💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 11💋

eiHO4LK40803-339e3717

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 11💋

அத்தியாயம் 11

 

பியானா அவளது முடிவை கூற, “கண்டிப்பாக டாடி கிடைப்பாங்களா சார்?” 

 

“கிடைப்பாங்கா பியூமா” 

 

“சரி டா  கோவிலுக்கு போயிட்டு அப்டியே வீட்டுக்கு போகலாம்” என்று விளம்பினான் வினய்.

“சரி மச்சி” 

 

வினய் நண்பனுக்கு சீருந்தின் முன் கதவை திறந்து கொடுக்க அவனோ வேணும் என்று பின்னே அமர்ந்தான். 

 

“நீ ரொம்ப மாறிட்ட புறா”

 

“மச்சான் நான் இப்போ கமிடட் டா” என்றான் இரு கைகளை தளர்த்தியவாறு.

 

“அது சரி”

 

தன்னவளின் தோள் மீது சாயந்துகொள்ள ஆசை ஆதலால்  தூக்கம் வருவது போல நடித்தான். சொக்கி சொக்கி விழ ஆரம்பித்தான்.

 

ஒரு கட்டத்தில் இளையாளின் தோளில் இளைஞன் இளைப்பாறினான். தன்னவளும் சுமை என எண்ணாமல் சுகமாய் தாங்கினாள். தம்பதியர் பின்னாடி இருப்பதால் வினய் திரும்பாமல் சீருந்தை செலுத்தினான். 

 

கோவிலை அடைய புறாவை பியூ  எழுப்பினாள். தூங்காமலே தூங்கியது போல் கண்களை கசக்கிகொண்டு எழுந்தான். 

 

கோபுரம் எதுவும் இன்றி ஒரு சிறிய கோவில்தான் வாசலிலே இருக்கும் காளியம்மன் சிலையை பார்த்து அஞ்சினாள் பியானா. 

 

பயத்தில் தன்னவனின் கையை இறுகப்பற்றினாள். 

 

தலையில் வெள்ளைநிற தலைப்பாகை மிடுக்கு பொருந்தி மீசை பெரிய பெரிய கண்களில் நாளங்கள் செவ்வர்ணமாய் ஒரு கையில் அறுவாலை ஏந்தி நிற்க மறுகையில் சுருட்டு. கறுப்பு வர்ண சிலையாய் காட்சியளித்தார் முனீஸ்வரர்.

 

“ஐயா, பூ போட்டு பார்க்க வந்துருக்காங்க” என்றான் வினய்.

 

என்னவென்று வினவினார் பூசாரி, புறஞ்சேயன் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினான்.

 

“ஒரு பூவ நல்ல மனசார வேண்டிக்கிட்டு சாமியோட தலைல வைக்கனும் சரியா இருந்தா அஞ்சு நிமிசத்துல கீழ விழனும் அப்டி விழுந்துட்டா நீங்க நினைச்ச காரியம் நடக்கும்” என்று விளக்கினார் பூசாரி.

 

பியானாவின் கையில் பூவை கொடுக்க, அவள் மனம் நிறைய தந்தை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள். பின்பு சுவாமியின் உச்சந்தலையில் பூவை வைத்தாள்.

 

பூவை வைத்த பின்னரும் மூவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நொடி நொடியாய் நிமிடங்கள் ஓட நான்கு நிமிடங்கள் கழிந்தாயிற்று இருப்பது ஒரு நிமிடமே, பியானாவின் மனதிலிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் ஊசலாடியது.

 

முப்பது வினாடிகளில் தலையில் இருந்த பூ இடக்கை பக்கமாக கீழே விழுந்தது.

 

“நீங்க தேடினவங்க கிடைப்பாங்க” என்று விளம்பினார் பூசாரி.

 

“எவ்ளோ சீக்கிரம் கிடைப்பாங்கனு சொல்ல முடியுமா ஐயா?” என்று வினவினான்  புறா.

 

“அதுக்கும் பூ போட்டு பார்த்துருங்க” என்றவுடன் புறஞ்சேயன் சுவாமியை வேண்டி பூவை வைத்தான்.

 

அவன் வைத்ததாலோ என்னமோ பூ ஒரே நிமிடத்தில் விழுந்தது.  பியானாவின் கண்களில் நீர் நிரம்பி வழிந்தோடியது.

 

தன்னவளுக்கு உற்சாகமாளித்தான்.

“அப்பா சீக்கிரம் கிடைச்சிருவாங்க. அதுக்கப்றம் அழ கூடாது” என்றவள் கண்களை துடைத்துவிட்டான்.

 

“எனக்கு இது போதும் நம்பிக்கை வந்துட்டு டாடி சீக்கரமே கிடைப்பாங்க” என்றும் விடாமல் அவள் கண்களில் கண்ணீர் மல்கியது.

 

பூசாரி, தந்தை இலகுவாக கிடைப்பதற்கு நேர்த்தி ஒன்றை கூற புறா அதை மறுக்கவில்லை. அதன் பிறகு பூசாரிக்கு தட்சணை வைத்துவிட்டு மூவரும் கிளம்பினர். 

“சீக்கிரமா உங்க அப்பா கிடைச்சிருவாரு மா கவலை படதா” என்று ஆறுதலளித்தான் வினய்.

 

“தேங்க்ஸ் அண்ணா” 

 

கோவிலிருந்து பக்கம்தான் வினயின் இல்லம் அங்கே சென்றனர். 

 

“அம்மா…” என்று கத்திக்கொண்டே உள்ளே சென்று தனது கையோடு தாயை அழைத்து வந்தான். 

 

“வாங்க வாங்க..” என்று இன்முகத்தோடு வரவேற்றார் வினய் தாய் விசாலம்.

 

“கல்யாணமாகி முதல்தடவை வீட்டுக்கு வாராங்க முன்னவே சொல்லிருந்தா எதுவும் செஞ்சிருப்பேன்” என்று விசனத்தோடு விளம்பினார் விசாலம் வினயை பார்த்து.

 

“என்னாமா சொல்லுறீங்க உங்க கையால சுடுதண்ணி வைச்சாலே நல்லா இருக்குமே” என்றான் புறா.

 

“உன் கிண்டல் மட்டும் மாறவே இல்ல பா, இருங்க காஃபி போட்டு வாரேன்”

 

அடுக்களைக்குள் நுழைந்து குளம்பியுடன் வந்தார். 

 

“நீ கல்யாணம் கட்டிட்ட இவன பாரு கல்யாணமே வேணாம்னு சொல்லுறான்” என்று விசனத்தோடு விளம்பினார் விசாலம்.

“அனு கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் பண்றேன். இதையே எத்தனவாட்டி சொல்லுறது” என்று கடுகடுத்தான் வினய்.

 

“அண்ணி” என்ற சத்தத்தோடு அறையிலிருந்து ஒரு பாவை வந்தாள். அவள் வினயின் தங்கை அனு. 

 

“வந்துட்டா நான் இனி இருந்து முடிஞ்சேன்” என்று புலம்பினான் புறா.

 

“அண்ணி நீங்க ரொம்ப குடுத்து வைச்சவங்க புறஞ்சேயன் அண்ணாவ கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க” என்றாள் அனு.

 

“ஆமா மா” என்று குறுநகைந்தாள். பியானா. 

 

“அண்ணா, எனக்கு வெட்டிங் ட்ரிட்டு வேணும்” என்று புறாவிடம் கேட்டாள் அனு. 

 

“ஓகே மா என்ன வேணும்?”

 

“நீங்க எனக்கு தரா ட்ரிட்டுக்கு பதில் வினய் அண்ணாக்கு கழுதைய கல்யாணம் பண்ணி வைக்கனும் அவன முதல் துரத்தி விட்டுரலாம்” என்றாள் கிண்டலடித்தாள் அனு.

 

“ஓகே மா உன் ஆசைய நிறைவேத்திடலாம்” என்று புறா வழிமொழிந்தான்.

 

“இரு உன்ன அப்றம் வச்சுக்கிறேன்” என்று தங்கையை கண்டித்தான் வினய்.

 

“அம்மாடி உன்ன பத்தி வினய் எல்லாமே சொல்லிருக்கான். நீ எதுக்கும் கவலை படதா மா. பூ விழுந்துறுச்சுல சீக்கிரமாவே உங்க அப்பா கிடைச்சிருவாரு” என்று மேலும் சில ஆறுதல் வார்த்தைகளை அளித்தார். அப்படியே அவர்களின் பூஜை அறைக்கு அழைத்து சென்று பியானாவிற்கு பூ வைத்து தம்பதியரை ஆசிர்வதித்தார் விசாலம். 

“சரி மா நாங்க கிளம்புறோம்” என்றான் புறா. 

 

“சரிப்பா கவனமா போயிட்டு வாங்கா. அம்மாடி எதுவும் விஷேசம்னா அம்மாக்கு மறக்காம சொல்லு மா” என்று நாசுக்காய் சொன்னார் விசாலம். புறாவும் பியூவும் புன்முறுவினர்.

******

 

வீடு முழுவதும் நிசப்தம் ரஞ்சனா தொலைக்காட்சி பார்த்தவாறு முறுக்கை கொறித்துக்கொண்டிருந்தாள். இவர்களை பார்த்த செல்வமோ புடவையின் முந்தானையை உதறிவிட்டு அறையை நாடினார்.புறஞ்சேயன் விறு விறு என்று குளியலறைக்குள் புகுந்தான்.

தமக்கையின் வருகை கண்டு வேர்லின் முன்னே வந்தாள்.  “அக்கி வந்துடீங்களா” 

 

“ஆமா குட்டி, உனக்கு ஒன்னு தெரியுமா, மேரி மதர் வந்தாங்க. நீதான் மிஸ் பண்ணிட்ட” 

 

“ஓ.. அப்டியா இங்க பாரு” என்று அவளது கைபேசியில் அருட்தாயுடன் சேர்ந்து எடுத்த சுயபடத்தை(செல்ஃபி) காண்பித்தாள்.

 

“ஏய், உனக்கும் முதல்லே தெரியுமா? நீங்க ரெண்டு பேரும் கூட்டுக்களவாணி” 

 

“மதர எயார் போர்ட்ல இருந்து நான் அழச்சிட்டு வந்தேன்” 

 

தமக்கை தங்கையை போலியாக முறைத்தாள். “அதெல்லாம் சர்ப்ரைஸ் அப்டிதான் அக்கி இருக்கும்”

 

வேர்லினிடம் தம்பதியர் தேவாலத்திற்கு சென்றது. அருட்தாயின் வருகை அதன் பின் கோவிலுக்கு சென்று பூ வைத்து பார்த்தது எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறினாள் பியானா.

 

“ஓகே அக்கி நீ பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைலச்சாலே போதும். டைம் ஆச்சு ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு மார்னிங் பேசலாம்” 

 

அறைக்குள் சென்றவள். “எனக்கு பசிக்கு பியூ எதாவது செஞ்சி தாரியா?” 

 

“ஓகே சார்” 

 

சமையலறைக்குள் சென்றாள் எல்லாம் அவளுக்கு சமைக்க தெரியாத உணவு பொருட்கள் நூடுல்ஸ் ஒன்றை தவிர ஆதலால் அதை காய்கறிகளை இட்டு வதக்கி தக்காளி குழம்பை(சாஸ்) ஊற்றி வெங்காயத்தை பொடியா நறுக்கி மேலாக தூவி விட்டாள். ஒரு தக்காளிப்பழத்தை எடுத்து தோல் தனியே சீவி அதை ரோஜா வடிவில் சுருட்டி நூடுல்ஸின் மேல் வைத்து இரவுணவை தயார் செய்து முடித்தாள்.

 

செய்து வைத்த ஊண் முழுவதையும் ஒரு தட்டில் வைத்து அறைக்கு எடுத்து சென்றாள். “சார் டின்னர் ரெடி”

 

“குட் குட், செம பசி சீக்கிரம் குடு”  கொண்டு வந்த தட்டை அப்படியே வைத்தாள்.

 

“ஏன்டி எனக்கு மட்டும் இவ்ளோ நூடுல்ஸ், உன்னோடது எங்க?”

 

“ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் செஞ்சேன். எனக்கு தட்டு எடுத்துட்டு வர மறந்துட்டேன். போய் எடுத்துட்டு வாரேன் சார்”

 

“வேணாம் வேணாம், ரெண்டு பேரும் ஒரே தட்டுல சாப்பிடலாம்” அவள் கையை பிடித்து அமர செய்தான். இருவரும் இரைப்பையை ஊணால் நிரப்பினர். 

“சார் நீங்க எனக்காக நிறைய மனி ஸ்பென்ட் பண்றீங்க அதெல்லாம் எப்டி திருப்பி தரபோறேனு தெரியல சார்” 

 

“அதானே எப்டி திருப்பி தரபோற,  வட்டி வேற நிறைய ஆகுமே, ஒரு வாரத்துக்கு ஆயிரம் முத்தம் போதும்” 

 

“ஹா..” என்றவள் வாயை பிளந்தாள்.

 

“ஓ.. நான் அதிகமா கேக்குறேனா சரி சரி  கொஞ்சமா கம்மி பண்ணிக்கிறேன். பத்து புள்ள பெத்துக்குடு போதும்”

 

“சார்..!” 

 

“பிறகென்ன டீ, உன்ன யாரு கணக்கு பார்க்க சொன்னா, என் பொண்டாட்டிக்கு நான் செலவு பண்ணுவேன். பத்து கோடி கூட செலவு பண்ணுவேன். அதெல்லாம் நீ கணக்கெடுத்தா? நானும் கணக்கெல்லாம் கரக்ட் பண்ணுவேன் வேற மாதிரி. இதுக்கு மேல எதுவும் கேப்ப, பேசமா வாய மூடிக்கிட்டு தூங்கு டீ” என்று உல்லாசமாய் மென்மையாய் கண்டித்தான் தன்னவளை. 

 

தன்னவன் வார்த்தையை மீறாமல்  படுக்கையில் சாய்ந்தாள். புறஞ்சேயன் கூறியது சிலாகிப்பாக இருந்தாலும் அவள் வாயை அடைக்க இதுவே சிறந்த தீர்வு.

 

*****

 

ஆழிக்கு அக்கரையிலிருந்த  ஆகாயதேவன் காலையில் வருகை தர மேகத்துளிகள் மண்ணை தொட  மங்கையவள் விழித்துக்கொண்டாள். 

 

அவளது காலை கடன்களை முடித்துவிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டாள். அவர்களது பூஜை அறையில் குழந்தை இயேசுவை அன்னை மரியாள் தூக்கி வைத்தவாறு ஒரு படம் அதை அங்கே வைத்தாள். 

 

மாதவிலக்கில் பூஜை அறைக்குள் அறியாது சென்றிருந்தாள் பியானா. அதை கண்ணோட்டம் விட்ட ரஞ்சனா, “அத்தை அந்த பொண்ணு தலைக்குளிச்சுட்டு சாமி ரூம்ல இருக்கா”

 

சுவாமி அறைக்கு வந்த செல்வம்.“வெளியா வாடி” என்று அதட்ட பியானா வெளியே வந்தாள். 

“உனக்கு பிரீயட்ஸ்ஸா… சொல்லு?” 

 

“ஆமா மா” என்று பியானா  மெதுவான குரலில்  கூறினாள். 

 

“சுவாமி ரூம்க்கு இந்த மாதிரி நாள்ல வரக்கூடாதுன்னு உனக்கு தெரியாதா? அம்மா இருந்தா தானே சொல்லிக் குடுக்குறதுக்கு அநாதை ஆசிரமத்துல வளர்ந்தா இப்டி தான்!” என்ற வார்த்தைகள் பியானாவின் மனம் மாண்டுபோனது. காரிகையின் மொழி கண்ணீர் ஆனது. 

 

சத்தம் கேட்டு அறைகளிலிருந்த பாட்டி, லக்ஷதா, புறஞ்சேயன், புகழ்முரசன். பூஜை அறைக்கு வருகை தர, “என்ன செல்வோ இப்டி கத்துற” என்று வினவினார் பாட்டி.

 

பியானா அவல நிலையில் முகத்தை வைத்துக்கொண்டாள்.

 

“இந்த பொண்ணுக்கு தீட்டு அதோட பூஜை ரூமுக்கு போயிருக்கா அத்தை, என்னத்த சொல்லுறது”

 

“அதுக்கு ஏன், பத்து பேருக்கு கேக்குற மாதிரி கத்துற, இதே உன் அண்ணன் பொண்ணு இப்டி பண்ணா கத்துவியா காதும் காதும் வைச்ச மாதிரி முடிச்சிருப்பல?”

 

“என் பொண்டாட்டிய பார்த்தா எங்கம்மாக்கு இளக்காரம். தெரியலன சொல்லிக்குடுங்கம்மா இல்லன்னா அப்பாய் பார்த்துப்பாங்க. தீட்டு தீட்டுனு சொல்லுறீங்க. சுடுகாடுல சிவன் சாம்பல் பூசிக்கிட்டு பிணத்துக்கு மேல ஆடுவாரமே. சுடுகாடு ஒரு தீட்டான இடம் அங்க சிவனே போய் ஆடும் போது, என் பொண்டாட்டி பூஜை ரூமுக்கு போனதொரு குத்தம். நாங்க இங்க இருக்குறது பிடிக்கலனா சொல்லுங்கம்மா. எங்க வீட்டுக்கு போயிறோம்” 

 

நல்ல வேளை வேர்லின் அங்கில்லை. இருந்தால் வம்பை பெரிதாக வளர்த்திருப்பாள்.

 

கோபமாக வெளிய வந்தவன் சட்டை மாற்றிக்கொண்டு சீருந்தை ஆயத்தப்படுத்தி வெளியே சென்றான். செல்லுமிடத்தை யாரிடமும் கூறவில்லை.

 

இங்கோ முத்தாயி பாட்டியும், புகழ் முரசனும் செல்வதிற்கு வசைமாரி ரஞ்சனா மெதுவாக நழுவிக்கொண்டாள். 

அலுவலகத்திற்கு சென்றிருப்பான் என்று பியானா அங்கு சென்று பார்த்தாள். அங்கும் அவனில்லை.  இவள் தடுமாற்றத்தை உணர்ந்த வினய், “அவன் லேட்டா வருவான் நீ வேலையா பாரு மா”

 

“இல்ல அண்ணா வீட்ல கொஞ்சம் ப்ராப்ளம் கோபமா வெளிய வந்தாங்க. ஆபீஸ் வாராங்கனு தான் நினைச்சேன். இங்கயும் வரல கொஞ்சம் பயமா இருக்கு” பியானா வினயிடம் நடந்தவற்றை வெளிப்படையா கூறவில்லை.

 

அவள் சலனத்தை பார்த்தவன். “இல்ல மா அவன் கோபமோ சந்தோஷமோ துக்கமோ எதுவா இருந்தாலும் கிரண்யா கல்லறைக்கு முன்னாடி புலம்பிட்டு வந்துருவான்.  நீ பயப்படாம இரு மா”

 

நேரம் செல்ல செல்ல அவன் வருவதாக இல்லை. வினயை இருக்கவிடாமல் புறஞ்சேயனை அழைத்து வர சொன்னாள் பியானா. வினயும் சரி என்று கிளம்பி சென்றான். சென்றவிடத்தில் அவனில்லை. கைபேசியில் அழைப்பை விடுத்து அவன் இல்லை என்று கூற பாவையின் மனம் ஊசலாடியது.

 

‘எங்க சார் போனீங்க. பயமா இருக்கு. போன வேகத்துல எக்சிடன்ட் எதும் ஆகியிருக்குமா?’ என்றவள்  நினைவெல்லாம் பாடாய் படுத்தியது.

 

**** 

Leave a Reply

error: Content is protected !!