உள்ளத்தின் காதல் நீங்காதடி-24

முதல் காதல்-24

 

முதல் காதல் உயிரில் கலந்தது, அது ஏன் இத்தனை முக்கியமானதாக கருதப்படுகிறது தெரியுமா? ஏன் அதற்கு அத்தனை மரியாதை தெரியுமா? 

 

அடுத்ததில்…

 

*************

 

அந்த மண்டபமே விழா கோலம் பூத்திருந்தது. 

 

வரவேற்பில் அழகிய ஆர்கிட் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த போர்டில். 

 

உதய் சரண் ACP 

 

வெட்ஸ்

 

மீரா. M.Phil என்று அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எத்தனை நாள் கனவிது, காதல் கொண்ட மனங்களுக்கு இதை விட பெரிய வெற்றி ஏது? 

 

ஆம், இன்று மீராவிற்கும், உதயிற்கும் திருமணம். 

 

திருமணத்தில் இணைய இருக்கும் மனங்கள் என்பது பல கற்பனைகளுடனும், எதிர்பார்ப்புடனும், கனவுகளுடனும், பயத்துடனும், தன்னவளின் சிந்தனைகளாலும் ஒரு புது வித அழகில் மிளிரும். 

 

 இரத்த சிவப்பாய் மாறிய முகத்துடன் அவனின் அறையில் தயாராகி கொண்டிருந்தான் உதய். ஆணின் வெட்கம் ஒரு காதலியின் வெற்றி இது மீராவின் வெற்றியே. 

 

மேடையின் தீம் கோல்டன் மற்றும் ராயல் ப்ளுவாக இருக்க. மேடையின் இரு பக்கத்திலும் அழகிய சேட்டின் ரன்னர்ஸால் முடியிட்டு வேவி மோஷனில் விட்டிருந்தவர்கள்,  பிற இடங்களில் ப்ளுவை கொண்டு வேவி மோஷனில் ப்ரியாக விட்டிருந்தனர். 

 

அதன் நடுவில் கோல்டன் மற்றும் ப்ளூ பலூன்களைக் கொண்டு அழகாய் இதயவடிவம் வரவைத்து அதன் மேல் வெள்ளை சீரியல் லைட்களை மின்னவிட்டிருந்தனர்

 

இருவரின் மனமும் இதயத்தால் ஒன்றானது என்று குறிப்பிடும் விதமாக, இருஇதயத்தை இணைத்து அதனுள் இருவரின் பெயரையும் மலர்கள் கொண்டு எழுதி இருந்ததை பார்க்க அத்தனை ரம்மியமாக இருந்தது. 

 

காலை மூகூர்த்ததிற்காக அனைத்து ஏற்பாடும் முடிந்திருக்க, அய்யர் சில மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார். 

 

“மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ” என்ற குரல் முடிவதற்க்குள் வந்து அமர்ந்தவனைக் கண்டு அனைவரும் நகைக்க. 

 

அனைவரையும் முறைத்தவன், வாயில் கை வைத்து முறைத்தவன், ஆண்மையின் மொத்த உருவமாய் கண்களுக்கு இனிமையாய் அமர்ந்திருந்தான். 

 

வெண் பட்டில் தங்ககரைகள் படர்ந்திருக்க, மேல் பட்டனை போடாமல், கையை முழங்கை வரை மடித்துவிட்டிருந்தான், அடர்ந்த மீசையுடன், தாடியுடனும் அத்தனை வசிகரமாய் அமர்ந்திருந்த தங்கள் மாப்பிள்ளையை பார்த்த பெண்ணின் பெற்றோர் மனம் பூரித்து போனது. 

 

உதய்யின் மனது மீராவிடமே நிலைத்திருந்தது, இடைப்பட்ட இந்த இரண்டு மாசத்தில் அவளை அவன் இரண்டே முறை தான் பார்த்தான், ஒன்று நிச்சியத்திற்கு, இன்னொன்று திருமணத்திற்கு புடவை எடுக்கையில். 

 

நிச்சயத்தன்று அவனுக்கு அழகாய் முறுவலளித்தவள். ஏனோ,  திருமணத்திற்கு துணி எடுக்க போகையில் அவனுடன் முகம் கொடுத்து கூட பேசவில்லை,  அது ஏனென்ற கேள்வியே இப்பொழுது உதய்யை குடைந்தது. 

 

இந்த இடைப் பட்ட நாளில் இருவரும் ஃபோனில் பேசிக்க கூட இல்லை, அது மீராவினாலே, கடற்கரையில் சந்தித்து முடித்த மறுநாள், உதய் மீராவை அழைத்தான். 

 

அவள் தான் ‘ஃபோன்ல பேசுற வேலையெல்லாம் வேணாம் உதய் எனக்கு உன்னோட தோள் சாஞ்சு, கண்ணோடு கண் கலந்து, கைபிடிச்சு நடந்து பேச, இப்படி நிறைய ஆசை இருக்கு, அதனால் ஃபோன் நாட் ஆளவுட்’ என்றிருந்தாள். இந்த வார்த்தைகள் அவள் ஏன் கூறினாள் என்று அறிவான் அவளவன், அது இத்தனை வருட உள்ளத்தின் தேடல் அவளுக்கு, எத்தனை தூரம் அவள் தன் தந்தையை மிஸ் செய்திருக்கிறாள் என்று அறியாதவன் அல்லவே அவன். 

 

அவனிற்கு மீராவிடம் பேச நிறைய உள்ளது, ஆனால் அவளின் இந்த ஆசை உதய்யிற்கு நியாயமாய் படவே, அவளுகாய் விட்டுக்கொடுத்திருந்தான், காதலின் அழகில் நாம் கரைந்தே தீர வேண்டும். (ஒரு வேலை அவளோடு இணக்கமாய் இருந்திருந்தால் பின்னாளின் பிரச்சனையை தவிர்த்திருக்கலாமோ…)

 

அதன் பின் சரியாக பத்தாவது நாள் அவர்களின் நிச்சயம் நடந்தது, அதில் முகத்தில் செம்மை படர அவனின் அருகில் நின்ற பொழுதிலும், அவள் கை பிடித்து இவன் மோதிரம் மாட்டிய பொழுதிலும், இளமை சீண்டல்களின் போதும் அழகாய் முறுவலளித்தவளின் வதனம் கண்டு சொக்கிப்போனவன் இவனே, அதன் பின் ஒரு மாதம் கழித்தே அவளை அந்த பிரபல துணி கடையில் சந்தித்தான். 

 

அத்தனை நாட்களுக்கு பின் அவளை சந்தித்த மகிழ்வில், ஏக்கத்தில் அவளை நெருங்கி இவன் அணைக்க போகையில், உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள், மனதில் ஒரு பலத்த அடி,  ஆனால் ஏன்? 

 

அதன் பின், இவன் அவளுக்காக எடுத்த பட்டு புடவையை கூட வேண்டாம் என்று மறுத்தவள், தனக்கு அது பிடிக்கவில்லை என்று கூறி வேறொன்றை எடுத்தாள். அது அவனுக்கான இரண்டாவது அடி, ஆனால் அனைவரும் அந்த பக்கம் நகர்ந்ததும் உதய் எடுத்த புடவையை ஆசையாக வருடியதை அவன் கவனித்திருந்தான்,  ‘சரி சும்மா விளையாடுறா’ என்றே அவனும் அன்று அமைதி காத்தது. 

 

அதன் பின் உதய் மீராவிடம் ‘நீயே எனக்கு எடுனு’ சொன்னதிற்கும் ‘எனக்கு இதெல்லாம் தெரியாது’ என அவள்  ஒதுங்கியதும் தான் உதய்யிற்கு அபாய மணி அடித்தது, அதன் பின் அவளிடம் அவன் பேச எவ்வளவோ முயற்சித்தும் பயன் பூஜ்யம்தான், ஃபோனையும் அணைத்தே வைத்திருந்தாள் அதுவே உதய்யிற்கு பெரிய தலை வலியை தந்தது. அவளை நெறுங்க அவன் முயற்சிக்க, விலக நினைத்தவள் விலகியே இருந்துவிட்டாள், இத்தனை மனக்கஷ்டத்திலும் அவள் இந்த திருமணத்தை நிறுத்த துணியவில்லை அதுவே அவன் மனதை தென்றலாய் வருடியது. 

 

அவனின் சிந்தனையை கலைத்தது அய்யரின் “பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ” என்ற வாக்கியம். பிரிவின் துயர் காதலில் ஒரு அத்தியாயம். அது இல்லாமல் வாழ்வை கடக்கவியலாது. அந்த பிரிவும் முடியும் நாள் வந்ததே. 

 

மீனா மீராவின் திருமணத்திற்கு என்று வந்திருந்தவள் மீராவை அழைத்து வந்தாள். ஹால்ப் வைய்டில் அடர் அறக்கு நிற பாடர் பட்டு சேலையில், உச்சி வகிடெடுத்து அழகாய் பின்னலிட்டு அதில் மல்லிகை சரத்தை வட்டமாய் வைத்து, வகிட்டில் வெள்ளை கற்கள் பதித்த நெத்திச்சுட்டியுடன், காதில் குடை ஜிமிக்கியோடும், கழுத்தை தழுவியிருந்த  வெள்ளை கல் நெக்லஸூடன், ஆரம், அதை  தொடர்ந்து இடிப்பில் அவளை தழுவியிருந்த ஒட்டியாணத்தில்,  மடிப்பு கலையாமல் சிற்பம் போல் அவன் அருகில் வந்தமர்ந்தவளின் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. 

 

இருவரின் பொருத்தில் பெருமிதம் கொண்ட குடும்பம், மகிழ்வில் ஆனந்த கூத்தாடியது. ஒருவனை தவிர, அவன் மட்டும் மேடையின் எதிர்புறம் பார்த்துக்கொண்டிருந்தான். அங்கு தான் மீனா நின்றுக்கொண்டிருந்தாள், அவளை சைட் அடித்துக்கொண்டிருந்தவன் நம்ம சஞ்சய் தான். 

 

இரண்டு நாட்களுக்கு முன் தான், இந்தியா வந்திருந்தான் இன்னும் அவன் மீராவுடன் பேசியிருக்கவில்லை,  பேசனும் தான் ஆனால்,  அவனுக்கும் எப்படி பேச என்று தெரியாததால் தங்கள் வீட்டிற்கு வந்ததும் பேசலாம் என்று அமைதி காத்தான். 

 

மீராவை உரிமையுடன் சைட் அடித்துக்கொண்டிருந்த உதய்யை அவள் மதிக்கவுமில்லை,  கடமையே கண்ணாக அவள் மந்திரத்தை திருப்பி படிக்க இவனுக்கு தான் கடுப்பாக இருந்தது. 

 

அத்தனை கனவு வைத்திருந்தான் ஒவ்வொரு தருணத்திற்கும் மனதில் ஒத்திகையல்லவா நடத்தியிருந்தான், மீராவின் 

இந்த திடீர் பாராமுகம் ஏன் என்று அவனுக்கு புரியவே இல்லை. 

 

சிந்தனையில் உழன்றவனுக்கு அய்யரின் “மாங்கல்யத்தை எடுங்கோ”என்ற வார்த்தை நிகழ் உலகிற்கு அழைத்து வந்திருந்தது, தனது தேவையான சிந்தனைகளுக்கு தற்காலிக விடுமுறை அளித்தவன் மாங்கல்யத்தை கைகள் நடுங்க எடுத்தான். 

 

அய்யரின் “கெட்டி மேளம்”சத்தத்தை உரசிய இசை வாக்கியங்களின் சத்ததில் அவள் கழுத்தை வளைத்து,  அதை எடுத்துச்சென்றவன் மீராவின் காதருகே குனிந்து. 

 

“மீரா, உனக்கு என்ன கோபம் நாளும் இருக்கட்டும் அதை இந்த நிமிடம் மறந்திடு, ப்ளீஸ் என்னை பாரு” என்றவனின் குரல் அத்தனை மென்மையாய் இருந்தது. 

 

அந்த வார்த்தைகளில் தாக்கம் அவளை சுட, கண்களை உயர்த்தி அவனை பார்த்தவளின் காந்த விழிகளில் வீழ்ந்தவன் “ஐ லவ் யூ மை லவ், நவ் அண்ட் ஃபார் எவர்”என்றவன் அவளது கழுத்தில் மாங்கல்யத்தால் மூன்று முடிச்சிட்டான். 

 

திருமணத்தின் அடுத்தடுத்த சடங்குகள் முடிய, மீராவின் முகம் எதோ ஒரு ஒவ்வாமையை காட்ட அதை கண்ட உதய். “மா, போதும் இன்னும் எவ்ளோ இருக்கு, நாங்க ரெஸ்ட் எடுக்குறோம்” என்றிருந்தான். 

 

அப்பொழுது மட்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் திரும்பவும் முகத்தை தாழ்த்திக்கொண்டாள். உதய்யின் குறிப்பை உணர்ந்த மீனாட்சி தான் “சரிப்பா போதும்” என்றவருக்கு உதய்யின் கண்கள் நன்றியை காட்ட,  அடுத்த நிமிடமே அது முறைப்பாய் மாறியிருந்தது அவர் சொன்ன வார்த்தைகளில். . 

 

“மீராம்மா நீ உன் ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு, உதய் நீ உன் ரூமுக்கு போப்பா” என்பதாலே. 

 

அவன் தனிமையை எதிர்பார்த்து காத்திருக்க,  அதற்கு அவன் தாய் ஆப்பு அல்லவா வைத்துவிட்டார், 

‘அவகிட்ட என்னன்னு கேக்கலாம்னா இப்படி பண்ணிடாங்களே, இப்போ மட்டும் நாம அவகூட போகனும் சொன்னோம் ஓட்டியே சாவடிச்சிடுவானுக, வேணாம் பொறுமை’ என்று தன்னையே அமைதிபடுத்திக்கொண்டான். 

 

மீரா அவள் ரூம் நோக்கி நகர அவளை பின் தொடர்ந்த மீனாவை அழைத்தான் உதய், அவளும் அவனிடம் விரைந்தாள். 

 

“சொல்லுங்க ண்ணா” என்றாள் பதற்றத்துடன். 

 

“மீராக்கு என்னம்மா ஆச்சு?” என்றான். 

 

அவள் தயங்க “எதுனாலும் சொல்லு மா ப்ளீஸ்” என்றான். 

 

“ண்ணா. . . அது அவ ஒரு மாசமாவே இப்டித்தான் இருக்கா, யாரு கூடவும் சரியா பேசல, அப்பா கூட மட்டும் தான் பேசுறா, எப்போ பாரு எதையாவது யோசிச்சிட்டு இருக்கா, அம்மா கூட என்னன்னு கேட்டாங்க ‘ஒன்னுமில்லைன்னு’ஒரே வார்த்தைல சொல்லிட்டு போய்ட்டா”

 

“நானும் பல பமுறை கேட்டு பாத்துட்டேன், பதிலே காணோம், வாயே திறக்கமாட்றா”என்றாள் உண்மையான வருத்ததுடன். 

 

“சரிம்மா. . . நான் பாத்துகிறேன், நீ அவ கூடவே இரும்மா, ப்ளீஸ் எனக்காக” என்றான். 

 

“கண்டிப்பா ண்ணா” என்றவள் மீராவின் அறைக்கு மேலே ஏறபோகையில். 

அவளை மறித்தது ஒரு கரம் அவள் அவனை ஏரெடுத்து பார்க்க அவனோ. 

 

“நீங்க தான் மீனாவா?” என்றான். 

 

அவனின் அதிகாரத்தில் கடுப்பானவள் “இல்லைங்க நான் மீனா இல்ல, நீங்க வெற யாரோன்னு நினைச்சு என்ட்ட பேசுறீங்க” என்றாள். 

 

அவளின் பதிலில் சபாஷ் போடத்தான் செய்தது அவன் மனது, “ஹம், சரி, மீனாகிட்ட ஒன்னு சொல்லனும், ஒன்னும் பிரச்சனையில்ல நீங்க போங்க, இதை நான் அவங்க கிட்ட மட்டும் தான் சொல்லமுடியும் சோ நான் அவங்களையே தேடிக்கிறேன்”என்றான். 

 

அவன் ஒரு தீவிரத்துடன் பேச அதில் உண்மையாகவே எதுவும் இருக்குமோ என்று “சொல்லுங்க” என்றாள். 

 

“சாரி. . . நான் மீனாட்டா தான் பேசனும்”என்றான். 

 

“நான் தான் மீனா” என்றாள் அவள் கோபத்தில். 

 

“இல்லயே, அவங்க அழகா இருப்பாங்கனு தான் சொன்னாங்க அது நீங்க இல்லைங்க” என்றிருந்தான். 

 

அதில் அவனை உக்கிரமாய் முறைத்தவள் “அதுகாகலாம் ஆக்ட்ரஸ் மீனா இங்க வரமாட்டாங்க, உங்க இத்து போன சீக்ரெடுக்கு லோ பட்ஜட் மீனா நான் தான் வருவேன், பரவால சொல்லுங்க” என்றிருந்தாள். 

 

“ஹம். . . சரி நீங்களும் சுமாராவே இருக்கீங்க சொல்றேன், உங்களுக்கு சஞ்சய்ய தெரியுமா? “என்றான். 

 

“தெரியாது”என்றாள். 

 

“அவன் மீனாவை கடத்தப்போறானாம்” என்றான். 

 

“வாட்ட்ட் நான்சென்ஸ், என்ன உலருறீங்க”

 

“இட்ஸ் அ சென்ஸுங்க, அவன் அவங்கள் கடத்தி, சிறையில பூட்டப்போறானாம், அதான் ஜாக்கிரதையா இருக்க சொல்ல வந்தேன்” என்றான். 

 

அவள் பேந்த பேந்த முழிக்கையிலே அவளை விட்டு நகர்ந்த சஞ்சயின் உதடுகளில் மந்தகாச புன்னகையே தவழ்ந்தது. 

 

காலம் கனியும் இரவு வேளை, கடும் உழைப்பாளிகளுக்கும் ஓய்வை வழங்கும் ஏகாந்தம், மீரா மனதில் ‘வரவே வரகூடாது’ என்று ஏங்கிய இரவும் அழகாய் புலர்ந்திருந்தது. 

 

அவளை குளித்து தயாராக சொன்ன மாமியாரிடம் எதை சொல்லி இதை நிறுத்த என்று ஒரு நிமிடம் அவள் திக்குமுக்காட அவளின் இந்த நிலையை பார்த்த மீனா. 

 

“என்ன தான் டி உன் பிரச்சனை , வாயே திறக்க மாட்ற, எவ்ளோ தான் நானும் கேக்குறது?” என்றாள் கடுப்புடன். 

 

“எனக்கு இது வேணாம் டி” என்றாள். 

 

“ஒன்னு வச்சேன்னா தெரியும், லூசா நீ,  இத்தனைக்கு இது லவ் மேரேஜ் வேற, லூசு மாதிரி உளராம ரெடி ஆகு”என்றாள் மீனா கண்டிப்புடன்

 

“ப்ளீஸ் டி, எனக்கு கொஞ்சம் டைம் வேணும், எதையாவது பண்ணி இதை நிறுத்தேன்” என்று அவள் குரல் உடைந்து கூறுகையில் மீனாவிற்கும் ஒரு மாதிரி ஆகியது. 

 

‘இவளுக்கு என்ன தான் பிரச்சனை சொன்னாலாச்சும் எதாவது பண்ணலாம், இவ ஏன் இப்படி இருக்கா’ என்று யோசித்தவள் “சரி, எதாச்சும் பண்ணலாம் இரு”என்று யோசித்தவள் பின் முடிவெடுத்தவளாக. 

 

“உனக்கு வயித்து வலி”என்றாள். 

 

“என்னது…”

 

“நொன்னது, மூடிட்டு சொன்ன மாதிரி நடி, உனக்கு இப்போ ஃபுட் பாய்ஸன்” என்றவள் அவளை மெத்தையில் படுக்க வைத்தாள். “நான் போய் ஆண்ட்டியை கூடிட்டு வரேன்” என்றவள் மீனாட்சியை தேடி சென்றாள். 

 

அவரும் வந்தவர் இன்றைய நாளின் பிஸியில் வாடிய மாலராய் கிடந்தவளை பார்க்கையில் அவள் சொல்லும் பொய் உண்மையாகவே அவருக்கு பட. 

 

“மீரா… ஒன்னுமில்ல டா, நீ ரெஸ்ட் எடு, நான் உனக்கு ஜூஸ் எடுத்திட்டு வரேன், இவளை பாத்துக்கோ மா” என்றவரின் உண்மையான வருத்ததில் இருவருக்கும் குற்ற உணர்வில் தவித்தனர்.

 

இங்கு அவனது அறையில் வெகு நேரம் காத்திருந்த உதய்யிற்கு மீரா வரும் சுவடே தெரியாததால் கீழே இறங்கி வந்தவன் தன் தாய் அவசரமாய் மீரா இருக்கும் அறைக்கு செல்வதை பார்த்தவன் அவனும் அங்கு விரைந்தான். 

 

அங்கு அவர் மீராவை அதட்டி, மிரட்டி  ஜூஸ் குடிக்க வைத்துக்கொண்டிருந்தார். விரைவாக மீராவை நெறுங்கியவன் அவளின் பக்கத்தில் அமர்ந்து நெற்றி மற்றும் கழுத்தை சோதித்தான். 

 

அவன் அவள் பக்கத்தில் அமர்ந்ததுமே நெளிந்தவள் அவனுக்கு தன் முகத்தை காட்டாது குனிந்துக்கொண்டாள். அவளின் இந்த செயல் அவனுக்கு வேதனையை அளித்தாலும் அதை கிடப்பில் போட்டவன். 

 

“என்னாச்சு மீரா” என்றான் பரிவாக. 

 

அவள் வாயை திறக்கவேயில்லை அவளை முறைத்த மீனாவே “அது அவளுக்கு புட் பாய்ஸன்‌ ண்ணா” என்றாள். 

 

மீராவின் அடுத்தடுத்த புறக்கனிப்பால் அவனது காதல் மனது பெரும் அடி வாங்கியது உண்மை, அவளை கண்களால் சோதித்தவனுக்கு அவளது அசதியே தெரிந்தது, மீரா அவனை நிராகரித்ததிலே தெரிந்தது, இது பொய் என்று. 

 

“ம்மா. . . நீங்க  போங்க மீராவை நான் பாத்துகிறேன்”என்றான் கோபத்தை கட்டுபடுத்தி. 

 

“இது இல்லப்பா…”அவர் தயங்க. 

 

“எனக்கு தெரியும் எல்லாம் , நீங்க போங்க”என்று அவன் முடிக்க வேறு வழி இல்லாததால் அவரும் திரும்பி திரும்பி பார்த்துவிட்டு செல்ல. 

 

“மீனா நீயும் போம்மா,  நான் உன் ஃபிரண்டை பாத்துகிறேன்”என்றவனது உன் ஃபிரண்டே சொன்னது அவனது கோபத்தின் அளவை. 

 

அதை கேட்டு பயந்தவளாக “இல். . . ல மீனா, நீ இங்கையே இரு”என்றாள் மீரா அவசரமாக. 

 

அவளை கண்களாலே எரித்தவன் “மீனா நீ போடா, அம்மாவோட போய் தூங்கு”என்றான் கோபத்தை அடக்க முயன்றும் தோற்றவனாக. 

 

மீரா அவளிடம் கண்களாலே கெஞ்ச. அவள் தயங்க “உன் ஃபிரண்டை நான் எதுவும் பண்ண மாட்டேன் நீ போ” என்று அவன் இம்முறை அழுத்திசொல்ல வேறு வழி இல்லாமல் அவள் நகர்ந்தாள். 

 

அவள் சென்றதும் போய் கதைவை அடைத்துவிட்டு வந்தவன் மீராவிடம் விரைந்தான். 

 

கைகள் சில்லிட்டு போக, வேர்வை துளிகள் அவளின் நெற்றியை நனைக்க, இதயதுடிப்பின் சத்தம் பல மடங்கு அதிகமாக, பயத்தில் முகம் வெளிரி போய் அமர்ந்திருந்தவளை பார்த்து நிதானமாகவே பேசினான் உதய். 

 

“உனக்கு பிடிகாட்டி சொல்லியிருக்கலாம், உன்னை வற்புறுத்தி என் ஆசையை தீர்க்க நான் கேடு கெட்டவன் கிடையாது, கல்யாணத்தின் தேவையும் அது மட்டுமே கிடையாது” என்று அவன் அழுத்தத்துடன் கூறினான். 

 

கண்களில் நீர் துளிகள் இமைகளை நனைக்க, அதை கட்டுபடுத்த கண்களை இருக மூடியவளுக்கு அந்தோ பரிதாபம், இரு நீர்மணிகள் நேர்கோடாய் அவள் கண்ணத்தில் வழிந்தது. 

 

அவளின் கண்ணீரின் துயர் அவனது இதயத்தின் நனைக்க “மீரா, படுத்து தூங்கு, குட் நைட்” என்றவன் கட்டிலின் ஒரு பக்கம் சென்று படுத்துக்கொண்டான். 

 அவன் உறங்கியதை உறுதிபடுத்திக்கொண்டவள், மெல்ல நடந்து பால்கெனிக்கு சென்றாள். 

 

“ஐ யம் சாரி உதய்” என்ற மன்றாடல் அவள் குரலில் வெளிப்பட்டது. 

 

_தொடரும்_