💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-f647c8b7

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு – 5

“தரம், நேர்மை, வாக்குத்தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைபிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமையமாக இருக்கும்”

 

தியா ஷ்யாமிடம் கூறியபடி ‘மித்துவின் அன்னையிடம் எப்படிப் பேசலாம்’, என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு வழி சொல்ல ஒலித்தது அவள் பேசி.

அருண் அண்ணாவா…….

(சிறிது நேரத்திற்கு முன் ஷ்யாம் அருணுக்குள் நடந்த பேச்சு வார்த்தை)

அருண், “மச்சி நான் பிசினஸ் சமந்தமா ஒன்னு யோசித்து இருக்கேன்டா”.

ஷ்யாம், “என்னடா அது சொல்லு கேட்போம்”.

“இப்பல்லாம் மக்கள் வெளிய போறதவிட ஆன்லைன் ஷாப்பிங் அதிகமா பண்ண ஆரமிச்சிட்டாங்கல”.

“ஆமா”.

“அதான் கிட்சேன் சம்மந்தமான விடயக்கள் ஆன்லைன்ல பண்ணலாம்ணு யோசிக்கிறேன்”.

“என்னலாம் அப்படி பண்ணலாம்னு நினைக்கிறடா”.

“மாத மல்லிகை, காஸ் ரிப்பேர். அப்புறம் இப்பல்லாம் பாதுகாப்புக்காக காஸ் சிலிண்டர் வெளிய வெச்சி கனெக்ஷன் மட்டும் உள்ள வர மாதிரி வைக்கிறாங்கலே அந்த விஷயம், முடிச்சா மாடுலர் கிட்சேன் இது மாதிரிலாம்”.

“சூப்பர்டா, நல்ல பிளான் மாடுலர் கிட்சேன் சேர்த்துக்கோ அதுக்கு டிசைனர் பாத்துக்கலாம்”.

“எல்லாம் ரைட்டுடா ஆன ‘முதல்’ நம்மகிட்ட கொஞ்சம் இருக்கும் மீதி”.

“அது பிரச்னைலடா. நான் பாத்துக்குறேன்”.

“இல்லடா…. வேணாம்……”

“உன்ன பத்தி எனக்குத் தெரியாதா. நான் தரலடா லோன் ஏற்பாடு பண்ணலாம்னு சொல்ல வந்தேன்”.

“நல்ல ஐடியாடா”.

“தியா அப்பாவிடம் பேசிப்பாரு”.

“சரிடா அப்போ நான் இப்பவே போய் அங்கிள்கிட்ட இது பத்தி பேசுறேன்”.

“தியாக்கு போன் பண்ணி அவர் இருக்காராரு கேட்டுட்டு போ”.

“ஓகேடா”.

(அதன் பிறகு தான் தியாவிற்குக் கால் செய்கிறான் )

“ஹலோ சொல்லுங்க அண்ணா “.

“என்ன தியா பிஸியா”.

“இல்லனா சொல்லுங்க”.

“அங்கிள் வீட்ல இருக்காரா”.

“இருக்கார் அண்ணா”.

“சரிம்மா அப்போ வீட்டுக்கு வரேன் அவர் கிட்டக் கொஞ்சம் பேசணும்”.

“வாங்கண்ணா”.

‘என்னவா இருக்கும், சரி வரட்டும் பார்ப்போம்’.

சிறிது நேரத்தில் தியா வீட்டிற்கு வந்திருந்தான் அருண்.

“வாப்பா அருண்”.

“ஹாய் ஆண்ட்டி, காபி கிடைக்குமா”.

“கண்டிப்பா, இரு எடுத்துட்டு வரேன்”.

“ஹாய் அருண், ஏதோ பேசணும்னு சொன்னியாமே தியா சொன்னாள்”.

“ஆமா அங்கிள், உங்களுக்கு உன்னாடியே சொன்னேன்ல எனக்கு ஒரு சொந்த தொழில் ஆரமிக்கிற பிளான் இருக்குனு”.

“ஆமா”.

“என் ஐடியாவை ஷ்யாம் கிட்ட டிஸ்கஸ் பண்ணேன்”, என ஷ்யாமிடம் அவன் பேசிய அனைத்தையும் சொன்னான்.

லட்சு ஆன்ட்டியின் காபி வர அதை பருகிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தனர்.

“நல்ல ஐடியா தான் அருண். கண்டிப்பா லோனக்கு அப்ளை பண்ணலாம் எம்.எஸ்.எம்.இ திட்டம்னு ஒன்னு இருக்கு அதுல   எவ்வித பிணையும்யில்லை(mortgage). “

“அப்படியா!அங்கிள் அந்த திட்டம் பத்தி சொல்லுங்க”.

குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதித் திட்டம் இந்திய அரசின் எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) இணைந்து நிறுவியுள்ள இந்த கடன் திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்ட சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்குகிறது. இந்த கடனுக்கு நிறுவனத்தினர் எந்தவித பிணையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கடனை பெறத் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் வட்டார கிராமப்புற வங்கிகளைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தொழிலை வளர்ச்சி அடையச் செய்வதற்காக இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

“நல்ல திட்டம் அங்கிள் இது. இப்போவே அப்ளை பண்ணலாமா”.

“பண்ணலாம்பா எல்ல முடிச்சு பணம் கைக்கு வரவும் நீ ஸ்டடிஸ் முடிக்கவும் சரியா இருக்கும். உன்னோட பிசினஸ் பத்தி விளக்கமா ஒரு பிளான் ரெடி பண்ணிதா”, மேலும் என்ன என்ன தேவை என்பதையும் கூறி மேற்கொண்டு அவர் பார்த்துக்கொள்வதாக கூறினார்.

“சரி அங்கிள் அப்போ நான் எல்லாம் ரெடி பண்ணி குடுத்துறேன்”.

“சரிப்பா ஆல் தி பெஸ்ட்”.

“தேங்க்ஸ் அங்கிள்”.

அதுவரை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த தியாவும் அவள் அம்மாவும் அவன் முன்னேற்றப் பாதைக்கு வாழ்த்துக் கூறினார்கள்.

“தேங்க்ஸ் ஆண்ட்டி, தேங்க்ஸ் தியாம்மா”.

“சரி நான் கிளம்புறேன், அத்தையை பார்த்துட்டு போகணும்”.

‘அண்ணா, மித்து வீட்டுக்கு போறிங்களா”.

“ஆமா தியா”.

“அப்போ நானும் வரேன்”.

“சரி வா”.

“இருவரும் பெரியவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினர்”.

மித்து வீட்டில்………

“ஆண்ட்டி………..”

“வாம்மா தியா நான் சமையல்கட்டில் இருக்கேன்”.

“இங்க கொஞ்சம் வரிங்களா”.

“இதோ வரேன்”.

வெளியே வந்தவர் தியாவுடன் தன் அண்ணன் மகனையும் பார்த்ததும் மகிழ்ந்து வரவேற்றார்.

“வாப்பா அருண். இப்போதான் அத்தை வீட்டுக்கு வழி தெரிச்சிச்சா”.

“உட்கார்ப்பா, சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்”.

“நீங்க பேசுங்க ஆண்ட்டி நான் எடுத்துட்டு வரேன்”.

தியா சமையலறை சென்று இரு தட்டுகளில் இனிப்பு கார வகைகள் எடுத்து வந்தாள்.

ஒன்றை அருண் புறம் நீட்டி மற்றொன்றை அவள் எடுத்துக் கொண்டாள்.

மித்துவை பார்க்கவே அருண் இங்கு வந்தான். இப்போது எல்லாம் கடைசி செம் என்பதால் அவளிடம் பேசமுடியவில்லை, அது உண்மை காரணம் அல்ல என்பதை அவன் மட்டுமே அறிவான்.

அருணின் கண்கள் மித்துவை தேடுவதைப் பார்த்த தியா, ‘இத்தன நாள் எப்படி இதை நோட் பண்ணாமவிட்டுட்டேன்’.

“அத்தை மித்து எங்க?”

“மித்து இப்போ தான் நம்ப பாட்டிகளைக் கூட்டிக்கிட்டு கோவிலுக்கு போனாள்”, என்ற பதிலில் அவன் முகம் கூம்பிவிட்டது.

‘ச்ச, அப்போ அவ இல்லையா’.

பின் அவன் தியா அப்பாவிடம் பேசிய அனைத்தும் கூறி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டான்.

“அருண் அப்படியே என் அண்ணா மாதிரி”.

“உங்களுக்கு உங்க அண்ணாவை ரொம்ப பிடிக்குமா”.

“ஆமாம்மா, என் பெரியப்பாவும் அப்பாவும் ஒண்ணா பிறந்தவங்க. அவங்க கல்யாணம் பண்ணதும் அக்கா தங்கச்சியைத் தான்”.

“அதுனால ஒண்ணா கூட்டு குடும்பமா இருந்தோம். நானும் அண்ணாவும் ஒண்ணா ஒரே வீட்டில் வளர்ந்தோம். கிட்டத்தட்டப் பாசமலர் அண்ணன் தங்கை தான்”.

“அப்புறம் அண்ணன் காதல் அப்பாகும் பெரியப்பாகும் பிடிக்காம போக உன்னக்கு பிடிச்சவதான் வேண்டுமானால் வீட்டைவிட்டு வெளிய போனு சொல்லிட்டாங்க. அண்ணாவும் போய்ட்டாங்க”.

 “அத்தோட அப்பா பெரியப்பா இருந்தவரை முறுக்கிட்டே இருந்தாங்க. பிள்ளையைவிட அப்படி என்ன பிடிவாதம்னு எனக்கு தோணும் என்ன பண்ண, அவங்க ரொம்ப பழைய பஞ்சாகம்”.

“பாட்டிகள் கூடவா”.

“இல்லமா அம்மா பெரியம்மாவுக்கு அண்ணாவை பாக்கணும்னு ஆசை, ஆனா அவங்க புருஷங்கள் அதுக்கு விடல, போய் பார்த்தா நாங்க செத்துடுவோம்னு மிரட்டல் வேற, அப்புறம் எப்படி”.

“நீங்களும் இவளோ வருஷம் பேசலையா ஆண்ட்டி”.

“நான் பேசிட்டு தான் இருந்தேன். என் கல்யாணத்துக்குக் கூட அண்ணா வந்தார் யாருக்கும் தெரியாமல். மித்து அப்பாக்கு யாருமில்ல அதான் வீட்டோடு மாப்பிள்ளையா பாத்துட்டாங்க பெரியவங்க, இவர் ரொம்ப சாந்தம் இவருக்கு நான் அண்ணன்கிட்ட பேசுறது பிரச்சனை இல்லை, ஆனா அப்பா பெரியப்பா இதை எப்படியோ கண்டுபிடித்து ஒரே சண்டை ஆகிடுச்சு”.

“அண்ணன் குடும்பத்துக்குப் பிரச்சனை கொடுக்க ஆரமிக்கவும் நான் அவர்கிட்ட பேசுறத விட்டுவிட்டேன் என்னால் எதுக்கு அவருக்குக் கஷ்டம். அவருக்குப் பையன் பொறந்துருக்கான்னு கேள்விப் பட்டேன் போய் பாக்க ஆசை தான் ஆனா நம்ப வீட்ல என்னை ரொம்ப கண்காணிக்க தொடங்கிட்டாங்க”.

“இப்போ தான் எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் வந்து இருக்கு”.

“ஏன் ஆண்ட்டி சப்போஸ் உங்க அண்ணா மித்துவ அருண் அண்ணாக்கு கேட்டா குடுப்பிங்களா”.

பட்டேன கேட்டுவிட்டு என்ன சொல்வார்களோ வென்று சிறு பதைபதைப்புடன் பார்த்தாள்.

ஏகன்யா அதற்குச் சிரித்துவிட்டு “அப்படி ஒரு நினைப்பு எனக்கும் இருக்குமா. அண்ணாக்கு ஞாபகம் இருக்கானு தெரியல நாங்க கல்யாணம் பண்ணும் முன்பே இப்படி பேசி இருக்கோம் நம்பப் பசங்களுக்குக் கல்யாணம் பண்ணி நாம சம்பந்திகள் ஆகணும்னு”.

‘அவருக்கு ஞாபகம் இருக்கு ஆண்ட்டி’

அதற்குள் மித்து மற்றும் பாட்டிகள் மூவரும் கோவிலில் இருந்து திரும்ப. அருண் வந்ததை பற்றிக் கூறினார் ஏகன்யா.

 மித்து தியாவை பார்க்க. அவள் காதோரம் “என்னடி மிஸ் பண்ணிட்டோம்னு பீலிங்கா”.

ஆமென தலையாட்ட வந்து பின் இல்லை என மறுத்தாள்.

உன்ன எனக்குத் தெரியும் என்ற பார்வையை வீசினாள் தியா.

பின் தன் தாய் அருண் வந்த காரணத்தைப் பற்றிச் சொன்ன செய்திகளைக் கேட்டவள் மிகவும் மகிழ்ந்தாள்.

மித்துவின் பிரச்சனை தீர்ந்த குஷியில் சிறிது நேரம் அவளிடம் பேசி வீடு சென்றாள் தியா.

ஷ்யாமிற்கு கால் செய்து அனைத்தையும் கூறினாள்.

“சூப்பர் தியா, எப்படி அப்படி பட்டுனு கேட்ட அவங்க மாட்டேன்னு சொன்னா என்ன பண்ணிருப்ப”.

“அண்ணா அண்ணானு பாச பயிர வளர்க்கவே தான் நம்பி கேட்டேன்”.

“சரி இனி இவங்க இரண்டு பேரைப் பேச வைப்போம்”.

“நானும் அதே தான் நினைத்தேன், பாவம் மித்து ரொம்ப பீல் பண்றா”.

“சரி எதாவது பண்ணலாம், பை”.

“ம்…பை”.

அருண் ஷ்யாமிடம் சந்திரன் கூறிய அனைத்தையும் கூறினான்.

“நல்ல திட்டமா தான் தெரியது டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணு மச்சி”.

“சரிடா”.

“ஆமா என்ன இப்பல்லாம் மித்துக்கிட்ட சரியா பேசுறது இல்லையா”.

அமைதிக் காத்தான்.

“என்னதான்டா ஆச்சி”.

“இல்லடா இப்போயெல்லாம் அவகிட்ட நார்மலா பேச முடியல எங்கே மனசுல இருக்கறதை சொல்லிடுவேனோனு தான்…..”

“இப்போ தான் எல்லாம் நல்லா போகுதே அப்புறம் சொன்னா என்ன. இனி தள்ளிப்போடக் காரணம் இல்லனு நினைக்கிறன்”.

“நானும் இன்னைக்கி அதைத்தான் யோசுச்சேன். என்னாலையும் முடியல. ஈவினிங் பேசலாம்னு இருக்கேன்டா”.

“சூப்பர் மச்சி ஆல் தி பெஸ்ட் டா”.

“தேங்க்ஸ் மச்சி”, எனத் துள்ளிக்குதித்துப் போனான் அருண்.

மித்துக்கு கால் செய்து அவளை நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறினான்.

மித்து தியாவிடம் கூறி அவளையும் அழைக்க, இல்லடி நீ மட்டும் போய் என்னனு கேட்டுவா.

“பயமாயிருக்குடி”.

“எதுக்கு பயம்”.

“ஒரு வேல இப்பலாம் நான் ஒரு மாதிரி இருக்கேன்ல அது அவருக்குத் தெரிந்து இருக்குமோ”.

“ஆமா நீ எந்த மாதிரி இருக்க….”

 “அது……”

“சரி சரி, எதையும் யோசிக்காத முதல் போய் அவர் என்ன சொல்லறார்னு கேள்”.

மாலை கடற்கரையில்,

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா”.

 “இல்லை மித்து, இப்போ தான் வந்தேன். அதிசயமா நீ மட்டும் வந்திருக்க தியாவையும் கூட்டிட்டு வருவேன்னு நினைச்சேன்”.

“அவளைக் கூப்பிட்டேன் அவ தான் நீ மட்டும் போய்ட்டுவானு சொல்லிடா”.

“அதானே, நீ கூப்பிடலனாதான் ஆச்சரியம்”.

“இப்படிக் கிண்டல் பண்ணத்தான் வரச்சொன்னிங்களா”.

“என் அத்தை பொண்ண நான் கிண்டல் பண்ணாம வேற யாரு பண்ணுவா”.

“என்ன…….”

 “நீ என் அத்தை பொண்ணு தானே”.

ஆம்யென அவள் தலை தானாக ஆட.

அவன் சிரித்தான்.

“தியா சொன்ன இன்னைக்கி அவ வீட்டுக்கு வந்ததா. ஆல் தி பெஸ்ட்”.

“சாரி மித்து, நானே உங்கிட்ட சொல்லிருக்கணும் எல்லாம் நல்லபடியா முடிச்சிட்டு சொல்லனு நினைச்சேன்”.

 “நான் ஏதும் தப்பா நினைக்கல”.

“உன்ன பாக்க நம்ப வீட்டுக்கும் தான் வந்தேன்”.

“என்னை பாக்கவா”.

“பின்ன நம்பப் பாட்டிகளைப் பாக்கவா”.

அவள் முறைத்தாள்.

“அழகுடி நீ”, பட்டென அவன் சொல்ல.

இவள் திருதிருத்தாள்.

அதை ரசித்தவன், தன் மனம் திறந்தான்.

“உன்ன முதல் முதலா அந்த கல்யாணத்தில் பாக்கும் பொதுதே பிடிச்சிச்சி பட் ரொம்ப சீரியசாலாம் யோசிக்கல என்னா நல்ல சாப்பாட்ட மொக்கிட்டு இருந்தடி. நீ அத்த பொண்ணுனு தெரிஞ்ச அப்புறம் ஒரு பீல் அப்போ என்னனு சரியா தெரியல. அது தெரிந்தது காலேஜ்ல தான், உன்ன பாத்துட்டே இருக்கனும் உங்கிட்ட பேசிட்டே இருக்கணும்னு தோணுச்சி, எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மித்து”.

“இதுலாம் ஒரு அம்பானி ஆன அப்புறம் சொல்லலாம்னு நினைச்சேன். இப்போ அதுக்கான முதல் படி எடுத்துவெச்ச அப்போ, நீயும் என்கூட இருக்கணும்னு தோணுது என்ன சொல்ற”.

அனைத்தையும் கேட்டவள் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.

அவளை உலுக்கியவனை கிள்ளினாள் அவள்.

“என்னடி…இப்படி கிள்ளிட வேண்டாம்னா டீசெண்டா வாயில சொல்லணும்”.

“ஐயோ சாரிடா, ரொம்ப வலிச்சிடுச்சா நீ சொன்னதுலாம் உண்மையானு தெரிஞ்சிக்கத் தான்…..”

“என்னடி மரியாதை காத்துல பறக்குது”.

“ஏன் பொண்டாட்டிகிட்ட ரொம்ப மரியாதை எதிர்பாக்குறீங்களோ”.

“அப்படிலாம் இல்லமா…. ஆன இப்படி கிள்ளிமட்டும் வைக்காத வலிக்குது”.

“இதுக்கேவா இன்னும் நிறைய இருக்கே”.

“ஐயோ தெரியாம கமிட் ஆகிட்டனோ”.

“இப்போ கவலைப்பட்டு என்ன ஆகப்போது”.

“அதுவும் சரி தான்”.

“நானும் கொஞ்ச நாளா இதை பீல் பண்ணப்பா. ஒரு மாதிரி இருதுச்சி”.

“புரியுது மித்து”.

பின் இருவரும் லைட்டிங் ஸ்டார்ஸ் குரூப்பில் இதைப் பகிர்ந்துக்கொண்டனர்.

தியா மிகவும் சந்தோஷமாக இருந்தாள், வர்ஷு தான் அருண் அண்ணா பத்தி கொஞ்சம் தெரியும். ஆனா “நீ சொல்லவே இல்ல பாரு”, என மித்துவை ஓட்டினாள்.

அதை கொண்டாட அனைவரும் அமுஸ்ட்மெண்ட் பார்க் (வி.ஜி. பி) செல்லலாம் என முடிவெடுத்தனர்.

அவர்களுக்காக அங்கே பிரச்சனை காத்துகொண்டுருப்பது தெரியாமல். நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.

(என்ன பிரச்சனை காத்துட்டு இருக்கு வாங்க அடுத்த எபில அத பாக்கலாம் )

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!