காதல்போதை26?

ஐந்து வருடங்கள் கழித்து,

லண்டனில்,

       “யெஸ் டாட்.. நிஜமா தான்.. ரொம்ப ஹேப்பியா இருக்கு.. ” என்று அந்த ஹோட்டல் அறையின் ஹோல் சோஃபாவில் சாய்ந்தவாறு  உற்சாகமாக தொலைப்பேசியில் பாபி பேச,

எதிர்முனையில் அவன் அப்பா மார்த்தாண்டமோ,
       “கம்பனி ஆரம்பிச்சு இந்த மூனு வருஷத்துல உங்களுக்கு கிடைச்ச ரொம்ப பெரிய ப்ரோஜெக்ட்.. அவன இதுல முழுக்க கான்சென்ட்ரேட் பண்ண சொல்லு.. ஆமா அவன் உன்கூட தானே இருக்கான்..” என்று கேட்க,

     “ஆங்.. இருக்கான் டாட்..” என்று பாபி சொல்ல அவன் குரலிலிருந்த வலியை புரிந்து கொண்டவர்,
     “அவன்கிட்ட பேசி பாரு.. மானவ் அவன நினைச்சி ரொம்ப நொந்து போயிருக்கான்.. சரிபா இன்னைக்கு ஈவினிங் அந்த ஃபங்ஷன்க்கு போறீங்க தானே..” என்று கேட்க,

     “ஆமா டாட் அதுக்கு தானே வந்திருக்கோம்.. ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் வளர்ந்து வரும் இளம்தொழிலதிபர் விருது எங்களுக்கு கிடைச்சது.. பட் இது வேர்ல்ட்வைட் ஆ நடக்க போற சாதனையாளர்கள் விருது.. நீங்க தானே இது எங்களுக்கு ரொம்பவே மோடிவேட் ஆ இருக்கும்னு சொன்னீங்க..” என்று பாபி சொல்ல,

     “ஆமா தருண் அவன் வர முடியாதுன்னு சொன்னாலும் இழுத்துட்டு போ.. இதுக்கப்றமும் அவன இப்படியே விட முடியாது..” என்று மார்த்தாண்டம் தீவிரமாக சொல்ல பாபிக்கும் அதே எண்ணம் தான்.

அவருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்து அங்கு மூடியிருந்த ஒரு அறையை பார்த்தவன் முகத்தில் தானாகவே வேதனை குடிகொண்டது. பெருமூச்சுவிட்டவாறு அந்த அறைக்கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்றவன் சுற்றி முற்றி கண்களை சுழலவிட அவன் பார்வை வட்டத்தில் விழுந்தான் அவன்.

அந்த அறை பால்கெனியில் வெற்று மார்புடன் காற்சட்டை மட்டும் அணிந்து ஒரு கையில் பாதி காலி செய்யப்பட்ட மது போத்தல் மறுகையால் அவன் அழுத்தமான இதழ்களுக்கு நடுவில் சிகரெட்டை வைத்தவாறு தோள் வரையேயான கேசம், முகத்தை மறைக்குமளவிற்கு தாடி என அவன் நின்றிருக்க “ரோக்கி..” என்ற பாபியின் அழைப்பில் சிகரெட் புகையை ஊதி தள்ளியவாறு திரும்பினான் ரோஹன்.

மீண்டும் மதுவை வாயில் சரித்தவாறு அறைக்குள் வந்தவன் பாபியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறை சோஃபாவில் அமர, ரோஹனின் எதிரே அமர்ந்த பாபி,
      “டேய்ய் இப்படியே எத்தனை நாளைக்கு இருக்குறதா உத்தேசம்.. உன் வீட்ட விட்டு வந்து உன் அப்பா கூட பேசி அஞ்சு வருஷத்துக்கு மேலாகுது.. அதுக்கப்றம் உன் ஃபைனல் காம்படீஷனுக்கு கூட போகாம ஏதோ பித்து பிடிச்சவன் மாதிரி இருந்த அதுவும் இந்த சனியன குடிக்க ஆரம்பிச்சது தான் ஆரம்பிச்ச இது தான் உன் மூனு வேளை சாப்பாடாகிட்டு.. ஏன்டா இப்படி பண்ணிகிட்டு இருக்க.. நீ கொடுத்த வாக்க மீறிட்டன்னு அவங்கள விட்டு விலகி உனக்கு நீயே தண்டனை கொடுக்குறதா நினைச்சி இன்னும் அவங்கள தான் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்க ரோக்கி..” ஒவ்வொரு வார்த்தையிலும் பாபியின் கவலை அப்பட்டமாக தெரிய,

ரோஹன் எதுவும் பேசாது பாபியை தான் அழுத்தமாக பார்த்திருந்தான். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று பாபியால் புரிந்து கொள்ள கூட முடியவில்லை. அவனிடமிருந்து ஒரு வார்த்தை கூட வர போவதில்லை என்று அறிந்தே தன் ஆதங்கத்தை கொட்டிவிட்டான் பாபி.. ஐந்து வருடத்திற்கு முன் வீட்டில் சண்டை போட்டு குடும்பத்தை பிரிந்து ரோஹன் வந்திருக்க பாபியே அவனை வற்புறுத்தி அவனுடன் தங்க வைத்துக் கொண்டான். எத்தனையோ தடவை அவனிடம் பேசி பார்த்தும் ரோஹனோ கண்டுக்கொள்ளவே இல்லை.

மூன்று வருடத்திற்கு முன் தான் பாபி சஞ்சய் ரோஹன் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி ஆரம்பத்திருக்க இன்று வளர்ந்து வரும் இளம்தொழிலதிபர்களில் ஒருவராக மாறிப்போனர்.

ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ரோஹனிடம் மற்றும் எந்த மாற்றமும் இல்லை. அவன் வாழ்நாள் கனவான இறுதி நடனப்போட்டிக்கு கூட போகாமல் மன அழுத்தம் அதிகரித்து போதை மருந்து எடுத்துக் கொண்டவனை அதிலிருந்து மீட்டெடுக்கவே பாபிக்கும் சஞ்சய்க்கும் பெரும் போராட்டமாக தான் இருந்தது. இருபத்திநாலு மணி நேரமும் கையில் மது போத்தலுடனே திரிபவன் வேலை என்று வந்துவிட்டால் மட்டும் வேங்கை போல் இருப்பான்.

இன்று உலகளாவிய ரீதியில் நடக்கவிருக்கும் சாதனையாளர்கள் விருது விழாவுக்கு பாபியின் அப்பாவே இவர்களை வற்புறுத்தி அனுப்பியிருக்க ரோஹனுக்கு இந்த பயணம் ஒரு மாறுதலாக இருக்கும் என்று சஞ்சய்யிடம் கம்பனியின் பொறுப்பை விட்டு ரோஹனை விடாப்பிடியாக இழுத்தே வந்துவிட்டான் பாபி..

    “உன் கூட பேசுறது சுத்த வேஸ்ட்.. லீவ் இட்.. ஒரு குட் நீயூஸ் ரோக்கி.. சஞ்சய் கோல் பண்ணான்.. நம்ம கம்பனிக்கு ரொம்ப பெரிய ப்ரோஜெக்ட் கிடைச்சிருக்கு.. இதை மட்டும் நாம சிறப்பா பண்ணா உள்ளூர்ல மட்டுமில்ல வெளியூர்ல கூட நம்ம கம்பனி புகழ் ஓஹோன்னு இருக்கும்..” என்று பாபி உற்சாகமாக சொல்ல,

ரோஹனோ இரு புருவத்தை உயர்த்தி “ஓஹோ..” என்று ஒருவித மொட்யூலேஷனில் சொல்ல அவனை முறைத்த பாபி,
      “டேய் க்ளைன்ட் யாருன்னு கேட்டா நீயே ஷாக் ஆகிறுவ.. ஐரா கம்பனீஸ்டா.. சும்மா யோசிச்சு பாரு.. அவ்வளவு பெரிய கம்பனி அவங்களோட புது ப்ரான்ச்ச பெங்ளூர்ல ஆரம்பிக்க போறாங்க.. அதுவும் அந்த ப்ரோஜெக்ட் நமக்கு வந்திருக்கு.. அதுவும் எந்த காம்படீஷனும் இல்லாம..” என்று பாபி சொல்லியதில்,

புருவத்தை நெறித்த ரோஹன் சிக்ரெட்டை புகைத்தவாறு,
      “இந்தியால நம்மள விட ரொம்ப அனுபவப்பட்ட பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனீஸ் இருக்கு.. இவங்க நம்மள தேடி பிடிச்சு ப்ரோஜெக்ட் தந்திருக்காங்கன்னா சம்திங் இஸ் ரோங்..” ரோஹன் சொல்ல,

     “இதே கேள்வி எனக்கும் தோணிச்சு.. அதுக்கு அவங்க லாஸ்ட் மன்த் எங்க கம்பனிக்கு அவார்ட் கிடைச்சதால வளர்ந்து வர்ற கம்பனீஸ்க்கு ஒரு மோடிவேட் ஆ இருக்கும்னு இந்த ப்ரோஜெக்ட்ட எங்களுக்கு தந்ததா சொல்லியிருக்காங்க..” என்று பாபி சொல்ல,

“க்ரேட்..” என்ற ரோஹன்,
      “அதான் விஷயத்தை சொல்லிட்டல்ல வெளியே போ..” என்று சொன்னவாறு மது போத்தல் மொத்தத்தையும் காலி செய்ய,

‘இவன..’ என்று பல்லைகடித்த பாபி,
       “நா இப்போ கிளம்புறேன்.. சார் இன்னைக்கு ராத்திரி மட்டும் இந்த சனியன தொடாம இருந்தா பெட்டர். கெஞ்சி கேக்குறேன்டா இன்னைக்கு நைட் ஃபங்ஷன் இருக்கு.. தயவு செஞ்சி குடிச்சி கிடிச்சி தொலையாத அங்க ஃபங்ஷன் முடிஞ்சதும் பார்ட்டில குடிக்க கொடுப்பாங்க.. எவ்வளவு வேணாலும் குடி உன்னை தூக்கிட்டு வர தான் நா இருக்கேனே..” என்று பாபி இறுதியில் கோபத்தில் கத்த,

ரோஹனோ தன் கையிலிருந்ததை தூக்கி போட்டுவிட்டு அறையிலிருந்த குளிர்சாதனப்பெட்டியிலிருந்து இன்னொரு மது போத்தலை எடுத்து மடமடவென குடிக்க இதற்கு மேல் இருந்தால் அவனை அடித்தே விடுவேன் என்ற ஆத்திரத்தில் அறையிலிருந்து வெளியேறினான் பாபி.

அன்று இரவு,

விழாவுக்கு செல்வதற்கு தயாராகி அறையிலிருந்த ஆளுயர பெரிய கண்ணாடியில் தன் விம்பத்தை வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தான் ரோஹன்.

வெள்ளை டீஷர்ட்டின் மேல் அடர்நீல நிற கோர்ட் அவன் நிறத்துக்கு கச்சிதமாக பொருந்திருக்க, ஐந்து வருடத்திற்கு முன்னிருந்த கல்லூரி பையன் இன்று ஆஜானுபாகுவான தோற்றத்தில் அப்போது இருந்ததை விட மேலும் கம்பீரம் கூடி தோள் வரையேயான கேசத்தை ஒரு ரப்பர் பேன்ட்டுக்குள் அடக்கி இறுகிய முகமாக நின்றிருந்த அவனுக்கே ‘இது நான் தானா..’ என்ற சந்தேகத்தை எழுப்பியது.

ஐந்து வருடத்திற்கு முன் நடந்த சில நினைவுகள் அவன் கண்முன் நிழலாட தானாகவே அவன் கண்கள் கலங்க அதை கட்டுப்படுத்த கண்களை அழுந்த மூடி திறந்தவனால் மனதை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனோ இன்று மனது தவிக்கும் தவிப்பு அதிகமாக இருக்க அதை அடக்க தெரியாது விறுவிறுவென சென்று மது போத்தலை எடுத்து குடிக்க போனவனை  “டேய்ய் டேய்ய் டேய்ய்..” என்று கத்தியவாறு ஓடி வந்து தடுத்தான் பாபி.
 
“ஏன்டா.. ப்ளீஸ்டா.. மீ பாவம் டா..” என்று பாபி பாவமாக சொன்னவாறு அவன் கையை பிடித்திருக்க பாபியின் கையை உதறியவன் போத்தலை சுவற்றில் எறிந்துவிட்டு அறையிலிருந்து கோபமாக வெளியே செல்ல ஒரு பக்கம் அவன் திடீரென நடந்து கொள்ளும் ஆக்ரோஷத்தில் பதட்டம் வந்தாலும் இன்னொரு பக்கம் அவன் மது அருந்தாததில் ‘ஹப்பாடா..’ என்றிருந்து. பாபிக்கு..

பாபி காரை செலுத்த உணர்ச்சிகள் துடைத்தெறிந்த முகத்துடன் வெளியில் வேடிக்க பார்த்தவாறு ரோஹன் வர பாபியே பேச்சை ஆரம்பித்தான்.

     “ரோக்கி நீ ஐரா கம்பனீஸ்ஸோட எம்.டி பத்தி கேள்விபட்டிருக்கியா.. ஆரம்பத்துல மிஸ்டர்.சர்வேந்திரன கம்பனி மேனேஜ்மென்ட்ட பார்த்துக்க மட்டும் தான் நியமிச்சாங்கன்னு ஆறு வருஷத்துக்கு முன்னாடி செய்தி வந்தது.. ஆனா பல வருஷத்துக்கு முன்னாடியே  மிஸ்.மஹேஷ்வரிக்கும் அவருக்கும் தொடர்பு இருந்திருக்கு இன்ஃபேக்ட் அவங்களுக்கு குழந்தை கூட இருக்குன்னு நியூஸ்ல சொல்லியிருக்காங்க.. நீ கேள்விப்பட்டிருக்கியா..” என்று பாபி கேட்க ரோஹனிடமோ பதிலே இல்லை.

‘க்கும்.. இவன் பேசிட்டாலும்..’ என்று நொந்துக் கொண்டவன்,
     “இப்போ அந்த குழந்தை தான் ஐரா கம்பனீஸ்க்கு எல்லாமே பட் இதுவரைக்கும் அது யாருன்னு எந்த மீடியாவுக்கும் தெரியாது.. ரொம்பவே சீக்ரெட்டா இருக்காங்க.. ஆனா இன்னைக்கு ஃபங்ஷன்க்கு வர போறாங்களாம்.. முதல்தடவை மொத்த மீடியா முன்னாடி.. எவ்வளவு பெரிய கம்பனி ஏகப்பட்ட நாட்டுல அவங்களோட ப்ரான்ச், ஹோட்டல்ஸ்னு இதெல்லாம் சமாளிக்க சாதாரணமா முடியாது.. அவங்கள இன்னைக்கு பார்த்தே ஆகனும்..” என்று பாபி பேசிக்கொண்டே போக,

ரோஹனுக்கோ அவன் வார்த்தைகள் காதிலே விழவில்லை.  அவன் ஏதோ ஒரு யோசனையில் இருக்க என்றும் இல்லாமல் அவன் மனம் படபடவென அடித்துக்கொண்டது.

இருவரும் விழா நடக்கும் அரங்கத்திற்கு வந்து இறங்க அதன் பிரம்மாண்டத்தில் இருவருமே வியப்பாக பார்த்தனர். பாதுகாப்பக்கு காவலர்கள் பொலிஸ் அதிகாரிகள் சூழ இருக்க பல தொழிலதிபர்கள் முக்கிய நபர்கள் வர இருப்பதால் பாதுகாப்பு பலமாகவே இருந்தது. உள்ளே வருபவர்களை முழுதாக அலசி ஆராய்ந்தே அனுமதிக்க அங்கு தமக்குரிய இருக்கையில் அமர்ந்த பாபியும் ரோஹனும் சுற்றி பார்வையை சுழற்றினர்.

அவர்கள் பத்திரிகைகளில் வலைத்தளங்களில் பார்த்த கேள்விபட்ட பல பேர் தங்களுக்கான இருக்கையில் கம்பீரமாக அமர்ந்திருக்க இன்னும் சில திரைப்பட நடிகர்கள் கூட வருகை தந்திருந்தனர்.

    “ரோக்கி சூப்பரா இருக்குல்ல.. அதுவும் எத்தனை செக்யூரிட்டி.. பாதுகாப்பு பலமா தான் வச்சிருக்காங்கய்யா..” என்று பாபி சுற்றி முற்றி பார்த்தவாறு சொல்ல,

     “எல்லாம் ஓகே டா ஆனா ஒன்னே ஒன்னு தான் குறை..” என்ற ரோஹனின் பேச்சில் அவனை புரியாமல் பாபி பார்க்க, மேசையிலிருந்த சில உணவு பதார்த்தத்தையும் தண்ணீர் க்ளாசையும் காட்டியவன்,
     “இவ்வளவு பெரிய ஃபங்ஷன்னு என்ன பிரயோஜனம்.. குடிக்கிறதுக்கு கிக்கா சரக்கு வைக்காம வோட்டர் வச்சிருக்காங்க..” என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்து ரோஹன் சொல்ல,

     “ஏன் ஃபங்ஷன் ஆரம்பிக்க முதலே நல்லா மூக்கு முட்ட குடிச்சி மட்டையாகுறதுக்கா..” என்று கடிந்துக்கொண்ட பாபி ‘குடிக்காரப்பயலே உன்னெல்லாம் திருத்த முடியாது.. திருத்தவே முடியாது..’ என்று கடுப்பாக  முமுமுணுத்துக்கொண்டான்.

சரியாக விழாவும் ஆரம்பமாக பல பேருக்கு பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு பல சாதனையாளர்கள் மேடையில் பாராட்டப்பட அவர்களின் ஊக்குவிப்பான சிற்றுரைகளும் அந்த விழாவை மேலும் மெருகூட்டியது.

ரோஹனோ எதையுமே கண்டுக்காது தன் ஃபோனில் முகத்தை புதைத்திருக்க அடுத்த சிறிது நேரத்திலே அந்த விருது அறிவிக்கப்பட மொத்த பேரின் பார்வையும் மேடையிலேயே நிலைத்திருந்தது.

“சிறந்த தொழிலதிபருக்கான விருது..” என்று விருதுக்கான தலைப்பு அறிவிக்கப்பட ஒவ்வொரு தடவையும் அதை பல பேர் தட்டிச்செல்ல இந்த தடவை அதை தட்டிச்சென்ற தொழிலதிபரின் வருகைக்காக அவர்கள் காத்திருக்க சரியாக அந்த அரங்கத்தின் பிரம்மாண்ட கதவுகள் திறக்கப்பட்டு ஒரு சலசலப்பு உருவானது.

  ” த அவார்ட் கோஸ் டூ மிஸ்.மஹேஷ்வரி மெனேஜிங் டிரெக்டர் ஆஃப் ஐரா கம்பனீஸ்.. ” என்று பெயர் அறிவிக்கப்பட இப்போது எல்லார் பார்வையும் வாசல்புறம் திரும்பியது.

ரோஹனோ ஃபோனை நோண்டிக்கொண்டிருக்க திடீரென தன் பின்னால் கேட்ட வியப்பான பேச்சுகளிலும் ஆச்சரியக் குரல்களிலும் நிமிர்ந்தவன் தன்னை மீறி சலசலப்பு வந்த திசையை நோக்க ஒருநொடி அவன் பார்ப்பதை அவனாலே நம்ப முடியவில்லை. பாபியும் அதே அதிர்ச்சியில் திரும்பி “ரோக்கி..” என்று கத்தியவாறு ரோஹனை தான் பார்த்தான்.

ரோஹனை பாபி உலுக்க ரோஹனின் இதழ்களோ “மாயா..” என்று அங்கு வந்துக் கொண்டிருந்தவளை பார்த்தவாறு முணுமுணுத்தது. சிவப்பு நிற லேடிகட் ஷர்ட் கருப்பு பேன்ட்டில் முன் இருந்த துள்ளல் நடை மறைந்து கம்பீரமாக கண்களில் ஒரு தீர்க்கத்துடன் மாயா வர ரோஹனும் பாபியும் அதிர்ச்சியில் உறைந்தேவிட்டனர்.

முகத்திலிருந்த குழந்தை தனம் மறைந்து ஐரா சாம்ராஜ்யத்தை கட்டியாழும் பெண் சிங்கம் போல் அவள் வேகநடையிட்டு வர அவள் முகமோ இறுகிப் போயிருந்தது. தன் பக்கத்திலிருந்த பிஏவிடம் ஏதோ சொல்லியவாறு தன் முன்னால் வந்து தன்னை வாழ்த்துவோரின் வாழ்த்துக்களை கண்ணுக்கு எட்டாத புன்னகையுடன் ஏற்றவாறு நேரடியாக அவள் மேடையில் ஏறி விருதை வாங்கிக்கொண்டு நிமிர்ந்து நிற்க ‘இது மாயா தானா..’ என்று கண்ணை கசக்கிவிட்டு  உற்று பார்த்தனர் இரு ஆண்களும்.

மைக்கை இறுகிப்பிடித்தவள் அந்த அறிவிப்பாளர் புறம் திரும்பி,
     “ஒரு சின்ன திருத்தம்.. மாயா மஹேஷ்வரி..” என்று ஆங்கிலத்தில் கூறி தன் பெயரை அவள் அழுத்தி சொல்ல  எல்லாரும் அவள் நிமிர்வில் வியந்து தான் போனர்.   

    “ஹெலோ லேடீஸ் என்ட் ஜென்ட்டில்மென் ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் தங்க் யூ சோ மச்.. என்னடா இத்தனைநாளா மீடியா முன்னாடி வராத ஐரா கம்பனீஸ்ஸோட எம்.டி இன்னைக்கு வந்ததுக்கான காரணத்தை நீங்க யோசிக்கலாம்.. வர வேண்டிய நேரமும் கட்டாயமும் வந்திருக்கு.. இந்த காப்ரேட் உலகத்துல ஐரா அசைக்க முடியாத ஒரு இடத்துல இருக்கு.. ஒருசில நாடுகளை தவிர எல்லா இடத்துலையும் ஐரா கம்பனீஸ்ஸோட ஒரு சின்ன தடையமாச்சும் இருக்கும்.. என்ட் நா இந்த மேடையில பல மீடியா முன்னாடி ஒரு முக்கியமான அறிவிப்பை கொடுக்க ஆர்வமா இருக்கேன்.. இதுவரைக்கும் ஐரா கோஸ்மெடிக்ஸ்ல லிப்ஸ்டிக் மெனுஃபெக்ச்சர் பண்ணது கிடையாது.. முதல்தடவை ஐராவோட லிப்ஸ்டிக் கூடிய சீக்கிரம் லான்ச் ஆக போகுது.. ” என்று ஆங்கிலத்தில் அவள் சொல்ல மொத்த பேருமே கை தட்டல்களினூடே தம் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதை ஏற்றவள் தன் கையிலிருந்த விருதை பார்த்தவாறு,
     “என்ட் என் அம்மா மிஸ்.மஹேஷ்வரியும் என் வயசுல இதே விருதை வாங்கியிருக்காங்க.. ஆஃப்கோர்ஸ் இதுக்கு முழு காரணமுமே எங்களோட வர்க்கர்ஸ் என்ட் கஸ்டமர்ஸ் தான்.. அவங்க இல்லைன்னா வீ ஆர் நத்திங்..  உழைப்பாளர்களோட உழைப்பும் ஒவ்வொரு ப்ரோடெக்ட்ஸ்ஸ வாங்குற கஸ்டமர்ஸ்ஸோட விருப்பம் தான் ஒவ்வொரு பிஸ்னஸ்க்கும் ஆணித்தரமே.. ஐ அம் ப்ரௌட் டூ சே தட் ஐ ஹேவ் பெஸ்ட் வர்க்கர்ஸ்.. தேங்க் யூ ஆல்.. தேங்க் யூ..” என்றுவிட்டு மேடையிலிருந்து இறங்க மொத்த அரங்கமுமே கை தட்டலில் நிரம்பியிருந்தது.

பாபியோ ‘இது கனவு தானோ..’ என்ற ரீதியில் தன்னை தானே கிள்ளி பார்த்து திகைக்க ரோஹனோ முதலில் அவளை பல வருடங்கள் கழித்து இப்படி ஒரு அவதாரத்தில் பார்த்ததில் அதிர்ந்தாலும் பின் சலனமில்லாமல் அழுத்தமாகவே அவளை பார்த்திருந்தான்.

விருது வழங்கும் விழா முடிந்து அதே அரங்கத்தின் பின்னால் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்க அங்கு சென்ற பாபி மாயாவை கண்களை சுழலவிட்டு தேட ரோஹனோ அங்கிருக்கும் மது போத்தல்களை ஆராய்வதையே வேலையாக பார்த்திருந்தான்.

    “டேய் ரோக்கி என்னால அதிர்ச்சியில இருந்து வெளில வரவே முடியலடா.. நிஜமாவே அது மாயா தானா.. அவ தான் ஐராவோட கம்பனீஸ்ஸோட எம்.டியா.. அப்போ நம்ம கூட கொலேஜ்ல படிச்சதெல்லாம்..” பாபி புரியாமல் கேட்க, ரோஹனோ சட்டென்று,
      “நம்ம தலைல நல்லா மிளகாய் அரைச்சிருக்கா..” என்று சொல்ல,

    “ஷட் அப் ரோக்கி அவ நம்மகிட்ட சொல்லாம போனதுல எனக்கு கோபம் இருக்கு தான் ஆனா அவ ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நம்மள விட்டு போயிருக்கா.. அதுவும் அவ பேருல பாதி தான் நமக்கே தெரிஞ்சிருக்கு.. அம்மா பெயரையே மகளுக்கு வச்சிருக்காங்க.. அவ அம்மா இறந்ததை தாங்க முடியாம தனிமைய போக்கிக்க பெங்ளூர் வந்ததா சொன்னா.. ” என்று இழுத்து யோசித்தவன்,
     “அட ஆமால்ல மாயா வரதுக்கு வன் மன்த் முன்னாடி தான் மிஸ்.மஹேஷ்வரி இறந்தாங்க.. ஆனா எவ்வளவு சாதாரணமா இருந்திருக்கா..அவக்கிட்ட இருக்க பணத்துக்கு ஒரு ஹோஸ்டலையே விலைக்கு வாங்கியிருக்கலாமே..” என்று பாபி சொல்ல இப்போது பாபி சொன்ன சில விஷயங்கள் ரோஹனுக்கே புதிதாக தான் இருந்தது.

   “ஆனாலும் பாருடா அவ கண்ணு முன்னாடி நாம இருந்தும் நம்மள கண்டுக்கவே இல்லை.. என்னை விடு உன்னை கூட அவ பொருட்டாவே மதிக்கலன்னா பாரேன்..” பாபி கேலியாக சொல்ல சரியாக “ஹாய் பாய்ஸ்..” என்ற மாயாவின் துள்ளலான குரலில் இருவருமே திரும்பி பார்த்தனர்.

இருவரையும் துளைத்தெடுக்கும் பார்வையில் மாயா பார்த்திருக்க ரோஹனோ அவளையே ஆழ்ந்து நோக்கினான்.  பாபிக்கொ மாயாவின் அந்நியத்தனமான நடவடிக்கையில் சந்தேகம் வர மாயாவை நோக்கி ஒரு அடி முன்னே வைத்து செல்ல போனவன் சரியாக மாயாவின் பிஏவின் பேச்சில் அதிர்ந்து நின்றான்.

    “மேம் இவங்க தான் ஆர்.டீ.எஸ் கன்ஸ்ட்ரக்ஷனோட மெனேஜிங் டிரெக்டர்ஸ் ஃப்ரொம் இந்தியா.. பெங்ளூர்ல நம்ம புது ப்ரான்ச்கான கன்ஸ்ட்ரஷன் வர்க் இவங்க கம்பனிக்கு தான் கொடுத்திருக்கோம்.. ” என்று மாயாவின் பிஏ அலைஸ் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்த,

மாயாவோட சிறு புன்னகையுடன்,
     “ஹெலோ மிஸ்டர்.ரோஹன் சைதன்யா.. சோ நைஸ் டூ மீட் யூ..” என்று சொல்ல ரோஹனின் கருமணிகள் விரிய அவளை அதிர்ச்சியாக நோக்கினான்.

காதல்போதை?
—————————————————————–

      அஞ்சு வருஷமான்னு ரொம்ப ஷாக் ஆகியிருப்பீங்க.. பட் அஞ்ச வருஷம் நடந்ததை நா பொறுமையா உங்களுக்கு ஒவ்வொரு எபில சொல்லியிருந்தா உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துரும்.. சோ அதையெல்லாம் நம்ம இடையில நம்ம ஹீரோ ஹீரோயின் சொல்ற மாதிரி வச்சிக்கலாம்.. 

And உங்க ஆதரவுக்கு கருத்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நட்பூஸ்..✌

-ZAKI?

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!