காதல்போதை27?
காதல்போதை27?
“ஹெலோ மிஸ்டர்.ரோஹன் சைதன்யா.. நைஸ் டூ மீட் யூ..” என்று மாயா புன்னகையுடன் கை நீட்ட, சற்று உள்ளுக்குள் அதிர்ந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்,
“ஹாய் மிஸ்.மாயா.. நைஸ் டூ மீட் யூ டூ..” என்று அவளுடன் ரோஹன் கை குலுக்க பல வருடங்கள் கழித்த மாயாவின் ஸ்பரிசம் ஏனோ அவன் உடலை சிலிர்க்க தான் செய்தது.
அவளோ பாபியின் புறம் திரும்பி “ஹாய் மிஸ்டர்.தருண்..” என்றவாறு கை நீட்ட அவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. குழப்பத்துடனே அவளுடன் கை குலுக்கியவன் அவளை புருவத்தை நெறித்தவாறு அதிர்ந்து நோக்க,
“யூ காய்ஸ் க்னோ பெட்டர் அபௌட் ஐரா.. இந்த புது ப்ரான்ச் என் லைஃப்ல ரொம்ப முக்கியம்.. த்ரீ மன்த்ஸ் முன்னாடி நீங்க எஸ்.ஆர் கம்பனிக்காக பண்ண மால் ப்ரோஜெக்ட் சக்ஸஸ் ஆகிச்சு.. என்னை கூட அந்த கன்ஸ்ட்ரக்ஷன் டிஸைன் ரொம்ப அட்ராக்ட் பண்ணிச்சு.. பெரிய கம்பனீஸ்க்கு கொடுக்குறதை விட உங்கள மாதிரி வளர்ந்து வர்ற கம்பனீஸ்க்கு கொடுக்குறது உங்களுக்கும் சரி இது மாதிரியான கம்பனீஸ்க்கும் சரி ரொம்ப மோடிவேட் ஆ இருக்கும்.. அதான் லாஸ்ட் மன்த் மும்பைல நடந்த பிஸ்னஸ் அவார்ட் ஃபங்ஷன்ல உங்க கம்பனிக்கு கிடைச்ச அவார்ட் பத்தி கேள்விப்பட்டேன் உடனே எங்க ப்ரோஜெக்ட்காக உங்க கம்பனிய ஃபிக்ஸ் பண்ணிட்டேன்..
எப்போவுமே இளைஞர்கள்கிட்ட வேகம் ரொம்பவே அதிகமா இருக்கும்.. சோ, ஐராவோட வர்க்கயும் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஃபினிஷ் பண்ணுங்க.. என்ட் வித்இன் டென் டேய்ஸ்ல ஐ வில் பீ இன் இந்தியா.. நா வந்த அப்றம் கான்ட்ரேக்ட் சைன் பண்ணிக்கலாம்.. அதுக்கப்றம் உங்க கன்ஸ்ட்ரக்ஷன் வேலைய ஆரம்பிங்க..” என்று மாயா பேசிமுடித்து அவர்களின் பதிலுக்காக இருவரின் முகத்தை மாறி மாறி பார்க்க,
ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட ரோஹனும் பாபியும்,
“ஷுவர் மிஸ்.மாயா..” என்று ஒருசேர சொல்ல, புன்னகைத்தவள்,
“பெஸ் ஆஃப் லக்..” என்று சொல்லும் போது சரியாக “மாயூமா..” என்ற குரலில் சட்டென திரும்பியவள் எதிரில் நின்றிருந்தவரை பார்த்து “டாட்..” என்று அழைக்க ரோஹனுக்கொ உச்சகட்ட அதிர்ச்சி..
‘அப்பாவா..’ என்று மனதில் யோசித்தவாறு அங்கு நின்றிருந்தவரை ரோஹன் உறுத்து விழிக்க அங்கே நின்றிருந்த சர்வேந்திரனும் ரோஹன் பாபியை தான் கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தார்.
“டேய் மாயாவுக்கு அப்பா இல்லைல்ல..” என்று பாபி ரோஹன் காதில் கிசுகிசுக்க, அவனை ‘ஷ்’ என்று அடக்கிய ரோஹன் சர்வேந்திரனை துளைத்தெடுக்கும் பார்வை பார்க்க அவரோ இவனை கண்டும் காணாதது போல்,
“மாயூ டைம் ஆச்சு இதுக்கப்றம் நீ இங்க இருக்குறது சேஃப் கிடையாது..” என்று சொல்லியவாறு மாயாவை அழைத்துச் செல்ல, அவருடன் முன்னே நடந்தவள் திரும்பி ரோஹனை பார்க்க அவனும் அவளை தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஹோட்டல் அறையில்,
பாபி உடையை கூட மாற்றாது அப்படியே தலையை தாங்கியவாறு சோஃபாவில் அமர்ந்திருக்க குளித்து உடை மாற்றி வந்த ரோஹன் அவனின் எதிரில் அமர்ந்தவாறு ஃபோனை நோண்ட ஆரம்பிக்க நிமிர்ந்து பார்த்த பாபியோ அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினான்.
ரோஹன் கண்டுக்காமல் இருந்ததில் மேலுல் கோபம் எகிற ஃபோனை பிடுங்கி தூக்கி போட்டு உக்கிரமாக அவன் முன் பாபி நிற்க அவனின் செயலில் எரிச்சலான ரோஹன் ‘ச்சே’ என்று சலித்தவாறு தன் முழு உயரத்திற்கு எழுந்து மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்த்தான்.
“நீ மனுஷனாடா இல்ல மனுஷனான்னு கேக்குறேன்.. உன் மனசுல அப்படி என்ன தான்டா இருக்கு.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருந்தவ அடுத்தவங்க பொறாமை படுற அளவுக்கு உன்னை நேசிச்சவ மாயா.. அவ போனப்போ கூட ஃபீல் பண்ணல்ல நீ.. இப்போ நாங்களே எதிர்ப்பார்க்காத மாதிரி எதிர்ல நிக்கிறா.. ஆனா அவளுக்கு நாங்க யாருன்னு கூட தெரியல.. இப்போவும் நீ அவள பத்தி யோசிக்க மாட்டல்ல.. யூ டோன்ட் டிசர்வ் டு ஹெர் லவ் ரோக்கி..” அழுத்தமாக அதே சமயம் கோபமாக பாபி சொல்ல,
அவனை வெறித்து பார்த்த ரோஹன் எதுவும் பேசாது நகர போக, அவன் முன் சென்று மார்பில் கை வைத்து சண்டையிடுவது போல் பாபி நிற்க,
“இப்போ நா என்ன பண்ணனும்..” என்று அலட்சியமாக கேட்ட ரோஹனை பார்த்த பாபிக்கு இவனை என்ன செய்தால் தகும் என்றிருந்தது.
“ரோக்கி மாயாவுக்கு அப்பா இல்ல ஆனா இத்தனை வருஷம் கழிச்சி இப்போ இந்த சர்வேந்திரன் மாயாவுக்கு அப்பாவா வந்து நிக்கிறான்.. எனக்கு ஏதோ தப்பா தோணுது அதுவும் மாயாவுக்கு நம்மள நியாபகம் கூட இல்லை.. ஐ அம் கன்ஃப்யூஸ்ட்..” என்று பாபி தலையை பிய்த்துக்கொள்ள,
உதட்டை பிதுக்கி ‘ச்சு.. ச்சு..ச்சு..’ என்று உச்சுக்கொட்டிய ரோஹன் எப்போதும் போல் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை பற்ற வைத்து ஊதி தள்ளியவாறு ,
“ஓஹோ பாபி உன் பேபி உன்ன மறந்துட்டான்னு கவலை படுறியா.. சோ சேட்..” என்று கேலியாக கேட்டுக்கொண்டு நடக்க,
“அட ச்சீ பே.. உன்கிட்ட போய் புலம்பினேன் பாரு என்னை சொல்லனும்.. உன்னை போயா அவ துரத்தி துரத்தி லவ் பண்ணா.. நிஜமாவே அவ நம்மள மறந்துட்டா ரோக்கி ஆனா நீ இப்போவும் ச்சே..” என்று பாபி சலித்துக்கொள்ள, அதையெல்லாம் காதில் வாங்காதது போல் தன் அறைக்குள் நுழைந்தான் ரோஹன்.
பத்து நாட்கள் கழித்து,
பெங்ளூரில்,
காலை,
கோலிங்பெல் சத்தத்தில் கதவை திறந்த பாபி எதிரே நின்றிருந்த சஞ்சய்யை பார்த்துவிட்டு சலித்தவாறு திரும்பி செல்ல முகம் சிவந்து உச்சகட்ட கோபத்தில் நின்றிருந்தவன் அவன் உதாசீனத்தில் மேலும் காண்டாகி பாபியின் முதுகிலே ஒன்று போட “ஏன்டா..” என்றவாறு பாவம் போல் முதுகை தேய்த்துவிட்டான் பாபி.
“கிறுக்குப்பயலே இன்னும் டூ ஹவர்ஸ்ல ஐராவோட எம்.டி மிஸ்.மாயா மஹேஷ்வரி அதாவது நம்ம மாயா வர்றா.. மை தங்கச்சிமா.. ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. எத்தனை வருஷமாச்சு அவள மறுபடியும் பார்க்க.. ஆனா நீ பொறுப்பே இல்லாம ரெடி ஆகாம நின்னுகிட்டு இருக்க..” என்று கத்தியவாறு சுற்றி முற்றி பார்த்த சஞ்சய்,
“எங்க அந்த மொடக்குடிகாரன்.. நேத்து ராத்திரியும் நல்லா உள்ள இறக்கி மட்டையாகிட்டானா.. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு..” என்று பல்லை கடிக்க,
பாபியோ மனதில், ‘அய்யோ பேபி தான் ஐராவோட எம்.டின்னு தெரிஞ்சதுல இருந்து இவன் ரொம்ப பண்றானே.. இதுல அவளுக்கு எதுவுமே நியாபகம் இல்லைன்னு மட்டும் தெரிஞ்சா..’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே சஞ்சய்யோ ‘ஆஆ..’ என்று வாயை பிளந்த வண்ணம் பாபியின் பின்னால் பார்த்தான்.
அவன் ஆச்சரியப் பார்வையை பார்த்த பாபி அவன் பார்வை சென்ற திசையை பார்க்க அவன் கண்களும் சாரசர் போல் விரிந்துக் கொண்டது.
அங்கே ரோஹன் அலுவலக ஃபைல் ஒன்றை புரட்டிக்கொண்டு கருப்புநிற கோட் சூட்டில் நேர்த்தியாக இருவரின் முன் வந்து நிற்க, மற்ற இரு ஆண்களுமே விழிவிரித்து அவன் தோற்றத்தை பார்த்தனர். இதுவரை கம்பனி ஆரம்பித்த இந்த மூன்று வருடத்தில் கம்பனிக்கு செல்வது போலவா நம்ம ஹீரோ செல்வான். முன் இரண்டு மூன்று பட்டன்களை திறந்து சாதாரண ஷர்ட்டில் ஒரு பாக்கெட்டில் சிகரெட் இருக்க அல்கொஹோல் ஹிப் ஃப்ளாஸ்கை(Alcohol hip flask) குடித்த வண்ணமே வரும் அவனை பார்த்திருந்தவர்கள் திடீரென இப்படி ஒரு அவதாரத்தில் அவன் வருவதை பார்த்ததும் ஆச்சரியப்பட தானே செய்வார்கள்.
பாபியும் சஞ்சய்யும் அதே போஸில் நிற்க அவர்கள் முன் ரோஹன் சொடக்கிடவுமே தூக்கத்திலிருந்து விழிப்பது போல் இருவரும் முழித்ததில் மென்மையாக சிரித்தவன் வெளியேறி இருக்க இத்தனை நாள் இறுகிய தோற்றமாக இருந்தவன் இன்று சிரித்ததில் நெஞ்சு வலியே வந்துவிட்டது இருவருக்கும்.
அதன்பிறகு பாபியும் தயாராகி மூவருமே அலுவலகத்திற்கு செல்ல அங்கு இவர்களின் காரியதரிசி ஒப்பந்தத்திற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே தயார் செய்திருக்க இப்போது மாயாவை எதிர்ப்பார்த்து தான் மூவரும் இருந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்திலே க்ரீச் என்ற சத்தத்தில் புழுதி பறக்க வரிசையாக மூன்று கார்கள் வந்து நின்றது. நடுவிலிருந்த காரிலிருந்து வெள்ளை ஷர்ட்டுக்கு மேல் சிவப்பு நிற ப்ளேசரில் கம்பீரமாக மாயா இறங்க அவள் பின்னே கருப்பு சீருடை அணிந்த பாதுகாவலர்கள் அவள் பாதுகாப்புக்கு நிற்க “ஸ்டே ஹியர்..” என்று மாயா அவர்களை பார்த்து சொன்னதும் காருக்கு பக்கத்திலே நின்றுக் கொண்டனர்.
ஆர்.டீ.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் என்று பெயர் பலகை தாங்கிய கட்டிடத்துக்குள் தன் பிஏ அலைஸ்ஸுடன் வேகநடையிட்டு மாயா நுழைந்ததை பார்த்துக் கொண்டிருந்த ரோஹனோ இரு புருவங்களை உயர்த்தி ஏளனமாக புன்னகைக்க பாபியும் சஞ்சய்யும் அவள் வந்ததை அறிந்து அவளை வரவேற்க ஓடிவிட்டனர்.
மாயா வரவும் அங்கு வேலை செய்பவர்கள் கண்கள் விரிய “ஹேய் இது ஐரா கம்பனீஸ் எம்.டி மிஸ்.மஹேஷ்வரி தானே..” என்று கேட்டவாறே மாயாவை நெருங்கி அவளுக்கு கை கொடுக்க அவளுக்கோ ஒருவித தர்ம சங்கடமாகிப் போனது. பாபியும் சஞ்சய்யும் வந்ததுமே கூட்டம் விலக அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு,
“ஹாய் மிஸ்.மாயா.. ஹவ் இஸ் பெங்ளூர்..” என்று பாபி கேட்க,
மாயாவை கண்டதும் தங்கச்சிமா என்று பேச வந்த சஞ்சய் பாபியின் பேச்சில் அப்படியே நின்று அவனை புரியாது பார்த்தான். பாபியும் அவன் அவசரப்பட்டு பேசிவிடக் கூடாது என்று தானே பேசினான்..
“ஃபர்ஸ்ட் டைம் இந்தியாவுக்கு வந்திருக்கேன்.. பட் ரொம்ப பழக்கப்பட்ட இடம் மாதிரி இருக்கு.. ” என்று சிரித்துக் கொண்டு கூறியவாறு அவளும் அவர்களுடன் கன்ஃப்ரென்ஸ் ஹோலை நோக்கி நடக்க சஞ்சய் தான் நடப்பது புரியாமல் பாபியை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனநிலையை புரிந்தவன் போல் பாபியும் ‘சொல்றேன்..’ என்று கண்களாலே உணர்த்திவிட்டு ஹோலுக்குள் நுழைய அங்கு ஏற்கனவே இருக்கையின் பிடியில் ஒற்றை கையை ஊன்றியவாறு மாயாவையே துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன்.
மாயாவோ ரோஹனை பார்த்துவிட்டு பாபியை கேள்வியாக நோக்க அவனோ கண்களாலே ரோஹனை முறைத்து தள்ளினான். அதுவும் ரோஹனின் பார்வை மாயாவை என்னவோ செய்ய தன்னை சமாளித்தவாறு தனக்கான இருக்கையில் அமர்ந்ததும் ஒப்பந்தத்திற்கான பத்திரங்கள் வைக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது..
“இந்த கன்ஸ்ட்ரக்ஷன் டிஸைன் பத்தி சில விஷயங்களை பேசி தீர்க்க வேண்டியிருக்கு.. சோ, நாளைக்கே டின்னர் மீடிங் அர்ரேன்ஜ் பண்ணி பேசிக்கலாம்.. பிகோஸ் என்னோட கம்பனியோட சின்ன நுணுக்கங்கள்ல இருந்து என்னோட முடிவா தான் இருக்கனும் என்ட் என்னோட டாட் மிஸ்டர்.சர்வேந்திரன் கூட இந்த மீடிங் எக்ஸ்பெக்ட் பன்றாரு.. மீடிங்கான ஏற்பாடுகளை என்னோட பிஏ பார்த்துப்பாங்க ஏன்னா என்னோட சேஃப்டி ரொம்பவே முக்கியம்.. ” என்றவள் எழுந்து நின்று,
“தேங்க் யூ சோ மச்.. என்ட் சீ யூ..” என்றவாறு மாயா நகர போக,
“மிஸ்.மாயா..” என்று அவளை தடுத்த பாபி,
“எங்க ஓஃபீஸ்க்கு வந்தவங்களை நாங்க வெறும் வயித்தோட அனுப்ப மாட்டோம்.. ஏதாச்சும் சாப்பிட்டுட்டு தான் நீங்க போகனும்..” என்று சொல்ல, ரோஹனோ இருபுருவங்களையும் உயர்த்தி ‘அப்படியா’ என்ற ரீதியில் பார்க்க, சஞ்சய் தான் ஒன்றும் புரியாமல் தலையிலே கை வைத்துக்கொண்டான்.
இதில் மாயாவோ அவர்களை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்துவிட்டு எதுவும் பேசாது அமர்ந்தவாறு அலைஸ்ஸையும் அவள் பக்கத்தில் அமர சொல்ல, அலைஸ்ஸின் “இட்ஸ் ஓகே மேம்..” என்ற பதிலில் அவளை முறைத்தாள் மாயா.
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்னை மேம்னு கூப்பிடாத பெயர் சொல்லி கூப்பிடுன்னு..” என்று ஆங்கிலத்தில் அவளுக்கு திட்டியவள் மற்றவர்கள் புறம் திரும்பி,
“திஸ் இஸ் அலைஸ் மை பிஏ.. பட் அப்படி சொல்றதை விட என் பெஸ்ட் ஃப்ரென்ட்டுன்னு சொல்லலாம்..” என்று மாயா சிரித்தவாறு சொல்ல அப்போது தான் சஞ்சய் அலைஸ்ஸை கவனித்தான்.
குட்டை பாவாடை லேடிகட் பளீர் வெள்ளை நிற ஷர்ட்டில் நிமிர்வாக அதேநேரம் இறுகிய முகமாக அக்மார்க் மேற்கத்திய நாட்டு பெண் போலிருந்த அலைஸ்ஸை சஞ்சய் அப்பட்டமாக சைட் அடிக்க அவன் பார்வையை உணர்ந்தவள் சஞ்சய்யின் புறம் திரும்பி ஆழ்ந்து நோக்கினாள். அவனின் குறும்பு குணம் தலைதூக்க அலைஸ்ஸை பார்த்து சஞ்சய் ஒற்றை கண்ணை சிமிட்டியதில் அவள் இறுகிய முகம் மேலும் இறுக அவனை முறைத்தவள் திரும்பிக்கொள்ள சஞ்சய்க்கோ ஏனோ அவளிடத்தில் சுவாரஸ்யம் தோன்றியது..
மாயா அன்று சஞ்சய் ரோஷினியை பிரிந்த போது சொன்ன வசனம் வேறு நினைவில் வர ‘நம்ம தங்கச்சிமா அன்னைக்கு சொன்ன மாதிரியே நமக்கான தேவதைய வெளியூர்ல இருந்து பார்ஸல் பண்ணி கொண்டு வந்திருக்கா.. யூ க்ரேட் மா..’ என்று உள்ளுக்குள் சஞ்சய் குஷியாக நினைத்துக்கொள்ள அவன் தங்கச்சிமாவோ தன் கையிலிருந்த குளிர்பானத்தை அருந்தியவாறு தன் எதிரே இருந்த ரோஹனை தான் அளவிட்டாள்.
வளர்ந்து இருந்த சிகையை ரப்பர் பேன்ட்டுக்குள் அடக்கி முகத்தை மறைக்குமளவுக்கு தாடியுடன் இருந்தவனை பார்த்தவள் ‘இந்த தாடிய ட்ரிம் பண்ணா இன்னும் நல்லா இருக்குமே..’ என்று நினைத்துவிட்ட பின்னரே தான் யோசிப்பதை உணர்ந்து அவனை அதிர்ந்து நோக்க, மாயாவை கண்டுக்காதது போல் ஃபோனில் முகம் புதைத்திருந்தவன் சட்டென நிமிர்ந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்று கேட்க அதில் தடுமாறியவள் இல்லை என்று தலையாட்டியவாறு தலையை குனிந்துக்கொள்ள ரோஹனோ ஏளனமாக இதழை வளைத்தான்.
இங்கு மாயாவுக்கு தான் நிலைக்கொள்ளவே முடியவில்லை. அவளின் தடுமாற்றத்தை கவனித்த அலைஸ் அவள் காதில் ஏதோ கிசுகிசுக்க தலையாட்டியவள் தன் தடுமாற்றத்தை மறைத்தபடி அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியேற போக சரியாக கதவை திறந்துக்கொண்டு கையில் சில கோப்புகளுடன் வந்தவள் மேலேயே மோதி விட்டாள்.
மாயா மோதியதில் எதிரில் வந்தவள் கையில் வைத்திருந்த பத்திரங்கள் கீழே விழுந்துவிட மானசீகமாக தலையிலடித்துக் கொண்ட மாயா, “சோரி. சோரி..” என்றவாறு குனிந்து அந்த பத்திரங்களை எடுக்க உதவி செய்ய, அந்த பழக்கப்பட்ட குரலில் சட்டென நிமிர்ந்த கீர்த்தி எதிரே இருந்த மாயாவை பார்த்து கண்கலங்கி உச்சகட்ட சந்தோஷத்தில் “ஜிலே..” என்று அழைக்க வர,
அதற்குள் ரோஹனோ,
“மிஸ்.மாயா திஸ் இஸ் கீர்த்தி.. இங்க பிஏவா இருக்காங்க..” என்று அறிமுகப்படுத்த, எனக்கும் மாயாவுக்கும் எதற்கு அறிமுகம் என்று நினைத்தவாறு கீர்த்தி ரோஹனை கேள்வியாக பார்க்க அவன் கண்கள் காட்டிய பாவனையில் அவளுக்கோ ஒன்றுமே புரியவில்லை..
“ஹாய் மிஸ்.கீர்த்தி..” என்று மாயா கை நீட்ட, கீர்த்தியோ என்ன நடக்கிறது ஏது நடக்கின்றது என்று புரியாமலே,
“ஹெ.. ஹெலோ மிஸ்.மாயா..” என்று தடுமாற,
மென்மையாக சிரித்த மாயாவிற்கு இயல்பு குணமான குறும்பு தலைதூக்க,
“எதுக்கு இவ்வளவு பதட்டம்.. நல்லா கொழுக்கு மொழுக்குன்னு டெடிபெயார் மாதிரி இருக்க கீர்த்தி.. சோ க்யூட்..” என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ள கீர்த்தியோ ‘ஆஆ’ வென வாயை பிளந்துக் கொண்டு பார்த்தாள்.
அலைஸ்ஸோ, ‘ஹ்ர்ம்.. ஹ்ர்ம்..’ என்று தொண்டையை செறும அவள்புறம் திரும்பிய மாயா சிரித்தவாறு வெளியேற, அவள் போனதும் தான் தாமதம் பாபியோ அடக்க முடியாமல் சிரித்து விட ரோஹனுக்கு கூட லேசாக புன்னகை எட்டிப் பார்த்தது.
கண்கலங்க வேகமாக அவர்கள் முன் வந்த கீர்த்தி,
“என்ன நடக்குது இங்க.. என் ஜிலேபிக்கு என்னாச்சு..” என்று பதட்டமாக கேட்க,
சிரிப்பை நிறுத்தியவர்கள் ஒருவித வேதனை தாங்கிய முகத்துடன் அவளை பார்க்க, பாபியோ,
“மாயாவுக்கு இப்போ எதுவுமே நியாபகம் இல்லை.. அவ விஷயத்துல எல்லாமே ரொம்ப குழப்பமா இருக்கு..” என்று சொல்ல,
முகம் வாடிய கீர்த்தி,
“அப்போ என் ஜிலேபி என்னை மறந்துட்டாளா.. என்னை விட்டு போக மாட்டேன்னு ப்ரோமிஸ் பண்ணா.. நீயூஸ்ல அவ தான் ஐரா கம்பனீஸ்ஸோட எம்.டின்னு தெரிஞ்சதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன்.. ஆனா..” என்று கீர்த்தி அழ தயாராக இப்போது மூவருக்குமே ஒருமாதிரி கலக்கமாக தான் இருந்தது.
“ரோக்கி மாயா உன்ன லவ் பண்ண மாதிரி எந்த பொண்ணாலையும் காதலிக்க முடியாது.. நிஜமாவே உனக்கு கஷ்டமா இல்லையா..” சஞ்சய் கேட்க, அவனோ எதுவும் பேசாது சலனமற்ற முகத்துடன் சஞ்சய்யை பார்த்திருந்தான்.
“யாரு இவனா.. சார் என்ன பண்ணாருன்னு தெரியுமா.. அன்னைக்கு லண்டன்ல சரக்கு போத்தல் கூடவே சுத்திகிட்டு இருந்தான். அடுத்த நாள் மோர்னிங் ஃப்ளைட்டை வச்சிகிட்டு ராத்திரி குடிச்சி மட்டையாகின இவன காலைல குளிப்பாட்டி ஃப்ளைட்ல ஏத்துறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகிட்டு.. ” என்று பாபி சலித்தவாறு சொல்லி முடிக்க,
ரோஹனோ கதவு வரை சென்றவன் நின்று திரும்பி,
“நாளைக்கு நைட் மிஸ்.மாயா மஹேஷ்வரி கூட டின்னர் மீடிங்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸை பாருங்க..” என்றுவிட்டு செல்ல,
“நிஜமாவே அவர் தான் மீட்டிங் வர்றதா சொல்லிட்டு போறாரா.. ஏன்னா இதுவரைக்கும் ரோக்கியண்ணா எந்த மீடிங்கும் நாம கூப்பிட்டாலே வர மாட்டாரே..” கீர்த்தி ஆச்சரியமாக கேட்க,
பாபியும் அதே யோசனையில் தான் மூடப்பட்ட கதவை பார்த்திருந்தான்.
சஞ்சய்யோ ஏதோ ஒரு உலகத்தில் உழன்றவாறு,
“ஆமா அந்த பொண்ணு பேரென்ன அலைஸ்ஸா..” என்று கேட்க, கீர்த்தியோ ‘ரொம்ப முக்கியம்’ என்று நொடிந்தவாறு அவனை முறைத்து பார்க்க,
“ஐயய்யோ.. இதை எப்படி நா மறந்தேன்.. அந்த பொண்ணுகிட்ட நம்பர் வாங்காம விட்டுட்டேனே..” என்று சஞ்சய் கத்த,
“டேய்ய் இங்க என்ன பிரச்சினை போயிக்கிட்டு இருக்கு.. என்னடா உளறிக்கிட்டு இருக்க மடையா..” என்று பாபி அவன் தலையில் நங்கென்று கொட்டவும் ‘ஹிஹிஹி..’ என்று அசடுவழிய சிரித்தான் சஞ்சய்.
காதல்போதை?
——————————————————————-
-ZAKI?