நெருப்பின் நிழல் அவன்!

நெருப்பின் நிழல் அவன்!

நெருப்பின் நிழல் அவன்

அத்தியாயம்:1

நூறு ஏக்கருக்கும் அதிகமான தென்னந்தோப்பு… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் இல்லாமல் நிசப்தமாக இருக்க! தென்னை மரத்தில் இருந்த ஓலைகள் காற்றில் உறசி சிறு சல சலப்பை ஏற்படுத்தி அந்த இடத்தையே சிறிது அச்சம் கொள்ள வைக்க… அதன் ஒரு பகுதியில் அமைந்து இருந்த ஓட்டு வீட்டில் இருந்து “ஆ….” என்ற அலறல் சத்தம் எட்டு திக்கிலும் எதிரொலிக்க மரங்களில் அமர்ந்திருந்த காக்கைகள் அந்த திடிர் சத்தத்தில், சத்தமாக கறைந்து கொண்டே கலைந்து சென்றன.

“ஆ… என்னை விடுங்கடா. நான் எதுவும் பண்ணலை…. என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க விடுங்கடா….” என்ற அலறல் சத்தம் தொடர்ந்து ஓளிக்க காக்கையின் சத்தமும் சேர்ந்து அந்த பகுதியையே அச்சம் நிறைந்ததாக மாற்றியது. அதை இன்னும்… பயம் கொள்ள வைக்கும் விதமாக முன்னால் காங்கேயன் காளையின் முக அமைப்பை கொண்ட ஜீப் ஒன்று… நூறு மீட்டர் வேகத்தில், அந்த இடத்தையே புழுதி காடாக மாற்றி கொண்டு வந்தது.

ஜீப்பின் முன்னால் இருந்த காங்கேயன் காளையின் கொம்புகள் இரண்டும் கூர் தீட்டிய கத்தி என முன் நோக்கி நீண்டிருந்தது.

பல வருடங்களாக அசையாமல் நின்று இறுகிய தேக்கினை போல் வலிமையை உடைய கைகள் அந்த கரடு முரடான பாதையில் ஜீப்பை லாவகமாக கையாள… ஜீப்பை ஓட்டியவனின் முகம் பாறை என இறுகி இருக்க, கண்கள் இரண்டும் நெருப்பை சிந்த… முறுக்கி விடபட்ட மீசை அவன் வீரத்தை கூற…., லேசாக சிவந்த உதடுகள் மீசைக்கு அடியில் அழுத்தத்துடன் பதிந்து எனக்கு சிரிப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது என்று பறை சாற்றியது.

மேற்கில் மறைந்த சூரியன் அவன் மேல் பட்டு தெறிக்க, கிரேக்க சிற்பம் போல் இருந்தவனையும், அவன் நெஞ்சின் திண்மையையும் தீண்டாமல் சென்றால்…. தன் பிறவி பயன் அடையாது! என்பது போல் தென்றலும் அவனை தீண்டி சென்றது.

அவன் சக்தீஸ்வரன்.

மதுரை மண்ணில் பிறந்து வளர்ந்து லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேல் நிலை தொழில் முறை கல்வியை பயின்றுள்ளான். வீட்டிற்கு ஒற்றை பிள்ளையாக சகல செல்வங்களுடன் ராஜாவாக வளர்ந்தவன். கோபத்தை பிரதானமாக கொண்டவன். அவனை எதிர்த்தவருக்கு இந்த மண்ணில் வாழ தகுதி இல்லை என்ற எண்ணம் கொண்டவன். நூறு மீட்டர் வேகத்தில் புழுதி பறக்க வந்தவன் ஓட்டு வீட்டின் முன்னால் ஜீப்பை நிறுத்தி இறங்கிய ஈஸ்வரன் திரும்பி தன் எதிர் இருக்கையை பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டது போல் ராஜபாளையத்து நாட்டு நாய் ( பைரவ்) ஒன்று ஜீப்பில் இருந்து துள்ளி இறங்கி அவன் அருகில் வந்து நின்றது. அதன் சாதாரண உயரமே சத்தீஸ்வரனின் இடுப்பு அளவிற்கு இருந்தது.

அதை ஒரு பார்வை பார்த்த சக்தீஸ்வரன் வேஷ்டியை மடித்து கட்டி கொண்டே அவன் கையில் உரிமையுடன் உறவாடிய பிளாட்டினம் காப்பை முறுக்கி மேலேற்றி விட்டு விட்டு கதவை திறந்து உள்ளே செல்ல…., அந்த பைரவ் சக்தியின் கண்ணசைவில் கதவின் அருகில் வெளியே நின்று கொண்டது.

சக்தீஸ்வரன் உள்ளே சென்றதும் அதுவரை கேட்ட அலறல் சத்தம் நின்று விட அங்கே உடல் முழுவதும் ரத்தத்துடன் ஒருவன் தரையில் விழுந்து கிடக்க, அவனை சுற்றி கையில் கட்டையுடன் நின்ற நால்வரும் சக்தியின் கண்ணசையில் வெளியேறி விட்டனர்.

தரையில் கிடந்தவனை அழுத்தமாக பார்த்த சக்தி… அங்கே கிடந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான். சக்தியின் பார்வையில் கால் உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவன் குலை நடுங்க ஊர்ந்து சக்தி அருகில் வந்து “சக்தி… என்னை விட்டுடுடா… நான் எதுவும் பண்ணலை டா, நீ என்னை தப்பா புரிஞ்சி கிட்ட ப்ளீஸ்….. டா சக்தி, என்னை விட்டுடு….” என்றான் மன்றாடலாக.

அவன் பேச்சை காதில் போட்டு கொள்ளாத சக்தி அவன் கையை பிடித்து விரலுக்கு சுலுக்கு எடுப்பது போல் ஒவ்வொரு விரலாக நொடித்தவன், எதிரில் இருப்பவன் வலியில் துடிப்பதை தன் வெட்டையாடும் கண்களால் பார்த்து ரசித்து கொண்டே “ஏன் அப்படி பண்ணுன?” என்றான் ஒற்றை சொல்லாக சிங்கத்தின் கர்ஜனையுடன்.

சக்தீஸ்வரனின் கண்ணில் தெரிந்த கோபத்தை பார்த்து மிரண்டவன் “பணம்… பணம் தறேனு சொன்னாங்க! அதுக்கு ஆசைப்பட்டு தெரியாம பண்ணிட்டேன் டா…. ப்ளீஸ்! மன்னிச்சி விட்டுடு சக்தி…” என்று சக்தீஸ்வரனின் காலை பிடித்து கெஞ்ச,

“யாரை… யார்… டா மன்னிக்குறது!” என்று கர்ஜித்து எதிரில் இருந்தவன் நெஞ்சில் எட்டி உதைத்த சக்தீஸ்வரன், “சக்தி…. இல்ல டா…. ஈஸ்வரன்…..” என்றான் அந்த வீடே அதிரும் படி.

“எனக்கு எதிரா கண் அசைச்சாலே காவு கொடுப்பேன் டா. முதுகுல குத்துன உன்னை விடனுமா…???!, விடனுமாடா…????” என்று ஆக்ரோசமாக கேட்டவன் “அது இந்த ஈஸ்வரன் கிட்ட நடக்காது டா” என்று வேங்கை என சீறியவன் “பைரவா….” என்று குரல் கொடுக்க, அவன் அழைப்பிறக்காகவே காத்திருந்தது போல்! உள்ளே வந்து ஈஸ்வரன் அருகில் பவ்யமாக நின்ற பைரவ் அடுத்த நிமிடம் ஈஸ்வரனின் கண் அசைவில் எதிரில் அடி பட்டு கிடந்த ஈஸ்வரனின் நண்பனான அருணின் மேல் பாந்திருந்தது.

“ஆ…. ஆ…. சக்தி வேண்டாம் டா” என்ற அருணின் அலறல் சத்தம் மீண்டும் அந்த இடத்தையே கிடுகிடுக்க வைக்க…, அவனை அலச்சிய பார்வை பார்த்து விட்டு ஈஸ்வரன் வெளியே செல்ல வர “சக்தி….. விட்டுடு டா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். என் பிள்ளைங்க அனாதையா ஆகிடும் டா…..” என்ற அருணின் மன்றாடலில் ஈஸ்வரனின் நடை ஒரு நிமிடம் தடை பட்டு மீள வெளியே வந்தவன்…, வீட்டின் வெளியே இருந்த அடி ஆட்களிடம் பணத்தை கொடுத்து விட்டு “பத்து நிமிஷம் கழிச்சி தூக்கி ஆத்துல வீசுங்க…, பொழைச்சா அவன் புள்ளைக்கு அப்பனா இருக்கட்டும்! இல்லை ஆத்துக்கு உரமாகட்டும். நைட் பிரியாணி வாங்கி சாப்பிட்டுட்டு பைரவ் கு ஐஞ்சி கிலோ ஆட்டு கறி வாங்கி குடுங்க…” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

ஈஸ்வரனின் இத்தனை கோபத்திற்க்கும் ஆளான‌ அருண் ஈஸ்வரனின் கல்லூரி தோழன். தாத்தா வழி சொத்தாக ஆயிரம் ஏக்கர் தென்னந்தோப்பு பராமரிப்பு இல்லாமல் இருக்க, இதை கவனித்த ஈஸ்வரன் மேல் படிப்பு படிக்கும் போதே தேங்காயை வைத்து என்ன தொழில் செய்யலாம் என்று முற்று முதலாக ஆராய்ச்சி செய்தவன் அங்கிருந்தே வேலை ஆட்களை ஏவி தோப்பை பராமரித்து படிப்பு முடிந்து வந்ததும் தனி தொழில் தொடங்கி விட்டான்.

இளநீர் வழுக்கையை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், தேங்காய் எண்ணெய் எடுத்து மொத்தமாகவும்… சில்லறையாகவும்… விற்பனை செய்தல், அதன் சக்கைகளை புண்ணாக்கு, தேங்காய் மிட்டாய் செய்தல், தேங்காய் நார்களை பயன்படுத்தி கயிறு திரித்தல், அதன் கழிவுகளை தென்னை மரத்திற்க்கு உரமாக பயன்படுத்துதல் என தென்னையில் இருந்து வரும் ஒன்றையும் வேஸ்ட் செய்யாமல் அனைத்தையும் உபயோகமாக பயன் படுத்தினான்.

அவனின் புத்தி கூர்மையும்…., உழைப்பும்…., அவனுக்கு அதிக லாபத்தை தந்தது. அப்போது தான் படித்து விட்டு வேலை இல்லை என்று அருண் வந்து நிற்க அவன் படிப்புக்கு ஏற்ற வேலையை கொடுத்தவன் நல்ல ஊதியமும் கொடுத்தான். அந்த விசயத்தில் ஈஸ்வரனை குறை கூற முடியாது. எவ்வளவு கடுமையானவனாக இருந்தாலும் சம்பள விசயத்தில் கணக்கு பார்க்க மாட்டான்.

தொழிலில் லாபமும் நன்றாக வர ஊழியர்களுக்கும் சம்பளம் தாராளமாகவே கொடுத்தான். நன்றாக சென்று கொண்டிருந்த எண்ணெய் தொழில் சில நாட்களாக பின்னடைவை சந்திக்க ஆலையில் இருந்து வெளியே சென்ற எண்ணெய்கள் கெட்ட வாடை அடிப்பதாக திரும்பி வந்தது. அதே நேரத்தில் மார்க்கெட்டில் புதிதாக ஒரு கம்பெனி உள் நுழைய ஈஸ்வரன் சந்தேகம் வலுக்க ஆலையில் வேலை செய்பவரின் செயல்களை கண் கொத்தி பாம்பாக நோட்டம் விட்டவன் சிலரை பிடித்து விசாரிக்க அருண் தான் அழுகிய தேங்காயில் எண்ணெய் எடுத்து பாக்கெட் போட சொன்னதாகவும்…., தரமாக தேங்காயில் எடுக்கப்பட்ட எண்ணெய் வேறு நபர் பெயரில் மொத்த கொள்முதல் செய்யப்பட்டு வேறு கம்பெனிக்கு செல்வதாக தெரிய வந்தது.

அருணின் துரோகம் அவனை அரக்கனாக மாற்றியது. வதம் செய்து விட்டான். தன் முதுகில் குத்திய அருணை விட்டு விட அவன், அவனின் நண்பன் சக்தி இல்லை, ஈஸ்வரன்…, “நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்னும் சிவனின் பின்பம் என்று உணர்த்தி இருந்தான்.

ஆலையில் வேலை செய்தவரையும் விட்டு வைக்கவில்லை தவறு செய்த அனைவருக்கு தகுந்த பதில் கொடுத்து விட்டான்.

அருணுக்கும் பாடம் புகுத்தி விட்டு மீண்டும் அலைக்கு வந்தவன் வேலை எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்த்து விட்டு, நாளைக்கு வெளியே அனுப்பும் பொருட்களின் தரத்தையும் ஒரு முறை உறுதி செய்து விட்டு விட்டிற்கு வந்தான்.

அவன் மட்டும் இல்லை அவன் வீடும் வெளியே இந்து உள்ளே வருபவரை அச்சம் கொள்ளும் படி தான் இருந்தது. கேட்டில் பொருத்தி இருந்த காங்கேயன் காளையின் கண்களை பார்த்தாலே அதை திறக்க அச்சம் எழும் ஆனால் ஒருமுறை திறந்து உள்ளே வந்து விட்டாள் சொர்க்கம் வந்த உணர்வு வரும்.

என்ன தான் ஆண்கள் கடுமையானவர்களாக இருந்தாலும் வீடு என்பது மீனாட்சி ஆட்சி செய்யும் இடம் அல்லவா! அதே போல் தான் ஈஸ்வரனின் வீட்டையும் அவன் அம்மா உமையாள் சின்ன சொர்க்க பூமியாக மாற்றி இருந்தார்.

வீட்டை சுற்றிலும் சின்ன, சின்ன வயல்கள் அமைப்பில் செய்து அதில் எல்லா வகை காய்கறிகள், பழங்கள், கீரைகள் என்று பயிரிட்டு இருந்தார்.

ஈஸ்வரனின் வீடு அவன் ரசித்து கட்டியது. இந்த காலத்து வீட்டை அந்த காலத்து வீடு போல் பழமையான முறைப்படி கட்டி இருந்தான். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு வீடு கேரள மாடலில் கட்டியது போல் தெரியும்.

பழமையான வீட்டை புதுமையாக மாற்றுவது போல் இங்கு புதுமையை பழமையான மாற்றி இந்த காலத்து வீட்டையும் தேக்கால் செய்து இருந்தான். வீட்டின் முன்னால் முகப்பு அறையில் ஊஞ்சல் ஒன்று தொங்க…, அடுத்து வரவேற்பு அறை வட்டவடிவில் அமைத்து அதன் நடுவே சதுர அமைப்பில் இரண்டு படி கீழே இறங்கி செல்வது போல் அமைத்து அங்கே சோபா செட், டீபாய், டீவி அனைத்து வைத்து இருந்தனர்.

வரவேற்பறையிலேயே ஒரு பக்கம் சாமி அறையும், ஈஸ்வரனின் பெற்றோரான உமையாள், ரத்தினம் அறையும் இருக்க, மறு பக்கம் சமையலறையும் அதை ஒட்டி சாப்பாட்டு அறையும் இருந்தது.

தலை வாசலில் நேர் எதிரே மரத்தால் மாடி படி அமைத்து மேலே நான்கு அறைகள் இருக்க அதே போல் அதற்க்கு மேல் தளம் அமைத்து அங்கே அறைகள் எதுவும் இல்லாமல் வட்ட ஹால் போல் இருக்க மனதிறக்கு அமைதி தரும் வகையில் அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

அதன் மேல் கூறை கேரளத்து மாடல் ஒடுகளால் வேய பட்டிருந்தது. மற்ற இரு தளத்தின் ரூப்பும் ( மேல் கூறை) மேலே இருந்து பார்த்தால் கீழே இருப்பவர்கள் தெரியாத அளவு அந்த காலத்தில் செய்வது போல் மரத்தால் தரை அமைத்து இருந்தனர்.

ஈஸ்வரன் ஜீப்பை செட்டில் நிறுத்தி விட்டு வீட்டின் உள்ளே வர, வெளியே முகப்பு அறை ஊஞ்சலில் அமர்ந்து இருந்த ரத்தினம் அவனை கடுமையாக முறைக்க, அவரை பதிலுக்கு பொருள் அறியா பார்வை பார்த்த ஈஸ்வரன் மேல அவன் அறைக்கு சென்று…. இரவு உடைக்கு மாறி வந்து சாப்பிட அமரவும் அவன் போனுக்கு அழைப்பு வந்தது.

“யார்…?!” என்று எடுத்து பார்த்தவன் திரையில் தெரிந்த எண்ணில் செல்லை சைலண்டில் போட்டு வைத்து விட்டான். அந்த என் இது வரை அவன் பதிய விருப்பப்பட்டாமல் பதியாமல் இருக்கும் எண்.

ஈஸ்வரனுக்கு சாப்பாடு எடுத்து வந்த உமையாள் அவன் போனை எடுக்காமல் வைப்பதை பார்த்து “எடுத்து பேசு சக்தி…” என்று கூற அவன் திரும்பி பார்த்து முறைத்த முனைப்பில் கைகள் சிறிதாக நடுங்க எதிர் இருக்கையில் அமர்ந்த உமையாள் அவனுக்கு உணவு பரிமாறினார்.

ஈஸ்வர் சாப்பிட, சற்று நேரம் அமைதியாக இருந்த உமையாள் தைரியத்தை வரவைத்து கொண்டு “நாளைக்கு முகூர்த்த பட்டு எடுக்க போகனும்….., அந்த பொண்ணு நீயும் கூட வரனும் னு ஆசை படுது…. நாளைக்கு ஒரு நாள் உன் வேலையை தள்ளி வச்சிட்டு எங்களோட கடைக்கு வா சக்தி… அந்த பொண்ணுக்கும் ஆசை இருக்கும் இல்ல!! கட்டிக்க போறவன் கூட சேர்ந்து முகூர்த்த புடவை எடுக்கனும்ட்டு….” என்று தன்மையாகவே கூற, ஈஸ்வர் பார்த்த பார்வையில் அவருக்கு கை கால்கள் வெளிப்படையாகவே உதறல் எடுக்க தொடங்கியது.

ஆனாலும் இதை அப்படியே விட மனசு இல்லாமல் “இல்ல…. அந்த பொண்ணு” என்று தொடங்கவும்…, கை நீட்டி அவர் பேச்சை தடுத்த ஈஸ்வர் “இந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு வரதா இருந்தா மட்டும் வர சொல்லுங்க! இல்லையா…!? கல்யாணத்தை நிறுத்திடுங்க…, என்னாலா… அந்த பொண்ணு ஆசைக்கு அவளுக்கு பெட்டி தூக்க முடியாது…. புரிஞ்சிதா?!!” என்று அழுத்தமாக கூறி விட்டு பாதி சாப்பாட்டில் எழுந்து சென்று விட, உமையாள் திகைத்து போய் அமர்ந்து இருந்தார்.

ஊட்டியில் தன் வீட்டின் ஹாலில் இரவு உணவிற்கு அமர்ந்து இருந்த சாரதாவிற்க்கு சாப்பாடு புரையேற மனம் ஏதோ உணர்வில் அடித்து கொண்டது.

சாரதா தொடர்ந்து இருமுவதை பார்த்த அவள் தங்கை சாந்தவி “சாரு… உன்னை யாரோ டீப்பா நினைக்குறாங்க போல!!” என்று கிண்டலாக கூறி விட்டு தண்ணீர் எடுத்து வந்து சாரதாவிடம் தர, அதை வாங்கி குடித்த சாரதா “நினைக்கல…, திட்டுறாங்க…” என்றாள் சோபையான சிரிப்புடன்.

அவள் முக வாட்டம் பொறுக்காத சாந்தவி “சரி… சரி… விடு. திட்டலைனா தான் ஆச்சரிய பயனும்! திட்டுனா நார்மல் ஃபார்ம் தான்!” என்று கூற, அவளை முறைத்த சாரதா “இந்த லைஃப் எப்படி இருக்குமோனு..!! பயமா இருக்கு சாவி. நாளைக்கு என்னமோ…! நடக்க போகுது. அது உறுதி…., என்னோட மனசை ஏன் அவர் புரிஞ்சிக்க மாட்டேங்குறார்??!” என்று வருத்தத்துடன் கூறிய சாரதா பாதி சாப்பாட்டில் எழுந்து சென்று விட, கவலையுடன் போகும் தமக்கையின் முதுகை வெறித்த சாந்தனாவின் மனதிலும் கவலையின் ரேகை.

சாரதா, சாந்தவியின் குடும்பம் சிறு கூடு தான். அம்மா, அப்பா, அக்கா, தங்கை என் நால்வர் மட்டுமே… நான்கு வருடத்திற்க்கு முன்பு மழை காலத்தில் தேயிலை பறிக்க சென்ற போது மண் சரிவில் சிக்கி இறந்து விட சாந்தவியின் பொறுப்பு சாரதாவிடம் சென்றது.

சாரதாவும் தன் படிப்பை நிறுத்தி விட்டு தேயிலை பறிக்க செல்ல, சாந்தவியும் அக்காவிற்கு துணையாக தேயிலை பறிக்க சென்று கொண்டே படிப்பை தொடர்ந்தாள். இப்போது சாந்தவி கல்லுரி படிப்பை முடித்து விட, சாரதா படிப்பை அஞ்சல் முறையில் பயில்கிறாள்.

இப்போது அவளுக்கு திருமணம் கூடி வர அதை நினைத்து சந்தோச பட முடியாமல் பல சிக்கல் இருந்தது. சாரதா சொன்னது போல் நாளை எதுவும் தவறாக நடக்காமல் நல்ல விடியலாக அமைய வேண்டும் என்று வேண்டி கொண்டே சாந்தவியும் படுக்க சென்றாள்…

நாளை விடியல் அவர்களுக்கு என்ன வைத்திருக்கிறதோ..! நாமும் பொறுத்திருந்து பார்ப்போம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!