கனலியின் கானல் அவன்(ள்)-22.2

கனலியின் கானல் அவன்(ள்)-22.2
“தேனு நான் வர சொல்லல. அவங்களா வந்த மாதிரிதான் தோணுது.குளிக்கிறீங்கன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ”
தான் உடுத்தியிருந்த சட்டையின் பட்டன்களை போட்டுக்கொண்டிருந்த அரசுவிடம் தன் அண்ணனும் அண்ணியும் வந்திருப்பதாக கூற அரசு அவரை நிமிர்ந்து பார்த்த பார்வையில் பேச்சை நிறுத்திக்கொண்டார்.
இருவருமே இன்று கயல்,ருத்ராவின் திருமணம் பற்றி பேச செல்லவிருக்க, அவர்கள் இங்கு வந்ததால் தான்தான் அவர்களை வரவழைத்ததாக நினைத்து விடுவாரோ என எண்ணி பயந்தவாறே பேசிக்கொண்டிருந்தவர் வாய் அரசுவின் பார்வையில் தானாகவே மூடிக்கொண்டது.
அவங்களுக்கு சாப்பிட எதாவது ரெடி பண்ணு மீனா,இதோ வர்றேன்.கையில் கைக் கடிகாரத்தை அணிந்தவாறே அவர்களோடு பேச தம் அறை விட்டு வெளிச்சென்றார். தன்னோடு கோவித்து கொண்டாரோ என வருந்திய மீனாட்சி முகத்தில் எதுவுமே கட்டிக்கொள்ளாது அவர்களுடன் இன்முகமாகவே பேசினார்.அவர்களுக்கு தேநீர் எடுப்பதற்காய் சமயலறைக்குச் செல்லப்போக,
“மீனாட்சி அப்றம் சாப்பிடலாம்.முதல்ல இங்க வந்து உட்காரு.”
ஜனார்த்தனன் அவரை அழைக்க அவரும் அரசுவோடு வந்து அமர்ந்துக்கொண்டார்.
“நாங்களும் நைட் வீட்டுக்கு வராலம்னு இருந்தோம்ணா. “
“ஓஹ் அப்படியா.அப்போ நம்ம போறப்ப நம்மளோடவே கிளம்பலாம் மா.நானும் பார்வதியும் உங்க கல்யாணம் முடியவுமே வர்றதா இருந்த பயணமிது.பசங்களும் வீட்ல இருக்க மாட்டேன்றாங்க. நம்மளுக்கு சரியா டைம் கிடைக்கல.அதோட கயலும் கிளம்பி போகவும் மனசுக்கு ஏதோ போல இருந்துச்சு.எதுன்னாலும் பேசிக்கலாம்னு கிளம்பி வந்துட்டோம்.வருவ வர சொன்னேன்,முதல்ல நீங்க போய் பேசுங்கன்னு சொல்லிட்டான்.
நம்ம வருக்கு கயலை பார்க்கலாம்னு நினைக்குறோம். அவனுக்குமே பிடிச்சிருக்கு. ரொம்ப வருஷமா கல்யாணம் பேசலாம்னு கேட்டுட்டே தான் இருக்கோம். அப்றம் பார்க்கலாம்னு தள்ளி போட்டுட்டே இருந்தான். இப்போதான் யேன்னு புரிஞ்சது.”
இவ்வாறு சொல்லவும் அவர் பார்வை மீனாட்சியின் மீது நிலைத்திருக்க, அரசுவுக்குமே அந்த காரணம் புரிந்தது.
“இப்போ அவன் சரின்னதுமே எனக்கு கயல் தான் சரியா வரும்னு தோணுச்சு.என் தங்கையோட பொண்ணு என் வீட்டுக்கே வர நான் கொடுத்து வெச்சிருக்கணும். “
ஜனார்த்தனன் கூற,அரசு ஆமோதிப்பதாய் கேட்டுக்கொண்டிருந்தார்.
காலையில் அலுவலகம் செல்ல தயாராகி வந்தவன் தன் அன்னை தந்தை உணவருந்திக்கொண்டிருக்க அவர்களோடு அமர்ந்தான்.
“ப்பா… உங்ககூட கொஞ்சம் பேசணுமே…’
இவன் ஆரம்பிக்கவுமே மாதவனும் இவர்களுடன் வந்தமர.
‘இவன் வேற,கலாய்ப்பானே… ‘ மனதில் தம்பியை முறைத்தவன்,
அவன் தலை குனிந்திருந்த சில நொடிகளில் மற்ற மூவரும் சின்ன சிரிப்போடு பார்த்துக்கொண்டனர்.
அவர்களுக்குத்தான் தெரியுமே மகனின் காதல்… அவன் கம்பீரமாய் சுற்றி திரிந்தாலும் இபோதெல்லாம் அந்த முகத்தில் காணக்கூடிய மலர்ச்சியும், அவ்வப்போது அவனை காணும் நேரங்களில் அலைபேசியை பார்த்து சிரிப்பதும்,அவனையே அவன் திட்டிக்கொண்டு திரிவதனையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்கள்.
‘ப்பா,நம்ம கயலை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்.நீங்க போய்… “
“நான் போய்…” உணவில் கவனம் இருப்பது போல ஜனார்த்தனன் சற்றும் பொருட்படுத்தாது கேட்க,
பையனுக்கு கோபம் வந்துவிட்டது போலும், எழுந்துகொண்டான்.
“நான் கிளம்புறேன்.”
பார்வதி தன் கணவனை முறைத்தவர்,”வரு உட்காரு முதல்ல.”
மாதவனும் சிரிக்க அவனையும் முறைத்துக்கொண்டு மீண்டும் அமர்ந்தான்.
“வரு நான் போய்னு ஏதோ சொன்னியேப்பா? “
ஜனார்த்தனன் மீண்டுமாய் கேட்க,
“ஒன்னில்லைப்பா.”
மனதிலோ,’பேச ஆரம்பிக்க முன்னவே இன்னைக்கு நம்மலை ஒரு வழி பன்னிருவாங்க போல.டேய் வரு இன்னைக்கு கவி உன்னை டைவஸ் பண்றது கான்போர்ம்.’
“இப்போவாச்சும் நாம உங்க மாமா வீட்டுக்கு போய் பேசட்டுமா வரு? இல்ல நீங்க ரெண்டு பேரும் பேசி வெறேதும் முடிவு பண்ணிருக்கீங்களா? “
“அப்டில்லாம் ஏதும் இல்லப்பா.’தந்தை முகம் பார்க்க அவர் முகத்தில் இருந்த புன்னகை இவனையும் தொற்றிக்கொள்ள,மாதவனும் அவன் பங்கிற்கு
“ண்ணா இப்போவாச்சும் வெக்கப்படாம பேசு,நம்ம அப்பதான். “
“டேய் நீயெல்லாம் என்னை… “
“சும்மா இரு மாதவா.” பார்வதி அவனை அடக்க,
“ப்பா,மாமா இங்க வர்றதா சொன்னாங்க அதான் அதுக்கு முன்ன நம்ம வீட்ல இருந்து போய் பேசலாம்னு…”
“அதானே முறை வரு,நாம தான் அவங்க வீட்டுக்கு போகணும். நல்ல நாளா பார்த்து போய்ட்டு வரலாம்.ரித்தி,மாப்பிள்ளையும் வர சொல்லிறலாம்.”
“இல்லப்பா மாமா இன்னைக்கு வரேன்னு சொன்னாங்க.”
“இன்னைக்கா?நான் பேசி சொல்லிர்றேன்.அப்றம் நாம நாள் பார்த்து போய்ட்டு வரலாம். “
“வேணாம்பா.நீங்க இன்னைக்கு அம்மாவை மட்டும் கூட்டிட்டு ஜஸ்ட் போய்ட்டு வந்துருங்க. நீங்களா வந்ததா சொல்லிருங்க. அப்றம் அத்தையும் மாமாவும் வரட்டும். மாமாக்கு ஏதோ மனசுக்கு நெருடல்.இங்க வச்சு மத்ததெல்லாம் பேசிக்கலாம்.”
“நாம மட்டும் போனா நல்லா இல்லடா.எல்லாருமா போகலாம்.”
“ம்மா கயல் இப்போ வீட்ல இல்லையே அதுனால நீங்க மட்டும் போய்ட்டு வாங்க.அப்றம் எல்லாருமா போகலாம்.”
அதன் பின்னரே இருவருமாய் கயலின் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
“நானும் மீனாட்சியும் இன்னைக்கு இது பத்தி பேசத்தான் வர்றதா இருந்தோம். பொண்ணு ஆசைப்படவும்,நீங்க பிரியப்பட்டிங்கன்னா செஞ்சு வைக்கலாம்னு…”
அரசு பேச அவரை இடை நிறுத்திய ஜனார்த்தனன்,
“அரசு, என்ன பேசுறீங்க.நீங்க கேட்டு நான் வேணாம் சொல்லப்போறனா?உங்க பொண்ணு ஆசைப்பட்டானு நீங்கதான் வந்து பேசணும்னு இல்ல.என் பையனும்தான் ஆசைப்படறான்.பசங்க ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சு கொடுத்து அவங்க வாழுற வாழ்க்கைலதான் நம்ம சந்தோஷத்மே இருக்கு. மத்ததெல்லாமே ரெண்டாம் பட்சம் தான்.”
“இல்ல கயல் என் பொண்ணு… “
அரசுவை இடைமறித்த ஜனார்த்தனன்,
“அவ உங்க பொண்ணு மட்டும் இல்ல.இப்போ என் தங்கையோட பொண்ணும் கூட.கயல் எப்பவும் நம்ம வீட்டு பொண்ணு.நீங்க எதுக்கும் தயங்க வேணாம் அரசு.நீங்க கலையோட பொண்ண வளர்த்தீங்கன்னு நீங்க யாருக்கும் சொன்னாதான் தெரியும்.அது பற்றி நீங்க தயங்காதிங்க.இப்போவும் எனக்கு தெரிஞ்சதா காட்டிருக்க மாட்டேன்.உங்க நெருடலை போக்கணும்னு தான்.”
“கயல் எப்போ வரான்னு கேட்டு சொல்லுங்க கல்யாண திகதியை குறிச்சிடலாம்.பசங்க சந்தோஷம் தான் நம்மளுக்கு ரொம்ப முக்கியம்.’
‘எதையும் யோசிக்க வேணாம். பொண்ணோட அப்பாவா என்ன பண்ணலாம்னு கல்யாணத்துக்கு ரெடியாகுங்க.’பையனோட அப்பா நிறைய சீர் எதிர்பார்ப்பேன்.எல்லாத்துக்கும் தயாராகுங்க.”
“தாராலமா வெறுங் கையோட அனுப்பிருவேன் என் பொண்ண”
அரசுவும் மனம் லேசாக புன்னகையோடு கூறினார்.
அதன் பின் சகஜமாய் பேசிக்கொண்டனர் இருவரும்.அரசுவின் தயக்கம் எதுவென புரிந்து நடந்துக்கொண்டார், அரசுவின் தோள்களில் கைப்போட்டுக்கொண்டவர்,
“என் பையனுக்கு மாமாவா உங்களை பார்க்கல.என் மூத்தப் பொண்ணோட புருஷனாத்தான் பார்க்கிறேன்.சந்தோஷமா இருங்க. “
அரசுவுக்கும் அவரது பேச்சு மனதுக்கு சந்தோஷத்தை அள்ளித்தந்தது. குடும்பங்களின் பாசம் இழந்திருந்தவருக்கு அவரின் பேச்சு பெரும் ஆறுதலாய்.
மீனாட்சியோடு உள்ளே சென்ற பார்வதி அவர் கைகளை பற்றிக்கொண்டு,
“சந்தோஷமா இருக்கியா மீனாட்சி? “எனவும்,
“ரொம்ப… ” என்றவருக்கு கண்கள் கலங்கி விட்டது.
அவரை தோளோடு அணைத்துக்கொண்டவர்,
“நானும் உங்க அண்ணாவும் இப்போதான் மனசுக்கு நிம்மதியா இருக்கோம்டா. கயலோட பேசி சொல்லு நாம வீட்டுக்கு வந்தோம்னு சந்தோஷப்படுவா. “
“ஹ்ம் கண்டிப்பா.இப்போவே பேசலாம் என கண்களை துடைத்துக்கொண்டவர் அலைபேசியில் அவளை அழைத்தனர்.
“ஹாய் மீனாம்மா… “
இன்னும் கட்டிலை விட்டு எந்திரிக்காதவள் ருத்ராவின் டீ ஷிர்டினை ஆடையாக அணிந்து தலையணையில் தலைவைத்து இருந்தவாறே அலைபேசியை ஏற்றிருந்தாள்.
“இன்னும் எந்திரிக்கல? “
“ஹ்ம் ஹ்ம்.ரொம்ப போரிங்கா இருக்கு மீனாம்மா.”
“யாரு உன்னை அங்க போக சொன்னாங்க?நீயா போவியாம் இப்போ போரிங்கா வேற இருக்காம். “
“அது என் வேண்டுதல் மீனம்மா.எங்கள் கிளம்பிட்டிங்க?”
“எங்கயும் இல்லடா.இன்னைக்கு பூரா வீட்லதான். “
“என்ன மீனம்மா அவ்வளோ போரடிக்குறாரா உங்க புருஸ்? “
“ஹ்ம் கொஞ்சமா.நீ இருந்தாலாவது வெளில போலாம். “
கயல் கட்டிலில் எழுந்தமர்ந்தவள், கூந்தலை தூக்கி கொண்டையிட்டவாறு,
“போன ஹனி கிட்ட குடுங்க,உங்களை விட்டுட்டு அவருக்கென்ன அவ்வளவு பெரிய வேலை என்னனு கேட்குறேன்.”
“அதெல்லாம் கேட்கலாம்.நம்ம வீட்டுக்கு யார் வந்திருக்கா பாரு’
அலைபேசியை பார்வதி பக்கம் திருப்ப,
“ஹாய் !ஆன்ட்டி… எப்போ வந்திங்க? “
“இப்போதான் டா கொஞ்ச நேரமிருக்கும்.” இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொள்ள,
“கயல் ஆன்ட்டி எதுக்கு வந்திருக்காங்கன்னு கேளேன்.”
அவள் எப்படி கேட்பாள். அமைதியாய் இருக்க பார்வதியே,
“நம்ம வருக்கு பொண்ணு பார்த்திருக்கோம்டா.அதான் அப்பா கூட பேசிட்டு போகலாம்னு வந்திருக்கோம்.”
“ஓஹ்… “அவள் பேச்சில் இருந்த உட்சாகம் வடிந்ததுவோ.
“கயல் பொண்ணு பார்க்கப்போனா பொண்ணு கட்டிலை விட்டு இன்னும் எந்திரிக்கவே இல்லை. கல்யாணத்துக்கப்புறமும் இப்படியே இருந்தா நல்லாவா இருக்கும்.அதான் மாப்பிளையோட அம்மா கொஞ்சம் யோசிக்கிறாங்க… கயல் கல்யாணத்துக்கு அப்பறம் நேரமா எந்திரிப்ப தானே… அத்தைக்கு இப்போவே ப்ரோமிஸ் பன்னிரு.”
மீனாட்சி கூற,பார்வதியும் கயல் முழித்துக்கொண்டிருப்பதை இன்முகத்துடன் பார்த்திருக்க அவளோ,
“நான் எதுக்கு எந்திரிக்கணும்…? “என்றாள்.
பொண்ணு நீதானே உன்னைத்தானே பார்க்க வந்திருக்காங்க.அப்போ நீதான் எந்திரிக்கணும்.”
“மீனாம்மா…”
கயலின் அழைப்பு அருகில் இருந்திருந்தால் அவருக்கு ஆயிரம் முத்தங்கள் அள்ளித்தரும் நிலையிளவள்.
“சரி சீக்கிரம் சொல்லு எப்போ வர?” பார்வதி கேட்க,
“வந்துர்றேன் ஆன்ட்டி என்றவளின் முகத்தில் வெட்கப்புன்னகை.
“சந்தோஷமா இருடா. ”
அழைப்பை துண்டிக்க கயலின் நிலை சொல்லவும் வேண்டுமா எப்போதடா வீடு திரும்பாலாம் என்றிருந்தாள்.
‘அச்சோ ! வரு…’
அவனை உடனே பார்க்க வேண்டும் போல் இருக்க அலைபேசியை கையிலெடுத்தவளுக்கு ‘அவங்களே பேசுரேன்னாங்களே,கோபமா வேற இருப்பாங்க என்ன பண்ணலாம்.நான் வேற நைட் கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்.’
காதல் பெண்ணவளுக்கு அவன் கோபத்தை தணிக்கவா தெரியாது.காதலையே தூது விட்டாள்
“காவல் காரனே! உன்னிடம் சிறைப்பட்டு,உன் தண்டனைக்கு காத்திருக்கும் குற்றவாளியாய் நானிங்கிருக்க,
ஆயுள் தோறும் நீ எதைத்தந்தாலும் சுகமாய் ஏற்பேன்.
காவல் காரனே! உன்னிடம் கைதாகிட காத்திருக்கிறேன்.தண்டனை எதுவாகினும் சுகமாய் ஏற்பேன்.”
குறுந்தகவலை வசித்தவன் இதழ்களில் மலர்ந்த புன்னகை,அவள் இதழ்களில் சொட்டும் தேனை பருகக் காத்திருந்தது.
“தண்டனை எதுவாகினும்,அதை என் இதழ் கொண்டு தந்திடவே துணிவேன்.
என் கைச்சிறை விட்டு எனை நீ நீங்க மறுத்திடுவேன்.
தண்டனைக்கால ஆரம்பமோ வெகு அருகில்,அதன் காலமோ என் ஆயுள் வரை…
உன் விழிச்சிறையில் வீழ்ந்தவன் நானின்று உனையே என்னுள் சிறைசெய்துவிட்டேன்.”
இதை நீ வாசிக்கும் நொடி உன் கண்கள் காட்டும் காதலில் வீழ்ந்து,சிவக்கும் கன்னங்களை ருசித்து,துடிக்கும் இதயத்திற்கு இணையாக தடுமாறும் இதழ்களை என் இதழ் கொண்டு சிறை செய்ய துடிக்கிறேன் நானோ இங்கு இந்நொடி…
எனைக்கொல்லும் ராட்சசி…
நான் உனக்கு தண்டனை தந்து அதில் நீ சுகம் காண அதைக்கொண்டு நான் இதம் காண காத்திருக்கிறேன்…