அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 10

IMG-20220619-WA0006-04865389

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 10

An kn 10

அனைவரும் கூடி நின்று பூஜையை  கவனிக்க, அந்நேரம் வந்து நின்ற வண்டி அனைவரையும் ஈர்த்தது. 

ஐராவிற்கு நேராக அகிலுக்கு பின்னால் நின்ற வண்டியில் இருந்து இறங்கினான் சத்ய நாராயணன். 

ஓட்டுனர் இருக்கையில் அவனும், அவனுக்கு அருகே அவன் தந்தை அருள் நாராயணன். நாராயணன்  அவர்களது குடும்பப் பெயர் போல. 

அவர் வெள்ளை வேட்டி சட்டையிலிருக்க இவன் வெள்ளை சட்டை கருப்பு பேன்ட்டில். அளவான  உயரம் சிவந்த நிறம் கலையான முகம். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல. அவளும் பார்த்துக் கொண்டேதான் இருந்தாள்.

அவன் சிகை ஜெல் பூசி அழகாய் ஓர் அலங்காரத்தில் நிறுத்தி வைத்திருந்தான். முகம், அதில் கண், மூக்கு, கன்னம் மறைத்த ட்ரிம் செய்த தாடி, கை அதில் இருந்த கடிகாரம் என ஒவ்வொன்றும் அவளை எப்போதும் போலவே ஈர்த்தது. அவள் அவனைப் பார்த்திருக்க அவள் ஒவ்வொரு அசைவையும் முகபாவனைகளையும் அகிலும் அவன் இரு கண்களால் படம் பிடித்துக் கொண்டுதான் இருந்தான். 

அவள் இப்போதும் முன்னிருந்த அதே ஐரா தான் கண்டுக் கொண்டான். இதற்காகத் தானே அவனுக்கு பிடிக்காத போதும் அழைப்பு கொடுத்திருந்தான். 

அழைப்பு கொடுக்க அவன் தந்தையும் ஒரு காரணம் தான். தொழில் துறையில் யாரும் யாரோடும் விருப்பம் இல்லாத போதும் மாற்றவர் முன்னே அதனை காட்டிக்கொடுக்க அது அடுத்தவர்களுக்கு துருப்பாய் அமைந்து விடும். ஆக, தந்தையின் தொழில் நண்பராக அருள் நாராயணன் இருக்க அவர் தொழிலை தன்னைப் போலவே மகன் நடத்திக்கொண்டிருந்தான். அதனால் மகனுக்கும் சேர்த்தே அழைப்பு கொடுத்திருந்தான். 

அத்தோடு, இவர்களின் கட்டப்போகும் புதிய கட்டிடத்திற்கு ஐயன் ரோட் சப்லை இவர்களுக்கே கொடுக்க முடிவு செய்தும் இருந்தான். அதற்கு காரணம் ஏற்கனவே இந்த நிலத்திற்கு கொட்டேஷன் கொடுத்திருந்தமையே.

பிடிக்காத போதும் தவிர்க்க முடியாததே காரணம் அத்தோடு பழையன மீட்டிக்கொள்ளவும் இதை சாதகமாக்கிக் கொண்டான் அகில் ரகுராம். 

ரகுராம் அருள் நாராயணை வரவேற்க, அகிலும் சென்று அவரோடு வரவேற்றான். நீண்ட வருடங்கள் பின்னான சந்திப்பு. ஒருவருவரை ஒருவர் நலம் கேட்டுக்கொள்ளவும் தவறவில்லை. அப்பொழுதே ஐராவை கவனித்தான் சத்ய நாராயணன். அங்கு அவளை  எதிர்பார்த்திருக்கவில்லை போல. அதே நேரம் ரம்யாவோடு குனிந்து ஏதோ பேசிகொண்டிருந்தாள் ஐரா.

அவள் அத்தனை நேரம் அவனையே பார்திருந்ததை அவனும் கவனிக்கவில்லை அவன் பார்த்ததை அவளுமே கவனிக்கவில்லை. 

இருவரையும் அகிலின் கண்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தன. ஐராவை பார்த்த சத்யா அதே  கண்களில் அகிலையும் பார்க்க அவனும் அவனைத்தான் பார்த்தான். யதார்த்தமாய் புன்னகைத்து விட்டு அதன் பின் பூஜையில் கவனத்தை செலுத்தினான். 

சிறப்பாக கட்டிடப்பணி துவங்கி  வைக்க அனைவரும் வாழ்த்துக்கள் கூறினர்.

நில உரிமையாளர் போகும் போதும் ஐராவைக் கண்டு நன்றி கூறி விடைபெற ஐராவை ரகுராம் அழைப்பதாக ப்ரேம் வந்து கூறினான். 

“சரிங்க ஜி, கண்டிப்பா மீண்டும் சந்திக்கலாம்.” 

“கண்டிப்பா,நானும் சார்கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன் மா, வா.” என அவளோடு அவரும் ரகுராம் இருக்குமிடம் வந்தார். 

ரகுராமோடு அருள் நாராயணன் இருக்க ஐரா அவ்விடம் செல்ல சரியாக சத்யாவும் வந்தான். 

“ஷீ இஸ் ஐரா. ஐரா நந்தன்.” 

“நந்தன்…? ஹேய் நம்ம நந்தன் பொண்ணா? பெரியாள் ஆகிட்டா” 

“ஆமாமா,ரொம்ப பெரியாள் ஆகிட்டா.”

நக்கலாக கூறுகிறாரோ என ராகுராமின் முகம் பார்க்க அவள் தோள் சுற்றி கையிட்டவர்,

“நம்ம காலேஜ் புல்லா நம்ம மேடம் கண்ட்ரோல் தான்.” பெருமையாகக் கூறினார். 

“அடடே எவ்ளோ பெருமையா இருக்கு. சின்ன வயசுலேயே  இவ்வளவு பெரிய பொறுப்பு எடுத்து நடத்துறதுன்னா கண்டிப்பா பாராட்டியே ஆகணும்.” 

இன்முகமாக அவர் பாராட்டை ஏற்றுக்கொண்டாள் ஐரா.

“இது என் பையன், சத்யா. இப்போ என் கம்பனி இவந்தான் பார்த்துக்கிறான்.” 

“வி க்நொவ் ஈச் அதர். ஹாப்பி டு மீட் யூ மிஸ் ஓர்…” 

“மிஸ் ஐரா நந்தன்.” புன்னகைத்தவாறே பதில்  கூறியவளுக்கு உள்ளுக்குள் பழைய பேச்சுவார்த்தைகள் தொடர்  அலைகளாய் ஒன்றன் பின் ஒன்றாய் வந்து தாக்க,

“எக்ஸ்கியூஸ் மீ.” என வராத அழைபேசியை காதினில் வைத்து நகர்ந்தாள். அப்படியே மெதுவாக ரம்யாவின் அருகே வந்தாள்.

“என்னாச்சு முகம் டல்லா இருக்கு ” 

“ஒன்னில்ல அத்தம்மா, உங்களுக்கு டையார்ட்னா வண்டிக்கு போகலாம், இங்க வெயில் வேற ஜாஸ்தியா  இருக்கு.” 

“ராம் இப்போ வறேன் சொன்னாங்க, இதுக்கும் மேல  முடியாது. கிளம்புறோம்டா.” 

“சரிங்க அத்தம்மா, ஈவ்னிங் கெளதம அனுப்புறேன், நைட் அகி வர்ரப்ப கூட்டி வரட்டும்.” 

ரகுராம் அவ்விடம் வர ரம்யாவும் ஐராவின் கை பிடித்து எழுந்துக் கொண்டார்.

“அப்போ நான் கிளம்புறேன்டா மா.” அவள் கன்னம் தடவினார். ‘சரியென’ தலையசைத்தவள், 

ரகுராமை பார்த்து,”அவங்க முன்னாடி சொன்னா நல்லா இருக்காதேன்னு சொல்லல. நீங்க சொன்னதுல ஸ்மால் கரெக்ஷன் மிஸ்டர் ரகுராம், ‘நம்ம காலேஜ் இல்ல அது. இட்ஸ் மை காலேஜ்.’ எப்போவும் மைண்ட்ல பிக்ஸ் பண்ணிகோங்க மிஸ்டர் ரகுராம். இனியும் இப்டி சொன்னா பொதுலேயே அதை ஞாபகப் படுத்த வேண்டி இருக்கும்.” 

“அதுல என் பங்கும் இருக்கு.” 

“ஆப் கோர்ஸ், வை நொட். பட் என்கிட்ட தான் நீங்க வாங்கிருக்கீங்க. நான் உங்ககிட்ட வாங்கல்ல. எய்ட்டி பெர்ஸன்ட் என்னோடது.டூ யூ ரிமெம்பெர்?” 

“என்ன இது ரெண்டு பேரும்? எல்லாரும் இருக்க இடத்துல.” ரம்யா இடையிட்டார். 

“உன் மருமகளுக்கு தான் வரவர  திமிரு ஜாஸ்தி ஆகுது. சொல்லிவை.” 

“ஏன்டி நீ வேற? ” 

“சும்மா அத்தம்மா, கழுத்துல கையெல்லாம் போட்டு ஷாக் கொடுக்குறாங்க,கொஞ்சம் பேச்சு வாங்கனும்னு ஒரு ஆச,அதான்.” 

அவரை வண்டியில் ஏறும் வரை பார்த்திருந்து விட்டு மீண்டும் அங்கிருந்த கூடாரம் அருகே வந்தாள். அகில் யார் யாருடனோ பேசிக்கொண்டிருக்க, அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப  காத்திருந்தாள். 

“ஹாய் ஐரா.” 

“ஹாய்.” 

“எப்படி இருக்கீங்க? 

“குட். நீங்க?” 

“நீங்களே சொல்லுங்களேன் எப்படி இருக்கேன்? எப்போவும் கரெக்ட்டா சொல்லிருவீங்களே.” 

இதழ்கள் பிரியாத ஒரு புன்னகை அவளிடத்தில்.

“லூக்கிங் குட், முன்ன விட இன்னும் ஜாஸ்தி அகிட்டு. லைப்ல நெக்ஸ்ட் லெவல் போகலாம்னு யோசிச்சிட்டே இருக்கீங்கனு தோணுது.” 

“ஆப் கோர்ஸ் யெஸ். ஆனா பாருங்க, ஏதோ ஒன்னு வந்து தடை பண்ணிட்டே இருக்கு.” 

“ஓஹ்!” அந்நேரம் பார்த்து அவள் அலைபேசி ஒலித்தது,

“ஜஸ்ட் எ மினிட்.’

‘சொல்லுங்க மலர்” 

“ம்மி இட்ஸ் மீ.” 

“ஏன் கெளதம், ஐ வில் பி தேர் இன் என் அவர்.” 

“அப்பாகிட்ட பேசணும்மி, கால் அன்செர் பண்ணலம்மி.” 

“அப்பா பிஸியா இருக்காங்க கெளதம். ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் சொல்லிருக்கேன்ல.” 

“சாரிம்மி.” 

“தட்ஸ் ஓகே. நா அப்பாக்கு கால் பண்ண சொல்லிர்றேன்.” 

அருகில் அமர்ந்திருந்தவனுக்கு  இவர்கள் உரையாடல் நன்றாகக் கேட்டது. 

“யாரு போன்ல.” 

“கெளதம்.” 

“கெளதம் மீன்?” 

“என் பையன்.” 

“ஓஹ்! மிஸ் ஐரா ஹாவிங் எ கிட்.” 

“யெஸ், மிஸ் ஐரா ஹாவிங் எ கிட். பைவ் இயர் ஆகுது பையனுக்கு.” 

“ஓஹ் ” 

“அன்னைக்கு நீங்க சொன்ன அதே ஐரா தான் இப்போவும் எப்போவும். ஆல்வேஸ் எம் வாட் ஐ ஏம்.” 

“அதுல எப்போவும் என்னதான் பெருமை இருக்குனு இவ்ளோ போல்டா பேசுற?

பொண்ணுன்னா இப்டிதான் அப்டின்ற ஒரு இது இருக்கு. ” 

“எதுன்னாலும் அது எல்லாம் என்கிட்ட நிறையாவே இருக்கு சத்யா. எதை என்கிட்ட தேடறாங்களோ அதுவாகத்தான் நான் அவங்களுக்கு.” 

“மேம், சார் கால்லிங் யூ.” ப்ரேம் வந்து அழைத்தான். 

“இதோ வரேன் ப்ரேம்.” 

“இதெல்லாம் அழகாவா இருக்கு?” 

“எனக்கு நல்லா இருக்கு சத்யா. அடுத்தவங்களுக்காக வாழ முடியாதே. நாம விரும்புனவங்க  நம்மல விரும்பலன்னா, புரிஜிக்கலைன்னா நம்மல நேசிக்கிறவங்களுக்காக நாம வாழத்தானே வேணும். அதான் பண்ணிட்டிருக்கேன். 

“வாட் யூ மீன்?” 

“ஐ மீன் இட்,வாட் யூ மீன். 

வரேன் டைமாச்சு.வில் மீட் சம் அதர் டைம்.” 

கூறியவள் எழுந்து சென்று விட்டாள். அங்கிருந்து ஐராவையே பார்த்திருந்த அகில் அவள் முகபாவனையில் மாற்றம் தெரிய ப்ரேமிடம் கூறி அவளை வரச் சொல்லியிருந்தான். 

அகில் அருகே வந்தவள், “ரொம்ப சந்தோஷம். நீங்க ஏற்பாடு பண்ணுன விஷேஷம் அமோகமா நடந்துச்சு.” 

“ஹேய் ஐரா! ஐ ஜஸ்ட்…”

“ஜஸ்ட் ஷட் அப். இடியட். நான் மறந்தாலும் அப்பப்போ ப்ரூப் பண்ணு அதை.” 

இவர்களின் பேச்சில் ப்ரேம் நகர்ந்தான்.

“ஏன்டி இப்டி, எவனும் மதிப்பானா என்னை உன்கிட்டல்லாம் போய் பேச்சு வாங்குறேன். இதுக்குத் தான் நல்லதுக்கே காலம் இல்லைன்னு சொல்வாங்களோ! ” 

“இருக்கும், உனக்கு நான் நல்லது பண்ணனும்னு நினச்சா என்னாகும் தெரியும்ல.” 

“என் தங்கமே கிளம்பு. எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.” 

“மவனே பண்ணுனதுக்கு அனுபவிப்ப. நான் கிளம்புறேன்.” கூறியவள் அடுத்த அடி எடுத்து வைக்கவுமே ‘ம்மா…’ என, காலை பிடித்துக்கொண்டாள்.

அங்கிருந்த சிறு கல்லொன்றில் அவள் ஹீல்ஸ் தடுக்கி கால் சற்றே சரிய கால் முழியில் வலி எடுத்தது. 

“ஹேய் என்னாச்சு?” 

“கால் ஸ்லிபாயிடுச்சு.”

அகில் குனிந்து என்னவென்று பார்க்கப் போகும் முன்னே,

“விடு.அம் ஓகே அவ்வளவா வலிக்கல.” 

“வா அங்க உட்காரு, என்னனு பார்க்கலாம்.” அவள் கைபிடித்து அழைத்தான்.

“வேணாம், நான் கிளம்புறேன்.” 

“சொன்னா கேளு ஐரா.” 

“சத்யா அங்க இருந்து நம்மள பார்த்துட்டு இருக்காரா?” 

“ஆமா.”

இவ்வளவு நேரம் ஐராவை தான் பார்த்துக்கொண்டிருந்தான் சத்யா. 

“அப்போ என்னை தூக்கு. ரொம்ப வலிக்குது கால்.” 

“ஏன்டி இப்டி.” 

“முடியாதுல்ல, அப்போ விடு.” 

“ஓகே வா.”அவன் தூக்கப்பார்க்க, 

“நான் கிளம்புறேன், எனக்கு வலிக்கல, கொஞ்சமாத்தான் ஸ்லிப் ஆச்சு சரியாயிடும். நீ ஒர்க் பாரு.” 

“முடியுமா?” 

“ரொம்பதான். வரேன்.”

அவள் வண்டியில் ஏறிச் செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தவன் அதன் பின்னரே மற்றவர்களை கவனிக்கச் சென்றான். 

‘இது ரெண்டும் இப்போ வரைக்கும் இப்படியேதான் இருக்குதுங்க.’

சத்யாவின் மனதில் பல கேள்விகள் ‘இவள் திருந்தவே மாட்டாளா? நம்மளுக்கும் இந்த வாழ்க்கை முறைச் செட்டாகுமா?

பொண்ணா இருந்து எப்படி இவ்ளோ கேசுவலா இருக்கா? எப்படி இவங்களை எல்லாம் இந்த சொசைட்டி ஏத்துக்குறாங்க?’ 

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல்,தன் தந்தையையும் அழைத்துக்கொண்டு அவர்களது காண்ட்ராக்ட் விபரங்களை பேசிக்கொள்ள இன்னொரு நாள் வருவதாகக் கூறிக்கொண்டு கிளிம்பினான் சத்ய நாராயணன்.

வீட்டிற்குள் வந்ததும் தான் வலி அதிகரித்திருந்தது. கணுக்கால் வீக்கம் எடுத்து காலை நிலத்தில் வைக்க முடியாதிருந்தது. ஏற்கனவே அந்தக் காலில் ஏற்பட்ட அடியினால் சிறிதாக ஏதும் நடந்தாலும் மிகையாய் வலி எடுக்கும். 

இவள் வரும் போது கெளதம் சாப்பிட்டுக்கொண்டிருக்க இவளுக்குமே பசி. மலரிடம் பரிமாறக்கூறி அவனோடு சேர்ந்தே உண்டாள்.

“கெளதம்,பாலு அங்கிள் கூட பாட்டிமா பார்க்கப்போங்க. ஈவினிங் அப்பா அங்க வருவாங்க.” 

“ஓகேம்மி… ” 

அவனுக்கு மேலதிகமாய் ஒரு உடையும் கொடுத்து அனுப்பினாள். மலரிடம் கூறி ஹாட் பாக் வைத்து காலுக்கு ஒத்தடம் கொடுத்தவள், ஒய்ன்மென்டையும் பூசிக்கொண்டாள். அகிலுக்கு கெளதம் சென்று விட்டதாய் மெசேஜ் அனுப்பினாள். 

கட்டிலில் சாய்ந்து அமர்ந்து காலுக்கு தலையணை ஒன்றை வைத்தாள். கால் அப்போதும் வின்வின் என வலித்துக் கொண்டேதான் இருந்தது. அத்தோடு மனதில்,

‘எனை இப்போதும் அதே பார்வை தான் பார்க்கிறான். இப்போதும் எனை நம்பவில்லையா? என் குணத்தை வைத்து என் நடத்தையை இப்போதும் சந்தேகம் கொள்கிறானே. இதை எல்லாம் விளக்கித்தான் எனை புரிய வைக்க வேண்டுமா?’ 

அவளையே கேட்டுக் கொண்டிருந்தாள் ஐரா. சிலநேரம் சிலதை விளக்கித்தான் புரியவைக்க வேண்டும் என்றிருக்க அதை செய்தல் நலம். அன்றி, இன்னும் இன்னும் அது தொடர்பில் பிரச்சினைகள் பெருகுமே தவிர குறையப்போவேதில்லை. ஐராவிற்கும் அதே நிலைதான். 

விழித்திருக்க பழையன மனதை  வதைக்கும் என்றெண்ணியவள் வலிக்கான மாத்திரை ஒன்றினை  போட்டுக் கொண்டு உறங்கிப் போனாள். மாலை ஐந்து மணிப்போல மலர் வந்து எழுப்பவும் தான் எழுந்தாள். 

“ம்மா, ரொம்ப நேரமாச்சு அதான்.” 

“தட்ஸ் ஓகே மலர். உங்களுக்கு டைமாச்சா?” 

“இல்லம்மா,நைட்க்கு ஏதாவது பண்ணி வைக்கட்டுமா?” 

“அவங்க சாப்பிட்டுத்தான் வருவாங்க மலர், எனக்கு எதுவும் வேண்டாம்.” 

“தம்பி ரொம்ப நேரம் கால் பண்ணுச்சாம். அப்றம் எனக்கு எடுத்தாங்க, நீங்க தூக்கம் சொல்லிட்டேன்.” 

“ஓஹ், போன் சைலன்ட் போட்டுட்டேன் மலர்.” 

“கால் வலி எப்டி இருக்கு கேட்டாங்க.” 

“இப்போ பரவால்ல.நீங்க கிளம்புங்க, நான் பேசிக்குறேன். டோர் லாக் பண்ணிடுங்க மலர்.” 

அவர் செல்லவும் குளியலரைச் செல்லலாம் என எழுந்தவளுக்கு காலை கீழே வைக்க முடியவில்லை. ‘ம்மா’ என மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டாள். கனுக்கால் நன்றாகவே வீங்கியிருந்தது.

‘நாராயணா,இப்போ என்ன பண்றது? எனக்குன்னே ஆகுமா’ ஒரு துளி கண்ணீரும் கன்னத்தை  நனைத்து விட்டிருந்தது. 

கால்களை நீவி விட்டுக்கொண்டே அன்று அந்தக் காலில் ஏற்பட்ட காயத்தினை நினைத்தாள். 

அவளுக்கு பதினாறு வயதிருக்கும். எப்பொழும் வீட்டில் முழங்காலுக்கு சற்று கீழ் வரை ஒரு டெனிம் ஒரு டீ ஷர்ட்,உயர்த்தி கட்டிய போனி டேயில். இதுதான் அவள் உடையாக இருக்கும். 

ஒருமுறை இவளும் அண்ணனுமாக சேர்ந்து மொட்டை மாடியில் இருந்த ஸ்விமிங் ஃபூலை சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த அகிலும் சேர்ந்துக் கொள்ள இவளோடு எப்போதும் போல வார்த்தையாடி அது சண்டையில் வந்து நிற்க பச் சுற்றி ஒருவரை ஒருவர் துரத்தி பிடித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் டைலில் கால் வலுக்கியவள் அப்படியே ஸ்விமிங் ஃபூலில் விழுந்தாள். 

‘ம்மா…’ என்று அவளது அலறல் கீழ் மாடி வரை கேட்க கீழே பேசிக்கொண்டிருந்த ரகுராம், நந்தன் இருவருமே மாடி ஏறினர். 

“ம்மா கால் வலிக்குது” என கதற ஆரம்பித்துவிட்டாள் ஐரா. ரத்தக் காயம் ஏதுமில்லாமலிருக்க முழங்காலுக்கும் கனுக்காலுக்கும்  இடையான தசைப்பகுதி நீலமாய் கன்றிச் சிவக்க, உள்ளுக்குள் ஏதோ  ஆகிவிட்டது என புரிந்தது ஐராவின் அண்ணன் கிருஷ்ணனுக்கு.

அவளை தூக்கியவன் படிகளில் இறங்கி வர கீழிருந்து இருவரும் மேலே வந்துக்கொண்டிருந்தனர். அவன் பின்னே உள்ளுக்குள் பதைப்பதைப்புடன் வந்த அகிலைப் பார்த்து இருவரும் கேள்விகள் கேட்க, கீழிருந்து ரம்யாவும் கேட்க, ஒன்னில்ல அவனை எதுக்கு சத்தம் போடறீங்க. இவதான் வழுக்கி விழுந்துட்டா.

“நீ வா.”என அவனையும் அழைத்துக்கொண்டு மருத்துமனைக்கு விரைந்தான் கிருஷ்ணா.ஐராவிற்கு பயத்தோடு வலியின் காரணத்தால் மயக்கம் ஏற்பட்டிருந்தது. 

“டேய் அவளுக்கு ஒன்னும் ஆகாதுல்ல.”  அகிலிடம்  கிருஷ்ணன் கேட்க, அவனோ பதில் சொல்லும் நிலையிலேயே இருக்கவில்லை. ரம்யா ஹாஸ்பிடல் என்றும் பாராது திட்டித் தீர்த்துவிட்டார்.

“தண்ணில இருந்துட்டு ஓடி விளையாடிருக்கீங்க? அவதான் சின்னப்பொண்ணு, உனக்கெங்க போச்சு அறிவு?” 

“விடும்மா, எப்போவும் ரெண்டுபேரும் பண்றதுதானே.” நந்தன் கூறினார். 

“எப்போவும் ஒன்னு போல இருக்காதுல அண்ணா. பாருங்க இப்போ, அவளுக்கு எவ்ளோ வலி இருக்கும்.” தனக்கே அந்த வலி  உணர்ந்தார் போல தவித்துப் போனார். 

இரண்டு மணிநேரத்தின் பின்னர் ஆபரேஷன் தியேட்டர் விட்டு டாக்டர் வெளியே வந்தார். 

“இப்போ எப்டி இருக்கா டாக்டர்?” நந்தன் கேட்டார்.

“நினைவு திரும்ப நேரமாகும், வலி தெரியாம இருக்க அவங்க இப்டி இருக்கது தான் பெட்டர்.” 

“நான் போய் பார்க்கட்டுமா டாக்டர்? ” 

“அவங்களை வார்டுக்கு ஷிப்ட் பண்ணுனதும் போய் பாருங்க. நதிங் டு வொரி ஷீ வில் பி ஆல் ரைட்.”

கிருஷ்ணனின் தோள்களில் தட்டிவிட்டு சென்றார் மருத்துவர். 

அவள் காலில் முள் இரண்டாக முறிந்திருந்தது. இரண்டையும் இணைத்து ஆணி பொறுத்தியிருந்தனர்.

“இவ்வளவு உடைந்துப்போக அப்படி அவள் விழவே இல்லையே டாக்டர்?” 

“ஜஸ்ட் கட்டில்ல இருந்து கீழ விழுந்தாலே கை,கால் முறிவு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் நிறையா இருக்கு மிஸ்டர் நந்தன். அவங்க விழுந்த விதத்துல முறிந்திருக்கலாம்.” 

“நடைல ஏதும் பிரச்சினை ஆகுமா  டாக்டர்? ” பெண் பிள்ளை அல்லவா தவிப்போடு கேட்டார் நந்தன். 

“நோ நோ, நார்மலா எப்போவும் போல நடக்கலாம். சிலருக்கு பிக்ஸ் பண்ற கிளிப்ஸ் ஒரு குறிப்பிட்ட பீரியட்க்கு அப்றம் ரிமோவ் பண்ணிருவோம். இவங்களுக்கு லைப் டைம். நோ வொரிஸ். கொஞ்ச நாளைக்கு கவனமா  இருந்தாங்கன்னா ஓகே தான்.” 

ஐராவை வார்டுக்கு மாற்றியதும் அவளை சூழ அனைவரும்  நின்றிருந்தனர். கண் விழித்தவள் அனைவரையும் பார்க்க அப்போதுதான் என்ன நடந்ததென்று நினைவு வந்தது. அவளுக்கு நேராக எதிரே அகில் அவள் கால்களையே பார்த்துக் கொண்டிருக்க அவனை பார்த்தாள். அவனோ அவள் பார்க்கவும், “சாரி ஐரா.” கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான். 

ஐராவை சுற்றியிருந்தவர்கள் ஒவ்வருவராய் நலம் விசாரிக்க, அவள் தலை கோதி, “ரொம்ப பயந்துட்டான் டா. அதோட அத்த ரொம்ப திட்டிட்டாங்க அதான்.” 

ரம்யாவை முறைத்தாள் ஐரா.

“அவனை ஒன்னுமே சொல்லலடி. முதல்ல வீட்டுக்கு வா. அவங்கூட சேர்ந்துட்டு ஆட்டம் போடாதன்னு சொன்னா கேட்டா தானே.’ 

‘நல்ல வேலை அனன்யா ஊர்ல இல்லை. இல்லன்னா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிருப்பா. வந்ததும் அவளை சமாளிக்க தெம்பு வேணாமா. மருமகனே நீயே சமாளிச்சுரு என்னை கோர்த்து விட்டுறாத.” 

இப்படியாக அவளோடு அவள் சுற்றி இருந்தவர்களின் நினைவெல்லாம் சேர்த்து கால் வலியோடு வந்து போனது. எத்தனை சந்தோஷமாய் கழித்த நாட்கள். 

‘எனக்குன்னு யாருமே இல்லாம போய்டுச்சுல்ல. இதோ கால் வலின்னு சொல்லக்கூட யாரும் இல்லாம…’ 

அதே நேரம் அகில் அழைத்தான் அவளை.அவள் திரையில் ஒளிர்ந்து மறையும் அவன் முகம் பார்த்துக்கொண்டே,

‘நீ இருக்கல்ல எப்போவும்? ஆனால் உன்ன உரிமையா ஏத்துக்க முடில அகி. உனக்கான உறவுகள் உன்னை சுத்தி இருக்கப்ப உனக்கு நான் யாரோதானே…? ‘ 

அவன் அழைப்பை ஏற்காது, ‘ஐ பீல் 

ஸ்லீப்பி, போத் ஆப் யூ ஹாவ் யூர் டின்னெர் அண்ட் கம்.” மெசேஜ் மட்டும் அனுப்பி வைத்தாள்.

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!