நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-10

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-10

அன்று இரவு,

‘விளக்கை அணையாம பாத்துகணுமா? சரி எல்லாம் இன்று ஒரு நாள் தானே, நாளை முதல் நமக்கு விடுதலை’ என்று மனதோடு நினைத்தவள் ஒருவாறு இரவு முழுக்க, விளக்கை அணைய விடாமல் பார்த்துக்கொண்டாள்.

காலை நேரமாகவே எழுந்துக்கொண்டவன், அங்கே அவள் இருக்கிறாள் என்பதை கண்டுக்கொள்ளாது வெளியே செல்லத் திரும்ப.

“ஹே, ஒரு நிமிஷம்.”

“ம்ப்ச்…என்ன?”

“நான் விளக்கை நைட் ஃபுல்லா அணையாம பாத்திக்கிட்டேன்”.

“சரி, அதுக்கு என்ன இப்போ?”

“என்னாது? அதுக்கு என்னவா? பனிஷ்மெண்ட் பண்ணாட்டி மட்டும் ஆகைன் பனிஷ்மெண்ட் இப்போ பண்ணிட்டேன் அப்போ பரிசு கொடு” என்றாள்.

“பரிசா?”

“ஆமா”

சிறுது நேரம் யோசித்தவன், அவளிடம் வந்தவன்,”பரிசு தானே வேணும்?”என்க.

அவளும் மண்டையை ஆட்டச் சட்டென அவள் இதழ்களில் மெல்லிய முத்தம் ஒன்று கொடுத்தவன்.”போதுமா பரிசு? இல்ல பெருசா வேணுமா?”என்க.

“……..……”

“சீக்கிரம் ரெடி ஆகிடு பத்து மணிக்கு நமக்குக் கல்யாணம்!” என்றவன் வெளியில் சென்று விட்டான்.

‘போ, போ என்று மனதோடு நினைத்தவள், எல்லாம் சரியா நடக்கனும்’ என்று ஒரு வேண்டுதலையும் விடுத்தாள்.

********

சரியாக அரை மணித்துளிகளில் கிளம்பி வந்தான் தேவ். சிவப்பு கலரில் குர்தாவும், வொயிட் கலரில் பேன்ட்டும் அணிந்திருந்தான்.

இங்கே வந்தவன், ரூம் உள்ளிருந்து பூட்டியிருப்பதை கண்டவன், “மில்கி, ரெடியா என்க”

“ஆஹ், இதோ வந்துட்டேன்” என்றவள் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வர அவளின் அழகில் சொக்கித்தான் போனான், தேவ் அநபாயன். ரெட் லெஹங்காவில், தேவதைபோல் இருந்தாள் ஆத்மி.

“மில்கி, நீ செம்ம பிகர்” என்றான் தேவ்.

அதற்கு அவள் கோபம் கொள்ளவே இல்லை, இவனுக்கு அவளின் அமைதிக்கு பின் இருக்கும் காரணம் புரிந்தேதான் இருந்தது.

“சரி வாக்கிளம்பலாம்”என்றான்.

“ம்”என்று மட்டும் கூறியவள் அவனைப் பின்தொடர்ந்தாள். காரில் முன் சீட்டில் அமர்ந்து தேவ் காரை இயக்க, அவனிற்கு பக்கத்தில் இவள் அமர்ந்துக்கொண்டாள்.

காரில் அமைதி மட்டுமே, அதைக் கலைக்கவென எப் எம் ஐ அவன் ப்ளே செய்ய அதில்,

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இந்த பாடல் ஒலிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

 

ஒரு தேவதைப் பார்க்கும் நேரமிது

மிக அருகினில் இருந்தும் தூரமிது

இதயமே ஓ

இவளிடம் ஹோ

உருகுதே ஓ ஓ ஓ

இந்தக் காதல் நினைவுகள் தாங்காதே

அது தூங்கும் போதிலும் தூங்காதே

பார்க்காதே ஓ

என்றாலும் ஓ

கேட்காதே ஓ ஓ ஓ

என்னை என்ன செய்தாய் பெண்ணே

நேரம் காலம் மறந்தேனே

கால்கள் இரண்டும் இருந்தும்

வானில் பறக்கிறேன் என்னவோ ஆகிறேன்

எங்குப்போகிறேன்

வழிகள் தெரிந்தும் தொலைந்துப்போகிறேன்

காதல் என்றால் ஓ

பொல்லாதது

புரிகின்றது ஓ ஹோ ஹோ ஹோ

ஓ கண்கள் இருக்கும் காரணம் என்ன

என்னை நானே காணத்தானே கண்கள் வாழுதே

“மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்

இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்

உன் பாதத்தில்

முடிகின்றதே

என் சாலைகள் ஓஹோ

இந்தக்காதல் நினைவுகள்

தாங்காதே

அது பூக்கும் போதிலும்

தூங்காதே

ஒரு தேவதைப் பார்க்கும் நேரமிது

மிக அருகினில் இருந்தும் தூரமிது”

சரியாக இந்தப் பாடல் ஒலிக்கக் கடைசி வரிகள் அவனின் மனதை அப்படியே உரைக்க, சட்டென எப் எம் ஐ ஆப் செய்ய.

அவள் அவனை ஒரு நிமிடம் பார்க்க, இவன் சாலைகளில் மட்டுமே கவனம் செலுத்த, இவளும் சாலையில் தன் கவனத்தை பதித்துக்கொண்டாள்.

இவளின் மனதில் புதிதாக ஒரு பதட்டம் எல்லாம் சரியாக நடக்க வேண்டும், என்ற மன்றாடல், என்னாள் இவனுக்கு மனைவியாக வாழ முடியாது.நடக்கவே நடக்காது என்று நினைத்துக்கொண்டாள்.

இவனின் மனநிலை ‘என்ன நடந்தாலும் சரி, இன்னைக்கு நமக்குக் கல்யாணம் நடந்தே ஆகனும், நடக்கும், நான் நடத்திக் காட்டுவேன்’

ஒருவாறு, சரியாக ரெஜிஸ்டர் ஆபிஸ் வந்தவர்கள், காரை விட்டு இறங்க, ஹரி ஓடி வந்தான்.

“என்ன ஹரி, எல்லாம் ரெடி தானே?”

“சார்…அது வந்து…!”

“என்னாச்சு ஹரி”

சார் மீடியா வந்திருக்கு!”

“மீடியா? எதுக்கு, அவங்களுக்கு யாரு சொன்னா?

“தெரியல சார்.”

“ஹரி, என்னனு தெளிவா சொல்லு, சொன்னதானே முடிவு எடுக்க முடியும்.

“அது வந்து சார், நீங்க இன்னைக்கு ஒரு பெண்ணை மிரட்டித் திருமணம் செய்யப் போறீங்கனு யாரோ கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்காங்க”என்றான் தயங்கி.

ஒரு நிமிடம் அவனின் நெற்றி சுருங்கியது.”சரி, நான் பாத்துக்கிறேன்”என்றவன், ஆத்மியை பார்க்க!

அவளின் கண்களில் ஒரு வெளிச்சத்தை கண்டுக்கொண்டவன் ‘உன் வேலை தானா இதுலாம், நான் யாருனு உனக்குக் காட்டுறேன்’ என்று மனதோடு நினைத்துக்கொண்டவன் மறுபடியும் காருக்குள் அமர்ந்துக்கொண்டான்.

அவன் அவளைப் பார்த்து “ஓஹோ, அதான் ஜாலியா இருந்தியோ? நான் கூட உன்னைய என்னவோனு நினைச்சேன் நீ செம்ம கேடி” என்றான்.

“கெட்டது பண்ற உனக்கு உதவி செய்யவே இத்தனை பேர் இருக்கும்போது, எனக்கு உதவி செய்ய யாரும் வரமாட்டாங்களா என்ன?”என்றாள் ஏளனமாக.

“ஹே, இரு இரு பேபி, ஏன் அவசரப்படுற? இன்னும் நீ ஜெயிக்கல”

“இன்னும் என்ன? பாத்தல மீடியா வந்துட்டாங்க, உன்னால யாரை வேணும்னாலும் விலைக்கு  வாங்க முடியும்! மீடியாவை முடியவே முடியாது, இப்போ உன்கிட்ட கேள்வி கேட்பாங்க, அப்பறம் என்கிட்ட வந்து கேப்பாங்க, நானும் நீ எனக்குப் பண்ணின கொடுமைகளைச் சொல்லிடுவேன்” என்றாள்.

“அச்சோ, மை டியர் மில்கி, நீ நினைக்குறதுலாம் நடக்கும்னு நீ நம்புறியா?”எனறு கேட்க.

“கண்டிப்பா”என்றாள்.

“சரி அப்போ உனக்கும் எனக்கும் ஒரு பெட்”என்று பீடிகை போட.

அவள் அவனைப் புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க.

நீ ஜெயிச்சுட்டா உன்னை விட்டு நான் நிரந்திரமா பிரிஞ்சிடுறேன்.உன்னை அதுக்கு அப்புறம் தொந்தரவு செய்யமாட்டேன். அதே நான் ஜெயிச்சுட்டா?” என்று இடைவெளி விட.

“………..”

“உன்னையையே நீ தரனும்”என்றிருந்தான்.

அவள் அவனை அதிர்ச்சியாய் நோக்க,”என்ன தோத்துபோய்டுவன்னு பயம் தானே”என்றிட.

“அப்படி எல்லாம் இல்லை, ஆனால் ஒரு கண்டிஷன்!”என்று அவள் நிறுத்த.

இவனும் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க,”நீ மீடியா கூடப் பேசும்போது நானும் உன் கூட இருப்பேன், என் கிட்ட அவங்க கேள்வி கேட்டா கண்டிப்பா பதில் சொல்வேன்!”

“சரி, இதுக்கும் நான் ஒத்துக்கிறேன்” என்றிட அவளும் தன் மண்டையை ஆட்டியிருந்தாள்.

இருவருமாகக் காரை விட்டு இறங்கிய நொடி, மொத்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் படை அவர்களைச் சூழ்ந்துக்கொள்ள.

அனைவரும் ஒரே நேரத்தில் பல வகையான கேள்விகணைகளை தொடுக்க உதட்டில் சின்னப் புன்னகையை தவழவிட்டவன், “காய்ஸ், எதுக்கு இவ்ளோ அவசரம் ஒவ்வொருத்தரா கேளுங்க, நாங்க பதில் சொல்லுவோம்.”என்றான்.

“சார், நீங்க யெங் பிஸ்நெஸ்மேன், உங்கள பத்தி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகையான நியூஸ் வெளியாகிட்டே இருக்கு.பட், உங்க கல்யாணம் அப்படிங்கிற சாப்டர் ரொம்பவும் புதுசு இது உண்மை தானா?”

“வெல், எங்களோட டிரெஸ்ஸிங் பாக்குறீங்களே, உங்களுக்கு என்ன தோனுது”என்றான் புன்னகையுடன்.

“கல்யாணம் மாதிரி தான் ஆனா, உங்க கல்யாணம் இவ்ளோ சிம்பிளா ஏன் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல வைக்குறீங்க?”

“ஏன்? சிம்பில் மேரேஜ் பண்ணிக்கக்கூடாதா என்ன… என் வருங்கால மிஸ்டர்ஸ் தான் இந்த முடிவு எடுத்தாங்க, இப்பவே அவங்க சொல்றத கேட்டுப் பழக்கிக்கணும் இல்லையா?” என்று அவன் நக்கலடிக்க.அங்கே ஒரு சிரிப்பலை.

‘அடேய், என்னடா அவ்வார்டா கொடுக்குறாங்க? இப்படி நடிக்குறியே டா…’ஆத்மியின் மனது.

“இல்ல சார் இந்தக் கல்யாணம் லவ் ஆர் அரேன்ஜ்ட்?”

“நிலவுபோல் பெண்ணொருத்தி,

வானம்போல் காதலன் ஒருத்தன்!”

 

ஈர்த்தது, காதல் துளிர்த்தது, மரமாக வளர்ந்தது, கிளைகள் இருவீட்டையும்  அடைந்தது!அதை அவர்கள் வெட்டிவிட எண்ணவில்லை, வளர்க்கவே எண்ணினர்!”என்றான்

‘இதெல்லாம் பக்கி எந்தக் கேப்ல ரெடி பண்ணினான், இப்படி பில்டப் கொடுக்குறான்’ ஆத்மியின் மனம்.

“அப்படினா? நீங்க மட்டும் வந்திருக்கீங்க? உங்க பேமிலி வரலியே?”

“வரலை தான் இப்போ, எங்க கூட வரலை. இப்போ வந்திடுவாங்க!”என்றான்.

‘என்ன உளறீட்டு இருக்கான் எப்படி என் குடும்பம் வரும்! என்ன நடக்குது இங்க’.ஆத்மியின் மனம்.

“இந்தத் திடீர் திருமணம் எதனால்?”

“திடீர் திருமணமா? யாருங்க சொன்னது? திருமணம் இருவீட்டாரும் ஒரு வருடத்திற்கு முன்னாடியே டிசைட் பண்ணிட்டாங்க இவங்க அப்போ சென்னையிலே இருந்தாங்க, இங்க வந்து ஆறு நாள் தான் ஆகுது இன்ஃபாக்ட் எங்க மேரேஜ்காகத் தான் இவங்க இங்க வந்திருக்காங்க பேமிலியோட”என்றான்.

‘என்ன டா டிசைன் டிசைன்னா பொய் சொல்ற, உன் மொகறையை முழுசா கூட நான் பார்த்தது இல்லையே டா’ஆத்மியின் மனது.

“சார், மேடமோட அப்பா இப்போ ஹாஸ்பிட்டல்ல இருக்கார்னு…”

“ஆமாங்க என் மாமாக்கு ஹார்ட் அட்டாக்!”என்று மனவருத்ததோடு சொன்னவன்,

“நேத்துதான் ஆப்ரேசன் நடந்தது, அதே போல் என்னோட அம்மாவும் முடியாம இருக்காங்க, ரெண்டு பேரும் இப்போ நல்லா இருக்காங்க, அவங்க தான் முதல்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கோங்க, நாங்க வீட்டுக்கு வந்தததும் கிராண்டா ஒரு ரிசப்ஷன் வெச்சுக்கலாம் சொல்லிட்டாங்க” என்றான்.

அப்பொழுது அங்கே, அபர்ணாவும் சந்தோஷும் வந்தனர், அவர்களைப் பார்த்த தேவ், “அட வாங்க அண்ணி, வாங்க அண்ணா,”என்று அவர்களைச் சந்தோஷமாக வரவேற்க்க.ஆத்மிதான் குழம்பி விட்டாள்.

“இவங்கதான் என் அண்ணி அபர்ணா, இவங்க என் அண்ணண் சந்தோஷ்” என்று அவர்களை மீடியாவிற்க்கு அறிமுகப்படுத்திவிட்டு,

 

“எங்க தியாவை கூட்டிட்டு வரலியா? என்ன நீங்கப் பாப்பா இல்லாம எதுக்கு வந்தீங்க?” என்று கேள்வி கேட்க.

‘அடேய் போதும்டா உன் ஆக்டிங், நான் பொட்டுனு போய்டுவேன்டா, பாப்பாவாம்ல, அவளை அன்னைக்கு இரக்கமே இல்லாம வாயைக் கட்ட சொன்னவன் தானே நீயு?’ ஆத்மியின் மனம்.

இவர்களுக்குப் பின் அவரின் தந்தையும் வர “இவரு தான் அறிவழகன், என் குடும்ப உறுப்பினர்”என்பதோடு முடித்துக்கொள்ள.அவன் தன்னை தந்தை என்று சொல்லமாட்டான்னா என்று ஏங்கினார் மனிதர்.

“இது போக, என் பிரண்ட்ஸ் வந்திட்டு இருக்காங்க”என்றான்.

“மிஸ்டர்.சந்தோஷ் உங்க வீட்டு பொண்ணை நீங்கச் சம்மதத்தோட தானே கொடுக்குறீங்க?” என்று சந்தோஷிடம் இப்போழுது கேள்வி போக.

ஒரு நிமிடம் ஆத்மியை பார்த்துக் கண்களால் மன்னிப்பு வேண்டியவன் “ஆமாங்க, ரெண்டு பேரும் விரும்பினாங்க, நாங்க சேர்த்துவைக்கிறோம், அவங்க ஆசை தானங்க முக்கியம்?”என்றான் சிரித்தப்படி.

“இவரைப் பற்றித் தினம் தினம் வரும் செய்திகளைப் பற்றி?”

“அதைப் பத்தியெல்லாம் எங்களுக்குக் கவலை இல்லைங்க!எங்களுக்கு எங்க பொண்ணோட விருப்பம் பெருசு” என்றான்.

இப்பொழுது அறிவழகனிடம் கேள்வி,”உங்க மனைவி மற்றும் மேடம் ஓட அப்பாக்கு இப்படி இருக்கும்போது? இவ்ளோ அவசரமா இந்தக் கல்யாணம் எதற்காக?”

இவங்களுக்கு இப்படி ஆகுறதுக்கு முன்னமே இந்தக் கல்யாணம் முடிவு பண்ணியாச்சுங்க, அவங்களுக்கு திடீர்னு இப்படி ஆகிடுச்சு, இப்போதைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் மட்டும், அவங்களுக்கு சரி ஆனதும் பெரியதா ரிசப்ஷன் நடக்கும்”என்றார்.

‘எதுக்கு எல்லாரும் சொல்லிவெச்சு பேசர மாதிரி ஓரே மாதிரி பேசறாங்க’ ஆத்மியின் உள்ளத்தில் பல கேள்விகள்.ஆனால் அபர்ணா மற்றும் சந்தோஷின் முகங்கள் ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்த்த, ஏதோ தவறாகப் பட்டது’.ஆத்மியின் மனதிற்கு.

இப்பொழுது ஆத்மியிடம் கேள்வி”மேடம், இந்தத் திருமணத்தில் உங்களுக்குச் சம்மதம் தானே?”

“இல்…லை…”ஆத்மி.

(சென்ற பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட், முகநூலில் பதிவிடுபவர்கள், மீம்ஸ் போட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.டாலிஸ், கீப் சப்போர்டிங்….)

Leave a Reply

error: Content is protected !!