீனாட்சியை தேடி வந்தால் மீரா.அப்படி வரும்போது ராகினி பேசியதை கேட்டிருந்தாள்.
அவளுக்கு இதை கேட்க மனம் வலித்தது, துடுக்கான பெண் இருந்தும் தன் அன்னையை அவர் அப்படி கூறியதை இவளால் முதலில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதை விட அவள் பயந்தது மீனாவின் அமைதிக்கு தான்.
‘ஆன்ட்டி ஏன் அமைதியா இருக்காங்க இதை கேட்டுட்டு ,அப்படினா அவங்களும் இதை நம்புறாங்களா?’ என்பதே ஆகும்.
அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காமல் அவள் சென்றுவிட்டாள் வெளியே, எங்க சென்றால் என்பது அவளுக்கே தெரியாது கால் போன போக்கில் நடந்தாள் மீரா.
ராகினி எவ்வளவோ கூறியும் மீனாட்சி வாயையே திறக்காததால் கடுப்புடன் வெளியே வந்தவர், அங்கு ஒரு தங்க செயின் கிடப்பதை பார்த்தார். வீட்டின் நடுஹாலில் அது விழுந்து கிடக்கவே யாரும் பார்க்கா வண்ணம் அதை எடுத்து வைத்துக்கொண்டவர்,அப்படியே நடயை கட்டிவிட்டார்.
அந்த செயின் மீனாவுடையது, அவரது கணவன் முதன் முதலாய். அவருக்கு அளித்த பரிசு அது, சிறிது நேரம் கழித்தே அதை காணவில்லை என்று கண்டறிந்தவர் அதை வீடு முழுக்க தேட. அது கிடைக்கவேயில்லை.
மனம் தளர்ந்தவர் இறங்கி வீதியில் தேடினார், அப்படியே ராகினி இல்லம் வரை வந்துவிட்டவரை கண்டு வாசலில் நின்றிருந்த ராகினி திடுக்கிட்டாலும் ஒன்றும் அறியாதவர் போல் “என்னாச்சுக்கா” என்றார்.
“சங்கிலியை காணோம் ராகினி,” என்றார் வருத்ததுடன்.
போலியாக வருந்தியவரோ “அச்சசோ எத்தனை பவுன் க்கா” என்றார்.
“ஐஞ்சு பவுன் ராகினி, பவுனை விடு அது அவர் எனக்கு முதல் முதலாய் வாங்கி கொடுத்தது” என்றார் மீனா.
“அச்சசோ, இருங்க நானும் வரேன்” என்று அவருடன் சேர்ந்து தேடுவது போல் பாவனை செய்ய, அந்த யோசனை அவரின் கேவலமான மூளையை எட்டியது.
மீனாட்சி வீட்டிலிருந்து ராகினி வெளிய வரும்போது அவரது பக்கத்து வீட்டு சாரங்கன் “உன் அண்ணண் பொண்ணு மீரா இப்பத்தான் அப்படி போச்சு முகமே சரியில்லை எதுவும் பிரச்சனையா” என்று கேட்க.
“அதுலாம் இல்லங்க விளையாட்டு பிள்ளை எங்காவது போவா” என்று சமாளித்து வைத்தார். அவருக்கு தான் அவளை பற்றி எந்த அக்கறையும் கிடையாதே.
அதை இப்பொழுது நினைவு கூர்ந்தவர். “க்கா ஒன்னு சொல்லவா?” என்றாள்.
“என்ன ராகினி” என்றார் அவர்.
“அது வந்து நம்ம மீரா ல” என்று இடைவெளி விட.
“ஆமா, வீட்டுல இருக்கா”
“இல்லக்கா அவ வீட்டுல இல்ல, அவ வெளியே போய்ட்டா”
“என்னாது எப்போ போனா, எங்க போனா?” என்று அவர் பதற.
“தெரியலக்கா, அவசர அவசரமா உங்க வீட்டவிட்டு போனதை நான் பார்த்தேன் ஒரு வேலை செயினை…” என்று அவள் முடிக்ககூட இல்லை, மீனாட்சி பார்த்த உஷ்ண பார்வையில் சப்த நாடியும் அடங்கியது அவருக்கு.
“வாயை மூடு” என்று அவரை அதட்டியவர். “எப்படி உன்னால இப்படி பேச முடியுது, நீயெல்லாம் என்ன ஜென்மம்?” என்று அவர் அவளை திட்ட.
ராகினிக்கு கோபம் வந்தது “சும்மா நிறுத்துங்கக்கா, இப்ப நான் என்ன சொல்லிட்டேன் தப்பு பண்ணாதவ எதுக்கு வீட்டை விட்டு போனாலாம்?” என்று அவர் அவரை குழப்ப.
“பக்கத்துல எங்கையாவது போயிருப்பா திரும்ப வருவா பாரு” என்றார்.
“வர்றவ ஏன் உங்க கிட்ட சொல்லிட்டு போகலை, சும்மா பேசாதீங்க க்கா நான் அப்பவே சென்னேன் என் அண்ணி பணத்தாசை பிடிச்சவங்க அப்றம் அவங்க பெத்தது எப்படி இருக்கும் அப்படித்தான் இருக்கும்” நரம்பில்லாமல் சுழன்றது அந்த நாவு.
மீனாட்சிக்கு எரிச்சல் வந்தது அவருக்கு இனி இவளுடன் பேச விருப்பமில்லை ஆகவே, திரும்பி நடந்தார் விடாது துரத்திய ராகினியோ “அவ அம்மா சொல்லி கொடுத்து அனுப்பியிருப்பா யாருமில்லத்தப்போ இந்த மாதிரி திருட்டிகிட்டு வான்னு” என்று அவர் மேலும் தொடர.
பொறுமையை கை விட்ட மீனாட்சியோ “வாயை மூடு ராகினி, இதுக்கு மேல எதாவது பேசின மரியாதை கெட்டுடும், அவ்ளோ தான் உனக்கு நீயும் பொண்ணு தானா? இப்படியெல்லாம் எப்படி பேசுற நீ, இத்தனைக்கும் உன் சொந்த மருமகள் இதுலையே தெரியுது உன் லட்சணம், நீ பேசினது எதுவும் சரியே இல்ல, நான் வாயை திறக்கலைன்னு நீ ஓவரா பேசுவியா, தேவையில்லாத சண்டை வேணாம்னு நான் ஒதுங்கி போனேன் எனக்கு உன்னையும் தெரியும் அவங்களையும் தெரியும் அதுனால நீ வாயை மூடு” என்று அவர் ராகினியை வெளுத்து வாங்கியபின், அவரை பார்வையாலே எரித்து விட்டு நகர்ந்து விட்டார்.
அதிர்ந்து நின்றுவிட்டார் ராகினி , மீனாட்சி இப்படி பேசுவது இதுவே முதல் முறை ஏனோ மனது பதைபதைத்தது. அடுத்த நிமிடம் வஞ்சமும் வளர்ந்தது, ‘நான் எப்படி என்று உனக்கு தெரியுமா? உங்க உறவு இப்படி இருக்குறது எனக்கு நல்லதே கிடையாது, அதனால உங்களை என்ன பண்றேன் பாருங்க யாரையும் விடமாட்டேன் என்று சூளுறைத்தது’.
கால் போன போக்கில் நடத்த மீராவிற்கு மனது வேதனையில் துடித்தது “மீனா ஆன்ட்டி அவங்களும் அம்மாவை தப்பா நினைக்குறாங்களா, அம்மா அப்படி எல்லாம் இல்லன்னு அங்களுக்கு தெரியும்ல, அப்றம் ஏன் அமைதியா இருந்தாங்க, அம்மா பாவம் தானே, அத்தை… அத்தை ஏன் இப்படி சொல்றாங்க அவங்களுக்கு எங்களபிடிக்காது தான் அதுக்காக இப்படியா சொல்வாங்க’
‘ஐயோ, உதய், சஞ்சய் அவங்களும் இனி ஏங்கூட பேசமாட்டாங்களா? என்னை வெருத்திடுவாங்களா? என்னை யாரும் இனி விளையாட்டிற்கு சேர்த்துக்க மாட்டாங்களா? ‘என்று ஊமையாய் கதறியது அவள் மனம்.
எங்கே செல்கிறோம் எதுவும் தெரியாத மீரா மெயின் ரோட்டை எட்டியிருந்தாள், நடுரோட்டில் நடந்துக்கொண்டிருந்தவளை நோக்கி ஒரு லாரி எதிர்புறம் வந்தது அதை கவனிக்கும் மனநிலையில் இல்லாத மீரா தன்னை நோக்கி வந்த லாரியை அப்பொழுது தான் பார்த்தாள், உடல் நடுங்க அப்படியே நின்றுவிட்டாள்.
அவளுக்கு என்னவாகும்?
விதி யாருக்கு என்ன வைத்திருக்கிறது? ராகினி செய்ய போகும் சூழ்ச்சித்தான் என்ன? சூழ்ச்சியை வீழ்த்தி வெற்றி பெருவாளா மீரா? அல்லது விதியை பழி சொல்லி வாழ்வை முடிப்பாளா?
_தொடரும்_