மாறா காதலுடன் 5

மாறா காதலுடன் 5
கல்லூரி, அர்ச்சனா “ப்ளீஸ் டி மேம் வந்தால் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும் டி. இந்த முறை தான்டி என் பிறந்தநாளை பெருசா கொண்டாட போறாங்க. நம்ம ப்ரெண்ட்ஸ் யாரும் வரலை டி. நீயாவது வாயேன்” என்று முகத்தை சுருக்கி பாவமாக வைத்து கேட்க,
“ஐய்யோ… ஐய்யோ…. நான் என்ன பண்ணுவேன்…. நான் வேண்டுமானால் வருவேன். தீதி வர எல்லாம் சாத்தியமே இல்லடி” என்று அழுத்தமாக சொல்ல, “ஏன்? ஏன்? வந்தால் மனசு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் தானே” என்று தன் விருப்பமான ஆத்ரேயாவை பார்ட்டி க்கு வர வைக்க போராடினாள். இதுவே நேற்று நடந்து இருந்தால் ‘மேம் க்கு பிடிக்கலையா அப்ப ஓகே’ என்று கூறி இருப்பாள். ஆனால் காலையில்,
கௌதம் கல்லூரிக்கு கிளம்பி கொண்டு இருந்த அர்ச்சனா விடம் “எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா டி” என “என்ன டா சீக்கிரம் சொல்லு… சொல்லி தொலையும்” என்றதும், மெதுவாக அருகே யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு, “அந்த மோனலி உன் ப்ரெண்ட் தானே. அவ நம்பரை கொஞ்சம் வாங்கி தரியா” என்றதும், கையில் இருந்த புத்தகம் தவறி கீழே விழ, அதிர்ந்து அவனை பார்த்தாள்.
கயல் அப்பொழுதும் போல் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு வர, நடுவே வந்து வழியை மறைத்தான் கார்த்திக்.
திடுக்கிட்டு பக்கத்தில் உதவ யாராவது இருக்காங்களா என்று பயத்துடன் தேட “என்ன புள்ள பார்த்து ரொம்ப நாள் ஆகுது… எங்க போய் இருந்த. இந்த மாமன் நியாபகம் எல்லாம் வரதே இல்ல போல” என்று
“வழி விடுங்க நான் போகனும்” என்று தரையை பார்த்து சொல்ல, “சரி வழியை விடுறேன் ஆனால் என் முகத்தை பார்த்து மாமா வழியை விடுங்கனு சொல்லு அடுத்த நிமிசம் நீ போகலாம்” என
கையை பிசைந்து கொண்டு நின்றவளின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் நிலத்தை சென்றடைய, அதை கண்டு “இந்தா புள்ள என்ன கேட்டுட்டேன்னு கண்ணு கலங்கிற… பிடிக்காதது நடந்தா எதிர்த்து நில்லு அதை விட்டுட்டு கோட்டி தனமா அழுது வடியாத போகனும் அதான போ… எதாவது உதவி தேவைப்பட்டால் இந்த மாமனை கூப்பிடு….. வேண்டாம் நினை அது போதும் அடுத்த நிமிசம் உன் முன்ன நிற்பேன்” என்று போகும் அவளையே ரசித்து பார்த்து நின்றவனின் முதுகில் தட்ட,
“என்னடா” என்று பக்கத்தில் இருக்கும் அவனது நண்பன் காளி “ஏன் பங்காளி அவளை நிசமா தான் விரும்புறியா” என்றதும்,
“ஆமாம் பங்காளி… அவ என் பைங்கிளி என்ன கொஞ்சம் பயந்த பொண்ணு அது தான் எனக்கு ரொம்ப பயமே…. நாட்டு நடப்பு எப்படி இருக்கு… இவளை தனியா விடவே ஒரு மாதிரி இருக்கும் அதான் அவளுக்கே தெரியாமல் அவ போற இடம் எல்லாம் காவலுக்கு நானும் போறேன்” என்றவனை அதிசயமாக பார்த்து,
“அவளுக்கும் அவ மாமா மகனுக்கும் நிச்சயம் பண்ண போறதா பேச்சு வருது பார்த்து இருந்துக்கோ. இல்ல பெண்ணை தூக்கிடலாம் எப்படி” என்று கார்த்திக்கை பார்க்க,
“அவளுக்கு சம்மதம் னா அவனையே கட்டிக்கிட்டும்” என்றவனை புரியாமல் பார்த்தான் காளி.
அவன் பார்வையை உணர்ந்து “நாம விரும்புறவங்க நம்மை தான் விரும்பனும் என்று எதாவது சட்டம் இருக்கா. உண்மையா விரும்பி இருந்தா அவங்களை கஷ்டப்பட வைக்க மனசுக்கு தோன்றாது பங்காளி. அவ என் சாமிடா எனக்கு கிடைச்சா பக்கத்தில் இருந்து பூஜை பண்ணுவேன். இல்ல எட்டா தூரத்தில் இருந்தா தொலைவில் இருந்தே ரசிப்பேன்” என்று அவன் வண்டியில் பறந்து விட்டான்.
போகும் அவனை பார்த்த காளி “உன் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். பாரு இந்த ஆத்தா உனக்கு நல்லதை மட்டும் தான் பண்ணுவா” என்று அவனும் கிளம்பிவிட்டான்.
‘நம்ம என்ன முத்தமா கேட்டோம் இப்படி நிற்கிறா…. ஓ… மேடம் நான் அவளுக்கு ரூட் விடுகின்றேன் நினைச்சிட்டா போல. பரவாயில்லை நம்ம ஆளுக்கும் நம்ம மேல ஒரு இது இருக்கு போல’ என்று மழை சாரல் அடிக்கும் மனதை அடக்க முடியாமல் திரும்பினான் கௌதம்.
அர்ச்சனா நடுங்கும் குரலில் “அவ நம்பர் உனக்கு எதுக்கு டா” என்று பதட்டமாக கேட்க, இவனும் விளையாட நினைத்து “அது பெர்சனல் டி அதையெல்லாமா உன் கிட்ட சொல்லுவாங்க” என்று நக்கலாக கேட்க,
“ஓ!!! இரு நம்பர் போனில் இருக்கு” என்று தனது கைபேசியில் இருக்கும் மோனலின் நம்பரை கனத்த மனதுடன் பகிர,
அவளின் முக வாட்டத்தை பார்த்ததும் இவனுக்கு எதோ போல் ஆகி விட “நம்பர் எதுக்குனு கேட்டியே சொல்லவா” என்றதும், ஸ்வரம் இறங்கிய குரலில் “அதான் பெர்சனல்னு சொல்லிட்டியே” என
“ஆமாம் பெர்சனல் தான் பட் எனக்கு இல்லை உன் அண்ணாக்கு” என்று சிறு புன்னகையுடன் சொல்ல, “என்ன!!!! ” அதிர்ச்சியாக அவனை பார்க்க,
“என்ன டி இது, எனக்கு என்றாலும் இதே அதிர்ச்சி உன் அண்ணாக்கு என்றாலும் இதே அதிர்ச்சி என்ன தான் டி உன் பிரச்சினை” என்று கடுப்பாக கேட்க,
அவளோ “அண்ணா மோனலை.. ” அடுத்து அவள் பேச போவதை உணர்ந்து, “நிறுத்து… நிறுத்து. மோனல் நம்பரை தான் கேட்டேன். ஆனால் விவரம் கிடைக்க வேண்டிய ஆள் மோனல் அக்கா ஆத்ரேயாவை பற்றி” என்றான்.
“ஆது மேம் விவரமா!!!! அப்போ அண்ணா ஆது மேமை தான் விரும்புறானா!!! ஐய்… எனக்கு பிடிச்ச மேம் இனி எனக்கு மதனியா வர போறாங்க” என்று சந்தோச கூக்குரல் கொடுக்க,
“கத்தாத டி யாராவது கேட்டு ஆரம்பிக்க முன்னாடியே உன் அண்ணன் காதலுக்கு சமாதி கட்ட போறாங்க” என்றான்.
“கிளாஸ் டைமில் எங்க டி இழுத்துட்டு போற” என்று கத்தும் மோனலை கணக்கில் கொள்ளாமல் மைதானத்தின் ஓரத்தில் இருக்கும் பெரிய மரம் அருகே அழைத்து செல்ல அங்கே கௌதம் இவர்களுக்காக காத்திருந்தான்.
“யாருடி இது” என்றதும் மோனலை பார்த்து “இவங்க கௌதம் டி என் அண்ணா ப்ரெண்ட். உன் கிட்ட ஒரு கேள்வி கேட்க வந்து இருக்காங்க” என்ற அர்ச்சனாவை நோக்கி,
“என் கிட்டவா… எ.. என்ன கேட்கனும்” என்று பதட்டமாக கேட்க,
கௌதம் “ரிலாக்ஸ் சிஸ்… எனக்கு உங்க சிஸ்டர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்” என்றதும், “என் தீ யை பற்றியா… எதுக்கு நீங்க எதுக்கு என் தீதியை பற்றி கேட்கிறீங்க” என்றவளை,
“தப்பா எடுத்துக்காத மா… என்னை நம்பி சொல்லு… அவங்க எனக்கு தங்கச்சி மாதிரி தான்…. பாயல் பற்றி தெரிஞ்சா” என்று பேசும் போதே..
“என்ன சொன்னீங்க பாயல் ஆ… அது அவங்க அப்பா மட்டுமே கூப்பிடுகிற பெயர்… உங்களுக்கு எப்படி தெரியும்…. கண்டிப்பாக தீ சொல்ல வாய்ப்பு இல்லை” என்று படபடப்பாக கேட்க,
அவளிடம் சத்ரேஷ் காதலை இப்பொழுது சொல்ல வேண்டாம் என்று எண்ணி “ப்ளீஸ் மா சொல்லேன்” என்று கெஞ்சும் பார்வை பார்க்க,
“என் தீ யை பற்றி சொல்ல ஒரு நாள் கூட போதாது. ஒரே பொண்ணு அப்பானா உயிரு…. எங்க வீட்டுக்கும் சரி அவங்க வீட்டுக்கும் சரி இரண்டு வீட்டிக்குமே ராணி. யார் கிட்டவும் இல்லாத அளவுக்கு தைரியம். முகத்திற்கு நேராக நீ பண்ணது தப்புனு சொல்லிடுவாங்க. அது யாரா இருந்தாலும். ஆனா இது எல்லாம் நான்கு வருடம் முன்ன…. இப்ப” அவளின் குரலில் குமுறல்.
அர்ச்சனா “இட்ஸ் ஓகே டி” என்று அவளின் முதுகை தடவி விட, கௌதம் அவள் கூற போகும் விசயத்தை கூற்று நோக்கிய படி இருந்தான்.
“ஒருத்தன் வந்தான் சந்தோசமாக போய்ட்டு இருந்த எங்க வாழ்க்கையை மொத்தமாக அழிச்சிட்டான். எங்க வாழ்க்கையில் ஏன் அவன் வந்தான்??? என் தீ கிட்ட இருந்து அவங்க சந்தோஷத்தை பறித்தான். நிம்மதியை பறித்தான் சிரிப்பை பறித்தான் இன்னும் சொல்ல போனா என் தீ வாழ்க்கையே அழிச்சிட்டான். எங்க எல்லாருக்கும் இழப்பு தான் ஆனால் என் தீ யோட இழப்பு ரொம்ப அதிகம். தீ யை காப்பாற்றி சரி பண்ணவே எங்களுக்கு ஆறு மாசம் ஆச்சு. அவங்க எனக்கு தீ மட்டும் இல்லை அவங்க என்னோட” என்று பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கே வந்த ஆத்ரேயா,
“குட்டி இங்க என்ன பண்ற கிளாஸ் டைமில்” என்று கௌதமை கேள்வியாக பார்த்து கேட்க,
அர்ச்சனா முந்தி கொண்டு “மேம் வர சன்டே என் பிறந்தநாள். அதுக்கு வீட்டில் சின்னதா ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்காங்க. அவளை இன்வேயிட் பண்ணால் நீங்க வராமல் வர மாட்டேன்னு சொல்லிடா” என்று முகத்தை பாவமாக வைத்து சொல்ல,
“ஏன்டா குட்டி போய்ட்டு வா உன் ப்ரெண்ட் கஷ்டப்படுற பாரு” என்றதும் “இல்ல தீ நீங்க வந்தால் தான் நானும் போவேன். எனக்கு அங்க யாரையும் தெரியாதே இதோ இந்த பையாவை இப்ப தான் பார்த்தேன். ப்ளீஸ் வாங்களேன். போய்ட்டு சீக்கிரம் வந்திடலாம்” என்று கெஞ்சி கொஞ்சி சம்மதிக்க வைத்தாள்.
ஹைதராபாத்தின் வடமேற்கு பகுதியான பஞ்சாரா ஹில், கடலளவு மாளிகை வீற்றிருக்க, அதில் மனித நடமாட்டமோ குறைவு தான், ஏகபோக சொத்துக்களுக்கு ஒற்றை வாரிசு, மத்திய மந்திரியான நாராயண ரெட்டியின் அரசியல் வாரிசு சுதர்சன் ரெட்டி.
பிரகாஷ், சுதர்சனின் பி. ஏ “சார் மேடம் எங்க இருக்காங்கனு தெரிந்துவிட்டது. இந்த கோப்பில் எல்லா விவரமும் இருக்கு” என்று கொடுக்க,
அதை பார்த்த சுதர்சன் “பேபி இப்ப மதுரை கிட்ட இருக்கியா…. குட். ஐ அம் கம்மிங் ஃபார் யூ பேபி…. இந்த முறை நீ தப்பிக்க முடியாது” என்று கண்கள் சிவப்பேற கோபத்துடன் மொழிந்தான்.
இங்கு மதுரையில், கௌதம் “மச்சான் அவங்க வாழ்க்கையில் வேற யாரோ இருக்காங்க டா… அவங்க லைப்பில் என்ன நடந்துச்சுனு சரியா தெரியலை. பட் நல்லதா நடக்கலை டா அது மட்டும் நிச்சயமாக தெரியுது. உனக்கு அவங்க வேண்டாம் டா” என்று தன் நண்பனின் குணத்தை அறிந்து சொன்னான். சத்ரேஷ் எந்த அளவுக்கு பிடிவாதகாரனோ அதே அளவு மற்றவர் உபயோகித்த எந்த ஒரு பொருளையும் தொட கூட மாட்டான். அது அவனுக்கு எவ்வளவு பிடித்து இருந்தாலும்.
மெலிதாக புன்னகைத்து விட்டு “அவ தான் மாமா எனக்கு வேண்டும். இதுக்கு முன்ன அவ வாழ்க்கையில் யார் இருந்து இருந்தாலும் சரி என்ன நடந்து இருந்தாலும் சரி எனக்கு அவ வேண்டும் டா. தூக்கி போட அவ பொருள் இல்ல என் உயிர். ஐந்து வருசமாக நான் சுவாசிக்கும் காற்று டா. ஒரு வேளை அவங்க அந்த வாழ்க்கையில் சந்தோசமாக இருந்து இருந்தால் கூட நான் ஒதுங்கி இருப்பேனே தவிர வேற யாரும் என் வாழ்க்கையில் கிடையாது.
அவ சந்தோஷத்திற்காக யாரை வேண்டுமானாலும் எதிர்பேன் டா. சும்மா சொல்லலை ஐ மீன் இட். முதலில் அவ இப்படி ஆக யார் காரணம் அதை கண்டு பிடிக்கனும். அதுக்கு முன்ன அவ கூட பேசி நல்ல ப்ரெண்ட் ஆகனும். அதுக்கு ஒரு ஐடியா கொடு” என்ற நண்பனை தழுவி கொண்டான் கௌதம்.
பின் “நானும் அச்சு வும் வர சன்டே பர்த்டே பார்ட்டி க்கு அவங்களை கூப்பிட்டு இருக்கோம் அப்படியே பேசி கரெக்ட் பண்ணிடு” என, சத்ரேஷ் சாவகாசமாக “எப்படி பேசாமலே என் தங்கச்சியை நீ கரெக்ட் பண்ணி வைச்சு இருக்கியே அப்படியா” என்றதும், திரு திருவென முழித்தான் கௌதம்.
கீழ் கண்களால் அவனை பார்த்து “மச்சான் அது வந்து டா…. நா.. நான் உ…. உன்… கிட்ட …. உன் தங்கச்சி….. ” என்று கோர்வையாக பேச முடியாமல் தினற,
சத்ரேஷ் “உன்னை பற்றியும் தெரியும் என் பைத்தியகார தங்கை பற்றியும் தெரியும். நீ இப்ப சொல்லுவ அப்ப சொல்லுவனு பார்த்து நானே கடுப்பாகிட்டேன் என் தங்கை பாவம் டா. இப்ப புரிகிறதா மாமானு நான் உன்னை இப்படி கூப்பிட காரணம் ” என்று தோளில் கையை போட்டு கதைத்த படியே சென்றனர்.
ஞாயிற்றுக்கிழமை, மோனல் ஆர்வமாக தன் தோழி வீட்டுக்கு செல்ல தயாராகி கொண்டு இருக்க ‘என்ன இன்னும் தீதி வரலை’ என்று மூடியிருக்கும் அவளது அறையை பார்த்து கொண்டே திரும்ப அவள் கண்ணில் தென்பட்டதோ அன்றைய தேதி. “யா அல்லாஹ்!!!! இதை எப்படி நான் மறந்தேன். இன்றைக்கு அச்சோ!!” என்று கதவை தட்டி கொண்டு “தீ…. வெளியே வாங்க கதவை திறங்க தீ!!! எனக்கு பயமா இருக்கு” என்றதும், வெளியே வந்தாள் ஆத்ரேயா. கண்களின் சிவப்பே கூறியது அவள் அழுது இருப்பது. முகத்தில் துளியும் நிம்மதி இல்லை.
‘வீட்டிலே இருந்தால் தீ இன்றைக்கு முழுக்க அழுவாங்க…. எப்படி யாவது அவங்களை அர்ச்சனா வீட்டுக்கு கூப்பிட்டு போய்டனும்’ என்று நினைத்து கொண்டே, “தீ அர்ச்சனா போன் பண்ணிட்டா அவ நமக்காக சாப்பிடாமல் வெயிட் பண்றாள். சீக்கிரம் வாங்க நாம போனால் தான் சாப்பிடுவா” என்று அவளை அழைத்து சென்றாள்.
முழுதாக வரவில்லை என்றாலும் முடிந்த மட்டு நடமாடியவளை மொத்தமாக குலைத்தது தொலைகாட்சியில் வந்த செய்தி. கையில் இருந்த டம்ளர் தவற விழ, அந்த சத்தத்தில் அனைவரும் அவளை பார்த்தனர்.
அடுத்த நொடி மடிந்து அமர்ந்தவள் காலில் முகத்தை மறைத்து மூச்சு விட கஷ்டப்பட்டு கொண்டே “காப்பாத்துங்க….. யாராவது காப்பாத்துங்க….. என்னை விட்டு போகாதீங்க எனக்கு பயமா இருக்கு நான் சாக போறேன் எதுக்கு நான் இனி வாழனும்” என்று உடல் அதிர சுயநினைவு இல்லாமல் பிதற்ற, சுற்றி இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி.
மோனல் நிலமையை உணர்ந்து “தீ…. நான் கூட தான் இருக்கேன் என்னை பாருங்க… ஒன்றும் இல்லை தீ… இட்ஸ் ஓகே நம்ம இதை எல்லாம் தாண்டி வந்திட்டோம்” என்று அவனை சுயநினைவுக்கு கொண்டு வர முயல, முன்ன விட அவளது பிதற்றல் அதிகம் தான் ஆனது. அவளை சுற்றி சித்தாரா, நிரஞ்சனா, அர்ச்சனா பதட்டமாக நிற்க, அப்பொழுது தான் மாடியில் இருந்து வந்த சத்ரேஷ் நடந்ததை நொடி பொழுதில் புரிந்து கொண்டு அவள் அருகே நெருங்கி ஆத்ரேயா கன்னத்தை தட்டி கொண்டு இருந்த மோனலை வேகமாக இழுத்து தள்ளினான்.
தள்ளிய வேகத்தில் நடப்பது எதுவும் புரியாமல் நின்ற காவேரி மகன் மோகன்ராஜ் மீது விழுந்தாள். அதில் குடும்பமே அவனை தீட்ட நினைக்க, அவனின் அடுத்த செயலில் அதிர்ந்து கடும் கோபத்தை வரவழைத்து. எப்படி என்னவா இருக்கும்???