💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 12💋

eiHO4LK40803-d49ed6c8

அத்தியாயம் 12

மடவாளின் மனம் கர்த்தரை வேண்டி மன்னவனின் வருகையை எண்ணி மண்டியிட்டது.  பியானாவின் தவிப்பை  பார்த்து வினய்க்கும் விசனமாகியது. 

“அண்ணா போலீஸ்ல கம்ளைன்ட் பண்ணலாமா?” தந்தையை தேடுகிறவள் தன்னவனையும் தேட வேண்டும் என்ற பயத்தில் அப்படி கூறலானாள்.

“என்ன மா, சின்ன பிள்ளை மாதிரி சொல்லுற, எங்க போனாலும் நைட்டுக்கு வந்துருவான் மா” தனது நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் ஆதாலால் சொன்னான். கோபத்தில் வெளியே சென்றாலும் இரவில் வெளியே தங்குவதில்லை புறஞ்சேயன். 

ஒரு துளி நீரேனும் அவள் தொண்டைக்குழியை நனைக்கவில்லை. நனைப்பதற்கும் மனம் வரவில்லை. ‘இதுக்கு தான் முதல்லே சொன்னேன். நான் அவர் லைஃப்ல வராம இருந்திருந்தா அவர் நல்லா இருந்திருப்பாரு.

என்னால அவங்க குடும்பத்துல பிரச்சனை. அவர கல்யாணம் பண்ணதுக்கு அப்றம் அவங்க குடும்ப பழக்க வழக்கங்கள நானா தெரிஞ்சிருக்கனும் எல்லாத்துக்கும் நானே காரணம் ஆகிட்டேன். என் டாடிய தேடுறேனு அவர தொலைச்சிருவேனா?’ மனவுளைச்சலில் இருந்தவளுக்கு  மாதந்திர தொந்தரவினால் உடலும் ஒத்துழைக்கவில்லை.  

‘அன்னைக்கு நான் வேணும்னு நீங்க கால் பண்ணும் போது ஆன்சர் பண்ணாம இருந்தேன். இன்னைக்கு நீங்க மொபைலயே ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைச்சிருக்கீங்க’ என்று அழுதுகொண்டு மேசை மீது சாய்ந்தாள். 

அவளுடைய வாழ்க்கையில் மட்டும்  ஏன், கடவுள் இப்படி எல்லாம் விதி எழுதி வைத்தாரோ! தந்தையை தேடும் வேளையில் கணவனையும் தொலைத்து விடுவோமா என்கிற அச்சம்தான் அவளை வாட்டியது.

பியானா வேர்லினிற்கு  அழைப்பை விடுத்து நடந்தவற்றை கூற, “சரி அக்கி நீ அழுதுட்டு இருக்காத மாம்ஸ் எங்கயும் போயிருக்க மாட்டாரு திரும்பி வந்து உன்னை பார்த்து சிரிக்க போறாரு, செல்வோ ஆன்ட்டிய  நான் வந்து கவனிச்சிக்கிறேன்” என்று சொன்னாள் வேர்லின். 

இங்கு பியானா, “வேணாம் வேணாம் நீ எதுவும் பேசாத” என்றவள் கூறி முடிக்கும் முன்பே வேர்லின் அழைப்பை துண்டித்தாள். 

தன்னவனை நினைத்து மதிய உணவயும் தவிர்த்தாள். ‘அவர் சாப்பிட்டாரோ இல்லையோ எனக்கும் வேணாம்’ 

“ஏய் பியானா, லஞ்ச் டைம்முக்கு ஏன் வரல, நான் எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணேன்” என்றாள் க்றிஸ்யா.

“எனக்கு பசியில்ல க்றிஸ்” 

“சார் வந்துருவாங்க. சில வேளை மொபைல்ல சார்ஜ் இருக்கோ இல்லையோ? சாப்பிடு இல்லன்னா அதுக்கும் வேறயா திட்டு வாங்கனும்”  க்றிஸ்யா பியானாவை ஆறுதல் படுத்தினாள். 

தன்னவனை தேடும் முயற்சியில் தானே இறங்கினாள். அவர்களுக்கு திருமணமான கோவிலுக்கு சென்று அம்மன் சன்னிதானத்தில் முன் நின்று “உம்முன்னாடி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ என் புருசன காணோம் நான் எங்க போய் தேடுவேன். என் அப்பாவ தேடி தாரேனு சொன்னவரு இப்போ அவரையும் சேர்த்து தேடனும் போல இது உனக்கே நியாயமா?” என்று புலம்பியழுதாள். 

பேரங்காடியை நோக்கி சென்று அங்கும் தூழாவினாள். அவ்விடத்திலும் அவனில்லை. வாடிய வதனத்தோடு கூந்தல் கலைந்து பித்துபிடித்தவள் போல் தெருவில் நிற்க  மணியோ நான்கு வினய் பியானாவிற்கு அழைப்பை விடுத்து “உன் புருசன் வந்துட்டான். நீ ஆபீஸ்க்கு வந்துருமா” என்றான்.

மறுவார்த்தை பேசாமல் முச்சக்கரவண்டியில் வேகமாக அலுவலகத்தை வந்து அடைந்தாள். 

“உன்னை யாரு வெளிய போக சொன்னா?” என்று புறஞ்சேயன் தன்னவளை கேட்டான். 

தன்னவளோ மணவாளன்  கையை இறுக பற்றி இழுத்துக்கொண்டு  அலுவலக அறைக்கு சென்று கதவை சாற்றி தாளிட்டு கண்களில் நீர் நிரம்பியிருக்க தன்னவனை தன் கைகளால் கட்டியணைத்தாள். 

வினயும் க்றிஸ்யாவும் அவர்களது பணியை நோக்கி சென்றனர். 

அவளது அணைப்பில் இதம் கண்டவன், 

“ஏய் பியூ, எனக்கு கூச்சமா இருக்குடி இது ஆபீஸ் டீ, விடு  ஸ்டாஃப்ஸ் பார்த்தா மானமே போகும்” புறா அலுவலக நிர்வாகி என்பதால் அவனை சிறையிட்ட கைகளை தளர்த்தினான்.

மேகத்துளிகள் எல்லாம் தன்னவளின்  கண்களில் சிந்திக்கிடப்பதை பார்த்து பதற்றத்துடன், “அம்மா திட்டுனத நினைச்சி அழுறியா?”

“என்ன சார் புரியாத மாதிரி பேசுறீங்க. எங்கிட்ட சொல்லாம எங்க சார் போனீங்க. நான் எவ்ளோ பயந்தேன் தெரியுமா, ஏற்கனவே அம்மா விட்டுட்டு போய்டாங்க,  அப்பா இருக்குற இடமே தெரியல,  உங்க அம்மாக்கு என்னய சுத்தமாவே புடிக்கல. இதுல நீங்களும் இப்டி பண்ணா எனக்கு எப்டி இருக்கும் சொல்லுங்க?” என்று விம்மி விம்மி அழுதாள்.

பாவையின் பரிதவிப்பை உணர்ந்தவன். “ஏய் ச்சில்” அவளை ஆறுதல் படுத்த முயன்றான்.

“என்ன சார் ச்சில், காலைல சாப்பிடவும் இல்ல. பசியும் பொறுக்க மாட்டீங்களே. வண்டி போன வேகத்துக்கு ஆக்சிடன்ட் எதும் ஆகியிருக்குமோனு நினைக்க வச்சி என்னைய பைத்தியக்காரி ஆக்கிட்டீங்க. இதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்” 

“ஓகே ஓகே கூல் டவுன். ஃபோன்ல சார்ஜ் இல்ல டீ அதான் எதுவும் சொல்ல முடியல” 

“வேற யார்டயும் ஃபோன்ல பேச வேண்டியது தானே”

“கொஞ்சம் பேச விடு பியூமா, இன்ஸ்பெக்டர் கால் பண்ணாருனு போனேன், அநாதை பிணம் ஒன்னு அடையாளம் தெரியல எத்தனையோ பேர் வந்து பார்த்துட்டு போய்டாங்க. கேட்டதுமே பதற்றம் ஆகிட்டு  எதுக்கும் நீங்களும் வந்து பார்த்துட்டு போங்கனு  சொன்னாங்க. அங்க தான் போயிட்டு வரேன். உன்னை அழச்சிட்டு போயிருப்பேன் நீ வீணா அழுவ அதான் நானே கன்ஃபார்ம் பண்ணீட்டு சொல்லாம்னு இருந்தேன் ” என்று தடுமாறினான்.

“சார் அவங்க எங்க டாடி இல்லதானே!” என்று பதற்றத்துடன் வினவியவளின்  மனம் விசனத்தோடு ஊசலாடியது.

“இல்ல டா மா, டாடியா இருந்தா இந்நேரம் இப்டி இருப்பேனா சொல்லு, முகம் சரியா தெரியல சோ போஸ்மோட்டம் முடியும் வரைக்கும் அங்கயே இருந்து பார்த்துட்டு வந்தேன். முதல்ல நானும் பயந்துட்டே தான் இருந்தேன். முகத்தை நல்லாவே உத்து பார்த்தேன் அப்றம் தான் எனக்கும் நிம்மதி நம்ம  டாடி கிடையாது. ஓகே” 

“பயமா இருக்கு சார், டாடி உயிரோட இருப்பாரா?” கண் கலங்கி தொண்டையில் வார்த்தை அடைக்க  கேட்டாள் அவள். 

“இது என்ன கேள்வி கண்டிப்பாக உயிரோட இருப்பாங்க” என்று கூறியவாறே அவள் கதவில் இட்ட தாளை திறந்தான். 

“இதுக்கு அப்றம் இப்டி பண்ணாதீங்க சார். எங்க போனாலும் சொல்லிட்டு போங்க” தாழ்ந்த குரலில் கூறினாள். 

“மேடம்க்கு அவ்ளோ அக்கறையா என் மேல, எப்டி எப்டி, அப்பா வரும் வரைக்கும் நோ ஹக்” அவள் அழுகையை மாற்ற சீண்டலுக்கு இறங்கினான். 

“அது.. அது..” என்றவளின் வார்த்தைகள் தடுமாறியது.

“என்ன அது.. சொல்லு?”

“நான் என்ன ரொமான்டிக்காவா ஹக் பண்ணேன் இல்லையே. நீங்க என்னை வீட்ல விட்டுக்கொடுக்காம பேசுனீங்க. கோபமாக வெளிய போனீங்க. எதுவுமே தெரியல. நீ வந்துட்டீங்கனு தெரிஞ்சதும் எனக்கொரு நிம்மதி அந்த வேகத்துல ஹக் பண்ணிட்டேன். உங்கள கண்ணால பார்க்கும் வரைக்கும் எனக்கு நிம்மதியே இருக்கல தெரியுமா?” என்று பேதை(ஒரு வயது – எட்டு வயது குழந்தை) போல் முகத்தை வைத்துக்கொண்டாள்.

“நானும் செமட்ரில வச்சி ஒரு ஹக் கேட்டேனே ரொமான்டிக்காவா கேட்டேன். உனக்கு ஒரு ஆறுதலுக்கு என் கைய நீட்டி ஓடி வான்னு கூப்பிட்டேன். என்னாமா சீனு போட்ட, அப்பா வந்த அப்றம்தான் ஹக்குனு சொல்லிட்டு  இன்னைக்கு எல்லாம் உல்டா ஆகிருச்சே! பொண்ணுங்க நீங்க என்ன சொன்னாலும்.. சரி பசங்க நாங்க எதும் சொன்னாலும்.. அது தப்பு நல்லாருக்கு டீ உன் நியாயம்” 

பெண்ணவள் ஆணவனின் காது மடலை பற்றி ஆட்டிக்கொண்டே, “நான்தான் கைய வெட்டி கல்யாணம் பண்ணேனா, முதல் மனைவி இருக்குனு சொன்னது நீ, இன்னைக்கு வெளிய போகும் போது சொல்லாம போனது நீ. எல்லாம் நீ பண்ணிட்டு எப்டி டா என்னைய குத்தம் சொல்லுவ?” சினம் கொள்ளும் வேளை மரியாதை குறைவது வழக்கம்.

“வலிக்குது டீ கைய எடு” 

“உன் தப்ப ஒத்துக்கோ கைய எடுக்குறேன்” தீவிரமாக கூறினாள்.

“மேடம் மேடம், பொண்டாட்டி மேடம் இந்த ஆபீஸ்ஸே என்னைய எம்டியா மதிக்குது. நீங்க இப்டி பண்ணுறத பார்த்தா காரிதுப்புவாங்க மேடம். கொஞ்சம் மனது வச்சி இந்த பச்ச புள்ளைய மன்னிச்சு விட்ருங்க” என்று பாலகனாய் மண்டியிட்டு பாவையிடம் வேண்டினான். 

“நீ பச்சை புள்ளையா இத நான் நம்பனுமா?”

“ம்ம்ம்” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டான்.

அவள் விடுவதாக இல்லை. “ஏய் வினய் வாரான்” என்றவுடன் கையை விடுத்தாள். 

வினய் தலைமையக அறைக்கு வந்து அவனுக்கு தேவையான கோப்பு எடுத்துவிட்டு சென்றான். 

“ப்ளீஸ் மறுபடியும் ஆரம்பிக்காத பட்டு” என்று தன்னவளிடம் கெஞ்சினான்.

“உங்களுக்கு என்னோடு ஃபீல் புரியாது சார். நீங்க கோபப்பட்டு போன அந்த ஒரு நிமிசம் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும்” என்றவள் கண்கள் இமைக்க  நீர் சொட்டியது.

“இதுக்கப்றம் இப்டி பண்ண மாட்டேன். சாரி வைஃபி, அழாதடீ” 

அவள் ஏங்கி ஏங்கி அழுதவாறு, “இல்ல சார், நான் ஆசை பட்ட எதுவுமே முழுசா கிடைச்சதில்லை. நான் ஆசை படாம நீங்க கிடைச்சீங்க. என்னை விட்டு போக மாட்டீங்க தானே” 

அவள் அழுகை இவன் மனதை நொறுக்கியது. அவள் துயர்நீரை துடைத்துவிட்டான்.   “என்ன நடந்தாலும் உங்கூடவே இருப்பேன்.  யாருக்காவும் உன்ன விட்டுக்குடுக்க மாட்டேன். என்னோட பியூர் கோல்ட் பியூமாவ அழ வக்கிற மாதிரி எதுவுமே பண்ண மாட்டேன்” 

“பார்க்கலாம் நீங்க என்ன அழ வக்கிறீங்களா இல்லையானு?” லேசாக அழுதவாறு கூறினாள். 

“ஓகே ஓகே அத விடு, சாப்டியா பியூ?” 

“இல்ல சார்” 

“ஏன் டீ?”

“பசியில்ல சார்” 

“உனகென்ன லூசா , இந்த மாதிரி நேரத்துல சாப்பிடாம இருக்க, உடம்பு என்னத்துக்கு ஆகும். பீரியட்ஸ் டைம் பெயினா இருக்கும்ல ஒழுங்கா சாப்பிட்டாதானே அந்த வலியெல்லாம் தாங்க தெம்பாயிருக்க வேணாமா?” 

“பொண்ணா பொறந்தா இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகனும் சார். வயித்து வலிக்கு ஒரு அளவ கொடுத்த கடவுள் மனசு வலிக்கு அளவ கொடுக்க மறந்துட்டாரு.  நீங்க சாப்டீங்களோ  இல்லயோனு தான்.. நான் சாப்பிடல” 

அவள் அன்பை உணர்ந்தவன். “என் பொண்டாட்டி கஷ்டபடுறத பார்த்துட்டு இருக்க முடியாது.  இனி எந்த வலியா இருந்தாலும் எனக்கும் பங்குண்டு. நான் சாப்பிட்டேன் டா. நீ சாப்பிட்டு வா” 

“சரி சார், நான் சாப்பிட்டு வாரேன்”

“குட் கேர்ள்”

‘தாயிக்கு பின் தாரம்னு சும்மாவா சொன்னாங்க. என்மேல உயிரா இருக்காளே. நான் ஒரு வேளை சாப்பிடலனு ரெண்டு வேளை சாப்பிடாம பட்னி கிடக்குறா. எங்க அம்மா திட்டும் போதுமா எதிர்த்து பேசல. வீட்ல எல்லாரையும் சமாளிச்சு அனுசரிச்சு போறா. இப்டி ஒருத்தி கிடைக்கலன்னு நான் கைய அறுத்து செத்திருந்தாலும் அது குத்தமில்ல’ மனைவியின் மகத்துவம் நன்கு அறிந்தான் இன்று.

காலையில் இருந்து நிலுவையில்(பென்டிங்) வைத்த வேலைகளை சரிபார்த்துக்கொண்டிருந்தான். அப்படியே நாளை புதிய வாடிக்கையாளரை சந்திப்பதற்கான(மீட்டிங்) ஏற்பாடுகளை செய்தான்.  

***

புறஞ்சேயனின் வீட்டில், “வாம்மா.. என் பையனுக்கு என்னத்த போட்டு மயக்குன. எனக்கும் கொஞ்சம் சொல்லு உன் பின்னாடியே போரதென்ன.. உன் பின்னாடியே வாரதென்ன..” என்று செல்வம் அலுவலகத்திலிருந்து வந்தவர்களை கேள்வி கேட்டுக்கொண்டிருக்க, பியானா செய்வதறியாது முழித்துக்கொண்டிருந்தாள். 

“இப்போ தான் ஆபீஸ்ல இருந்து வாரோம். ஏன் மா வம்புழுக்குறீங்க”

“ஆமா டா சொல்லுவ, உன் பொண்டாட்டிய எதுவும் சொன்னா போதுமே உனக்கு பொத்துக்கிட்டு வந்துருமே” என்று செல்வம் மகனை வஞ்சித்தாள். 

கல்லூரி முடிந்து வந்த வேர்லின் இடையில் குறுக்கிட்டாள். “மாம்ஸ் நானும் போனா போகுதுன்னு பார்க்குறேன். இந்த ரஞ்சனாதான் அக்கிய பத்தி தேவையில்லாம வத்தி வக்கிறா” 

“ஆமா, அவதான் சொன்னா அதுகென்ன இப்போ! புறா மேல ரஞ்சனா உயிரயே வச்சிருக்கா. இவன் இப்டி ஏமாத்துவானு யார் கண்டா?”  என்று கருவிக்கொண்டார் செல்வம். 

“இங்க பாரு செல்வோ, உனக்கு மறுபடியும் சொல்லுறேன். நீயும் இப்டிதான் பண்ண நான் உங்கள ஏத்துக்கலயா? பாவம் சின்னஞ்சிறுசுங்க இப்டி எல்லாம் பேசாத செல்வோ. நாளைக்கு அவங்களுக்கு ஒரு குழந்தை பொறந்தா கொஞ்சமாட்டியா?” என்று பாட்டியின் கேள்விகளுக்கு செல்வத்திடம் பதிலில்லை.

“யாருக்கும் எந்த பிரச்சனையும் வேணாம். வேற ஒருத்தர நான் கல்யாணம் பண்ணீட்டு போறேன் அத்தை. நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல” என்று மனதில் வஞ்சைத்தை வைத்தே ரஞ்சனா கூறினாள். 

“சந்தோஷம் நீயும்  கல்யாணம் பண்ணீட்டு நல்லாயிரு மா” என்றார் பாட்டி. 

வேர்லின், பியானா, புறஞ்சேயன் மூவருக்குமே இவள் ஆடுவது நாடகமென்று அறிந்ததே. 

“நானே நல்ல மாப்பிள்ளையா பார்த்து தாரேன்” என்று பெரிதோர் பொறுப்பை தன் தலையில் இட்டுக்கொண்டான் புறஞ்சேயன். தந்தையை தேடி தன் வாழ்க்கையை ஆரம்பிக்காமல் இதெல்லாம் தேவைதான். 

குளம்பியை கலந்து வேர்லின் தமக்கையின் அறையின் வாசலில் நின்று, “மே ஐ கம் இன்” என்று அவர்களது அறை கதவை தட்டி உள்ளே சென்றாள்.

குளம்பியை கொடுத்துவிட்டு, “ஏன் மாம்ஸ் உங்களுக்கு தேவையில்லாத வேலை அவளுக்கு போய் மாப்பிளை பார்க்குறேனு சொல்லிட்டீங்க” 

“அப்டியாவது அவள துரத்தி விடதான் மா” என்று சொன்னான் புறஞ்சேயன்.

“நல்ல பொண்ணா இருந்தா பரவாயில்லை. அவள பத்தி தெரிஞ்சி இப்டி பண்றீங்க. நாளபின்ன புகுந்த வீட்டுக்கு போய் எதும் நடந்தா அதுக்கும் நீங்கதான் பொறுப்பு. யோசிக்காம வாக்குறுதி குடுத்துடீங்க மாம்ஸ்” 

“ஓகே பார்த்துக்கலாம் விடு”

“அக்கி இங்க பாரு அத்தை மனசுல இடம் பிடிக்கனும்னா சீக்கிரமா ஒரு குழந்தை பெத்துக்கோ!” இதை புறஞ்சேயன் முன்னாடி வேர்லின் கூற அவனுக்கு ஒரே குஷி. 

“ஏய், நீ என்ன சின்னப்பிள்ளை மாதிரி  பேசாம கிழவி மாதிரி பேசுற. இப்டி எல்லாம் பேசக்கூடாது” என்று  பயத்தில் தங்கையை கண்டித்தாள் பியானா. 

“ஐ அம் ஏ டாக்டர், உன்னோட தங்கச்சி, இதெல்லாம் சொல்ல எனக்கு எல்லா உரிமையும் இருக்கு”  என்று கூறிவிட்டு வேர்லின் அறையை விட்டு நகர்ந்தாள். 

“ஆபீஸ்ல என்னைய என்ன பண்ண?இப்போ காத புடிச்சி திருகு பார்ப்போம்” என்றவன் புருவங்களை உயர்த்தி தன்னவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். 

பாவையோ பரிதாபமாய் உமிழ் நீரை விழுங்கி மாட்டேன் என தலையை மறுத்து அசைத்து ஓர் அடியை பின் வைத்தாள். 

மேலும் இரண்டு மூன்று அடிகளை வைத்து முன்னே சென்று தன்னவள் கழுத்தில் கரங்களை மாலையாய் கோர்த்து அவள் காதில் கிசு கிசுத்தான். 

“வேர்லின் சொன்னது புரிஞ்சுதா,  இல்ல புரிய வைக்கட்டுமா, அம்மா மனசுல இடம் பிடிக்க வேணாமா பேபி?” 

மீண்டும் மறுத்து தலையசைத்தாள் மடவாள். “ஓ.. அப்போ புரியலயா, புரிய வைக்கட்டுமா?” என்று மயக்கும் குரலில் கேட்டான்.

தன்னவன் மூச்சுக்காற்று பெண்மைக்கு இனம் புரியாத புத்துணர்ச்சியை அளிக்க, அவள் உதடுகளை சரி செய்த படி, “போ.. போங்க சார்” என்றவள் தன்னவன் கை சிறைக்குள் இருந்து, அவளை விடுக்குமாறு போராடி விடுபட்டாள்.

பெண்ணவளை விழிகளால் விழுங்குவது  போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு  “ஒரு நாளைக்கு எங்கிட்ட வசம்மா.. மாட்டுவ அப்போ எப்டி தப்பிக்கிறேனு பார்ப்போம்” தன்னவளை பார்த்து இளங்காளை இளநகையை தந்தான்.

***