வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 17

Screenshot_2020-12-18-06-54-30-1-f040a820

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 17

மிக கனமான நொடிகள், அன்னை மற்றும் மகள்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து தம் பேச்சுக்களை அழுகையூடும், சிரிப்பினூடும் பேசி தீர்த்தனர். அந்த முரண் உணர்ச்சிகளின் கலப்பில் பாசம் பரிமளித்திருந்தது.

 

மற்றவர்கள் கைகட்டி பார்க்கும் நிலையிலேயே இருந்தனர். ஒருவன் தன்னவளை தேற்ற முடியாது தவிக்க, இன்னொருவனோ தன் அன்னை தன்னை விட்டு நீங்கி போய்விட ‘என் செய்வேன்’ என்று ஏக்கமாய் நீர் திரண்ட விழிகளோடு பார்திருந்தான்.

 

“டேய், இப்டியே பார்த்துட்டு இருந்தோம்னுவை, இப்படியே தான் இருக்கப் போறாங்க.”

 

மித்ரன் கிருஷ்ணாவின் தோள் தொட்டு கூற, அவனை பார்க்க தலை உயர்த்த கிருஷ்ணாவின் திரண்டிருந்த விழிநீர் ஓர் கன்னம் வழியாக வழிந்தது.

 

“டேய்…”

 

கிருஷ்ணா சட்டென. எழுந்து வெளியில் சென்றிட அவனைத் தொடர்ந்து அவன் பின்னே மித்ரனும் நடந்தான்.

 

 இவர்கள் வெளியேற, அந்நிகழ்வே மற்றவர்களை அவரவர் நிலை உணரச் செய்தது.

 

ராஜ் மகிழிடம் கூறி அனைவருக்கும் தேநீர் அருந்தக் கொடுக்க, அப்போதே மித்ரன் மற்றும் கிருஷ்ணாவை காணாது வாசுகி கேட்க, அவர்களை அழைத்து வருவதாகக் கூறி மகிழ் வெளியில் சென்றாள்.

 

பின்னர் ராஜ் வாசுகி அருகே அமர்ந்து தாமரையின் கணவரையும் அமரும் படி கூறி அன்றைய நிகழ்வுகளைக் கூறினார். தாமரைக்கு தெரிந்தது போக தெரியாத ஒன்றென்றால் தன் தந்தை விவாகரத்து கொடுத்து தான் ராஜ் தன் அன்னையை திருமணம் செய்தார் என்பது.

 

ஏனோ வாசுகிக்கு பழையன நினைவு வராத போதும் வீணாவோடு தனக்கிருந்த நெருக்கம், உணர்வெல்லாம் தான் அன்னை என்பதாலேயே என்றுணர அவளை அவ்வப்போது அணைத்துக் கொண்டார். 

 

தாமரைக்கு அவ்வளவு மகிழ்ச்சி தன் தங்கைக்கு கிடைத்த உறவு தான் எதிர் பார்த்திராதது. அத்தோடு இனி அவள் மகிழ்வாய் இருப்பாள் என்ற நிம்மமதியே அவளின் மலர்ந்த முகம் காட்டிக் கொண்டிருந்தது.

 

பார்திருந்த அவள் கணவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தன் மனைவியின் சந்தோஷம் எதில் தங்கியுள்ளது என்பதை நன்குணர்ந்தவனாய் இருந்ததால்.

 

“வசு அவனுங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வர்ரதா மகிழ் போனா இப்போ அவளையும் காணோம். இரு நான் போய் என்னனு பார்க்குறேன்.” ராஜ் எழுந்துக்கொள்ள பார்க்க,

“இருங்க நான் போய் பார்க்குறேன்.” என வசு எழுந்து சென்றார்…

 

“பட்டு, உங்கம்மா என்னை கல்யாணம் பண்ணிட்டா, அதோட பிஞ்சுக் குழந்தையை விட்டுட்டுனு… தப்பா நினச்சுக்க வேணாம். அவ நிலை அப்போ அவ இருந்த சூழ்நிலை நம்ம கூடவே இருந்துட்டா. கண்டிப்பா உங்கப்பா அழச்சிட்டு போயிருந்தா உங்க கூட இருந்திருப்பா ஆனா இப்டி இருந்திருப்பாளா சந்தேகம் தான். “

 

“கண்டிப்பா எங்கம்மா இப்டி இருந்திருக்கவே மாட்டாங்கப்பா… “

அப்பா என்றழைத்த தாமரை அவரை நிமிர்ந்து பார்க்க, அவள் தலை கோதியவர்,

“அப்பான்னே பேசு.” என்று புன்னகையோடு கூறினார்.

 

“எங்க அம்மா இப்டி இருந்து நான் எப்போவும் பார்த்ததே இல்ல. பட்டுக்கு நினைவிருக்கா தெரில. தம்பி அம்மாவை தேடி அழுந்தான்னு சொல்ல முடியாது. பாலுக்காக கொஞ்ச நாள் அழுதான். பாட்டி தான் அவனை அவங்க கிட்ட வச்சுட்டே இருப்பாங்க.’ 

 

‘அம்மா பட்டு கூடத்தான் அதிகமா இருப்பாங்க. கடவுளுக்கு தெரிஞ்சுதானே எல்லாம் நடக்கும். அதான் அவன் அம்மாவ தம்பியை விட்டு தள்ளியே இருக்க வச்சிருக்கான்.

 

பாட்டி தான் அவன் சின்னதா இருக்கப்பவே தப்பா சொல்லிச் சொல்லி அவன் மனசுல வெறுப்பை வளர்த்து விட்டுட்டாங்க. அம்மா, பட்டுவையெல்லாம் பார்த்தா எப்படி நடந்துப்பான்னு தெரில.”

 

“சரி விடு பார்த்துக்கலாம்.நீ அங்க போறேன்னு பட்டு சொன்னா, உன்னால முடியுமா, மேனேஜ் பண்ணிப்பியா? “

 

“முடியும்ப்பா.இவர் கூட இதேதான் இரண்டு நாளா கேட்டுட்டே இருக்கார். அப்பாக்கு இப்போல்லாம் ரொம்ப முடில போல. என்னன்னாலும் நாம அவரை பார்க்கணும் தானே. குழந்தை பிறந்ததும் நான் இங்க வீட்டுக்கே வந்துருவேன். அவர் இப்போதும் மனம் திருந்தவெல்லாம் இல்ல. ஆனாலும் மனசு கேட்கல.” தாமரைக் கூற,

 

“அம்மா கெட்டவள், அம்மா வளர்ப்பு தான் சரிலன்னு சொல்ல முடியாது மா. ஏன்னா அம்மா இல்லாமலேயே நீங்க இரண்டு பேரும் நல்லா ஒழுக்கமா வளர்ந்திருக்கீங்க’

 

‘ஒவ்வருத்தரோட சுபாவம்னு ஒன்னு இருக்கு மா அதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் மாத்திர முடியாது. 

 

இதுக்கப்றமா என்னன்னாலும் நாம சேர்ந்தே பார்த்துத்துக்கலாம் என்ன.நீ அப்பாகிட்ட தாராளமாய்ச் சொல்லலாம்.”

 

 

அங்கே வெளியில் சென்ற கிருஷ்ணாவை அழைத்துக்கொண்டே பின்னே வந்த மித்ரன்,

“என்னாச்சு கிருஷ்ணா, சின்ன பையனா நீ இப்டி பிஹேவ் பண்ற, நீ அங்க பேசி நிலைமை சரி பண்ணுவன்னு பார்த்தா நீ எழுந்து வந்துட்ட. “

 

“ஒன்னில்லடா,அம்மா இப்போ தாமரை கூடவே போயிருவாங்களோன்னு தோணிட்டு அதான்.”

 

“சரி போனாலும் என்ன தப்பு அவங்க பொண்ணுகிட்ட அவங்க போறாங்க.இதுல என்ன இருக்கு. “

 

“என்ன என்னருக்கு? அப்போ நான் யாரு?”

 

“அச்சோ கிரிஷ் என்ன இது இப்டி இருக்கீங்க. ‘

மகிழ் அவன் கைகளோடு தன் கை பிணைத்துக் கொண்டே கேட்டவள்,

‘சும்மா நீங்களா கற்பனை பண்ணி நீங்களே எதுக்கு உங்களை கஷ்டப்படுத்திகுறீங்க. அத்தை எப்போவும் நம்ம கூடத்தான் இருக்கு போறாங்க. முதல்ல வீணாக்கு என்ன பதில் வச்சிருக்கீங்க அவகிட்ட ஏன் சொல்லல்லன்னு கேட்டா என்ன சொல்ல போறீங்க? அதற்கு முதல்ல பதில் தேடி வச்சுக்கோங்க.”

 

மகிழ் சொல்லவும் கிருஷ்ணா பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு இருவரையும் பார்க்க,

” விடு மகிழ், டெய்லி யாரயாச்சும் மிரட்டிட்டே தானே இருக்கான் அவகிட்ட இன்னிக்கு கொஞ்சம் திட்டு வாங்கட்டும் நாமளும் பார்க்கலாம், ரசிக்கலாம். ” சிரித்துக்கொண்டே மித்ரன் மகிழோடு இணைந்து கிருஷ்ணாவை கிண்டல் செய்ய,

 

“என்னடா கிச்சா, பொண்டாட்டியோட கூட்டு சேர்த்துட்டு அம்மாவை எப்படி வீட்ட விட்டு அனுப்பலாம்னு பிளான் போட்றியா?”

 

வாசுகி கேட்டப்படி வர அவரை சட்டென அணைத்துக்கொண்டான் கிருஷ்ணா.

 

“அம்மா எப்போவும் என் கிச்சாக் கூடத்தான் இருப்பேன். நீயா என்னை துரத்துற பிளான் ஏதாச்சும் வச்சிருந்தா நீதான் உன் பொண்டாட்டிய கூட்டிட்டு போகவேண்டி வரும். நா என் வீட்டை விட்டு போறதா இல்லை. “

 

அணைத்திருந்தவன் தன் அணைப்பை சற்று தளர்த்தி அவரை தன் தோள் வளைவில் இருத்திகொண்டவன்,

“நா உன்ன வேணும்னே அவங்களை விட்டு பிரிச்சு வச்சுட்டேன், இவ்ளோ நாளும் என் சுயநலத்திற்காக உன்கிட்ட சொல்லலன்னு நினைச்சுக்காதம்மா.”

 

“கிச்சா, அதெல்லாம் நீ பேச வேணாம். எப்போவும் நா உன் அம்மாதான். உன்கூடதான் என் ஆயுசுக்கும் இருக்கப் போறேன். அதை மட்டும் மனசுல வச்சுக்கோ.

இப்போ கூட வீணாவோட எனக்கு இருக்குற உணர்வு, என் பசங்களை எப்படி ஒரு அம்மாவா மறந்தேன்னு புரியவே இல்ல.’ 

 

‘இன்னுமே அம்மான்ற பாசம் இயல்பா ஒரு பொண்ணுக்கு வற்ற உணர்வுதான் தாமரைக் கூட எனக்கு வந்திருக்கு. அவளை சத்தியமா எனக்கு ஞாபகம் வரல. அதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னுமொரு பையன் இருக்கான்னு நினைக்கவே நெஞ்செல்லாம் வலிக்குதுடா கிச்சா. நான் நல்ல அம்மா இல்லையோன்னு தோணுறப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. “

 

வாசுகி பேச அன்னையாய் அவர் மனம் புரிந்த மூவரது மனமும் அவருக்காய் வருந்தியது.அன்னையை தேற்றுவதே இப்போது முக்கியமாக இருக்க தன் அணைப்பை இன்னும் அரவணைப்பாய் அணைத்தவன்,

“ம்மா, கடவுள் நமக்கு, நம்மை சுற்றி என்ன நடக்கணும்னு நம்மளை படைக்குறப்பவே எழுதிட்டான். அதை நம்மளால மாற்ற முடியாது. நாம யதார்த்ததை புரிஞ்சு அதை ஏதுக்கிட்டு அதுக்கு ஏற்ப நாம நடந்துப்போம் ம்மா.”

 

அவன் கையணைப்பில் இருந்தவாறே அவனை அண்ணார்ந்து பார்த்தவர் அவன் நெற்றியில் இதழ் ஒற்றி எடுத்தார்.

 

“சரி வாங்க உள்ள போகலாம் ரொம்ப நேரமா வெளில இருக்கோம். அக்காவும் தங்கையும் சேர்ந்து என்ன பிளான் பண்றாங்களோ தெரில.

 

மகிழ் நாம போறப்ப ஒன்னா போயிரலாம். அண்ணனும் தங்கையும் ஒரு வண்டில போய் சமாதானமாகிக்கட்டும்.”

மித்ரன் கூற, சிரித்த மகிழ் அவனருகே மெதுவாக,

“நீங்க வீணாவ அவங்க கூட அனுப்ப ஓகேன்னா எனக்கும் ஓகே தான்.”என்றாள்.

 

அவளை பாவமாக பார்த்தவனோ இருவிரல் கொண்டு தன் இதழ்களை மூடி விட்டதாக சைகை செய்தான். 

 

இவர்கள் சிரித்தாவாரே உள்ளே செல்ல உள்ளே பேசிக்கொண்டிருந்தவர்களோ இவர்களை பார்த்து திரும்ப, வீணா எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். 

 

மகிழ் அவள் பின்னே சென்று,

“பட்டு கிருஷ்ணாவ தப்பா நினைச்சுக்காதடா அவன்…’

 

“அப்டில்லாம் இல்ல அண்ணி, முன்னமே சொல்லிருந்தா இன்னும் உரிமையா அவங்க கூட பழகி இருப்பனே. அதான் கஷ்டமா இருக்கு.வேறொன்னும் இல்ல, எப்போவும் அவங்களுக்கு நாம கடமை பட்டிருக்கோம். “

 

“பட்டு அரஞ்சேன்னா பாரு, கடமை அது இதுன்னு…’

 

இவர்கள் பின்னிருந்த கிருஷ்ணா வீணாவை அதட்டவும் அவள் கண்ணோடு வழிந்த கண்ணீரை காண சகியாது,

 ‘சாரி டா பட்டு, உன்கிட்ட முன்னமே சொல்லாதத்துக்கு அண்ணாவ மன்னிச்சிரு.” என்றிட,

 

அவன் நெஞ்சோடு சாய்ந்துக் கொண்டாள் அவன் அன்பு தங்கையாகிப் போன வீணா.

 

அண்ணனாய் அவளை மீட்டிட தங்கை என்று இசைத்தாள் பெண்ணவள்…

 

அவர்கள் அணைப்பை ஏக்கமாய் பார்திருத்த மித்ரனோ மனதோடு,

 

“இசைக்க அவளும் மனதில் காதல் கீதம்…

இவனுமே மீட்டிட காத்திருக்க…

இசைந்து,

இசைத்திட அவளுமே காத்துக் கிடக்கிறாள் என்றே உணர்ந்தவனும்

இங்கே மனதோடு தவிக்கிறான்…

இசை கேட்க நாமுமே தவிப்போடு காத்திருக்கிறோம்…

மீட்டுவார்கள் என்றே பார்த்திங்கு…”

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!