பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 37

மதுரையில், நத்தம் சாலையில், 7.4 அடி உயரத்தில் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வருகிறது… கட்டும் பணி தொடங்கி ஓராண்டாகிறது..மதுரை சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கிமீ தூரம் ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்படுகிறது.பறக்கும் பாலத்திற்காக மொத்தம் 225 தூண்கள் நேர்கோட்டில் அமைக்கப்படுகின்றன. 7.4 தூரமும் ஒரே நேரத்தில் ரோட்டில் குழி தோண்டுதல், தூண்கள், அதன் உச்சியில் கான்கிரீட் சிறகுகள் அமைத்தல், தூண்களை இணைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளிலும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலம் அமையும் பகுதி முழுவதும் 60 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்தப்பட்டு, மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

நடுரோட்டில் தூண்கள் கட்டுதல், இருபக்கமும் வடிகால் அமைத்தல், மின்கம்பங்களை இடம் மாற்றி அமைத்தல், ரோடு விரிவாக்கத்திற்காக கட்டிடங்களை இடித்தல் போன்ற பணிகள் நடைபெற்றுள்ளன.

 நாராயணபுரத்தில் கோவில் கட்டிடம் நவீன தொழில் நுட்பத்தில் நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கண்மாய் கரை இடிக்கப்பட்டு தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுபோன்ற பணிகளால் அந்த ரோடு முழுவதும் நொறுங்கி பாழ்பட்டு கிடக்கிறது. மழை பெய்தால் சகதிக் காடாகிறது. வெயிலடித்தால் புழுதி புயல் வீசுகிறது. இதனால் அந்த ரோட்டில் செல்லும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள். குண்டும் குழியுமாக கிடப்பதால் கட்டுமான பணி நடக்கும் தூண்களுக்கு நடுவில் செல்லும்போது டூவீலர்களில் செல்வோர் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்த வண்ணம் உள்ளனர். புழுதியை சுவாசிப்பதால் சுவாச கோளாறு உள்பட நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள்.

மதுரையில் கட்டப்படும் அந்தப் பறக்கும் பாலத்தைப் பற்றித் தகவல்களைச் சேகரிக்கவே, மயூரனும் விஷ்ணுவும் அங்குச் சென்றனர்… அவர்களுடன் புகைப்படக்காரரான ரஞ்சித்தும் வந்தவன். பாலத்தையும் போக்குவரத்தையும் புகைப்படம் எடுத்தான்.  மயூரனோ, பாலம் கட்டும் பணியாளர்களிடம்  செய்திகளைச் சேகரித்தான். அதன்பின்  அந்தச் சாலையில் பயணிக்கும் மக்களிடமும், இந்தப் பாலத்தினால் கிடைக்கும்
நன்மைகளும் விழையும் இடையூறுகளையும் கேட்டுக் கொண்டு இருந்தான்.

 இவையாவும் விஷ்ணு, ஒரு மாணவியாகக் கற்றுக் கொண்டிருந்தாள்… செய்தியாளர்கள், மொழியறிவு, தட்டெழுத்துப் பயிற்சி, சுருக்கெழுத்துப் பயிற்சிக் குறிப்பேடு, எழுதுப் பொருள்கள் தகவல் கோப்பு எதிர்கால நாட்குறிப்பு. இணையம் பயன்படுத்தும் திறன். ஆகிய வற்றைத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

செய்தியாளர்களை,  வகையாகப் பிரிப்பார்கள், அதில் பணியும் உண்டு… நகரச் செய்தியார்கள், ஊருக்குள் செய்திகளைத் திரட்டும் உள்ளுர்ச் செய்தியாளர்கள். நகர்ப்புறச்செய்தியாளர், உள்ளூர் மட்டும் பிற ஊர்களுக்குச் சென்று செய்திகளைத் திரட்டுவார்கள். தேசிய மட்டும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள், மாநிலம் அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களும் உண்டு… பகுதி நேரச் செய்தியாளர், முழு நேரப் பணியாளர்கள், மன்றச் செய்தியாளர்கள் வகைகளும் உண்டு..

இவர்கள் இருவரும் உள்ளூர்ச் செய்தியாளர்களாக, உள்ளூரில் நடப்பவைகளைச் செய்திகளாகச் சேகரித்துச் சொல்லும் வேலையில் தான் இருக்கின்றனர்..

விஷ்ணுவின் கண்கள் மயூரனை விட்டு அகலவில்லை…  அவன் மக்களிடத்தில் கேட்கும் கேள்விகளும், சூசகமாகக் கேட்டு, கட்டுமானப் பணியாளர்கள் செய்யும் தவறுகளையும், இந்தப் பாலத்தால் அழிந்தவைகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டான்..

மலைப்பாய்ப் பார்க்கும் அவள் பார்வையை உணர்ந்தாலும், வேலை நேரமென்பதால், காரியத்தில் கண்ணாக இருந்தான்..  அந்த இடத்தை மூவரும் சுத்திச்சுத்தி வந்தவர்கள், திருப்தியடையும் வரை செய்திகளைச் சேகரித்தனர்.

ரஞ்சித்தும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு சென்று விட்டான். விஷ்ணுவின் கண்கள் சோர்ந்து போயிருந்தது ..வேலைச் செய்தது என்னவோ மயூரன் தான் ஆனால் சோர்ந்து போனது விஷ்ணுத் தான்.

பிடித்த வேலைச் செய்யும் போது, அதில் கிடைக்கும் உற்சாகமும் உத்வேகமும்  அழுப்புத் தெரியாமல்  மறைத்து விடும். அப்படித்தான் மயூரனுக்கும் முதலில் இந்தப் பணி அவனுக்கு உயிர் என்றிடலாம்..  பின் காதலியுடன் ஊர்ச் சுத்துவது கசக்குமா என்ன, மழைச்சாரலாய்ப் பக்கத்தில் இருந்து கொண்டாள். , உதயாதிபன்,  உச்சியில் நின்று கொண்டு, தன் உக்கரத்தைக் காட்டி உயிரையும் உறிந்துக்கொண்டிருக்கிறான்.

எவ்வளவு தான் அவனது சக்தியை உறிய முயன்றாலும் அசராது நிற்பவனைக் காணக் கலங்கிப் போனான் கதிரவன். அவனது சக்திப் பானம் பக்கத்தில் இருக்க, எங்குச் சென்றாலும் அவனோடு உரசிக் கொண்டு, அவன் உடலுக்குள் சீதளத்தைப் பாய்ச்சினாள்… இன்னும் அவன் உடலில் தெம்பு இருப்பதை உணர்ந்த உதயன், அவனது இந்த உற்சாகத்திற்குக் காரணம் அறிந்து அவளை வாட்டினான் வானவன்..

“மயூ, ஆஃபீஸ்ல இருக்கிற மாதிரி வேலை எதுவும் இல்லையா? இப்படிக் களத்தில இறங்கிப் பார்க்கிற வேலைத் தான் இருக்கா?” என மூச்சு இரைக்கக் கேட்டாள்..

” ஒ….  இருக்கே, ஆஃபீஸ்ல கூட்டுத் தள்ளிப் பெருக்குற வேலை இருக்குப் பண்றீயா? பாக்குற வேலைச் சுலபமா,  இருக்கணும் எண்ணவே கூடாது விஷ்ணு.. ஒரு ஜனர்லிஸ்ட்டா இருந்துட்டு , ஆஃபீஸ்குள்ள இருக்கணும் நினைக்கிறீயே! நீ படிச்சது நல்ல காலேஜ் தானா?இல்ல டுபாக்கூர் காலேஜ்ஜா? ஒரு செய்தியாளர் எப்படி இருக்கணும் தெரியுமா? ” எனப் பாடத்தை ஆரம்பிக்க, அவன் முன் பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டவள்..

” ஏற்கெனவே மிஸ்டர் சன், என் ஸ்ரென்த் எடுக்கிறார். மிஸ்டர் மயூரன் நீங்களும் சேர்த்து எடுக்காதிங்க.. ஐ காண்ட்…” நடைப்பாதைச் சாலையில் அமர்ந்து விட்டாள்..

அவளது நிலையைக் கண்டு பாவம் பார்த்தவன், “சாரி விஷ்ணு, வா உனக்கு ஏதாவது வாங்கித் தரேன்.. ஏதாவது சாப்டா, கொஞ்சம் தெம்பா இருப்ப…” என்றவன் அவளது வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.. ஒருபக்கம் கால் போட்டு அமர்ந்தவள், எங்கே பிடிக்கலாம் என்று யோசிக்க, கண்ணாடி வழியே பார்த்தவன், ” விஷ்ணு, உனக்கு எந்த ரூல்ஸும் இல்லை, தாராளமா ஷோல்டரைப் பிடிச்சுக்கலாம் , இல்லே ஹிப்பையும் பிடிச்சுக்கலாம். நான் எதையும் மைண்ட் பண்ண மாட்டேன்…” என்றவன் அவளுக்கு ஆஃபர் வழங்க

“ரொம்பத் தங்க்ஸ்…” என்று  தோளில் கைவைத்தாள்… மேலும் உற்சாகமானவன், அதை ஓட்டுவதில் காமித்தான்.
நாராயணபுரத்தில் உள்ள ரமணா  டீக்கடையில் வண்டியை நிறுத்தினான்.

இருவரும் உள்ளே செல்ல,காஃபி வாசனை ஆளை இழுத்தது, இருவருக்கும்  காஃபியை ஆடர்ச் செய்தவன், வடையும் வாங்கி வந்தான்.. சுடச்சுட வடையும் அதற்கு மேல் சட்னிச் சாம்பாரென வாசனையே பாதிப் பசியைப் போக்க, மீதிப் பசியைத் தின்றுப் போக்கினாள். இருவருக்கும், காஃபி டவரா செட்டில்
வந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

” இது பேர் டவராச் செட், இதுல காஃபி குடிச்சால் தான் குடிச்ச மாதிரி இருக்கும்..,” என்றவள் பித்தளை டம்பளரில் இருந்து கொஞ்சமாக காஃபியை டவராவில் ஊற்றி ஆத்தினாள்.. அதைக் கண்டு அவனும் அவ்வாறு செய்தான்..

இதழைக் குவித்து, காஃபியில் படர்ந்த நுறைகளை ஊதிக் காஃபியைப் பருக்கினாள்… அவள்  இதழ் பட்ட , அந்தப் பித்தளை டம்ளர் வேணும் என்று அடம் பண்ணியது அவன் மனதும் காதல் ஆசையும்..
மேசையில்  இருக்கும் அவளது பர்ஸை அவள் புறம்  தட்டிவிட்டான். அது அவள் காலடியில் விழ, ” சாரி விஷ்ணு நான் எடுக்கிறேன்..” அவன் குனிய, தடுத்தவள், அவளே எடுக்கக் குனித்தாள்.. காஃபியை இடம் மாற்றினான்..

அவள் இதழ் பட்ட இடத்தில் தன் இதழை வைத்து, காஃபியைச் சுவைக்க, தேவலோக அமிர்தமாக எண்ணினான். நரம்புகளைச் சுண்டி இழுக்கும் காஃபி, மேலும் நாடி நரம்புகளுக்குச் சென்று மூளையைச் சுறுசுறுப்பாக்கியது அவனை… டவரா இடம் மாறியதை அறிந்தவள்,
அவனை முறைக்க, கண்களால் கெஞ்சியவன், ” நீ வேணா வேற ஆடர் பண்ணிக்கோ, ப்ளீஸ் ! ” எனக் கெஞ்சவும் மணமிறங்கினாள்,…அவளும் அவனிதழ்கள்பட்ட காஃபியைப் பருகி மேலும் உற்சாகத்தை ஊட்டினாள். அதே சந்தோசத்தோடு அலுவலகம்
திரும்பி இருந்தார்கள்.

அங்கே , தின நாளேடு அலுவலக வாசலில் விஷ்ணுவிற்காகக் காத்திருந்தான் அர்ஜுன்.

வண்டியை நிறுத்திவிட்டு அலுவலகத்துக்குள்ளே செல்லும் போது, அர்ஜுனைக் கண்டாள் விஷ்ணு. 

விஷ்ணுவைக் கண்டதும், அவன் முகம் விகசிக்க, இவளுக்கோ, குழப்ப ரேகைகள் படர்ந்தது. அவனை நோக்கி நடைப் போட்டாள். 

அவள் போகும் திசையைப் பார்த்த மயூரன், அங்கே நிற்கும் ஆடவனைக் கண்டதும் புருவ முடிச்சுகள் விழ, ” யார் இது? ” எண்ணிக் கொண்டு நின்றான்.

விஷ்ணு நெருங்கியதும், கண்கள் கலங்க,  அவளை அணைத்தான். அவன் அழுவதை உணர்ந்தவளுக்கு, என்ன செய்வதென்றே தெரிய வில்லை” அர்…
அர்…. அண்ணா என்னாச்சு? ஏன் அண்ணா அழுகிற? ” அவன் முதுகைத் தடவிக் கொடுத்து அவனை ஆசுவாசம் படுத்தினாள். 

” விஷ்ணு, உன்கிட்ட கொஞ்சம் பேசணும் முடியுமா இப்ப? ” எனவும்

” ம்ம்… இரு அண்ணா, கொஞ்ச வேலை இருக்கு முடிச்சுட்டு வந்திடுறேன். அதுவரைக்கும் வெய்ட் பண்றீயா அண்ணா? ” கொஞ்சம் தயங்கியே கேட்டாள். 

” பரவாயில்லை விஷ்ணு, நான் இங்கே காத்திருக்கேன். நீ வேலையை முடிச்சிட்டு வா” என்றான் மென்னகைச் சிந்தி.

“சாப்டியா அண்ணா, ஏதாவது வேணுமா? ”  என்றதும் ,வேண்டாம் என்று தலையை அசைத்தான். 

” இதோ வந்திடுறேன்…” அங்கிருந்து நகர்ந்தவள், மயூனோடு உள்ளே சென்றாள்.

விஷ்ணுவைப் பார்த்துக் கொண்டே வந்தான், வாய் வரை வந்த, கேள்வியைக் கேட்கலாமா? வேணாமா? ” என்று பட்டி மன்றமே போட்டு விட்டான்… அவன் தயக்கத்தை உணர்ந்தவள், ” என்ன? ” என்று புருவம் உயர்த்திக் கேட்க, ” அவங்க யாரு? ” என்று ஒரு வழியாக கேட்டுவிட்டான்.. 

அவனிடம் விளையாட எண்ணியவள், ” என் அத்தைப் பையன்….” என்றாள்.

” உனக்கு அத்தைப் பையனா? உனக்கு ஒரு அத்தை தானே இருக்காங்க. அந்த அத்தைக்கும் ஒரு பையன் தானே. அது நான் தான்… இது யாரு?” 
மேலும் குழம்பி போய் கேட்க, ” ஏன்  நீ மட்டும் அத்தைப் பையனா? அங்காளி பங்காளிகள் இருக்க மாட்டங்களா? ” என்றதும் முகம் வெளிறி போனது அவனுக்கு.

” சரி சரி போய் வேலைய பாரு…” என்று தன் இடத்துக்குச் சென்றாள்.

‘ இப்பத்தான், ஒரு ஸ்பீட் பிரேக்கர் வந்துட்டு போச்சி, அதுக்குள்ள அடுத்த, ஸ்பீட் பிரேக்கரா? கடவுளே என் லவ்வுல இன்னும் எத்தனை ஸ்பீட் பிரேக்கரைத்  தான்  வச்சுருக்க நீ? ‘ என்றெண்ணிக் கொண்டவன்,
இன்னும் தீராத குழப்பத்தோடு ,உள்ளே சென்றான், சேகரித்த செய்திகளை ஒப்படைத்து விட்டுக் கிளம்பி வர, அவனோடு இணைந்தாள்,விஷ்ணு..

” மயூ, நீ வண்டில வீட்டுக்குப் போ, நான் அவன் கூட பேசிட்டு வரேன்… லேட்டா ஆகும்ன்னு நானே அப்பாகிட்ட சொல்லிடுறேன். இந்தா சாவி…” என்று அவனிடம்  நீட்ட,

அதைத் தட்டியவன், ” அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… நானும் உன்கூட தான் வருவேன்.. அவன் கிட்ட பேசிட்டு நாம சேர்ந்தே போலாம்.. “என்றான்.

” மயூ… என்னது இது? அவன் என்கிட்ட பெர்சன்லா பேசக்கூட வந்திருக்கலாம்.. நீ எதுக்கு தேவை இல்லாம? நான் பார்த்துகிறேன், நீ கிளம்பு “என்றதும்.. அவளை முறைத்தவன்,

” என்னடி பெர்சன்ல், இங்க பாரு என்னால உன்னை, அவனை நம்பி தனியா அனுப்பிவைக்க முடியாது… நானும் வருவேன். நமக்குள்ள எந்த 
பெர்சன்லும் இருக்கக் கூடாது வா போலாம்…” என்றான் விறைப்பாக

” பொறாமை பிடிச்சவனே, அவன் என் பெரியப்பா பையன் , என் அண்ணன் அர்ஜுன்..  நீ நம்ம, குடும்ப போட்டோவைப் பார்த்தது இல்லையா? ” 

” ருக்குவையும் தாத்தாவையும் தான் பார்த்துருக்கேன்.. அப்றம் பலராமன் மாமா, சசி அத்தை, சாரதி , உன்னையும் பார்த்துருக்கேன். வேற யாரையும் பார்த்தது இல்லை. அப்போ இங்க வந்தது உன் அண்ணா? ” என்றதும் அவள் ஆம் என்று தலையை ஆட்டினாள்..

அவளை முறைத்தான், அவளோ, கேலியாகப் புன்னகைத்து விட்டு நடக்க, உடன் நடந்தான்.  

இருவரும் அர்ஜுன் அருகே, வந்தனர். விஷ்ணுவின் பக்கவாட்டில் நிற்கும் மயூரனைப் பார்த்து  குழம்பிப் போய் நின்றான் அர்ஜுன்.. ” அண்ணா, இது மயூரன், நம்ம அத்தைப் பையன்…” என்றதும் விழிகள் விரிந்தது.. இருவரும் சம்பரதாயத்துக்கு சிரித்தனர்.. 

” அண்ணா, வா வீட்டுக்குப் போய் பேசலாம். .” என்றதும் மறுத்தவன்

” இன்னோரு நாள் வரேன் விஷ்ணு, இப்ப வேற எங்கயாவது போய் பேசலாமா? ” எனவும்  மூவரும் அருகே உள்ள பார்க்கிற்குச் சென்றனர்.. 

அங்கே, விளையாடும் குழந்தைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.. அவனை இருவரும் பார்த்து இருந்தனர்.. 

” நீயும் நானும் அண்ணன் தங்கச்சி தான்..  ஆனா, சின்ன வயசுல எப்படி இருந்தோம் விஷ்ணு? ஆண் பிள்ளைன்னு என்னைத் தூக்கிவச்சுக்  கொண்டாடின அந்தக்  குடும்பம் தான், உன்னையும் ஒதுக்கி வச்சது.. 

உன்னை ஒரு மாதிரியும் என்னை ஒரு மாதிரியும் கவனிச்சாங்க, என் மனசுலயும் அப்டி ஒரு எண்ணத்தையும் விதைச்சுட்டாங்க. அப்படியே வளர்ந்த எனக்கு உங்க கஷ்டம்  தெரியவே இல்லை.. ஆனா, இப்ப  தான் எனக்குப் புரிந்தது விஷ்ணு.. 

வீட்டுல, மகா ரொம்ப கஷ்டப்படுறா. ஒரு தம்பியா என்னால பார்க்க முடியல, தாத்தா கிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன் புரிஞ்சுக்கா மாட்டிக்கிறார்.. என்னால எதுவும் பண்ண முடியல விஷ்ணு.. இப்படியே போனால் ஒண்ணு மகா, வாழ்க்கைப் பாழாகிடும் . இல்லேன்னா, அவ, உயிரே போயிடும்… நீ ஏதாவது உதவிப் பண்ணு விஷ்ணு.
” அவள் கைப்பற்றி அழுக,. விஷ்ணுவும் மயூரனும் அதிர்ந்தனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!