காதல்போதை 35?
காதல்போதை 35?
அடுத்தநாள்,
சைட்டில் ரோஹன் அங்கிருக்கும் வேலையாட்களிடம் பேசிக் கொண்டிருக்க, புழுதி பறக்க வந்து நின்ற இரண்டு கார்களை கவனித்தவன் இதழ்களோ தானாகவே விரிந்து கொண்டன.
காரிலிருந்து இறங்கிய மாயா, கண்ணில் கூலர்ஸ்ஸை அணிந்தவாறு புன்னகையுடன் அவனை நோக்கி வர, அவளை பார்த்தவன் அங்கிருந்த தலைமை பொறியியலாளரிடம் வேலைகளை சொல்லிவிட்டு அவளை நோக்கி வந்தான்.
அவனெதிரே வந்து நின்றவள், “ஹாய் ரோஹன், நான் எப்படி இருக்கேன்?” என்று தன் முட்டியே வரையான ஃப்ரொக்கை காட்டி சிறுபிள்ளை போல் கேட்க, அவளை மேலிருந்து கீழ் பார்த்த ரோஹன், “நொட் குட்” என்றுவிட்டு முன்னே செல்ல, மாயாவின் முகமே வாடிவிட்டது.
ஏனோ ரோஹனுக்கு கல்லூரியில் சாதாரண சுடியில், குழந்தை முகத்துடன், தன் பின்னால் திரிந்த அந்த மாயாவுக்காகவே மனம் ஏங்கியது.
அவனோ மாயாவின் காரின் பின்சீட்டில் அவன் பாட்டிற்கு ஏறி அமர்ந்து, போக வேண்டிய இடத்தை ஓட்டுனரிடம் சொல்ல, அவரோ ரோஹனின் பக்கத்தில் குடுகுடுவென ஓடி வந்து அமர்ந்த மாயாவை கேள்வியாக நோக்கினார்.
அவளும் தலையசைக்க, அடுத்தநொடி வண்டி ரோஹன் சொன்ன இடத்தை நோக்கி பறந்தது.
போகும் வழியில், ரோஹனை யோசனையாக பார்த்த மாயா, “ஏன் நல்லாயில்லை? என்னை உங்களுக்கு பிடிக்கலையா?” என்று ஒருவித ஏக்கத்தில் தன்னை மறந்து கேட்டு விட,
உள்ளுக்குள் சிரித்தவன், “உன்னை பிடிக்கும், ஆனா…” என்றவாறு கண்களால் அவளின் ஆடையை காட்டி, “பிடிக்கல” என்றுவிட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
தன்னை குனிந்து பார்த்தவள், மார்பிலிருந்து முட்டி வரையான தன் ஆடையை பார்த்துவிட்டு யோசனையாக, “அப்போ, உங்களுக்கு நான் எப்படி ட்ரெஸ் பண்ணா பிடிக்கும்?” என்று ஆர்வமாக கேட்டவளுக்கே, ‘தான் ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறோம்’ என்று சுத்தமாக தெரியவில்லை…
ரோஹனோ பக்கவாட்டாக திரும்பி அவளை குறும்பாக பார்த்து, “மிஸ்.மாயா மஹேஷ்வரி, எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கனும்னு எதுக்கு ஆசைப்படுறீங்க?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க,
அவளும் அவனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவாறு, “என்னை இதுவரைக்கும் யாரும் திட்டினது கிடையாது, அடிச்சது கிடையாது. பட், ஒருத்தன் என்னை திட்டி அடிச்சது மட்டுமில்லாம, உரிமையா கிஸ் கூட பண்ணிட்டான். அவன என்ன பண்ணலாம் மிஸ்டர்.ரோஹன்?” என்று அவனை போலவே ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க, வாய்விட்டு சிரித்தான் ரோஹன்.
அவன் சிரிப்பில் எப்போதும் போல் தன்னை தொலைத்த மாயா அவனையே ரசனையாக பார்க்க, ரோஹனுக்கோ மாயாவின் கண்களில் தன்னை நோக்கி தெரிந்த ரசனை பார்வையை பார்க்கும் போது, ஐந்து வருடங்களுக்கு முன் மாயாவின் கண்களில் தான் காணும் அதே காதல் கலந்த ரசனை பார்வையையே நினைவூட்டியது.
அவன் அவளையே இமைக்காது பார்த்திருக்க, சரியாக அவர்களின் கார் ரோஹன் சொன்ன கல்லூரியின் வாசலில் நிற்க, இறங்கியவனின் மனதை பழைய நினைவுகள் சுழற்றி அடித்தது.
மாயாவும் அந்த கல்லூரியையே பார்த்தவாறு இறங்க, “இது தான் நான் படிச்ச கொலேஜ்” என்றவாறு ரோஹன் உள்ளே செல்லவும், ‘ஓ…’ என்று சுற்றி முற்றி பார்த்தவாறு அவன் பின்னால் சென்றாள் மாயா.
கல்லூரியே யாரும் இல்லாமல் வெறிச்சோடி போயிருக்க, “இன்னைக்கு ஹொலிடேய் அதான், யாரும் இல்லை. எனக்கும் உன்னை இங்க கூட்டிட்டு வரனும்னு தோணிச்சு, பிடிச்சிருக்கா?” என்று ரோஹன் கேட்க,
“ம்ம்” என்று மட்டும் கூறியவள், மனதில் எந்தவித சலனமுமின்றி சாதாரணமாகவே இருந்தாள். ரோஹனும் அவள் முகத்தில் எதையோ எதிர்ப்பார்த்து ஆராய்ச்சியான பார்வை பார்த்துக் கொண்டிருக்க, திடீரென வந்த தொலைப்பேசி அழைப்பில் திரையை பார்த்தான்.
ரோஹன் அழைப்பை ஏற்றதும், மறுமுனையில் சஞ்சய்யோ, “டேய்… எங்கடா இருக்க?” என்று கேட்க,
“நான் அம்முவ கூட்டிகிட்டு கொலேஜ் வந்திருக்கேன்டா” என்று ரோஹன் சொன்னதும் தான் தாமதம், உற்சாகமான சஞ்சய், “வாவ்! சூப்பர்டா. நாம படத்துல பார்த்திருக்கோம்ல, இந்த மாதிரி எல்லாத்தையும் மறந்து போனவங்கள அவங்க பழகின, பழக்கப்பட்ட இடங்களுக்கு கூட்டிட்டு போனா பழசெல்லாம் நியாபகம் வர வாய்ப்பு இருக்கு. சூப்பர் ஐடியா” என்று சொன்னான்.
ரோஹனோ தூரத்தில் நின்றிருந்த மாயாவை பார்த்தவாறு, “நோ சஞ்சு, எனக்கு என்னமோ அது ரியலிட்டிக்கு வர்க் அவுட் ஆகும்னு தோணல்ல. பிகாஸ், மாயா முகத்துல எந்த ரியாக்ஷனும் இல்லை, ரொம்ப சாதாரணமா இருக்கா” என்று சொல்ல,
“டோன்ட் வொர்ரிடா, கொலேஜ்ல தங்கச்சிமாவுக்கும் உனக்கும் சம்மந்தப்பட்ட முக்கியமான ப்ளேஸ்க்கு கூட்டிட்டு போ, அவளுக்கு சம்டைம்ஸ் நியாபகம் வரலாம்” என்று சஞ்சய் சொல்லியதில் சலிப்பாக தலையாட்டிய ரோஹன், அழைப்பை துண்டித்து மாயாவின் அருகில் சென்றான்.
மாயாவோ அவனை கேள்வியாக நோக்க, ரோஹன் அவளை அடுத்து அழைத்து சென்றது என்னவோ ஆடிட்டோரியமிற்கு தான்…
“வாவ்…!” என்றவாறு உள்ளே வந்த மாயா, மேடையில் ஏறி நின்றவாறு, “இங்க உங்களுக்கு நிறைய மெமரீஸ் இருக்கும்ல” என்று சிரிப்புடன் கேட்க,
அவள் பின்னால் வந்து நெருங்கி நின்றவாறு, “ஆமா, மறக்கவே முடியாத நிறைய தருணங்கள், என் வாழ்க்கையையே மாத்தின மூமென்ட்ஸ் கூட” என்று கூறிய ரோஹனுக்கு, கல்லூரியின் மேடையில் தான் ஆடும் போது, மாயாவை பார்த்த தருணம் நினைவில் வர, அன்று அவள் அமர்ந்திருந்த இடத்தை பார்த்து மென்மையாக சிரித்து கொண்டான்.
ரோஹன் உண்மையை கூறிய போது மாயா தன் காதலை அவனுக்கு உணர்த்தியது, ரோஹன் போட்டிக்காக ஆடிய போது மாயா செய்த அட்டூழியங்கள், ரோஹன் மேடையில் நடன பயிற்சி செய்யும் போது மேடைக்கு கீழ் நின்று தானும் ஆடுகிறேன் பேர்வழியென்று அவனின் நடன அசைவுகளை கேவலமாக மாயா ஆடிக் காட்டுவது என அன்றைய நினைவுகள் அவன் மனதில் உதிக்க, அதெல்லாம் நிழல் படங்களாக அவன் கண் முன் தோன்றியது.
அவனையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த மாயா, “உங்கள ஒரு பொண்ணு காதலிச்சான்னு அண்ணா சொன்னாங்கல்ல, நீங்க ஏன் அந்த பொண்ண காதலிக்கல? காதல்னா அவ்வளவு வெறுப்பா?” என்று சந்தேகமாக கேட்க,
‘இல்லை’ என்று அழுத்தமாக தலையாட்டிய ரோஹன், “வெறுப்பு இல்லை பயம், எங்க நம்மள விட்டு போயிறுவாங்களோன்னு. பட், ஒரு சின்ன கரெக்ஷன் அவ என்ன காதலிக்க முன்னாடி இருந்தே நான் அவள காதலிக்கிறேன். யூ க்னோ வட் மாயா, இங்க தான் என் அம்மு அவ காதலை எனக்கு புரிய வச்சா” என்று தன் கழுத்திலிருந்த செயினை வருடியவாறு சொன்னான்.
“அப்போ, ஏன் உங்க லவ்வ சொல்லல்ல ரோஹன்?” என்று மாயா புரியாது கேட்க,
“என்னோட முட்டாள்தனம்” என்று முடித்தவன் எதுவும் பேசாது திரும்பி நின்றுக் கொண்டான்.
“ஹோ… டோன்ட் வொர்ரி, அந்த பொண்ண மறுபடியும் பார்த்தீங்கன்னா, நீங்களும் அவங்கள காதலிச்சீங்கன்னு சொல்லிக்கலாம்” என்று மாயா சொல்ல,
வாய்விட்டு சிரித்த ரோஹன், “அவள தான் தினமும் நான் பார்த்துகிட்டு இருக்கேனே” என்று சொல்லவும், மாயாவுக்கோ முகம் இறுகிப் போனது.
“ஓ… இத்தனை வருஷமா அந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்கலையா? அட்லீஸ்ட் வேறு யார் கூடவும் என்கேஜ்மென்ட் கூட ஆகியிருக்கலாமே” என்று மாயா ஒரு மாதிரி குரலில் கேட்க,
அவளின் குரல் மாற்றத்திலும், முக மாற்றத்திலும் உள்ளுக்குள் குதூகலித்தவன் வெளியில் சாதாணமாக, “அவ என் அம்மு, எனக்கு சொந்தமானவ, அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”என்று சொல்ல, அவனின் பேச்சில் மாயாவுக்கு புசுபுசுவென கோபம் எகிறியது.
“உங்க அம்மு தான் இருக்கால்ல, அப்போ எதுக்கு என்னை கிஸ் பண்ணிங்க மிஸ்டர்?” என்று மாயா காட்டமாக கேட்க, அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளை பார்த்த ரோஹன், “தோணிச்சு பண்ணேன், தட்ஸ் இட்” என்றுவிட்டு கைக்கடிகாரத்தை பார்த்தவாறு, “கிளம்பலாம்” என்று முன்னே சென்றான்.
கோபத்தில் தரையை காலால் உதைத்த மாயா,’தோணிச்சா…?! ஹவ் டேர் இஸ் ஹீ? இந்த மாயா மஹேஷ்வரிக்கிட்டயே விளையாடுறான் இடியட். இதுக்கப்றம் பக்கத்துல வரட்டும், என்னை விழுங்குற மாதிரி பார்க்குற அந்த கண்ணை நோண்டி புடுறேன்’ என்று அவனை வறுத்தவாறு காரின் அருகில் சென்றாள்.
ரோஹனோ புன்சிரிப்புடன் அவளை பார்த்தவாறு காரின் கதவை திறந்து, குனிந்து அவளுக்கு மரியாதை செலுத்துவது போல் பாவனை செய்ய, மாயாவோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினாள்.
சரியாக, மாயாவின் பக்கத்திலிருந்த பாதுகாவலர் ஒருவனின் மேல் துப்பாக்கி தோட்டா பாய, அவன் உயிரற்ற உடலாய் கீழே சரிந்ததில் மொத்த பேருமே பதறி விட்டனர்.
அங்கிருந்த மக்களும் துப்பாக்கி சத்தத்தில் திடுக்கிட்டு ஓட, தங்களின் துப்பாக்கியை வெளியே எடுத்த பாதுகாவலர்கள் புல்லட் வந்த திசையை குறி வைத்தவாறு மாயாவுக்கும் ரோஹனுக்கும் காவலுக்கு நிற்கும் முன்னே, அவர்கள் உடலிலும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து நிலத்தில் சரிந்தனர்.
திடீரென நடந்த சம்பவத்தில் அதிர்ந்த ரோஹன், அடுத்தநொடி மாயாவை காரின் பின்சீட்டில் தள்ளி, அவனும் காரில் ஏறி கதவை மூட, சரியாக துப்பாக்கி தோட்டா ஒன்று கார் கண்ணாடியில் பட்டு தெறித்தது.
கார் கண்ணாடி புல்லட் ப்ரூஃபாக இருந்ததில், சிறு கீறல் மட்டுமே அதில் விழ, ‘உஃப்ப்ப்’ என்று பெருமூச்சுவிட்ட ரோஹன் மாயாவை பார்க்க, அவளோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.
“ரோஹன், அவ… அவங்க…” என்று அவள் பயத்தில் தடுமாற, “ரிலாக்ஸ் மாயா, ஒன்னுஇல்ல” என்று அவளை ஆசுவாசப்படுத்தி ஓட்டுனரை இறங்க சொன்னவன், தான் ஓட்டுனர் இருக்கையில் தாவி அமர்ந்து, காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.
அப்போது சரியாக ரோஹன் ஓட்டிய காரை வழிமறித்தவாறு நிறுத்தியிருந்த ஜீப்பில் சில ஆட்கள் இருக்க, அவர்களை பார்த்த ரோஹனுக்கு ஆயாசமாக இருந்தது.
“இவனுங்க வேற நேரங் காலம் தெரியாம” என்று வாய்விட்டே புலம்பிய ரோஹன் மாயாவிடம், “இவனுங்க ஆர்.எம் கன்ஸ்ட்ரெக்ஷன் எம்.டியோட ஆளுங்க, பொதுவா பிஸ்னஸ்ல இதெல்லாம் சகஜம்னு உனக்கு தான் தெரியுமே… அவங்களுக்கு கிடைக்க வேண்டிய சில ப்ரோஜெக்ட்ஸ் எங்களுக்கு கிடைச்சதும் இந்த மாதிரி தான் பண்ணிகிட்டு இருக்காங்க. எத்தனை தடவை என்கிட்ட அடி வாங்கினாலும் திருந்த மாட்டேங்குறானுங்க. நீ கார்லயே இரு, இவனுங்கள டீல் பண்ணிட்டு வர்றேன்” என்றுவிட்டு இறங்கியவனுக்கு, ‘சற்று முன் நடந்த துப்பாக்கி தாக்குதலுக்கும், இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை’ என்று மட்டும் தெளிவாக புரிந்தது.
அவர்கள் முன் சென்று, அவர்களை அழுத்தமாக பார்த்தவாறு ரோஹன் நிற்க, அடுத்தநொடி ஜீப்பிலிருந்து இறங்கிய அடியாட்கள் கையில் இரும்பு ராடுகளை கொண்டு அவனை தாக்க வந்தனர்.
அவனும் சட்டையின் கையை மடித்து விட்டு, கைகாப்பை ஏற்றி விட்டவாறு முன்னே வேகமாக சென்று, அவர்களை புரட்டி எடுக்க ஆரம்பித்தான்.
தன்னை அடிக்க வந்தவர்களின் தாக்குதலிலிருந்து லாவகமாக தப்பித்து, அவர்களை லாவகமாக பிடித்தவன், அவர்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் அவர்களையே வெளுத்தான்.
மாயாவோ பயத்தில் காரிலிருந்து இறங்கி, “ரோஹன்…” என்று கத்தியவாறு அவனை நோக்கி வர, அவள் குரலில் திரும்பிய ரோஹனுக்கு எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.
‘இவ என் பேச்சை இந்த ஜென்மத்துல கேக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாளா’ என்று மனதிற்குள் பொறுமியவாறு, “மாயா…” என்று ரோஹன் அவளை நெருங்கி வரவும், அவன் வலது தோல்பட்டையில் துப்பாக்கி தோட்டா பாயவும் சரியாக இருந்தது.
“ஆஆ…” என்று கத்தியவாறு ரோஹன் கையை பிடித்துக்கொள்ள, “ரூஹி…” என்று தன்னை மீறி கத்தியவாறு அங்கேயே மயங்கி சரிந்தாள் மாயா.
மூன்று நாட்கள் கழித்து,
“ரோஹ்… ரோஹன்…” என்று கத்தியவாறு அப்போது தான் சுயநினைவுக்கு வந்த மாயா, மயக்கத்திலிருந்து எழுந்து அமர, அவள் மயக்கத்திலிருந்து விழித்த நொடி பதற்றமாக வைத்தியருக்கு அழைத்தாள் அலைஸ்.
“அலைஸ் ரோஹன்… ரோஹனுக்கு என்னாச்சு?” என்று மாயா பதட்டமாக கேட்க, அலைஸ்ஸோ எதுவும் பேசாமல் அவளையே பதற்றமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நத்திங் டூ வொர்ரி, நவ் ஷீ இஸ் ஆல்ரைட்” என்றுவிட்டு வைத்தியர் செல்ல, தன் கையில் ஏற்றியிருந்த ட்ரிப்ஸ்ஸை கழற்ற முயன்றவளை பார்த்து தலையிலடித்துக் கொண்ட அலைஸ், வேகமாக சென்று அவள் கையை பிடித்துக் கொண்டாள்.
“ஆர் யூ மேட்?” என்று அலைஸ் கத்தவும், அதே கோபத்துடன் அவளை நோக்கிய மாயா, “ரோஹனுக்கு என்னாச்சுன்னு சொல்லு அலைஸ், என் கண்ணு முன்னாடி அவர ஷூட் பண்ணாங்க” என்று சொல்லும் போதே அவள் உடல் நடுங்கியதை அலைஸ்ஸும் உணரத்தான் செய்தாள்.
அவளருகில் அமர்ந்த அலைஸ், “டோன்ட் வொர்ரி மாயா, இப்போ அவருக்கு பரவாயில்லை. இன்னைக்கு காலைல தான் டிஸ்ச்சார்ஜ் ஆனாங்கன்னு கேள்விப்பட்டேன். எனக்கு உன்னை நினைச்சி தான் பயமா இருந்துச்சி, மூனு நாளா சுயநினைவே இல்லாம இருந்த. ஆல்ரெடி ஆக்சிடன்ட் ஆகியிருக்கு, அதான் ரொம்ப பயந்துட்டேன்” என்று பதற்றமாக சொல்ல,
அவளோ எதையும் கண்டுக்கொள்ளாது, “நான் இப்போவே ரோஹன பார்க்கனும்” என்றவாறு ட்ரிப்ஸ்ஸை கழற்றிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, “மாயா, ஸ்டாப்” என்று அலைஸ் கத்தவும், மாயாவின் எண்ணிற்கு அழைப்பு வரவும் சரியாக இருந்தது.
திரையை பார்த்த அலைஸ்ஸின் முகம் கடுகடுவென மாற, தொலைப்பேசியை மாயாவிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து நின்றுக் கொண்டாள்.
திரையை பார்த்தவள் அதில் சர்வேந்திரனின் பெயரை பார்த்து ஒரு பெருமூச்சுவிட்டவாறு அந்த காணொளி அழைப்பை ஏற்று, அப்படியே கட்டிலில் அமர்ந்துக் கொண்டாள்.
“யெஸ் டாட்” என்று மாயா சலிப்பாக சொல்ல, “வட்ஸ் ரோங் வித் யூ மாயா? நீ மொதல்ல கிளம்பி இங்க வா” என்று கத்த தொடங்கி விட்டார் சர்வேந்திரன்.
“டாட் ப்ளீஸ், ஐ அம் டயர்ட். நான் இப்போ ரோஹன பார்க்கனும், அவருக்கு என்னால தான் காயம் ஆகியிருக்கு” என்று மாயா சொல்ல, சர்வேந்திரனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது. ஏற்கனவே ரோஹன் தப்பித்துவிட்டான் என்ற கோபத்தில் அவர் இருக்க, இதில் மாயா வேறு இவ்வாறு பேசுவதில் கடுப்பாக தான் இருந்தது அவருக்கு.
“மாயா, என்ன நினைச்சிகிட்டு இருக்க நீ? இப்போ நீதான் எல்லா ச்சேனல்லையும் ஹொட் டோபிக் ஆ இருக்க. இதுல உனக்கு என்கேஜ்மென்ட் ஆகிறுச்சி பட், ரோஹன் கூட உன்ன பல இடத்துல பார்த்து ஏகப்பட்ட நியூஸ், உன் பெயரை நீயே கெடுத்துக்குற மாயா” என்று சர்வேந்திரன் கத்த,
“டாட், லாஸ்ட் மன்த் உங்களையும் கூட தான் அந்த ஹீரோயின் கூட சம்மந்தப்படுத்தி நியூஸ் லீக் ஆகியிருந்திச்சு, பட், இதெல்லாம் பிஸ்னஸ்ல சகஜம்னு நீங்க தான் சொன்னீங்க. சோ, ஜஸ்ட் லீவ் இட்” என்ற மாயா அழைப்பை துண்டிக்க, சர்வேந்திரனுக்கோ மாயாவை கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
அழைப்பை துண்டித்தவள் கண்கள் கோபத்தில் சிவந்திருக்க, “அலைஸ், இதுக்கு காரணம் யாருன்னு தெரிஞ்சிச்சா?” என்று கேட்டாள்.
“இது நடந்த அன்னைக்கே ரோஹன ஷூட் பண்ணவன ஏயார்போர்ட்ல வச்சி பிடிச்சிட்டாங்க, இட்டாலியன் தான். இப்போ, பொலிஸ் கஸ்டடியில இருக்கான். பட், ஒரு வார்த்தை கூட அவன்கிட்ட இருந்து வாங்க முடியல” என்று அலைஸ் சொல்ல,
இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தவள், “இது யாரு பண்ணாங்கன்னு எதுவும் இப்போ எனக்கு தெரிய தேவையில்ல. ஐ அம் டேம்ன் ஷுவர், அவன் எப்படியும் உண்மைய சொல்ல மாட்டான். சோ, ரோஹன ஷூட் பண்ணவன் நாளைக்கு உயிரோட இருக்க கூடாது” என்றவள் ஏதோ யோசித்து, “ஆங்… என்ட், ஆர்.எம் கன்ஸ்ட்ரக்ஷன், அந்த கம்பனி இனி இருக்க கூடாது. அந்த கம்பனிக்கெதிரா என்ன பண்ண முடியுமோ, அதை பண்ணு. அப்படி ஒரு கம்பனி இருந்ததுக்கு அடையாளமே இருந்திருக்க கூடாது” என்று மாயா பேசிக் கொண்டிருக்கும் போதே இடை வெட்டியது அலைஸ்ஸின் குரல்.
“ஒரு விஷயத்தை முடிவு பண்ணும் போது, நீ ரொம்ப நிதானமா யோசிப்ப. ஆனா, இப்போ…” என்று அலைஸ் இழுக்க,
“நான் சொல்றதை மட்டும் நீ பண்ணா போதும், கொட் இட்” என்ற மாயாவின் குரலில் இருந்த அழுத்தத்தில் அவளை சந்தேகமாக பார்த்தாள் அலைஸ்.
“ஒருவேள, இந்த இடத்துல ரோஹன தவிர வேறு யாரு இருந்திருந்தாலும், இதே முடிவு தான் எடுத்திருப்பியா?” என்று அலைஸ், மாயாவை கூர்மையாக பார்த்தவாறு கேட்க,
“எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க யாரா இருந்தாலும், இதே தான் நான் பண்ணியிருப்பேன்” என்று சொன்ன மாயா அங்கிருந்து நகர்ந்திருக்க, மாயாவின் செய்கையில் எப்போதும் போல் பற்களை கடித்துக் கொண்டு நின்றது என்னவோ அலைஸ் தான்.
காதல்போதை?
—————————————————————–
ZAKI?