என் தீராத காதல் நீயே 22

என் தீராத காதல் நீயே 22

“அவர்கள் வாழ்வின் அனைத்து பிரச்சனையையும் முடிந்து இவ்விருவரின் பிரிவிற்கு அழகிய முற்றுப்புள்ளியை வைத்து. இனி வரும் வருங்காலத்திற்கு பிள்ளையார் சுழியை போட்டது காலம்..”

இருபதுநாட்களில் ஷரவன் உடல் முழுதாக தேறி இருந்தது.. மிருதுளா தானே ஷரவனுடன் இருந்து அவரை பார்த்துக் கொள்கிறேன் என்று உறுதியாக சொல்லிவிட.. யாரும் அதை மறுக்கவில்லை.. ஷரவனை குழந்தை போல் கவனித்துக்கொண்டாள் அவன் உயிரானவள்..

மிருதுளா ஷரவனுக்கு காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்.. ஏனோ அவள் முகம் வெகுவாக வடி இருந்தது. ஷரவனும் நேற்றில் இருந்து அவளை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான்.. நேற்று டாக்டர், ஷரவனை நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம் என்று சொன்னதில் இருந்து தான் அவள் முகம் இப்படி வாடி இருக்கிறது என்றும் அதற்கு என்ன காரணம் என்றும் புரிந்தவன்.. தன் தந்தையை அழைத்து சில விஷயங்களை சொல்லிவிட்டு அமைதியாக இருந்து விட்டான்..

காலைப்பொழுதே அனைவரும் ஹாஸ்பிடல் வந்துவிட ஷரவனும் வீட்டிற்கு செல்ல தயாராக இருக்க.. முக்தா ஷரவன் மடியில் உட்கார்ந்திருந்தவள்.. “ப்பா.. “ப்பா என்று ஷரவன் மீசையை பிடித்து இழுக்க.. என்னாட முக்தா குட்டி?? என்ன வேணும்?? என்று கேட்க.. அப்பா இனி முக்தா பாப்பா கூட அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருப்பாங்க இல்லப்பா என்று ஆர்வமாக கேட்க.. ஷரவன் நிமிர்த்து மிருதுளாவை பார்க்க அவள் கண்களில் கண்ணீரோடு ஷரவனை பார்த்தவள். தலையை குனிந்து கொண்டாள்.. ஷரவன் முக்தாவிடம், ‘இல்ல குட்டிம்மா இப்ப அம்மா நம்ம வீட்டுக்கு நம்ம கூட வரபோறதில்ல என்று சொல்லி மிருதுளாவோடு சேர்த்து அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தான் ஷரவன்..

முக்தா வாடிய முகத்தோடு ஏன்ப்பா.? ஏன் அம்மா நம்ம கூட வரமாட்டாங்க என்று அழுக்கொண்டே கேட்க.. குழந்தையின் கண்களை துடைத்தவன்.. ஏன்னா உன்னோட அம்மா நம்ம கூட நம்ம வீட்டுல இருக்கணுன்ன. அவ உனக்கு அம்மாவ இருந்தா மட்டும் போதாது.. உன்னோட அப்பாவை கல்யாணம் செஞ்சிட்டு எனக்கு பொண்டாட்டியாவும் இருக்கணும். சோ அம்மா இப்ப நம்ம வீட்டுக்கு வரமாட்டாங்கலாம்..
செல்வா தாத்தா வீட்டுக்கு போவாங்கலாம்.. இன்னும் ரெண்டு நாள்ல அப்பாக்கும், அம்மாக்கும் கோயில்ல கல்யாணம் நடக்கும். அதுக்கு அப்புறம் அப்பாவும், முக்தாக்குட்டியும் எப்பவும் அம்மா கூடவே இருப்போமாம் என்று மகளோடு, மன வாடி இருந்த தன்னவளுக்கும் சேர்த்து பதில் தந்தான்.. தன் மனதில் இருந்ததை தன் சொல்லமலே புரிந்துகொண்ட தன்னவனை நினைத்து கண்கலங்கிய மிருதுளா ஷரவனை காதலோடு பார்க்க.. அவன் வசீகர புன்னகை அவள் விழியை வருடிச்சென்றது..

அந்த கோயிலில் நெருங்கிய சொந்தங்களும், உயிர் நண்பர்கள் மட்டும் சூழ்ந்திருக்க. மிருதுளா தன் வீட்டை சேர்ந்த யாரையும் கூப்பிட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.. இனி அவள் வாழ்க்கையில் அவர்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதில் அவள் பிடிவாதமாக இருக்க. யாரும் எதுவும் சொல்லவில்லை. செல்வகுமாரும், தங்கமணியும் மிருதுளாவின் தாய், தந்தை இடத்தில் இருந்து அனைத்து சடங்குகளையும் செய்தனர்..

“அழகு சிலையாய் தன்னருகில் அமர்ந்திருந்த தன்னவளின் சங்கு கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டி அவள் உயிரில் பாதியாக இனைந்தவன். தன் முழு உயிரையும் அவளுக்குள் கரைத்துவிட்டான்..

இரவின் மடியில் நிலவு துயில் கொள்ளும் வேலையில் மரங்கள் சுழந்த ஷரவனின் ஃபார்ம் ஹவுஸில் கணவன் மார்பில் தலைசாய்த்து, அவன் சட்டை பட்டனை திருகிக்கொண்டிருந்த மிருதுளா..

“ஷரவன்” என்று மெல்லிய குரலில் அழைக்க..

“ம்ம்ம் ” என்று அவன் பதில் சொல்ல..

“ஷரவன்”

“ம்ம்ம்”

“ஷரவன்”

“ப்ச்சு”

“ஏய் என்னாடி …. என்ன வேணும் உனக்கு எதுக்கு இப்ப என்னை ஏலம்போட்டு இருக்க? ஐஸ்கிரீம், சாக்லேட் எதுவும் வேணுமா என்றவனை முறைத்து பார்த்த மிருதுளா.. அவனை விட்டு தள்ளி சென்றவள்.. எனக்கு உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் என்று முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல.. அவள் கையை பிடித்து இழுத்து மீண்டும் தன் மார்பில் போட்டுக்கொண்டு, இடையோடு சேர்த்தனைத்தவன்.. எது கேக்கணுனாலும் இப்படி இருந்துட்டே கேளுடி என்க.. சிரித்துக்கொண்டே அவளும் அவனை அனைத்தவள்.. நீங்க ஏன் என்னை இந்தளவு காதலிக்கீறிங்க.. அதுவும் அப்ப நான் உங்களை விரும்பலயின்னு தெரிஞ்சும்.. ஏன் என்ன அவ்ளோ லவ் பண்ணீங்க.. காதலிக்குற பொண்ணுகிட்ட இருந்து திரும்ப காதலை கூட எதிர்பார்க்காத காதல்.. என்ன மாதிரி காதலுங்க இது என்று கண்கள் நனைய கேட்டவளை இன்னும் இருக்கி அனைத்தவன்.. நீ கேட்டதுக்கு நான் அப்புறம் பதில் சொல்றேன்.. இப்ப நான் கேக்குற கேள்விக்கு முதல்ல நீ பதில் சொல்லு என்றவன். அப்ப உங்களை விரும்பலன்னு சொன்னீயே அப்போ இப்ப நீ என்ன லவ் பண்றீய என்று புருவத்தை தூக்கி குறும்பாக கேட்க.. மிருதுளா முகம் வெட்கத்தில் சிவக்க பதில் சொல்லமுடியாது தலையை குனிந்தவள்.. ஆமாம் என்று தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்ட.. ஷரவன் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலையாட்டுன என்னடி அர்த்தம் வாயத்தொறந்து சொல்லு என்று மேலும் அவளை வம்பிழுக்க.. மிருதுளா பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆமாம் என்று சொல்ல.. என்ன ஆமாம்? என்று அவனும் விடாமல் கேட்க.. நீங்க கேட்டதுக்கு தான் ஆமா சொன்னேன்.. நான் என்ன கேட்டேன் என்றவனை இப்போ மூக்கு முட்ட முறைத்தவள்.. ஷரவன் என்று பல்லைக்கடிக்க.. ஷரவன் சத்தமாக சிரித்தவன்.. ஏய் லூசு பொண்டாட்டி நீ இப்ப இல்ல டி.. எப்பவோ என்ன காதலிக்க ஆரம்பிச்சிட்ட.. ஆன உன்னோட சின்ன மூளைக்கு தான் அது எட்டால என்றவனை மிருதுளா புரியாத பார்க்க.. அவளை தன் மடியில் உட்கார வைத்தவன்..”

“அடியேய் நம்ம காலேஜில் படிக்கும் போது உன் கால்ல அடிபட்டுச்சே அது உனக்கு நியாபகம் இருக்க என்க.. அவள் ஆம் என்று தலையாட்டினாள்.. அன்னைக்கு நான் உனக்கு கால் வலிக்குதன்னு கேட்டாப்பே நீ வலிக்களைன்னு சொன்னீல்ல.. உண்மையா சொல்லு அன்னைக்கு உனக்கு கால் நெஜமா வலிகளாய என்று கேட்க.. மிருதுளா இல்லை என்று சொன்னவள்.. கால் ரொம்ப வலிச்சுது தான் ஆன என் காயத்தை பார்த்து நீங்க ரொம்ப பீல் பண்ணீங்க.. எனக்கு வாடியிருந்த உங்க முகத்தை பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு அதான் அப்படி பொய் சொன்னேன் என்று சொன்னவள் கன்னத்தை தன் கையில் ஏந்தியவன்.. நான் முகம் வாடுன உனக்கு ஏன்டி கஷ்டம இருந்துச்சு என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் தெரியல என்று மெல்லிய குரலில் சொல்ல.. அவள் கன்னத்தை கிள்ளியவன்.. அதுக்கு பேர் தான் டி காதல்..!! சரி அதை விடு, நம்ம காலேஜ் கல்சுரல்ஸில் எனக்கு பதில் வேற யார் கூடவாது உன்ன ஆட சொல்லியிருந்த நீ ஆடியிருப்பிய என்று கேட்க. அவள் வேகமாக இல்லை என்று தலையாட்ட.. ஷரவன் கர்வமாக சிரித்தவன்.. ஏன் டி அப்படி என்று கேட்க.? தெரியல ஆன….?? வேற ஒருத்தர் கூட?? என்னால.!! ம்கும் என்னால முடியாது என்றவளை அவன் காதலாய் பார்க்க.. மிருதுளாவிற்கு மனதில் ஏதோ புரிவது போல் இருந்தது.. எல்லாத்துக்கும் மேல நீ என்ன லவ் பண்றேன்றதுக்கு முக்கியமான சாட்சி உன் கையில் இருக்க நம்ம நிச்சயதார்த்த மோதிரம் என்று அவள் கையில் தான் போட்ட மோதிரத்தை தடவியவன்.. உனக்கு நெஜமாவே என்ன புடிக்காம இருந்திருந்த எப்பவோ நீ இத கழட்டி தூக்கி ஏறிஞ்சிருப்ப மித்து என்று சொல்ல.. மிருதுளாவிற்கும்
அப்போது தான் அது உறைத்து.. அவனை பிரிந்த இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட அந்த மோதிரத்தை அவள் விரலைவிட்டு கழட்டியது இல்லை. ஏன் அதுபற்றி அவள் நினைத்து கூட இல்லை என்று நினைத்தவள்.. உடனே ஷரவன் கையை பார்க்க அவள் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து போனது. அவள் வாடிய முகத்தை கையில் ஏந்திய அவள் கணவன்.. “என் செல்ல மித்துக்குட்டி. அந்த மோதிரம் நாலு வருஷத்துக்கு முந்தி போட்டது டி.. விராலுக்கு சின்னத போச்சு, அதனால் என்னும் போதே.. அதனால கழட்டி வச்சுட்டிங்களா என்று மிருதுளா கவலையாக கேட்க.. அவள் கையை பிடித்து தான் நெஞ்சில் வைத்தவன்.. அதெப்படி டி அதை நான் என்ன விட்டு பிரிச்சு வைப்பேன்.. உன்னோட ஒவ்வொரு பொருளும் எனக்கு பொக்கிஷம் டி.. நீ போட்ட மோதிரம் எனக்கு உயிர்.. அதனால தான் அத என்னோட இதயத்துக்கு பக்கத்துலயே வச்சுருக்கேன் என்று தான் கழுத்தில் இருந்த செயினை வெளியே எடுக்க அதில் மிருதுளா ஷரவனுக்கு போட்ட மோதிரம் அழகாய் தொங்கியது..
கண்ணீர் வழிய அந்த மோதிரத்தை தடவியபடி தன் கணவனை பார்த்தவள். ஏன் மாமா?? ஏன் என்னை இவ்ளோ லவ் பண்றீங்க.. நான் உங்கள எவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கேன்.. எப்பவும் உங்கள காயப்படுத்தி மட்டும் தான் இருந்திருக்கேன்.. கடைசிக்கு உங்களையும், ராஷ்மியையும் என்றவள்.!! ச்சே என்னை நெனச்ச எனக்கே அசிங்கம இருக்கு மாமா என்றவள் ஷரவனை பார்த்து..

“நான் இவ்ளோ தப்பு பண்ணி இருக்கேன் உங்களுக்கு ஏமேல கோவமே வரலய என்று கண்ணீரோடு கணவனை பார்க்க.. அவள் கண்ணீரை துடைத்தவன்.. எனக்கு எப்பவுமே உன்மேல கோவம் வராது மித்தும்மா.. எனக்கு நீயும், முக்தாவும் வேறவேற இல்ல டி.. சொல்லப்போன நீதான் என் முதல் குழந்தை.. குழந்தைக்கிட்ட போய் கோவப்பட முடியும டி என்று சொன்னவனை நொடியும் வீணாக்காமல் அவன் இதழை சிறைப் பிடித்தவள். “ஐ லவ் யூ மாமா” ” ஐ லவ் யூ சோ மச்” என்று அவள் மனதின் மொத்த காதலையும் அந்த மூன்று வார்த்தையில் கொட்டிவிட.. முதல் முதலில் அவள் வாய்மொழியாக அவள் காதலை கேட்டவன் மனது சொல்லமுடியாத இன்பத்தில் முழ்கிட.. அந்த சந்தோஷத்தில் தன் அருமை மனைவியை முழுதாக ஆட்கொண்டான்.. உண்மை காதல் கொண்டு தன்னை வென்ற தன் காதல் கணவனுக்கு தன் பெண்மையையே பரிசாக தந்தாள் பெண்ணவள்.. இருவரும் இனைந்து மோகம் கலந்த காதல் கடலில் முழ்க தொடங்கினார்..