நெருப்பின் நிழல் அவன்! 21 டீசர்

முதல் பார்வையில் இதயம் பறித்தாய்,
கண்ணில் புகுந்து காதல் வளர்த்தாய்..,
நெஞ்சம் புகுந்து உணர்வூட்டினாய்..,
சிந்தை புகுந்து சித்தம் கலைத்தாய்..,
பித்தன் என்று என்னையே உணர வைத்தாய்…,
புன்னகை கொடுத்து எனக்குள் மென்நகை புகுத்தினாய்…,
நான்! நான் அல்ல நீ என்று உணரும் நொடி உயிருடன் உயிர் பறித்தாய்..,
கண்ணீருடன் காதல் கேட்க கை விட நினைக்கிறாய்…!
கல்லாய் போன உன் நெஞ்சை என்ன செய்து கரைத்திட?!
பதில் கொடடி பெண்ணே…!
இந்த பித்தனும் சித்தம் தெளிய…,
துளி காதல் கொடு என் இதய கூட்டிற்கு உயிர் கொடுக்க,
மறித்தாலும் உன் காதலை சுமந்து சென்று விடுகிறேன் கண்மணி…
மன்னிப்பாயா? மறனிக்க செய்வாயா? எதை நீ கொடுப்பாய் பெண்ணே…?? 💞