மோகனங்கள் பேசுதடி!- டீஸர்

மோகனங்கள் பேசுதடி!- டீஸர்
டீஸர் 1
“அப்பா,இப்போ எனக்கு எதுக்கு கல்யாணம் சொல்லுங்க?”
“எதுக்கு கல்யாணம் பண்ணுவாங்க அருவி, உனக்கு இருபத்தியொரு வயசாகிடுச்சி. உனக்கு அடுத்து இன்னும் ரெண்டு பேர் இருக்கிறதை ஞாபகம் வை” அதட்டலுடனே வார்த்தைகள் வெளிவந்தது.
“அப்பா ப்ளிஸ், எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம் பா. நான் வேலைக்கு போகணும்னு ஆசைப்படுறேன்” தந்தையிடம் கெஞ்சலான குரலில் கூற,
“இங்க பாரு அருவி, இந்த கல்யாணத்தை வச்சி எனக்கு நிறைய கனவுகள் இருக்கு.அதை உடைக்க நினைச்ச அப்புறம் நான் மனிசனா இருக்க மாட்டேன் பார்த்துக்க. நீ செஞ்ச வேலைக்கு உன்னை கொன்று போடாம இருக்கேன்னேன்னு சந்தோஷப்படு” கண்டன குரலில் எச்சரிக்கை விடுத்தார் தந்தை சந்தானமூர்த்தி.
தந்தையின் பேச்சு அவர் பெற்ற செல்வங்களுக்கு அருவருப்பை தான் கொடுத்தது.
பெற்ற பிள்ளையையே பணத்திற்காக பேரம் பேசி கல்யாணம் என்ற பந்தத்தில் மகளை விற்க பார்க்கிறார்.
*****
திருமண கோலத்தில் முகத்தில் எந்த விதமான உணர்வுகளையும் பிரதிபலிக்காது, நிர்மலமான முகத்தோடு மணமகன் பக்கத்தில் மேடையில் கையில் குழந்தையுடன் அமர்ந்திருந்தாள் அருவி.
அவளுக்கு விழிகளில் கண்ணீர் கூட வற்றிப்போனது.
தனக்கு மட்டும் கடவுள், ஏன் இத்தனை கொடுமைகள் செய்கிறாரோ என்று புரியாமல் மனதோடு தன் ரணப்பட்டாள்.
குழந்தையை தன்னிடமிருந்து யாராவது பரித்துவிடுவார்களோ என பயத்தோடு தன் மகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அருவின் பக்கத்தில் மணக்கோலத்துடன் அமர்ந்திருந்த அருண்தேவோ,” சில் அருவி, பயப்படாத உனக்காக நான் இருக்கேன் ” அன்போடு அருண் மொழிந்திட, மனதின் வலியை உள்ளாரே மறைத்து வைத்து வெளியே புன்னகைக்க முயன்றாள்.
முகம் புன்னகைத்தாலும் விழி தனது வலியையும் வேதனையும் அப்பட்டமாக காட்டியது.
ஐயர் மந்திரங்கள் ஓத, மகளது திருமணத்தினால் கிடைக்க இருக்கும் வரவுகளை எண்ணி சொர்கத்தில் மிதந்தார் சந்தானமூர்த்தி.
மகளின் வாழ்வு இப்படி விளையாட்டு பொருள் போல், கணவனால் பந்தாடப்படுக்கிறதே எண்ணி உள்ளுக்குள் வருத்தப்பட மட்டுமே முடிந்தது அந்த அன்னையால்.
கணவனை மீறி ஒருவார்த்தை கூட பேச முடியவில்லை. அவரது கைபொம்மையாய் இருக்கிறதை நினைத்து வெட்கினார் சந்திரா.
“கெட்டிமேளம்… கெட்டி மேளம்…” ஐயர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுக்க, நாதஸ்வரம் கீதமாய் இசைக்க அவள் கழுத்தில் மாங்கல்யம் ஏறியது.
இருளாய் இருந்த அவள் வாழ்வில் வெளிச்சமாய் மெழுகேற்ற செய்யவென அவள் வாழ்வில் கணவனாய் நுழைந்திருந்தான் அவன்… அவளின் குழந்தையின் தந்தையானான்.
*******
“சீனிஅர்(சீனியர்)…”
“சொல்லுங்க ஜூனியர்”
“என்ன தூக்கு” குழந்தை பூவினி அவனின் முன் கையை விரித்து தூக்கு என செய்கை காட்டியது.
“இதோ என் ஜூனியரை தூக்க வேண்டியது தானே என்னோட முதல் வேலை” என அவன் குழந்தையை தூக்கிக் கொள்ள,
குழந்தையை தூக்கியதும் குழந்தை அவன் முகமெங்கும் முத்தமழை பொழிய, மகளின் அன்பில் நெஞ்சம் நெகிழ்ந்து தான் போனான் அவன்.
மகளை அவளது வகுப்பில் காணாது பயந்து போய் தேடிவந்த அருவியின் விழிகளில் அவனின் கைப்பிடியில் தன் மகளை கண்டதும் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் பெரிதாய் விரிந்தது.
இவனால் தானே தன் வாழ்வு தடைபுரண்டு ஓடியது.
யாரை வாழ்நாளில் பார்க்க கூடாது என்று நினைத்தாளோ, அவனை மீண்டும் தன் வாழ்வில் சந்திக்ககூடும் என்று நினையவில்லை.
இவனை பற்றி நினைக்க நினைக்க வாழ்வே கசந்தது.
தனது வாழ்வின் இத்தனை கஷ்டங்களுக்கும் இவன் ஒருவன் தானே காரணம். இவன் தனது வாழ்வினுள் நுழையாமலே இருந்திருக்கலாம்.
வேகமாக சென்று தனது குழந்தையை அவனிடமிருந்து பறிக்க முயல, அந்த நெடியவனோ விடாக்கண்டனாக குழந்தையை தரமறுத்தான்.
“என் குழந்தையை கொடு முதல”
“முடியாது” மறுத்து பேசி, அவளின் பீபிப்பை ஏற்றலானான்.
“கொடுக்கப்போறியா இல்லையா நீ” அதீத கோபத்தை எல்லையில் இருந்து கேட்க, அவனோ அவளை மோகன புன்னகையோடு ஏறிட்டான்.
“இந்த சிரிப்பு தான் என்னைய இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கு.இப்படி சிரிச்சு சிரிச்சே என் வாழ்க்கையை அழிச்சிடல நீ” கோபத்தின் விளைவாக இரண்டு கண்களும் ரோஜா பலரைப் போல் சிவப்பேரி இருந்தது.
*******
“உன் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்க நினைக்காத. அதுக்கான ஆல் நான் கிடையாது” கைநீட்டி எச்சரிக்கை விடுத்தாள் அருவி.
“நானுமே உன்னை உன் இஷ்ட படி தான் இருக்க சொல்றேன்” எப்போதும் அவளுக்காக மட்டுமே வீசப்படும் மோகன புன்னகையை வீசியவன் , வார்த்தைகள் ஒரு வித அழுத்ததுடனே வந்தது.
‘இது என்ன மாதிரியான செயல்’ என்று குழம்பிப்போனாள் பாவையவள்.
“எப்போ உன்கிட்ட இருந்து விடுதலை கிடைக்கிதோ, அன்னைக்கு நான் கண்டிப்பா என் இஷ்டம் போல இருப்பேன்” மொழிந்தவள் அவனை கடந்து செல்ல பார்க்க, அவளின் வலக்கரத்தை பிடித்து இடையோடு சேர்த்து தன்னோடு நெருக்கமாக நிறுத்தியவன், அவள் சுதாரிக்கும் முன் இதழோடு இதழொற்றினான்.
அவனிடமிருந்து திமிறி விலகப்பார்க்கவே, அவனது பிடி மேலும் இறுகி அவளை வதைக்க தொடங்கியது.
அவனது மொத்த ஆசையையும் அந்த இதழிலே காட்டிட துடிக்க, பாவைக்கோ அந்த முத்தம் கசக்க தொடங்கியது.
அவனுக்கு ஏற்றது போல் டீவியில் பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.
ஆசையே அலைபோலே
நாமெல்லாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே…..