மயங்கினேன்.! கிறங்கினேன்.! 9

மயங்கினேன்.! கிறங்கினேன்.! 9
அத்தியாயம் 09
( கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது, அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன.)
திருமணம் முடிந்த கையோடு நடக்க வேண்டிய அத்தனை சடங்குகளும் நடந்தேறியது.
அதில் எல்லாம் வெற்றி முகத்தை கடுகடுத்தும் இனியா பயத்துடனும் வைத்திருந்தனர்.
இனியாவிற்கு வெற்றியின் அந்த கோபமான பேச்சு அவளை இப்படி பயப்பட வைத்திருந்தது.
தாலிக்கட்டும் போது கூட பெண்ணவள் , இவனின் கோபம் எல்லாம் சிறிது காலத்திற்கு மட்டுமே இருக்கும் என நினைத்தாள். அதன் பின்னர் சமாதானம் ஆகிவிடுவான் என்றே நினைத்திருந்தாள்.
ஆனால் அவனோ ஓம குண்டத்தை சுற்றி வரும் போது , அவளை கீழே விழ வைக்க பார்த்தானே , அதிலே அவனின் கோபத்தின் அளவை கண்டு கொண்டாள் பெண்ணவள்.
இருப்பினும் அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை . சூழ்நிலை கைதியாக அவள் மாறிவிட்டாள்.
தன்னை கீழே விழ விட்டு வெற்றி பார்த்த அந்த ஒற்றை பார்வையே காதல் கொண்ட நெஞ்சத்தை அறுத்து எறிந்தது போல் இருந்தது இனியாவிற்கு.
அவனின் அந்த பார்வையில் அத்தனை வன்மம் இருந்தது. இது தான் காதலித்த வெற்றியா என்பது போல் அவளை யோசிக்க வைத்து விட்டது.
ஓம குண்டத்தை சுற்றி வந்த பிறகு அம்மி மிதித்து மெட்டி அணிவிக்கும் போது , மெட்டியை வேணுமென்றே அழுத்தி விட , அவளின் பிஞ்சு விரலுக்கு வலி எடுத்தது. ஆனாலும் அதை பொறுத்து கொண்டாள் தன் மணவாளனின் சந்தோஷத்திற்காக.
பின்னர் , மணமக்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றார்கள் பெற்றோர்கள்.
மாலை வரவேற்பு விழா இருப்பதால் அங்கிருந்து வேலை பார்ப்பதற்காக மணியும் கோதையும் மண்டபத்திலே இருந்து விட்டனர்.
வீட்டு வாசலில் நிற்க வைத்து , விஜயா மட்டும் உள்ளே சென்று ஆர்த்தி கரைத்து எடுத்து வந்தார்.
அவர் வெளியே வருவதற்குள் அத்தனை முறை மகன் அவர் பெயரை சொல்லி அழைத்து விட்டான்.
” ம்மா..”
“இரு டா வரேன்..”
” ம்மா இப்போ வர போறியா இல்லையா நீ.? என்னால நிக்க முடியல மா கண்ணெல்லாம் எரியுது ” என கத்த
பக்கத்தில் நின்ற பரமசிவமோ ,” ஒரு ரெண்டு நிமிஷத்துல என்ன ஆகப்போகுது சொல்லு.சும்மா குதிக்காம ஒழுங்கா உன் பொண்டாட்டி கூட நில்லு டா ” என்றார் .
அவரை கண்டு முறைத்தவன் அமைதியாக நின்றான்.
தாய் தந்தையினரின் சொல்லிற்கு இங்கு மறுப்பேச்சு என்பதே கிடையாது. அவனை பொறுத்தவரை அவர்களை கிண்டலடிப்பான் , வாதம் செய்வான். ஆனால் அது சாதாரணமான நேரத்தில் மட்டுமே. மற்றபடி தாய் தந்தையினரை மதிக்கும் நல்ல மகன்.
அதனால் தான் அவனால் இக்கல்யாணத்தை நிறுத்த முடியவில்லை. அதான் வேறுவழியின்றி இனியாவின் உதவியை நாடியிருந்தான்.
ஆனால் அவளோ ‘நிறுத்துக்கிறேன் ‘ என்று கூறி கடைசி நேரத்தில் அவனின் கழுத்தை அறுத்து விட்டாள்.
விஜயா வந்ததும் ,” ஏன்டா கொஞ்ச நேரம் கூட உன்னால நிக்க முடியாதா என்ன ” என்று கடிந்து கொள்ள
” காலைல இருந்து ஒரு வாய் கூட சாப்பிட கொடுக்களை நீ. சோ நீ இதெல்லாம் பேச கூடாது . இப்போ உள்ள விடப்போறியா இல்லையா ம்மா ” என பொறுமையிழந்து பேச
” இருடா இரண்டு பேருக்கும் ஆர்த்தி எடுத்துக்கிறேன். அப்புறமா நீ உள்ள போவியாமா ” என்றவர் அவர்கள் இருவருக்கும் ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார்.
அவளை நடு ஹாலில் அப்படியே விட்டுவிட்டு மாடி ஏறி போக போனவனை தடுத்தார் விஜயசாந்தி.
” அறிக்கெட்டவனே ! இப்போ எதுக்கு மேல போற ” என அவனை தடுத்து நிறுத்தி கேட்க
” ஏன் மா மேல எதுக்கு போறேன்னு கேட்டா நான் என்னத்தை சொல்றதாக்கும் ” என முறைக்க
” அடிக்கடி நிறுப்பிக்கிற டா நீ அறிவு இல்லாதவன்னு ” என சத்தமாக அன்னை சொல்லவும் அங்கிருந்தவர்கள் சிரிக்க , அவர்களோடு சேர்ந்து இனியாவும் சிரித்தாள்.
மற்றவர்கள் சிரித்தது கூட அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. சத்தம் வராமல் மெதுவாக சிரித்த இனியாவை பார்த்ததும் முசு முசுவென கோபம் ஆர்ப்பரித்தது அவனுள்.
அவளை தன் கையாலே கொல்ல வேண்டும் என்ற ஆவேசம் வந்தது.
ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணி , அவளை பார்த்து முறைக்கலானான். அதனை பார்த்த இனியா பயத்தில் தலையை குனிந்து கொண்டாள்.
” பொண்டாட்டிய பார்த்துக்கிட்டு இருந்தது போதும் டா. இனி காலம் முழுசா உன்கூட தானே இருக்க போறா. அப்புறம் என்ன இப்ப சாமி கும்பிடனும் ” என்று விஜயா அவனின் இமேஜை மேலும் பஞ்சர் பன்ன , ‘ஏன்டா இந்த குடும்பத்தில் போய் பிறந்தோம் ‘ என நொந்து போனான் வெற்றி.
அன்னை சொல்லை தப்பாது அவனும் சாமி அறைக்கு வந்து அன்னையின் பக்கத்தில் நிற்க ,
” அடேய் ! அறிவில்லாதவனே போ போய் உன் பொண்டாட்டி பக்கத்துல நில்லு ” என அவனை தள்ளிவிட்டார்.
” ச்சை ” என முணுமுணுத்தவன் விருப்பமே இல்லாமல் அவளின் பக்கத்தில் இடைவெளி விட்டு நின்றான்.
பின்னர் அவள் சாமி கும்பிட்டு விளக்கேற்றினாள். அவனின் வாழ்க்கை ஒளியை கொண்டு வர இனியா என்பவள் இருக்க , அதே அவளின் வாழ்க்கையில் இருக்கின்ற வெளிச்சை அகற்ற வெற்றி என்பவன் இருக்கிறான். இருவரது வாழ்விலும் இனி என்ன நடக்குமோ..
கடவுள் விட்ட வழி.
விளக்கேற்றிய பின்பு பால் பழம் அருந்தும் சடங்கு வைத்திருக்க , முகத்தை சுருக்கினான் வெற்றி.
இதில் எல்லாம் என் இசையுடன் தான் செய்ய வேண்டிய சடங்குகள் இவளுடன் செய்கிறோமே என்று நினைக்கும்போதே வாழ்வு கசந்தது.
இருவரும் அருகருகே அமர வைக்கப்பட்டிருக்க , வெற்றியின் கையில் பால்லை கொடுத்து குடிக்க சொன்னார் அவனின் அத்தை திலகம்.
‘ என்ன பார்த்தா சிரிச்ச உனக்கு இருக்கு’ என மனதில் நினைத்தவன் , திலகம் கொடுத்த பால்லை பாதி குடித்தவன் யாரும் பார்க்கிறார்கள் என சுற்றிலும் முற்றிலும் பார்க்க , பெரியவர்கள் யாவரும் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இது தான் சரியான நேரம் என நினைத்தவன் , பாலில் எச்சியை துப்பினான்.
அவனையே ஓரக்கண்ணால் பார்த்த இனியா திகைத்து போனாள்.
” தம்பி முழுசா நீயே குடிச்சிடாத . உன் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் கொடு பா ” என ஒரு வயதான பெண்மணி கிண்டலடிக்க
‘ இந்த கொசு தொல்லைகளை தாங்க முடியல. இதுங்கள முதல அடிச்சு துரத்தனமும் ‘ என நினைத்து வெளியில் சர்மசங்கடமாக உணர்ந்தது போல் காட்டிக் கொண்டான்.
” பிடி ” என சிடுசிடுத்த படியே அதை அவளிடம் நீட்ட திகைத்து போனவளின் கண்கள் பெரிதாக விரிந்தது.
‘ இதை எப்படி நான் குடிக்க முடியும்.?’ என்பது போல் முகபாவனை காட்ட
” பிடிங்க மிஸஸ். இனியா வெற்றிமாறன் ” என்றவன் கோணலாக சிரிக்கலானான்.
” உன் புருஷனே நாங்க கேட்டுக்கிட்டதால தான் கொடுக்கிறான். அதை வாங்காம பார்த்துக்கிட்டே இருந்தா சம்பரதாயமாம் முடிஞ்சிடுமா என்ன. வாங்கி குடி டா ” என திலகம் சொல்ல , அவரை பாவமாக பார்த்தவள் அதனை வாங்கினாள்.
கொடுக்கும்போது எங்கே அவளது கை தனது கை மீது பட்டு விடுமோ என்று டம்ளரை நுனியில் பிடித்த படியே அவளிடம் கொடுத்தான்.
‘ எப்படி டா இதை குடிப்பது ‘ என அஷ்டகோனலாக முகத்தை வைத்து அந்த குவளையை பார்க்க
” குடி மா “
” ம்ம்… அத்தை ” என்றவளால் குமட்டிக் கொண்டு வந்தது.
அவளை பார்த்து கோணலாக சிரித்தவன் ,” நானே ஒருவளின் எச்சம் தானே. அதுவே இப்போ உனக்கு தான் சொந்தம்னு சொல்லுது. அப்புறம் இதை குடிக்க உனக்கு என்ன வந்துச்சி குடி ” என மெதுவான குரலில் கிசுகிசுக்க
அழகாய் அவனை பார்த்து மயக்கும் புன்னகை ஒன்றை புரிந்தவள் அதை குடிக்க போக , யாரும் அறியா வண்ணம் அதை தட்டி விட்டான்.
அதில் திகைத்து போனவள் , வெற்றியை பார்க்க , அவனோ ” இந்த எச்சம் பட்ட பால் கூட உனக்கு கிடைக்காது டி ” என அடிக்குரலில் சீறினான் .
அவனையே பாவமாய் பார்த்தவளுக்கு, பக்கத்தில் உள்ள சொன்ன விடயத்தை கேட்டு கண்கள் கலங்கியது.
” என்ன விஜயா இது எல்லாமே அபசகுணமா நடக்குது. அப்போ என்னென்னா மேடையில விழுந்தா , இப்போ இந்த பால்லை கொட்டிட்டா. கொஞ்சம் பொறுமையா யோச்சிருக்கலாம் விஜயா ” என ஒருவர் சொல்ல
அதுவரை அமைதியாக இருந்த பரமசிவம் , ” இது ஏதோ சாதாரண விஷயம் தான். அதை போய் பெருசு படுத்துறீங்க. விளக்கு ஏத்துனது கையில் எண்ணை இருந்து இருக்கலாம். அதனால கூட வழுக்கி கீழே விழுந்து இருக்கலாம் மா. நீங்க வாய்க்கு வந்ததை பேசி வாழ வந்த பொண்ணுடைய மனசை நோகடிக்காதீங்க ” என காட்டமாக சொல்லியவர்
” போதும் நீங்க சம்பரதாயமாம் செய்றேன் புள்ளைங்களை கஷ்டப்படுத்தினது “
” என்னங்க இதெல்லாம் சடங்குங்க ” என்ற மனைவியை முறைத்தவர் ” ரெண்டு பேரும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க ” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.
வேகவேகமாக அவனது அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான் வெற்றி.
இங்கே இனியா மட்டுமே தன்னந்தனியாக அனாதை போல் நிற்க , கண்கள் இரண்டும் கலங்கியது.
” அவன் என்ன வேகமாக மாடிக்கு போயிட்டானா என்ன.? அறிவே இல்லாதவன்னு முன்னாடியே சொன்னேனே. அதை நிறுபிச்சிட்டு போறான் இந்த பையன். ” என கலங்கிய கண்களை துடைத்தவர்
” இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட உன் கண்ணுல இருந்து வர கூடாது டா. நீ சந்தோஷமா இருக்கனும் டா மா ” என்க
தன் அத்தையை அணைத்து கொண்டவள் ,” தேங்க்ஸ் அத்தை ” என்றாள்.
” புருஷனும் பொண்டாட்டிக்கும் இதே வேலையா போச்சி. அவன் என்னென்னா என் புருஷன் கிட்ட கண்ணாலையே பேசுறான். நீ என்னென்னா என்னைய கட்டி பிடிக்கிற . போற போக்குல எங்களை பிரிச்சுடாதீங்க தாயே ” என சிரிக்க அவளும் அவரோடு சேர்ந்து சிரித்தாள்.
அதனை மேலே இருந்து பார்த்த வெற்றி ,” எங்க அம்மா கூட சேர்ந்து சிரிக்கிறியாக்கும். இந்த சிரிப்பே இல்லாம பண்ணுறேன் பாரு ” என உள்ளுக்குள் பொறுமினான்.
அதன் பிறகு மாலை ஆறு மணிப்போல் இருவருமாக ரிசப்ஷனிற்காக கிளம்பினர்.
இனியா கிளம்பிட்டாளா என பார்க்க வந்த விஜயா தன் மருமகளின் அழகினை கண்டு வியந்து போனார் அந்த மூத்த பெண்மணி.
“என் மருமக இவ்வளோ அழகுன்னு எனக்கு தெரியாம போச்சே ” என பின்னாடியிலிருந்து வந்த தன் அத்தையின் குரலில் அழகாய் மலர்ந்து சிரித்தாள்.
” உண்மையா அழகா இருக்கேன்னா அத்தை.?” என தலை சாய்த்து பெண் கேட்டாள்.
சிவப்பு நிற லெஹங்காவில் ஆங்காவே மயில் எம்ப்ராயிடரை கொண்டு ஆடை , இனியாவிற்கு பாந்தமாக பொறுந்தியிருந்தது. அந்த அழகிய கண்களுக்கு மை தீட்டி , நெற்றியில் அழகாய் சிவப்பு பொட்டொன்று , இதை அனைத்தையும் விட வகுட்டில் குங்குமம் வைத்து, அத்தனை அழகையும் அவள் ஒருவளே ஒத்திகைத்து எடுத்திருந்திருந்தது போல் இருந்தாள்.
” என் கண்ணே பட்டுடும் போல டா ” என அவளுக்கு நெட்டி எடுத்து காதுக்கு பின்னே மை வைத்து விட்டார் யார் கண்ணும் பட்டு விட கூடாது என்று…
” சரி டா மா நேராமாச்சி வா போகலாம் ” என அவளை அழைத்து வெளியே வந்தார்.
அனைவரும் கிளம்பி விட , வெற்றி மட்டும் வராமல் இருக்கவே விஜயா சென்று அழைத்து வர ,அவனது அத்தை திலகமோ ” என் மகளுக்கு சமமா இருக்கனும்கிறதுக்காக இவ்வளவு நேரமா எடுப்ப ” என சிரிக்க
” இப்ப மட்டும் நேரமாகலையா அத்த” என சிடுசிடுத்தவன் முன்னே சென்று காரில் அமர்ந்து கொண்டான்.
ரிசப்ஷன் நடந்த அந்த மூன்று மணி நேரம் வரையும் அவளை அமர விடாமல் கொடுமை செய்தான்.
காலி வலியிலும் உடல் சோர்விலாலும் முகம் சோர்ந்து போய்விட்டது.
அதை கண்ட வெற்றிக்கு இரண்டு ப்ளேட் மட்டன் பிரியாணி ஒரே நேரத்தில் சாப்பிட்டது போல் அத்தனை சந்தோஷமாக இருந்தது.
அவளை காக்கவென பூங்கோதை வந்து அழைத்து சென்றுவிட , அடுத்து அவளை எப்படியெல்லாம் கொடுமை செய்யலாம் என்று மேடையில் அமர்ந்தபடி யோசிக்க செய்தான் நம் நாயகனாக வலம் வரும் இனியாவிற்கான வில்லன் மிஸ்டர். வெற்றிமாறன்.