நெருப்பின் நிழல் அவன்! 6

eiC6JL558893-ed9e2a2d

அத்தியாயம்: 6

ஊட்டியின் குளிரால் கூட சாந்தவி மனதின் கொதிப்பை அணைக்க முடியவில்லை. பாவைக்கு யாரை நம்புவது என்றும் தெரியவில்லை. இதுவரை எதை பற்றியும் கவலை இல்லாமல் சிறு பிள்ளை என சுற்றி வந்தவளுக்கு இப்போதைய நிலமையை எப்படி கையாள என்று தெரியவில்லை.

அனல் காற்றுக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதையாகி போனது சாந்தவியின் நிலமை. யாரிடம் இருந்து விலகி இருக்க நினைத்தாளோ அவனுக்கே இப்போது தங்களை உறவாக்கி கொண்டுள்ளாள். நண்பனும் உறவினன் தான் என்பது சாந்தவியின் எண்ணம்.

மிதுன் பேச்சில் சாந்தவி அவனை அடிபட்ட பார்வை பார்க்க, “நீ… என்ன நினைக்குறனு புரியுது சாவி, ஆனா.. நீ காணாம போன நேரம் சக்தி இங்க என்னோட தான் இருந்தான்” என்று மிதுன் கூற, அதற்கு எதிர் வாதம் ஏதும் செய்யாமல் அவனுக்கு இதழ் தாண்டாத புன்னகையை பதிலாக கொடுத்த சாந்தவி, சாரதாவை அணைத்து கொண்டாள். விளக்கம் கொடுத்தாலும் வீண் என்று அமைதியாக இருந்து கொண்டாள்.

தன் சிறுபிள்ளை ‌செயல் தன் உடன் பிறப்பையும் பாதிக்குமோ..! என்று பயமா இருந்தது சாந்தவிக்கு. ஆனால்… அதை பற்றி பேசி சாரதாவையும் குழப்ப விரும்பாதவள் “டேக் கேர் சாரு…, பத்திரமா இரு” என்று தமக்கை கன்னத்தில் அழுத்த முத்தமிட்டவள் “போய்ட்டு வாங்க..” என்றாள் சாரதாவை விடுவித்து உணர்ச்சி துடைத்த முகத்துடன்.

“உன்னை தனியா விட போறது இல்லை சாவி.. நீயும் எங்களோட தான் வர, நாம‌ எல்லாரும் சக்தி கல்யாணத்துக்கு அவன்‌ ஊருக்கு போறோம்..” என்று மிதுன் கூற, “ஆமா.. நீ தனியா எங்க போவ..! இப்போ வீடும் இல்லை! எங்களோடவே வா…” என்று சாரதாவும், சாந்தவியின் கையை ‘விடமாட்டேன்’ என்பது போல் பற்ற,

சாரதாவின் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்து.. தன் கையை தமக்கையிடம் இருந்து விடுவித்து கொண்ட சாந்தவி… திரண்டு வந்த கண்ணீரை தமக்கை அறியாமல் மறைத்து கொண்டு கோவிலுக்குள் ஓடி விட்டாள். கடவுள் பதில் சொல்வார் என்று சென்றாளோ…!!

சாந்தவி பின்னால் செல்ல போன் சாரதாவை போக விடாமல் தடுத்த சக்தி “நீ.. இருமா, நான் பேசி கூட்டிட்டு வரேன். நீ போனா.. ஈசியா சமாளிச்சிடுவா” என்று கூறி சாந்தவியை தொடர்ந்து சக்தீஸ்வரனும் சென்றான்‌.

சாமி சன்னதியில் கைகள் கூப்பி.., கன்னத்தில் கண்ணீர் கோடாக வடிய, வாய் ஏதோ முனுமுனுக்க நின்ற சாந்தவியை… முகத்தில் சலனமே இல்லாமல் வெறித்த ஈஸ்வரன், சில நிமிட இடைவெளி விட்டு அவளை நெருங்கியவன் அவள் சுதாரிக்கும் முன் பாவையின் கை பிடித்து கோவிலை விட்டு வெளியே இழுத்து வந்தான்.

சக்தி தன்னை தொடர்ந்து வருவான் என்று எதிர் பார்க்காத சாந்தவி, அவன் சட்டென்று இழுக்கவும்… அவன் முதுகில் மோதி தன்னை நிலை படுத்தியவள் “என்னை விடுடா.. அதான் என் அக்காவையும் என்கிட்ட இருந்து பிரிச்சி என்னை அனாதை ஆக்கிட்ட, வீட்டுக்கும் வெடி வச்சி தெருவில் விட்டுட்டியே… அப்பறமும் உனக்கு என்ன வேணும்..?!, விடு.. என்னை, நான் சாக போறேன். எனக்கு வாழவே பிடிக்கலை, எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்…” என்று அழுகையுடன் சக்தீஸ்வரனின் பிடியில் இருந்து திமிர,

சாந்தவியின் சொல்லில் ஈஸ்வரனின் இதயம் ஒரு நொடி நின்று துடிக்க, கண்கள் கோபத்தில் கனலை ஏந்த அவளை அழைத்து வந்தவன் கோவிலில் இருந்து வெளியே வந்ததும்… மண்டபம் போல் இருந்த இடத்தின் தூணுக்கு பின்னால் இழுத்து சென்று சாந்தவியை தன் கை வளைவில் நிறுத்தியவன்.., அவன் இதயத்தின் நொடி நேர பதட்டத்தையும் அவள் இதழில் தன் இதழை வன்மையாக பதித்து தீர்த்து கொண்டான்.

சக்தீஸ்வரனின் கைகள் பாவையின் இடையை பதம் பார்த்தது. சக்தியிடன் இருந்து இந்த செயலை எதிர் பார்க்காத சாந்தவி அவன் பிடியில் இருந்து திமிர, சக்தியின் இதழ் இன்னும் அதிக வன்மைவுடன் பாவையின் இதழை அக்கிரமித்தது. திமிரினால் வன்மையை கூட்டிய ஈஸ்வரனின் செயலில் சாந்தவி அடங்க, பாவையின் எதிர்ப்பு அடங்கியதும் அவளின் இதழுக்கு விடுதலை அளித்தவனின் கை மங்கையின் மலர் இடை மென்மையை ஆராய, சாந்தவிக்கு அவனிடம் விட்ட சவால் நினைவில் வர பல்லை கடித்து கொண்டு அவன் செய்கையை பொருத்து நின்றாள்.

உடல் பயத்தில் நடுங்க, இதயம் ஊமையாக ரத்த கண்ணீர் வடித்தது. கண்களில் கண்ணீர் வற்றி விட்டது போலும் அந்த கொடூரனை பார்க்க பிடிக்காமல் இறுகி இருந்தது. அவன் இதழ் தொட்ட இதழை கழுவி விட மனம் துடித்தது. அவன் கை தன் இடையை சோதிக்க நெஞ்சின் கொதிப்பை அடக்க முடியாமல் “விட்டுடு ப்ளீஸ்..” என்றாள் இறைஞ்சுதலாக அதற்கு மேல் அவன் செய்கை பொறுக்க முடியாமல்,

“விடவாடி இவ்வளவு கஷ்டப்பட்டேன்!!. உன் துடிப்பை பார்க்க எவ்வளவு ஆசையா இருக்கேன்..!” என்று கேட்டு மீண்டும் இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை குறைத்தவன் பாவையின் கன்னத்தில் தன் குத்தீட்டி மீசை குத்த நெருங்கி நிற்க, சாந்தவி தவித்து திமிர அவளை தன் கை வளைவை விட்டு நகர விடாமல் செய்தவன் பாவையின் காதில் “விட்ட சவால்’ல தோற்றா சொன்னதை செய்யனும் னு சொன்னதை மறந்துட்ட போல!!” என்றான் ஆண்மை நிறைந்த குரலில்.

அந்த குரல் ஏதோ செய்ய சாந்தவியின் மனதில் பாரம் ஏறியது. அதற்கு மேல் அவன் பிடியில் நிற்க முடியாமல் சக்தியின் நெஞ்சில் கை வைத்து தள்ளி அவன் பிடியில் இருந்து விடுபட போக… அவள் கையில் அணிந்து இருந்த அலங்கார வளையல் சக்தியின் கழுத்து நகையுடன் உறவை பிணைத்து கொண்டது அவளை போக விடாமல்.

எப்படியும் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட வேண்டும் என்று நினைத்த சாந்தவியின் கண்கள் பயமும் பதட்டமும் சேர்ந்து அபிநயம் பிடிக்க, விரல்கள் நடுக்கத்துடன் இணைத்த உறவை பிரிக்க போராட.., பாவையின் போராட்டத்தை பார்த்த ஈஸ்வரனோ விசம சிரிப்புடன் அவள் கன்னத்தை புறம் கையால் மென்மையாக வருடியன் “பிரம்மன் வடிச்ச சிலையில நீயும்… ஒருத்தி டி. சேலையில் சும்மா சிக்குனு இருக்க” என்றவன் கை அடுத்த நொடி முரட்டு தனமாக பாவையின் கழுத்தை நெரிக்க “இனிமேல் நீ சேலை கட்டுனதை நான் பார்த்தேன்… அப்பறம் நடக்குறதுக்கு நான் காரணம் இல்லை. புரிஞ்சிதா..!!” என்றான் அழுத்தமாக.

“ம்…” என்று தலை அசைத்த சாந்தவி “என்னை விட்டுடேன்! நீ தந்த வலியையே.. என்னால தாங்க முடியலை!, நான் தெரியாம பண்ணிட்டேன்… ப்ளீஸ் மன்னிச்சிடேன்!!” என்று விரக்தியுடன் சக்தியை கை எடுத்து கும்பிட, அவள் கையை உயர்த்தியதில் அவள் வளையலுடன் உறவாடிய அவனின் கழுத்து சங்கிலியும் இழுக்கப்பட சாந்தவியை மோதி நின்ற சக்தி “விட்டுடுனு சொல்லிட்டு நீயே இழுத்து வைக்குற டி..” என்று இரு பொருள் பட கூறியவன், சாந்தவியின் கை வளையலை பறித்து… சட்டைக்குள் போட்டு தனதாக்கி கொண்டவன் “உன்னை விடுற‌ எண்ணம் இப்போதைக்கு இல்லை. வரும்போது விட்டுடுறேன்…” என்றவன் மீண்டும் அவள் கை பிடித்து இழுத்து சென்றான்.

ஈஸ்வரன் சாந்தவியை அழைத்து வந்ததும் சாரதா அவனை நன்றியுடன் ஏறிட்டவள் சாந்தவியின் கையை பிடித்து கொண்டாள். ஈஸ்வரனின் கார் மதுரையை நோக்கி பயணம் ஆக புதுமண தம்பதியரான சாரதா, மிதுன் இருவரும் பின்னால் இருக்க, அடிக்கடி தன்னை தொட்டு மீளும் சக்தியின் கடைகண் பார்வையை சகிக்க முடியாமல்… பாவையவள் உடல் குறுகி காளையின்‌ எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.

ஊட்டி தாண்டி மேட்டுபாளையம் செல்லு பாதை ஒரு இடத்தில் மண் தரையாக குண்டும் குழியுமாக இருக்க சாந்தவியை பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை உதிர்த்த ஈஸ்வரன் காரை பள்ளத்தில் விட்டவிட்டு “பச்..” என்று கோபமாக ஸ்டேரிங்கில் குத்தியவன் “மிதுன் கார் பதிச்சிடுச்சி டா..” என்றான் அறிவிப்பாக, பார்வை மொத்தத்தையும் பாவையின் மேல் பதித்து.

“இப்ப‌ என்னடா பண்றது?!” என்று மிதுன் கேட்க, “யாராவது இறங்கி தள்ளனும்..” என்று ஈஸ்வரன் சொல்லவும், “சரி.. அப்போ நான் தள்ளுறேன். நீ ஸ்டார் பண்ணு..” என்று மிதுன் இறங்க போக, “இல்லைடா நீ இரு.., ஏதாவது கல் எடுத்து கார் டையர் முன்னாடி வச்சா ஏறிடும்” என்றவன் “சாந்தவி..” என்று முதல் முறை பாவையின்‌ பெயர் சொல்லி அழைக்க,

அங்கே நடப்பதை எதையும் அறியாமல் தன் நினைவில் மூழ்கி இருந்த சாந்தவி ஈஸ்வரனின் அழைப்பில் திரும்பி அவனை பொருள் விளங்கா பார்வை பார்க்க…, கார் பதிந்ததை சொன்னவன் “ஏதாவது சின்னதா ஒரு கல் எடுத்து வை..” என்று கூறவும், “அதுக்கு ஏன் நான் போகனும்..!!?” என்று‌ மனதில் எழுந்த கேள்வியை மனதிலேயே வைத்து கொண்டு இறங்கி சென்று, அவன் சொன்னது போல் கல்லை எடுத்து வைத்து விட்டு அவள் நகரும் முன் ஈஸ்வரன் காரை ரேஸ் செய்து விட, காரின் பின் டயர் இரண்டும் வேகமாக சுழன்று பாவைக்கு சகதி சபிசேகம் நடத்தி இருந்தது.

கண்ணில் தெரிந்த சகதியில் “அம்மா.. ஸ்ஆஆஆஆ…” என்று வலியில் துடித்த சாந்தவி கை கொண்டு கண்ணை மூடி கொள்ள, “அச்சோ சாவி..!” என்று பதறி இறங்க போன சாரதாவையும், மிதுனையும் காரின் பின் டோர் இரண்டையும் லாக் செய்து இறங்க விடாமல் செய்த ஈஸ்வர் “நீ.. இருமா, நான் போறேன்..” என்று தண்ணீர் பாட்டிலுடன் இறங்கி வந்தவன், பாவைக்கு முகம் கழுவ உதவி செய்து.. அவள் தெளிந்ததும் “நீ… அழகா இருந்தா தானே அடிக்கடி பாக்குறேன்! இனிமேல் பார்க்க மாட்டேன்.., இனி ஒரு தடவை நீ சேலை கட்டுன..! கட்டுன சிலைக்கும் ஆபத்து… சேலைக்கும் ஆபத்து…” என்று மீண்டும் ஒரு முறை கோபத்தை காட்டி எச்சரித்து விட்டு முன்னால் செல்ல, அவன் முதுகை வெறித்த பாவையின் மனம் சக்தியின் செயலில் உணர்வை இழந்து இருந்தது.

காலையில் அந்த சேலையை ஆசையாக கட்டி கொண்டு கண்ணாடியில் தன்னை பார்த்து தானே ரசித்தது நினைவு வரவும்… குனிந்து தன்னை பார்த்தவள் விரக்தியாக புன்னகைத்து கொண்டாள். சாந்தவி சென்று காரில் அமர “சாவி… என்னடி! தள்ளி நின்று இருக்கலாம் இல்ல..!, இப்போ பாரு..” என்று வருத்தமாக கேட்ட சாரதா கர்சீப் கொண்டு பாவையின் முகம் துடைத்தவள் “அண்ணா.. பக்கத்துல ஏதாவது துணி கடை இருந்தா… காரை நிறுத்துங்க….” என்க,

“அதெல்லாம் வேண்டாம் சாரு. இனிமேல் இதெல்லாம் நான் பழகி தான் ஆகனும்…” என்றாள் பாவை விரக்தியாக. “ஏன்டி சாவி.. இப்படி எல்லாம் பேசுற..!!, எனக்கு உன்னை தனியா விட்டுட்டு கல்யாணம் பண்ணது தப்போனு தோனுது…!” என்று அழுகையுடன் இயம்பிய சாரதா சாந்தவியின் கையை இறுக பற்றி கொள்ள, “இப்போ.. நீ லுசு மாதிரி பேசாத..!” என்ற சாந்தவியும் தமக்கையின் கையை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்.

சாரதாவின் தொடர்‌ நச்சரிப்பில் ஈஸ்வரன் வேண்டா வெறுப்பாக காரை துணி கடை முன்பு நிறுத்த, பெண்கள் இருவரும் உள்ளே செல்ல அவர்களுக்கு துணையாக மிதுனும் செல்ல, காரில் இருந்த ஈஸ்வரனின் முகம் இறுகி இருந்தது.

யோசனையில் புருவம் நெரிய அமர்ந்து இருந்த சக்தியின் இதழ்கள் வஞ்ச புன்னகையில் விரிய.. போனை எடுத்து யாருக்கோ.. அழைத்து, சில கட்டளைகளை இட்டு விட்டு இறங்கி அவனும் கடைக்குள் சென்றவன் “எடுத்தாச்சா..?, லேட் ஆகுமா..!” என்று மிதுனிடம் கேட்க, “அறை மணி நேரம் ஆகும்..” என்ற பதில் சாரதாவிடம் இருந்து வரவும், “எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சிட்டு நானும் அறை மணி நேரத்துல வந்துடுவேன். நீங்க பொறுமையா எடுத்துட்டு கூப்பிடுங்க..” என்றவன் கிளம்பி விட அதன் பிறகே சாந்தவியால் நிம்மதியாக மூச்சி விட முடிந்தது.

அவன் செய்த செயலால், சேலை எடுக்காமல் சுடிதார் எடுத்த பாவை அதையும் மங்கிய கலரில் தேர்வு செய்ய, அவளை தடுத்த சாரதா “ஏன்டி.. இப்படி காடியா எடுக்குற?, நாம அந்த அண்ணா கல்யாணத்துக்கு போறோம்… கொஞ்சம் நல்லதா தான் எடேன்” என்றவள் பிறகு அவளே நல்லாதாக ஒரு சல்வார் தேர்வு செய்து, சாந்தவியை ‘மாற்றி விட்டு வர சொன்னவள்’ இன்னும் இரண்டு சல்வாரும் புடவையும் சாந்தவிக்கு எடுத்து கொண்டவள், அங்கே சென்று மாற்று உடைக்கு என்று அவளுக்கும், மிதுனுக்கும் என சில உடைகள் எடுத்து விட்டு அவர்கள் வெளியே வரவும்.., சக்தியும் வந்து விட நால்வரும் மதுரையில் ஈஸ்வரனின் திருமணம் நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.

திருமண மண்டபம் முழுவதும் அலங்காரத்தில் ஜொலித்தது. மாலை ஈஸ்வரனின் நிச்சயதார்த்தம். சாரதா, மிதுன் இருவருக்கும் சக்தி வரவேற்பு ஏற்ப்பாடு செய்திருந்தான், அதன் படி கேரள முறையான‌ ஜன்டா மேளம் முழங்க.., யானை மாலை அனுவிக்க, உமையாள் ஆரத்தி எடுத்து.. இருவரையும் உள்ளே அழைத்து சென்றார்.

சாரதாவையும், மிதுனையும் மேளகாரர்களும், ஈஸ்வரின் உறவினர் சிலரும் சூழ்ந்து கொள்ள, பாவை தனியாக விடபட்டாள். ஏற்கனவே இங்கே வர துளி விருப்பம் இல்லாமல் வந்தவள், இப்போது உள்ளே செல்ல விருப்பம் இல்லாமல் வெளியவே நின்று விட்டாள்.

தெரியாத இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மண்டபத்தின் அலங்காரத்தை வேடிக்கை பார்த்து கொண்டு நின்றவள், கண்கள் அச்சரியத்தில் விரிந்தது.., சாரதாவை ஆண் அச்சியில் வார்த்தது போல் இருந்த மனிதரை பார்த்து.

இருவருக்கும் உள்ள வித்தியாசம் அவர் ஆண்களுக்கே உரிய உயரம் மற்றும் திடத்துடன், முகத்தில் மீசையுடனும் இருந்தது தான். சாந்தவி அவரை அதிசயமாக பார்த்து கொண்டிருக்க, அவரும் எதேச்சையாக திரும்பும் போது சாந்தவியை பார்த்தவர், முதலில் கூர்ந்து பார்த்தவர் பின்பு கண்ணில் கோபம் குடியேற அவளை பார்த்தவர், பின்பு சற்று பதட்டத்துடன் திரும்பி மண்டபத்தை பார்த்துவிட்டு அவசரமாக சாந்தவியிடம் வந்து..

“யாருமா நீ..??, ஏன் இங்க வந்த..! போய்டுமா…” என்று கூறி மீண்டும் பதட்டத்துடன் உள்ளே பார்க்க, ஒரு நிமிடம் என்றாலும் அவர் கண்ணில் தோன்றிய கோபத்தை பார்த்தவள், அது ஏன்.. என்று புரியாமல் இப்போது அவர் பதட்டத்துடன் போக சொல்வதும் ஏன்.. என்று புரியாமல் “ஏன்.. ஆங்கிள்! நான் என்ன பண்ணேன்…?, என்னை ஏன் போக சொல்றிங்க..?” என்று கேட்டவளுக்கு ‘அவருக்கு தன்னை முன்பே தெரியுமோ..!!’ என்ற எண்ணம் தோன்ற “உங்களுக்கு என்னை முன்னாடியே தெரியுமா…?!!” என்று கேட்க,

“நீ.. எதுவும் பண்ணலமா, அதான்.. உன்னை போக சொல்றேன். சீக்கிரமா இங்க இருந்து போமா.., உன்னை எனக்கு தெரியாது” என்று ரத்தினம் கூற, ‘என்னை யார் என்றே தெரியாமல் ஏன் முறைத்தார்!!’ என்று பாவை நினைக்கும் போதே.. “அப்பா நான் வீட்டுக்கு போய்ட்டு கிளம்பி வரேன்” என்று வந்த சக்தி.., சாந்தவியும் அங்கே நிற்பதை பார்த்து ரத்தினத்தை பார்த்தவன் மீண்டும் சாந்தவியிடம் திரும்பி “நீ… இங்க என்ன பண்ற? சாரு தேடுறா உள்ள போ..” என்றான் கட்டளையாக.

ஈஸ்வரனின் கட்டளையை ஏற்று மண்டபத்திற்குள் சென்ற சாந்தவி ‘இது.. இவன் அப்பாவா!!’ என்று இருவரையும் ஆச்சரியமாக பார்த்தவள் ‘அவர் வெளிய போக சொல்றார்!, இவன் உள்ள போக சொல்றான்‌!, சாரு இவரை மாதிரி இருக்கா…, இவனும் சாருனு உரிமாயா… சொல்றான்’ என்று யோசித்து கொண்டே வந்த சாந்தவிக்கு முதல் முறை சக்தீஸ்வரன் தன்னை ‘தான் பேசியதற்காக மட்டும் கடத்தவில்லையோ…??! காரணம் வேறோ..!!’ என்று தோன்ற, பின்னால் திரும்பி பார்த்தாள்.

அப்பா மகன் இருவரும் ஏதோ கோபமாக பேசி கொள்வது புரிய பாவையின் எண்ணம் உறுதி ஆனது.

“சக்தி நீ பண்றது தப்பு டா. அந்த பொண்ணை எதுவும் பண்ணாத..! இந்த பாவம் அடுத்து, நீ அவளை துறத்துற‌ மாதிரி உன் பிள்ளை துறத்தும். முடிச்சி போனதை விடு..” என்று ரத்தினம் கூற

“துறந்த கூடாது னு தான். கல்யாணம் ‌பண்ணி பக்கத்துலயே வச்சிக்க போறேன்…” என்றான்‌ முகம் இறுக,

மகன் பேச்சில் அதிர்ந்த ரத்தினம் “டேய் என்னடா சொல்ற..!!?, அப்போ அந்த பொண்ணோட நிலமை..!!, உன்ன நம்பி தான் உன் அம்மா எல்லாம் செய்தா…” என்று ரத்தினம் கோபமாக கூற, “நாம நிறுத்த போறது இல்லை அவங்களே நிறுத்துவாங்க, நாம ஸ்பேரா தான் இவளை யூஸ் பண்ண போறோம்..” என்றவன் சென்று விட, ரத்தினம் செல்லும் மகனை ஆத்திரமும், ஆற்றாமையுமாக பார்த்து நின்றார்.

நிழல் தொடரும்….