💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-e347c443

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

பகுதி – 3

“’குழந்தையின் முதல் அழுகை – இருள் சூழ்ந்த பாதுகாப்பான தாயின் கருவறையிலிருந்து ஒளிமயமான உலகைக் கண்ட பயத்தின் வெளிப்பாடு”

 

இன்னும் இரண்டு நாளில்  வர்ஷுவின் பிறந்தநாள். அதன் பொருட்டு அவர்கள் வீட்டில் நடக்கும் விழாவிற்கு தியா மற்றும் மித்துவையும் அழைத்திருந்தாள் வர்ஷு.

அன்று சனிக்கிழமை,  வெளியில் கிளம்ப தன் அறையில் தயாராகினாள் தியா.

அலுவலகத்திற்கு கிளம்பியபடி சந்திரன் தன் மகளைப் பற்றிக் கேட்க “அவள் வெளியில் செல்ல கிளம்புகிறாள் “,  என்ற தன் மனைவி சொன்ன பதிலில்,

 ‘மகள் இப்போது  வரமாட்டாள்’, எனக் குஷியானவர்,

🎼வந்தாள் மகாலட்சுமியே என் வீட்டில் என்றும் அவள்  ஆட்சியே……🎼

என்று பாடி மனைவியைச் சீண்டினார்.

அப்போது பார்த்து வீட்டின் அழைப்புமணி அடிக்க, லட்சுமி ‘அப்பாடா தப்பினோம்’, எனக் கதவின் புறம் சென்றார்.

 ‘யார்டா அது’ என்று  எண்ணியபடி உள்ளே வந்த மித்துவை பார்த்துச் சிரித்தார்.

லட்சுமி, “வாமா மித்து, இரு  இப்போதான் காபி போட்டேன் எடுத்துட்டு வரேன்”.

அடுப்படி வாசலில்  நின்றிருந்த சந்திரனைப் பார்த்து, “என்ன அங்கிள் பூஜை வேலை கரடி ஆகிட்டேனா”.

“விடுடா உங்க ஆண்ட்டி எங்க போய்டுவாங்க   அப்புறம்  பார்க்கலாம்”, என கூறிய வேளை,

 தியா தயாராகி வர,  அனைவரிடமும் விடைபெற்று அலுவலகம் நோக்கிச் சென்றார் சந்திரன்.

லக்ஷ்மியின் காபியை ரசித்துக்குடித்தாள் மித்து.

“என்னடி கிளம்பலாமா”.

“ம், போகலாம்டி”.

“அம்மா பை மா நாங்க கிளம்புறோம்”.

“நாளைக்கு வர்ஷுவ நம்ப வீட்டுக்கு அழைச்சிட்டு  வாங்கமா”.

“மாலை அவங்க வீட்டில்  விழா இருக்கே காலை வேணா கூப்புடுறேன்மா”, என வர்ஷாக்கு கால் செய்து காலை வர முடியுமா என்பதை உறுதிப்படுத்தினாள்.

அவளுக்கு ஒரு எதிர்பாரா வியப்பளிக்க முடிவு செய்தனர்.

அதன்படி வர்ஷாக்கு கேக்  ஆடர் செய்துவிட்டு கிப்ட் வாங்க ஒரு கடைக்குள் நுழைந்தனர், அங்கே எதிர்பாராமல்(!?) அருணையும் ஷ்யாமையும் சந்தித்தனர்.

காலையில் ஷ்யாமின்  வீட்டிற்கு வந்த அருண் அவனை அவசர அவசரமாகக் கிளப்பியிருந்தான் , மித்ராவை பார்த்த ஷ்யாம் அருணின் செய்கைக்கான காரணம் புரிய அவனை முறைத்தான்.

அதை அவன் கவனித்தால் தானே மித்து  வந்தவுடன் அவளிடம் பேசப் போய் விட்டான்.

வர்ஷுவின் குடும்ப புகைப்படம் பார்த்ததால் ஷ்யாம்  அவளின் அண்ணன் என்பதை அறிவாள் தியா. 

அருண் மித்துவுடன் பேசிய நேரம், தியா ஷ்யாமை  அணுகி, “நீங்க எனக்கு ஒரு உதவிப் பண்ண முடியுமா”, என்றாள் தயக்கமாக.

“ம், சொல்லுங்க என்ன  வேணும்”, என அவன் சகஜமாகக் கேட்க.

அதில் தயக்கம் நீங்கி, “வர்ஷுக்கு ஸ்சர்ப்ரைஸ்  பிளான் பண்ணி இருக்கோம் அதுக்கு உங்க உதவி வேணும்”.

“இப்படி கேட்டா மறுக்க முடியுமா சொல்லுங்க என்ன பண்ணனும்”.

“முதலில் அவளுக்காக ஷாப்பிங்  பண்ண உதவி பண்ணனும்”.

“சரி வாங்க”.

அவள் விருப்பத்தை அறிந்து ஆளுயர டெட்டி பியர், கார்டு வாங்கினாள்.

பிறகு, கிரிஸ்டலினால் ஆன ஒரு பெண்ணின் மாடல் அதை மிகவும் நுட்பமாக வடிவமைத்திருந்தனர்  அதைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது தியாவிற்கு, “இது ரொம்ப கியூட்டா இருக்குல, இது வர்ஷுக்கு பிடிக்குமா”.

“அப்பா! இதோடு இருபது  தடவை கேட்டாச்சி வர்ஷுக்கு பிடிக்குமா பிடிக்குமானு. எதுக்கு இவளோ விலை அதிகமா”.

“இதுலாம் சிங்கள் பீஸ்ங்க,  இது மாதிரி ஐட்டம்ஸ் கலெக்ட் பண்ணுவேன்னு வர்ஷு சொன்னா அதான், அவளுக்குனு வாங்குறோம் அது அவளுக்கு பிடித்தமாதிரி இருக்கணும்ல அதான் உங்ககிட்ட கேட்டு வாங்குறேன்”.

தன் தங்கை ஏன் இவளின் புராணதையே பாடுகிறாள் என்பது புரிந்தது அவனிற்கு.

பின் அனைத்திற்கும் பில் போட்டு வாங்கினாள் தியா.

அதற்குள் மித்துவும்  அருணும் இவர்களை நோக்கி வந்தார்கள்.

மித்து, “என்ன தியா எல்லாம் வாங்கிட்டியா”.

“ஆச்சுடி இன்னும் டிரஸ்  மட்டும் தான் பாக்கி”, என்று சொல்லி,

ஷ்யாமை பார்த்து, “வர்ஷுக்கு என்ன கலர்  பிடிக்கும்”, எனக் கேட்டாள்.

“எதுக்குங்க டிரஸ்சு அதான் இவளோ இருக்கே என அவள் கையிலிருந்ததைக் காட்டினான்.

அதற்கு தியா பதில் சொல்லும் முன் மித்து முந்திக்கொண்டு, இவ இப்படி தான் யாரையாச்சி ரொம்ப  பிடிச்சிட்டா நிறைய செய்வா.

தியா, “சும்மா இரு மித்து அதுலாம்  ஒன்னும்ல சரி சொல்லுங்க வர்ஷுக்கு பிடித்த கலர் என்ன?”.

“சொல்லலைனா விட மாட்டீங்க போலயே, அவளுக்கு  ப்ளூ கலர் பிடிக்கும்”.

மித்து, “தியாக்கு கூட ப்ளூ தான் பிடிக்கும்”.

தியா, “சரி நேரம் ஆச்சி,  வாங்க குர்த்தி ஒன்னு  வாங்கிட்டு கிளம்பலாம்”.

அதன்படி அழகிய வேலைப்பாடு நிரம்பிய சுடிதார் எடுத்து கடையிலிருந்து வெளியே வந்தனர்.

“நாளைக்கு வர்ஷுகூட நீங்களும் வீட்டுக்கு வாங்க ப்ளீஸ், அப்படியே கிளம்பும்போது கால் பண்ணுங்க ப்ளீஸ். இது தான் என் நம்பர் நோட்  பண்ணிக்கோங்க”.

அதற்கு அவன் சிரித்துக்கொண்டே, “மறுபடியும் மறுக்க முடியாத மாதிரி கேட்குறீங்க சரி  வரேன்”, என்று அவள் நம்பரைப் பதிவு செய்துகொண்டான்.

அருணிடம் திரும்பி, “அண்ணா நீங்களும் வந்துடுங்க”, என்று அழைத்தாள்.

“கண்டிப்பா நான் இல்லாமையா”,  என்றவனைப் பார்த்து இடம் வலமாகத் தலையாட்டினான் ஷ்யாம்.

“சரி அப்போ நாங்க  கிளம்புறோம் பை”, என அங்கேயிருந்து தோழிகள் நகர்த்தவுடன்,

“என்னடா மொத்தமா  விழிந்துட்ட போல”, என்ற தோழனைப் பார்த்து அசடு வழித்தான் அருண்.

அதைக் கண்டு புன்னகைத்த ஷ்யாம், “சரி வா கிளம்பலாம்”.

“நாளைக்கு வரேன்னு  சொன்னியே உண்மையாவாடா”.

“ஆமாடா உன் தங்கச்சி தான் நான் வரேனா இல்லையானு கன்போர்ம் பண்றதுக்குள்ள அவங்களுக்கு ரிப்போர்ட்  பண்ண வேற சொல்லிட்டாங்களே”.

அதற்கு அருண் சிரித்து “அவ நல்ல  பொண்ணுடா”.

“யாரு இல்லனு சொன்னா. சரி நாளைக்கு ரெடியா இரு போகலாம்”.

அடுத்த நாள், காலை தியாவிற்குக்  கால் செய்து “தானும் தங்கையும் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டோம்”, எனத் தகவல் அளித்தான் ஷ்யாம்.

“சரி”, இதே மாதிரி வீட்டை நெருக்கவும் ஒரு மிஸ்டு கால் பண்ணச்சொல்லி பேசியை வைத்தாள்.

தான் வாங்கிய அலங்கார பொருட்கள் கொண்டு இரவே ஹாலை ‘மித்து, தாய் மற்றும் தந்தை’ உதவியோடு அலங்கரித்திருந்தாள் தியா.

தியா, “அவங்க கிளம்பியாச்சு கேக் எல்லாம் ரெடி பண்ணிடலாம”.

அதன் பின் வேலைகள் துரிதமாக நடந்தது தியாவும் மித்துவும் கேக்  வெட்ட ரெடி செய்ய,

லட்சுமி வரஷுக்கு பிடித்த ஆப்பம் தேங்காய்ப் பால்,  பால் கொழுக்கட்டை, பூரி மசால், குலாப் ஜாமுன் என அனைத்தையும் தயாராக சாப்பிடும் மேசையில் வைத்தார்.

ஷ்யாமின் மிஸ்டு கால் வர, தியா மித்து இருவரும் வீட்டின் வெளியில் சென்று வர்ஷுவை கண்மூடி உள்ளே அழைத்து சென்றார்கள்.

உள்ளே நுழையவும் கைகளை விளக்கி “சர்ப்பிரைஸ்”, எனக் கத்தினர்.

வர்ஷு, “என்னடி இதெல்லாம்”, எனச் சிணுக்கினாலும் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டிவிட்டு மகிழ்ந்தாள்.

பின் லட்சுமி அவர்களைச் சாப்பிட அழைக்க ஏற்கனவே தியா இந்த ஏற்பாட்டைப் பற்றிக் கூறியதால் ராதா செய்த இனிப்பை மட்டும் சாப்பிட்டு வந்திருந்தனர் அண்ணன் தங்கை இருவரும்.

ஷ்யாமும் லக்ஷ்மியின் அன்பு கட்டளையை மீறமுடியாமல் உண்டான். அனைத்தும் தன் தங்கைக்குப் பிடித்தது என்பதையும் கவனிக்கத்  தவறவில்லை.

“அருண் அண்ணா ஏன் வரல”.

ஷ்யாம் பதில் கூறும் முன் மித்து, “மாமா எதோ முக்கிய வேலையா  அனுப்பியிருக்காங்கலாம் அதான் வரமுடியலைன்னு சொன்னார்”.

‘ஓ! நம்பப் பையன்  மித்துகிட்ட போன்ல கடலை வறுக்க ஆரமிச்சிட்டானா’

வர்ஷுக்கு வாங்கிய அனைத்தும் அவளிடம் கொடுக்க ஒவ்வொன்றையும் அவள் ஆசையாய் பார்ப்பதிலே அவளுக்கு பிடித்திருக்கிறது என்பது புரிய, ஷ்யாமிற்கு கண்களாலே நன்றி சொன்னாள் தியா.

அவனும் சிறு தலையசைப்பில் அதை ஏற்றுக்கொண்டான்.

பின் இன்று மாலை அவர்கள் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் விழாவிற்கு அனைவருக்கும் அழைப்புவிடுத்தனர் ஷ்யாம் மற்றும் வர்ஷா.

திரும்பும் வழி முழுக்க தியா வீட்டின் புராணத்தையே பேசியபடி  வந்தாள் வர்ஷு.

“அண்ணா, தியா ரொம்ப  ஸ்வீட், மித்துவும் ரொம்ப நல்ல பொண்ணு, அங்கிள் ஆண்ட்டி கூட நட்பா பழகுறாங்க நம்பலையும் அந்த குடும்பத்தில் ஒருத்தரா நடத்துறாங்க. எனக்கு அவங்க எல்லாரையும் ரொம்ப பிடிச்சிருக்கு”.

“உண்மை தான் வர்ஷு. நம்ப வீட்ட  தவிர எங்கையும் நீ போனதில்ல அதான் அம்மா அப்பா ரொம்ப யோசிச்சாங்க உன்ன அங்க அனுப்ப, அன்னைக்கி தியா உனக்கு வாங்கும் போதே பார்த்துப் பார்த்து பண்ணவே நான் அப்பா அம்மாகிட்ட பேசி உன்ன கூட்டிட்டு வந்தேன்”.

“நல்ல காரியம் பண்ணணா”.

“எனக்குமே யோசனைதான் வர்ஷு ஏன்னா அவங்க  வீட்ல எப்படினு தெரியாது இல்லையா, பட் அவங்க நீ சொன்னமாதிரி ரொம்ப பிரிஎண்ட்லியா இருக்காங்க”.

“ம்.”

“இனி, உனக்கு எப்ப  தோணுனாலும் நீ அங்க தனியாவே போகலாம்”.

“லட்சு ஆன்ட்டிக கூட அடிக்கடி  வரச்சொன்னாங்க அண்ணா”.

இப்படிப் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

உள்ளே நுழைந்தவுடன் அங்கே நடந்த அனைத்தையும் தாய் தந்தையிடம் ஒப்பித்தாள் வர்ஷு.

தியா வாங்கியதை அவர்களிடம் காட்டிவிட்டுச் சென்றாள்.

“பரவால்ல ஷ்யாம் உன் தங்கைக்கு நல்ல தோழிகள் கிடைச்சிட்டாங்க போல”, என்றார் ராதா.

“ஆமாமா உன்மையாவே  அவங்க எல்லாம் நல்லமாதிரி”, என அவர்களை தியா வீட்டில் நடத்திய விதம் என அனைத்தையும் அவன் பங்கிக்குக் கூறினான்.

“டிபன் கூட நம்ப வர்ஷுக்கு பிடித்தது  தான். மாலை நம்ப வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கோம் மா”.

ராதா வீட்டின் பெரியவராய் தியா மற்றும் மித்து வீட்டுக்குக்  கால் செய்து அனைவரையும் மாலை விழாவிற்கு அழைத்தார்.

(அடுத்த எபில வர்ஷாயோட பிறந்தநாள் விழாவிற்கு நாமளும்  போலாமா)

Leave a Reply

error: Content is protected !!