காதல்போதை 41💙

காதல்போதை 41💙

 

ரோஹனின் கண்கள் கலங்க, “அம்மு” என்றழைத்தவாறு மாயாவை அவன் புன்னகையுடன் பார்த்திருக்க, அவனை திரும்பி ஒருநொடி அழுத்தமாக பார்த்த மாயா சர்வேந்திரனின் புறம் திரும்பி, “மிஸ்டர்.சர்வா, உங்களால என்ன பண்ண முடியுமோ, அதை நல்லாவே பண்ணிடீங்க. இப்போ… ஐ அம் பேக்…” என்று கடைசி வசனத்தை நீட்டி முழக்கி சிரித்தவாறு சொன்னாள்.

முதலில் அதிர்ந்த சர்வேந்திரன் பின் அவளை உக்கிரமாக பார்த்தவாறு, “அப்போ எல்லாம் நியாபகத்துக்கு வந்தும், இத்தனை நாள் நடிச்சிருக்க, குட் ஆக்டிங்…” என்று கை தட்டி, சட்டென தன் பின்னால் வைத்திருந்த பிஸ்டலை எடுத்து ரோஹனின் புறம் நீட்டியவாறு விஷம சிரிப்பு சிரிக்க, அப்போதும் பதட்டப்படாமல் மாயா அவரை அழுத்தமாக பார்த்திருந்தாள்.

“வாவ்! மாயா மஹேஷ்வரியோட இந்த குணம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் அம்மாவும் இப்படி தான், பிஸ்னஸ்ல என்ன பிரச்சினை வந்தாலும் கூலா ஹேன்டல் பண்ணுவா. அப்படியே அவள உரிச்சி வச்சி பிறந்திருக்க. ஆனா என்ன, அவ என்னை ஏமாத்திட்டா, அவ எப்படி இறந்தான்னு நினைக்கிற? அக்வா டொஃபேனா அவளோட உயிரையே கொன்னிறுச்சி, பாவம்ல…?

நாலு நாள் அவள துடிக்க வைச்சு உயிர எடுத்தேன். முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்னு இப்போ எனக்கு யூஸ் ஆனதை பார்க்கும் போது, அந்த லேடி அந்த விஷத்தை எனக்காகவே கண்டுபிடிச்சிருக்காளோன்னு தோணுது” என்று சர்வேந்திரன் பேச பேச, மாயாவுக்கோ கோபத்தில் முகம் சிவந்தது. ஆனால், எதுவும் பேசாது அப்போதும் அமைதியாகவே இருந்தாள்.

“உனக்கு ச்சொய்ஸ் இல்லை ஸ்வீட்ஹார்ட், உன் ரூஹி உயிர் இப்போ என் கையில, மொத்த சொத்தையும் நீயே என் பேருக்கு மாத்தி எழுதிரு. இந்த சொத்துக்காக தான் இத்தனை வருஷம் பொறுமையா இருந்தேன், ஐரா கம்பனீஸ் மட்டும் எனக்கு சொந்தமாகினா, இந்த கோப்ரேட் உலகத்துல யாராலையும் என்னை மிஞ்ச முடியாது. சொன்னதை செய்…” என்று சர்வேந்திரன் கத்த, மாயாவின் இதழ்களோ கேலியாக வளைந்தன.

அதை புரியாமல் பார்த்த சர்வேந்திரன் தன் முதுகுபுறம் ஏதோ அழுத்துவதில் திடுக்கிட்டு கழுத்தை மட்டும் வளைத்து திரும்ப, அலைஸ் தான் தன் பிஸ்டலை அவரின் முதுகில் அழுத்தியவாறு தலையை சரித்து ஏளனமாக சிரித்தாள்.

அதில் அதிர்ந்தவர், “ஆஃபர் ஆல் எனக்கு கீழ வேலை பார்க்குற நீ, எனக்கே துப்பாக்கி நீட்டுறியா?” என்று ஆவேசமாக கத்த, தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தவள் தன் காதிலுள்ள ப்ளூடூத்தை அழுத்தியவாறு, “எஃப்.பீ.ஐ(FBI) அலைஸ் ஹியர்…” என்று சொல்ல, அவருக்கு விழி பிதுங்கி விட்டது.

சர்வேந்திரனோ தான் மாட்டிக் கொண்டதில் என்ன செய்வதென்று தெரியாமல் ரோஹனுக்கு நேராக நீட்டியிருந்த பிஸ்டலின் ட்ரிகரை அழுத்த போக, அடுத்தநொடி ரோஹன் அவரின் கையை தட்டிவிட்டு, கீழே விழ போன துப்பாக்கியை பிடித்து, அதையே அவருக்கு நேராக நீட்டியவாறு நின்றுக் கொண்டான்.  சர்வேந்திரன் இந்த தாக்குதலை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எல்லாம் வழிகளும் அடைத்த உணர்வு…

மாயாவை மிரண்டு போய் அவர் பார்க்க, தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டு நிமிர்ந்து நின்றவள், ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி வெற்றிப் புன்னகை சிந்த, அவருக்கு உடல் உதறவே ஆரம்பித்து விட்டது.
அலைஸ் தன் குழுவுக்கு தகவல் தெரிவிக்கவும் மற்ற பொலிஸ் அதிகாரிகளும் வீட்டுக்குள் நுழைய, சர்வேந்திரனுக்கு எல்லாம் தன் கை மீறி சென்றுவிட்டது என்று மட்டும் புரிந்தது.

இயலாமை கோபமாக மாற, “மாயா, ஐ வில் கில் யூ” என்று சர்வேந்திரன் ஆக்ரோஷமாக கர்ஜிக்க, முன்னால் வந்து அவரின் கைகளில் விலங்கை மாட்டிய அலைஸ், அவரை வெளியே இழுத்து செல்ல, ரோஹனும் சர்வேந்திரனின் பிஸ்டலை மற்ற பொலிஸாரிடம் ஒப்படைத்து தன்னவளை முறைத்து பார்த்தான்.

அவளோ அதையேல்லாம் கண்டுக்காது, “அலைஸ்” என்று அழைத்தவாறு சர்வேந்திரனுக்கு அருகில் சென்றவள், அலைஸ்ஸை ஒரு பார்வை பார்க்க, அவளும் அவர்களிடமிருந்து சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்.

பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்துக் கொண்ட மாயா, சர்வேந்திரனை நெருங்கி, “மிஸ்டர்.சர்வேந்திரன், இந்த மாயாவ நீ ரொம்ப குறைச்சி எடை போட்டுட்ட. அக்வா டொஃபேனாவோட சீக்ரெட் ஃபோர்மியூலா அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டிச்சுன்னு நீங்க தப்பா கணக்கு போட்டுடீங்க. அதை மறுபடியும் இந்த உலகத்துக்கு அறுபது வருஷத்துக்கு முன்னாடியே என் தாத்தா மிஸ்டர்.ஆதி நாராயணன் கொண்டு வந்துட்டாரு.

யூ க்னோ வட், ஐரா கோஸ்மெடிக்ஸ் சீக்ரெட்டே அக்வா டொஃபேனா தான். நீங்க இல்லீகலா, போலியா உருவாக்கின அந்த பொய்ஸன் கலந்த ப்ரோடெக்ட்க்கும், ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஒரிஜின் ப்ரோடெக்ட்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஒன்னு தான்” என்று சொல்லி சிரிக்க, அவருக்கோ உச்சகட்ட அதிர்ச்சி.

“இட் மீன்ஸ்…?” என்று சர்வேந்திரன் அதிர்ச்சியாக இழுக்க, “இட் மீன்ஸ், முந்நூற்றைம்பது வருஷத்துக்கு முன்னாடி ஜூலியா டொஃபேனா உருவாக்கின அதே பொய்ஸன் கலந்த மேக்கப்அப் தான் இந்த  ஐராவோட ப்ரோடெக்ட்ஸ்” என்று ஹஸ்கி குரலில் சிரித்தவாறு சொல்லிவிட்டு  பின்னால் நகர்ந்து நின்ற மாயா, அலைஸ்ஸை பார்த்து ஒரு தலையசைப்பை வழங்கினாள்.

அவள் சொன்ன விடயத்திலிருந்து மீளாத அதிர்ச்சியில் இருந்தவரை இழுத்துக்கொண்டே சென்றனர் அந்த உயர் பொலிஸ் அதிகாரிகள்.

அலைஸ் மாயாவை அணைத்துக் கொள்ள, அவளை பதிலுக்கு அணைத்தவள், “மறுபடியும் எப்போ சந்திக்கலாம்?” என்று கேட்க, “கூடிய சீக்கிரமே…” என்ற அலைஸ் ரோஹனை பார்த்து தலையசைத்துவிட்டு வெளியேற போக, மாயாவின் பங்களாவை சுற்றி நின்றிருந்த பொலிஸ் அதிகாரிகளை மிரட்சியுடன் பார்த்தவாறு மாயாவின் ஆட்களுடன் உள்ளே நுழைந்தான் லியோ.

அவனை பார்த்த அலைஸ்ஸிற்கு ஏகத்துக்கும் கோபம் எகிற, தனது பிஸ்டலை கையில் எடுத்தவாறு மாயாவின் அனுமதிக்காக அவளை கேள்வியாக பார்த்தாள்.

மாயாவின் ஆட்களால் இழுத்து வரப்பட்டவனுக்கும், அவரின் சட்டரீதியற்ற இந்த வியாபாரத்துக்கும் சம்மந்தமே இல்லை. சொல்லப்போனால், லியோவிற்கு இதை பற்றி எதுவுமே தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.

உள்ளே வந்தவனுக்கு அலைஸ் துப்பாக்கியை எடுத்ததும் உடல் உதற ஆரம்பித்தது. அலைஸ்ஸின் கையை பிடித்து, ‘இல்லை’ எனும் விதமாக மாயா தலையசைக்க, “மாயா, சர்வேந்திரனோட இல்லீகல் பிஸ்னஸ் அ பத்தி இவனுக்கு தெரியாது தான். ஆனா, பணத்துக்காக உன்ன கொல்ல ட்ரை பண்ணியிருக்கான், இவன விட்டு வைக்க போறியா?” என்று கோபத்தில் கத்தினாள் அலைஸ்.

மாயாவோ லியோவை அழுத்தமாக பார்த்து, “நீ எனக்கு பண்ணது, நட்பு என்ற பெயருல ஒரு பெரிய துரோகம். அதை நான் எப்போவுமே மறக்க மாட்டேன். பணத்துக்காக உன் கூட இருந்த என்னையே கொல்ல ட்ரை பண்ணியிருக்க” என்று விரக்தியாக மாயா  சொல்ல,

அதை குறுக்கிட்ட லியோ, “மாயா, ப்ளீஸ்… அந்த சர்வேந்திரன் ஆரம்பத்துல என் ஃபேமிலிய வச்சி மிரட்டினான். அதான் என்ன பண்றதுன்னு தெரியாம…” என்று தயக்கமாக இழுத்தான்.

வாய்விட்டு சிரித்தவள், “ஆரம்பத்துல என்ன பண்றதுன்னு தெரியாம பண்ண, அதுக்கப்றம் மனச தேத்திகிட்டு பணத்துக்காக பண்ண, ரைட்?” என்று கேட்க, அவனோ ஒருவித குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றான்.

“அலைஸ் இவன எதுவும் பண்ணாத, இவன் போகட்டும்” என்ற மாயா, லியோவின் புறம் திரும்பி அவனை அழுத்தமாக பார்த்தவாறு, “உன் அம்மா இப்போ சேஃபா இருக்காங்க லியோ, மூளை நரம்புல இருந்த பிரச்சினையால இனி உயிரோட வாழவே சாத்தியமில்லாத அளவுக்கு போனவங்க இப்போ ரொம்பவே சேஃபா இருக்காங்க” என்று சொல்ல, லியோ அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

“ஆப்ரேஷன் சக்ஸஸ், இனிமேயாச்சும் உன் அம்மாவை போய் பாரு” என்றுவிட்டு மாயா திரும்பி நின்றுக் கொள்ள, அப்போது தான் லியோவுக்கு தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. அவன் யாருக்கு துரோகம் செய்தானோ, அவளே அவன் உயிராக நினைக்கும் ஒருவரை மீட்டெடுத்துள்ளாள் அல்லவா!

அவள் வெளிப்படையாக தண்டனை கொடுக்கவில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்வில் அவன் சாகும்படியான ஒரு தண்டனையை அவனுக்கு வழங்கிவிட்டாள்.

அந்த இடத்திலே மண்டியிட்டு, “ஐ அம் சோரி மாயா, ஐ அம் சோரி…” என்று லியோ அழ, அவளோ அங்கு நின்றிருந்த தன் பாதுகாவலர்களை ஒரு பார்வை பார்க்க, அடுத்தநொடி அவனை வெளியே இழுத்துச் சென்றனர் அவர்கள்.

ஜெனியும் தலையசைத்துவிட்டு வெளியேற, மாயாவோ ரோஹனை திரும்பி தயக்கமாக பார்க்க, அவனோ வீட்டிலிருந்து வெளியேறி, போர்டிகாவில் நின்றிருந்த காரில் ஓட்டுனர் இருக்கையின் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்.

தயக்கமாக வந்த மாயா ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, எதுவும் பேசாது வண்டியை செலுத்த, ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரோஹன், “வண்டியை ஓரமா நிறுத்து” என்று கோபமாக சொல்ல, அந்த பெரிய சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்தினாள் மாயா.

அவளை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவன், “அப்போ, உனக்கு எல்லாமே நியாபகம் இருக்கு,  என்கிட்ட நடிச்சிருக்க, ரைட்?” என்று இறுகிய குரலில் கேட்க, அவள் தலையசைத்ததும் தான் தாமதம், அடுத்தநொடி ரோஹனின் கை அவளிள் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

“என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல? ஏன்டி சொல்லாம என்னைவிட்டு போன?” என்று ரோஹன் கத்த, மாயா என்ன சும்மாவா? அடுத்தகணம் அவள் ரோஹனை அறைந்திருக்க, அதிர்ந்துவிட்டான் அவன்.

கன்னத்தை பொத்திக்கொண்டு, “ஏன்டி என்னை அடிச்ச?” என்று ரோஹன் உறும, “பின்ன, உன்னை உதைக்காம விட்டேன்னு சந்தோஷப்படு. என்ன பண்ணி வச்சிருக்க நீ? என்ன வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்க? உன்ன கனவு என்னாச்சு ரூஹி?” என்று கத்திய மாயா,

“அன்னைக்கு நீ ரொம்ப கெஞ்சி கேட்டன்னு உனக்காக ஆடி கொடுத்து, உன்னை வின் பண்ண வச்சி, அடுத்த லெவல்க்கு உன்னை அனுப்பி வச்சி, அப்போவும் சோர்ந்து போகாம உனக்காக தொண்டை தண்ணி வத்த கத்தி கத்தியே மோடிவேட் பண்ணி, அதுலையும் உன்னை வின் பண்ண வச்சு, உன் ட்ரீம் கம்படீஷன்க்கு உன்னை செலக்ட் ஆக்க நான் படாத பாடுபட்டா… நீ குடி, சீக்ரெட், ட்ரக்ஸ்னு அந்த கனவையே தொலைச்சிட்டு நிக்குற” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பேசி முடித்தாள்.

முதலில் அமைதியாக கேட்டவன் அதன்பிறகு அவள் பேசியதில், ‘அடிப்பாவி! உன்னால தான் நான் வின் பண்ணேனா? சைட்டு கேப்புல பத்து வரிக்கு அவள புகழ்ந்து தள்ளிட்டாளே…’ என்று நினைத்தவாறு அவளை முறைத்து பார்த்தான்.

அதன் அர்த்தத்தை உணர்ந்தவள் திருதிருவென விழித்தவாறு, “சோரி பேபி” என்று சொல்ல, அடுத்தநொடி அவளை காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக அணைத்திருந்தான் ரோஹன்.

“அம்மு மிஸ் யூ டி, நீ இல்லாம நான் செத்தே போயிட்டேன். முடியலடி என்னால” என்று ரோஹன் அழ, அவனை இறுக அணைத்துக் கொண்ட மாயா அவன் தோள் வளைவில் முகத்தை புதைத்து, “ஐ அம் சோரி ரூஹி, எனக்கு வேற வழி தெரியல. ஆனா, நான் என்னோட வாக்கை மீறல்ல. நீ எந்த மூலைல இருந்தாலும் உனக்காக நான் வருவேன்னு சொன்னேன், என் ரூஹிக்காக திரும்ப வந்துட்டேன்” என்று புன்னகையுடன் சொல்ல, ரோஹனோ அவள் கன்னங்களை தாங்கி அவள் இதழுடன் தன்னிதழை பொருத்தினான்.

இத்தனை நாள் தன்னவளுக்காக தான் ஏங்கிய ஏக்கங்களை அந்த ஒரு இதழ் முத்தத்தில் அவன் தீர்த்துவிட முயற்சிக்க, கண்களை மூடி அதை சுகமாக அனுபவித்தாள் மாயா. இத்தனை நாளின் பிரிவு வலிக்கான மருந்தாக தன்னவளின் இதழ் தேனை பருகியவன், அவளிடமிருந்து விலக மனமில்லாது விலக, “லவ் யூ ரூஹி” என்று காதலாக சொன்னவாறு அவன் கழுத்தை கட்டிக் கொண்டு தன்னவனை இறுக அணைத்திருந்தாள் மாயா.

அவள் முகத்தை நிமிர்த்தி, “அம்மு, உனக்கு எப்போ எல்லாம் நியாபகத்துக்கு வந்திச்சு? பெங்ளூர்ல என்னை ஷூட் பண்ணாங்களே, அப்போவா?” என்று சந்தேகமாக ரோஹன் கேட்க, ‘இல்லை’ என்று தலையாட்டியவள், “மூனு வருஷத்துக்கு முன்னாடியே நியாபகம் வந்துட்டு” என்று சொல்ல, “வாட்?!” என்று அதிர்ந்து விட்டான் ரோஹன்.

“ரூஹி, நான் பெங்ளூர் வந்ததே, அம்மா இறந்ததுக்கு அப்றம் என்னால இங்க இருக்க முடியலன்னு தான். அவங்க எப்படி இறந்தாங்கன்னு கூட எனக்கு தெரியல, நாலு நாள் சிவியரான  ஃபீவர், திடீர்னு இறந்துட்டாங்க. வன் மன்த் என்னால முடியல, எனக்குன்னு அவங்க மட்டும் தான். அதான், உடனே பெங்ளூருக்கு கிளம்பி வந்துட்டேன்.

நான் பெங்ளூருக்கு வந்ததுக்கு அப்றம் தான் இட்டாலில ஏகப்பட்ட மர்டர்ஸ், அதுக்கு அக்வா டொஃபேனா தான் காரணம்னு சொன்னாங்க. அதுவும், மொத்த சந்தேகமும் என் கம்பனி மேல… சர்வேந்திரன் எங்க அம்மாவோட க்ளோஸ் ஃப்ரென்ட், நான் பெங்ளூருக்கு போகும் போது கூட கம்பனி மேனேஜ்மென்ட் அ மட்டும் அவரோட பொறுப்புல விட்டுட்டு போனேன். ஆனா, அவன் தான் எல்லாத்துக்கும் காரணமா இருந்திருக்கான்” என்று பல்லை கடித்தவள் தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள்.

“என்ட், யூ க்னோ வெல், பெங்ளூர்ல பல தடவை என்னை கொல்ல ட்ரை பண்ணாங்க. அதுக்கான காரணம் எனக்கு அப்போ தெரியல, என்னை ஒவ்வொரு தடவை நீங்க தான் காப்பாத்தினீங்க. ஒரு கட்டத்துல சர்வேந்திரன் நான் கம்பனிய பொறுப்பேத்துக்கனும் இல்லைன்னா, எல்லாமே கை மீறி போயிறும்னு ரொம்ப பிரஷர் பண்ணான்.

நான் அப்போ அதுக்கு தயாரா இல்லை, அப்படி இருந்தப்போ தான் நீ உன் வாழ்க்கைய விட்டு போக சொல்லி ரொம்ப திட்டிட்ட. சுக்கு நூறா உடைஞ்சு போயிட்டான். அப்போ ஏதாச்சும் ஒன்னாவது நல்லதா நடந்தா போதும்னு தோணிச்சு, என் தாத்தாவோட உழைப்பு, கனவு தான் இந்த ஐரா கம்பனீஸ்.

பொறுப்பு என் மேல இருந்தும் நான் அதை கண்டுக்காம, சிதைய விடுறேனோன்னு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருந்துச்சி. அதான் யாருக்கிட்டேயும் சொல்லாம இட்டாலிக்கு கிளம்பி வந்துட்டேன். பட், நான் இங்க வந்ததும் போற வழியிலே ஆக்சிடன்ட் ஆகிட்டு” என்று மாயா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளை இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டான் ரோஹன்.

அவன் மார்பில் சாய்ந்தவாறு, “மொத்தத்தையும் மறந்துட்டேன், உன்னை கூட ரூஹி… இரண்டு வருஷத்துக்கு அப்பறம் எப்படின்னு தெரியல கொஞ்சமா கொஞ்சமா எல்லாமே நியாபகம் வந்துட்டு. ஆரம்பத்துல ரொம்ப பயந்தேன், என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு சுத்தமா புரியல.

சர்வேந்திரன் என் அப்பான்னு சொல்லிகிட்டு என் முன்னாடி இருந்தான். ஏதோ என்னை சுத்தி தப்பா நடக்குதுன்னு மட்டும் எனக்கு தோணிச்சு. அப்போவே இதுக்கெல்லாம் காரணம் சர்வேந்திரன்னு புரிஞ்சி போச்சி. ஆனா, எதுவுமே பண்ண முடியாத நிலைமை, என்னை சுத்தி அவன் ஆளுங்க என்னை வோட்ச் பண்ணிகிட்டே இருந்தாங்க. எல்லாமே அவனுக்கு விசுவாசமானவங்க, பல பேர விலைக்கு வாங்கிட்டான், இன்னும் சில பேர மிரட்டி உண்மைய சொல்ல விடாம பண்ணிட்டான்.

இரண்டு வருஷம் எதுவுமே நியாபகம் இல்லாம இருந்தேன். அடுத்த ஒரு வருஷம் எல்லாம் நியாபகம் இருந்தும், தெரியாத மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்தேன். அவன் என்கிட்ட கையெழுத்து கேக்குற ஒவ்வொரு ஃபைலையும் ரொம்ப கவனமா படிச்சே கையெழுத்து போட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல முடியாம, கம்பனி பொறுப்ப நான் ஏத்துக்குறேன்னு ஆர்ப்பாட்டம் பண்ணி கம்பனிக்கு வந்தேன்.

எனக்கு நியாபகம் வந்ததுக்கு அப்றம் முடிஞ்ச அளவு என்னோட முடிவுகள்ல சர்வேந்திரன தலையிடாம பார்த்துக்கிட்டேன். அலைஸ் என்னோட ஸ்கூல் மெட், என்னோட பிஏ வுக்கான இன்டர்வியூ நடந்திக்கிட்டு இருந்தப்போ அவளோட அடையாளத்தை மறைச்சி என் முன்னாடி வந்தா, அன்னைக்கு எனாச்சுன்னா…” என்றவளின் நினைவுகள் அன்று நடந்த சம்பவத்திற்கு சென்றது.

அன்று, காரியதரிசி தெரிவு செய்யும் நேர்முகத்தேர்வை மாயா சர்வேந்திரனை மீறி, தானே நடத்துவதாக சொல்லி ஒவ்வொரு நபராக அழைத்து நேர்முகத் தேர்வை நடத்தினாள்.

அப்போது உள்ளே வந்த அலைஸ்ஸை  பார்த்த மாயாவின் இதழ்கள், “அலைஸ்” என்று முணுமுணுக்க, சிசிடிவி கேமராவை பார்த்தவள்,  முயன்று அவளை தெரியாதது போல் பாவனை செய்தாள்.

“வெல்… டெல் மீ அபௌட் யுவர் செல்ஃப்” என்று அலைஸ்ஸின் கோப்பை பார்த்தவாறு மாயா சொல்ல, ஆனால் எதிரே பலத்த அமைதி தான். எந்த பதிலும் இல்லாது நிமிர்ந்து பார்த்த மாயா, அலைஸ் அவளை நோக்கி நீட்டியிருந்த துப்பாக்கியை பார்த்து அதிர்ந்து விட்டாள்.

தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்ற மாயா, அறையிலிருந்த சிசிடிவியை பார்க்க, அவளின் பார்வையை பார்த்து ஏளனமாக சிரித்த அலைஸ், “ஊப்ஸ்… இந்த ரூம்ல இருக்க கேமரா இப்போ என்னோட கன்ட்ரோல்ல இருக்கு மிஸ்.மாயா மஹேஷ்வரி” என்று சொன்னவாறு தன் சட்டை கோலரில் சொருகியிருந்த ஒரு பேனை போன்ற உபகரணத்தை கண்களால் காட்ட, மாயா தான் ஆடிப் போய்விட்டாள்.

ஆனால், சுதாகரித்து அவள் ட்ரிகரை அழுத்த போகும் முன், “வெயிட்… ப்ளீஸ் வெயிட்” என்று கைகளை உயர்த்திய வண்ணம் மாயா சொல்ல,

“என்ன தப்பிக்கலாமேன்னு பார்க்குறியா? டூ யூ க்னோ வூ அம் ஐ? பொலிஸ் டிபார்ட்மென்ட்ல சோல்வ் பண்ண முடியாத பல கேஸ்ஸ ஹேன்டல் பண்ண எஃப்.பீ.ஐ. பட், இப்போ என்னை கொலை பண்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்ட. எனக்குன்னு இருந்த ஒரே உறவு மைக்கேல். ஹெட் ஆஃப் எஃப்.பீ.ஐ, என்னோட ஹஸ்பன்ட். ஆனா, அவர் இப்போ இல்லை, கொன்னுட்டாங்க… நீ கொன்னுட்ட” என்று அலைஸ் ஆக்ரோஷமாக கத்த, மாயா அதிர்ந்து பார்த்தாள்.

“என்ன எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா? அக்வா டொஃபேனா தான் என் மைக்கல கொன்னிடுச்சி, அந்த விஷத்தால ஏகப்பட்ட பேர் சாகுறாங்க. அக்வா டொஃபேனா கூட சம்மந்தப்பட்டது உன் கம்பனி தான், இந்த கேஸ்ல எங்களுக்கு கிடைச்ச பொதுவான க்ளூ உன் கம்பனி ப்ரோடெக்ட்ஸ் தான். நீங்க தான் அந்த விஷத்தை மக்களுக்கு கொடுக்குறீங்க, உங்களால தான் என் மைக்கல் இறந்தான்” என்று அலைஸ் அழ, மாயாவுக்கு இந்த விடயங்கள் எல்லாம் புதிது.

அக்வா டொஃபேனாவின் ஃபோர்மியூலா கண்டுபிடிக்கப்பட்டது, அதன்பின் பல நாடுகளில் ஏற்பட்ட மர்ம கொலைகள் பற்றி மாயா அறிந்திருந்தாள். ஆனால், இதற்கு பின்னால் இந்த விஷம் தான் காரணம் என்று உறுதியாக அவளுக்கு தெரியாது.

ஐராவுடைய ஒப்பனை பொருட்களின் ஃபோர்மியூலா, அக்வா டொஃபேனாவின் ரகசியம் தான். ஆனால், அது ஒருவருடைய உயிரை குடிக்க வேறுவழியில் விற்கப்படும் என்று அவள் நினைத்தும் பார்த்திருக்க மாட்டாள். மொத்தமாக குழம்பி போனவளுக்கு தோன்றிய சந்தேகங்கள் மொத்தமும் திரும்பியது சர்வேந்திரனின் மேல் தான்.

அதோடு அந்த நான்கு நாட்களும் அவளின் நினைவுக்கு வந்தது. அவளின் அம்மா மஹேஷ்வரி அவதிப்பட்ட அந்த நான்கு நாட்கள். ஒவ்வொன்றையும் இணைத்து பார்க்க பார்க்க மாயாவுக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.

“அலைஸ் ப்ளீஸ் ரிலாக்ஸ்… என்ட், ட்ரஸ்ட் மீ, என் மேல உனக்கு நம்பிக்கையில்லையா? நான் உன் மாயூ” என்று மாயா சொல்ல,

அதிர்ந்த அலைஸ் பின் சுதாகரித்து, “ஓஹோ! அப்போ உனக்கு என்னை நல்லாவே தெரியுது. ஆனா, இதெல்லாம் உனக்கு தெரியாம நடக்குதா என்ன? டோன்ட் ஆக்ட் மாயா?  உன் அப்பா அந்த சர்வா மேலேயும் எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு, நீங்கெல்லாம் சேர்ந்து தான்…” என்று அலைஸ் பேசிக் கொண்டிருக்கும் போதே, குறிக்கிட்ட மாயா, “அவன் என் அப்பா இல்லை” என்று கத்தினாள்.

இப்போது புரியாது முழிப்பது அலைஸ்ஸின் முறையானது. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் சொன்ன மாயா, “அலைஸ், என் அம்மா இறந்ததுக்கும் இந்த விஷம் தான் காரணமா இருக்குமோன்னு இப்போ எனக்கு சந்தேகமா இருக்கு. ஆனா எப்படி…? கண்டிப்பா அந்த விஷத்தை கொண்ட கோஸ்மெடிக் ப்ரோடெக்ட்ஸ் ஐரா கம்பனியோட ஒரிஜின் ப்ரோடெக்ட்ஸ் ஆ இருக்காது. போலியான உற்பத்தி, எங்க ப்ரான்ட் அ யூஸ் பண்ணியிருக்காங்க. இதுக்கெல்லாம் யாரு காரணம்னு…” என்று மாயா யோசிக்க,

“சர்வேந்திரன்” என்ற அலைஸ்ஸின் பதிலில் யோசனையாக புருவத்தை நெறித்தவள், “எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?” என்று கேட்டாள்.

“மைக்கல் லாஸ்ட் ஆ ஹேன்டல் பண்ண கேஸ்  சர்வேந்திரனோட ஷெர்வி கோஸ்மெடிக்ஸ் தான். அவங்க ப்ரோடெக்ட்ஸ்ல இல்லீகலா சில மூலப்பொருள் யூஸ் பண்றாங்க. பல தடவை சர்வேந்திரன் மைக்கல மிரட்டியிருக்கான். பட் மைக்கல் இதை விடல. அந்த கோபம் சர்வேந்திரனுக்கு இருந்திருக்கலாம்.

என்ட், ரிசேர்ச்சர் மெட்ரிசன் சர்வேந்திரனோட ஃப்ரென்ட். அக்வா டொஃபேனா ஃபோர்மியூலாவ அவர் சர்வேந்திரனுக்கு சொல்லியிருப்பாரோன்னு எனக்கு சந்தேகம் இருக்கு. இப்போ நீ சொல்றதை வச்சி பார்த்தா, உன்னை சுத்தி அவங்க ப்ளே பண்ணிக்கிட்டு இருக்காங்க.

ஏற்கனவே ஐரா என்ட் ஷெர்வி கோஸ்மெடிக்ஸ் கம்பனீஸ் இரண்டுமே போட்டி கம்பனிங்க தான். ஒருவேள, இதை இல்லீகலா உங்க கம்பனி ப்ரான்ட் அ யூஸ் பண்ணி அவன் பண்றதுக்கு காரணமே மொத்த சந்தேகமும் உங்க கம்பனி மேல திரும்புறதுக்காக கூட இருக்கலாம்” என்று அலைஸ் சொல்லி முடிக்க,

“ரைட்…” என்று யோசித்தவாறு சொன்ன மாயா, “ஆனா, ஆதாரம் இல்லாம எதுவும் பண்ண முடியாது” என்று சலித்தவாறு சொன்னாள்.

“எதுக்கு ஆதாரம்? அந்த சர்வேந்திரன இப்போவே நான்…” என்று அலைஸ் ஆவேசமாக கத்த, அவளருகில் சென்றவள், “ச்சில் அலைஸ், நாம எடுக்குற ஒரு சின்ன தப்பான முடிவும் என் கம்பனியவே சிதைச்சிறும். ஐரா கம்பனீஸ் என்னோட பொறுப்பு. மொதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு, அம்மாவ உனக்கு நல்லா தெரியும், நானும் அவங்களும் தப்பு பண்றவங்களா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.

துப்பாக்கியை கீழே போட்ட அலைஸ் மாயாவை தாவி அணைத்து அழுக, அவள் முதுகை நீவி விட்டவள், அடுத்து தீட்டிய திட்டம் தான் அலைஸ்ஸை தன் கூடவே வைத்திருக்க, அவளை தன் காரியதரிசியாக நியமித்தது.

நடந்ததை ரோஹனிடம் சொன்ன மாயா, “ஒவ்வொரு நிமிஷமும் சின்ன எவிடென்ஸ் சர்வேந்திரனுக்கு எதிரே தேடினேன், பட் எதுவுமே கண்டுபிடிக்க முடியல. என்னை சுத்தி அவன் போட்டிருந்த ஆளுங்க, நான் சின்ன துரும்ப அசைச்சாலும் அவன்கிட்ட இன்ஃபோர்ம் பண்ணிருவாங்க.  அப்போ தான் இந்தியால நடந்த பிஸ்னஸ் அவார்ட் ஃபங்ஷன்ல உங்களை பார்த்தேன்.

அதுல உன்னை பார்த்ததும் சத்தியமா சொல்றேன்டா, அழுதுட்டேன். உடனே உன்கிட்ட வரனும்னு தோணிச்சு. உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஏங்கினேன். அப்போ போட்ட திட்டம் தான், இந்தியாவுல நான் திறக்க நினைச்ச புது ப்ரான்ச். உனக்காக திரும்பி வந்தேன், உனக்கு கல்யாணம் ஆகிறுச்சோன்னு ரொம்ப பயந்துட்டு இருந்தேன்.

ஆனா, தேங்க் கோட்! நீயே தேவதாஸ் கணக்கா சுத்திகிட்டு இருந்த. அதுக்கு நான்தான் காரணம்னு நீ சொன்னப்போ, ஒருபக்கம் நீயும் என்னை காதலிச்சிருக்கன்னு ரொம்ப ஹேப்பியா இருந்திச்சு, இன்னொரு பக்கம் நீ உன் கனவ இழந்துட்டு இருக்கியேன்னு வேதனையா இருந்துச்சி. என்னோட உணர்வுகளை உன் முன்னாடி வெளிப்படுத்தாம இருக்க ரொம்ப சிரமப்பட்டேன்.

ஆனா, என்னையும் மீறி உன்னை நெருங்க ஆரம்பிச்சேன். என்னை பத்தி என்கிட்டயே நீ சொல்லும் போது,  அப்படியே உன்னை கட்டிபிடிச்சி ‘நான் தான்டா உன் அம்மு’ன்னு சொல்லனும் போல தோணும். ஆனா, நான் என்னை வெளிப்படுத்தினா, அது உன் உயிருக்கே ஆபத்தாகிறும்னு ரொம்ப பயந்தேன். உன்னை ஷூட் பண்ண அன்னைக்கு எவ்வளவு துடிச்சி போனேன் தெரியுமா?  இப்போ சொல்லு, என்னோட நினைவுகளால உன் கனவு சிதையுற அளவுக்கு என்னை அவ்வளவு காதலிக்கிறியா ரூஹி?” என்று மாயா காதலாக கேட்க,

இத்தனை நேரம் அவள் சொன்னதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தவன் கண்கலங்க அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, “உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன் அம்மு” என்று சொல்லி அழ, அவன் இதழில் அழுந்த முத்தமிட்டாள் மாயா.

காதல்போதை💙
*******************************

-ZAKI💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!