காதல்போதை21?

காதல்போதை 21?

அடுத்தநாள்,

பாபி அந்த பெரிய மைதானத்தில் முட்டியில் கை கோர்த்து ஊன்றி தலையை கவிழ்த்து கண்களை மூடி ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க திடீரென்று,
“ரொம்ப ஆழ்ந்த சிந்தனையோ..” என்ற குரலில் சட்டென கண்விழித்தவன் பக்கவாட்டாக திரும்பி பார்க்க முட்டியில் கையை ஊன்றி கன்னத்தை தாங்கியவாறு அமர்ந்திருந்த மாயாவை பார்த்தவன் லேசாக புன்னகைத்தான்.

  “வாவ்வ் தருணு முதல்தடவை இப்படி அழகா சிரிக்கிற.. அதுவும் என்னை பார்த்து.. ம்ம்.. ம்ம்.. நல்லா தான் இருக்கு..” என்று மாயா சிலாகிக்க,

அவளை வலி நிறைந்த புன்னகையுடன் பார்த்தவன்,
   “என்னை மன்னிச்சிறு பேபி..” என்று தழுதழுத்த குரலில் சொல்ல, அவளோ அவனை கேள்வியாக பார்த்தாள்.

    “நா உன்ன முதல்தடவை பார்க்கும் போது ரொம்ப தப்பா பேசிட்டேன்ல.. அதுவும் உன் அம்மா பத்தி.. நா ரொம்ப தப்பானவன் மாயா. அதனால தான் என்னை யாருக்குமே பிடிக்கல..” என்று பாபி வருத்தமாக சொல்ல,

   “யாரு சொன்னா உன்ன பிடிக்காதுன்னு..யூ க்னோ வட் தருணு நா ரூஹிய பார்க்காம எனக்கும் உனக்குமான முதல் சந்திப்பு நல்ல சூழ்நிலைல இருந்திருந்தா நாம இப்பா லவ்வர்ஸ்ஸா இருந்திருப்போமோ என்னவோ..” மாயா குறும்பாக சொல்ல, இருபக்கமும் தலையாட்டி சிரித்தவன்,
    “உனக்கு என் மேல கோபமே இல்லையா..” என்று கேட்க,

    “என் அம்மாவ தப்பா பேசின உன் மேல கோபம் இருந்திச்சு ஆனா அதெல்லாம் உன்ன பத்தி தெரியுற வரைக்கும் தான்.. என் ரூஹியோட பெஸ்ட் ஃப்ரென்ட் தப்பானவனா இருக்க மாட்டான்னு ஒரு நம்பிக்கை.. என்னை பொருத்தவரைக்கும் உனக்கு ரூஹி மேல கோபம் அன்னைக்கு கூட உன் ஃப்ரென்ட் ரூஹிய வச்சி உன்ன வோர்ன் பன்ன உடனே தான் உனக்கு கோபம் அதிகமாச்சி.. ரூஹிய கோபப்படுத்தவே நீ ஒவ்வொன்னுமே பன்ன.. உன்னை நீயே தப்பானவனா போர்ட்ரெயிட்(potrait) பன்னிகிட்ட.. பட் நீ அப்படி இல்ல தருணு..” என்று மாயா சொல்ல,

   “இல்ல பேபி நா அப்படி பேசியிருக்க கூடாது.. என் அம்மா கூட என்னை மன்னிக்க மாட்டாங்க..” என்று பாபி சொல்லவும் வானத்தை அண்ணார்ந்து பார்த்தவாறு கையெடுத்து கும்பிட்டவள்,
    “ப்ளீஸ் ஆன்ட்டி என் தருண மன்னிச்சிறுங்க.. அவன் இனி குட் போய்..” என்று சொல்லிவிட்டு பாபியிடம் கண்களால் எப்படி என்று கேட்க அவனோ அவள் தலையில் செல்லமாக அடித்தான்.

  “நீ இன்னும் அந்த ரோஷினிய லவ் பன்றியா தருணு..” என்று மாயா சந்தேகமாக கேட்க,

   “வாட் நோ மாயா.. எப்போ சஞ்சய் அவளுக்கு ப்ரோபோஸ் பன்றதை பார்த்தேனோ அப்போவே என் மனசுல இருந்த ஆசையையும் அழிச்ட்டேன்… பட் என்ன ஆல்ரெடி ரோஹன் மேல இருந்து பொஸ்ஸஸ்ஸிவ்ல சஞ்சய் மேல இருந்த கோபம் இன்னும் கூடிப்போயிருச்சி.. இன்ஃபேக்ட் என் பிடிவாதமும் முட்டாள்தனமும் தான் காரணம்..” என்று பாபி சொல்ல,

அவன் தோளில் கை போட்ட மாயா,
     “அந்த ரோஷினியெல்லாம் ஒரு ஆளா அவளும் அவ திமிரும்.. தேங்க் கோட் நீ தப்பிச்சிட்ட.. பட் டோன்ட் வொர்ரி நா அன்னைக்கு சொன்ன மாதிரி உனக்கு லட்டு மாதிரி உன்னை குழந்தை மாதிரி பார்த்துக்குற உன்ன ரொம்ப காதலிக்குற பொண்ணு கிடைப்பா.. அதுக்கு நா கேரன்டி.. நா கேரன்டி.. நா கேரன்டி..” என்று விளம்பர பாணியில் மாயா சொல்ல,

அவளை இருபுருவங்களையும் உயர்த்தி நக்கலாக பார்த்தவன்,
     “ஆஹான்.. அப்படி ஒரு பொண்ணு கிடைச்சா பார்க்கலாம்.. ” என்று பாபி சொல்ல மாயாவோ மனதில் ‘அடியே போன்டா உனக்கு அதிர்ஷ்டம் தான்டி.. சீக்கிரம் இவன்கிட்ட சொல்லி தொலை..’ என்று மானசீகமாக கீர்த்தியுடன் பேசிக்கொண்டாள்.

சட்டென்று, “தேங்க்ஸ் பேபி..” என்ற பாபியின் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவள் அவனை புரியாது பார்க்க,
     “ரோக்கி கூட மறுபடியும் பேசுறதே இம்ப்போஸிபள்னு நினைச்சேன்.. பட் நீ அதை பன்னிட்ட.. உனக்கு தௌஸன்ட் டைம் தேங்க்ஸ் சொன்னாலும் ஈடாகாது..” என்று பாபி சொல்ல,

அவன் தலையில் நங்கு நங்கு என்று கொட்டியவள்,
     “எவனுக்கு வேணும் உன் இத்துபோன தேங்க்ஸ்ஸு.. நா என்ன உங்களுக்காக பன்னேன்னு நினைச்சியா நோவேய்.. மாயா எது பன்னாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும்.. என் ரூஹிய கரெக்ட் பன்ன அண்ணாத்தகிட்ட ஹெல்ப் கேட்டா அவரு என் ஆளுகிட்ட வாங்கின  அடிலயே பேசவே பம்முறாரு. பட் நீ அப்படி இல்ல என் ரூஹிக்கூட சரிசமமா நின்னு எதிர்த்து பேச உன்னால மட்டும் தான் முடியும்.. அதனால சேர்த்து வச்சதுக்கு பரிகாரமா என் ரூஹிய எனக்கு கரெக்ட் பன்னி கொடுக்குற.. உன் இத்துபோன தேங்க்ஸ்ஸு எனக்கு தேவையில்ல..” என்று மாயா சொல்ல அவளை பொய்யாக முறைத்தவன் பின் சிரித்தேவிட்டான்.

      “நா ரொம்ப பெரிய தப்பு பன்னிட்டேன்ல.. என்னை நீ அடிச்சதுல உன் மேல செம்ம கோபம்.. உன்ன பழிவாங்கனும்னு யோசிச்ச போது தான் நீ ரோக்கிய லவ் பன்றதை தெரிஞ்சிக்கிட்டேன்.. உடலளவுல நாம அனுபவிக்கிற வலிய விட மனதளவுல நாம  அனுபவிக்கிற வலி ஆறாத வடுவா இருக்கும்.. ரோக்கியோட பெரிய வீக்பொய்ன்டே கொடுத்த வாக்கை மீற கூடாதுன்னு உறுதியா இருப்பான்.. இதுவரைக்கும் அவன் ப்ரோமிஸ் கூட பன்னது இல்ல தெரியுமா செய்ய முடியாம போயிருமோன்னு பயத்துல.. சோ ரோக்கியோட அந்த வீக்னெஸ்ஸ யூஸ் பன்னி உன்ன காதலிக்கிற மாதிரி நடிக்க சொன்னேன்..” என்று பாபி சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட மாயா,

      “அச்சோ பாபி செல்லம் நீ தப்பு பன்னல்லடா.. நீ பன்ன வேலையால தான் என் ரூஹி வாழ்கைக்குள்ள என்னால ஈஸியா நுழைய முடிஞ்சது.. இல்லைன்னா இப்போ வரைக்குக் தூரமா இருந்தே சைட் அடிச்சிக்கிட்டு ரூஹி ரூஹின்னு காதலன் படம் பரத் மாதிரி புலம்பிகிட்டு திரிஞ்சிருப்பேன்.. நானா போய் லவ்வ சொல்றதெல்லாம் நடக்குற காரியமா..” என்று மாயா சொல்ல,

      “என்னை முழுசா நீ பேசவே விடலையே.. உன் விஷயத்துல தப்பு பன்னல்ல..பட் ரோக்கி விஷயத்துல தப்பு பன்னிட்டேன்..” என்று சொன்னவன் கேலியாக,
     “உன்ன பழிவாங்குறேன்னு ரோக்கிய வச்சி நா ஒரு ஆட்டத்தை ஆடினா ரோக்கி மேல இருந்த கோபத்துக்கு எனக்கே தெரியாம அவன பழிவாங்கியிருக்கேன்… பிகாஸ் உன்னை விட பெரிய பனிஷ்மென்ட் நா ரோக்கிக்கு கொடுத்திருக்கவே முடியாது பேபி..” என்று பாபி சொல்லி முடிக்க,

“சைக்கோ பாபி உன்ன..” என்று மாயா அவனை அடி வெளுக்க அவள் அடிகளை இலகுவாக தடுத்தவன்,
    “எனக்கு ஒரேயொரு டவுட்டு.. நேத்து உன்ன கொல்ல வந்தவங்க யாரு.. ஃபங்ஷன் அன்னைக்கு ஏன் ஸ்டேஜ் பின்னாடி திடீர்னு ஓடின..” என்று பாபி மாயாவை கூர்மையாக பார்த்தவாறு கேட்க,

அவளோ சுட்டுவிரலை காதுக்குள் குடைந்து,
     “எப்போ பாரு கேள்வி தானா..” என்று சலித்தவாறு கேட்டவளை அவன் முறைக்க ஒரு பெருமூச்சுவிட்ட மாயா தரையையே வெறித்தவாறு தன் வாழ்க்கையை மேலோட்டமாக சொல்ல தொடங்கினாள்.

      “எனக்கு அப்பா இல்லை தருண் தாத்தாவும் அம்மாவும் தான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் தாத்தா இறந்தாரு.. அப்றம் அம்மா திடீர்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் இறந்தாங்க.. எனக்கு என்ன பன்றதுன்னு தெரியல.. நா வாழ்ந்த வீட்லயே என்னால இருக்க முடியல.. அம்மா சாதாரணமா இறந்திருக்க மாட்டாங்களோன்னு சந்தேகம் ஆனா அதுக்கான காரணம் என்னன்னு தெரியல..  அம்மா இறந்த வன் மன்த் வீட்ல இருந்தேன் ஒருகட்டத்துல தனிமை என்னை பைத்தியமாக்கிறும்னு தோணிச்சு அங்க இருந்து எனக்கு தெரிஞ்சவங்க மூலமா பெங்ளூர் வந்தேன்.. அன்னைக்கு ஃபங்ஷன்ல எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்கள கண்டேன் அவங்க எங்க வீட்ல வேலை பார்த்தவங்க சோ எங்க என்னை பார்த்துருவாங்களோன்னு பயத்துல ஸ்டேஜ் பின்னாடி ஓடிட்டேன்.. ”  என்று மாயா சொல்ல பாபியோ அவள் சொல்வதையே கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

    “அப்போ உன்ன கொல்ல வந்தவங்க யாரு.. நேத்து ஸ்டேஷன்ல அவங்கள அடிச்சி மிரட்டி பார்த்தும் யாரு செய்ய சொன்னாங்கன்னு வாயே திறக்க மாட்டேங்குறானுகளாம்..”  என்று பாபி சந்தேகமாக சொல்ல,

       “ஐ டோன்ட் க்னோ.. என்ட் ஐ டோன்ட் க்யார்..” என்றவள் அவள் பாட்டுக்கு எழுந்து செல்ல, “பேபி..” என்று அழைத்தவளின் குரலில் மாயா நின்று திரும்பி பார்க்க, பாபியோ,
“ஐ ஜஸ்ட் வோன்ட் டூ க்ளரிஃபை வன்மோர்திங்க்..” என்று பாபி சொன்னதில் அவனை புன்னகையுடன் ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று சைகையில் கேட்டாள் மாயா.

“நீ யாரு..” என்று அழுத்தமான பாபியின் கேள்வியில் சிறிதுநேரம் அவனையே பார்த்திருந்தவள்,
     “மாயா..” என்று அழுத்தமாக சொன்னவாறு “பாய் டா தருணு..” என்றுவிட்டு துள்ளிகுதித்து மாயா ஓட அவளை ஆராய்ச்சியாக பார்த்தான் பாபி..

அடுத்தநாள்,

  ஆடிட்டோரியமிற்கு மாயாவும் கீர்த்தியும் வர அங்கு ரோஹன் நடன பயற்சி செய்துக் கொண்டிருக்க பாபியும் சஞ்சய்யும் இருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

உள்ளே வந்த மாயாவோ தன்னவனை பார்த்தவாறு,
     “ஹாய் ரூஹி செல்லகுட்டி..” என்று ஒரு குரல் கொடுக்க,

பட்டென்று திரும்பி அவளை பார்த்தவன்,
     “ஏய்ய் நீ எதுக்குடி இங்க வந்த.. இந்த கொலேஜ்க்கு நீ வந்ததுல இருந்து படிச்சு நா பார்த்ததே இல்ல.. வெளியே போடி..” என்று ரோஹன் கத்த,

முகத்தை சுருக்கி அவள் பாவமாக பாபியை பார்க்க, பாபியோ,
    “ரோக்கி விடு அவள.. நீ வாடா பேபி..” என்று சொல்ல, “பேபியா..” என்று கேட்டு பாபியை மூக்குவிடைக்க முறைத்தான் ரோஹன்.

அவளோ ரோஹனுக்கு ஒற்றை கண்ணை சிமிட்டி பறக்கும் முத்தத்தை வழங்கியவாறு பாபியின் அருகில் அமர அவனோ அவளை எரித்து விடுவது போல் பார்த்துவிட்டு தன் பயிற்சியை ஆரம்பித்தான்.

கீர்த்தியும் மாயாவின் அருகில் ஒருவித சங்கடத்தில் அமர்ந்திருக்க தன்னவனை பார்த்தவாறே சஞ்சய்யிடம்,
      “அண்ணாத்த என்ன நம்ம ஆளு தீவிரமா ப்ராக்டிஸ் பன்னிகிட்டு இருக்கான்.. ஸ்டேட் லெவல்ல நடக்க போற டான்ஸ் கம்படீஷன்க்கா..” என்று கேட்க,

    “ஆமா தங்கச்சிமா..” என்ற சஞ்சய்யை பார்த்தவள் ஏதோ யோசித்து,
    “அண்ணாத்த கம்படீஷன் எங்க நடக்குது.. வேற ஸ்டேட்ஸ்லயா..” என்று சந்தேகமாக கேட்க,

     “நோ.. நோ.. நாங்களும் அதுக்கு தான் ரொம்ப பயந்தோம்.. உள்ளூர்ல இருக்குற மாதிரி வராதுல்ல.. பட் தேங்க் கோட் இங்க தான் நடக்க போகுது..” என்று சஞ்சய் சொல்லவும் தான் மாயாவோ மனதில் ‘ஹப்பாடா..’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது தான் அவள் பாபியை கவனிக்க அவனோ ரோஹன் செய்யும் பயிற்சியில் ஒவ்வொரு குறையாக சொல்லிக்கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் முடியாமல் ரோஹனோ,
      “டேய் சத்தியமா முடியலடா.. இத்தனை நாளா நல்லா தான்டா ஆடிக்கிட்டு இருந்தேன்.. நீ இன்னும் மாறவே இல்லையா..” என்று சோர்ந்து போய் கேட்க,

பாபியோ, “எனக்கு செடிஸ்ஃபை ஆகுற வரைக்கும் நா இப்படியே தான் சொல்லிக்கொண்டு இருப்பேன்.. முதல்ல நீ இப்போ போட்ட ஸ்டெப்ப மாத்து..” என்று சொல்ல ரோஹனுக்கோ அய்யோ என்றிருந்தது.

மாயாவோ ரோஹனின் சோர்ந்த முகத்தை பார்த்துவிட்டு பாபியை முறைத்தவள் அவன் தலையில் நங்கென்று கொட்டி,
    “டேய் ஏன்டா என் ரூஹிய படுத்துற.. என் ரூஹி எது பன்னாலும் பெர்ஃபெக்ட் தான்.. இவர் பிரபுதேவாவோட ஒன்னுவிட்ட சித்தப்பா பையன்.. ஆளும் மூஞ்சியும்..” என்று திட்ட ரோஹனோ முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க பாபியோ அவளை முறைத்து பார்த்தான்.

     “தங்கச்சிமா உனக்கு ஒன்னும் தெரியாதுடா.. பாபி எப்போவுமே இப்படிதான்.. ரோஹன் டான்ஸ் ப்ராக்டிஸ் பன்னும் போது அவனுக்கு செடிஸ்ஃபை ஆகுற வரைக்கும் குறை சொல்லிகிட்டே இருப்பான்.. பட் என்னன்னா பாபியோட செடிஸ்ஃபை தான் ரோஹனோட பெஸ்ட் பெஃபோர்மென்ஸ்ஸா இருக்கும்னா பாரேன்.. பாபியோட கணிப்பு எப்போவுமே தப்பாகாது..” என்று சஞ்சய் பெருமையாக சொல்ல,

உதட்டை பிதுக்கி இரு புருவங்களையும் உயர்த்தி பாபியை பார்த்த மாயா,
     “ஆமா தருணு  உனக்கு இந்த டான்ஸ் எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லையா..” என்று கேட்க,

    “எனக்கு எப்போவுமே பாஸ்கெட்போல் தான்.. யூ க்னோ வட் ஐயா பாஸ்கெட்போல் ஸ்டேட் ப்ளேயராக்கும்..” என்று கெத்தாக கோலரை தூக்கிவிட்டுக் கொண்ட பாபி,
    “ஆமா நீ என்ன இந்த பக்கிய மட்டும் அண்ணாண்ணு மரியாதையா கூப்பிடுற.. என்னை மட்டும் பெயர் சொல்லி கூப்பிடுற.. என்னையும் அண்ணாண்ணு கூப்பிடு பேபி..” என்று அடம்பிடிக்க,

      “வாட் நீ எனக்கு அண்ணாவா.. என்னால உன்ன அண்ணாவா எல்லாம் ஏத்துக்க முடியாது.. எப்போவுமே நீ எனக்கு தருணு தான்..” என்று மாயா சொல்ல பாபியோ செல்லமாக அவள் தலையை கலைத்து விட,
     “என் ஹெயார் ஸ்டைல கலைக்காத மேன்..” என்றவாறு அவளும் அவன் தலைமுடியை பிடித்து இழுக்க, பயிற்சி செய்தவாறு அவர்களையே பார்த்திருந்த ரோஹன் தன் உள்ளுக்குள்ளே பொறுமிக் கொண்டான்.

அப்போது தான் எதுவுமே பேசாது மாயாவிற்கு பக்கத்து கதிரையில் கைகளை பிசைந்தவாறு ஒருவித சங்கடத்தில் அமர்ந்திருந்த கீர்த்தியை கவனித்த பாபி,
     “ஆமா இந்த மேடம் எதுவும் பேச மாட்டாங்களா.. சத்தியம் பன்னு இந்த பொண்ணு நிஜமாவே உன் ஃப்ரென்டு தானா பேபி..” என்று பாபி சந்தேகமாக கேட்க,

விழிவிரித்த கீர்த்தி எதுவும் பேசாது தலை குனிந்துக்கொள்ள கீர்த்தியை நமட்டு சிரிப்புடன் பார்த்த மாயா,
      “உனக்கு வேண்டப்பட்ட பொண்ணு தானே நீயே கேக்க வேண்டியது..” என்று நக்கலாக சொல்ல, ரோஹனோ சஞ்சய்யும் கூட பாபியை புரியாமல் பார்க்க பாபியும் புரியாமல்,
    “வாட் புரியல..” என்னு புருவத்தை நெறித்து கேட்டான்.

‘சரியான தத்தியா இருக்கான் மலமாடு..’ என்று உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்தவள்,
       “உங்க வீட்ல ட்ரைவரா வேலை பாக்குறாரே மிஸ்டர் மகிழன் அவரோட பொண்ணு தான் என் போன்டா..” என்று சொல்ல,

“ஓஹோ..” என்று ஆச்சரியமாக புருவத்தை உயர்த்தியவாறு கீர்த்தியிடம்,
      “சோரி எனக்கு சரியா நியாபகம் இல்ல..” என்று சொல்ல,

அவளோ ஒரு தலையசைப்பை மட்டுமே கொடுத்துவிட்டு,
     “ஜிலே.. ஜிலேபி நா.. நா க்ளாசுக்கு போறேன்.. நீ.. நீ.. பேசிட்டு வா.. ” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே விட மாயாவோ வாயை பொத்திக்கொண்டு சிரிக்க பாபியோ தோளை குலுக்கிவிட்டு ரோஹன் ஆட்டத்தில் கவனத்தை செலுத்தினான்.

இவ்வாறு ஒருவாரம் கழிந்த நிலையில் ரோஹனின் நடன போட்டிக்கான நாளும் வர அன்று,

அந்த அரங்கமே பல மாநிலத்திலிருந்து வந்த நடன போட்டியாளர்களாலும் மக்கள் கூட்டத்தினாலும் நிரம்பியிருக்க மக்கள் கூட்டத்திற்கு நடுவில் போடப்பட்டுள்ள மேடை போட்டியாளர்கள் தங்கள் திறமையை காட்ட என தயார் செய்யப்பட அந்த அரங்க அமைப்பை பார்த்தாலே இல்லாத பயமும் வந்துவிடும் போலிலிருந்தது போட்டியாளர்களுக்கு.

எல்லா போட்டியாளர்களும் தங்களுக்கான அறையில் தயாராக ரோஹனின் அறையில் அவன் கண்ணாடி முன்னிருந்து தன்னை தயார்படுத்த சஞ்சய்யும் பாபியும் அவனுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

   “டேய் ரோக்கி இதுல மட்டும் ஜெயிச்சேனா அடுத்த லெவல் உன்னோட ட்ரீம் தான்.. லண்டனில் நடக்க போற அந்த டான்ஸ் ச்சேம்பியன்ஷிப்..” என்று பாபி சொல்ல,

    “கண்டிப்பா டா.. என்ட் அந்த ச்சேம்பியன்ஷிப்ல நா ஜெயிக்கிறேனோ இல்லையோ என்னோட கனவு அந்த வேர்ல்ட்வைல்ட் நடக்க போற அந்த போட்டில நானும் ஒரு பார்ட்டா இருக்கனும்.. அது நடந்தாலே போதும்டா..” என்று ரோஹன் பேசிக்கொண்டே இருக்க சட்டென்று கதவை திறந்துக்கொண்டு உள்ளே மாயா ஓடி வர கீர்த்தியோ கையில் ஒரு சுருட்டி வைக்கப்பட்ட பெரிய காதிதத்துடன் உள்ளே வந்தாள்.

ரோஹனின் அருகில் வந்த மாயாவோ பதறியடி அவன் நெற்றியில் விபூதி குங்குமம் என்று அவள் பாட்டுக்கு வைத்து தலைக்கு மேல் கையெடுத்து கும்பிட்டு வாயுக்குள் ஏதேதோ முணுமுணுத்தவாறு வேண்ட பாபியும் சஞ்சய்யும் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தார்கள் என்றால் ரோஹனோ அவளை உக்கிரமாக பார்த்தான்.

அவளை விட்டு தள்ளி நின்றுக்கொண்டவன் தன் நெற்றியிலிருந்து விபூதி குங்குமத்தை அழித்து,
     “டோன்ட் யூ ஹேவ் சென்ஸ்.. சரியான பட்டிக்காடு மாதிரி..” என்று திட்ட,

    “ஷட் அப் ரோக்கி அவள எப்போவுமே திட்டிக்கிட்டே இருக்க..” என்று பாபி அதட்டவும்,
     “என் செல்ல தருண்..” என்று பாபியிடம் ஓடிச்சென்று அவனின் நெற்றியில் விபூதி வைத்தவள் சஞ்சய்க்கும் வைத்துவிட ரோஹன் தான் ‘எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா..’ என்று உதட்டை பிதுக்கி முணுமுணுத்துக் கொண்டான்.

கீர்த்தியின் கையில் இருந்த சுருட்டப்பட்ட பேப்பரை பார்த்த சஞ்சய்,
       “அது என்ன உன் கைல..” என்று கேட்க கீர்த்தியோ மாயாவை முறைக்க மாயாவோ,
      “அது என்னன்னு அப்றமா தெரிஞ்சிக்க அண்ணாத்த இப்போ என் ரூஹிய விஷ் பன்னு டா..” என்று சொல்ல பாபியும் சஞ்சய்யும் ரோஹனை கட்டியணைக்க,

கீர்த்தியோ, “ரோக்கியண்ணா ஆல் த பெஸ்ட்..” என்று மெல்லிய குரலில் சொல்ல மாயாவும் “பெஸ்ட் ஆஃப் லக் ரூஹி..” என்று அவனை அணைப்பது போல சென்றாள்.

“கோ பெக்(Go back)..” என்று அதட்டியவன் கீர்த்தியிடம் “தேங்க்ஸ் மா..” என்று புன்னகை முகமாக சொல்லிவிட்டு மாயாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேற அவளோ இரு பக்கமும் சலிப்பாக தலையாட்டிக்கொண்டாள்.

சரியாக அடுத்த கொஞ்சநேரத்தில் ரோஹானுக்கான முறையும் வர மாயா பாபி சஞ்சய் கீர்த்தி மேடையின் முன்னால் வந்து நின்றுக் கொண்டனர்.

அரங்கத்தின் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு பாடல் ஒலிக்கப்பட்டவுடன் மேடையை நோக்கி மட்டும் விளக்கு ஒளிரப்பட மேடையிலிருந்த ரோஹனை பார்த்த மாயா “ரூஹி..” என்று கத்த பாடலுக்கேற்ப தன் நடனத்தை ஆரம்பித்தான் ரோஹன்.

காதல்போதை ?
————————————————————-

-Zaki?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!