என்னுயிர் குறும்பா

என்னுயிர் குறும்பா

குறும்பா 26

அந்த குளிர் நிறைந்த அறையில் மெத்தையில் படுத்து கொண்டிருந்த, நோயாளியை சோதிக்க வந்திருந்தவள். தனது இதயதுடிப்புமானியை காதில் வைக்காது, கழுத்தோடு தொங்கி கொண்டிருந்ததை அவரது நெஞ்சில் வைக்க.

அதை கண்ட அவரோ, சிரித்தவர். ” டாக்டர் பாப்பா… காதில் வைத்து தானே இதய துடிப்பை கேட்க முடியும். நீங்க காதிலே வைக்கல டாக்டர் பாப்பா… ” என்றதும் நினைவு பெற்றவள் அதை காதில் மாட்டி அவரை சோதித்தார்.

நர்ஸ் நமட்டுச்சிரிப்பு சிரிக்க, அவரை பார்வையில் அடைக்கு விட்டு மீண்டும் சோதனை தொடர்ந்தவள், அவருக்கு தேவையானதை கூறிவிட்டு வெளியே வந்தாள்..

” மேம்… இன்னைக்கு நீங்க ஏதோ யோசனையிலே இருக்கீங்களே என்னாச்சு மேம்?”

” அதெல்லாம் ஒன்னுமில்லை செல்வி… ” என்றவள் தன்னறைக்குள் நுழைந்தாள்.

” மேம்,ஒன்னு சொல்லவா… நீங்க இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க. அதுவும் இதுவரை வைக்காத அந்த குங்குமம் இன்னைக்கு உங்களுக்கு அழகா இருக்கு… இனி இதுபோல வச்சுட்டு வாங்க மேம்.. ” என்றவள் தன் இடத்தை காலி செய்தாள்..

ஏதோ யோசனையில் அமர்ந்தவள், தன் முகத்தை, அலைபேசியில் பார்க்க அழகாக தான் இருந்தாள்… தன்னை மறந்து இதழ்கள் விரிய நாணம் கொண்டு பெண்வள் முகம் சிவக்க, இன்று நடந்ததை நினைவுகூர்ந்தாள்.

தன் மகனை யாரோ தூக்கிவைத்திருப்பதை பார்த்தவள், அவன் பின்னே வந்து நின்றாள்.

” சித்… ” என அழைக்க, இருவரும் திரும்பினார்கள். ஆர்.ஜே தான் அவளை தூக்கிவைத்திருந்தான்…

“ஜானு…, ஆர். ஜே சொன்னேல ஜானுக்கு இன்னைக்கு பிறந்த நாள், நாங்க கோவிலுக்கு போவோம்… ஆமா ! உனக்கு வேலை இருக்கு சொன்ன ? இப்ப இங்க இருக்க… ” என்றான்.

” சித்… என்ன இது பெரியவங்களை மதிக்காம பேசிட்டு… ஆர்.ஜேன்னா கூப்பிடுறது. அவர் உனக்கு மாஸ்டர், மரியாதை இல்லாம பேச கூடாது… “

“ஜானு… ஆர்.ஜே தான் உன் அம்மாவை எப்படி பெயர் சொல்லி கூப்பிடுறீயோ அப்படியே கூப்பிடு சொன்னார்… ” என்றதும் ஆர்.ஜேவை அவள் பார்க்க..

” ஆமா நான் தான் கூப்பிட சொன்னேன். அவனை திட்ட வேண்டாம்… அப்புறம் ஹாப்பி பெர்த்டே… ” என்றான் சின்ன சிரிப்போடு..

“தேங்க்ஸ்… சித்து வா சாமி கும்பிட போலாம்.. “

” ஆர்.ஜே, நீயும் வா சாமிகும்பிடலாம்… ஜானு, நாம முனு பேரும் சேர்ந்து சாமி கும்பிடலாம்… ” இருவரும் தயங்கி நிற்க, ” இல்ல சித், நீங்க இரண்டும் பேரும் போய் கும்பிடுங்க “

” ஏன், ஆர்.ஜே. நேத்தே நான் கூப்பிட்டதுக்கு நீ வரலை சொன்னா, ஆனா வந்திருக்க, இப்பையும் வரலைன்னு சொல்லுற ஓய் ஆர்.ஜே.. ” என்றதும்
அவனை சந்தேகமாக பார்த்தாள்.

‘ ஐயோ ! ஆர்.ஜே இவன் இன்னும் இந்த கேள்வியை விடாமல் இருக்கிறான். இவளோ சந்தேகமா பார்க்கிறா, என்னத்தை சொல்லி சமாளிக்க… ‘ என நினைத்துகொண்டவன்..

” சித்… எனக்கு வேலை இருந்தது உண்மைதான்.. ஆனால் என் பெத்த தெய்வம் இன்னைக்கு நல்ல நாள் கோயிலுக்கு வந்தே ஆகனும் இழுத்துட்டு வந்துடாங்க… “

” ராஜூ… யாருப்பா இது ? ” என கேட்டவாறே, சீதாவும் ராமனும் வந்தனர்.

” மா… இது சித்தார்த், ஜானவியோட பையன்… ” என்றதும், தன் மகன் காதலிக்கும் பெண் என்று அறிந்திடாது இருந்திருந்தால், அவளிடம் நன்றாக பேசிருப்பாரோ என்னவோ, அவளை பார்த்ததும் அமைதிகாத்தவர். தன் மகன் தான்வர சொல்லிருப்பானோ என சந்தேகமாய் பார்த்தார் சீதா..

‘ இப்ப சீதாவா… நான் எதுவுமே பண்ணலைன்னும் நான் பண்ணதாகவே காட்டுறீயா விநாயாக, எதுக்கு இந்த லீலை… ‘ என நொந்து கொண்டான்..

” நீங்க தான் லிட்டில் மாஸ்டர் சித்தார்த்தா ?.. ” என ராமன் சித்திடம் சகஜமாக பேசினார்..

” எஸ் தாத்தா.. இப்போ லிட்டில் டான்சர், அப்புறம் மாஸ்டர் ஆகிடுவேன், ஆர்.ஜே போல… “

” சூப்பர்டா கண்ணா, அவனை போல கான்பிடேன்டா இருக்க, நீயும் பெரிய டான்சரா வருவ… எப்படிமா இருக்க ? ” என்றார்.

” நல்லாரக்கேன் பா… நீங்க எப்படி இருக்கீங்க, அம்மா உங்க ஹெல்த் இப்போ எப்படி இருக்கு…?”

” நல்லாருக்கோம் மா, அவளுக்கு என்ன திடகாத்திரமா இருக்கா, என்ன என் உயிரை தான் போட்டு வாங்கிறா. ” என்றதும் சீதா முறைக்க சித் சிரித்தான்..

” ஜானு, இன்னைக்கு உன் ப்ரத்டே தாத்தா பாட்டி காலில் விழுந்து ப்ளஸ் வாங்கிக்கோ… ” ஏதோ பெரிய மனிதனாய் பேசும் சித்தை பார்த்து கொஞ்சம் வியந்துதான் போனார்.. ஏனோ அவனை பார்க்க சிறு வயதில் ஆர்.ஜேவை கண்டது போல் இருந்தது..

” இன்னைக்கு உனக்கு பிறந்த நாளா.. வாழ்த்துக்கள், டா நல்லா இருடா, எல்லா சந்தோசத்தை பெற்று” என்றவர்,. சித் கண்ணா, இது கோயில் அதுல நீ நான் எல்லாருமே அந்த கடவுளுக்கு சமம் தான் அதுனால கோயில் கடவுளை தவிர, யார் காலிலும் விழுக கூடாதுடா கண்ணா… ” என்றார்..

” அப்ப நான், உங்களை போல பெரியவனா தாத்தா… “

” ம்ம்… இல்ல கண்ணா, உன்னை போல நான் சின்ன பையன் டா… ” என்றதும் சித்தார்த் மீண்டும் சிரித்தான்.

” சித்.. வா சாமி கும்பிடலாம்.. சாமிகுட்டு வரோம்ப்பா ” என்றாள்.

” நாங்களும் இன்னும் கும்பிடலமா, வாங்க சேர்ந்து கும்பிடலாம்… ” என்றார்.

முன்னே சித்தோடு அவள் நடக்க மூவரும் பின்னே நடந்தனர். இருவரும் நிற்க பக்கத்தில் சீதா, ஆர்.ஜே, ராமன் நின்றனர் வரிசையாக…

ராமன் பக்கத்தில் வந்து நிற்கும் பெண்ணைகண்டு சிரித்து வைக்க அதை கண்ட சீதா,வேகமாக மகனுக்கும் தந்தைக்கும் நடுவில் நின்று ராமனை முறைத்தார்..

” இல்ல தெரிந்த பொண்ணு மாதிரி இருந்ததுமா அதான் சிரித்தேன்.. “

” அதானே…. யாருன்னு பார்க்க பொண்ணுனா போதும் போய் பேசிடுவீங்க, உங்களுக்கு போய் ராமன் பெயரு வச்ச என் மாமியரை சொல்லனும்.. ” தலையில் அடித்துகொண்டார்..

‘ சிரிக்க தானே செய்தேன். மனுசனுக்கு மனுசிக்கும் சிரிக்க கூடாதா என்ன கொடுமை இறைவா… ” கை கூப்பி வணங்க ஆரம்பித்தார், அதற்கு முறைப்பை பெற்றார்..

தீப ஆராதனை காட்ட , எல்லாரும் வணங்கினார்கள்… சித், ஜானு, ஆர்.ஜே, சீதா, ராமன் நின்றனர், ஐயர் சூடத்தட்டை எடுத்தவர, கூட்டத்தினால், ஆர்.ஜே ஜானுவை இடிக்க, ” பச்.. ” என்றவள் பார்க்க, கூட்டத்தை பார்த்து பொறுத்து கொண்டாள்.. குங்கமம், திருநீறை சித்துவிற்கு ஐயரே பூசிவிட்டார்.. வெறும் திருநீறை மட்டும் அவள் வாங்கிகொண்டாள், குங்குமத்தை வாங்கவில்லை.,ஆர்.ஜேவுக்கு இரண்டை அவரே பூசிவிட்டார்.. தட்டில் பணம் போட பாக்கெட்டில் கைவிட்டு எடுக்க சில பல விசிட்டிங்க கார்ட் விழ இருவரும் எடுப்பதற்காக குனிந்தவர்கள் முட்டிக்கொள்ள, அவனது நெற்றியில் இருந்த குங்குமம் அவள் நெற்றியில் இடம் மாறியது..

” சாரி.. சாரி… ” என்றவன், எடுத்து கொண்டு நிமிர்ந்தான். ” இட்ஸ். ஒ.கே ” என்றவள் சித்தை அழைத்து கொண்டு கோயிலை சுற்ற வந்தாள்..

” ஜானு, ஐயர்கிட்ட, குங்குமம் வேணான்னு சொல்லிட்ட, ஆனா குங்குமம் உன் நெத்தியில் வந்திடுச்சு… ” என்றதும் தொட்டு பார்த்தவள் திரும்பி பார்த்தாள், சித் பேசியது அவனது காதுகளில் விழுந்து இருந்தது. அழிக்க நினைத்து கையெடுக்க, ” கோயிலுக்கு வந்து குங்குமத்தை அழிக்க கூடாதடி மா.. ” என்று சொல்லிவிட்டு யாரோ கடக்க அதன் பின் அந்த குங்குமத்தை மறந்து தான் போனாள்.

கோயிலை இரண்டு முறை சுத்தி வந்துவிட்டாள்… ” ஜானு… மணி… மணி.. ” என்று சித் குதிக்கவே..

அவனை தூக்கினாள்,அவனை தூக்கியும் எட்டவில்லை கைவலிக்க இறக்கிவிட்டாள், ” சித், முடியலை எனக்கு கைவலிக்கிது, வா போலாம்… “

” ஜானு… ” என முகத்தை தொங்க போட்டான்..” உனக்கு பதிலாக ஜானு அடிக்கிறேன் சித். “

” நோ, ஜானு நான் தான் அடிப்பேன். இன்னுமுறை டரை பண்ணலாம்… ” என்றதும் பெருமூச்சைவிட்டவள், அவனை தூக்கவதற்குள், ஆர்.ஜே அவனை தூக்க மணி அடித்தான்.

மகிழ்வோடு அடித்தவன், அவனது இரு கன்னத்திலும் முத்தங்கள் இட்டான்.. ” உன் ஆசை நான் நிறைவேற்ற எப்பையும் உன் கூடவே இருப்பேன்..” என்றான்…
மீண்டும் முத்தத்தை நன்றியாக கொடுத்தான் சித்… அவள் அங்கிருப்பதே பெரும் தயக்கமாகவே இருந்தது.

மூவருமாக நிற்பதை கண்ட, சீதாவிற்கோ மகன் இவ்வாறு, இருக்க வேண்டும் என்று தான் இத்தனை வருடங்களாய் தவம் கிடக்கிறார்.

ஜானவியை அவருக்கு பிடிக்காமல் இல்லை, ஆனால் அவள் குழந்தையோடு இருப்பதுதான் நெருடலாய் இருக்கிறது, தன் மகன் அவளை பார்த்தான் என்பதற்காக ஜோடியாக வைத்து பார்த்தவர், அவளுக்கு டீவோர்ஸ் ஆனதும், ஒரு மகன் இருப்பதையும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை..

தன் மகனுக்கு என்ன குறைச்சல், அவனுக்கு ஏன் இப்படி இருக்கும் பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றுதான்…

வேறொருவரின் இரத்தம், இவனுக்கு மகனாகிட முடியுமா… எப்படி அவனை பேரன் என்று கொஞ்சுவது, அவன் நம் இரத்தம் இல்லை என்று எண்ணம் அவரை இன்றளவும் இறங்க வைத்திடாது இருக்கிறது..

” மனசு, தான் காரணம், ஒவ்வொரு விசயத்தை ஏத்துகிறதும், ஏத்துகாம போகிறது… மகனோட சந்தோசத்தை பார்த்தாள், எதையும் ஏத்துக்கலாம். கௌரவும் அது இதுன்னா, இப்படி ஏங்கிட்டு இருக்க வேண்டியது தான்.. ” என்றார் ராமன்… அமைதியாக நின்றார் சீதா…

சித்தை அழைத்து வீட்டில் விட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டாள்… அவன் நினைப்போடு உறங்கி போனாள்….

நாட்கள் அதன் வழிசெல்ல. காம்பெடிசனில் அடுத்த லெவலுக்காக இன்று சூட்டிங் இருக்க. சித்தோடு அவனது ஜானுவும் வந்திருக்க முகமெல்லாம் மகிழ்ச்சி அவனுக்கு.

அவளோடு வந்திருப்பது. அவன் எதிர்பாராதது தான் என்றாலும் அவனது கனவல்லவா… அவனுக்கு மேக் போட்டுகொண்டிருக்க, அவனுக்கு அதெல்லாம் பிடிக்கவில்லை என்றான்..

கேமிராவிற்காவது போட்டுக்கொள் என்று ஜானு வற்புறுத்த போட்டுகொண்டான்…

” ஜானு,இதெல்லாம் லேடிஸ் திங்க்ஸ் நான் ஏன் போட்டுகொள்ளனும்.. “

” ஏன்னா என் செல்லத்தை எல்லா பெண்களும் பார்ப்பாங்க அழகா தெரியவேணாமா.. “

” ஜானு… நான் இது போட்டாத்தான் அழகா இருப்பேனா.”

” இல்ல மைடியர் சித்… நீ டீவில பார்க்கும் போது ப்ரைட்டா தெரியனும்ல அதுக்கு தான்… சரியா போட்டுக்கோ… ” என்று சமாதானம் செய்து போட்டவைத்தாள்..

” ஜானு.. இன்னும் ஆர்.ஜே வரலை ஏன் ? .. ” அவளுக்கு என்ன பதில் சொல்லவதென்று தெரியவில்லை, அவர் தான் ஜட்ஜ் ஏன் இன்னும் வரவில்லை ஷோவிற்கு லேட்டாகிறதே. ” எண்ணினாள்.

” சித்.. சென்னை ட்ராப்க் உனக்கு தெரியாதா வருவார் சித்.. ” என்றார் ரகு…

சித் தவிப்பது புரிந்தது, ஆனால் மகள் ஏன் தவிக்கிறாள் என்பது அவளது முகத்தை கண்டு அறிந்துகொண்டார்..

” ஹாய் சித்… ஹாய் மேம். நீங்க சித் டான்ஸ் ஆட ஒத்து கொண்டது ரொம்ப சந்தோசமா இருக்கு. கண்டிப்பா சித் தான் ஜெயிப்பான்..ஆல் தி பெஸ்ட் .. ” என க்ரேஸியும் பீட்டருடன் வந்தவள் கூற,

இருவரும் வந்திருப்பதை பார்த்தவள். ஆர்.ஜே வரவில்லையா ? இவருடன் தானே எப்பையும் சுத்தவார். ஏன் இன்னும் வரவில்லை, யாருடமும் கேட்கவும் முடியாதல்லவா… உள்ளே போட்டு குடைந்தாள்..

” சித்.. உனக்கு போன். ” என்று விஷ்வா வந்து கொடுத்தான்.

” ஆர்.ஜே, ஏன் இன்னும் நீ வரலை ” என சித்து கேட்க, அந்தப்பக்கம் என்ன சொல்லபட்டதோ. ” அப்ப நீ வரமாட்டியா ?… “

” மிஸ் யூ ஆர்.ஜே நெக்ஸ் டைம் ரிசன் சொல்ல கூடாது.. ” என்றதும் போனை வைத்தான்.

அவனும் போனை வாங்கி உள்ளே வைத்தான், பின் சூட்டிங் ஆரம்பித்தது. மூன்று ஜட்ஜ்ஜில் வேற யாரோ இருக்க. ஆர்.ஜே இன்று வரமாட்டான் என்று உறுதியானது..

வழக்கம் போல தன் திறமை காட்ட,இன்று கூடுதலாக அவளது அன்னையும் இருக்க. அவனது ஆட்டம் கலைகட்டியது, அவனது கால்கள் தரையில் இருக்கவில்லை என்று கூறலாம்… பாடலிற்கு ஏற்றவாரு ஆடினான், சும்மாவா சொல்ல ஆர்.ஜேயின் சிஷியன், அவன் சொல்லிக்கொடுத்தது, டான்ஸை மட்டுமா அதில் உள்ள சூதும்வாதும்..

திறமைக்கு மட்டும் வெற்றி என்பதெல்லாம் பழைய கதையென ஆனது… திறமை கொண்டாவர்களை விட, பெரும் புகழும் பெற்றவர்களையே தூக்கி கொண்டாடும் காலம் இது, காசை கண்டால் போது ஒன்னும் தெரியாதவனை கூட வெற்றியாளன் என்று அறிவிக்க படலாம் அன்றைய சூழல் தான் இது….

அதனால் அனைத்தையும் பார்த்து கொண்டான் ஆர்.ஜே…

ஆட்டமும் முடிந்தது, சூட்டிங்கும் முடிய.
அனைவரும் கிளம்பினார்கள்…
ஆர்.ஜேவை பற்றி விசாரிக்க விஷ்வாவிடம் வந்தாள் ஜானு..

” இன்னைக்கு எதுவும் சூட்டிங் இருக்கா அவருக்கு. ஏன் ஜட்ஜ் வேற ஆளா வந்திருக்காங்க…? “

” சூட்டீங் இல்லை மேம்.. இனி சார் இந்த ஷோக்கு ஜட்ஜா சார் இல்லை… ” என்றதும் அதிர்ந்து போனாள்..

” ஏன் அவர் ஜட்ஜை இல்லை… “

” தெரியலை மேம்.. ஆனா இனி அவர் இந்த சூட்டீங் போகமாட்டேன் சொல்லிட்டார்… ” என்று சென்றான்.

” மேம்…. ” என அங்கே பீட்டர் வந்தான்..

” சொல்லுங்க பீட்டர், உங்களுக்காவது தெரியுமா ? ஏன் ஆர்.ஜே ஜட்ஜ்ஜாக வரமாட்டார்.. என்ன பிரச்சனை ? “

அன்னைக்கு இங்க சூட்டிச் நடந்த ப்ரச்சனையில், அவர் வாய் தவறி சித்து எனக்கும் பிள்ளை என்று சொன்னதக்கு தான். ஷோ மேனேஜர், கேட்டார். உங்க பையன் சொல்லிட்டு எப்படி சார் உங்களையை ஜட்ஜ் இடத்தில் வைப்பதென்று கேட்டுவிட்டார், அதுபோக நீங்க சித்துக்கு ஹோரீயோகிராப், பண்ணினா மத்த டான்ஸர் பார்ஷ்ஷியாலிட்டி பார்க்கிறோம்ன்னு சொல்லுவாங்க. சித்துக்கு திறமை இருந்தாலும். நீங்க இருந்து,அவன் ஜெயித்தால் சரி வாராது சார்…

ஒன்னு அவனை ஷோவிலிருந்து விலக்கனும், இல்லையா நீங்க ஜட்ஜா இருக்கிறது சரியாகாது சார் என்று சொல்லிட்டார்…

சித்தை ஷோவிலிருந்து விலக்கிடாதீங்க, நான் ஜட்ஜாக வரவில்லை நீங்க வேற ஒரு ஜட்ஜை ஷோவில் போட்டுகோங்க. ஆனா சித்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை, விஷ்வா தான் அவனுக்கு ஹோரீயோகிராப்பர்.. என்னையும் சித்தையும் சம்பந்தம் செய்து அவனை எதுவும் செய்துவிட கூடாது, சொல்லவும்,கூடாது,சித் ஆடுவான். திறமை ஏற்ற தீர்பை நீங்க சொன்னா போதும்.” என்றதை பீட்டர் ஜானுவிடம் கூற, அதிர்ந்து நின்றாள்..

மறுநாள் சித்தை அழைத்து கொண்டு அங்கே சென்றாள்,விளக்கம் கேட்கவே…,

குறும்பு தொடரும்….

Leave a Reply

error: Content is protected !!