மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

 மழைத்துளி 8

அன்று மொத்த குடும்பமும் திருவிழாவிற்கு கிளம்பிக்கொண்டிருக்க, வழக்கம் போல் அகிலா பாட்டி, “எல்லாரும் சிக்கிரம் கிளம்பி வாங்க, நேரமாச்சு இராகு காலம் வந்திட போகுது” என்று அனைவரையும் விரட்டிக் கொண்டிருந்தார்… அகரன் மட்டும் பக்கத்து கிராமத்தில் ஏதோ ஒரு முக்கிய வேலை இருப்பதாக சொல்லியவன். நேராக கோயிலுக்கு வந்து விடுவதாக சொல்லி விட, திரவியம் தாத்தா அகரனை சிலம்ப விளையாட்டு தொடங்கும் முன் கண்டிப்பா வந்துவிடும் படி சொல்ல, அகரன் சரியான நேரத்தில் வந்து விடுவதாக சொன்னான்.

 

 மொத்த குடும்பமும் பட்டு வேட்டி சட்டை, பட்டுப்புடவையில் ஜிகு ஜிகுவென புத்தாடை ஜொலிக்க ஹாலுக்கு வர, அகரன் கண்களோ அவனையும் கேட்காமல் அவன் தீராவை தேடியது… அவன் கண்களுக்கு அலைந்து திரியும் வேலை வைக்காமல் அவன் கண்களின் முன் வந்து நின்றாள் தியா… அடர் பச்சை நிறத்தில், மெரூன் நிற பார்டர் போட்ட பட்டுப் பாவாடை, 

அதோ வண்ணத்தில் மேல் சட்டை அணிந்து, அதற்கு பொருத்தமாக மெரூன் நிற தாவணி உடுத்தி இருந்தாள் அகரனின் தீரா. அந்த உடை அகரனும், அவளும் கடைக்கு சென்றிருந்த போது அகரன் அவளுக்காக தேர்ந்தெடுத்த உடை… கடையில் பார்க்கும் போது சாதரணமாக இருந்த ஆடை, இன்று அவள் மேனி தழுவி இருப்பதை பார்த்தவனுக்கு இந்த நொடி இந்த உலகத்திலேயே அழகிய உடையெனில் அது அந்த பாவாடை, தாவணி என்று அடித்து கூறும் அளவு அவள் உடலில் அழகாய் பொருந்தி இருந்தது அகரன் அவளுக்காக எடுத்த அந்த ஆடை… பாவாடை, தாவணியில் அவளை பார்த்ததிலேயே அகரன் ஆஃப் ஆகியிருக்க… அவள் தலை நிறைய‌ வைத்திருந்த மல்லிகைப்பூ, அரைவட்ட நிலவு போல் இருந்த நெற்றியில் வைத்திருந்த குட்டி வட்ட பொட்டு, லிப்ஸ்டிக் போடமல் இளம் ரோஸ் நிறத்தில் இருந்த அவள் அதரங்கள், தலையசைப்புக்கு ஏற்படி அழகாக ஆடிய அவள் காதில் இருந்த ஜிமிக்கி, கழுத்தில் ஊஞ்சலாடிய பாட்டியின் காசுமாலை, மருதாணி வைத்து அழகாய் சிவந்திருந்த, அவள் பிஞ்சு கைகளை பாதி மறைத்திருந்த கண்ணாடி வளையல்கள் என அனைத்தும் அதான் அதான் வேலைகளை சரியாக செய்ய, தேவதையாக ஜொலித்த தியாவின் தேற்றத்தை கண்டவன் ப்ரௌன் நிறக் கண்கள், அவன் உள்ளத்து அழகியின், கிராமத்து தேவதை கோலத்தை கண்டு தங்கமாய் மின்னியது… தன்னவன் தன்னை ரசிக்கிறான் என்ற உணர்வு தியாவை கர்வம் கொள்ள வைக்க மெல்ல தன் வலது புருவத்தை உயர்த்தி “எப்டி” என்று அவள் கண்ணடிக்க அகரனை அவள் செய்கையில் அழகாய் தடுமாறினான். மெல்ல சிரித்தபடி அவன் தடுமாற்றத்தை ரசித்தவள். அவன் அருகில் வந்து மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் படி, “இதுக்கே அசந்துட்ட எப்டி??? இன்னு பாக்க வேண்டியது எவ்ளோ இருக்கு” என்றவள் மெதுவாக அவனை தோளோடு தோள் இடித்து விட்டு நகர, பாவம் அகரன் தான் அவனுக்கு பிடித்த அந்த மாயக்காரியின் மந்திரம் செய்யும் விழியில் தடுமாறி விழுந்து தட்டுத்தடுமாறி கொண்டிருந்தான்.

 

பெரியவர்கள் அனைவரும் கிளம்பி திருவிழாவிற்கு செல்ல, தியா தன் ரூமில் மறந்து வைத்து விட்டு வந்த ஃபோனை எடுக்க போனவள், கீழே இறங்கி வர, அவளை வழிமறித்த அகரன் முறைப்பாக அவளை பார்க்க, தியாவும் சளைக்காமல் அவன் அனல் பார்வையை குளிர்விக்கும் பனிப்பார்வை பார்த்திருக்க, அவள் ஐஸ் விழியில் உருகியவன் தன் சமாளித்துக் கொண்டு,

 

“ஏய்? என்ன ஆச்சி உனக்கு? வர வர நீ பாக்குறது? பேசுறது எதுவும் சரியில்ல? என் கிட்ட ஒரு மாதிரி பீஹேவ் பண்ற? என்ன ஆச்சு உனக்கு? உன் மனசுல ‘என்ன’ தான் நெனச்சிட்டு இருக்க?” என்று முறைக்க…

 

தியா நிதானமாக அவனை பார்த்தவள்… அகரன் முகத்திற்கு மிக அருகில் சென்று அவள் மூச்சு காற்று அவன் முகத்தில் படும் அளவு நெருங்கி, “நீ கேட்ட வேள்விலயே உனக்கான… நமக்கான, என்னோட பதில் இருக்கு டா மாமா!” என்று குறும்பு குரலில் சொன்னவள். அவன் இடுப்பை கிள்ளிவிட்டு, திருவிழால மீட் பண்ணுவோம் மாமோய், உனக்காக காத்திருப்பேன்… பதிலை கண்டுபுடிச்சிட்ட அங்க வந்து சொல்லு டா மாமா” என்று கத்திக் கொண்டே ஓடிவிட, ஏற்கனவே அவனவளின் “மாமா” என்ற அழைப்பில் மயங்கி இருந்தவன். அவள் கிள்ளிய போது அவனை உரசிய அவள் விரால் ஸ்பரிசத்தில் க்ளீன் போல்ட் ஆகி இருந்தான்.

 

தியா முகம் முழுவதும் வெட்க சிரிப்போடு, மான்குட்டி போல் துள்ளிக்குதித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து நிலவனோட பைக்கில் ஏறி செல்வதை பார்த்த அரும்பின் கண்கள் கண்ணீரில் குளிக்க, யாரும் பார்க்கும் முன் கண்ணை துடைத்துக் கொண்டு அருள், சரண்யாவோடு அவர்கள் வண்டியில் கிளம்பினாள்.

 

சிறுவயதில் இருந்து கனடாவில் வளர்ந்த தியாவிற்கு, முதல்ல முதலில் திருவிழாவை பார்ப்பது அழகான அனுபவமாக இருந்தது. நிலவன் ஒவ்வொன்றாக அவளுக்கு சொல்லிக் கொண்டே வர, அவள் ஆர்வமாக அனைத்தையும் ரசித்துக் கொண்டே வந்தாள். சின்ன சின்னதாக இருந்த கடைகளை அவள் ஆசையாக பார்க்க, நிலவன் அவள் ஆசைப்பட்டு பார்த்த அனைத்தையும் அவள் கேட்கும் முன்னே அவளுக்காக வாங்கி குவிக்க… அருள் அவன் பங்கிற்கு தியா பார்க்கும் அனைத்து நொருக்கு தினியையும் வேணும் என்று கேட்க அனைத்தையும் வாங்கி தந்தான். முகிலன் தன் பங்கிற்கு தன் அக்காவுக்காக வளையம், கம்மல், தலைக்கு வைக்கும் கிளிப், என்று வாங்கி தர, தியா அவர்களின் அன்பில் திக்குமுக்காகி போக. அனைவரும் தியாவை தலையில் தூக்கி வைத்து கொண்டருவதை பார்த்து அரும்பு கருகிக்கொண்டு இருந்தது.

 

சிலம்ப போட்டிக்கான அழைப்பை ஸ்பீக்கரில் கேட்க மொத்த பேரும் மைதானத்தில் குவிந்தனர். தியா வேக வேகமாக ஓடி வந்து கூட்டத்தை தள்ளிக்கொண்டு முன்னாடி வந்து நின்றவள்… துள்ளலோடு, கண்கள் மின்ன, வாயில் விரால் வைத்து விசில் அடித்து, கைதட்டி சிலம்ப விளையாட்டை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க… திரவியம் தாத்தா சிறுபிள்ளை போல் கைதட்டி போட்டியை ரசிக்கும் தன் பேத்தியை சின்ன சிரிப்போடு திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

 

சிலம்ப போட்டி விறுவிறுப்பாக நடக்க, அனைவருக்கும் யார் இதில் ஜெயிக்க போகிறது என்ற ஆர்வத்தோடு போட்டியையே பார்த்திருக்க… பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த வேலன் போட்டியில் ஜெயித்து விட திரவியம் தாத்தாவின் முகம் கருத்துவிட்டது…

 

“இந்த அகரன் கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன். போட்டி தொடங்குறதுக்கு முன்ன வந்து சேருடான்னு… அப்ப சரி சரின்னு மண்டய ஆட்டிட்டு இப்ப ஆளையே காணும்” என்று தாத்தா கத்திகொண்டு இருக்கு, தியா மெல்ல நிலவன் கையை சுரண்டியவள்., ” ஏன் நிலா? இந்த பெருசு இப்ப இப்டி கத்திட்டு இருக்கு? எதுக்கு தேவயில்லாம இப்ப அகரனை திட்டிட்டு இருக்காராம்? என்னவந்து இந்த தாத்தாக்கு?” என்று தாத்தாவை முறைக்க…

 

“ஓய்!! அவர் பேரனை, அவர் திட்றரு உனக்கு என்னவாம்?”

 

“அதெல்லாம் அப்ப. இப்ப அப்டி எல்லாம் சும்மா சும்மா என்ற மாமாவ திட்ட வேலை வேணாம்னு அந்த பெருசு கிட்ட சொல்லி வை ” என்று அவள் ஒழுங்கு காட்ட…

 

“அடிப்பாவி அண்ணி! மாமாவா?! இது எப்ப இருந்து?” என்று ஆச்சரியமாக கேட்ட…

 

“அதெல்லாம் நா பொறந்துல இருந்து உங்கண்ணா எனக்கு மாமா தான்… நீ சும்மா தேவை இல்லாதத பேசாம, இப்ப எதுக்கு தாத்தா அகரனை திட்றரு அத சொல்லு??…

 

“அது ஒன்னு இல்ல தியா. வருஷா வருஷம் நம்ம ஊர்காரங்க தான் இந்த சிலம்ப போட்டியில ஜெயிப்பாங்க… இந்த வருஷம் பக்கத்து ஊர் காரர் ஜெயிச்சுட்டாரு இல்ல அதுக்கு தான் தாத்தா இந்த குதி குதிகிறாரு!”

 

“ஓஓஓ! மேட்டர் அப்டி போகுத? சரி இதுக்கும் அகரனுக்கும் என்ன லிங்க்? ஏன் அவர தேடுறாரு?”

 

“அகரன் அண்ணா முறைய‌ சிலம்பம் கத்துக்கிட்டவாரு தியா … நெறய முறை இந்த போட்டியில அண்ணா ஜெயிச்சு இருக்கு… இப்ப ஒரு ரெண்டு மூனு வருஷமா தான் அண்ணா இதுல கலந்துக்குறது இல்ல… ஆனாலும் இப்ப வரை நம்ம ஊர் ஆளுங்க தான் இதுல ஜெயிச்சு இருக்காங்க, இந்த வருஷம் அது மிஸ் ஆகிடுச்சு இல்ல… அதான் தாத்தாக்கு வருத்தம். அகரன் அண்ணா இருந்திருந்த, இந்த நேரம் அது போட்டியில கலந்துட்டு இருந்திருக்கும் இல்ல… அதான் தாத்தா இப்டி கத்துறாரு” என்று நிலவன் சொல்ல தியா துள்ளி குதித்தவள், “ஏய் நிலா! நீ சொல்றது நெஜமா? அகரனுக்கு சிலம்ப விளையாட்டு தெரியுமா? என்று ஆர்வமாக கேட்க… நிலவன் அவள் தலையில் செல்லமாக கெட்டியவன், “பின்ன இவ்ளோ நேரம் நா என்ன சின்சான் கதைய சொல்லிட்டு இருந்தேன்… என் அருமை லூசு அண்ணியே! உன்ற ஆச மாமனுக்கு சிலம்ப கை வந்த கலை போதுமா!” என்று சொல்லி சிரிக்க…

 

அந்த நேரம் போட்டியில் ஜெயித்த வேலன், “என்ன திரவியம் ஐயா? எப்பவும் எங்க ஊரு தான் வீரத்துல ஒசத்தின்னு மார்தட்டுவீங்க இப்ப என்ன ஆச்சுய்யா… உங்க ஊர் பயலுகளுக்கு வீரம் வத்திப்போச்ச? ரெண்டாடிக்கே இப்டி விழுந்துட்டானுங்க… எங்க உங்க பேரன்?. இன்னைக்கு நா இங்க வெளயாட வருவேன்னு தெரிஞ்சு எங்கயும் ஒளிஞ்சுக்கிட்டானா என்ன?” என்று கேலி செய்து சிரித்து… திரவியம் தாத்தா உட்பட ஊர்மக்கள் அனைவருக்கும் கோவத்தை எத்த…

 

தாத்தா நிலவன், அருளை தீயாக முறைத்தவர். “நா எத்தன தடவை சிலம்ப கத்துக்கு சொன்னேன். கேட்டீங்களா டா எருமைங்களா? இப்ப பாருங்க டா? இந்த நேரம் அகரனும் இங்க இல்ல… ச்ச! என் மானமே போச்சே டா” என்று கத்தியவர்… தானே களத்தில் இறங்கி போட்டியிட முடிவு செய்ய…

 

“ஹலோ போட்டியில ஜெயிச்ச சாரே!! நீங்க என் மாமா கூட மோதுறது இருக்காட்டும்… முதல்ல என் கிட்ட உங்க வித்தைய காட்டுங்க பாப்போம்” என்று திமிராக வந்த பெண் குரலில் அனைவரும் திகைத்து திரும்பி மைதானத்தை பார்க்க… அங்கு கையில் சிலம்பும், கண்ணில் தன் தாத்தாவை அவமரியாதையாக பேசிய கோபமும் அனலாய் வீச சண்டி குதிரை போல் நின்றிருந்தாள் திரவியா…

 

“என்ன திரவியம் ஐயா, உங்க வீட்டுல வேற ஆம்பளயே இல்லயா? பொம்பள புள்ள சண்டக்கு வந்து நிக்குது” என்று வேலனின் ஊர்காரர்கள் சிலர் கிண்டலாக பேச, தாத்தா கோபமாக தியாவை முறைக்க… தியாவின் செயலில் மொத்த குடும்பமும் கலங்கி தவித்து நின்றது… அகிலா பாட்டி தியாவை மைதானத்தை விட்டு வெளியே வரச்சொல்லி திட்டிக்கொண்டிருக்க… தியா திரும்பி தன் தாத்தாவை பார்த்தவள்.

 

“எங்க வீட்டுல ஆம்பளைங்க வீரத்த இந்த ஊர் நெறய தடவை பாத்திருக்கும். இன்னைக்கு திரவியம் வீட்டு பொம்பளைங்க வீரத்தையும் பாக்கட்டும்னு தான் நா களத்துக்கு வந்திருக்கேன். ஒரு வேளை என்கிட்ட மோத உங்க ஊர் வீரருக்கு பயமா இருந்துச்சின்ன சொல்லுங்க நா வெளிய போய்டுறேன்” என்று ஒரு நிமிர்வோடு சொல்ல… தாத்தா தியாவை திடமாக பார்த்துக்கொண்டிருந்தார்.

 

“ஏய்? என்ன வாய் ரொம்ப தான் நீளுது… எனக்கு உன்னை பாத்து பயமா? ஏதோ பொட்டபுள்ள ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடக்கூடாதுன்னு உன் நல்லதுக்கு சொன்ன… நீ இவ்ளோ திமிர பேசுறீயே?? சரி நா உன்னோட சிலம்பம் வெளயாடுறேன். ஒரு வேளை நீ தோத்துட்ட, இப்ப இந்த ஊர் முன்னாடி நீ என்னை கல்யாணம் கட்டிக்காணும்… என்ன சம்மதமா? என்று திமிராக கேட்க…

 

திரவியம் தாத்தாவின் மொத்த குடும்பமும் அதிர்ந்து விட்டது…

 

“யேய் வேலா? என்னயா பேசுற நீ..?

 உன் வயசென்ன அந்த புள்ள வயசென்ன? ஏதோ சின்ன புள்ள நீ அவ தாத்தாவை பேசுனது பொறுக்க களத்துக்கு வந்திடுச்சு அதுக்குன்னு நீ உன் இஷ்டத்துக்கு பேசுவீயா?” என்று ஊர் மக்கள் சிலர் பேச… 

 

“தியா நீ முதல்ல வெளிய வா” என்று பாட்டியும் மற்றவரும் கத்த… தியா தாத்தாவையே கண்ணிமைக்காமல் பார்த்தவள், “எனக்கு சம்மதம்” என்று சத்தமாக சொல்ல அந்த இடம் முழுவதும் மாயன அமைதி… தியா திரும்பி அந்த வேலனை பார்த்தவள்… நீ ஜெயிச்ச‌ நா உன்ன கட்டிக்குறேன்… அதோ நா ஜெயிச்ச நீ உன்னோட ஒரு பக்க மீசைய எடுத்திடனும் ஒகே வா?” என்று அவனின் கருப்புசாமி போல் ரெண்டு பக்கமும் கருகருவென வளர்ந்திருந்த மீசையை பார்த்து சொல்ல… அவளி தைரியத்தில் ஒரு நிமிடம் வேலன் உட்பட அனைவரும் அசந்து தான் போகினர்… 

 

“சரி நீ ஜெயிச்ச நீ சொன்னத நா செய்றேன். இதோ இருக்க இந்த குங்குமத்த சிலம்பத்துல எடுத்து நா உன்னோட நெத்தியில வச்ச நா ஜெயிச்சத அர்த்தம். அதோ தான் உனக்கும்” என்று போட்டியின் நிபந்தனையை சொல்ல… தியா சரி என்றாள்…

 

இங்கு நிலவன் அவசர அவசரமாக அகரனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை சொல்ல… உயிர் வரை பதறிய அகரன் தன் புல்லட்டில் ஏறி மைதானத்திற்கு பறந்தான்.

 

இங்கு பாட்டி தாத்தாவிடம் “என்னங்க அப்டியே நிக்குறீங்க? அவ நம்ம பேத்தீங்க… போங்க நாலு அர வூட்டு அவள வெளிய இழுத்திட்டு வாங்க” என்று கதற… தாத்தா அசையாமல் நின்றவர். தன் பேத்தியை ஆழமான ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போட்டிய தொடங்குங்க” என்று சொல்ல அனைவரும் வாயடைத்து நின்றனர்.

 

தியா தன் கையில் இருந்த சிலம்பத்தை மண்ணில் ஊன்றிவிட்டு தன் பாவாடையை எடுத்து இரண்டு கால்களுக்கு இடையில் கொடுத்து பின்பக்கம் இழுத்து முதுகு பக்கமாக இறுக்கி சொறுகியவள், தாவணி முந்தானை இடுப்பை சுற்றி எடுத்து இறுக்கி கட்டிக்கொண்டவள். மேலே பார்த்து ஏதோ வேண்டிக்கொண்டு தான் விராலை நெற்றியில் வைத்து பின் கண்ணில் ஒற்றிக் கொண்டு இதழில் வைத்து முத்தமிட்டு சிலம்பத்தை கையில் எடுத்தாள்.

 

அவள் முறையாக வணக்கம் வைத்துவிட்டு, மின்னல் வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு சிலம்பத்தை சுழற்ற, அதை பார்த்து லேசாக சிரித்தபடி தன் மீசையை முறுக்கி திரவியம் தாத்தா நாற்காலியில் உட்கார… அடுத்த பதினைந்து நிமிடம் அங்கு என்ன நடந்ததென்று யாருக்கும் புரியவில்லை, காற்றில் வீசிய சிவப்பங்கள் ஒன்றுடன் ஒன்று மோதும் ஒலி மட்டும் அனைவரின் காதையும் கிழிக்க… புழுதி பறக்க நடந்த அந்த சண்டையின் இறுதியில், வேலனின் நெற்றிக்கும் தியாவின் குங்குமம் பூசிய சிலம்பத்திற்கும் ஒரு இன்ச் இடைவெளி இருக்கையில் அப்படியே நின்றது… 

 

தியா வேலனின் முகத்தையும், தன் சிலம்பத்தையும் சின்ன சிரிப்போடு, மாறி மாறி பார்த்தவள். அவளுக்கு அருகில் தட்டில் இருந்த மலர்மாலையை தன் சிலம்பத்தை நுழைத்து ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வீச, அந்த மாலை சரியாக திரவியம் தாத்தாவின் கழுத்தில் சென்று விழுந்தது. 

 

தியா ஜெயித்த மகிழ்ச்சியில் அனைவரும் கை தட்டி, தியாவை வேலனின் நெற்றியில் பொட்டு வைத்து, அவன் மீசையை வழிக்க சொல்ல, தியா மென்மையாக சிரித்தவள். திரும்பி அந்த வேலனை பார்த்து, “ஒரு வேள நீங்க என்னோட ஏடத்துல இருந்திருந்தால்?, என்னோட நெத்தியில பொட்டு வச்சிருப்பீங்க?, நெஜமாவே என்னை கல்யாணம் கட்டிக்கிட்டு இருப்பீங்களா?” என்று கேட்க…

 

அவர் இல்லை என்று தலையாட்டியவர்… “அதெப்படி மா. நீ சின்ன புள்ள, உன்னை போய் நா எப்டிமா கட்டிக்க..‌ ச்சச்சே… அது சும்மா நா உன்னை இந்த போட்டில கலந்துக்க விடாம செய்ய சொன்னேன்மா. பொம்பள புள்ள உனக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிடக்கூடாதுன்னு தான்ம்மா அப்டி சொன்னேன்” என்று சொல்ல…

 

தியா அழகாக சிரித்தவள் எனக்கு தெரியும். நீங்க அப்டி செய்யமாட்டீங்கன்ற தைரியத்துல தான் நானும் வெளயாட வந்த. நீங்க உங்க சிலம்ப வித்தை மேல இருந்த கர்வத்துல தான் அப்டி திமிர பேசிட்டிங்க. மத்தபடி நீங்க உண்மையான வீரன். சோ! நா தோத்தாலும் நீங்க என்னை கட்டிக்க மாட்டீங்கன்ற ஒரு தைரியம் தான் எனக்கு!… என்று கண்சிமிட்டி சிரித்தவள். இன்னைக்கு நீங்க தோக்கலைங்க… உங்களோட வித்தை மேல உங்களுக்கு இருந்த கர்வம் உங்க கண்ணை லைட்ட மறச்சிடுச்சு… அது எனக்கு சாதகமா அமஞ்சு போச்சு. சைக்கிள் கேப்ல நா அத யூஸ் பண்ணிட்டேன். இல்லாட்டி கண்டிப்பா உங்க முன்னாடி என்னால ஒரு நிமிஷம் கூட தாக்குபுடிச்சிருக்க முடியாது” என்றவள், “இது உங்க திறமைக்கு நா செய்ற மரியாதை” என்று அவர் முன் தன் இரு கையையும் குவித்து, தலைகுனிந்து‌ நிற்க…

 

அங்கிருந்த அனைவரும் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கி விட்டது…

 

வேலன் தியாவின் தலையில் கை வைத்து, “உன் மனசுக்கு, ஆயுசுக்கும் நீ நல்லா இருப்ப தாயீ” என்றவர் திரவியம் தாத்தாவை கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு கேட்வன்,. “உங்க பேரன் அகரன் ஆண் புலின்னா! உங்க பேத்தி பொம்பள‌ சிங்கமுங்க ய்யா… நீங்க ரொம்ப குடுத்து வச்சவாரு” என்று விட்டு செல்ல… அடுத்த நிமிஷம் நிலவனும், அருளும் தியாவை தங்கள் தோளில் தூக்கி கொண்டாடி தீர்க்க…

 

 

லட்சுமி, கார்த்திகா, மகா முவரும் தியாவுக்கு நெட்டி முறித்து திருஷ்டி கழித்தவர்கள்… எப்டி தியா? உனக்கு யார் சிலம்பம் சொல்லி குடுத்தது. இவ்ளோ அழகாக வெளயாடுறீயே” என்று‌ ஆவலாக கேட்க.

 

தியா திரும்பி தாத்தாவை பார்த்தவள். என்னோட நாலு வயசுல இருந்து முறைப்படி கத்துக்குறேன் அத்த , தினமும் அம்மா எனக்கு சிலம்ப பயிற்சி கொடுப்பாங்க” என்று‌ பெருமையாக சொல்ல… “ஆமா ஆமா… தேனு சின்னவயசுல இருந்து முறைய சிலம்பம் கத்துக்கிட்டாங்க … அண்ணாவ விட அவங்க தான் எப்பவும் சிலம்பத்துல பெஸ்ட்”, அவங்க ஸ்டைல் உனக்கு அப்டியே இருக்கு” என்று கார்த்திகா அவளை கட்டிக்கொள்ள…

 

தாத்தா பெருமையாக தன் பேத்தியை பார்த்தவர்… தன் பிடிக்காத மருமகளை எண்ணி அகமகிழ்ந்து போனார். 

 

அகிலா பாட்டி மகிழ்ச்சியில் தன் பேத்தியை மார்போடு இறுக்கிக் கட்டிக்கொள்ள… கொஞ்ச நேரத்திற்கு முன்பே அங்கு வந்து தியாவின் ஆட்டத்தை பார்த்த அகரன், வீட்டில் அவள் சொன்னதின்‌ அர்த்தம். அவள் மனதில் அவள்‌ “என்னை” தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்ததால், தன்னவளை காதல் பார்வையில் தழுவிக் கொண்டான்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!