பூவை வண்டு கொள்ளையாடித்தால்
பூவை வண்டு கொள்ளையாடித்தால்
கொள்ளை 12
அந்தப் பெரிய ஹாலில் அனைவரும் அமர்ந்திருந்தாலும் குண்டு ஊசி விழுந்தால் கூட அதிருமளவு அப்படி ஒரு அமைதி அங்கு… வைக்குண்டத்திலிருந்து கபிலன் வரை அனைவருமே அவளை மட்டும் தான் பார்த்திருந்தனர்….
ஏன்? எதற்கு? என்று கூட கேட்க வாயெடுக்காமல் இருந்தனர் அங்கிருந்தவர்கள். ‘ எல்லாருக்கும் உண்மை தெரிந்துவிடுமோ! என் மேல் உள்ள கோபத்தில் அனைத்தையும் கூறிடுவாளோ! ‘ பக்கென்று இருந்தது மயூரனுக்கு….
ப்ரோகிதர் வர்ற, வர வாரத்திலே ஒரு நல்ல நாளைக் குறித்துக் கொடுக்க, தனா, மயூரன், விஷ்ணுவைத் தவிர
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தான் இருந்தது.
அவரை வழியனுப்பி வைத்தபின் வைக்குண்டம், ” ராமா, மாப்பிள்ளை… மண்டபத்திலிருந்து சாப்பாட்டு வரைக்கும் உங்கப் பொறுப்பு தான்…. சகுந்தலா, யார் யாரை அழைக்கணும் கேட்டுட்டு அதற்கான வேலையை ஆரம்பிங்க.. ” என்றவர் எழுந்துச் செல்ல, தன் தந்தையைத் தன்னைக் கூறாது இருப்பது வருத்தமளித்தது லட்சுமணனுக்கு.
” தாத்தா…. ஒரு நிமிசம்… ” என்றாள் விஷ்ணு, அவர் அவளைப்பார்க்க, எல்லாரும் அவளைத் தான் பார்த்தனர்… ” தாத்தா, எங்களுக்கு இந்த ரிசப்சன் வேணாம்… ” என்றாள்..
அனைவரின் முகம் போன போக்கைப் பார்க்க, வயிற்றில் புளியைக் கரைத்தாலும் வேறு வழியில்லை… மயூரன் தான் பேசித்தொலைக்க மாட்டிகிறான்.. பேசித்தான் ஆக வேண்டும் என்று நிலைக்கு வந்தவள், மயூரனைப் பார்க்க, பெரிய மிருகமொன்றை வாயில் அடைத்துக்கொண்டு முழுங்க முடியாது தவிக்கும் அனகொண்டாவைப் போல அமர்ந்திருந்தான்..
” தாத்தா, பாட்டி…. நீங்க இதெல்லாம் எனக்காகத் தான் செய்றீங்க, என்னையும் இந்த வீட்டுப் பெண்ணா ஏத்துக்கிட்டு எல்லாருக்கும் அறிமுகம் செய்ய, இந்த ரிசப்சனை வைக்கிறீங்க.. இந்த வீட்டுல எனக்கு உரிமை கிடைக்கவும் தான் இந்த ரிசப்சன் எனக்குத் தெரியும். ஆனா, எங்களுக்கு முன்னாடியே காதலிச்சு கல்யாணம் பண்ணவங்களுக்கே இன்னும் அந்த உரிமை கிடைக்கல, எங்களுக்கு மட்டும் கிடைக்கிறது சரியா? அவங்களுக்கு எப்போ கிடைக்கிறதோ ? அதுக்கு அப்புறம் எங்களுக்குக் கிடைக்கட்டும் இந்த உரிமை… ” என்றதும் முத்துவும் லட்சுமணனும் பதறினார்கள்..
முத்து அவள் அருகில் வந்தவர், ” விஷ்ணு, இப்ப எதுக்கு இதெல்லாம் பேசுற? தேவையில்லாததைப் பேசாதமா… அத்தை, அவ பேசுறதை மனசுல வச்சுக்காதீங்க… நீங்க ரிசப்சனை வைங்க… ” என்றார் தன் மாமியாரைப் பார்த்து…
” அத்தை, உங்களுக்கு யாரு பேச உரிமைக்கொடுத்தா? நீங்க இங்க பேசக் கூடாதுல. உங்களுக்கு அந்த உரிமை தான் இல்லையே! ” என்றதும் தலைக்குனிந்தார்..
” ஏன் தாத்தா? ரிசப்சனைக்குத் தேதியைக் குறித்ததும் உங்க மூத்தபிள்ளைக் கிட்ட உங்க மாப்பிள்ளைக்கிட்ட பொறுப்பைக் கொடுக்குறீங்க, ஏன் உங்க இளையப்பிள்ளை இல்லையா? அவர்கிட்டையும் சொல்ல மாட்டீங்களா? ஏன் தாத்தா? அவர் தப்பு பண்ணிட்டார் தான், அதுக்காக கூடவே அவரை வைச்சுகிட்டுப் பேசாம இருந்து எத்தனை நாளைக்குத் தண்டனைத் தரப் போறீங்க? இத்தனை வருசமாக அவங்க இங்க இருந்தாலும் ஒதுக்கித்தானே வச்சிருக்கீங்க… அப்ப எங்களுக்கு மட்டும் எதுக்கு இந்த ரிசப்சன்? என் அத்தைக்கும் மாமாக்கும் கிடைக்காத உரிமை எங்களுக்கும் வேணாம்…” என்றாள்..
” ஏய்!! என்ன சீன் போட்டுட்டு இருக்க நீ? அதான் உங்களுக்கு ரிசப்சன் வைக்கிறேன் எங்க அப்பா இவ்வளவு தூரம் இறங்கி வந்திருக்கிறார். அவரை மதிக்காம என்ன ஏதோ ஏதோ பேசிட்டு இருக்க? அப்பா, அன்னைக்கே சொன்னேன், இவ யாரையும் மதிக்க மாட்டிகிறான்னு, இப்ப உங்களையே எதிர்த்துப் பேசிட்டு நிக்கிறா! ” இதான் சாக்கென்று அவளின் மேல் தவறான எண்ணம் வர வைக்க எண்ணினார் தனா.
” ஆமா எய்த்து தான் நிக்கிறேன்.. நீங்க அன்னைக்கு நிக்காதனால தான், இன்னைக்கு நான் நின்னு பேசுறேன்.. அவர் உங்க அண்ணன் தானே. அவரை ஒதுக்கி வைச்சிருக்கிறது உங்களுக்குப் பார்க்க சந்தோசமா இருக்கா? கொஞ்சம் கூட பீலிங்க்ஸ் இல்லையா? ஐயோ நம்ம அண்ணனை அப்பா பேசாம ஒதுக்கி வச்சிருக்காரே! நாம அப்பாகிட்ட பேசுவோம், அவர் மனசை மாத்துவோம் என்னைக்காவது ஒரு நாள் யோசித்து பேசிருக்கீங்களா? ” என கேட்கவும் அவர் அமைதியாக இருக்க ராமனும் தலைகுனிந்தார்..
” தாத்தா, உங்களுக்கு மாமா மேல கோபம் இருக்கலாம்.. அதையெல்லாம் மறந்து அவங்களை ஏத்துக்கோங்க… இது போல ஒரு வாழ்க்கையோ குடும்பமோ திரும்ப கெஞ்சினாலும் கிடைக்காது.. இங்க இருக்கிற எல்லோருடைய அன்பையும் பாசத்தையும் அனுபவிச்சிருப்பீங்க, உங்க கோபத்தால முத்து அத்தையோட அன்பையும் பாசத்தையும் இழந்திடாதீங்க, அவங்க அன்பும் மரியாதையும் பொக்கிஷம்.. ப்ளீஸ் தாத்தா, அவங்க இரண்டு பேரையும் ஏத்துக்கோங்க… நாம எத்தனை நாள் இருக்கப் போறோம் தெரியாது… அதுவரைக்கும் கோபம், வெறுப்பு இல்லாத வாழ்க்கை வாழ்ந்துவிட்டு போகலாம் தாத்தா…
எல்லாரும் இருந்தும் அந்த அன்பும் பாசம் கிடைக்காம அனாதையா வாழுறது நரகம்.. அது அனுபவிச்சாத்தான் புரியும்… அதை உங்கப் பிள்ளைக்கும் மருமளுக்கும் கொடுக்காதீங்க தாத்தா… நீங்க காட்டுற வழியில நாங்க பயணிக்கிறவங்க, நல்ல வழிய காட்டுங்க தாத்தா! ” என்றாள் கைக்கூப்பி….
அவரை அணைத்த சகுந்தலா, ” யாருமே என் பிள்ளைக்காக பேச முன் வரல விஷ்ணு பேட்டி, நீ வந்துப் பேசினது ரொம்ப சந்தோசம்டா! இங்க இருக்கிறவங்களுக்கு அவங்க அவங்க வேலை தான் முக்கியமா இருக்கிறாங்க… என் பிள்ளையை நான் நினைச்சு தூங்காத நாளே இல்ல… அவனுக்குப் பிறந்தநாள் வந்தா கூட மறைஞ்சு நின்னு அசிர்வாதம் கூட செய்திருக்கேன்…. பெத்த மனசு இதெல்லாம் எத்தனை நாளைக்குத் தாங்கும்..நெஞ்சுல சுமையா இருந்த சுமையை இறக்கி வச்சுட பேட்டி.. ” என்று அழுது தீர்த்தார்.
” தாத்தா, ப்ளீஸ்….தாத்தா.. நீங்க உடனே ஏத்துக்கணும் இல்ல, கொஞ்சம் கொஞ்சம் அவருக்கும் பொறுப்பைக் கொடுங்க அவர்கிட்டையும் தொழிலைப் பற்றிப் பேசுங்க, அவர் விருப்பத்தையும் கேளுங்க, கொஞ்சம் கொஞ்சமா அக்சப்ட் பண்ணிக்கோங்க தாத்தா.. மாமா மாதிரி, அத்தை மாதிரி உங்களுக்கு யாரும் கிடைக்கப் போறதில்ல.. கொஞ்சம் யோசிங்க தாத்தா.. ” என்றாள் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு.
” ஆமா, அப்பா, தம்பியை ஏத்துக்கோங்கப்பா, அவனுக்குள்ள நீங்க பேசாம இருக்கிறதே பெரிய வலியா இருக்குப்பா. என் கிட்ட சொல்லிப் புலம்புவான்… எனக்கு உங்ககிட்ட, அவனைப்பத்தி பேச
நினைப்பேன். ஆனா நீங்க கோபப்படுவீங்கன்னு தான், இத்தனை நாள் அவனைப் பத்தி பேசல… ப்ளீஸ்ப்பா பேசுங்க, அவன் கல்யாணம் பண்ணது தவிர வேற எந்தத் தப்பு பண்ணலப்பா! முத்துவும் ரொம்ப நல்லவங்க தான்.. இத்தனை வருசமா, நீங்க ஏத்துப்பீங்க யாரும் இவ்வளவு பொறுமையா இருக்க மாட்டாங்க… இரண்டு பேரையும் ஏத்துக்கிட்டு, இந்தக் குடும்பத்தில இருக்க மனஸ்தாபத்தை எல்லாம் போக்கிடுங்கப்பா… ” என்றார்.
” ஆமா, மாமா.. தங்கச்சியையும் மச்சானை ஏத்துக்கோங்க… இனி வர்ற விஷேச நாட்கள்ல எந்தச் சங்கடங்களும் இல்லாம கொண்டாடலாம் மாமா… இதுவரைக்கும் ஒவ்வொரு பண்டிகையும் ஏதோ ஒரு பாரத்தைச் சுமந்து கடமைக்குத் தான் கொண்டாடிருக்கோம்.. இனியாவது மனசாரக் கொண்டாடலாம் மாமா.. அவங்களை ஏத்துக்கோங்க மாமா ” என்றார்..
அவரது கண்களும் கலங்கியது இருவரையும் கண்டு.. தன் பக்கத்திலிருக்கும் முத்துவைக் கிள்ள, முத்துவோ பதறிக்கொண்டு விஷ்ணுவைப் பார்த்தார். அவள், வைக்குண்டத்தின் காலைக் காட்ட, அவரும் விழிநீரைத் துடைத்துவிட்டு அவர் காலில் விழுந்தவர், ” எங்களை மன்னிச்சு ஏத்துக்கோங்க மாமா… நீங்க என் பெயரைச் சொல்லிக்கூப்பிட மாட்டீங்களா பல முறை ஏங்கிருக்கேன்… சின்ன வயசில என்னைத் தூக்கிக்கொஞ்சுவீங்களே மாமா.. என் மருமகளே! என் மருமகளே! ஆசை சொல்லுவீங்களே மாமா… அப்படி ஒரு நாள் அழைக்க மாட்டீங்களா காத்துட்டு இருக்கேன்.. எங்களை ஏத்துக்கோங்க மாமா.., எனக்கு இப்ப அப்பா அம்மாவா நீங்க தான் மாமா இருக்கீங்க, நீங்களும் எங்களை வெறுத்துடாதீங்க மாமா,, ” என்று அழுக, அவரைத் தொட்டு தூக்கியவர்..
” உன் அப்பன் மேல உள்ள கோபத்தைக் உன்கிட்ட காமிச்சுட்டேன் டா! உன்னைத் தான் என் மருமகளாக்கணும் சகு கிட்ட சொல்லிட்டேன் இருப்பேன்.. ஆனா, உங்கப்பன் பேசுன பேச்சால. நான் உடைஞ்சு போயிட்டேன். அவன் மேல உள்ள கோபம் உங்க மேல வெறுப்பா காட்டவைச்சிருச்சு.. உங்களைத் தள்ளி வைச்சு அந்த ஆத்திரத்தைத் தீர்த்துகிட்டேன்.. என்னை மன்னிச்சிடு மருமகளே! ” என்றவர் அவரது கைப்பற்றி அழுக , ” ஐயோ! மாமா, பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க… எங்களை நீங்க ஏத்துக்கொண்டாலே போதும் மாமா! ” என்றாள்.. வைகுண்டம் தன் மகனைப் பார்த்து கையசைக்க, சிலையாய் நின்றவருக்கு உயிர் வந்தது போல, உடல் சிலிர்க்க, தனது தந்தையின் அருகில் நெருங்க, அவரை வாரி அணைத்துக்கொண்டார்….
” வீம்பால, உன்னைத் தள்ளி வச்சுட்டேன் டா லட்சுமணா, அப்பாவ மன்னிச்சிடுடா!”அவரது அணைப்பிலிருந்தே கூற, ” அதெல்லாம் கேட்காதீங்கப்பா… நீங்க என்கிட்ட பேசனதே போதும்பா… ” என்றார்.
படக்களைக்மேக்ஸ் வந்தது போல அனைவரின் முகத்திலும் ஆனந்தக்கண்ணீர் வர்ற, ஏனோ தனா மட்டுமே அந்தக்குடும்பத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே இருந்தார். ‘ ஒண்ணுகூடிட்டாங்கயா ஒண்ணுக்கூட்டிட்டாங்கயா…. ‘ என்பதுபோலவே பார்த்து நின்றார்..
” தாத்தா… அத்தைக்கும் மாமாக்கும் கல்யாண நாள் வருது… அதைக் குடும்பமா எல்லாரும் சேர்ந்து சிலிபிரேட் பண்ணலாம் … “என்றவளை அருகில் அழைத்தார்…
” பசி எடுக்காதவன் கிட்ட சாப்பாட்டோட அருமையைக் கேட்கிறதை விட, பசியில இருக்கிறவன் கிட்ட கேட்டா தான் அத்தோட அருமை தெரியும் சொல்லுவாங்க, அதுபோல தான் என்னைச்சுத்தி எல்லாரும் இருந்தும் அந்த அன்பை நான் உணரல, ஆனா, நீ எனக்கு அந்த அன்பை உணர்த்திட்டம்மா… தாத்தாவை மன்னிச்சிடுமா! ” என்றார்..
சிறுவயதிலிருந்து தன் அண்ணன், தம்பியை மட்டுமே தூக்கிவைத்துக்கொஞ்சும் தாத்தாவைப் பார்க்க பார்க்க, ஏக்கமாகவே இருக்கும்.., தன்னை ஒருநாளும் இவ்வாறு கொஞ்சிட மாட்டாரா.. மடியில் அமர்த்தி, முகம்வழித்து திண்பண்டங்களை ஊட்டிவிட மாட்டாரா? என எண்ணிய நாட்கள் பல…
தன்னை அணைத்திருக்கும் வைகுண்டத்தைப் பார்க்க, தனது வாசுதேவ தாத்தாவே நியாபகம் வந்தார். அவரை அணைத்துக்கொண்டாள்.. ” தாத்தா, என்னைய பேத்தியா ஏத்துபீங்களா? ” என கேட்க, கண்கள் கண்ணீரைக்கொட்ட, அதனைத் துடைத்தவர்.. ” நீ என் பேத்தி தான்டா..
இங்க ஷாலு, ஆதி , வாணி, மயூவைப் போல உனக்கும் எல்லா உரிமையும் இருக்குசரியா… இங்க வாடா ” என்று மயூவை அழைக்க, ” தாத்தா… ” என்று அருகில் சென்றான்.
” ஏன்டா, என் பேத்தி எப்படி வந்து பேசுற? ஒரு மன்னிப்பாவது கேட்டீயா டா! ” என்றவர் முறைக்க, ” தாத்தா, பயம் தான், சாரி தாத்தா… ” என்றான்..
” முதல் என் மகனோட கல்யாண நாள சிறப்பா கொண்டாட்டிட்டு, அப்புறம் இவங்க ரிசப்சனை வைக்கலாம்…. ” என்றார். குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது… விஷ்ணுவின் முகத்தை வழித்த சகுந்தலா., ” என் பேட்டி வந்த நேரம், குடும்பம் ஒண்ணா சேர்ந்திருச்சு! ” என்று திருஷ்டி கழிக்க, ” தாங்க்ஸ் அண்ணி…. ” என வாணியும் அணைத்துக்கொண்டாள்..
மயூரனோ, தன்னை மறந்து அவளை ரசித்துபார்த்தான்.. கள்ளகபடமற்ற அவளது சிரிப்பு, ஆதாயம் தேடாது நல்லதைச் செய்யும் அவள் மனதென, கட்டிஇழுத்தது அவனை…
இரவு உணவை முடித்துவிட்டு அனைவரையும் அவரவர் அறைக்குச் செல்ல, தன்னறைக்கு இருவரும் வந்தனர்…
தனது மெத்தையைச் சரிசெய்துகொண்டிருந்தாள்… ” விஷ்ணு… ” என அழைக்க, அவள் திரும்ப சட்டென்று அவளை அணைத்தான் மயூ…
அவளைத் தன்னோடு இறுக்க அணைக்க, விதிர்த்துப் போனாள் பெண்ணவள்… உடல் நடுங்க, சிலையாய் நின்றாள் அவனுக்குள்… சிலநேரத்திற்குப் பின் உணர்வு வரவே, அவனைத் தன்னிடமிருந்து பிரிந்தாள்…
” ஹவ் டேர் யூ… என் பெர்மிசன் இல்லாம, என்னைத் தொடக்கூடாது சொல்லிருக்கேன்ல… என்னைத் தொட்டதுமில்லாம என்னைக்கட்டிப்பிடிக்கிற, என்ன நினைச்சுட்டு இருக்க நீ.. என் கண்டிசன்ஸ் எல்லாம் மறந்துட்டீயா? ” என அவள் கத்த,
அவனோ சாவகாசமாக கைக்கட்டி சாய்ந்து நின்று அவள் திட்டுவதையே பார்த்து நின்றான்…
” யோவ், இங்க என்ன படமா ஓடுது, சாவகாசமா நின்னு பார்த்துட்டுஇருக்க, உன்னை நான் திட்டிட்டு இருக்கேன்… எதுக்குயா கண்டிசனை மீறுன்னா? எதுக்குயா என்ன கட்டிபிடிச்ச? ” என அவள் கத்த,
” விஷ்ணு, நீயும் தான் என் கண்டிசனை மீறிருக்க, நான் எதாவது சொன்னேனா, அதுப்போல தான் இதுவும் ” என்றான் அமர்த்தலாக,
” நான் எப்போ உன்னுடையக் கண்டிசனை மீறினேன்? ”
” ம்ம்… நான் என்ன சொன்னேன்.. இந்த வீட்டுல அதிகமாக யார்கூடையும் பழக கூடாது சொன்னேன்ல… ஆனா நீ என்ன பண்ணிருக்க தாத்தா, பாட்டி, மாமா, அத்தைன்னு பழகிட்டு இருக்க? அப்ப, என் கண்டிசனை நீ மீறிட்ட தானே அர்த்தம்” என்றவனை வெட்கவா குத்தவா என்று பார்த்தவள்..
” நான் என்ன பண்ண? அவங்க என்மேல பாசத்தைக்கட்டுறாங்க, என்னால அந்த இடத்தில நடிக்க முடியல! இப்படியெல்லாம் எங்க வீட்டுல பாசத்தை யாரும் காட்டல. எல்லாரும் தாத்தாக்குப் பயந்தே தான் என்னை வளர்த்தாங்க.. இங்கக் கிடைச்சதும் ஒட்டிக்கிட்டேன்., அதுக்காக நீ என்னைக் கட்டிப்பிடிப்பீயா? என் ப்ரெமிசன் இல்லாம எதுக்குயா கட்டிபிடிச்ச? ” சட்டையைப் பிடித்து சண்டைப் போடாத குறையா கத்தினாள்…
” இதுனால வரைக்கும், எங்க அம்மாக்காகவோ, எங்க அப்பாக்காகவோ யாரும் பேசினது இல்ல, நீ பேசி சேர்த்து வைச்சதுல கொஞ்சம் எமோசனல் ஆயிட்டேன்… அதான் கட்டிபிடிச்சட்டேன் சாரி விஷ்ணு, அண்ட் தாங்க்ஸ். ” என்றான்…
அவனைக் கூர்விழிகளால் நோக்கியவள், ” இதெல்லாம் நீ பண்ணனும் மிஸ்டர் மயூரன். நான் பண்ணிட்டு இருக்கேன்…. இதுல சார் எமோசனல் ஆயிட்டாராமா? இனி இதுபோல எமோசனல் ஏகாம்பரமா ஆன. நான் என்கௌண்டர் ஏகாம்பரமா ஆகிடுவேன் சொல்லிட்டேன்.. ” என்று ஒரு கையைக் காட்டி எச்சரிக்க, அவனுடைய அனஸ்தீஸ்சிய சிரிப்பைக் காட்டி அவள் முன் நின்றான்.
” இப்ப எதுக்கு சிரிக்கிற நீ? ” என்றவள் கேட்க,
” இல்ல லைட்டா கட்டிபிடிச்சதுக்கே இந்த பயம் படப்பிடுறீயே! இதுல நீ என்கௌண்டர் ஏகாம்பாரமா ஆக போறீயா? காமெடி சென்ஸ் உனக்கு ரொம்ப அதிகமாக தான் இருக்கு விஷ்ணு” என்றவன் சிரிக்க,
” கட்டி பிடிச்சுட்டு, காமெடிபண்றேன் வேற சொல்லுறீயா? இங்க பாரு, நான் அமைதியா போறேன்னு இது போல பண்ணலாம் நினைச்சுக்கூட பார்த்திடாத ஏதோ இந்த முறை ஒரு அண்ணனைக் கட்டிப்பிடிச்சதா நினைச்சு உன்னை விடுறேன்… ” என்றதும் ” என்னது அண்ணனா? ” என பதறியவன் கேட்க.
” ம்ம், ஆமா…, என் வருணைத் தவிற மத்த எல்லா ஆண்களும் எனக்கு அண்ணன் , தம்பி , தாத்தா , சித்தப்பா , பெரியப்பா தான்…” என்று சொல்லுபவளைப் பார்க்க கடுப்பானது மயூரனுக்கு..
” இங்க பாரு நான் உனக்கு அண்ணன் இல்ல, உனக்கு நான் மாமா,.. என்னை மயூ மாமான்னு கூப்பிடனும் என்றவனைக் கண்டு கொலைகாளி(ரி)யாய் அவன் முன் உருமாறி நின்றாள் விஷ்ணு…
அவனது நிலைமை என்னவாகுமோ?
கொள்ளைத் தொடரும்
மக்களே,
கதை பத்தின கருத்தை பகிருங்கள்… கதைப் போக்கையும் கூறுங்கள்…கொஞ்சம் கொஞ்சமாக உள்ள இருக்க ரகசியங்கள் அடுத்த அடுத்த எபில வரும்… வெய்ட் பண்ணுங்க
இப்போ கதையின் போக்கைப் பற்றி கூறுங்கள்…