நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-6

டிராபிக் ரூல்ஸ் என்பதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாதவன், தன் வண்டியின் பிபியை உயர்த்தி (அதானுங்க ஹை ஸ்பீடு) அதிவேகமாகவே அந்த மருத்துவமனையை வந்தடைந்திருந்தான்.வண்டியைக்கூடச் சரியாகப் பார்க் செய்யாது.அவனின் தாயை வைத்திருக்கும் அந்த அறைக்கு ஓடியிருந்தான்.

உள்ளே சென்றவன், அங்கு டாக்டர்ஸ் அவனின் தாயைச் சுற்றி நிற்பதைக் கண்டவன், பதறி அருகே சென்று,”என்னாச்சு டாக்டர்? ஒன்றும் பிராப்ளம் இல்லையே?என்று கேட்டிருந்தான்.

“ஹலோ, மிஸ்டர் தேவ் அநபாயன், உங்க அம்மாவோட ஹெல்த்துல லிட்டில் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது!சீக்கிரம் ஷி வில் பீப்பைன்!”என்று நம்பிக்கை கொடுக்கச் சற்று நிம்மதியானவன்.

“ரொம்ப நன்றி டாக்டர்! உங்களை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்!”என்றான்.

“பரவாயில்லை தேவ், அம்மா தூங்குறாங்க கொஞ்சம் நேரம் கழித்து முழித்ததும் பேசுங்க!”என்று சென்றிருந்தார்.

அவனின் தாயின் அருகில் அமர்ந்தவன், அவரின் கைகளை மென்மையாகப் பற்றி”அம்மா”என்றான்.

அந்தக் குரலில் பல உணர்ச்சிகள், பாசம், பரிதவிப்பு, மரியாதை எல்லாம் கலந்து வந்தது.சிறிது நேரம் அப்படியே அவரின் கையைப் பற்றியிருந்தவனோ, அப்படியே அமர்ந்திருந்தான்.அதே நேரம் கண்விழித்த சாரதாம்மா அவனைக் கண்டு முகத்தைச் சுளித்தவராக.

“யாரும் என்னைப் பார்க்க வரக் கூடாதென்று சொல்லிருந்தேன்ல, மறந்துப்போச்சா?பெத்தக் கடமைக்குச் செத்ததும் வந்து கொள்ளி போடுனு தானே சொல்லிருந்தேன்?இன்னும் நான் சாகல கொஞ்ச நாள் ஆகும் நீங்க இப்போ போகலாம்!”என்று அவர் அவனை வார்த்தைகளால் நோகடிக்க.

“அம்மா ப்ளீஸ், ஏன் இப்படிலாம் பேசறீங்க?கஷ்டமா இருக்குமா!”என்று அவனும் கலங்க.

“எதுக்கு? உங்களுக்குக் கஷ்டமா இருக்கிறதுக்கு நீங்க யாரு?”என்று அவனின் தாயும் சாட்டையாய் சுழன்றடிக்க.

“அம்மா……”

“என்னைய யாரும் அம்மானு கூப்பிட தேவையில்லை,எனக்குப் பிள்ளைகளும் இல்லை.என்னால் எழுந்து எங்கேயும் போக முடியாதுங்கிற தைரியத்துல இப்படி அடிக்கடி வந்து உயிரை எடுத்தால் ஒரேயடியாக இந்தப் பூவுலகை விட்டே சென்றிடுவேன்”என்று அவர் மிரட்ட.

“வேறு வழி இல்லாது வெளியே சென்றவனின், மொத்த கோபமும் இதற்கு ஏதோ ஒரு வகையில் காரணமான ஆத்மி மேல் திரும்ப, வெகுண்டு எழுந்தவன்.டாக்டர்ஸிடம் கூறிவிட்டு நேராக அவன்  இல்லம் நோக்கிச் சென்றிருந்தான்.

(ஏதோ ஒரு வகையில் காரணமா?என்னாவா இருக்கும்……)

சில மணித்துளிகளிலே அவனது வீட்டை அடைந்திருந்தவன் நேராக ஆத்மியை சிறை வைத்திருக்கும் வீட்டை நோக்கி நடந்தவன், அங்கே அவள் இன்னும் எழும்பாதது கண்டு கடுப்புற்றவன், மறுபடியும் ஒரு பக்கெட் தண்ணியை அவள்மேல் சரித்தான்.

அதிர்ந்து விழித்தவள்,அவனை மிரண்ட விழிகளால் நோக்க,”என்ன டூரா வந்திருக்க?ஜாலியா ரெஸ்ட் எடுத்திட்டு இருக்க?இறங்கு வா…”என்றான் கட்டளையாக.

அவனை முறைத்தவள், இறங்க முயற்சிக்க,தலைப் பாரமாய் இருந்ததால் அது முடியாது தடுமாற.அவளின் கைகளை தன் கைகள் கொண்டு லாக் செய்தவனோ,தன்னை நோக்கி அவளை இழுக்க, அதில் அவன் மேல் மோதி நின்றவளின் ஈரம் அவன் நெஞ்சைத் தொட.அவளின் இடுப்பை கைகளால் சுற்றிப் பிடித்திருந்தான்.அந்த உடை முழுக்க நனைந்திருந்ததால்,அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான்.அதைக் கண்டு அவள் கூனிகுருகி அங்கிருந்த பெட்ஷீட்டால் தன்னை போர்த்திக்கொள்ள.

இப்பொழுது கடுப்பாவது இவனது முறை ஆயிற்று அந்த பெட்ஷீட்டையும் பிடுங்கித் தூர எறிந்தவன்,அவளை இன்னமும் இறுக்கி”என்ன நினச்சுட்டு இருக்க?எனக்குக் கோபம் பயங்கரமா வரும், அது சரி, இனிமே என் கோபத்தைப் பத்தி தெரிஞ்சுப்பே!வெய்ட் அண்ட் வாட்ச் “என்றவன்.அவளைச் சட்டென விட, தலைப்பாரம், தண்ணீர், பிடிமானமும் இல்லாது கீழே விழுக!முன்பு காயம்பட்ட அதே இடத்தில் மறுபடியும் காயம் பட, வலியில் துடித்தாள்.அவளின் முகமாற்றல்களை கவனித்தவன்.அதனை சட்டை செய்யாது.

அவளை அப்படியே அங்கேயே விட்டுவிட்டுச் சென்றவன்,ப்ரிட்ஜில் இருந்த குளிரூட்டப் பட்ட தண்ணீரைக் கொண்டுவந்தவன்,அவளின் நெற்றியில் அதை ஊற்றத் துடிதுடித்து விட்டாள் பெண்.

அதைக் கண்டவனின் மனம் கொஞ்சமே கொஞ்சம் சமாதானம் ஆக,அவனது பங்களாவை நோக்கிச் சென்றுவிட்டான்.

தேற்றுபவர் யாரும் இன்றி கதறித் துடித்தால் பெண்.

‘இத்தனை இன்னல்கள், இத்தனை துன்பங்கள் அதுவும் ஒரே நாளில் இன்னும் எத்தனை, நாட்கள் எத்தனை இன்னல்களோ’என்று நினைத்தவளுக்கோ அழுகை முட்டிக்கொண்டு வந்தது!உடையை மாற்றலாம் என்றால் அங்கே எந்த ஆடைகளும் அவளுக்குத் தென்படவில்லை,’இதைக் காய வைத்துப் போட்டுக்கொள்ளலாம் என்றாலும் அதுவரை எதைப் போட்டுக்கொள்ள?இடையில் அவன் வேறு வந்துவிட்டால்’?வேண்டாம் என்று முடிவெடுத்தவளோ, அந்த வீட்டை ஆராய்ந்தால்.

‘இது என்ன இடம்?புதிதாக உள்ளதே, வரும்போது இருந்த இடம் வேறல்லவா?’என்று பலவாறு புலம்பியவள். சுற்றும் முற்றும் பார்த்தாள் கீழே அவள் இருந்த தலம் ஹால், கிட்சன், இரண்டு பெட்ரூம் வித் பாத்ரூமோடு இருக்க! சிறியதும் இல்லாமல் பெரியதும் இல்லாமல் அளவான வீடாக இருந்தது.ஆனால், அனைத்து ஆடம்பரமும் இருந்தது!ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், சோபா, டிவி  என்று தேவைக்கு அதிகமாகவே இருந்தது.

அனைத்து அறைகளிலும்தேடினாள்.இதுபோக அந்த வீட்டில் எதுவும் இல்லை,கிட்சன் காலியாகவே இருந்தது,பிர்ட்ஜும் காலியாகவே இருந்தது ,ஒரே ஒரு அறை மட்டும் பூட்டி இருந்தது!

ஒன்றும் கிடைக்காததால் மறுபடியும் பழையபடி வந்தமர்ந்தவள்.கால் முட்டிகள் இரண்டையும் ஒன்றிணைத்து அதில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டாள்.

(ஐயோ பாவம் யாரு பெத்த பிள்ளையோ!)

*********

தன் பங்களாவை அடைந்தவனோ,நேராக அவனது அறைக்குச் செல்லப் போக,அவனைத் தடுத்து நிறுத்தியிருந்தார் அவனின் தந்தை “அறிவழகன்”.

அறிவழகன்-இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்,தாய் நாட்டிற்காக தன்னலம் இல்லாது தன் உயிரையும் கொடுக்க துணியும் புண்ணிய ஆத்மாக்கள் இவர்கள்! வீரர்கள்,போற்றி பாதிகாக்கப் படவேண்டியவர்கள்!இவர்கள் எல்லையை பாதுகாப்பதால் தான் நாம் நிம்மதியாய் சுதந்திரமாய் வாழ்கிறோம்,அன்று இவர்கள் இல்லாததால் தான் அடிமையாகி வாழ்ந்தோம்!அன்றே இவர்கள் இருந்திருந்தாள் விட்டிருப்பார்களா?காப்பவன் கடவுள் என்றால் இவர்களும் கடவுள் தானே!கண்களுக்குத் தெரியும் கடவுள்!தினமும் ஆராதிக்க வேண்டிய கடவுள்கள்,பூஜிக்க வேண்டிய கடவுள்கள்.நம்முடைய அன்றாட பிரார்த்தனைகளுள் அவர்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்.

“தேவ்,ரொம்ப தப்பு பண்ற!”

“அப்படி தான் பண்ணுவேன்,நீங்க யாரு கேட்க?”

“உன்னோட அப்பாவா கேக்கலனாலும்,ஒரு மனிதனா கேக்குறேன்!மனிதாபிமானத்தோடு கேக்குறேன்!”.

“என்னது,மனிதாபிமானமா?அப்படினா என்னனு தெரியுமா உங்களுக்கு?அன்னைக்கு எங்க அம்மாவை அம்போனு விட்டுட்டு போனிங்களே? அப்போ தெரியலையா?நீங்க எங்க அம்மாவுக்குப் பண்ணின துரோகத்துல பாதி கூட நான் பண்ணலை”.

“நான் ஏன் அப்படி பண்ணினேன்னு உங்க அம்மாக்கு தெரியும்?அது எங்க விஷயம் நீ அதுல தலையிடாத!”

“ஓஹோ!அதே தான் உங்களுக்கும் மிஸ்டர் அறிவழகன்,என் விஷயத்தில் நீங்களும் தலையிடாதீங்க!”என்றான் கெத்தாக.

“நீ பண்றது ரொம்ப பெரிய பாவம்!தப்பு”.

“தெரிஞ்சு தான் பண்றேன்!உங்களோட பேசி டைம் வேஸ்ட் பண்ண முடியாது!எனக்கு நிறைய வேலை இருக்கு”என்றவன். அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.

அவன் போவதையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றவர்.”நான் செய்த அதே தவறை இவன் செய்துவிடக் கூடாது கடவுளே” என்று பிரார்த்தித்தார்.

அறைக்குள் நுழைந்தவனோ”இந்த ஆளு வேற நொய் நொய்யென்று ச்சேய், இதற்குத் தான் இந்த ஆளை வீட்டுக்குள்ள விடாதீங்கனு சொன்னேன்”என்று கடுப்பானவன் ஹரிக்கு அழைத்திருந்தான்!

“சொல்லுங்க சார்”

“ஹரி, நான் சொல்றதுலாம் இன்னும் அறை மணி நேரத்தில் இங்க வந்திருக்கனும்!” என்றவன் வாங்க வேண்டிய பொருளைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

“மில்கி,மச்சான் கம்மிங்!”என்றவனோ,ஒரு சூட் கேஸை எடுத்து சில துணிமணிகளை அடுக்கிக்கொண்டான்.

என்ன தவறு இவர் செய்திருப்பார்?அதை இவனும் ஏன் செய்யப்போகிறான்,அது சிறிய தவறா?பெரிய தவறா?அந்த தவறுக்கு பின்னே உள்ள காரணம் என்ன? பையன் எங்க போறான்?

**************

இரவாகி விட்டிருந்தது,

அந்த வீட்டில் அப்படியொரு அமைதி, அந்த அறையில் வெளிச்சம் சிறு மூலையில் கூடத் தெரியவில்லை, அவளோ அதே நிலையில் அமர்ந்திருந்தாள்.என் வாழ்விலும் வெளிச்சம் இல்லை?இங்கே மட்டும் வெளிச்சம் இருந்து என்ன பயனோ? என்று எண்ணியிருந்தாளோ.

அவன் அந்த வீட்டிற்குள் ஹரியோடு நுழைந்திருந்தான்,ஒளியையும் போட்டான்!அவள் அசைந்தாள் இல்லை.சிறிது நேரம் யோசித்தவன்,அங்கிருந்த ஹோம் தியேட்டரில் ராட்சசன் தீமை ஹை வால்யூமில் வைக்க!அந்த அறையே அதிர்ந்தது!

பயந்து எழுந்தவள்,இவனைக் கண்டதும் இன்னும் பயந்து விட.விழிபிதுங்கி நின்றாள்!அவளை ஏற இறங்கப் பார்த்தவன்.

ஹரியிடம்”அதை வச்சுட்டு கிளம்பு”என்றான்.

“சரி சார்!”என்றவன் அவனின் டிராலியையும்,சில பொருட்களையும் வைக்க.என்னவென்று பார்த்த ஆத்மிக்கோ விடை தெரியவில்லை.பொருட்களை வைத்துவிட்டுக் கிளம்பியிருந்தான் ஹரி.

“வெல்!எனக்கு பசிக்குது மில்கி.எதாச்சும் பண்ணிக் கொண்டுவா!” என்றிருந்தான்.

‘எதுவுமே இல்லாமல் என்னத்த சமைக்க’ என்று நினைத்தவள்!’ஒருவேலை இப்போ வாங்கிட்டு வந்திருப்பானோ’என்று நினைக்க.அவன் வைத்து விட்டுப் போன பொருட்களை ஆராய அதில் ஏதோ வயர் போல் இருக்க!’ஒரு வேலை கிட்சனில் இருக்குமோ’ என்று பார்க்கச் சென்றாள்.

அங்கேயும் எதுவும் இல்லாததைக் கண்டவள் ‘லூசா இவன்?எதுவுமே இல்லாமல் எப்படிச் சமைக்க ?என்று நினைக்க .அவனிடமே கேட்போம் என்று ஒருவாறு முடிவு எடுத்து வர.

தொண்டையை செறுமியவள்”வ..ந்…து”என்று ஆரம்பிக்க.

“என்ன சமைச்சுட்டியா?இதோ வரேன்” என்க.

அவனை வெட்டவா குத்தவா எற்று பார்த்தவள்,”அங்கே எதுவும் இல்லை சமைக்க” என்றாள்.

“என்னாது?அதை முன்னமே சொல்றதுக்கு என்ன?எனக்கு பசிக்குது இப்போ?என்ன பண்ண?”என்றான்.

‘என்ன பண்ணனு என்கிட்ட கேட்டா?நான் மட்டும் என்ன கொட்டிக்கிட்டா உக்காந்திருக்கேன்’என்று கடுப்பானாள்.

அவளின் அமைதியைக் கண்டு அவளிடம் நெருங்கியவன்”எனக்கு பசிக்கிறது,சோ…..”என்று இழுக்க.

அவனின் சோவில் பயந்தவள் பின்னாடி நகர அவளை நகரவிடாது லாக் செய்தவன், அவளின் இதழைக் குறிவைக்க!.

அவனின் நோக்கம் புரிந்ததும் இன்னும் பயந்தவள் “வே..ண்…டா..ம்…”.என்ற திணற.

“ஓ டைம் வேஸ்ட் பண்ண வேண்டாமா?இதோ” என்றவன்.அவளின் இதழ்களைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டான்.

நீண்ட நெடிய பொழுது கழிய , அவளின் கண்ணீர்த் துளிகள் அவனை நனைக்க,அதனை கண்டுகொள்ளாதவன் அவள் சுவாசத்திற்கு ஏங்கும் நேரம் அவளை விட்டிருந்தான்.

“செம்ம டேஸ்ட்…லிப்ஸூக்கு என்ன போடுவ?”என்றவனை

கொலைவெறியோடு முறைத்தவளைக் கண்டு சிரித்தவன்,”என்மேல நீ இருக்கிற காண்டுல உன்னைச் சமைக்க சொன்னா என் நிலைமை எனக்கே தெரியும் அதான் சும்மா ஒரு ப்ளே” என்றானே பர்க்கணும்.நெற்றிக் கண் இருந்திருந்தாள் எரித்திருப்பாள்.

பெட்டில் சென்று படுத்தவன்,ஏசியின் குளுமையை அதிகப்படுத்த ஊசியெனக் குளிர் உடலைத் துளைக்க!அவள் அணிந்திருந்த ஆடை சற்றே கணமான ஆடை என்பதால் இன்னமும் ஈரம் காயவில்லை அதனால் குளிரில் நடுங்கியவளை கண்டுகொள்ளாது.பெட்ஷீட்டால் தன்னை மூடிக்கொண்டவன்.

“மில்கி,உனக்காகத் தான் அந்த கூடை வயர்கள்!நீ என்ன பண்ற நைட் புல்லா உக்காந்து கூடை பின்னுற”என்றான்.

குளிரில் உடல் நடுங்க,உதடு தந்தியடிக்க…”எ…த்த…னை…” என்றாள்.

“ஐம்பது” என்றான் கூலாக.

“வாட்…”

(ஹாய் டியர்ஸ் கிவ் மீ யுவர் சப்போர்ட்டு,கதை உங்களுக்கு பிடிக்குமென்று நம்புறேன்.ஊக்கப்படுத்துங்கள்.குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்.நன்றி)