கனலியின் கானல் அவன்(ள்)-23

20200724153943

கனலியின் கானல் அவன்(ள்)-23

மீனாட்சி மற்றும் தேனரசு ருத்ராவின் பெற்றோர் வந்துச்சென்ற அன்றே அவர்களின் வீடு சென்று ருத்ரா,கயலின்  திருமணம் பற்றி மேலும் பேசி அடுத்து வந்த ஒரு நல்நாளில் குடும்ப முக்கியவர்கள் சேர்த்து ரித்திகா, அவளது கணவர்,பிள்ளைகள், மாதவன்,மது என அவர்களது குடும்பத்தில் அனைவரும் வீட்டிலிருக்க நிரம்ப சந்தோஷமாக நிட்சய மற்றும் திருமண நாளை குறித்தனர்.

ரித்திகா எதையாவது பேசுவாள் என எதிர் பார்த்திருக்க தன் தமையனை பகைத்துக்கொள்ள பிரியப்படாதவள் இன்முகமமாகவே இருந்தாள். ஏனோ மீனாட்சியை மட்டும் அவளுக்கு பிடிப்பதே இல்லை. திகதி குறித்து முடித்து இரண்டு நாட்கள் சென்றிருக்க அரசுவும் மீனாட்சியும் ருத்ரா வீட்டிற்கு வந்திருந்தனர். அனைவரும் இரவுணவுக்காக அமரவும் தான் ருத்ரா வந்திருந்தான்.வந்தவன் உடை மாற்றிக்கொண்டே வருவதாகக்கூறி அறைக்கு சென்றுவிட்டான்.வந்தவனின் முகதில் தங்களை பார்த்த சந்தோஷம் இருந்தாலும் ஏதோ சரியில்லாததை உணர்ந்தார் மீனாட்சி.மற்றவர்களும் கூட. 

அதுவரையிலுமே மது அலைபேசியூடாக  கயலுக்கு வீட்டில் நடப்பதை பேசியபடி நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்க ருத்ரா வரவும் அண்ணனை அதனூடாக காட்டியவள் ‘இதற்கு மேல் முடியாது’ என அலைபேசியை வைத்துவிட்டாள்.  

கயலுமே அவன் முகம் சரியில்லாததை கண்டுகொள்ள தன் மேல் உள்ள கோபத்தினால் தானோ என வருந்திக் கொண்டவள்,அடுத்த வினாடியே, 

“இன்னுமா என் கூட கோபமா இருக்கீங்க? எதுக்கு இப்போ மூஞ்ச தூக்கி வச்சுட்டு இருக்கீங்களாம்.” கேட்டிருந்தாள். 

அலைபேசியை பார்த்தவாறே படிகளில் இறங்கியவனுக்கு முகத்தில் தோன்றிய புன்முறுவல்,அதை பார்த்து அனைவரும் சற்று சத்தமாகவே சிரித்துவிட்டனர். 

அப்போதுதான் தன்னிலை வந்த ருத்ரா எல்லோருமே தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்திட முகத்தில் நாணத்தின் சாயல். 

திருமண நாள் குறித்து விட்டதையும்,அவள் விருப்பப்படி அரசுவின் சந்தோஷ முகத்தையும் அவளுக்கு அன்று காட்ட, அதைக் கண்டவள் சந்தோஷமாகவே இருந்தாள். அன்றைய ஊடலையும் இனிமையாய் இருவரும் முடித்திக் கொண்டனர். ருத்ராவுக்கு சற்று வேலை அதிகமாக இருந்ததால் அவளுடனான பேசும் நேரம் சற்று குறைந்திருந்தது. 

இறங்கிவந்தவன் மீனாட்சி அருகே  அமர்ந்துக் கொண்டான்.

“இப்படித்தான் அத்த.எனக்கு மட்டும்  போனை எப்போப்பாரு நோண்டாதன்னு சொல்லுவாங்க. ஆனா அண்ணா மட்டும் அதை பார்த்துட்டே தனியா சிரிச்சிட்டு இருப்பாங்க.”

மது அத்தையிடம் புகார் நீட்ட,மாதவனும், 

“ஆமா அத்த,ஆபிஸ் லைனும் இப்போ பிஸியாவே இருக்கு என்னனு தெரில. எப்போ எடுத்தாலும்,

‘நீங்கள் அழைத்த நபர் வேறொரு தொடர்பில் ரொம்ப பிஸியாக  உள்ளார் ‘ சொல்ராங்க. “

ராகத்தோடு இழுத்து சொல்ல, மது சிரிக்க ருத்ராவால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது. 

“மீனாட்சி…”

ருத்ராவோ,இது யாரென்று பார்க்க  ஜனார்த்தனன்… 

‘ அட  அப்பாவுமா ‘

“என்னண்ணா?” ஏதோ முக்கியமாக பேசப்போகிறாரோ என மீனாட்சி அவரைப்பார்க்க அவரும், 

“மீனாட்சி,கண்ணு முன்னாடி நிக்கிற நம்மளை சிலநேரம் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது டா.ஆனா வேறெதையோ பார்த்து தனியா கையை காத்துல அசச்சுகிட்டு பேசிட்டிருக்கான். ஒன்னுமே புரில.அதோட கைல எது சிக்குதோ அதை  பிரிச்சு மேஞ்சிடறான்… “

காதில் ப்ளூடூத் வழியாக பேச கையில தான் அலைபேசி இல்லையே.அதைத்தான் தனியா புலம்புறானாம். 

ருத்ராவுக்கு எதுக்குடா வந்து உட்கார்ந்தோம்னு இருந்தது. இவ்வளவுக்கும் அவன் கயலோடு அறை விட்டு வெளியில் இருந்து கதைப்பதே அரிது.இன்றோ ரித்தியின் கணவர்,அதோடு அரசுவும் இருக்க, 

‘நம்மளை எந்தளவுக்கு கண்காணிச்சிருக்காங்க,அந்தளவுக்கு  வெளில நம்ம லவ்ஸை காட்டிருக்கமா. நாந்தான் வெளில நின்னு பேசவே மாட்டனே. அதுவும் முகத்துல காட்டிக்க மாட்டோமே.ரொம்ப ஷேமா போச்சே… இதுல அப்பாவும் சேர்ந்துக்கிட்டு.’

“என்ன ருத்ரா எல்லாருமா என்னென்னவோ  சொல்ராங்க என்னாச்சு? “அரசு கேட்டுவிட,  

“அதெல்லாம் ஒன்னில்லை மாம்ஸ் சும்மா தான்… “

மதிப்பிற்குரிய மாமனாரும்  மருமகனுமாச்சே.மீனாட்சிக்கும் சிரிப்பு  வந்துவிட்டது.  

“ரொம்ப முத்திப்போச்சு மாம்ஸ்.எதாவது பார்த்து பண்ணிவிடுங்க பையன் பாவம்.”

மாதவன் அவன் பங்கிற்கு கூற,அவனை முறைத்த ருத்ரா அவனை அடிக்க அருகே ஏதும் இருக்கிறதா என்று தேட,

“எதுக்கு வரு உண்மைய சொன்னா கோவிச்சுக்குற.”

“அது… அத்தம்மா அவ்வளவு கேவலமா என் முகத்துல தெரியுதா? “

ருத்ரா பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, 

“அவ்வளவு கேவலமா எல்லாம் இல்ல வரு.ரொம்ப அழகா உன் முகப்பிரகாசமே காட்டிக்கொடுக்குது.உன் லவ்வை. பொண்ணுங்க தான் வெக்கப்படடுவாங்கன்னா நீ கூட அழகா வெக்கப்படற வரு. “

“முதல்ல சாப்பிடுங்க அப்றமா அவனை கலாய்க்கலாம்.சும்மா பையன வம்பு பண்ணிக்கிட்டு. அவன் அவ கட்டிக்க போறவக்கிட்ட பேசுறான்.”

பார்வதி மகனை காப்பாற்றுகிறாராம்.  

அனைவருமாக பேசி, சிரித்தவாறே உணவை முடித்துக்கொண்டனர்.அரசுவும் மீனாட்சியும் மீனாட்சியின் வீட்டில் இன்று தங்கி செல்வதாகக் வந்திருக்க இவர்களிடம்  கூறிக்கொண்டு செல்ல அவர்கள் வீட்டு முற்றத்தின் இருக்கையில் ருத்ரா அமர்ந்திருந்தான்.ஏதோ யோசனையோடு இருந்தவன், இவர்கள் வருவதை கவனிக்கவில்லை.அரசு அவனோடு மீனாட்சியை பேசிவிட்டுவருமாறு கூறி உள்ளே சென்றுவிட அவனருகே அமர்ந்த மீனாட்சி,அவனின் யோசனைக்கு காரணம் கேட்க ஏதேதோ சொல்லி சமாளித்து அவரை அனுப்பி விட்டவனுக்கு,இன்று மாலை வந்த அழைப்பே மீண்டுமாய் நினைவில். 

அலைபேசி மிரட்டல்களுக்கு பயப்படுபவன் அல்ல. எத்தனையோ அழைப்புகள் வந்திருக்கின்றது.இருந்தும் இன்றைய அழைப்பு,இன்று இவன் வீடு வர முன்னமே வீட்டில் நடக்கும் நிகழ்வுகளைப்பற்றி கூறி,தான் யாரென்பதையும் தெளிவாகக் கூறி மீண்டுமாய் கொஞ்சம் விளையாடித் தான் பார்ப்போமே எனக் கூறிகேட்க, இவனுக்கும் அவ்விளையாட்டுக்கள் விளையாட நிரம்ப விருப்பம்தான்,இருந்தும் விளையாட தேர்தெடுத்தது என்னவோ இம்முறை கயலாக இருக்க, யோசனையானான். 

‘விளையாட்டு தோல்வியை தழுவாது என்பது உறுதி தான் இருந்தும் காயலைக் கொண்டு ஹ்ம் ஹ்ம்ம் முடியாத காரியம்,’ தன் உயர் அதிகாரியையும் இன்று சந்திக்க முயன்று முடியாது போனதில் இன்னுமே டென்ஷன் ஆகிவிட்டிருந்தான். 

ஆறு மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவர்களுக்கு போதை விற்பனையை துவக்கி விட்ட அமைச்சரின் மகன் கடந்த வாரம் ஜாமினில் வெளிவந்திருந்தான். ருத்ரா ஈடு படும் எந்த காரியத்தின்  முடிவிலும் இவன் பற்றிய செய்திகள் இருக்காது. இம்முறையும் அப்படியே. இருந்தும் அமைச்சரின் மகனுக்கு ருத்ரா அவன் கூடவே இருந்து அவனை ஏமாற்றி கையும் களவுமாக பிடித்திருக்க ருத்ராவோடு கொலை வெறியில் இருக்கிறான்.அதோடு மாதவன், மது என அனைவரும் அன்றைய நிகழ்வோடு சம்பந்தப்பட்டிருக்க, நிதானமாக காய் நகர்த்த வேண்டிய சூழ்நிலை.நாளை உயர் அதிகாரியை பார்த்து பேசிய பின்னரே எதுவுமே செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் கயலுக்கு அழைப்பு எடுத்தவாரே கட்டிலில் சாய்ந்தமர்ந்தான். 

“ஹலோ  கவி… “

பதிலில்லை.ஆனால் அழைப்பை ஏற்றிருந்தாள்.அப்போதைய  குறுந் தகவலுக்கு பதில் அனுப்பியிருக்கவும் இல்லை ருத்ரா.அதோடு கடந்த இரவுகள் இருவருமாய் பேசிக்கொண்ட சிறைத்தண்டனை பற்றி நினைவு வந்திருக்க பெண் மௌனமானாள்.

கவி,இப்பதான் ரூம்குள்ள வந்தேன் டா.அத்தம்மா,மாம்ஸ் இப்போதான் வீட்டுக்கு  போனாங்க.”

“தங்கல்லையா வீட்ல? ” கயல் கேட்க, 

“இங்க அத்தம்மா வீட்லதான் இருக்காங்க.” 

“ஹ்ம்,சாப்டாச்சா? “

“ஹ்ம் நீ? “

“ஆச்சு,எதுக்கு பேஸ் டல்லா இருந்தது? ” 

“ஒன்னில்லைடா.கொஞ்சம் டையட்  இன்னக்கி அதான்.சரி யார் சொன்னா? 

“அது நீங்க வீட்டுக்குள்ள வர்றப்ப நான் பார்த்துட்டுதான் இருந்தேன்.மது கால் பண்ணிருந்தா.”

“உனக்கு அதுக்கெல்லாம் நம்ம வீட்ல ஆளிருக்கா?”

“மது தான் பேசி காமிச்சா…”

“அப்றம்? “

“அப்றம் என்ன? “

“ஒன்னில்லயா அப்போ வச்சுரட்டுமா? “

“இன்னும் என் மேல கோபமா இருக்கீங்களா?அதான் டல்லா இருந்தீங்களா? “

“கோபம் தான் ஆனா அதுக்காக டல்லா இருக்கல.”

“அதான் நா சாரி சொல்லிட்டேனே? “

“சாரி சொன்னதா எனக்கு நினைவில்லயே,ஏதோ தண்டனை கொடுங்கன்னு சொன்னதா தான் நினைவிருக்கு. கொடுக்கட்டுமா?”

“என்னது? “

“அதான்,நீ கேட்ட நான் தர நினச்ச தண்டனை தரட்டுமா? “

“…”

“கவி எப்போ டிக்கெட் போடட்டும்? இப்போவே உன்னை பார்க்கணும்னு இருக்கு.இன்னும் வெட்டிங்க்கு போர்ட்டி பைவ் டேஸ் இருக்கு. “

“ரிடர்ன் டிக்கெட் இங்க வந்தன்னைக்கே போட்டுட்டேன் இன்னும் அப்படியே டைம் இருக்கே.இப்போவும் வேணும்னா மாத்திரலாம் தான்…”

அவளை உடனே கிளம்பி வர சொல்லத்தான் இருந்தான். ஆனால் இன்றைய அழைப்பின் பின்னர்,அதற்கான முடிவை கண்ட பிறகே கயல் வாந்தால் நல்லது என நினைத்தவன்,

“சரிடா.எனக்கும் கொஞ்சம் வேலை  இருக்கு.நீ இருந்தாலும் உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமோ தெரில.நீ வர முன்ன எல்லாம் செட்ல் பண்ணிருவேன். அப்றம் வந்துட்டன்னா அடுத்த நாளே என்கூட கூட்டி வந்துருவேன்.அதுக்கும் மேல என்னால முடியாது.ரியலி மிஸ்ஸிங் யூ அ லோட் கவி “

“லவ் யூ சோ மச் வரு…”

“கம் அகைன்…”

அவளே இப்போது தான் உணர்ந்தாள் தான் கூறியதை… 

“ப்ளீஸ் கவி ஒன்ஸ்… “

ஏதோ ஓர் வேகத்தில் சொல்லியவள் அவன் கேட்கவும் மீண்டுமாய் சொல்ல நா எழவில்லை.

“முடியாதில்ல ஓகே.பட்,உன்னை எப்போ நேர்ல பார்கிறனோ அன்னைக்கு நீ என்கிட்ட சொல்லுற.இல்லேன்னா அப்றம் நான் என்ன சொன்னாலும் நீ கேக்குற.ஓகே வா? “

“ஹ்ம்ம்… “

“என்ன ஹ்ம்ம்.எப்போவும் புருஷன் பேச்சை தட்டாம கேட்கணும் மா.அதுக்கான முதல் பரீட்சை இது.பார்க்கலாம்  பாசாகிருவியான்னு.”

காதல்காரனின் காதல் பேச்சுக்கள் அவளை பித்தம் கொள்ள வைத்துக் கொண்டிருந்தது. அவளுமே சந்தோஷமாக  அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

இனிதாக நாட்கள் நகர்ந்தன…இருந்தும்  திருமண நாளை எதிர் நோக்கிய இரு காதல்  பறவைகளும் அலைபேசியில் நாட்களை நகர்த்த அதுவோ பொழுதுகளும் நிமிடங்களாக ஊர்ந்துகொண்டிருந்தன.

இனிதாக நாளை நிட்ச்ச்யம் என்றிருக்க, இன்றோ அதிகாலை வந்திறங்கினாள் பாவை அவள்.முதல் முறை அரசுவோடு இங்கு வந்திறங்கிய நாள் பலரும் அவரவர் குடும்பகளை வரவேற்க வந்திருப்பதை  பார்த்து ஏங்கியவள்,இன்றோ தனக்காக ஒரு குடும்பமே வந்திருப்பதை பார்த்து கண்கலங்கி நின்றாள்.  

கயல் வந்திறங்கும் நாள் சரியாக  திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு  முன்னதாக இருக்க முன்னைய நாள் மாலை நிச்சயம் செய்ய நேரம்  குறித்ததோடு அடுத்தநாள் காலை கல்யாண முகூர்த்ததுக்கு குறிர்த்திருந்தனர்… 

இனிதாய் திருமண வேலைகள் ஒருபுறம் நடைப்பெற,எமனோ ருத்ராவை சந்தித்து வர அமைச்சரின் மகனூடாக தன்னை தயார்படுத்தினான்…

 

கதையின் முடிவோடு அடுத்த அத்தியாயம்… 

கனலியின் கானல் அவன் /அவள்  கானலா? கதிரொளியா? பார்க்கலாம். 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!