காதல்போதை 31?

காதல்போதை 31?

அந்த பிரம்மாண்ட ஹோட்டலின் வெளியில் பாதுகாவலர்கள் வருவோரை தரவாக பரிசோதித்து உள்ளே அனுமதிக்க, பாபியும் சஞ்சய்யும் சாதாரணமாக இருந்தார்கள் என்றால், கீர்த்தி தான்  இதெல்லாம் பழக்கமில்லாமல் பக்கத்திலிருந்த பாபியின் கையை தன்னை மீறி பற்றிக் கொண்டாள்.

உள்ளே வரவும் அவளையும் அவள் கையையும் மாறி மாறி பார்த்த பாபி, அவளை முறைத்தவாறு, “மிஸ்.கீர்த்தி, என்ன இது?” என்று கேட்க, சட்டென கையை எடுத்தவள், “ஐ… ஐ அம் சோரி சார், கொஞ்சம் நெர்வஸ் ஆ இருக்கு அதான்” என்று தயக்கமாக கூறினாள்.

    “ஆஃபீஸ்ல என்னை சார்னு கூப்பிட்டா போதும், வெளில என்னை பெயர் சொல்லி கூப்பிடு இல்லைன்னா, அண்ணான்னு கூப்பிடு” என்று பாபி சொல்லிவிட்டு,  கீர்த்தியின் முகத்தை கூர்ந்து கவனிக்க, ‘அய்யோ! என்ன கொடுமை! என் தருவ அண்ணான்னு கூப்பிடனுமா, ஏன் ஆண்டவா எனக்கு இந்த சோதனை!’ என்று உள்ளுக்குள்ளே புலம்பியவள், “ஓகே தருண்” என்று சொல்லி, தலையை குனிந்துக்கொள்ள, பாபியோ அவளையே பார்த்திருந்தான்.

இளமஞ்சள் நிற டிஸைனர் சேலையில், சாதாரண ஒப்பனையில், கொழுக்கு மொழுக்கென லட்டு போல கீர்த்தி இருக்க, தன்னை மீறி அவளை ரசிக்கும் மனதை கட்டுப்படுத்த அரும்பாடுபட்டான் பாபி என்று தான் சொல்ல வேண்டும்.

இங்கு சஞ்சய்யோ தன்னவளை கண்களால் தேட, அலைஸ்ஸோ ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதில் பரபரப்பாக இருந்ததில், சஞ்சய்யை கண்டும் காணாதது போல் இருந்தாள்.

இவர்கள் மூவரும் ஒவ்வொரு சிந்தனையில் நின்றிருக்க, சரியாக, “மிஸ்டர்.ரோஹன் வரலையா?” என்ற குரலில் மூவருமே குரல் வந்த திசையை நோக்கினார். அவர்களின் எதிரே சிவப்பு நிற பார்ட்டி ஃப்ரொக்கில், கண்கள் அங்குமிங்கும் எதையோ தேடியவாறு தேவதை போல் நின்றிருந்தாள் மாயா.

     “இல்லை மாயா, அவனுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு, அதான்… என்ட் ஹேப்பி பர்த்டே” என்று பாபி சொல்ல, கீர்த்தியோ அவளை அணைத்து கன்னத்தில் முத்தமே கொடுத்து விட்டாள்.
சஞ்சய்யும் வாழ்த்த, எல்லாவற்றையும் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டவளுக்கு மனது ஏனோ அவள் கட்டுப்பாட்டிலே இல்லை.

பாபி சொன்னதை கேட்டவளுக்கு முகம் தானாகவே வாட, தன்னை மீறி ரோஹனை தேடும் அவள் உணர்வுகளை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 

    “ஹெலோ மிஸ்டர்ஸ் வர்க் எப்படி போயிக்கிட்டு இருக்கு?” என்று கேட்டுக் கொண்டே வந்த சர்வேந்திரனை, பார்த்த சஞ்சய்க்கும் பாபிக்கும் அவரைப் பார்க்கவே கோபம் எகிறத் தான் செய்தது.

வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,
     “சீக்கிரம் வேலை முடிஞ்சிறும் சார்” என்று பாபி சொல்ல,  அவர்கள் இருவரையும் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்த சர்வேந்திரன், மாயாவிடம்,
   “மாயூ டைம் ஆச்சு, ஆல் ஆர் வெயிட்டிங்” என்றவாறு அவளை அழைத்துச் செல்ல, சிந்தனை வேறெங்கோ மிதக்க, ஏதேதோ யோசித்தவாறு சென்றாள் மாயா.

அடுத்த சில நிமிடங்களிலே விழா ஆரம்பமாக அலைஸ்ஸோ கோபத்தில் சிவந்த முகமாக கண்களில் கொலைவெறியுடன் சர்வேந்திரனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மைக்கை எடுத்த சர்வேந்திரன் மாயாவை சிரிப்புடன் பார்த்தவாறு,
     “ஹெலோ எவ்ரிவன், முதல்ல என்னோட ஏன்ஜல்க்கு நான் விஷ் பண்ணிக்கிறேன். ஹேப்பி பர்த்டே டூ மை ஏன்ஜல். எனக்கும் மஹேஷ்வரிக்குமான உறவோட சின்னம் தான் மாயூ, என்னோட ஸ்வீட்ஹார்ட்காக அவ ஆசைப்பட்ட ஒன்னு…” என்று சர்வேந்திரன் ஒரு திசையை காட்ட, அங்கு வந்துக் கொண்டிருந்த லியோவை பார்த்த மாயா, கேள்வியாக சர்வேந்திரனை  நோக்கினாள்.

லியோவோ, மாயாவை நெருங்கி அவளை அணைத்து, “பேபி ஐ மிஸ் யூ, என்ட் ஹேப்பி பர்த்டே” என்று சொல்ல, அவனிடமிருந்து தன்னை பிரித்தெடுத்தவள், ” தேங்க்ஸ் லியோ” என்றவாறு விலகி நின்று, புன்னகைத்தாள்.

     “என்னோட மாயூக்காக என்னோட கிஃப்ட், இப்போவே உனக்கும் லியோக்கும் என்க்கேஜ்மென்ட் நடக்க போகுது, ஆர் யூ ஹேப்பி ஸ்வீட்ஹார்ட்?” என்று சர்வேந்திரன் கேட்க, முதலில் திடீரென இவ்வாறு சொன்னதும் அதிர்ந்தவள், பின் தன்னை நிதானப்படுத்தி, “டாட் என்ன திடீர்னு!” என்று தடுமாறியபடி கேட்டாள்.

   “இது ஆல்ரெடி நானும் அங்கிளும் ப்ளான் பண்ணது தான், உனக்காக அஞ்சு வருஷம் வெயிட் பண்ணிட்டேன். இதுக்கப்றமும் என்னால முடியாது, சோ…” என்று லியோ அங்கிருந்த ஆட்களிடம் கண்களால் ஏதோ உணர்த்த, அடுத்தநொடி அவர்கள் முன் இரு வைர மோதிரங்கள் நீட்டப்பட்டது.

உள்ளுக்குள் ஏதோ ஒன்று உறுத்த, மாயாவுக்கோ அது என்ன உணர்வென்றே தெரியவில்லை. மாயாவோ தன் மனநிலையை தானே புரிந்துக் கொள்ள முடியாது, குழம்பி போய் நின்றிருக்க, பாபி, சஞ்சய், கீர்த்தி தான் ஆடிப் போய்விட்டனர்.

   “வட் த ஹெல் இஸ் கொய்ங் ஆன் தெயார்! என்னால இதுக்கு மேல முடியல,  நான் மாயாக்கிட்ட நடந்தது எல்லாத்தையும் சொல்ல போறேன்” என்று பாபி போக எத்தனிக்க, “இல்லை பாபி, இது அதுக்கான சந்தர்ப்பம் இல்லை, பொறுமையா இரு, என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று அவனை கட்டுப்படுத்த முயன்றான் சஞ்சய்.

     “என்னது பொறுமையாவா! விட்டா அவளுக்கு கல்யாணமே பண்ணிறுவாங்கடா, மாயாவுக்கு அவள சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல, நமக்கு எல்லாமே தெரியும் சஞ்சு, அப்போ எப்படி அமைதியா இருக்க?அதுவும் என் கண்ணு முன்னாடியே என் பேபிக்கு இப்படி நடக்குறதை, என்னால பார்த்துகிட்டு இருக்க முடியாது” என்று கோபத்தில் கத்தினான் பாபி.

அவன் கைகளை பிடித்துக் கொண்ட கீர்த்தி, “ப்ளீஸ் எங்களுக்கும் இது கஷ்டமா தான் இருக்கு. ஆனா இப்போ கோபப்பட்டு நாம உண்மைய சொல்லி, ஒரு பார்வை அவ எங்கள சந்தேகமா பார்த்தாலும் அத்தனையும் வேஸ்ட் ஆகிறும். மாயாவுக்கு சீக்கிரம் எல்லாமே நியாபகம் வந்துரும் தரு, ப்ளீஸ் அமைதியா இருங்க”  என்று சொல்லிலிட்டே நாக்கை கடித்துக் கொண்டு, பாபியின் முகத்தை கூர்ந்து பார்க்க, அவனோ அடக்கப்பட்ட கோபத்துடன் அமைதியாக நின்றிருந்ததே, அவளுக்கு ‘ஹப்பாடா’ என்றிருந்தது.

இங்கு லியோ மோதிரத்தை மாயாவின் மோதிர விரலில் அணிவித்து முடிய, தன் கையில் மோதிரத்தை எடுத்தவள் மனமோ என்றுமில்லாத படபடப்பை தான் உணர்ந்தது. மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய, அவள் கண்களோ அந்த இடத்தை சுற்றி எதையோ தேட, தான் என்ன உணர்கிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை.

“மாயா, ஆர் யூ ஆல்ரைட்?” என்ற லியோவின் குரலில், “யாஹ், ஐ அம் ஓகே” என்றவள் லியொவின் விரலில் மோதிரத்தை அணிவிக்க போக, மனதின் ஏதோ உந்துதலில் மீண்டும் கண்களை சுழலவிட்டு எதையோ அவள் தேட ஆரம்பித்தாள். அடுத்த சில நொடிகளிலே சட்டென அவள் பார்வை ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.

இங்கு மாயாவின் முகபாவனைகளை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாபிக்கு, அவள் கண்களின் தேடல் எதையோ உணர்த்த, அவள் பார்வை செல்லும் திசையை பார்த்தான். அங்கு பார்த்த அவன் விழிகளும் ஆச்சரியத்தில் விரிந்துக் கொண்டது. லியோவின் தட்டலில் அவன்புறம் திரும்பிய மாயா, அவசரமாக லியோவிற்கு மோதிரத்தை அணிவித்துவிட்டு, மீண்டும் அதே இடத்தை பார்க்க, அவள் புருவங்களோ யோசனையில் முடிச்சிட்டது.

முதலில் தான் கண்டதில் அதிர்ந்த பாபி, அதே அதிர்ச்சியுடன் மாயாவை பார்த்ததுவிட்டு மீண்டும் அதே இடத்தை பார்க்க, அங்கு வெறுமையாக இருந்ததில் குழம்பியவன், அடுத்தநொடி சஞ்சய்யையும் கீர்த்தியையும் இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறி இருந்தான்.

கீர்த்தியை அவள் வீட்டில் இறக்கி விட்டு, சஞ்சய்யுடன் ரோஹனின் ஃப்ளாட்டை அடைந்தவன், பாதி மூடிய நிலையிலிருந்த கதவை தள்ளிக்கொண்டு விறுவிறுவென ரோஹனின் அறைக்குள் நுழைய, சஞ்சய்க்கோ ஒன்றுமே புரியவில்லை. 

“டேய்! என்னாச்சுடா?” என்று பாபியின் பின்னாலே சென்ற சஞ்சய், அறையிலிருந்த ரோஹனின் தோற்றத்தை பார்த்து பதறியே விட்டான்.

அறையிலிருந்த சோஃபாவில் நெற்றி நரம்புகள் புடைத்து, கோபத்தில் முகம் சிவக்க, ஷர்ட்டின் முதல் மூன்று பட்டன்கள் திறந்து விடப்பட்டு, அதற்கு மேல் அவன் அணிந்திருந்த கோர்ட் அந்த அறை மூலையில் கிடக்க, கையில் மது போத்தலுடன் பற்களை கோபத்தில் கடித்தவண்ணம் ரோஹன் இருந்த தோற்றமே சஞ்சய்யை பயம் கொள்ள செய்ய,  பாபியோ அவனுக்கு ஈடான கோபத்துடன் ரோஹனுக்கெதிரே நின்றுக் கொண்டிருந்தான்.

“எதுக்கு திரும்பி வந்த ரோக்கி?! அவ ரிங் போடுறதையும் பொறுமையா இருந்து பார்த்து சாப்பிட்டுட்டு வந்திருக்கலாமே! எதுக்கு அங்க இருந்து ஓடி வந்த? ஓஹோ ஒருவேள சாருக்கு பொறுக்கல்லையோ!” என்று பாபி கத்த, சஞ்சய்யோ புரியாமல், “பாபி என்ன நடக்குது இங்க?! இவன் பார்ட்டிக்கு வந்தானா?” என்று கேட்டான்.

   “அதுவா மச்சி என்கிட்ட வரலைன்னு சொல்லிட்டு, சார் ரெடி ஆகி யாருக்கும் தெரியாம வந்திருக்காரு. மாயா அந்த வெள்ளை பன்னிக்கு ரிங் போடுறதை பார்க்க முடியாம ஓடி வந்துட்டான்” என்று கேலியாக சொன்ன பாபி ரோஹனின் புறம் திரும்பி, “இப்போ என்னடா உன் பிரச்சினை? ஒழுங்கா வாய திறந்து சொல்லி தொலையேடா!” என்று ஆவேசமாக கத்தவும்,

தன் கையிலிருந்த போத்தலை தரையில் உடைத்த ரோஹன், “ஐ லவ் மாயா, அதான்டா என் பிரச்சினையே…” என்று கத்திவிட்டு, அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்து, “அம்மு…! அம்மு…!” என்று கதறி அழ, பாபிக்கும் சஞ்சய்க்கும் அதிர்ச்சி தான்.

இருவரும் ரோஹனை அதிர்ந்து நோக்க, அவர்களின் அதிர்ச்சியை கூட கண்டுக்காது, “அம்மு ஏன்டி இப்படி பண்ண? யூ ச்சீடட் மீ, என்னால முடியலடி நீ இல்லாம, என்னை ஏமாத்திட்டியேடி” என்று ரோஹன் அவன் பாட்டுக்கு புலம்பி தள்ளினான்.

“என்னடா சொல்ற? நிஜமாவே நீ…” என்று அதிர்ச்சியாக சஞ்சய் இழுக்க, கண்களில் ஒருபக்கம் வலி, மறுபுறம் காதல் என உணர்வுகளுடன் நிமிர்ந்து பார்த்த ரோஹன், “அவ எனக்கு வேணும்டா, ஐ லவ் ஹெர் மேட்லி, என் அம்மு எனக்கு வேணும்” என்று அழ, பாபியோ அடுத்தநொடி அவனை சமாதானப்படுத்த தாவி அணைத்திருந்தான்.

அவனிடமிருந்து விலகிய ரோஹன், “என்னை ஏமாத்திட்டா டா என் அம்மு. என்ன நடந்தாலும், நானே அவள விட்டு விலகி போனாலும் என்னை விட்டு போக மாட்டேன்னு சொன்னா, ஆனா என்னை விட்டு தூரமா போய் என்னை தவிக்கவிட்டு, இப்போ அவ ரூஹியவே மறந்து, என்னை அழ வச்சி பார்க்குறாடா.  மாயா…” என்று கத்தி அழுத ரோஹன் கோபத்தில் சுவற்றில் ஓங்கி குத்தினான்.
      
      “ரோக்கி ஆர் யூ ஓகே? ஏதேதோ உளறிக்கிட்டு இருக்க, முதல்ல நீ போய் ரெஸ்ட் எடு, அப்றம் பேசிக்கலாம்” என்று சொன்ன பாபிக்கு, நிஜமாகவே ரோஹனின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

‘ஹாஹாஹா’ என்று பைத்தியம் போல் சிரித்த ரோஹன், “என்னடா! பைத்தியக்காரன் புலம்புறது மாதிரி தெரியுதா? ஆமாடா, அவ என்னை பைத்தியமாக்கிட்டா, கேட்டியே என் கனவு சிதைய யார் காரணம்னு, அவ தான்டா காரணம், உன் பேபி அந்த மாயா தான். அவளால என் லைஃபே போச்சுடா…” என்ற ரோஹனின் வார்த்தைகளில் அத்தனை வலி.

     “ரோக்கி ரிலாக்ஸ், நீ சொல்றதை நிஜமாவே எங்களால நம்ப முடியல. நீ மாயா காதலிக்கிறன்னா, அப்போ ஏன் இத்தனை நாளா அதை உனக்குள்ள வச்சிருந்த? அவ உன் பின்னாடி வரும் போது நீ உணராத காதல அவ உன்னை விட்டு போனதும் ஃபீல் பண்றியோ!” என்று குத்தலாக கேட்டான் சஞ்சய்.

விரக்தியாக புன்னகைத்த ரோஹன் அங்கிருந்த இன்னொரு மது போத்தலை எடுத்து முழுவதையும் குடித்துவிட்டு, “யூ க்னோ வட் சஞ்சய்! மாயா என்னை காதலிக்க முன்னாடி இருந்தே, நான் என் அம்முவ காதலிக்கிறேன்டா. ஆனா என்ன, உணரத்தான் இல்லை, உணர்றப்போ அவ என் பக்கத்துல இல்லை” என்று கண்கலங்க சொன்னதும், சஞ்சய்யும் பாபியும், “வாட்!?” என்று அதிர்ந்தே விட்டனர்.

அப்படியே மண்டியிட்டு தரையில் அமர்ந்த ரோஹன் தன்னவளை நினைத்து புன்னகைத்தவாறு, “என் அம்முவ நான் எப்போ முதன் முதலா பார்த்தேன்னு தெரியுமாடா? ஆறு வருஷத்துக்கு முன்னாடி ஏயார்போர்ட்ல, முகத்துல கொஞ்சம் கூட சிரிப்பே இல்லாம இருந்தாலும், தேவதை மாதிரி எனக்கு தெரிஞ்சாடா. என் ஃப்ரென்ட் அ சென்ட் ஆஃப்(Send off) பண்ண தான் போனேன். பட், எதேர்ச்சையா அவ பக்கம் திரும்பினப்போ அவளையே பார்த்திருந்தேன்டா. ஆனா, அது ஜஸ்ட் பாஸிங் க்ளவுட்ஸ்னு(Passing clouds) அப்படியே விட்டுட்டேன்.

அடுத்த இரண்டாவது நாளே கொலேஜ்ல பார்த்தேன். ஆடிட்டோரியம்ல நான் டான்ஸ் பண்ணும் போது மொத்த பேரும் என்னை ரசிக்க, அவ மட்டும் என்னை கண்டுக்காம விளையாடிக்கிட்டு இருந்தா. மேடையிலிருந்து அவள பார்த்ததும் ஏதோ புரியாத ஃபீலிங், அத்தனை பேர் என்னை பார்த்தாலும் அவ பார்வை என் மேல படாதான்னு ஒரு சின்ன ஏக்கம், ஆனா, அடுத்தநொடியே என் மொத்த ஏக்கத்தையும் தீர்க்குற மாதிரி அவ என்னை மட்டுமே பார்த்துகிட்டு இருந்தாடா.

அப்றம் கொலேஜ்ல மாயாவ அடிக்கடி பார்ப்பேன். அவளும் என்னை தேடி வந்து பார்ப்பா. அப்போ எல்லாம் உடம்பெல்லாம் ஒரு மாதிரி ஜிவ்வுன்னு இருக்கும் டா. பட், நான் அதை கூட பொண்ணுங்கள பார்த்தா வர்ற சாதாரண ஈர்ப்புன்னு நினைச்சிகிட்டேன். அப்போ தான் நீ அவள காதலிக்கிற மாதிரி என்னை பொய் சொல்ல சொன்ன” என்று ரோஹன் பாபியை ஒரு விரலால் சுட்டிக்காட்டினான்.

இடுங்கிய கண்களுடன் ரோஹனை நோக்கிய பாபி, “ஒருவேள அதே இடத்துல வேற பொண்ணு இருந்திருந்தா…” என்று சந்தேகமாக இழுக்க, வாய்விட்டு சிரித்த ரோஹன், “ஐ அம் டேம்ன் ஷுவர், சத்தியமா பண்ணிருக்க மாட்டேன்.” என்று சொல்லவும், பாபியும் சஞ்சய்யும் அதிர்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

     “நான் பண்றது தப்புன்னு தெரிஞ்சும், ச்சேலன்ஜ்காக பண்றேன்னு, என்னை நானே ஏமாத்தி அவளுக்கு ப்ரொபோஸ் பண்ணேன். ஆனா அதுக்கப்றம் அவ கூட பழகும் போது, ஓ கோட்! ஷீ இஸ் க்ரேஸி. அவ குழந்தைதனமா இருக்குறது மட்டுமில்லாம என்னையும் அவக்கூட கூட்டு சேர்த்துகிட்டு பைத்தியமாக்கிட்டா. என்னை மீறி அவ பார்க்காத போது அவள ரசிப்பேன்.

ஆனாலும் அவள ஏமாத்துறனோன்னு, மனசுக்குள்ள ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்தது. அதேநேரம் அப்பா கொடுத்த வாக்கு, எங்க நான் அவள காதலிச்சிறுவனோன்னு எனக்குள்ள இருக்க ஈகோ எல்லாமே சேர்ந்து அவள காதலிக்க விடல. அன்னைக்கு அவள கொல்ல வந்தப்போ, என் கண்ணு முன்னாடி அவ மயங்கினதும் செத்தே போயிட்டேன்டா. அவளுக்கு பொய்யான நம்பிக்கைய கொடுக்க முடியல. அதான் உண்மைய சொன்னேன். ஆனா அவ…” என்று சொல்லி சிரித்தவன்,  தன் கழுத்தில் மறைத்து வைத்திருந்த மாயா அணிவித்த ச்செயினை வெளியே எடுத்து வருடினான்.

       “ஷீ இஸ் அன்ப்ரடிக்டபிள்(unpredictable). என்ன வேலை எல்லாம் பார்த்திருக்கா! என் அம்மு தான் என் சாக்லெட் கேர்ள்னு தெரிஞ்சதும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன். ஆனா என்னால அப்போ கொடுத்த வாக்கை மீற முடியல. என்னால அப்பா அவமானப்படுவாறேன்னு ஒரு தயக்கம் அவ மேல இருந்த காதலை உணர விடல.

அதுவும் என் காதல் வேணாம், அவ கொடுக்குற காதலை நான் ஏத்துகிட்டாலே போதும்னு சொல்லுவா. அவளோட மொத்த காதலையும் எனக்கே எனக்கு மட்டும் கொடுத்தாடா. என் பின்னாடியே நாய்குட்டி மாதிரி திரிஞ்சிகிட்டு, நான் என்ன திட்டினாலும் கோபமே படாம சிரிச்சிகிட்டே இருப்பா. அவ சிரிக்கும் போது அவ்வளவு அழகு” என்று ரோஹன் பேச பேச, அவனுடைய நண்பர்கள் விழிவிரித்து பார்த்தனர்.

மேலும் தொடர்ந்த ரோஹன், “ஆனா, என் அம்முவ நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்டா. என்ன வார்தையெல்லாம் பேசியிருப்பேன்! அன்னைக்கு ராத்திரி வீட்ல நடந்த பிரச்சினையில என் கோபத்தை மாயாக்கிட்ட காண்பிச்சிட்டேன், அவள அறைஞ்சிட்டேன்டா. ஆனா அன்னைக்கு தான் அவள கடைசியா பார்ப்பேன்னு, சத்தியமா நினைச்சி கூட பார்க்கல” என்ற   ரோஹன் மானசீகமாக தன்னவளிடம், “சோரி அம்மு” என்று மன்னிப்பை யாசித்தவாறு விம்மி விம்மி அழ, பாபிக்கும் சஞ்சய்க்குக் அவனை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை.

“அன்னைக்கு முழுக்க அவக் கூட தான் இருந்தேன். ஈவினிங் அவள ஹோஸ்டல்ல விட்டுட்டு நைட் வீட்டுக்கு போன அப்போ…” என்று ஆரம்பித்த ரோஹனின் நினைவுகள் அன்றைய நாளுக்கு சென்றது.

வீட்டுக்குள் நுழைந்த ரோஹனின் நினைவுகளை மாயாவுடன் இருந்த தருணங்களே ஆக்கிரமித்திருக்க, அதே இதமான மனநிலையுடன் தன் அறைக்கு செல்ல போனவனை, அவனின் தந்தையின் குரல் தடுத்து நிறுத்தியது.

“ரோஹன்” என்ற மானவ்வின் அதட்டலான குரலில் நின்றவன் திரும்பி அவரை கேள்வியாக நோக்கினான்.

     “என்ன நினைச்சிகிட்டு இருக்க உன் மனசுல? உனக்காக ஒருத்தி காத்துகிட்டு இருக்கா, ஆனா நீ யாரோ ஒரு பொண்ணு கூட ஊர் சுத்திட்டு வர்ற, லுக் எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு பொறுமையா இருக்க மாட்டேன்.” என்று மானவ் காட்டமாக கூற,  “டாட் அவ என்னோட ஃப்ரென்ட் தட்ஸ் இட், என்ட் இது எப்படி உங்களுக்கு தெரியும்? யூ ஃபோலோவ்ட் மீ!?” என்று கோபமாக கேட்டான் ரோஹன்.

     “நான் எதுக்குடா உன் பின்னாடி அலைய போறேன்! நீ அந்த பொண்ண கூட்டிகிட்டு போன இடத்துக்கு சைந்தவியும் வந்திருக்கா, உன்னை அந்த பொண்ணு கூட பார்த்து, அவங்க வீட்ல புலம்பி, அவ அப்பன் எனக்கு கோல் பண்ணி பஞ்சாயத்து பண்ணுறாரு. நீ எப்போவும் இப்படி நடந்துக்க மாட்ட கண்ணா, ஆனா இப்போ…” என்று ஆதங்கமாக நிறுத்தினார் மானவ்.

உச்சகட்ட கோபத்திற்கே சென்ற ரோஹன், “ஷட் அப் டாட்! இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன்,  இந்த கல்யாணம் மண்ணாங்கட்டின்னு எதுவும் வேணாம்னு” என்று கத்த, “ரோஹன் நீ என்ன சொன்னாலும் இந்த கல்யாணம் நடந்தே ஆகனும். முன்னாடியே சொன்னது தான், என் பையனோட நல்லது எனக்கு ரொம்ப முக்கியம், அதேமாதிரி என் கௌரவமும் கூட… புரியும்னு நினைக்கிறேன்” என்று அழுத்தமாக சொன்னார் மானவ்.

“ஷீட்” என்று காலை தரையில் உதைத்தவன் தன் மொத்த பொருட்களையும் கோபத்தில் தூக்கி போட்டு உடைத்தான். அவனுக்கோ தன் மனம் பலவீனமானது போல் தோன்ற, அந்த இயலாமை கூட கோபமாக மாயாவின் புறமே திரும்பியிருந்தது.

அன்று நடந்ததை சொன்ன ரோஹன், “நான் கொடுத்த வாக்கு என்னை மாயாவ நெருங்க விடல. நான் என்ன நினைக்கிறேன்னு என்னாலயே புரிஞ்சிக்க முடியல, மாயா பக்கம் என் மனசு போறதை என்னால ஏத்துக்க முடியல. ஒருவேள மாயா நடுவுல இல்லைன்னா நான் தெளிவா இருந்திருப்பனோன்னு, அவ மேலயே மொத்த பழியையும் போட்டு ரொம்ப திட்டி விட்டுட்டேன்.

அப்போ அவ கண்ணுல தெரிஞ்ச வலிய என்னால மறக்கவே முடியாதுடா. என் அம்முவ காயப்படுத்தி அவ அழுகுறதை விட நான் அதிகமா அழுதிருப்பேன்” என்று சொல்லி ரோஹன் அழ, சஞ்சய்க்கோ அவனை பார்க்கவே பாவமாக இருந்தது.

     “அவ ஏன்டா என்னைவிட்டு போனா? அன்னைக்கு நீங்க சொன்னதும் அந்த நொடி உணர்ந்தேன், அவ இல்லாம நான் இல்லைன்னு. ஆனா, அவ என்னை விட்டு துரமா போயிட்டா, அவளுக்காக ஏங்குற என் மனசை உங்க எல்லார் முன்னாடியும் வெளிப்படுத்தாம இருக்க, எவ்வளவு சிரமப்பட்டேன் தெரியுமா! நடைப்பொணம் மாதிரி திரிஞ்சேன்டா.

ஆனா, நான் என் அம்முவ தேடி போகலடா, ரொம்ப கோபம் அவ மேல, சிவவேன்னு இருந்தவனை அவ மேல பைத்தியமாக்கி அம்போன்னு விட்டுட்டு போயிட்டாளேன்னு கோபம், கூடவே அவளா என்னை தேடி வருவான்னு நம்பிக்கை. அப்போ தான் வீட்ல மறுபடியும் பிரச்சினை ஆரம்பமாச்சு. முதல் தடவை கொடுத்த வாக்கை மீறினேன், வீட்டை விட்டு வந்துட்டேன்” என்று நிறுத்தினான் ரோஹன்.

     “அன்னைக்கு என்னாச்சு? நீ ஏன்டா வீட்டை விட்டு வந்த? ஒருவேள அதுவும் மாயாவுக்காக தானா…” என்று பாபி சந்தேகமாக கேட்க, ‘ஆம்’ என்று தலையசைத்தவனை பார்த்த இரு நட்புகளும், ‘பார்ராஹ்!’ என்று உள்ளுக்குள்ளேயே வியந்து கொண்டனர்.

    “அவ போனதுக்கு அப்றம் எல்லாமே சூனியமாகிட்டு, என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியல. அடுத்த ஒரு மாசத்துல காம்படீஷன் வேற, அதை பத்தி கூட யோசிக்காம அவள பத்தி மட்டுமே நினைக்கிற மாதிரி என்னை மாத்திட்டா. அன்னைக்கு வீட்ல டாட் திடீர்னு வந்து, இன்னும் ஒரு வாரத்துல நிச்சயதார்த்தம்னு சொல்லவும், சத்தியமா மாயா இருக்குற இடத்துல வேற ஒரு பொண்ண நினைச்சி கூட பார்க்க முடியல.

கோபத்துல இந்த கல்யாணம் நடக்காது, எல்லாத்தையும் நிறுத்துங்கன்னு சொன்னேன். அவளுக்காக அப்பா அவமானப்படுவாறுன்னு கூட யோசிக்காம பேசினேன். பிரச்சினை பெருசாச்சு, எனக்கு ரொம்ப குற்றவுணர்ச்சி ஆகிறுச்சி, என் அப்பா யாரோ ஒரு மூணாவது மனுஷன்கிட்ட அவமானப்பட்டாறேன்னு. அதான் எனக்கு நானே தண்டனை கொடுத்து எல்லாரையும் விட்டு ஒதுங்கி இருந்தேன்” என்று ரோஹன் சொல்லி முடிக்க, அவன் கையை ஆதரவாக பற்றியிருந்தனர் அவன் நண்பர்கள்.

     “அவள மறக்க முடியலடா, என்னை ரொம்ம இம்சை பண்ணா. மாயா அந்த பெயரை தவிர அவள பத்தி எதுவுமே தெரியல, அவளோட நினைவுகளும், எனக்காக அவ கொடுத்த இந்த ச்செயினும் தான் அப்போ எனக்கு இருந்த ஒரே ஆறுதல். எனக்குள்ள ஒரு போதை மாதிரி இருந்தாடா. அந்த போதைய மறக்க, இந்த போதைகள நாட வேண்டியதா போச்சு, அன்னைக்கு லண்டன் போற நாள் மாயாவ ரொம்ப தேட ஆரம்பிச்சேன். அந்த வலிய மறக்க ட்ரக்ஸ் எடுத்துகிட்டேன். எனக்கு வேற வழி தெரியலடா”  என்று நிதானமாக சொன்னான் ரோஹன்.

பின் திடீரென தன் நண்பர்களின் கையை உதறிவிட்டு ஆவேசமாக, “இப்போ சொல்லு, அவளால தானே என் லைஃப் போச்சு, அவ என் கூட இருந்திருந்தா, இந்த நிலைமை வந்திருக்காதுல்ல. அவ எப்படி டா என்னை விட்டு போகலாம்! நான் அவ ரூஹிடா, அவளால என்னை மறக்க முடியாது. அவக்குள்ள நான் இருக்கேன், அப்போ எப்படிடா அவளால என்னை மறக்க முடியும்?! நானே எதிர்ப்பார்க்காத ஒருத்தியா என் அம்மு என் முன்னாடி வந்து நின்னப்போ, என்னை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லைன்னு நினைச்சேன். ஆனா அவ… ஹவ் டேர் இஸ் ஷீ! என்னை எப்படி அவ மறக்கலாம்!” என்று கத்திவிட்டு அழ ஆரம்பித்தான் ரோஹன்.

சிறுகுழந்தை போல் அழுபவனை பார்த்தவர்களுக்கு, ‘ரோஹன் மாயாவின் மேல் இத்தனை காதல் கொண்டானா!’ என்று தான் இருந்தது.

காதல்போதை?
——————————————-—————————

இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் நட்பூஸ்..✌

-ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!