கண்ட நாள் முதல்

அத்தியாயம் 17

 

தோழிகளின் கிண்டலில் கன்னம் சிவந்த நிலா, “ஏய் போது விடுங்கடி… சும்மா கிண்டல் பண்ணிட்டு” என்று வெட்கப்பட…

 

“அய்யோ எனக்கு நெஞ்சு வலிக்குதே, மயக்கம் வர்ர மாதிரி இருக்கே… அய்யோ அம்மா!!” என்று தேவி நெஞ்சை பிடித்துக்கொள்ள…

 

“ஏய் ஏய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டி… போதும் இதோட நிறுத்திக்குவோம்” என்று நிலாவின் கன்னம் மேலும் சிவக்க!!  

 

“ஆத்தி நிலா? உனக்கு வெட்கப்பட கூட தெரியுமா?” என்று தேனு அவள் சிவந்த கன்னத்தை கிள்ள. “ஏய் போதும்டி வலிக்குது, அழுதுடுவேன்…” என்றவளை பார்த்து இருவரும் சிரித்து விட்டனர்.. “ஓகே, ஓகே இன்னைக்கு இது போதும்… மீதியை கல்யாணத்தன்னைக்கு பாத்துக்குறோம்” என்ற தேன்மொழி, “சரி நிலா இப்ப சொல்லு.??  சூர்யா அண்ணாவ பத்தி நீ என்ன நினைக்கிற??”

 

“அவரர் நல்லவர் தான்.  அதுல எனக்கு 

ஒரு சதவீதம் கூட டவுட்டு இல்ல. அதுக்கு காரணம் அவரை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சது நீங்க. சோ நோ டவுட். அப்புறம் நா பாத்த வரை அவரு உங்க கிட்ட, சந்தியா கிட்ட பழகிய விதமே சொல்லுது அவரு பொண்ணுங்களை மதிக்கிறவர்னு, சோ அதுவும் ஓகே தான்,ஆனா,…?? என்று நிலா இழுக்க,

 

“என்னடி ஆனா,?” என்ற தேன்மொழி நிமிர்ந்து பார்த்த நிலா, “இல்லடி… நா ஆம்பிளைங்களையே நம்பாதவ… ஆனா, சூர்யா மேல என்னால சந்தேகப்பட முடியல,

அதோட எனக்கு அவரை பாத்தி ஒன்னுமே தெரியாது?? சோ, என்னால எந்த முடிவுக்கு வர முடியல” என்றவள் கன்னத்தில் கை வைத்துக் கொள்ள,

 

“அடியேய் பொய்புழுகி, அண்ணாவ பத்தி எந்த முடிவுக்கும் வர தவ தான்… அவர அப்டி கட்டிப் புடிச்சுட்டு இருந்தியக்கும்?? இது உலக நடிப்புடா சாமி?? என்று தேவி கிண்டலடிக்க

நிலா தலை கவிழ்ந்து மென்மையாக சிரித்தவள், “அது எப்டியே எனக்கு தெரியல… ஆனா, ஒன்னுடி, உங்க எல்லாரையும் கூட்டு சேர்த்து. எனக்கே தெரியாமல் என்னை கல்யாணம் பண்ணதுக்கு அவரை பழிவாங்காமல் விட மாட்டேன் பாத்துக்க” என்று சூளுரைக்க…

 

“அடியேய், நீ சொல்ற டைலாக்ல தான் கோவம் இருக்கே தவிர, உன்ற மொகரகட்டைல அப்டி ஒன்னு தெரியலயேடி. பஞ்சத்தில் அடிபட்டவன் பஞச் டைலாக் பேசுற மாதிரி இல்ல இருக்கு. எமோஷன் பத்தலயே?” என்று தேவி, நிலா காலைவாரா, “ஏய் இப்ப நீ எங்கிட்ட நல்லா வாங்க போற பாரு. உண்மையாவே நா கோவமா தான் சொன்னேன். அதுவும் அந்த அரவிந்தை எல்லாம் சும்மாவே விட மாட்டேன் பாத்துக்க… சான்ஸ் மட்டும் கிடைக்கட்டும், அவனை ஒரு வழி பண்ணிடுறேன்” என்று கொதிக்க. சட்டென தேனு முகம் வாடி விட, 

 

“அய்யோ… இவ என்ன இப்படி சொல்ற. போற போக்க பாத்த, நம்ம ஆசை நடக்காது போலயே?”  என்று தேவி புலம்ப.. 

 

“எது எப்படியோ நிலா… ஆனா, எங்களை அடிச்ச மாதிரி அண்ணாவையும் அடிச்சிடாதடி.. அப்றம் நம்ம குடும்ப மானம் கப்பல் ஏறி போய்டும்” என்ற தேன்மொழியை பார்த்து நக்கலாக சிரித்த நிலா…

 

“ஆமால்ல.‌‌.. நீ சொல்றதும் கரெக்ட் தான். சரி அடிக்க மாட்டேன், குணமா, வாயல பேசி பேசியே உங்க அண்ணாவை இம்சை பண்றேன். ஓகேவாடி என் செல்ல நாத்தனார்களா”  என்றவள் மணி பார்க்க, “அய்யோ டைம் ஆச்சு, அம்மா காத்துட்டு இருப்பாங்க, நா கிளம்புறேன்”

 

“ஓகே நிலா நீ கிளம்பு” என்று தேனு சொல்ல, தேவி மட்டும் எதையே யோசித்துக் கொண்டிருக்க… நிலா அவளை உலுக்கி நிகழ் உலகிற்கு கொண்டு வந்தவள், “ஏய் என்னச்சிடி?? எதுக்கு இப்படி ஃப்ரீஸ் ஆகி இருக்க?”

 

“ஏன் நிலா உனக்கு ஏன் அரவிந்த் மேல இவ்வளவு கோவம்..? ஒரு வகையில் அவரு உனக்கு நல்லது தானே பண்ணியிருக்காரு.?? அப்றம் ஏன் அவரை நீ கஷ்டப்படுத்த நினைக்கிற…?? எங்களை மன்னிச்ச மாதிரி அவரையும் நீ மன்னிச்சுடலாமில்ல” என்று உண்மையான அக்கறையுடன் கேக்க..?? நிலா திரும்பி தேனுவை பார்க்க, அவள் முகம் எந்த உணர்ச்சியுமின்றி  இருக்க?? திரும்பி தேவியை பார்த்தவள், “ஏன்டி.? உனக்கு என்ன அந்த மர வேதாளம் மேல இவ்ளோ அக்கறை.?? என்னடி நடக்குது” என்று மிரட்டல் தெனியில்   கேட்க..?? அதில் மிரண்ட தேவி, “இல்ல நிலா சும்மா தான். அவரும் பாவம் தானா. அதோட அவர் சூர்யா அண்ணா ஃப்ரண்டு வேற அதான் சொன்னேன்” என்று மென்று முழுங்க…

 

“அவ்ளோதானா?? வேற ஒன்னும் இல்லயே.?? என்று நிலா முறைக்க… 

 

“இல்ல நிலா… வேற எதுவும் இல்ல.”

 

“ம்ம்ம அப்ப சரி” என்ற நிலாவை முறைந்த தேவி, “என்ன சரி.?? படத்தை தொடங்கும் முன்னயே, இப்படி எண்டு கார்டு போட்டுட்டு, சரியாம் சரி” என்று நிலாவை வண்ட வண்டையாக மனதில் திட்ட… 

 

“ஏய்… என்ன மறுபடியும் ஃபிரீஸ் ஆகிட்ட??” 

 

“இல்ல நிலா ஒன்னும் இல்ல??என்ற தேவியை முறைத்தபடியே, சரி நா கிளம்புறேன்” என்றவள் தான் வண்டியை எடுத்துக்கொண்டு போய் விட. 

 

இங்கு தேவியும், தேனுவும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்..

 

கல்யாணத்துக்கு இன்னும் நான்கு நாட்களே இருக்க.. நிலா ஆபீசுக்கு லீவ் போட்டு விட்டு வீட்டிலேயே இருந்தாள். கலை, குமார், சந்தியா எல்லாரும் கல்யாண பத்திரிகை கொடுக்க வெளியே சென்று விட, நிலா மட்டும் வீட்டில் இருந்தாள்.. “யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தவள். அங்கே அழகிய சிரிப்புடன் சூர்யா நிற்க… திடீர் என்று அவனை கண்டவள் அதிர்ச்சியில் அசையாமல் அப்படியே நின்று விட்டாள். 

 

“அழகிய மையிட்ட மீன் விழிகள் கொண்டு, விடாமல் என்னை பார்க்கும் இந்த இரண்டு கெண்டை மீன் கண்களில் ஆயுள் முழுவதும் விழுந்து கிடக்க எனக்கும் ஆசை தான்டி பொண்டாட்டி… ஆனா, இப்டி வாசல்லையே நின்னா??  பாக்குறவங்க தப்ப நினைப்பாங்க நிலானி.??” என்ற அவனின் குறும்பு தெறிக்கும் குரலிலும்.?? நிலானி என்ற அழைப்பிலும் உணர்வு பெற்றவள். 

 

“ச்சே என்ன இது?? மறுபடியும் இவனை இப்டி அடிச்சு பாத்துட்டு இருக்கோம். என்ன தான் ஆச்சு நமக்கு. இவன் பாக்கத்துல வந்தாலே நா பிரீஸ் ஆகிடுறேன். என்னாச்சு எனக்க?” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

 

“ஹலோ நிலானி., ஏய் உள்ள வரலாமா? இல்லையா?” என்று கேட்டுபடி அவள் முகத்தின் முன் கைகளை ஆட்டி அவள் சிந்தனையை கலைக்க, 

 

அவள் வழியை விட்டு நகர்ந்து நிற்க சூர்யா உள்ளே வந்தவன், “சந்தியா எங்க?” என்று கேக்க, நிலாவுக்கு சுர் என்று கோவம் தலைக்கேறி விட்டது.

 

“ஓஓஓ அப்ப இவன் என்னை பாக்க வரல..?? அந்த சூன்ய பொம்மையை தான் பாக்க வந்திருக்கான்” என்று அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க… உடனே, “அது சரி இவன் யாரை பாக்க வந்த எனக்கென்ன?’ என்று முறுக்கி கொள்ள, நிமிடத்திற்கு நிமிடம் பல பாவனையில் மாறும் அவளின் அந்த அழகு முகத்தை ரசித்து கொண்டிருந்தன் அவள் கணவன்.

 

“ஏய் உன்னை தான் கேக்குறேன். சந்தியா எங்க??” என்று கேட்டு அவளை மேலும் வெறுப்பு ஏத்த.

 

“ம்ம்ம் கிச்சன்ல கடுகு டப்பால ஒளிச்சு வச்சிருக்கேன் போய் எடுத்துக்க??”

 

“ஏய் என்னடி காமெடி பண்றியா??”  

 

“ஆமா… பின்ன வேற என்ன பண்ணுவாங்க.. அவளை பாக்க வந்த ஃபோன் பண்ணி, அவ வீட்டுல இருக்காலன்னு தெரிஞ்சுட்டு வரணும்.. அத விட்டு வீட்ல இல்லாதவளை எங்கன்னு கேட்டா வேற என்ன சொல்வாங்க…” என்று நிலா முகத்தை திருப்பிக் கொள்ள,

“அடிபோடி லூசு? ஃபோன் பண்றாதாம். வீட்ல யாரும் இல்ல… நீ தனியா தான் இருக்கேன்னு சந்தியா சொன்ன அப்றம் தானாடி நானே வந்தேன். நா மட்டும் உன்னை தான் பாக்க வந்தேன்னு சொல்லியிருந்த, இன்னேரம் நீ சும்மாவா இருப்பே ஒரு ஆட்டம் ஆடி இருக்க மாட்ட… அதான் மாத்தி சொன்னேன். ஆனாலும்?? உனக்கு இவ்ளோ பொறாமை வேணாம்டி… நா சந்தியாவை தான் பாக்க வந்தேன்னு சொன்னதும் மூஞ்சில எள்ளும், கொள்ளும் வெடிக்குது.. மனசுக்குள்ள இவ்ளோ ஆசைய வச்சுட்டு என்னம்மா நடிக்கிறடி நீ! சரியான பிராடு, இருக்கட்டும், இருக்கட்டும்… உன்ன கவனிக்கிற விதத்தில் கவனிச்சுக்கிறேன்” என்று நினைத்துக் கொண்டு இருந்தவனை, நிலா “ஹலோ ஹலோ” என்று கூப்பிட்டு சூர்யா அதை கவனிக்காமல் போக?? “டேய் லேம்ப் போஸ்ட்… எங்கடா தொலைஞ்சு போன?” என்று கேட்க, ஒரு நிமிடம் அதிர்ந்தவன்,

 

“ஏய் என்னை என்னன்னு சொன்ன இப்ப நீ…??”

 

“ஏன் காது கேக்கலையா லேம்ப் போஸ்ட் ன்னு சொன்னேன்” என்று திமிராய் சொல்ல,

 

“அடியேய் உனக்கு எவ்ளோ கெழுப்பிருந்த, என்னை அப்டி சொல்லுவா?” என்று அவனும் திமிராய் கேட்க,

 

“ஆமா இவரு பெரிய இவரு… ஒருத்தரை பாக்க போறதுக்கு முந்தி ஒரு ஃபோன் பண்ணிட்டு போனுன்னு கூட தெரியல இதுல சந்தியா எங்கன்னு கேள்வி வேற… ம்க்கும் என்று உதட்டை நெளிந்து கொள்ள.

 

“அடியேய் நா எதுக்குடி. ஃபோன் பண்ணிட்டு வரணும். இது என் வீடு, நா எப்ப வேணும்னாலும் வருவேன் எப்ப வேணும்னாலும் போவேன். அது என் இஷ்டம்…” என்றவனை நிலா முறைக்க,

 

“ஓய் என்ன முறைப்பு. உனக்கு எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. நீ என் பொண்டாட்டி, இது என் மாமனார் வீடு, இங்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. சோ இப்ப நீ மரியாதையா போய் நல்ல பொண்டாட்டியா, புருஷனுக்கு காபி போட்டு எடுத்துட்டு வா பாக்கலாம்” என்று அதட்ட.

 

அவனை இன்னும் இன்னும் முறைத்த நிலா, “முடியாது போடா… நீ சந்தியாவை தானா பாக்க வந்த, அப்ப அவ வந்ததும், அவளையே காபி போட சொல்லி வாங்கிக் குடி” என்றவள் நகர. 

 

சட்டென்று அவள் முன் வந்து நின்றவன். அவள் கண்களை நேருக்கு நேர்  பார்க்க. அவன் பார்வையில் என்ன கண்டாலோ, அதை எதிர்கொள்ள முடியாமல் தலையை குனிந்து கொள்ள. அவள் தாடையில் தன் விரல் வைத்து அவன் தூக்க. அவள் நிமிர்ந்து பார்க்க. அவன் அவளை இதழை நோக்கி முன்னேற.. பயத்தில் நிலா பின்னால் நகர்ந்தவள், சுவர் மோதி இதற்கு மேல் செல்ல வழி இல்லாமல் போக?? என்ன செய்வது என்று தெரியாமல் அவள் விழிகள் இரண்டும் அலைபாய்ந்தது. “என்னதிது? யாருக்கும் பயப்படாத நா. இவன் முன்னாடி மட்டும் ஏன் இப்டி ஆகிடுறேன். ஏன்? என்னால இவனை ஒழுங்க திட்ட கூட முடியல.? அய்யோ!! எனக்கு என்னதான் ஆச்சு? இந்த பக்கி பக்கத்தில் வந்தாலே நா மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி ஆகிடுறேனே. அம்மா மாரியம்மா, காளியம்மா உன் புள்ளைக்கு தகிரியம் கூடுமா” என்று மனதில் வேண்டுதல் வைக்க 

 

 “அடியேய்… நா உன்ன பாக்க வராம, சந்தியாவ பாக்க வந்தேன்னு உனக்கு பொறாமை தானா?? உண்மைய சொல்லு?” என்று கேட்க. அதில் அவள் பயமெல்லாம் பஞ்சாய் பறக்க, இடுப்பில் கை வைத்து சூர்யாவை பார்த்தவள், “யாரு நானு..?? நானு..?? நீங்க அவளை பாக்க வந்ததுக்கு பொறாமை படுகிறேன். ம்ம்ம்ம்ம். இந்த வருஷத்துல பெரிய மொக்க ஜோக் இதுவ தான் இருக்கும். நானாது அப்டி நெனைக்குறதது… நோ வே, அந்த சீன் இங்க இல்ல. எனக்கு பொறாமையும் இல்ல. அந்த அளவுக்கு நீங்க ஒன்னும் மன்மதனும் இல்ல” என்று அவள் நகர போக. 

 

அவளை நகர விடாமல்  தன் கைகள் கொண்டு இருபுறமும் அணை கட்டியவன். அவன் மூச்சு காற்று அவள் கன்னம் தொடும் அளவுக்கு நெருங்கி நிற்க, நிலாவிற்கு மூச்சே நின்றுவிட்டது. அப்படியே கண்களை இறுக்கி மூடி கொள்ள, கண்முன்‌ அழகு சிலையாய் நின்ற‌ மனைவியை ரசித்தவன். “அப்றம் ஏன்டி, நா வந்ததும், என்னை வச்ச கண்ணு வாங்காம அப்டி பாத்துட்டு இருந்தா..??” என்று குறும்பாக கேட்க.

 

சட்டென்று கண்ணை திறந்த நிலா, “நா… நா ஒன்னு… நா ஒன்னும் பாக்கல” என்று தட்டு தடுமாறி சொல்ல. அவளின் அந்த தடுமற்றத்தை கண்டு சிரித்தவன்.  “ஓஓஓ..?? அப்டியா? அப்ப நீ அன்னைக்கு கடையில கூட என்னை பாக்கல, இன்னைக்கு இப்பவும் என்னை பாக்கல… அப்டிதானா” என்க?? அவள் ஆமா என தலையாட்ட,  கேலியாக சிரித்தவன்,  “நா நம்பிட்டேன்டி, நம்பிட்டேன்” என்றவன், பொய்யாடி சொல்ற? இன்னைக்கு இது போதும் மாத்ததை கல்யாணத்துக்கு அப்றம் வச்சிக்கிறேன்” என்று மனதில் நினைத்தவன், அவளை விட்டு விலகி வாசல் வரை சென்றவன், “ஓய் நிலானி… அப்டியே சுவத்துல ஒட்டிட்டு நிக்காத. பல்லி எதுவும் நம்ம ஜோடி தான் நிக்குதுன்னு வந்து கைய புடிச்சி இழுக்கப்போகுது. போய் தண்ணி எடுத்து குடி. அப்ப தான் உன்னால மூச்சு விடவே முடியும்” என்றவனை அவள் முறைக்க, அவன் அவளை பார்த்து அழகாய் கண்ணடித்து விட்டு செல்ல, நிலா மொத்தமாய் தன்னிலை இழந்து அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

 

இங்கு சூர்யா, தேனு, தேவியை பார்க்க வர சொல்லி இருந்ததால். இருவரும் சூர்யாவுக்காக ரெஸ்டாரெண்டில் காத்திருக்க, அங்கு வந்த சூர்யாவும், அரவிந்த்தும் அதிர்ந்து விட்டனர்.

 

“ஏய் என்னம்மா இது? என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்?  ஏன் இப்டி முகம் எல்லாம் வீங்கி போய் இருக்கு.?” என்று சூர்யா கேட்க?? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அமைதியாய் இருக்க… 

 

“ஏய் அவன் கேட்டுட்டு இருக்கான். நீங்க ரெண்டு பேரும் வாய மூடிட்டு சும்மா இருந்த என்ன அர்த்தம்? என்ன ஆச்சு சொல்லி தொலைங்க… ஏய் பிசாசு நீ யாது சொல்லுடி… என்ன ஆச்ச” என்று அரவிந்த்தும் கத்த.

 

தேனுவும், தேவியும் ஒரே நேரத்தில் “நிலாவுக்கு நாங்க உங்க கூட கூட்டணி வச்ச மேட்டர் தெரிஞ்சு போச்சு அண்ணா” என்று பாவமாக சொல்ல. அதான் பின் என்ன நடந்திருக்கும் என்று சூர்யா, அரவிந்துக்கு சொல்லாமலே புரிய அவர்களால் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

“அண்ணா சிரிக்காதீங்க, எங்ளுக்கு எப்டி வலிக்குது தெரியுமா?” என்று இருவரும் பல்லை கடிக்க… “சாரி மா வெரி சாரி… என்னால கண்ட்ரோல் பண்ண முடியல… சாரி” என்ற சூர்யா “அது சரி அவளுக்கு எப்டி உண்மை தெரிஞ்சுது?? யார் சொன்னா??”

 

“எல்லாம் உங்க ஆசை மச்சினி பாதி இதோ இந்த யட்சிணி மீதி ன்னு‌‌ எல்லாத்தையும் ஒளாரி கொட்டிடுச்சிங்க” என்று தேனு நடந்ததை சொல்ல. 

 

அரவிந்த் விழுந்து விழுந்து சிரித்தவன், “டேய் சூர்யா… சந்தியா யாம் பெற்ற இன்பம் பெறுக இவங்களுன்னு மாட்டி விட்டுட்ட போலடா. தேவி தன் வாயலயே கெட்ட, ஹா ஹா ஹா…

 

தேனு, “ஹலோ மிஸ்டர். அரவிந்த், இப்ப எதுக்கு இப்டி சிரிங்க..?? ஏதோ நேரம் சரியில்ல மாட்டிக்கிட்டோம். அதுக்குன்னு இப்டி ஒன்னும் ஓட்ட வேண்டாம்” 

 

“தேவி நேத்து நிலா தேனை தலையில் எதுவும் அடிச்சிட்டால என்ன??”

 

“இல்லயே… ஏன் அரவிந்ந் அப்டி கேக்குறீங்க..??

 

“இல்ல தேவி, திடீர்னு மிஸ்டர். அரவிந்த்னு மரியாதையா கூப்புடுறாளே, அதான் தலையில் எதும் அடிப்பட்டுச்சுன்னு கேட்டேன்” என்று சொல்ல.

 

அதற்கு தேன்மொழி எதுவும் பதில் பேசாமல் இருக்த. ஏனோ அரவிந்த் முகம் சுருங்கி விட்டது. சூர்யா இதை கவனித்தாலும் எதுவும் கேட்கவில்லை.

 

“நேத்து நடந்ததுல ஒரு நல்ல விஷயம் இருக்கு அண்ணா, நிலா உங்க மேல நல்லா அபிப்பிராயம் வச்சிருக்கா, அத அவ வாயாலேயே கேட்டோம், அதுபோதும் எங்களுக்கு” என்று தேவி மகிழ…

 

“நிலா சொன்னது உண்மை தான்ம்மா. நீங்க ரெண்டு பேரும் என்னை நம்புனீங்க. அதனால தான் இந்த கல்யாணம் நடந்தது. இல்லன்னா இந்த கல்யாணமே நடந்திருக்காது.

நீங்க அவளுக்கு ஃப்ரண்ட கிடைக்க 

அவளும் சரி, நானும் சரி ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.”

 

“ஆமா அண்ணா. அவளுக்கு எங்க மேல நம்பிக்கை அதிகம். அதே மாதிரி தான் எங்களுக்கு” என்றவள், “சரிண்ணா டைம் ஆச்சு நாங்க கிளம்புறோம்” என்று சொல்லி தேவி எழுந்த, தேனுவும் வரேன்னா” என்று சூர்யாவிடம் மட்டும் சொல்லி விட்டு செல்ல. அரவிந்த் போகும் தேனுவையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“டேய் அரவிந்த்… கவனிச்சியா தேனு முகமே சரியில்ல, ஏதோ மாதிரி இருக்க. அவளுக்கு ஏகோ பிரச்சனை போல, இல்லன்னா இந்நேரம், நீ அவளை கலாய்ச்சது க்கு, உன்னை உண்டு இல்லன்னு பண்ணி இருப்ப” என்று சொல்ல, அரவிந்த் மனதிலும் அதே தான் ஓடிக்கொண்டு இருந்தது.

 

“என்னாச்சு இவளுக்கு?? ஏன் ஒரு மாதிரி இருக்க, ஒருவேள தேவி என்கிட்ட பேசினது, இவளுக்கு தெரிஞ்சு போச்ச? அதனால தான் இப்டி இருக்காளா?? சரி அப்படியே தெரிஞ்சாலும், அதுக்கு இவ ஏன்  இப்டி இருக்க? ஒன்னும் புரியலயே… ம்ம்ம்ம் பேசாமல் தேவிகிட்டயே கேட்டுட வேண்டியது தான்’ என்று முடிவு செய்தவன் சூர்யாவுடன் அங்கிருந்து கிளம்பினான்.