அத்தியாயம் 24
பியானாவோ பித்து பிடித்தவளாய், “உங்களுக்கு அறிவே இல்ல சேய், மிருகம் மாதிரி நடந்துக்காதீங்க. டிப்ரஷன் அதிகமா இருக்க ஒரு பேஷண்ட்க்கிட்ட இப்படிதான் நடந்துப்பீங்களா? ச்சே!” என்று தந்தையின் மீது அளவில்லா பாசத்தில் கத்தத் தொடங்கினாள் பியானா.
“நான் சொல்லுறத கேளு பியூ, இப்போ நீ கண்ணால பார்த்ததுதான் உண்மை!” என்றவன் பொறுமையும் சற்று மெதுவாக குறைய ஆரம்பித்தது.
“ஏன் வேர்லின், பெத்த அப்பாக்கு ஒரு மகள் பண்ற காரியமா இது, இத்தனைக்கும் நீ மெடிக்கல் ஸ்டூடண்ட், சூப்பர் வேர்லின்! நீ அம்மா மாதிரி வேஷம் போட்டு வந்தியே அப்போ டாடி, அம்மானு நினைச்சி எவ்ளோ ஏங்கியிருப்பாருனு யோசிச்சு பார்த்தியா? அவரோட ஃபீலிங்கஸ ஏன் இப்படி சோதிச்சு பார்க்குறீங்க. கட்டுன புருசன். கூடபொறந்த தங்கச்சினு சொல்லவே வெக்கமா இருக்கு”
“அக்கி நான் மெடிக்கல் ஸ்டூடண்டுங்குறதாலதான் அப்படி ஒரு முடிவு பண்ணேன். கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு, இத்தனநாள் நம்மல நடிச்சு ஏமாத்துனாரு டாடி அது உனக்கு தெரியலயா அக்கி?” என்று வினா தொடுத்தாள் வேர்லின்.
“ஆமா பியானா எங்கக்கிட்ட கேக்குற கேள்வில, ரெண்டு கேள்வி உங்கப்பா கிட்டவும் கேளு. பதில் கிடைக்கும்” என்று பியானாவிடம் கூறிவிட்டு.
“ஏன் அங்கிள், இப்போ உங்க நடிப்பெல்லாம் எங்க போச்சு?
மறுபடியும் என்ன சொல்லப்போறீங்க. எனக்கு யாரையுமே தெரியல, சங்கீதா எங்க? இதத்தானே திருப்பி திருப்பி சொல்லப் போறீங்க”
“டாடிய டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ்!” என்று கத்திக் கூச்சலிட்டாள் பியானா.
“டாடி, இப்பயாவது உண்மைய வாயத்திறந்து பேசுங்க. என்ன ப்ராப்ளம்னாலும் நாங்க பார்த்துக்கிறோம்” என்று தந்தையிடம் இளகிய குரலில் பேசினாள் வேர்லின்.
யார் என்ன கூறினாலும், அவ்வேளை ஜான் கற்சிலைப்போல்தான் இருந்தார். பிள்ளைகள் படும் பாட்டை பார்த்தாவது ஜானின் மனம் இறங்காதா?
“டாடி, நமக்கு யாருமே வேணாம். இங்க இதுக்கு மேல இருந்தா நானும் பைத்தியமாகிருவேன். கட்டுன புருசனும் வேணாம். கூடப்பொறந்த தங்கச்சியும் வேணாம். நீங்க, எங்களுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்கனு எனக்கு தெரியும் டாடி. வாங்க நம்ம எங்கேயாவது போகலாம்” என்று ஜானின் கையைப்பற்றினாள் பியானா.
அவள் கூறிய வார்த்தைகளில் புறஞ்சேயனின் இதயம் நெருஞ்சி முள்ளாகக் குத்தியது.
“சபாஷ், பலே பலே! டாடி மேல எவ்ளோ பாசம் அக்கி, இப்போதான் புரியுது என்னோட அக்கியும் ஒரு பச்சோந்தி! பாசத்துக்கா இப்படி பண்ணுறியே, மாமஸ் உனக்கு என்ன கெட்டது பண்ணாருனு ஏதாவது ஒன்னு சொல்லுப்பார்ப்போம். எனக்கு அம்மா அப்பா எல்லாம் நீதான்னு நான் எப்படி இப்போ பெருமையா சொல்லுறது?” என்று பியானா கடிந்து விட்டு புறஞ்சேயனின் புறம் திரும்பினாள் வேர்லின்.
“மாம்ஸ், ஏன் வாய மூடிக்கிட்டு இருக்கீங்க. நீங்க பேச வேண்டிய நேரம் இதுதான் பேசுங்க” என்றாள் வேர்லின்.
“பியூ, நீ உங்கப்பா மேல அளவுக்கு மீறி பாசம் வச்சியிருக்க, அது ஒகே பியூ. நடந்ததெல்லாம் கொஞ்சம் பொறுமையாயிருந்து யோசிச்சு பாரு. நம்ம ஃபர்ஸ்ட் டைம் பார்த்தாப்போ அந்நேரம் உங்கப்பாவோட ரியாக்ஷன்ஸ், எதுக்கு உங்கப்பா சட்டை கழட்ட மாட்டேன்னு அடம் பிடிக்கனும் சட்டை கழட்டுனா அவரு பச்சை குத்தினது தெரிஞ்சா நீ கண்டுபிடிச்சிருவ அதனாலதானே அப்படி பண்ணாரு, வேர்லின் வந்தப்போ கண்ணுல அவ்ளோ ஏக்கம் ஆனா சும்மா வாய் வார்த்தைக்குதான் கத்துனாரு எனக்கு யாரையும் தெரியாதுன்னு, நீ ஏன் இப்படி இல்லாம் யோசிக்க மாட்டேனு தெரியல?
இப்போகூட எக்சிடன்ட் ஆகும் போது
கீதா, கீதானு கத்துனாரு நீ கிட்ட போய், இல்ல டாடி அவங்க நம்ம அம்மா இல்லேனு சொன்னதும் அப்பா என்ன சொன்னாருனு நீ கவனிக்கல, அதுக்கு டாடி என்ன சொன்னாருன்னு நீயே பாரு!” என்று அவன் பிடித்த காணொளியை காண்பித்தான்.
யார் வேண்டுமென்றாலும் பொய் கூறலாம் ஆனால் கைபேசி பொய் கூறாது என்கிற நிலையில் நடந்த உண்மைகளை படமாய் காட்டியது.
அதிலோ தந்தை அருகில் சென்ற பியானா அது நமது தாயல்ல வேறொரு பெண் என்று கூற, பதில் தந்தையும் “ஆமா மா, இது சங்கீதா இல்ல. அன்வி என்னோட அன்வி!” என்று அவர் கூறுவதை மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று தடவைகள் பார்த்தாள்.
தந்தையின் புறம் ஆவேசமாக திரும்பிய பியானா, “எங்கள இத்தனநாள் தெரியலனு சொன்னீங்க. இப்போ வேர்லின் அம்மா மாதிரி வேஷம் போட்டது உங்களுக்கு எப்படி தெரியும். சொல்லுங்க, சொல்லுங்க டாடி?” என்று உரக்கக் கத்தினாள் தெருவிலிருந்து.
புறஞ்சேயனோ, “போறவங்க எல்லாம் நம்மலயே பார்த்துட்டு போறாங்க. கார்ல போய் பேசலாம்”
என்று சீருந்தினுள்ளே அழைத்துச் சென்றான்.
“இப்போவாவது உண்மையா சொல்லுங்க டாடி ஊமையா இருந்து எங்கள கொல்லாதீங்க” இன்னும் பியானாவின் ஆவேசம் தனிவதாக இல்லை.
“அவர் எப்படி அக்கி சொல்லுவாரு,
இத்தனநாள் நம்மதான் டாடிய தேடி தேடி அலஞ்சோம். அப்பவே ஒரு பொண்ணா நமக்கு இருக்க வேண்டிய நிம்மதி போச்சு, பெத்த புள்ளைங்க கஷ்டப்படுறத கண்ணார பார்த்து ரசிக்கிற ஒரு அப்பா. வெளிய சொன்னா வெக்கக்கோடு ச்சே! நீங்க இல்லாத நேரமும் நாங்க நிம்மதியா இல்ல.
நீங்க கிடைச்சும் நாங்க நிம்மதியா இல்ல. நீங்க கிடைச்சதும் எங்க ஒட்டு மொத்த நிம்மதிய பறிச்சுட்டீங்க. உங்கள ஏன்தான் கண்டுப்புடிச்சோமோ தெரியல?
என்னோடு அக்கியும் மாமஸும் ஒட்டு மொத்த சந்தோசத்தையும் தொலைச்சிட்டு இருக்காங்க. நீங்க கிடைக்காம இருந்தா நாங்களாவது சந்தோசமா இருந்து இருப்போம்” என்று கோபத்தில் வாயிக்கு வந்தபடி கூறினாள்.
“வேர்லின்! என்ன பேசுறேனு புரிஞ்சுதான் பேசுறியா?”
வேர்லின் பேசுவதை கேட்டு பொறுக்க முடியாமல் அதட்டினாள் பியானா.
“விடு மா, அவ பேசட்டும்” என்று மெலிதான குரல் ஜானின் வாயிலிருந்து வருவதை கேட்டு மூவரும் வாயடைத்து அதிர்ந்துபோனர்.
“டாடி! அப்போ எங்கள தெரியுதா?” என்று பியானா வியந்து நின்று வினா தொடுத்தாள்.
“நான் பெத்த புள்ளைங்கள எனக்கு எப்படி தெரியாம போகும்!” ஜான் பேச ஆரம்பித்ததும் புறஞ்சேயன் கையை கட்டி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். பியானாவின் வியப்பிற்கு அளவே இல்லை. தந்தைக்கு மகள்களை தெரியும் என்பது போதுமாக இருந்தாலும்,
ஏன் இத்தனைநாட்கள் நடித்தார் எனும் கேள்வி மனதில் ஆழமாய் எழுந்தது.
வேர்லினிற்கோ, ‘இப்போதாவது பேசுறீங்களே, ஏன் இத்தனைநாள் நடிச்சீங்க. ஏன், எங்கள விட்டு பிரிஞ்சு இருந்தீங்கனு சொன்னாலே போதும், இதுக்கு அப்புறம் சரி அக்கியும் மாமாவும் சந்தோசமா வாழனும்’ என்றது அவள் மனம்.
“அப்பறம் ஏன் டாடி என்னைய பார்த்ததும் தெரியாதுன்னு சொன்னீங்க. உங்கள பார்த்ததும் நாங்க எவ்ளோ சந்தோசப்பட்டோம் தெரியுமா? நீங்க எங்கள தெரியாதுன்னு சொல்லும் போது செத்துடலாம் போல இருந்துச்சு”
“எனக்கு மட்டும் ஆசையா தன்விமா உங்கள விட்டு பிரிஞ்சு வாழனும்,
பெத்த புள்ளைங்க பக்கத்துல இல்லாம எத்தனநாள் தவிச்சு இருக்கேன் தெரியுமா?”
“அப்பறம் ஏன் டாடி எங்கள இத்தாலி ஹோம்ல சேர்த்து அனாதை மாதிரி வளர்த்தீங்க?”
“எல்லா அந்த நம்பிக்கை துரோகி டேவிட்னாலத்தான்!” என்று உரக்கக் கத்தினார் ஜான்.
“டாடி! சித்தப்பாவா?” என்று அதிர்ந்து கேட்டாள் பியானா.
“அவன சித்தப்பானு உங்க வாயால சொல்லாதீங்கமா. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அவன கத்தியால குத்திட்டேன். ஆனா, தப்பிச்சிட்டான் அந்த பாவி. உங்க பாதுகாப்புக்குதான் ரெண்டு பேரையும் இத்தாலில விட்டேன்”
மூவரும் வாயை பிளந்து இருக்க, அங்கிள் என்ன சொல்லுறீங்க? ஒன்னுமே புரியல!” என்றான் புறஞ்சேயன்.
“புள்ளைங்கள இத்தாலில விட்டுட்டு, என்னோட பிசினஸுயும் வித்துட்டேன். அந்த பணத்தை வச்சிதான் என் செலவ பார்த்துக்கிட்டேன், புள்ளைங்களுக்கும் பணம் அனுப்பி விடுவேன். அந்த பரதேசிய தேடி தெருத்தெருவா அலைஞ்சேன் திரிஞ்சேன். ஊட்டிலருந்து பெங்களுர் போயிட்டானு விஷயம் கேள்வி பட்டு அங்கயும் தேடிப்போனேன்.
டேவிட் இருக்க இடத்த கண்டுப்புடிச்சேன். நான் தேடிவருவேனு அவனுக்கு நல்லா தெரியும். அதுனால அவனோட பாதுகாப்புக்கு நாலு நாயும் நாலஞ்சு தடிப்பசங்களும் இருந்தாங்க. அதெல்லாம் பார்த்து நான் அஞ்சல,
ஒரு நாள் நைட் அவன கொல்லுறதுக்காக தனியா, அவன் வச்சிருக்க பாதுகாப்பெல்லாம் மீறிப்போனேன். நான் நினைச்ச மாதிரி அவன் தூங்கும் போது அவன் வயித்துலயே குத்தினேன்.
வலில துடிக்கிறத கண்ணால பார்த்தேன், என்னோட கீதா எவ்ளோ துடிச்சிருப்பா, வேடிக்கை பார்த்து சந்தோசப்பட்டேன். அவன் கத்துற சத்தம் கேட்டு அவனோட காவலாளிங்க வந்துட்டாங்க.
நான் பால்கனி வழிய தப்பிச்சுட்டேன். வாசல்கிட்ட வரும் போது நாயிங்ககிட்ட மாட்டிக்கிட்டேன். நாலு நாயும் என்னைய கடிச்சு குதறிச்சு. அதுக்கப்பறம் அவனோட தடிபசங்க வந்து அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
ஒரு கட்டத்துல செத்தமாதிரி நடிச்சேன். என்பாடிய பெங்களுர்ல போட்டா சந்தேகம் வரும்னு ஊட்டிக்கு வந்து போர்ட் ஹவுஸ்ல போட்டு போனாங்க. என்னைய காப்பாத்தின புண்ணியவான் தன்வியோட மாமனர்னு தெரியாது.
ஊட்டிலயே டிரீட்மெண்ட் கொடுத்தாங்க. கொஞ்சநாள் உண்மையாவே கான்ஷியஸ் இல்லாமதான் இருந்தேன். கான்ஷியஸ் வந்ததுமே உங்க மாமனார் வந்து பார்த்துட்டு போவாங்க. அவன கொன்னுட்டு
நானே போய் போலீஸ்ல சரணடஞ்சிறலாம்னுதான் இருந்தேன். அவனோட ஆளுங்க என் பேர்ல கம்ளைண்ட் குடுத்துட்டாங்க. அதை பேப்பர்ல படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன்.
அவன் கண்டிப்பா உயிரோட இருப்பான் அவனோட காவலாளிங்க காப்பாத்திருப்பாங்க.
நான் நினைச்சது என்னமோ, நடந்தது என்னமோ. கொலை பண்ணீட்டு போலீஸ்ல சரணடஞ்சிட்டு, என்னோட தண்டனை காலம் முடிஞ்சதும் என் புள்ளைங்கள கூட்டிட்டு வரலாம்னுதான் இருத்தேன். அதுக்குள்ள என்னன்னமோ ஆகிப்போச்சு. வருஷமும் ஓடிப்போச்சு”
மூவருக்கும் விசனம் அதிகமானது
இத்தனை காலம் தந்தை எத்தனை கஷ்டங்களை முகங்கொடுத்திருப்பார் என்று.
“ஏன் டாடி கொலை பண்ணீங்க. அது தப்பில்லையா?” என்று பியானா கண்ணீருடன் கேட்டாள்.
“அதெல்லாம் தப்பில்லை. அவன் தப்பிச்சு உயிரோட மட்டும் இருந்தான்! அவனுக்கு என் கையாலதான் சாவு” என்றான் புறஞ்சேயன்.
“சும்மா ஏத்தி விடாதீங்க சேய்” என்று புறஞ்சேயனிடம் கூறிவிட்டு, “டாடி உங்க மேல செம்ம கோபம் பட், அதை எப்படி காட்டுறதுன்னு தெரியல, ஏன் டாடி ஒளிஞ்சி வாழனும், எங்கள கண்டும் ஏன் டாடி ஒதுங்கிப் போகனும்?”
“அவன் உயிரோட இருந்தா, நீங்க என்னோட பொண்ணுங்கனு தெரிஞ்சா, கண்டிப்பா உங்கள எதும் பண்ணுவான். அதுதான் நானும் முடியும் தாடியும் வளர்த்துட்டு இருக்க வேண்டியதாகியிருச்சு. என் புள்ளைங்கள பார்த்ததே போதும்னு இருந்தேன். இப்போ மூனு மாசம் உங்க கூட வாழ்ந்துட்டேன் அது போதும்மா” என்று கூறிய ஜான் புறஞ்சேயனின் புறம் திரும்பி,
“ரொம்ப நன்றிப்பா என் பொண்ணுங்கள பத்திராம பார்த்துக்கிட்டதுக்கு” என்று கையேடுத்து கும்பிட்டார்.
மனம் இரங்கிய புறஞ்சேயனோ, “என்னப்பா பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. அது என்னோட கடமை” என்றவன் ஜானின் கும்பிட்ட கைகளை இறக்கி விட்டான்.
“மாம்ஸ், டாடிய வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?” தந்தை பட்டபாடெல்லாம் இனியும் பட வேண்டாமென்றே வேர்லின் அப்படி கேட்டாள்.
“ஆமா சேய், டாடிய கூட்டிட்டு போவோம். ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் புறஞ்சேயனிடம் பியானா.
“கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் இது, போலீஸ பொருத்த வரைக்கும் அப்பா ஒரு குற்றவாளி, டேவிட்ட பொருத்த வரைக்கும் அப்பா இறந்துட்டாரு. சோ அப்பாக்கு இப்போதைக்கு சேஃப்டியான இடம் கீழ்பாக்கம் ஆஸ்பிடல்தான். நான் பெங்களூர் போய் பார்த்துட்டு வாரேன்”
“என்னாது? நீங்க பெங்களுர் போறீங்களா?” என்று பியானா கேட்டாள்.
அவன் பியானாவிற்கு பதில் கூறுவதாக இல்லை. “வேர்லின் நான் பெங்களூர் போயிட்டு வாரேன். தனியா இல்ல வினய் கூட” என்றான் அவன்.
கணவன் வேண்டாம் என்று பியானா கூறியது புறஞ்சேயனுக்கு விசனத்தையும் வீரியத்தையும் ஏற்படுத்தியது.
“வேர்லின் நெத்தில அடிப்பட்டுசே, இப்போ எப்படி இருக்கு?” விபத்தில் நெற்றியிலிருந்து இரத்தம் வழிவதை கண்டதால் கேட்டாள் பியானா.
“அது காயமில்ல அக்கி பெயிண்டு” என்று சிவப்பு நிறப்பூச்சை துடைத்துக்காட்டினாள். பியானாவிற்கு எண்ணிலடங்கா கோபம் இருப்பினும் பற்களை கடித்து பெருமூச்சை இழுத்து விட்டாள்.
“அப்பா எனக்கு ஒரே ஒரு ஹெல்ப்,
நீங்க படிச்ச அந்த நியூஸ் பேப்பர் வேணும். பேப்பர் இருத்தா குடுங்க. இல்லன்னா நியூஸ் பேப்பர் நேம் எண்ட் டேட் சொல்லுங்க. நான் தேடி எடுப்பேன்” என்று புறஞ்சேயன் துப்பு தேட ஆயத்தமானான்.
ஜான் மருத்துமனையில் விட்டு, மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
சகோதரிகள் இருவருக்கும் தந்தையை விட்டு வந்ததில் விழிகளில் விசனம் நீரென வழிந்தோடியது.
****
“சேய் ஏன் எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம பெங்களூர் கிளம்புறீங்க”
“நான் யார்கிட்ட பெர்மிஷன் கேக்கனும். அதான் சொல்லவேண்டியவங்க வாயால சொல்லிட்டாங்களே! புருசன் வேணாம்னு இதை விட வேறன்ன வேணும்”
“சேய்யூ, நீங்களும் வேர்லினும் சேர்ந்து ப்ளான் பண்ணீங்க. எங்கிட்ட சொல்லல. அதான் கோபம் வந்துட்டு. டாடிக்கு எதும் ஆகிருமோனு பயம். சாரி சேய்”
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவனது கைபேசியை எடுத்து, “டேய் வினய், நீ அங்கயே இரு நான் வந்து பிக் அப் பண்றேன்” என்று அவள் புறம் திரும்பவுமில்லை. அவளிடம் எதுவும் கூறவுமில்லை. தன்போக்கில் கிளம்பினான்.
ஆத்திரத்தில் கூறிய வார்த்தைகளுக்கு அவதிபட்டு அழ ஆரம்பித்தாள் பியானா.
***