செங்காந்தள் அழகே

SA-18dfc5d1

செங்காந்தள் அழகே

  • Kadha
  • March 17, 2022
  • 0 comments

 சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் பயனம் செய்யும் ராதிகா விருப்பமே இல்லாமல் தன் சொந்த ஊரான புதுக்குளம் செல்கிறாள். அதுவும் தன் திருமணத்திற்காக என்பது தான் அதிசயம். “எனக்கு கலியாணம் இப்ப வேண்டாம்” என்று பிடிவாதமாக மறுக்க, அவள் பெற்றோர்களே “உனக்கு அடுத்து தங்கை இருக்காள். அந்த நியாபகம் இருக்கா உனக்கு. ஒழுங்காக கல்யாணம் பண்ற வழியை பாரு” என்று எவ்வளவு சொல்லியும் சம்மதிக்காதவள் ஒற்றை விஷயத்தை அறிந்த பின் தான் தன் சம்மதத்தை சொன்னாள். 

அது தான், மாப்பிள்ளை ரகு வெளிநாட்டில் வேலை பார்ப்பவன். திருமணம் முடிந்த இரண்டு நாளில் கிளம்பி விடுவான் என்னும் நற்செய்தி தான். 

அதிகாலையில் பிரம்ம முகூர்த்தம், ராதிகாவின் கழுத்தில் மங்கள நான் பூட்டி தன்னவள் ஆக்கி கொண்டான் விஸ்வமித்ரன்.   

‘எப்படா இந்த கூத்து முடியும் நம்ம எப்ப சென்னை கிளம்பலாம்’ என்று யோசனையோடு இருந்தவளுக்கு மாப்பிள்ளை மாறிய விடயமே தெரியவில்லை. பாவம் விதி இவள் வாழ்க்கையில் விளையாடுகிறது. 

விஸ்வமித்ரன், ரகுவின் சொந்த தம்பி. பொறியியல் இறுதியாண்டு மாணவன். எல்லாத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் குணம். தன் அண்ணன் கடைசி நிமிடத்தில் அவன் காதல் தான் முக்கியம் என்று சுயநலமாக இருக்க, பெற்றவர்களோ இவனிடம் “தம்பி குடும்ப மானமே உன் கையில் தான் இருக்கு டா” என்று புத்தக பையை சுமக்கும் மகனிடம் குடும்ப சுமையை கொடுத்துவிட்டனர். 

மித்ரன் ‘கல்யாணமே நடக்காமல் கஷ்டப்பட்டும் 90’ஸ் கிட்ஸ் கிட்ட கேட்காமல் என் கிட்ட கேட்கிற கேள்வியா இது. அய்யோ கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிச்சா கலாய்த்து தள்ளிடுவாங்க சமாளிப்போம்’ என்று மனதில் புலம்பித் தள்ள, 

மணமகள் அறையே பெறும் சத்தத்தில் கிடக்க ‘அங்கிட்டு போய் சண்டை போடுங்க நான் பிஸியாக பப்ஜீ விளையாட்டு இருக்கேன்’ அவன் தனி உலகில் இருந்தான். அவன் தந்தை அவனிடம் “தம்பி சென்னையில் புதிதா ஒரு ப்ளாட் பார்த்து இருக்கோம். இனி நீ ஹாஸ்டலில் தங்க வேண்டாம். மருமகள் கூட அந்த ப்ளாட்டில் தங்கிக்கோ” என்றதும் பதறி “டாடி நான் ஹாஸ்டல் வேக்கேட் பண்ணால் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் காரணம் கேட்பாங்களே…. குடும்ப மானத்தை பார்த்து என் மானம் காத்துல பறக்க போகுதே!!” என்று புலம்பி தள்ள, 

“கூறு கெட்ட தனமா பேசாமல் நாளைக்கே அந்த பிளாட் க்கு போகிற வழியை பாரு” என்று சென்று விட்டார். 

இங்கே ராதிகா “என்ன!!!! மாப்பிள்ளை மாறி போச்சா இதை ஏன் முதலே என் கிட்ட சொல்லலை. ஐய்யோ இப்ப நான் என்ன பண்ணுவேன்…. வெயிட் வெயிட் முதலில என்ன சொன்னீங்க அந்த பையன் காலேஜ் பைனல் இயரா…… எனக்கு மட்டும் ஏன் தான் கொடுமை மேல கொடுமையா நடக்கிறதோ…. சரி நான் என்னோட ஹாஸ்டலில் தான் இருப்பேன். அதில் மாற்றம் இல்லை தானே” என்று தன் தாயிடம் கத்தி கொண்டு இருக்க, 

அவளது தந்தையோ “சம்மந்தி உனக்கும் மாப்பிள்ளை க்கும் சென்னையில் ஒரு பிளாட் வாங்கி இருக்கார். நாளைக்கே நீங்க இரண்டு பேரும் அங்க போய்டுங்க” அழுத்தமாக சொல்லி விட்டு செல்ல, ராதிகா மனதில் ‘நல்ல வேலை என் ப்ரெண்ட்ஸ் யார் கிட்டவும் எனக்கு கல்யாணம் அதான் ஊருக்கு போறேன்னு சொல்லலை. இல்ல இப்ப நான் காலேஜ் பையனை கட்டிக்கிட்டேன்னு தெரிஞ்சா என்னை என்ன நினைப்பாங்க. படிக்கும் போது கல்யாணம் கேட்குதா அந்த லூசு பெயர் என்ன ஆஹான்… விஸ்வா இருக்குடா உனக்கு’ என்று தன் தலைவிதியை எண்ணி நொந்து போனாள். 

ஒரு வாரம் பிறகு, 

சென்னை, திருவான்மியூர் ஒர் அடுக்குமாடி குடியிருப்பு இரண்டாம் தளத்தில் சமையலறையில், 

“மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மல பித்தா பித்தாதே

மலம பித்தாதே….

ஹே……மலம பித்தா பித்தாதே

மலம பித்தா பித்தாதே

மல பித்தா பித்தாதே

மலம பித்தாதே…

 ஹோலி ஹோலி

பக்கதுல சிரிக்கும் ரங்கோலி

ஜாலி ஜாலி

வெக்கதுல மயங்குற டோலி” என்று ஹைய் டெசிபலில் கத்தி கொண்டே சயைமல் செய்து கொண்டு இருந்தான் விஸ்வா. 

“எடு செருப்பு நாயே!!! உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன் நான் குளிக்கிறதுக்கு முன்ன நீ குளிக்காதேனு. என்னடா பண்ணி வைத்து இருக்க. உன்னோட அழுக்கு துணி அங்க என்னை வரவேற்கிறது” என்று பத்திரகாளியாக விஸ்வாவை முறைத்து கொண்டு இருந்தாள் ராதிகா. 

“ஏங்க நான் இன்னும் குளிக்கவே இல்லை. சமையல் முடிச்சிட்டு தான் குளிக்கனும். அண்ட் ஒன் மோர் திங் நான் ஒரு புது டிஸ் டீரை பண்ணி இருக்கேன். மதியம் சாப்பிட்டு சொல்லுங்க” என்று நமக்கு என்ன சுடா சொரணையா என்று திரும்ப தோசை சுட, 

“நீ குளிக்காமல் உன் அழுக்கு முட்டை எப்படி அங்க வந்துச்சு” என்று தன் பிடியில் மாறாமல் நிற்க, விஸ்வா ‘கொய்யால இவளை தூக்கி போட்டு மிதிக்க போறேன்’ என்ற தன் கோபத்தை மறைத்து கொண்டு “நேற்று நைட் குளிச்சேன் ங்க. இப்ப இப்படியே கத்திடே இருந்தீங்கனா உங்களுக்கு தான் லேட் ஆகும்” என்றதும் கிளம்ப தயாரானாள். 

இருவருமே ஒரே வாரத்தில் தங்கள் வேலையை பகிர்ந்து கொண்டனர். இருவரையும் தனியாக தான் அவர்கள் பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர். வந்ததும் இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. ஹால், சமையலறை மற்றும் ஒரே ஒரு படுக்கையறை மட்டுமே இருக்க என்ன செய்வது என்று ராதிகா யோசிக்க, 

விஸ்வா “ஏங்க நீங்க வேண்டுமானால் பெட்ரூம் எடுத்துக்கோங்த. நான் சிங்கில்காட் வாங்கி ஹாலில் ஓரமாக போட்டுக்கிறேன். பட் பாத்ரூம் காமென் தான். அதுக்கு மேல சமையல். எனக்கு கொஞ்சம் பேஸிக் தெரியும்” என

ராதிகா “எனக்கும் பேஸிக் தான் தெரியும் பரவாயில்லை மேனேஜ் பண்ணிக்கலாம். எனக்கு இங்க இருந்து ஆபிஸ் கொஞ்ச தூரம். ஸோ மார்னிங் நான் சீக்கிரமா கிளம்ப வேண்டி இருக்கும். வீட்டை கிளீன் பண்ணனும்ல நான் பெட்ரூம் பார்த்துகிறேன் நீங்க ஹால் பார்த்துக்கோங்க. கிட்சேன் மட்டும் நம்ம இரண்டு பேரும் பார்த்துக்கலாம்” என்று தன் ஐடியாவை கூற, 

“ஓகே ங்க… மார்னிங் நான் சமைக்கிறேன். எனக்கு இங்க இருந்து காலேஜ் பக்கம் தான். வண்டியில் தானே போறேன். நைட் நீங்க பார்த்துக்கோங்க தென் இப்ப இருந்து நாம ரூம்மேட்ஸ்” என்று விஸ்வமித்ரனும் தங்கள் இருவரது வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை தொடங்கி வைத்தான். 

முதல் இரு நாட்கள் இருவரும் புதிய ரூம்மேட்ஸ் எப்படி எல்லாத்தையும் அனுசரித்து போவார்களோ அப்படி தான் இருந்தனர். பின் அடிதடி சண்டை மட்டும் தான் இல்லை. இருவரும் கிளம்பும் வரை சத்தம் சத்தம் சத்தம் மட்டுமே. 

ஒரு மாலை நேரம், ராதிகா தன் அறையில் “இந்த மேல இருக்கிற கப்போர்ட் பெருசா இருக்கும் போல கிளீன் பண்ணிட்டா கொஞ்ச திங்ஸ் மேல வைச்சிடலாம்” என்று முடிவு செய்து, துடைப்பம் முதல் அனைத்தையும் எடுத்து கொண்டு மேலே ஏறி அந்த கப் போர்ட் உள்ளே சென்று அனைத்தையும் துடைத்து பின் இறங்க நினைக்க, ஏறும்போது தெரியாத உயரம் இப்போ பூதாகரமாக தெரிய,  

“டேய் விஸ்வா….. விஸ்வா…. ” என்று கத்த அந்த பக்கம் ஒரு பதிலும் இல்லை. ‘இந்த நாய் எங்க போச்சோ…. அடேய் விஸ்வா…” என்று கத்தி சோர்ந்து பின் “மித்துமா எங்க இருக்க எனக்கு பசிக்குதுடா” என்று மெதுவாக கேட்க, கதவை திறந்து உள்ளே வந்த விஸ்வா “ராதி எங்க இருக்க” என்று அவளை தேட “மேல பாருடா வெண்ணெய்” என்று அங்கே பார்த்த விஸ்வா, 

“மேல என்னங்க பண்றீங்க. தனியா கண்ணாமூச்சி விளையாடுறிங்களா” என்று அவளிடம் துடப்பக்கட்டையில் அடி வாங்கிய பின்னே, “சரி சரி அப்படியே குதிங்க நான் பிடிச்சுக்கிறேன்” என்று நல்ல பிள்ளையாக சொல்ல, 

“டேய் உன்னை பற்றி தெரியாதா.. கேடி நேற்று உன்னை படியில் இருந்து தள்ளி விட்டதுக்கு இப்ப என் இடுப்பை உடைக்க பார்ப்ப” என்று நக்கலாக சொல்ல, 

“நம்புங்க… நம்பி வந்த பொண்ணை கையில என்ன இதயத்தில் வைச்சி தாங்குவேன்” என்று வந்த சிரிப்பை மறைத்து கொண்டு சொல்ல, 

“எதோ சொல்ற, கரெக்டா பிடி டா” என்று குதிக்க, அவள் குதித்த வேகத்தில் இவனும் நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த பெட்டில் விழ அவன் மீதே அவளும் விழுந்தாள். 

ராதிகா “பிடிக்கிறேன் சொல்லி நீயும் விழுந்திட்டியே டா” என்று கலகலவென சிரிக்க, முதல் முறையாக அவள் முகத்தை மிக அருகில் பார்த்தது மட்டுமில்லாமல் அவளது சிரிப்பிலும் அவளது கன்னக்குழியிலும் தன்னை மறந்து அவளை ரசிக்க ஆரம்பித்தான். 

சிரித்து கொண்டே அவனை பார்த்தவள் அவனின் பார்வையில் எதோ வித்தியாசம் தெரிய “ஹலோ…. என்ன புதுசா பார்க்கிற மாதிரி ‘பே’ னு பார்க்கிற” என்றதும், 

“புதுசா தெரிஞ்சா புதுசா தானே பார்க்க முடியும்” என்று முணுமுணுக்க, “டேய்… எழுந்துக்கோடா எனக்கு நிறைய வேளை இருக்கு” என்று ராதிகா சொல்ல, “ராதி மேடம் நீங்க தான் என் மேல படுத்து இருக்கீங்க” என்றதும் ஈஈஈ என்று அசட்டுதனமாக சிரித்து கொண்டே எழுந்தாள். 

அவனும் சிரித்து கொண்டு வெளியே செல்ல கதவு அருகே சென்று திரும்பி இவளை பார்த்தான். அப்பொழுதும் போல மேலே டீசர்ட் கீழே கணுக்கால் அளவான ஸ்கர்ட். கலைந்த முடி அவள் முகத்தில் படர்ந்து தனி அழகை கொடுக்க, கண்களோ அறையை அளந்து கொண்டு அங்கும் இங்கும் நர்த்தனம் ஆடிக்கொண்டு இருந்து. இயற்கையாகவே சிவந்த இதழ் இவள் யோசிக்கும் போது பல்லில் அரைப்பட ‘இந்த ராதி ஏன் இன்றைக்கு ரதியாக மாறி என்னை இம்சை பண்றா. எனக்கு என்ன தான் ஆச்சு கடவுளே’ என்று தலையை கோதி கொண்டே சென்று விட்டான். 

இன்று வெள்ளிக்கிழமை அடுத்த இரண்டு நாள் விடுமுறை என்று சந்தோசமாக வீட்டுக்கு வர, அவள் தாயிடம் இருந்து போன் வந்தது ராதிகாவிற்கு. 

“சொல்லுமா” என்றதும் “இரண்டு நாள் லீவு தானே வீட்டுக்கு வரியா” என்றதும் செல்ல துடித்த மனதில் காலை விஸ்வா சொன்னது நினைவுக்கு வந்தது. ‘ப்ராஜெக்ட் வொர்க் நிறைய இருக்குங்க. நீங்க இரண்டு நாளைக்கு வீட்டை பார்த்துக்கோங்க நான் கொஞ்சம் ப்ரீயா ப்ராஜெக்ட் விசயத்தில் கவனம் செலுத்துவேன். திரும்ப வெர்க்கிங் டேஸ் வந்திட்டா உங்களுக்கு வேலைக்கு போக கஷ்டமா இருக்கும்ல’ என்றது தான். 

“இல்லை மா நாங்க அப்புறமா வரோம். கொஞ்சம் வேலை இருக்குமா” என்று போனை வைத்துவிட, அவளது தாய் பக்கத்தில் தான் அவள் தந்தை, விஸ்வா தாய் தந்தை அமர்ந்து இருந்தனர். 

விஸ்வா தாய் “என்ன சொன்னா என் மருமகள்” என்பதும், “அவங்க சேர்ந்து வாழ்வாங்கனு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என

ராதி தந்தை “அப்படி என்ன சொன்னாள்” என “நான் அவளை மட்டும் தானே கூப்பிட்டேன். ஆனால் அவ நாங்க அப்புறமா வரோம்னு சொல்லிட்டா. இதில் இருந்தே தெரியுதே இப்ப அவங்க ஒன்னா வாழலை என்றால் கூட கண்டிப்பாக எதிர்காலத்தில் சேர்ந்திடுவாங்க” என்று சந்தோசமாக சொன்னார் ராதிகாவின் தாய். 

விஸ்வா தந்தை “இவன் மட்டும் என்ன வாடா இரண்டு நாள் உங்க இரண்டு பேருக்கும் லீவு தானே என்றதுக்கு இல்லை அவங்க இரண்டு நாள் தான் ப்ரீயா இருப்பாங்க அப்புறமா வரோம்னு சொல்லிட்டான். எங்களுக்கு ரெம்ப கவலையா இருந்துச்சு சின்ன பையன் படிக்கிற வயசில் கல்யாணம் பண்ணிட்டோமே எப்படி சமாளிக்கிறான்னு. இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்று இரு வீட்டு பெற்றோரும் நிம்மதியாக இருந்கனர். 

ஞாயிற்றுக்கிழமை, கீழே சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடும் விஸ்வாவை தங்கள் வீட்டில் இருந்து பார்த்து கொண்டே இருந்தாள் ராதிகா. அப்போது விஸ்வாவிடம் ஒரு பெண் பேச வர, இவனும் அவளுடன் பேச தனியாக சென்றுவிட்டான். இதை பார்த்து அது வரை வராத ஒர் உணர்வு வர, வேகமாக கீழே இறங்கி ஓடினாள். 

அவர்களை தேடி அவள் வரும் போது கேட்ட வார்த்தை “தனியா போய்டுவியா இல்லை நான் வேண்டுமானாலும் கூட வரவா” என்ற விஸ்வாவின் கேள்வியில் தான். அந்த பெண் “இல்லை மித்ரன் நான் போய்டுவேன்” என்று கிளம்பியதும், அவளை பார்த்து கொண்டே திரும்ப, இவன் கண்ணில் பட்டதோ கோபமாக நிற்கும் தன் மனைவி தான். 

“ஹேய் ரதி இங்க என்ன பண்ற” என்று அவன் முடிக்க கூட இல்லை, அவன் சட்டை காலரை பிடித்து இழுத்து சென்று கொண்டே, “சார் யார் கூட சிரித்து சிரித்து பேசனீங்க” என்று பற்களை கடித்து கொண்டு கேட்க, 

தங்களை வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் சிறு புன்னகை கொடுத்து விட்டு, “எம்மா நீ என்ன நினைக்கிறனு தெரியுது… லைசென்ஸ் இருக்கிற உன்னையே நான் எதுமே பண்ணலை. இதுல வேற ஒருத்தியை என்ன பண்ண போறேன்” என்று சொல்ல, 

“கரெக்ட் தான் பட் எதுக்கு சிரிச்ச” என்று வீட்டுக்கு வந்தும் அதே கேள்வியை கேட்க, “எங்க காலேஜ்ல ஒவ்வொரு ஆண்டும் பழைய மாணவர்களை கூப்பிட்டு ஒரு சின்ன பார்ட்டி மாதிரி கொண்டாடுவோம். அதுக்கு தான் இந்த முறை எந்த ஆண்டு மாணவர்களை கூப்பிடலாம்னு கேட்க வந்திருந்தா வீட்டுக்கு கூப்பிட்ட உன்னை யாருனு கேட்பா… இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு காலேஜ் முடிய அப்புறமா உன்னை எல்லாருக்கும் அறிமுகம் பண்றேன். அதான் கீழவே பேசிட்டு அனுப்புனேன்” என்று விளக்கம் கொடுக்க, 

“எனக்கு சந்தேகம் எல்லா இல்லை சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன்” என்று ராதிகா சமாளிக்க, “பொண்டாட்டி சண்டை கோழியா இருந்தா லைப் ஜாலியா தான் இருக்கும்” என்று கண்ணடிக்க, அதில் அதிர்ந்த ராதியின் கன்னங்கள் செம்மையை பூசி கொண்டது. 

ஓ நீ லேசாக பாா்த்தாலும்

லூசாகிப் போறேன் பச்ச நெருப்ப

பத்திகிடுறேன் விளையாட்டுப்

பொம்மைய போல ஒடஞ்சேனே

நானும் கூட அநியாயம் பண்ணுற

காதல் அடங்காம ஆட்டம் போட

பொல்லாத உன் நெனப்பு எப்போதும்

போட்டிப் போட்டுக் கொல்ல போகாத

கோயிலுக்கும் நான் போவேன்

பூச பண்ணறான் என்ன சொல்ல

 என்னடா ஓ என்னடா

ஓ என்னடா என்னடா உன்னாலே

தொல்லையா போச்சு சொல்லவே

இல்லையே தன்னாலே என்னவோ

ஆச்சு 

சிரித்து கொண்டே சென்று விட்டான் அவளை மயக்கிய மாயக்காரன். 

இரவு வெகு நேரம் பின்பே விஸ்வா வீட்டுக்கு வர, வந்ததும் ராதிகா “லூசு கூமுட்டை… எந்த வருட மாணவர்களை கூப்பிட்டு இருக்க” என, “வந்ததும் பொண்டாட்டி தண்ணீர் கொடுத்து தான் பார்த்திருக்கிறேன் ஆனால் நீ…. சரி சொல்றேன் முறைக்காத இரண்டு வருடம் முன்ன இருந்த பேச்” என, 

“ஹா ஹா ஹா” என்று சிரிக்க தொடங்கி விட்டாள். “என்னடி ரதி மாயமோகினி ஆகிடியா” என்று நக்கலாக கேட்க, அவளும் அதே நக்கலுடன் “நீ சொன்ன பேச் அது நான் தான்” என்று மீண்டும் சிரிக்க, ‘போச்சா’ என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட, ராதிகாவே “பயப்படாதே நான் யார் கிட்டவும் உங்க மனைவினு சொல்ல மாட்டேன். ஆனால் என்னை ப்ரபோஸ் பண்ண கோவிந்த் கூட வருவான் போல” என்று அவனை வெறுப்பேத்தி விட்டு சென்றாள். 

நிகழ்ச்சி தொடங்கும் முன்ன வந்த விஸ்வா எல்லா வேலையை பார்த்து விட்டு அனைவரும் வந்ததும் யாரின் கவனத்தையும் ஈர்க்காமல் ராதி பக்கத்திலே நின்று கொண்டான். அதிலும் அந்த கோவிந்த் வரும் போது அவன் முகத்தை பார்க்க ராதிகாவிற்கு சிரிப்பாக வந்தது. 

விஸ்வாவின் நண்பர்கள் அவனை வினோதமாக பார்த்து வைத்தனர். அதில் ஒருவன் “டேய் அவன் அந்த பொண்ணுக்கு ரூட் விடுறான் போல டா” என்று கேலி செய்தனர். 

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் நேரம், எப்பொழுதும் கடைசியாக செல்லும் விஸ்வா “நான் கிளம்புறேன் டா” என்று இவர்களின் பதில் மொழி கூட கேட்காமல் சென்றுவிட்டான். 

சிறிது நேரத்தில் வெளியே சென்றிருந்த பரத் வேகமாக ஓடி வந்து “மச்சான் நான் உள்ள வரத்து முன்ன விஸ்வா போறதை பார்த்தேன். அவனை கூப்பிட நினைத்தால் அவன் ரோட்டு ஓரமா இருந்த பொண்ணை பைக்கில் கூப்பிட்டு போய்ட்டான்டா” என்றதும் மற்ற நண்பன் “அவன் ஹாஸ்டல் விட்டு போனதில் இருந்தே சரி இல்லை அவன் இப்ப இருக்கிற வீடு தெரியும் தானே நாளைக்கு நமக்கு விடியலே அங்க தான்” என்று சட்டம் போட, அதை அறியாத விஸ்வா வேறு திட்டம் போட்டு கொண்டு இருந்தான். 

வந்ததில் இருந்து அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்த ராதி “என்னடா பார்வை எல்லாம் பலமா இருக்கு…. போய் தூங்கு கொஞ்ச நாளில் எக்ஸாம் வருதுல” என, அவனோ சினிங்கி கொண்டே “என்னை நீ ரொம்ப டிஸ்டப் பண்ற…. எனக்கு நினைவு முழுக்க நீ தான் இருக்க. எதாவது பண்ணேன்” என்று கெஞ்சலாக கேட்க, 

இவளும் சிரித்து கொண்டே “இவ்வளவு நாள் பொறுத்த தானே இன்னும் ஒரே மாதம் தான் உனக்கு எக்ஸாம் ரொம்ப முக்கியம். போய் அதுல கவனத்தை செலுத்தும் வழியை பாரு. உனக்கு எக்ஸாம் முடிச்ச அடுத்த நாளே உன்னை கடத்திட்டு போய்டுறேன் இப்ப சமத்தா படிப்பியாம்” என்று அவன் கண்களை பார்த்து சொல்ல, அவனும் அதே கண்களை தான் ரசித்து கொண்டு இருந்தான். நேரம் செல்ல செல்ல மௌனங்களே வார்த்தையாகி, வார்த்தைகளே இல்லா யுத்தம் தொடங்கியது. 

இருவரும் இதுவரை தங்கள் காதலை வெளியே சொன்னது இல்லை. ஆனால் உணர்ந்து இருக்கிறார்கள். சொல்லும் காதலை விட உணரும் காதலுக்கு பலம் அதிகம் தானே. 

மறுநாள் காலை வீட்டின் அழைப்போலி அழைக்க, “ப்ச்…. யாருடா இது” என்று முனங்கி கொண்டே தன்னை அணைத்து உறங்கும் விஸ்வாவை மேலும் இறுக்கி அணைத்து விட்ட தூக்கத்தை தொடர, விடாமல் ஒலித்த அழைப்பு மணியால் தூக்கம் கலைத்த விஸ்வா தன் மேல் இருக்கும் தன் ரதியின் கன்னக்குழியில் இதழை பதித்து விட்டு, வெளியே கதவை திறந்து பார்க்க, வெளியே இருந்த நண்பர்களை கண்டு அதிர்ந்தான் என்றால், பின்னே, “டேய் விஸ்வா பசிக்குதுடா…. எதாவது சமைச்சுதா” என்று அவனது டீசர்ட்டை அணிந்து வந்த மனைவியை கண்டு மேலும் அதிர்ந்து நண்பர்களை பார்க்க, 

அவர்களோ “என்ன மேன் இது” என்று கண்ணால் அவனை குறுகுறுவென பார்க்க, அப்போது தான் அவர்களை பார்த்த ராதிகா மேலும் அவனை மாட்டி விடும் நோக்கில் “ஹாய் ஐ அம் ராதிகா விஸ்வமித்ரன்” என, 

கொலைவெறியில் நண்பர்கள் அவனை பார்க்க, எங்க ஓடி ஒளியலாம் என்று திருதிருவென முழித்து கொண்டு இருந்தான் இந்த அப்பாவி விஸ்வா. 

சுபம். . 

Leave a Reply

error: Content is protected !!